Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 651 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
651பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 5
இணை இல்லா இன் இசை யாழ் கெழுமி இன்பத்
தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த
துணை இல்லா தொன் மறை நூல் தோத்திரத்தால்
தொன் மலர் கண் அயன் வணங்கி யோவாது ஏத்த
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ
மதிள் அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
மணி வண்ணன் அம்மானை கண்டு கொண்டு என்
மலர் சென்னி என்று கொலோ வணங்கும் நாளே ?
இன்பம், Inbam - (வீணா கானத்தாலே) இன்பந்தருகின்ற
தும்புருவும், Thum Puruvum - தும்புரு மஹரிஷியும்
நாரதனும், Naarathanum - நாரத முனிவனும்
இணை இல்லா இன் இசை, Inai Illaa In Isai - ஒப்பற்றதும் போக்யமுமான இசையை
யாழ், Yaazh - வீணையிலே
கெழுமி, Kezhumi - நிறைத்து (வீணா கானத்தைப் பண்ணிக் கொண்டு)
இறைஞ்சி ஏத்த, Irainji Aetha - திருவடிகளிலே விழுந்து) வணங்கித் துதிக்கவும்
தொல் மலர்க் கண் அயன், Thol Malarkk Kan Ayan - நித்யமான நாபீ கமலத்தி லுதித்த நான்முகனானவன்
வணங்கி, Vanangi - நமஸ்கரித்து
துணை இல்லா, Thunai Illaa - ஒப்பு இல்லாததும்
தொல், Thol - அநாதியுமான
மறை நூல் தோத்திரத்தால், Marai Nool Thothiraththal - வேதசாஸ்த்ரங்களாகிற ஸ்தோத்ரங்களால்
ஓவாது ஏத்த, Ovaadhu Aetha - இடைவிடாமல் துதிக்கவும்
மணி மாடம் மாளிகைகள், Mani Maadam Maaligaihal - மணி மயமான மாட மாளிகைகளையும்
மல்கு செல்வம், Malku Selvam - பூர்ணமான ஸம்பத்தையும்
மதிள், Mathil - ஸப்த ப்ராகாரங்களையுமுடைய
அரங்கத்து, Arangaththu - கோயிலிலே
மணி வண்ணன் அம்மானை, Mani Vannan Ammanaik - நீல மணி போன்ற திருநிறத்தை யுடையனான எம்பெருமானை
கண்டு கொண்டு, Kandu Kondo - ஸேவித்து
என் மலர் சென்னி, En Malar Senni - என்னுடைய பூமாலை யணிந்த தலையானது
வணங்கும் நாள் என்று கொல், Vanangum Naal Endru Kol - (அவன் திருவடிகளில்) நமஸ்கரிப்பது என்றைக்கோ!
இன் இசை யாழ் கெழுமி, In Isai Yaazh Kezhumi - இனிய இசையையுடைத்தான வீணையை அப்யஸித்து என்றுமாம்