திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 11 | திருப்பல்லாண்டு || ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –அவதாரிகை --அண்டக்குலத்தில் ஆஹூதராய் -நெய்யிடை -என்கிற பாட்டில் சங்கதரான-ஐஸ்வர்யார்த்திகள் பாசுரத்தாலே திருப்பல்லாண்டு பாடுகிறார் – 11 | அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர்
கோன் அபிமானதுங்கன்
செல்வனைப் போல திருமாலே நானும்
உனக்குப் பழ அடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று
நாமம் பல பரவி
பல் வகையாலும் பவித்திரனே உன்னைப்
பல்லாண்டு கூறுவனே | பதவுரை Show / Hideஅல்வழக்கு, Alvazhakku - தவறான வழக்குகளில் ஒன்றும் இல்லா, Ondrum Illa - சிறிதும் இல்லாதவராய் அணி, Ani - (ஸம்ஸாரத்துக்கு) ஆபரணமான கோட்டியர், Kottiyar - திருக்கோட்டியூரிலுள்ளவர்களுக்கு கோன், Kon - தலைவராய் அபிமான துங்கன், Abimaana Thungan - நான் எம்பெருமானுக்கு அடியேன் என்னும் அபிமானத்தில் உயர்ந்தவராயுள்ள செல்வனைப்போல், Selvanai Pol - செல்வநம்பியைப்போல திருமாலே, Thirumale - லஷ்மீநாதனே ! நானும், Naanum - அடியேனும் உனக்கு, Unakku - ஸ்வாமியான உனக்கு பழ அடியேன், Pazha Adiyen - பழமையான அடிமையாயிருக்கிறேன் நல் வகையால், Nal Vagaiyaal - அழகிய வகையில் நமோ நாராயணா என்று, Namo Narayana Endru - திருமந்திரத்தை அனுஸந்தித்து நாமம் பல, Naamam Pala - உன்னுடைய பல திருநாமங்களையும் பரவி, Paravi - க்ரமமில்லாமல் சொல்லி பல்வகையாலும் பவித்திரனே, Palvakaiyaalum Pavithirane - (ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி முதலிய) எல்லாவற்றாலும் பாபத்தைப் போக்குபவனே ! உன்னைப் பல்லாண்டு கூறுவன், Unnaip Pallandu Kooruvan - உனக்கு மங்களாசாஸனம் செய்வேன் |
| 12 | திருப்பல்லாண்டு || ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –அவதாரிகை --நிகமத்தில் – இப்பிரபந்தத்தை அதிகரித்தாருக்கு பலம் சொல்லுகிறதாய் – பிரேம பரவசராய்க் கொண்டு மங்களா சாசனம் பண்ணுகிறார் – அநந்ய பிரயோஜனருக்கும் தம்மோ பாதி பகவத் ப்ரத்யாசத்தி உண்டாகையாலே அவர்களை அழைத்தார் – ஐஸ்வர்ய கைவல்யங்களைப் பற்றி ஆச்ரயித்தவர்களும் -பகவத் பிரபவத்தாலே மங்களா சாசனத்துக்கு ஆளாவார்கள் என்று அவர்களையும் அழைத்தார் – அவ்வளவும் இல்லாத சம்சாரிகளும் தம்முடைய பாசுரத்தில் இழியவே யாவதாத்மபாவி மங்களா சாசன அர்ஹர் ஆவார்கள் என்று இப்பிரபந்தத்தின் வைபவத்தை அருளிச் செய்கிறார் – 12 | பல்லாண்டு என்று பவித்திரனைப் பர
மேட்டியைச் சார்ங்கம் என்னும்
வில் ஆண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டு
சித்தன் விரும்பிய சொல்
நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார் நமோ
நாராயணாய என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து
ஏத்துவர் பல்லாண்டே | பதவுரை Show / Hideபல்லாண்டு என்று, Pallandu Endru - நித்யமாய் மங்கள முண்டாகவேண்டும் என்று பவித்திரனை, Pavithiranai - (இயற்கையாகவே) பரிசுத்தனாய் பரமேட்டியை, Paramettiyai - மேலான ஸ்தானமான வைகுண்டத்தில் எழுந்தருளியிருப்பவனாய் சார்ங்கம் என்னும், Saarngam Ennum - சார்ங்கமென்று திருநாமத்தை உடைய வில், Vil - வில்லை ஆண்டான் தன்னை, Aandaan Thannai - ஆளும் எம்பெருமானைக் குறித்து வில்லிபுத்தூர், Villiputhoor - ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த விட்டுசித்தன், Vittu Chithan - விஷ்ணுசித்தன் என்ற திருநாமத்தையுடைய பெரியாழ்வார் விரும்பிய, Virumbiya - விருப்பத்துடன் அருளிச்செய்த சொல், Sol - ஸ்ரீஸூக்தியை நல் ஆண்டு என்று, Nal Aandu Endru - (பல்லாண்டு பாடத்தக்க) நல்ல காலம் (நேர்படுவதே!) என்று நவின்று உரைப்பார், Navinru Uraippar - இடைவிடாமல் சொல்லுமவர்கள் நமோ நாராயணாய், Namo Narayanaaya - திருமந்திரத்தை அனுஸந்தித்து பல்லாண்டும், Pallandum - கணக்கற்ற காலங்கள் பரமாத்மனை, Paramaathmanai - பரமாத்மா நாராயணனை சூழ்ந்து இருந்து, Soozhnthu Irundhu - சுற்றிலும் இருந்து ஏத்துவர் பல்லாண்டே, Ethuvar Pallande - பல்லாண்டு பாடுவார்கள் |
| 22 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) (இத்திருமொழி கற்றாருக்கு பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார் செந்நெலாலே நிறைந்த வயலாலே சூழப் பட்ட திருக் கோஷ்டியூரிலே நித்ய வாசம் பண்ணுகிற திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி என்று தொடங்கி மன்னு நாரணன் நம்பி -என்று நியமிக்கையாலே சாதாரண அசாதாரண வ்யாவ்ருத்தமான வாக்ய த்வய குண பூர்த்தியை மன்னு நாரணன் நம்பி -என்று அருளிச் செய்கிறார்.) 10 | செந்நெ லார் வயல் சூழ் திருக் கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டு சித்தன் விரித்த இப்
பன்னு பாடல் வல் லார்க்கு இல்லை பாவமே–1-1-10 | பதவுரை Show / Hideசெம் நெல்,Sem nel - செந்நெல் தாந்யங்களால் ஆர்,Aar - நிறையப் பெற்ற வயல்,Vayal - கழனிகளாலே சூழ்,Soozh - சூழப்பட்ட திருக்கோட்டியூர்,Thirukkottiyur - திருக்கோட்டியூரிலே மன்னு,Mannu - பொருந்தி வர்த்திக்குமவனாய் நாரணன்,Naaranan - நாராயண சப்த வாச்யனாய் நம்பி,Nambi - ஸர்வ குண பூர்ணனான ஸர்வேச்வரன் பிறந்தமை,Pirandhamai - திருவவதரித்தபடியை மின்னு,Minnu - விளங்கா நின்ற நூல்,Nool - யஜ்ஞோபலீதத்தையுடைய விட்டு சித்தன்,Vittu siththan - பெரியாழ்வார் விரித்த,Viritha - விஸ்தரித்து அருளிச் செய்த பன்னு,Pannu - ஜ்ஞாநிகள் எப்போதும் அநுஸந்திக்கக் கடவதான இப் பாடல்,Ep paadal - இப் பரசுரங்களை வல்லார்க்கு,Vallaarukku - ஓத வல்லவர்க்கு பாவமில்லை,Paavamilai - பாபமில்லை. |
| 43 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 21 | சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன
திருப் பாத கேசத்தைத் தென் புதுவைப் பட்டன்
விருப்பா லுரைத்த இருபதோ டொன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத் தொன்றுவர் தாமே–1-2-21 | பதவுரை Show / Hideசுரும்பு ஆர்,Surumbu aar - வண்டுகள் படிந்து நிறைந்த குழலி,Kuzhali - கூந்தலை யுடையளான அசோதை,Asodhai - யசோதைப் பிராட்டியால் முன்,Mun - க்ருஷ்ணாவதார ஸமயத்திலே சொன்ன,Sonnan - சொல்லப்பட்ட திருப்பாத கேசத்தை,Thirupaadha kesaththai - பாதாதிகேசாந்த வர்ணநப் பாசுரங்களை தென் புதுவை பட்டன்,Then puduvai pattan - அழகிய ஸ்ரீவில்லிபுத்தூருக்கு (நிர்வாஹகரான) அழ்வார் விருப்பால்,Viruppaal - மிக்க ஆதரத்தோடு உரைத்த,Uraiththa - அருளிச்செய்த இருபதோடுஒன்றும்,Irupathodunonrum - இவ்விருபத்தொரு பாட்டுக்களையும் உரைப்பார் தாம்,Uraipaar thaam - ஓதுமவர்கள் போய்,Poy - (இம் மண்டலத்தைக் கடந்து) போய் வைகுந்தத்து,Vaikunthaththu - ஸ்ரீவைகுண்டத்திலே ஒன்றுவர்,Ondruvar - பொருந்தப் பெறுவார்கள் |
