| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 731 | பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 2 | வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை வேண்டாதே விரைந்து ,வென்றி மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து வானமே மேவி நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே ? | வெவ் வாயேன் வெவ் உரை கேட்டு, Veve Vaayaan Veve Urai Kaettu - கொடிய வாயை யுடையேனை என்னுடைய கடுஞ்சொற்களைக் கேட்டு இரு நிலத்தை வேண்டாதே, Iru Nilaththai Vendaadhe - பெரிய நிலவுலகத்து அரசாட்சியை விரும்பாமலே விட்டிட்டு விரைந்து, Viraindhu - சீக்கிரமாக வென்றி மை வாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து, Vendri Mai Vaaya Kaliru Ozhindhu Ther Ozhindhu Maa Ozhindhu - வெற்றியை விளைப்பதான வனமே மேவி, Vaname Mevi - காட்டையே சேர்ந்து நெய் வாய வேல் நெடு கண் நேரிழையும், Ney Vaaya Veel Nedhu Kann Nerizhaiyum - நெய்ப்பூசிய நுனியையுடைய வேலாயுதம் போன்ற இளங்கோவும், Ilankovum - இளைய பெருமாளும் பின்பு போக, Pinbu Poga - உடன் தொடர்ந்து வர எவ்வாறு நடந்தனை, Evvaaru Nadandhanai - எங்ஙனம் நடந்து சென்றாயோ! எம் பெருமான், Em Perumaan - எமது ஐயனே! என் செய்கேன், En Seigkaen - நான் என் செய்வேன்! |