| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 721 | பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 3 | கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் ! தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா ! தாசரதீ ! கங்கையிலும் தீர்த்த மலி கண புரத்து என் கரு மணியே எங்கள் குலத்தின் இன் அமுதே !ராகவனே !தாலேலோ ! | கொங்குமலி கரு குழலாள், Kongumali Karu Kuzhalal - பரிமளம் மிகுந்த கறுத்த கூந்தலை யுடையளான கௌசலை தன், Kausalai Than - கௌஸல்யையினுடைய குலம் மதலாய், Kulam Mathalaiy - சிறந்த பிள்ளையானவனே! தங்கு பெருபுகழ் சனகன், Thangu Perupugazh Sanakan - பொருந்திய மஹா கீர்த்தியை யுடைய ஜநக மஹாராஜனுக்கு திரு மருகா, Thiru Maruga - மாப்பிள்ளை யானவனே! தாசரதீ, Dasarathe - சக்ரவர்த்தி திருமகனே! கங்கையிலும், Gangaiyilum - கங்கா நதியிற் காட்டிலும் மலி தீர்த்தம், Mali Theertham - சிறப்பு மிக்க தீர்த்தங்களை யுடைய கண புரத்து, Kanna Purathu - திருக் கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருக்கிற எங்கள் குலம், Engal Kulam - எங்கள் ராஜ வம்சத்துக் கெல்லாம் இன் அமுதே, In Amude - போக்யமான அமுதம் போன்றவனே! எங்கள் குலத்து இன்னமுதே, Engal Kulaththu Innamude - ஸ்ரீராமன் ராஜவம்ஸத்திற் பிறந்தாற்போல |