| 53 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 10 | வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை யுண்ட
அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய
செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே–1-3-10 | பதவுரை Show / Hideவஞ்சனையால் வந்த,Vanchanaiyaal vanda - வஞ்சக வேஷத்தோடே வந்த பேய்ச்சி,Peychi - பூதனையினுடைய முலை உண்ட,Mulai unda - முலையை அமுது செய்தவனாய் அஞ்சனம் வண்ணனை,Anjanam vannanai - மை போன்ற நிறத்தை யுடையவனான கண்ண பிரானை ஆய்ச்சி,Aaychi - யசோதைப் பிராட்டி தாலாட்டிய,Thaalattiya - தாலாட்டின படிகளை செம் சொல் மறையவர்,Sem sol maraivar - செவ்விய சொற்கள் நிறைந்த வேதங்களில் வல்லவரான ஸ்ரீவைஷ்ணவர்கள் சேர்,Ser - நித்ய வாசம் பண்ணப் பெற்ற புதுவை,Puthuvai - ஸ்ரீவில்லிபுத்தூரிலவதரித்த பட்டன்,Pattan - பெரியாழ்வார் (அருளிச் செய்த) சொல்,Sol - இப்பாசுரங்கள் எஞ்சாமை,Enjaamai - குறைவு படாமல் வல்லவர்க்கு,Vallavarkku - ஓத வல்லவர்க்கு இடர் இல்லை,Idar illai - துன்பம் ஒன்றுமில்லையாம். தான் ஏ,Thaan e - அசை |
| 63 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 10 | மைத்தடங் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழிவை
எத்தனையும் சொல்ல வல்ல வர்க்கு இட ரில்லையே–1-4-10 | பதவுரை Show / Hideமை,Mai - மையணிந்த தட,Thad - விசாலமாயிராநின்ற கண்ணி,Kanni - கண்களை யுடையளான அசோதை,Asothai - யசோதையானளவள் தன் மகனுக்கு,Than maganukku - தன் மகனான கண்ணனுக்கு ஒத்தன சொல்லி,Oththana solli - நினைவுக்கும் சொலவுக்கும் சேர்ந்திருப்பவற்றைச் சொல்லி உரைத்த,Uraitha - (சந்திரனை நோக்கிச்)சொன்ன இவை மாற்றம்,Ivai maatram - இப் பாசுரத்தை ஒளி,Oli - ஒளி பொருந்திய புத்தூர்,Puththoor - ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்தவராய் வித்தகன்,Viththagan - (மங்களாசாஸநி) ஸமர்த்தரான விட்டு சித்தன்,Vittu siththan - பெரியாழ்வாராலே விரித்த,Viriththa - விரித்து அருளிச் செய்யப்பட்ட தமிழ்,Tamil - த்ராவிட பாஷாரூபமான இவை,Ivai - இப் பாசுரங்கள் பத்தையும் எத்தனையும்,Eththanaiyum - ஏதேனுமொருபடியாக சொல்ல வல்லவர்க்கு,Solla vallavarkku - ஓத வல்லவர்களுக்கு இடர் இல்லை,Idar illai - துன்பமொன்றுமில்லை. |
| 74 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 11 | அன்னமும்மீனுருவும்ஆளரியும்குறளும்
ஆமையுமானவனே. ஆயர்கள்நாயகனே.
என்அவலம்களைவாய். ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய். ஆடுகவாடுகவென்று
அன்னநடைமடவாள்அசோதையுகந்தபரிசு
ஆனபுகழ்ப்புதுவைப்பட்டனுரைத்ததமிழ்
இன்னிசைமாலைகள்இப்பத்தும்வல்லார் உலகில்
எண்திசையும்புகழ்மிக்குஇன்பமதெய்துவரே. –1-5-11 | பதவுரை Show / Hideஅன்னமும்,annamum - ஹம்ஸ ரூபியாயும் மீன் உருவும்,meen uruvum - மத்ஸ்ய ரூபியாயும் ஆள் அரியும்,aal ariyum - நர ஸிம்ஹ ரூபியாயும் குறளும்,kuRalum - வாமந ரூபியாயும் ஆமையும்,aamaiyum - கூர்ம ரூபியாயும் ஆனவனே,aanavane - அவதரித்தவனே! ஆயர்கள்,aayargal - இடையர்களுக்கு நாயகனே,naayakane - தலைவனானவனே! என் அவலம்,en avalam - என் துன்பத்தை களைவாய்,kaLaiyaai - நீக்கினவனே! செங்கீரை ஆடுக,senkeerai aaduga - செங்கீரை ஆட வேணும் ஏழ் உலகும்,ezh ulagum - ஸப்த லோகங்களுக்கும் உடையாய்,udaiyaai - ஸ்வாமி யானவனே! ஆடுக ஆடுக என்று,aaduga aaduga enRu - பலகாலுமாடவேணும் என்று அன்னம் நடை,annam nadai - ஹம்ஸ கதியை யுடையனாய் மடவாள்,maDavaal - நற்குணமுடையளான அசோதை,asodhai - யசோதைப் பிராட்டியாலே உகந்த,ugandha - உகந்த சொல்லப் பட்ட பரிசு,parisu - ப்ரகாரத்தை ஆன,aana - பொருந்திய புகழ்,pugazh - புகழை யுடையரான புதுவை பட்டன்,puduvai paTTan - பெரியாழ்வார் உரைத்த,uraittha - அருளிச் செய்த இன் இசை,in isai - இனிய இசையை யுடைய தமிழ் மாலைகள்,thamizh maalaigal - தமிழ்த் தொடைகளான இ பத்து,i paththu - இப் பத்துப் பாசுரங்களையும் வல்லார்,vallaar - ஓத வல்லவர்கள் உலகில்,ulakil - இந்த லோகத்தில் எண் திசையும்,eN thisaikum - எட்டுத் திசைகளிலும் (பரந்த) புகழ்,pugazh - கீர்த்தியையும் மிகு இன்பமது,migu inbamathu - மிக்க இன்பத்தையும் எய்துவர்,eydhuththavar - பெறுவார்கள். |
| 85 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 11 | ஆட் கொள்ளத் தோன்றிய ஆயர் தங் கோவினை
நாட் கமழ் பூம் பொழில் வில்லி புத்தூர்ப் பட்டன்
வேட்கையினால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்
வேட்கையினால் சொல்லுவார் வினை போமே–1-6-11 | பதவுரை Show / Hideஆள் கொள்ள,Aal Kolla - (அனைவரையும்) அடிமை கொள்வதற்காக தோன்றிய,Thonriya - திருவவதரித்த ஆயர் தம் கோவினை,Aayar Tham Kovinai - இடையர்களுக்குத் தலைவனான கண்ணனிடத்தில் வேட்கையினால்,Vetchaiyinaal - ஆசையினால் நாள்,Naal - எந்நாளிலும் கமழ்,Kamazh - மணம் வீசுகின்ற பூ,Poo - புஷ்பங்கள் வீசுகின்ற பொழில்,Pozhil - சோலைகளை யுடைய வில்லிபுத்தூர்,Villipuththur - ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த பட்டன்,Pattan - பெரியாழ்வார் சொன்ன,Sonna - அருளிச் செய்த சப்பாணி ஈர் ஐந்தும்,Sappani Eer Aindhum - சப்பாணி கொட்டுதலைக் கூறிய பத்துப் பாசுரங்களையும் வேட்கையினால்,Vetchaiyinaal - இஷ்டத்தோடு சொல்லுவார்,Solluvaar - ஓதுகிறவர்களுடைய வினை,Vinai - பாபங்கள் போம்,Pom - அழிந்து போம். |
| 96 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 11 | ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை
தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டு சித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார்
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே–1-7-11 | பதவுரை Show / Hideஆயர் குலத்தினில் வந்து,Aayar kulaththil vandhu - இடையர் குலத்திலே வந்து தோன்றிய,Thondriya - அவதரித்த அஞ்சனம் வண்ணன்,Anjanam vannan - மை போன்ற கருநிறமுடையனான கண்ணன் தன்னை,Thannai - தன்னை (க்கண்டு) தாயர்,Thaayar - தாய்மார்கள் மகிழ,Magizha - மனமுகக்கவும் ஒன்னார்,Onnar - சத்ருக்கள் தளர,Thalara - வருத்தமடையவும் தளர்நடை நடந்தனை,Thalar nadai nadaththana - தளர்நடை நடந்ததை வேயர்,Veyar - வேயர் குடியிலிருப்பவரெல்லாராலும் புகழ்,Pugazh - புகழப் பெற்ற விட்டு சித்தன்,Vittu siththan - பெரியாழ்வார் சீரால்,Seeraal - சிறப்பாக விரித்தன,Viridhthana - விவரித்துச் சொன்ன பாசுரங்களை உரைக்க வல்லார்,Uraikka vallaar - சொல்ல வல்லவர்கள் மாயன்,Maayan - ஆச்சர்யமான குணங்கள யுடையவனும் மணி,Mani - நீல மணி போன்ற வண்ணன்,Vannan - நிறமுடையனுமான எம்பெருமானுடைய தாள்,Thaal - திருவடிகளை பணியும்,Paniyum - வணங்க வல்ல மக்களை,Makkalai - பிள்ளைகளை பெறுவார்கள்,Peruvaarhal - அடைவார்கள். |
