| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 669 | பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 2 | நூலினேர் இடையார் திறத்தே நிற்கும் ஞாலம் தன்னோடும் கூடுவது இல்லை யான் ஆலியா அழையா அரங்கா! என்று மால் எழுந்து ஒழிந்தேன் என் தன் மாலுக்கே | நூலின் நேர், Noolin Ner - நூல் போன்று (ஸூக்ஷ்மமான) இடையை யுடைய பெண்டிர் விஷயத்திலேயே பொருந்தி யிருக்கிற ஞாலம் தன்னொடும், Njaalam Thannodum - (இந்த) ப்ராக்ருத மனிதரோடு ஆலியா, Aaliya - (காதலுக்குப் போக்கு வீடாகக்) கூத்தாடி அரங்கா என்று, Arangaa Endru - ‘ஸ்ரீரங்கநாதனே!’ என்று கூப்பிட்டு அழையா, Azhaiyaa - கூப்பிட்டு என் தன் மாலுக்கே, En Than Maalukke - என் மேல் வ்யாமோஹமுடையனான எம்பெருமான் திறத்தினாலேயே மால் எழுந்தொழிந்தேன், Maal Ezhundhonzhindhen - மோஹமுற்றேன். |