| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 665 | பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 8 | மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய் மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே | மாலை உற்ற கடல், Maalaik Kutral Kadal - (தன் திருமேனி ஸ்பர்சத்தாலே) அலை யெறிகிற திருப்பாற்கடலில் கிடந்தவன், Kidandhavan - பள்ளிகொள்பவனும் வண்டு கிண்டு நறு துழாய் மாலை உற்ற, Vandu Kintu Naru Thuzhai Maalaik Kutral - (தேனுக்காக) வண்டுகள் குடையா நின்றுள்ள திருத்துழாய் மாலையை அணிந்த வரை பெரு திருமார்பினை, Varai Peru Thirumaarpinai - மலைபோற் பெருமை தங்கிய திருமார்பை யுடையவனும் மலர் கண்ணனை, Malar Kannanai - செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடையவனுமான ஸ்ரீரங்கநாதன் விஷயத்தில் மாலை உற்று, Maalaik Utrru - வ்யாமோஹத்தை அடைந்து எழுந்து ஆடி, Ezhunthu Aadi - (இருந்தவிடத்திலிராமல்) எழுந்து கூத்தாடி பாடி, Paadi - (வாயாரப்) பாடி திரிந்து, Thirinthu - (திவ்ய தேசங்கள் தோறும்) ஸஞ்சரித்து அரங்கன் எம்மானுக்கே, Arangan Emmaanukke - எமக்கு ஸ்வாமியான ஸ்ரீரங்கநாதன் விஷயத்திலே மாலை உற்றிடும், Maalaik Utrridum - பித்தேறித் திரிகின்ற தொண்டர், Thondar - ஸ்ரீவைஷ்ணவர்களுடைய வாழ்வுக்கு, Vazhvvukku - ஸ்ரீவைஷ்ணவ லஷ்மிக்கு என் நெஞ்சம் மாலை உற்றது, En Nenjam Maalaik Utrrathu - என் மனம் மயங்கிக் கிடக்கின்றது. மற்ற மூன்றடிகளிலுள்ள மாலை, Mattram Moondradigalilulla Maalai - மோஹம் என்னும் பொருளதான் மால் என்னுஞ் சொல் |