| 107 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 11 | நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை
அச்சோ வருக வென்று ஆய்ச்சி யுரைத்தன
மச்சணி மாடப் புதுவை கோன் பட்டன் சொல்
நச்சலும் பாடுவார் நீள் விசும்பாள்வரே–1-8-11 | பதவுரை Show / Hideநச்சுவார் முன்,Nachchuvaar mun - (தன்னை) விரும்பிப்ப பக்தி பண்ணுமவர்களுடைய முன்னே நிற்கும்,Nirkum - வந்து நிற்குந் தன்மையுள்ள நாராயணன் தன்னை,Narayanan thannai - நாராயணனாகிய ஸ்ரீ க்ருஷ்ணனை ஆய்ச்சி,Aaychchi - இடைக் குலத்தவளான யசோதை அச்சோ வருக என்று உரைத்தன,Achcho varuga endru uraiththana - (அணைத்துக் கொள்ளுகையிலுண்டான விருப்பந் தோன்றும்படி) ‘அச்சோ வருவாயாக’ என்று சொன்னவற்றை மச்சு அணி,Machchu ani - பல நிலைகளால் அழகிய மாடம்,Maadam - மாளிகைகளை யுடைய புதுவை,Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு கோன்,Kon - நிர்வாஹகரான பட்டன்,Pattan - பெரியாழ்வார் சொல்,Sol - சொன்ன இப் பத்துப் பாசுரங்களையும் பாடுவார்,Paaduvaar - பாடுபவர்கள் நிச்சலும்,Nichchalum - எப்போதும் நீள் விசும்பு,Neel visumbu - பரமாகாசமாகிற பரமபதத்திற்கு ஆள்வர்,Aalvar - நிர்வாஹகராவர். |
| 117 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (பெரியாழ்வார் தாம் அநுபவித்து ஸந்தோஷித்து உலகத்தார்க்கு உபகரித்த தமிழ்ப் பாசுரமாகிய இப் பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்கள் மங்களாசாஸநத்தில் விருப்பம் பொருந்தி நல்ல புத்திரர்களை அடைந்து ஆநந்திப்பர்கள்) 10 | ஆய்ச்சி யன்றாழிப் பிரான் புறம் புல்கிய
வேய்த் தடந் தோளி சொல் விட்டு சித்தன் மகிழ்ந்து
ஈத்த தமிழிவை ஈரைந்தும் வல்லவர்
வாய்த்த நன் மக்களைப் பெற்று மகிழ்வரே–1-9-10 | பதவுரை Show / Hideவேய்,Vey - மூங்கில் போன்ற தடந்,Tadan - பெரிய தோளி,Tholi - தோள்களை யுடையனான ஆய்ச்சி,Aaychi - யசோதை யானவன் ஆழிப் பிரான்,Aazhi piran - சக்ராயுததானாகிய ப்ரபுவான கண்ணன் அன்று,Andru - அக் காலத்திலே புறம் புல்கிய,Puram pulgiya - புறம் புல்குவதைக் கூறிய சொல்,Sol - சொல்லை விட்டு சித்தன்,Vittu chiththan - பெரியாழ்வார் மகிழ்ந்து,Magizhndhu - (தாம் அநுபவித்து) ஸந்தோஷித்து ஈந்த,Eintha - (உலகத்தார்க்கு) உபகரித்த தமிழ் இவை ஈர் ஐந்தும்,Tamil ivai eer aindhum - தமிழ்ப் பாசுரமாகிய இப் பத்துப் பாசுரங்களையும் வல்லவர்,Vallavar - ஓத வல்லவர்கள் வாய்த்த,Vaaytha - (மங்களாசாஸநத்தில் விருப்பம்) பொருந்தி நல் மக்களை,Nal makkalai - நல்ல புத்திரர்களை பெற்று,Petru - அடைந்து மகிழ்வர்,Magizhvar - ஆநந்திப்பர்கள். |
| 127 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 10 | வல்லாளிலங்கை மலங்கச் சரந்துரந்த
வில்லாளனை விட்டு சித்தன் விரித்த
சொல்லார்ந்த அப் பூச்சிப் பாடல் இவை பத்தும்
வல்லார் போய் வைகுந்தம் மன்னி யிருப்பரே–2-1-10 | பதவுரை Show / Hideவல்லாள்,Vallal - பலசாலிகளான வீரர்களை யுடைய இலங்கை,Ilangai - லங்கையானது மலங்க,Malanga - பாழாம்படி சரம் துரந்த,Saram thuranda - அம்பைச் செலுத்திய வில் ஆளனை,Vil alanai - வில்லையேந்தி ஸ்ரீராமனாக (முன்பு) திருவவதரித்த கண்ணனைப் பற்றி விட்டு சித்தன்,Vittu sithan - பெரியாழ்வார் விரித்த,Viritha - பரக்க கூறிய சொல் ஆர்ந்த,Sol arndha - சொல் நிரம்பிய அப் பூச்சி பாடல் இவை பத்தும்,Appuchi paadal ivai pathum - அப் பூச்சி காட்டுதலைப் பற்றிய இப் பத்துப் பாசுரங்களையும் வல்லார்,Vallar - கற்க வல்லவர் போய்,Poi - (அர்ச்சிராதிமார்க்கமாகப்) போய் வைகுந்தம்,Vaikundam - ஸ்ரீவைகுண்டத்திலே மன்னி இருப்பர்,Manni iruppar - நித்ய வாஸம் பண்ணப் பெறுவர். |
| 138 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 11 | வாரணிந்த கொங்கை யாய்ச்சி மாதவா உண் ணென்ற மாற்றம்
நீரணிந்த குவளை வாசம் நிகழ நாறும் வில்லி புத்தூர்
பாரணிந்த தொல் புகழான் பட்டர் பிரான் பாடல் வல்லார்
சீரணிந்த செங்கண் மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே–2-2-11 | பதவுரை Show / Hideவார் அணிந்த,Vaar anintha - கச்சை அணிந்து கொண்டிருக்கிற கொங்கை,Kongai - ஸ்தநங்களையுடைய ஆய்ச்சி,Aaychi - யசோதை மாதவா,Maadhavaa - மாதவனே! உண்,Un - முலையை (உண்பாயாக) என்ற,Endru - என்று (வேண்டிச்) சொன்ன மாற்றம்,Maatram - வார்த்தையைக் குறித்தனவான நீர் அணிந்த குவளை,Neer anintha kuvalai - நீர் நிலையை அழகுடையதாகச் செய்கிற செங்கழுநீரின் வாசம்,Vaasam - நல்ல வாசனை நிகழ நாறும்,Nigazha naarum - ஒரே மாதிரியாக எப்போதும் வீசுகின்ற வில்லிபுத்தூர்,Villiputhur - ஸ்ரீவில்லிபுத்தூரிலவதரித்தவரும் பார் அணிந்த,Paar anintha - பூமி முழுவதும் அழகாகப் பரவிய தொல் புகழான்,Thol pugazhaan - பழமையான கீர்த்தியை யுடையவருமான பட்டர்பிரான்,Pattaripiraan - பெரியாழ்வார் அருளிச் செய்த பாடல்,Paadal - பாசுரங்களை வல்லார்,Vallar - ஓத வல்லவர் சீர் அணிந்த,Seer anintha - குணங்களாலழகிய செம் கண் மால் மேல்,Sem kan maal mel - சிவந்த திருக் கண்களை யுடைய திருமாலிடத்தில் சென்ற,Sendra - பதிந்த சிந்தை,Sindhai - மநஸ்ஸை பெறுவர்,Peruvaar - அடைவார்கள் |
| 151 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 13 | வார் காது தாழப் பெருக்கி யமைத்து மகரக் குழையிட வேண்டி
சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பன்னிரு நாமத்தாற் சொன்ன
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடி யாரே–2-3-13 | பதவுரை Show / Hideஅசோதை,Ashodai - யசேதையானவள் வார்,Vaar - (ஸ்வபாவமாகவே) நீண்டிருக்கிற காது,Kaadhu - காதுகளை தாழ,Thaazha - தொங்கும்படி பெருக்கி,Perukki - வளர்த்து அமைத்து,Amaiththu - ஓரளவிலே நிற்கும்படி செய்து மகரம் குழை இட வேண்டி,Magaram Kuzhai Idu Vendi - மகர குண்டங்களை இடவிரும்பி திருமாலை,Thirumalai - ச்ரிய பதியான கண்ணனை சீரால் சொன்ன,Seeraal Sona - சிறப்புக் குறையாதபடி அழைத்த சொல்,Soll - சொற்கள் சிந்தையுள்,Sindhaiyul - (தம்முடைய) மநஸ்ஸிலே நின்று,Nindru - நிலையாகப் பொருந்தி திகழ,Thigazha - விளங்க, பார் ஆர் தொல் புகழான்,Paar Aar Thol Pugazhaan - பூமியில் நிரம்பிய வழமையான யசஸ்ஸையுடையவரும் புதுவை,Puduvai - ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மன்னன்,Mannan - நிர்வாஹகருமான’ பெரியாழ்வார் பன்னிரு நாமத்தால் சொன்ன,Panniru Naamaththaal Sona - த்வாதச நாமங்களோடுஞ் சேர்த்துச் சொல்லி யழைத்த ஆராத,Aaraadha - (ஓத ஓத) த்ருப்தி பிறவாத அந்தாதி,Andhaadi - அந்தாதித் தொடையினாலாகிய பன்னிரண்டும்,Pannirandum - பன்னிரண்டு பாட்டுக்களையும் வல்லார்,Vallaar - ஓத வல்லவர்கள் அச்சுதனுக்கு,Achuthanukku - எம்பெருமானுக்கு அடியார்,Adiyaar - அடிமை செய்யப் பெறுவர். |
