| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 745 | பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 5 | வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி கரனோடு தூடணன் தன் உயிர் ரை வாங்கி சிலை வணக்கி மான் மறிய வெய்தான் தன்னை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் தலை வணக்கி கை கூப்பி ஏத்த வல்லார் திரிதலால் தவமுடைத்து தரணி தானே | வலி வணக்கு, Vali Vanakku - (எதிரிகளுடைய) வலிமையைத் தோற்பிக்கின்ற வரை நெடு தோள், Varai Nedu Thol - மலை போன்ற பெரிய தோள்களை யுடைய விராதை, Virathai - விராதனென்னும் இராக்ஷஸனை கொன்று, Kondru - கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த, Van Tamil Maa Muni Kodutha - சிறந்த தமிழ்ப பாஷைக்கு உரியவரான அகஸ்திய முனிவர் கொடுத்த வரி வில் வாங்கி, Vari Vil Vaangi - கட்டமைந்த வில்லை பெற்று கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கி, Kalai Vanakku Nookku Arakki Mookkai Neekki - மானின் பார்வையைத் தோற்பிக்கும் யடியான பார்வை யழகை கானோடு தூடணன் தன் உயிரை வாங்கி, Kaanodu Thoodanthan Than Uyirai Vaangi - கரன் தூஷணன் என்னும் அரக்கர்களின் உயிரை (அவர்களுடம்பினின்று) கவர்ந்து மான், Maan - மாரீசனாகிய மாயா ம்ருகமானது மறிய, Mariya - அழியும்படி சிலை வணக்கி எய்தான் தன்னை, Silai Vanakki Eydhaan Thannai - தனது வில்லை வளைத்து அம்புகளை எய்தவனான இராமபிரானை தலை வணங்கி கை கூப்பி ஏத்த வல்லார், Thalai Vanangi Kai Koopi Aetha Vallar - தலை வணங்கி அஞ்ஜலி பண்ணித் துதிக்கவல்ல அடியார்கள் திரிதலால், Thirithalaal - (தன்மீது) ஸஞ்சரிக்கப் பெறுதலால் தரணி, Tharani - பூமியானது தவம் உடைத்து, Thavam Udaithu - பாக்கியமுடையது (தான், ஏ -ஈற்றசைகள், தேற்றமுமாம்) இங்கே மூக்கு என்றது, Inge Mookku Endrathu - மற்றும் அறுபட்ட அவயவங்களுக்கும் உபலக்ஷணம். |