| 161 | பெரியாழ்வார் திருமொழி || (2-4 நீராட்டம்) - ‘‘உகந்து ஆட்டிய ஆற்றைச் சொன்ன பாடல் வல்லார் தீவினையிலர்’ என்று முடிபு காண்க. 10 | கார்மலி மேனி நிறத்து கண்ண பிரானை உகந்து
வார்மலி கொங்கை யசோதை மஞ்சனம் ஆட்டியவாற்றை
பார்மலி தொல் புதுவைக் கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல்
சீர்மலி செம்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே -2-4 10 | பதவுரை Show / Hideகார், Kaar - காளமேகத்திற் காட்டிலும் மலி, Mali - சிறந்த மேனி நிறத்து, Meni nirathu - திரு மேனி நிறத்தை யுடைய கண்ண பிரானை, Kanna piranai - கண்ண பிரானை உகந்து, Ugandhu - விரும்பி வார்மலி, Vaarmali - கச்சுக்கு அடங்காமல் விம்முகின்ற கொங்கை, Kongai - ஸ்தனங்களையுடைய அசோதை, Asothai - யசோதைப் பிராட்டி மஞ்சனம் ஆட்டிய, Manjanam aattiya - நீராட்டின ஆற்றை, Aattrai - ப்ரகாரத்தை பார், Paar - பூமியிலே மலி, Mali - சிறந்த தொல், Thol - பழமையான புதுவை, Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு கோன், Kon - நிர்வாஹகரான பட்டர் பிரான், Pattar piran - பெரியாழ்வார் சொன்ன, Sonna - அருளிச் செய்த சீர்மலி, Seermali - அழகு நிறைந்த செந்தமிழ், Sendhamizh - செந்தமிழாலாகிய பாடல், Paadal - (இப்) பாசுரங்களை வல்லார், Vallaar - ஓத வல்லவர்கள் யாதும், Yaadhum - சிறிதும் தீவினை இலர், Theevinai ilar - பாவமில்லாதவராவர் |
| 171 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை) (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) (தரவு கொச்சகக்கலிப்பா) 10 | கண்டார் பழியாமே அக் காக்காய் கார் வண்ணன்
வண்டார் குழல் வார வா வென்ற ஆய்ச்சி சொல்
விண் தோய் மதிள் வில்லி புத்தூர்க் கோன் பட்டன் சொல்
கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே–2-5-10 | பதவுரை Show / Hideஅக் காக்காய்,Akkakkai - காக்கையே! கண்டார்,Kandar - பார்த்தவர்கள் பழியாமே,Pazhiyaamae - பழியாதபடி கார் வண்ணன்,Kaar vannan - காள மேகம் போன்ற நிறமுடைய கண்ணனுடைய வண்டு ஆர் குழல்,Vandu aar kuzhal - வண்டை ஒத்த கரிய கூந்தலை வார,Vaar - வாரும்படி வா,Vaa - வருவாயாக என்ற,Endru - என்று சொன்ன ஆய்ச்சி,Aaychi - யசோதைப் பிராட்டியின் சொல்,Sol - சொல்லை (க்குறித்த) விண் தோய்,Vin thoy - ஆகாசத்தை அளாவுகின்ற மதிள்,Mathil - மதிளை யுடைய வில்லிபுத்தூர்,Villipuththoor - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு கோன்,Kon - நிர்வாஹகரான பட்டன்,Pattam - பெரியாழ்வாருடைய சொல்,Sol - அருளிச் செயல்களை கொண்டாடி,Kondaadi - சிலாகித்து பாட,Paada - பாடப் பெற்றால் வினை தாம்,Vinai thaam - ஸுக்ருத துஷ்க்ருதங்களிரண்டும் குறுகா,Kurugaa - சேராவாம். |
| 181 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (தரவு கொச்சகக்கலிப்பா) 10 | அக்காக்காய் நம்பிக்குக் கோல் கொண்டு வாவென்று
மிக்காளுரைத்த சொல் வில்லி புத்தூர்ப் பட்டன்
ஒக்க வுரைத்த தமிழ் பத்தும் வல்லவர்
மக்களைப் பெற்று மகிழ்வர் இவ் வையத்தே–2-6-10 | பதவுரை Show / Hideஅக்காக்காய்,Akkakkai - காக்கையே! நம்பிக்கு கோல் கொண்டுவா என்று,Nambikku Kol Kondu Va Endru - உத்தமனான இவனுக்கு கோலைக் கொண்டு வந்து தா என்று மிக்கான் உரைத்த சொல்,Mikkaan Uraiththa Sol - சிறந்தவளான யசோதை சொன்ன சொற்களை வில்லி புத்தூர் பட்டன்,Villi Puththoor Pattam - ஸ்ரீவில்லிபுத்தூரில வதரித்த பெரியாழ்வார் ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர்,Okka Uraiththa Tamil Paththum Vallavar - அவ் யசோதையைர் போலவே சொன்ன தமிழினாலாகிய இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கள் மக்களை பெற்று இ வையத்தே மகிழ்வர்,Makkalai Pettru I Vayaththae Magizhvar - ஜ்ஞாந்புத்ரர்களை (சிஷ்யர்களை) அடைந்து இப்பூமியிலே மகிழ்ந்திருக்கப் பெறுவர் |
| 191 | பெரியாழ்வார் திருமொழி || (2-7 பூச்சூடல்) - இந்தத் திருமொழிக்குப் பலஞ்சொல்லாதொழிந்தது, இப்பத்துப் பாசுரங்களும் ஸ்வயமே ரஸ்யமாய் போக்யமாயிருக்குமென்பதற்கு. பத்தே – ஏகாரம் – இப்படியும் பாடவிருக்கப் பெறுவதே! என்று இத்திருமொழியின் போக்யதையைக் கொண்டாடியதைக் காட்டும். எண்பகர் – சூட்டிக்கொள்ளலாமென்று சாஸ்த்ரங்களில் எண்ணப்பட்ட என்றுமாம். கொணர்ந்தேன் = ‘கொணா, என்ற பகுதி குறுக்கலும் விரித்தலுமாகிற விகாரங்களைப்பெற்று ‘கொணர், என நின்றது. பகர்மண் – வாமநனாய்ச்சென்ற திருமால் ‘எனக்கு வடி மண் தா, என்று சொல்லப்பெற்ற பூமியை என்றாவது, ‘வடிமண் அளந்துகொள், என்று மஹாபலி உடன்பட்டுச் சொன்ன பூமியை என்றாவது கொள்க. ஆரேனும் ஒன்றைச் சொல்லிலும் ராகத்திலே சேரும்படி சொல்லுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூரென்பது ‘பண்பகர் வில்லிபுத்தூர், என்பதன் கருத்து. உரைசெய்த – பலவின்பால் இறந்தகால வினையாலணையும் பெயர்; இரண்டாம் வேற்றுமைத்தொகை. உரை செய்தவற்றைப் பட்டர் பிரான் சொன்ன இம்மாலையென்க. —— அடிவரவு – ஆநிரை கரு மச்சு தெரு புள் எருது குடம் சீமாலிகன் அண்டம் செண்பகம் இந்திரன். 10 | செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி
எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று
மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம்மாலை
பண்பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டார் பிரான் சொன்ன பத்தே 2-7-10 | பதவுரை Show / Hideசெண்பகம், Senbakam - செண்பகப் பூவும் மல்லிகையோடு, Mallikaiyodu - மல்லிகைப் பூவும் செங்கழுநீர், Sengazhuneer - செங்கழுநீர்ப் பூவும் இருவாட்சி, Iruvaatchi - இருவாட்சிப் பூவும் எண் பகர், En pakar - (இன்ன தின்னதென்று) (ஆகிய) எண்ணிச் சொல்லப் படுகிற பூவும், Poovum - மலர்களை யெல்லாம் கொணர்ந்தேன், Konarendhen - கொண்டு வந்தேன்; இன்று, Indru - இப்போது இவை சூட்ட , Ivai sootta - இப் பூக்களைச் சூட்டும்படி வா, va - வருவாயாக என்று, Endru - என்று பகர் மண் கொண்டானை, Pakar man kondanai - பகர்ந்த மண்ணைக் கொண்டவனை (தன்னது என்று சாஸ்திரம் பகர்ந்த லோகத்தை அன்றோ இரந்து கொண்டான் ) ஆய்ச்சி, Aaychi - யசோதை மகிழ்ந்து, Magizhndhu - மகிழ்ச்சி கொண்டு உரை செய்த, Urai seytha - சொல்லியவற்றை எண் பகர் வில்லிபுத்தூர், En pakar villiputhoor - ராகமாகவே சொல்லுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கோன், Kon - நிர்வாஹகரான பட்டர் பிரான், Pattar piraan - பெரியாழ்வார் சொன்ன, Sonna - அருளிச் செய்த இம்மாலை, Immaalai - இந்தச் சொல்மாலையும் பத்தே, Patthe - ஒருபத்தே! |
| 201 | பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - ஒரு பாசுரத்தின் ஓரடிக்கு இத் துணை மஹிமை கூறிய முகத்தால் இத்திருமொழியின் பயன் அளவிட்டுச் சொல்ல முடியாதென்பதைக் கைமுதிக ந்யாயத்தால் பெறவைத்தார். (பாதப்பயனித்யாதி.) ஒவ்வொரு பாட்டின் கடைசிப்பாதத்தில் கூறியுள்ள காப்பிடலாகிய புருஷார்த்தத்தைக் கைக் கொள்ளக் கடவ பக்தர்களுடைய பாபங்கள் தீருமென்று முரைக்கலாம். 10 | போதமர் செல்வக் கொழுந்து புணர் திரு வெள்ளறையானை
மாதர்க்கு உயர்ந்த யசோதை மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம்
வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் சொன்ன மாலை
பாதப் பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே -2- 8-10 | பதவுரை Show / Hideமாதர்க்கு உயர்ந்த, Maadharkku uyarntha - ஸ்திரீகளுள் சிறந்த அசோதை, Asodhai - யசோதைப் பிராட்டி மகன் தன்னை, Magan thannai - தன் புத்ரனான கண்ணனை காப்பு இட்ட, Kaappu itta - ரக்ஷை யிட அழைத்த மாற்றம், Maatram - வார்த்தையை போது அமர், Pothu amar - தாமரைப் பூவைப் (பிறப்பிடமாகப்) பொருந்திய செல்வக் கொழுந்து, Selva kozhundhu - செல்வத்திற்கு உரியவளாய் மற்றைத் தேவியரிற் சிறந்தவளான பிராட்டி புணர், Punar - ஸம்ச்லேஷிக்கப் பெற்ற திரு வெள்ளறையானை, Thiru vellaraiyaanai - திரு வெள்ளறையில் நின்றருளியவனைப் பற்றி வேதப் பயன், Vedha payan - (எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் செய்கையையே) வேத தாத்பர்யமாக கொள்ள வல்ல, Kolla valla - அறிய வல்ல விட்டு சித்தன், Vittu chithan - பெரியாழ்வார் சொன்ன, Sonna - அருளிச் செய்த மாலை, Maalai - பாமாலையினுடைய பாதம் பயன், Paadham payan - ஓரடி கற்றதனாலாகிய பயனை; நாலாம் அடியில் சொன்ன காப்பிடுதலை கொள்ள வல்ல, Kolla valla - அடைய வல்ல பக்தர் உள்ளார், Bakthar ullaar - பக்தராக உள்ளவரது வினை, Vinai - வினைகளெல்லாம் போம், Poom - கழிந்து விடும் |
| 212 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 11 | வண்டுகளித்திரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரித் தென்ன ரங்கன்
பண்டவன் செய்த கிரீடை யெல்லாம் பட்டர் பிரான் விட்டு சித்தன் பாடல்
கொண்டிவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன் தன் அடியார்களாகி
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணை யடி என் தலை மேலனவே–2-9-11 | பதவுரை Show / Hideவண்டு,Vandu - வண்டுகளானவை களித்து,Kaliththu - (தேனைப் பருகிக்) களித்து இரைக்கும்,Eraikkum - ஆரவாரங்கள் செய்யப் பெற்ற பொழில்,Pozhil - சோலைகளாலும் வரு,Varu - (அச் சோலைகளுக்காகப் பெருகி) வாரா நின்றுள்ள புனல்,Punal - நீரை யுடைத்தான காவிரி,Kaaviri - காவேரீ நதியான சூழ்,Soozh - சூழப் பெற்று தென்,Then - அழகிய அரங்கன் அவன்,Arangan Avan - திருவரங்கத்தில் நித்யவாஸம் பண்ணுகிற வைபவத்தை யுடையவனான அப் பெருமான் பண்டு,Pandu - (விபவமாகிய) முற் காலத்தில் செய்த,Seidha - செய்த கிரீடை எல்லாம்,Kireedai Ellaam - லீலா சேஷ்டிதங்களெல்லாவற்றையும் (விசேஷமாகக் கொண்டு) விட்டு சித்தன் பட்டர்பிரான் பாடல்,Vittu Siththan Pattarpiraan Paadal - விஷ்ணுவை நெஞ்சிற் கொண்டவராய் பிராஹ்மணோத்தமரான பெரியாழ்வார் (பாடின) பாடலாகிய இவை கொண்டு,Ivai Kondu - இப் பாட்டுக்களை (அநு சந்தேயமாகக் ) கொண்டு பாடி,Paadi - (இப் பாசுரங்களை)பாடி குனிக்க வல்லார்,Kunikka Vallaar - (அதனால் பக்தி மீதூர்ந்து உடம்பு இவ் விடத்தில் இராமல் விகாரமடைந்து) கூத்தாட வல்லவர்களாய் கோவிந்தன் தன் அடியார்கள் ஆகி,Govindhan Than Adiyaargal Aagi - கண்ண பிரானுக்கு அடியவர்களாய் என் திசைக்கும்,En Disaiyukkum - எட்டு திக்குகளிலும் (உள்ள இருள் நீங்கும்படி) விளக்கு ஆகி நிற்பார்,Vilakku Aagi Nrirpaar - (அத் திக்குகளுக்கு) விளக்காக நிற்கும் அவர்களுடைய இணை யடி,Inai Yadi - திருவடிவிணை களானவை என் தலை மேலான,En Thalai Melaana - என்னுடைய முடியின் மேல் வீற்றிருக்கத் தக்கவை |
| 222 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 10 | அங்கமலக் கண்ணன் தன்னை யசோதைக்கு
மங்கை நல் லார்கள் தாம் வந்து முறைப்பட்ட
அங்கவர் சொல்லைப் புதுவைக் கோன் பட்டன் சொல்
இங்கிவை வல்லவர்க்கு ஏதமொன் றில்லையே–2-10-10 | பதவுரை Show / Hideநல் மங்கைமார்கள் தாம்,Nal Mangaimargal Thaam - (பகவத் ப்ரேமமாகிற) நன்மை பொருந்திய (இடைப்) பெண்கள் அம் கமலம்,Am Kamalam - அழகிய செந்தாமரைப் பூப்போன்ற கண்ணன் தன்னை,Kannan Thannai - கண்களை யுடைய கண்ணபிரான் (செய்த தீம்பு) விஷயமாக அங்கு வந்து,Angu Vandhu - அந்தக் கண்ண பிரானுடைய வீட்டுக்கு வந்து அசோதைக்கு,Asothaiyukku - (அவன் தாயான) யசோதைப் பிராட்டி யிடத்திலே முற்பட்ட,Murppatta - (தங்கள் ஆர்த்திதோற்றக்) கதறிச் சொன்ன அவர் சொல்லை,Avar Sollai - அவ் விடைச்சிகளின் சொல்லை, புதுவை,Puthuavai - ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கோன்,Kon - நிர்வாஹகரான பட்டன்,Pattam - பெரியாழ்வார் சொல்,Sol - அருளிச் செய்த இவை,Evai - இப் பாசுரங்களை இங்கு,Engu - இந்த ஸம்ஸாரத்தில் (இருந்து கொண்டே) வல்லவர்க்கு,Vallavarkku - ஓத வல்லவர்களுக்கு ஒன்று ஏதம்,Onru Aedham - ஒரு வகைக் குற்றமும் இல்லை,ellai - இல்லையாம். |
| 233 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 11 | காரார் மேனி நிறத் தெம்பிரானைக் கடி கமழ் பூங்குழலாய்ச்சி
ஆரா இன்னமு துண்ணத் தருவன் நான் அம்மம் தாரேனென்ற மாற்றம்
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பட்டர் பிரான் சொன்ன பாடல்
ஏராரின்னிசை மாலை வல்லார் இருடீகேச னடியாரே–3-1-11 | பதவுரை Show / Hideகார் ஆர்,Kaar Aar - மேகத்தோடு ஒத்த மேனி நிறத்து,Meni Nirathu - திருமேனி நிறத்தை யுடைய எம் பிரானை,Em Piraanai - கண்ண பிரானைக் குறித்து, கடி கமழ் பூ குழல் ஆய்ச்சி,Kadi Kamal Poo Kuzhal Aaychi - வாஸனை வீசா நின்ற பூக்களை அணிந்த கூந்தலை யுடைய யசோதை ஆரா இன் அமுது உண்ண தருவன் நான்,Aaraa In Amudhu Unna Tharuvan Naan - (எவ்வளவு குடித்தாலும்) திருப்தி பிறவாத இனிய ஸ்தந்யத்தை இது வரை உனக்கு உண்ணத் தந்துகொண்டிருந்த நான் அம்மம் தாரேன்,Ammam Thaarein - (இன்று உன் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தேனாகையால்) அம் மந்தர அஞ்சுவேன்” என்ற மாற்றம்,Endra Maattram - என்று சொன்ன பாசுரத்தை சொன்ன,Sonna - அருளிச் செய்த, பார் ஆர்,Paar Aar - பூமி யெங்கும் நிறைந்துள்ள தொல்,Thol - பழமையான புகழான்,Pugazhaan - கீர்த்தியை யுடையராய் புதுவை,Puthuvai - ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மன்னன்,Mannan - நிர்வாஹகரான பட்டர் பிரான்,Pattar Piraan - பெரியாழ்வாருடைய பாடல்,Paadal - பாடலாகிய ஏர் ஆர் இன் இசை மாலை,Er Aar In Isai Maalai - இயலழகாலே நிறைந்து இனிய இசையோடே கூடியிருந்துள்ள சொல் மாலையை வல்லார்,Vallaar - ஓத வல்லவர்கள் இருடீகேசன்,Erudheekesan - ஹ்ருஷிகேசனான எம்பெருமானுக்கு அடியார்,Adiyaar - அடிமை செய்யப் பெறுவார்கள். |
| 243 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 10 | என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனை
கன்றின் பின் போக்கினே னென்று அசோதை கழறிய
பொன் திகழ் மாடப் புதுவையர் கோன் பட்டன் சொல்
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இட ரில்லையே–3-2-10 | பதவுரை Show / Hideஎன்றும்,Endrum - எப்போதும் எனக்கு,Enakku - (தாயாகிய) எனக்கு இனியானை,Eniyanai - இனிமையைத் தருமவனாய் என்,En - என்னுடைய மணி வண்ணனை,Mani Vannanai - நீல மணி போன்ற வடிவை யுடையனான கண்ணபிரானை கன்றின் பின் போக்கினேன் என்று,Kanrin Pin Pokkinen Endru - கன்றுகளின் பின்னே (காட்டில்) போக விட்டேனே!’ என்று அசோதை,Asothai - யசோதைப் பிராட்டி கழறிய,Kalariya - (மனம் நொந்து) சொன்னவற்றவை சொல்,Sol - அருளிச் செய்த பொன்,Pon - பொன் மயமாய் திகழ்,Thigal - விளங்கா நின்றுள்ள மாடம்,Maadam - மாடங்களை யுடைய புதுவையர்,Puthuvaiyar - ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளவர்களுக்கு கோன்,Kon - நிர்வாஹகரான பட்டன்,Pattan - பெரியாழ்வாருடைய இன்,En - போக்யமான தமிழ் மாலைகள்,Tamil Maalaigal - தமிழ்ச் சொல் மாலைகளை வல்லவர்க்கு,Vallavarkku - ஓத வல்லவர்களுக்கு இடர் இல்லை,Edar Ellai - (ஒரு காலும்) துன்பமில்லையாம். |
| 253 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 10 | புற்றர வல்குல் அசோதை நல் லாய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை
கற்றினம் மேய்த்து வரக் கண்டுகந்து அவள் கற்பித்த மாற்ற மெல்லாம்
செற்ற மிலாதவர் வாழ் தரு தென் புதுவை விட்டு சித்தன் சொல்
கற்றிவை பாட வல்லார் கடல் வண்ணன் கழலிணை காண்பார் களே–3-3-10 | பதவுரை Show / Hideபுற்று,Putru - புற்றிலே (வளர்கின்ற) அரவு,Aravu - பாம்பின் படத்தை ஒத்த அல்குல்,Alkul - அல்குலை உடையளாய் அசோதை,Asothai - யசோதை யென்னும் பெயரை யுடையளாய் நல்,Nal - (பிள்ளை திறத்தில்) நன்மையை யுடையளான ஆய்ச்சி,Aaychi - ஆய்ச்சியானவள் தன் புத்திரன்,Than Puthiran - தன் மகனான கோவிந்தனை,Govindanai - கண்ணபிரானை கன்று இனம் மேய்த்து வரக் கண்டு,Kanru Inam Maeythu Varak Kandu - கன்றுகளின் திரளை (க்காட்டிலே) மேய்த்து விட்டு மீண்டு வரக் கண்டு உகந்து,Ugandhu - மன மகிழ்ந்து அவள்,Aval - அவ் யசோதை கற்பித்த,Karpitha - (அம் மகனைக் குறித்து இன்னபடி செய் என்று)நியமித்துக் கூறிய மாற்றம் எல்லாம்,Maatram Ellaam - வார்த்தைகளை யெல்லாம்; செற்றம் இலாதவர்,Setram Ilaadhavar - அஸூயை யற்ற ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழ் தரு,VaaL Tharu - வாழுமிடமான தென்,Then - அழகிய புதுவை,Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூருக்கு நிர்வாஹகரான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் சொல்,Sol - அருளிச் செய்த இவை,Evai - இப் பாசுரங்களை கற்று,Katru - (ஆசார்ய முகமாக) ஓதி பாட வல்லார்,Paada Vallaar - (வாயாரப்) பாட வல்லவர்கள் கடல் வண்ணன்,Kadal Vannan - கடல் போன்ற நிறத்தனான எம்பெருமானுடைய கழல் இணை,Kalal Inai - திருவடி யிணைகளை காண்பார்கள்,Kaanbargal - கண்டு அநுபவிக்கப் பெறுவர்கள். |
| 263 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 10 | விண்ணின் மீது அமரர்கள் விரும்பித் தொழ மிறைத்து ஆயர் பாடியில் வீதி யூடே
கண்ணங் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு இளவாய்க் கன்னிமார் காமுற்ற
வண்ணம் வண்டமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
பண்ணின்பம் வரப் பாடும் பத்தருள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே–3-4-10 | பதவுரை Show / Hideவிண்ணின் மீது,Vinnin Meedhu - பரமாகாசமாகிய ஸ்ரீவைகுண்டத்திலே அமரர்கள்,Amarargal - நித்ய ஸூரிகள் விரும்பி,Virumbi - ஆதரித்து தொழ,Thozha - ஸேவியா நிற்கச் செய்தேயும் கண்ணன்,Kannan - ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா மறைத்து,Maraiththu - (அவர்களை மதியாமல்) மேனாணித்து ஆயர் பாடியில்,Aayar Paadiyil - திருவாய்ப்பாடியில் (வந்து அவதரித்து) வீதி ஊடே,Veedhi Oodae - தெருவேற காலி பின்னே,Kaali Pinnae - பசுக்களின் பின்னே எழுந்தருள,Ezhundharula - எழுந்தருளா நிற்க, இள ஆய் கன்னிமார்,Ila Aay Kannimaar - (அவ்வழகை)யுவதிகளான இடைப் பெண்கள் கண்டு,Kandu - பார்த்து காமுற்ற வண்ணம்,Kaamutra Vannam - காம லிகாரமடைந்த படியை, வண்டு அமர் பொழில்,Vandu Amar Pozhil - வண்டுகள் படிந்த சோலைகளை யுடைய புதுவையர் கோன்,Puduvaiyar Kon - ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளார்க்குத் தலைவரான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் சொன்ன,Sonnan - அருளிச் செய்த மாலை பத்தும்,Maalai Paththum - சொல் மாலையாகிய இப் பத்துப் பாசுரங்களையும் இன்பம் வர,Inbam Vara - இனிமையாக பண்,Pan - பண்ணிலே பாடும்,Paadum - பாட வல்ல பக்தருள்ளார்,Bhaktar Ullaar - பக்தர்களா யிருக்குமவர்கள் பரமான,Paramaan - லோகோத்தரமான வைகுந்தம்,Vaikundham - ஸ்ரீவைகுண்டத்தை நண்ணுவர்,Nannuvaar - அடையப் பெறுவார்கள். |
| 274 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 11 | அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகை யூர்தி யவனுடைய
குரவிற் கொடி முல்லைகள் நின்றுறங்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடை மேல்
திருவிற் பொலி மா மறை வாணர் புத்தூர்த் திகழ் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவு மன நன்குடைப் பத்தருள்ளார் பரமான வைகுந்தம் நண் ணுவரே–3-5-11 | பதவுரை Show / Hideஅரவில்,Aravil - திருவனந்தாழ்வான்மீது பள்ளி கொண்டு,Palli Kondu - (பாற்கடலில்) பள்ளி கொள்பவனும் அரவம்,Aravam - (அதைவிட்டு ஆயர் பாடியில் வந்து பிறந்து) காளியநாகத்தை துரந்திட்டு,Thurandhittu - ஒழித்தருளினவனும் அரவம் பகை ஊர்தி,Aravam Bhagai Oorthi - ஸர்ப்ப சத்ருவான கருடனை வாஹனமாக வுடையவனுமான கண்ணனுடைய குரலில் கொடி முல்லைகள் நின்று உறங்கும்,Kuralil Kodi Mullaihal Nindru Urangum - குரவ மரத்தில் முல்லைக் கொடிகள் படர்ந்து கோவர்த்தனம் என்னும் கொற்றம் குடை மேல்,Kovarthanam Ennum Kotrham Kudai Mel - கோவர்த்தனமென்ற கொற்றக் குடை விஷயமாக திருவில்,Thiruvil - ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயாலே பொலி,Poli - விளங்கா நின்றுள்ள மறைவாணர்,Marai Vaanaar - வைதிகர்கள் இருக்குமிடமான புத்தூர்,Puthoor - ஸ்ரீவில்லிபுத்தூரில் பட்டர் பிரான்,Pattar Piraan - பெரியழ்வார் சொன்ன,Sona - அருளிச் செய்த மாலை பத்தும்,Maalai Paththum - இப் பத்துப் பாசுரங்களையும் பரவும் மனம்,Paravum Manam - அப்யஸிக்கைக்கீடான மநஸ்ஸை நன்கு உடை,Nangu Udai - நன்றாக உடையரான பத்தர் உள்ளார்,Paththar Ullaaar - பக்தர்களாயிருப்பார் பரமான வைகுந்தம்,Paramaan Vaikundham - பரம பத்ததை நண்ணுவர்,Nannavur - அடையப் பெறுவர். |
| 285 | பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 11 | குழலிருண்டு சுருண்டேறிய குஞ்சிக் கோவிந்த னுடைய கோமள வாயில்
குழல் முழைஞ்சுகளினூடு குமிழ்த்துக் கொழித்திழிந்த அமுதப் புனல் தன்னை
குழல் முழவம் விளம்பும் புதுவைக் கோன் விட்டு சித்தன் விரித்த தமிழ் வல்லார்
குழலை வென்ற குளிர் வாயினராகிச் சாது கோட்டியுள் கொள்ளப் படுவாரே–3-6-11 | பதவுரை Show / Hideஇருண்டு சுருண்டு ஏறிய,Erundu Surundu Eriya - கறுத்து சுருண்டு நெடுக வளர்ந்த குழல் குஞ்சி,Kuzhal Kunji - அலகலகான மயிர்களை யுடையனான கோவிந்தனுடைய,Govindhanudaiya - கண்ணபிரானுடைய கோமள வாயில்,Komala Vaayil - அழகிய வாயில்(வைத்து ஊதப் பெற்ற) குழல்,Kuzhal - வேய்ங்குழலினுடைய முழஞ்சுகளினூடு,Muzhanjugalinoodu - துளைகளிலே குமிழ்த்து,Kumizhtthu - நீர்க்குமிழி வடிவாகக் கிளர்ந்து(பிறகு அது உடையப் பெற்று) கொழித்து எழுந்த,Kozhiththu Ezhundha - கொழித்துக் கொண்டு மேற்கிளம்பின அமுதம் புனல் தன்னை,Amudham Punal Thannai - அம்ருத ஜலத்தை குழல் முழவம் விளம்பும்,Kuzhal Muzhavam Vilambum - குழலோசை யோடொக்கப் [பரம யோக்யமாக] அருளிச் செய்தவரும் புதுவை கோன்,Puduvai Koon - ஸ்ரீவில்லிப்புத்தூர்க்குத் தலைவருமான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் விரிந்த,Virindha - விஸ்தாரமாகக் கூறிய தமிழ்,Tamil - இத்தமிழ்ப் பாசுரங்களை வல்லார்,Vallaar - ஓத வல்லவர்கள் குழலை வென்ற குளிர் வாயினர் ஆகி,Kuzhalai Vendra Kuleer Vaayinar Aagi - திருக் குழலோசையின் குளிர்த்தியையங் கீழ்ப் படுத்தித் தான் மேலாம்படி குளிர்ந்த வாய் மொழியை யுடையராய் சாது கோட்டியுள்,Saathu Koththiyul - ஸ்ரீ வைஷ்ணவர்கள் கோஷ்டியில் கொள்ளப் படுவார்,Kollappaduvaar - பரிக்ரஹிக்கப் படுவார்கள். |
| 296 | பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 11 | ஞால முற்றும் உண்டு ஆலிலைத் துயில் நாரா யணனுக்கு இவள்
மால தாகி மகிழ்ந்தன ளென்று தாயுரை செய்ததனை
கோல மார் பொழில் சூழ் புதுவையர்கோன் விட்டுசித்தன் சொன்ன
மாலை பத்தும் வல்லவர்கட்கு இல்லை வரு துயரே-3-7-11 | பதவுரை Show / Hideஇவள்,Eval - இப்பெண்பிள்ளை யானவள் ஞாலம் முற்றும் உண்டு,Gnaalam Mutrum Undu - எல்லா வுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கி ஆல் இலை துயில்,Aal Ilai Thuyil - ஒரு ஆலந்தளிரிலே கண் வளர்ந்தருளின நாராயணனுக்கு,Naarayananukku - எம்பெருமான் விஷயத்தில் மால் அது ஆகி,Maal Athu Aagi - மோஹத்தை யுடையளாய் மகிழ்ந்தனள் என்று,Magizhndhanal Endru - (அவனை அணைக்க வேண்டு மென்ற மநோ ரதத்தினால்) மனமுகந்தாள்” என்று தாய் உரை செய்ததனை,Thaai Urai Seidhaththai - தாய் சொல்லியதை கோலம் ஆர்,Kolam Aar - அழகு நிறைந்த பொழில் சூழ்,Pozhil Soozh - சோலைகளாலே சூழப்பட்ட புதுவையர் கோன்,Puthuvaiyar Kon - ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளவர்க்குத் தலைவரான விட்டுச் சித்தன்,Vittuch Siththan - பெரியாழ்வார் சொன்ன,Sonnna - அருளிச் செய்த மாலை,Maalai - சொல் மாலையாகிய பத்தும்,Paththum - இப்பத்துப் பாட்டையும் வல்லவர்கட்கு,Vallavarkatku - ஓத வல்லவர்களுக்கு வரு துயர் இல்லை,Varu Thuyar Illai - வரக்கூடிய துன்பம் ஒன்றுமில்லை. |
| 306 | பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 10 | மாயவன் பின் வழி சென்று வழியிடை மாற்றங்கள் கேட்டு
ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றமு மெல்லாம்
தாயவள் சொல்லிய சொல்லைத் தண் புதுவைப் பட்டன் சொன்ன
தூய தமிழ்ப் பத்தும் வல்லார் தூமணி வண்ணற் காளாரே–3-8-10 | பதவுரை Show / Hideவழி இடை,Valee Idai - போகிற வழியிலே மாற்றங்கள் கேட்டு,Maattrangal Kettu - (அபூர்வ வஸ்துக்களைக் கண்டால் இவை என்?” என்று அவ் விஷயமாக) வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு மாயவன் பின் வழி சென்று,Maayavan Pin Vali Sendru - கண்ணபிரான் பின்னே போய் ஆயர்கள் சேரியிலும் புக்கு,Aayargal Seriyilum Pukku - திருவாய்ப்பாடியிலும் சென்று புகுந்த பின்பு அங்குத்தை மாற்றமும் எல்லாம்,Anguththai Maatramum Ellaam - அங்குண்டாகும் செயல்கள் சொலவுகள் முதலிய எல்லாவற்றையுங் குறித்து தாய் அவள்,Thaai Aval - தாயானவள் சொல்லிய,Solliya - சொன்ன சொல்லை,Sollai - வார்த்தைகளை தன் புதுவைபட்டன் சொன்ன,Than Pudhuvaipattan Sonnan - குளிர் தன்மையை யுடைய ஸ்ரீவில்லிப்புத்தூரில் அவதரித்த பெரியாழ்வார் அருளிச் செய்தவையாகிய தூய,Thooya - பழிப்பற்ற தமிழ் பத்தும்,Tamil Paththum - தமிழ் பாட்டுக்கள் பத்தையும் வல்லார்,Vallaar - ஓத வல்லவர்கள் தூ மணிவண்ணனுக்கு,Thoo Manivannanukku - அழகிய மணி போன்ற நிறத்தையுடைய கண்ணபிரானுக்கு ஆளர்,Aalar - ஆட்செய்யப் பெறுவர். |
| 317 | பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 11 | நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று
உந்தி பறந்த ஒளி யிழையார்கள் சொல்
செந்தமிழ்த் தென் புதுவை விட்டு சித்தன் சொல்
ஐந்தினோ டைந்தும் வல்லார்க்கு அல்ல லில்லையே–3-9-11 | பதவுரை Show / Hideநந்தன மதலையை,Nandhana Madhalaiyai - நந்த கோபான் குமாரனான கண்ண பிரானையும் காகுத்தனை,Kaaguththanai - இராம பிரானையும் நவின்று,Navindru - (ஒருவர்க்கொருவர் எதிரியாய் நின்று) சொல்லி உந்தி பறந்து,Undhi Parandhu - உந்தி பறக்கையாகிற லீலா ரஸங்கொண்டாடின ஒளி இழையார்கள்,Oli Izaiyaargal - அழகிய ஆபாரணமணிந்த ஆய்ப் பெண்கள் இருவருடைய சொல்,Sol - சொல்லி செம்தமிழ்,Semthamizh - அழகிய தமிழ் பாஷையாலே தென் புதுமை விட்டு சித்தன் சொல்,Then Puthumai Vittu Siththan Sol - அழகிய ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வார் அருளிச் செய்த ஐந்தினோடு ஐந்தும்,Aindhinodu Aindhum - க்ருஷ்ணாவதார விஷயமான ஐந்தும், ராமாவதார விஷயமான ஐந்துமாகிய இப் பத்துப் பாசுரங்கனை வல்லார்க்கு அல்லல் இல்லை,Vallarkku Allal Illai - துன்பமொன்று மில்லையாம். |
| 327 | பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 10 | வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீராரும் திறலனுமன் தெரிந்துரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே.–3-10-10 | பதவுரை Show / Hideவார் ஆரும்,Vaar Aarum - கச்சு அணிந்திருக்கைக்கு உரிய முலை,Mulai - முலையையும் மடலாள்,Madalaal - மடப்பத்தை யுமுடையவளான வைதேவிதனை,Vaithevidhanai - ஸீதா பிராட்டியை கண்டு,Kandu - பார்த்து சீர் ஆரும்,Seer Aarum - சக்தியை யுடையவனான திறல்,Thiral - சிறிய திருவடி தெரிந்து,Therindhu - (பெருமாளிடத்தில் தான்) அறிந்து கொண்டு. உரைந்து,Uraindhu - (பின்பு பிராட்டியிடத்திற்) சொன்ன அடையாளம்,Adaiyaalam - அடையாளங்களை (க் கூறுவதான) பார் ஆளும் புகழ்,Paar Aazhum Pugazh - பூமி யெங்கும் பரவின கீர்த்தியை யுடையராய் புதுவை,Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான பட்டர்பிரான் பாடல்,Pattarpiraan Paadal - பெரியாழ்வார் அருளிச் செய்த இப்பாடல்களை வல்லார்,Vallaar - ஓத வல்லார்கள் ஏர் ஆரும் வைகுந்தத்து,Er Aarum Vaikunthaththu - வல்லா நன்மைகளும் நிறைந்த ஸ்ரீவைகுண்டததில் இமையவரோடு,Imaiyavarodu - நித்ய ஸூரிகளோடு இருப்பார்,Irupaar - கோவையா யிருக்கப் பெறுவார்கள். |
| 337 | பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 10 | கரிய முகில் புரை மேனி மாயனைக் கண்ட சுவடுரைத்து
புரவி முகம் செய்து செந்நெலோங்கி விளை கழனிப் புதுவை
திருவிற் பொலி மறை வாணன் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவு மனமுடைப் பத்தருள்ளார் பரமனடி சேர்வர்களே–4-1-10 | பதவுரை Show / Hideகரியமுகிற் புரை மேனி,Kariyamugir Purai Maeni - கரு மலர் போன்ற திருமேனியுடையனும் மாயனை,Maayanai - ஆச்சரிய செய்கைகளை யுடையனுமான கண்ணபிரானை கண்ட சுவடு,Kanda Suvadu - ஸேவித்த அடையாளங்களை உரைத்த,Uraitha - அருளிச் செய்த; செந்நெல்,Sennel - செந்நெற் பயிர்களானவை ஓங்கி,Ongi - (ஆகாசமளவும்) உயர்ந்து புரவி முகம் செய்து,Puravi Mugam Seidhu - குதிரை முகம் போலத் தலை வணங்கி விளை,Vilai - விளையா நிற்கப் பெற்ற கழனி,Kazhani - வயல்களை யுடைய புதுவை,Puduvai - ஸ்ரீவில்லிபுத்தார்க்குத் தலைவரும் திருவின்,Thiruvin - (விஷ்ணு பக்தியாகிற) செல்வத்தினால் பொலி,Poli - விளங்கா நின்றுள்ளவரும் மறை வாணன்,Marai Vaanan - வேதத்துக்கு நிர்வாஹகருமான பட்டர் பிரான்,Pattar Piraan - பெரியாழ்வார் சொன்ன,Sonna - அருளிச்செய்த மாலை பத்தும்,Maalai Paththum - சொல் மாலையாகிற இப் பத்துப் பாட்டையும் பரவும் மனம் உடை,Paravum Manam Udai - அநுஸத்திக்கைக் கீடான மநஸ்ஸை யுடையவரும் பக்தர் உள்ளார்,Bakthar Ullaar - பக்தியை யுடையவருமாயிருப்பவர்கள் பரமன்,Paraman - பரம புருஷனுடைய அடி,Adi - திருவடிகளை சேர்வர்கள்,Saervargal - கிட்டப் பெறுவார்கள் |
| 348 | பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 11 | மருதப் பொழிலணி மாலிருஞ் சோலை மலை தன்னை
கருதி யுறைகின்ற கார்க் கடல் வண்ண னம்மான் தன்னை
விரதம் கொண்டேத்தும் வில்லி புத்தூர் விட்டு சித்தன் சொல்
கருதி யுரைப்பவர் கண்ணன் கழலிணை காண்பார்களே–4-2-11 | பதவுரை Show / Hideமருதம் பொழில்,Marudham Pozhil - மருதஞ் சோலைகளை அணி,Ani - அலங்காரமாக வுடைய மாலிருஞ்சோலை மலை தன்னை,Maalirunjolai Malai Thannai - திருமாலிருஞ்சோலை மலையை கருதி,Karudhi - விரும்பி உறைகின்ற,Uraiginra - (அதில்) எழுந்தருளி யிருக்கின்ற கார் கடல் வண்ணன்,Kaar Kadal Vannan - கருங்கடல் போன்ற நிறத்தை யுடைய அம்மான் தன்னை,Ammaan Thannai - அழகப் பிரனாரை விரதம் கொண்டு,Viradham Kondu - மங்கள விரதமாகக் கொண்டு ஏத்தும்,Eaththum - துதிக்குமாறும் வில்லிபுத்தூர்,Villipuththur - ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவருமான விட்டுசித்தன்,Vittuchiththan - பெரியாழ்வார். சொல்,Sol - அருளிச் செய்த இவற்றை கருதி,Karudhi - விரும்பி உரைப்பவர்,Uraippavar - ஓதுமவர்கள் கண்ணன்,Kannan - கண்ண பிரானுடைய கழல் இணை,Kazhal Inai - திருவடிகளை காண்பர்கள்,Kaanbargal - ஸேவிக்கப் பெறுவார்கள். |
| 359 | பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 11 | மாலிருஞ் சோலை யென்னும் மலையை யுடைய மலையை
நாலிரு மூர்த்தி தன்னை நால் வேதக் கடலமுதை
மேலிருங் கற்பகத்தை வேதாந்த விழுப் பொருளில்
மேலிருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனவே–4-3-11 | பதவுரை Show / Hideமாலிருஞ்சோலை என்னும்,Maaliruncholai Ennum - திருமாலிருஞ்சோலை என்கிற மலையை,Malaiyai - திருமலையை உடைய,Udaiya - (தனக்கு இருப்பிடமாக) உடையவனும் மலையை,Malaiyai - ஒரு மலை சாய்ந்தாற்போன்றுள்ளவனும் கால் இரு மூர்த்தி தன்னை,Kaal Iru Moorththi Thannai - திருவஷ்டாக்ஷர ஸ்வரூபி யானவனும் நால் வேதம் கடல் அமுதை,Naal Vedham Kadal Amudhai - நான்கு வேதங்களாகிய கடலில் ஸாரமான அம்ருதம் போன்றவனும் மேல் இருங் கற்பகத்தை,Mel Irung Karppagaththai - (ஸ்வர்க்க லோகத்திலுள்ள கல்ப வ்ருக்ஷத் தினம்) மேற்பட்டதும் பெரிதுமான கல்பங்ருஷமாயிருப்பவனும் வேதாந்தம்,Vedhaantham - வேதாந்தங்களிற் கூறப்படுகின்ற விழுப்பொருளில்,Vizhupporulil - சிறந்த அர்த்தங்களுள் மேல் இருந்த,Mel Irundha - மேற்பட்ட அர்த்தமாயிருப்பவனும் விளக்கை,Vilakkai - தனக்குத் தானே விளங்குபவனுமான எம்பெருமானைக் குறித்து விட்டுசித்தன்,Vittuchiththan - பெரியாழ்வார் விரித்தன,Viriththana - அருளிச் செய்தவை இப் பாசுரங்கள். |
| 370 | பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 11 | சீதநீர் புடை சூழ் செழுங்கழனி யுடைத் திருக் கோட்டியூர்
ஆதியானடியாரையும் அடிமை யின்றித் திரிவாரையும்
கோதில் பட்டர்பிரான் குளிர் புதுவை மன் விட்டுசித்தன் சொல்
ஏதமின்றி உரைப்பவர் இருடீகேசனுக் காளரே–4-4-11 | பதவுரை Show / Hideசீதம் நீர்,Seetham Neer - குளிர்ந்த நீராலே படை சூழ்,Padai Soozh - சுற்றும் சூழப் பெற்ற செழு,Sezhu - செழுமை தங்கிய கழனி உடை,Kazhani Udai - கழனிகளை யுடைய திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருக்கிற) ஆதியான்,Aadhiyaan - எம்பெருமானுக்கு அடியாரையும்,Adiyaaraiyum - அடிமை செய்யும் பாகவதர்களையும் அடிமை இன்றி,Adimai Inri - அடிமை செய்யாமல் திரிவாரையும்,Thirivaaraiyum - திரிகின்ற பாவிகளையும் குறித்து, கோதில்,Kothil - குற்றமற்றவரும் பட்டர் பிரான்,Pattar Piraan - அந்தணர்கட்குத் தலைவரும் குளிர,Kulira - குளிர்ந்த புதுவை,Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு மண்,Man - நிர்வாஹருமான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் சொல்,Sol - அருளிச் செய்த இப் பாசுரங்களை ஏதும் இன்றி,Eaathum Inri - பழுதில்லாதபடி உரைப்பவர்,Uraippavar - ஓதுமவர்கள் இருடீகேசனுக்கு,Irudheekesanukku - எம்பெருமானுக்கு ஆளர்,Aalar - ஆட் செய்யப் பெறுவர் |
| 380 | பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 10 | செத்துப் போவதோர் போது நினைந்து செய்யும் செய்கைகள் தேவபிரான் மேல்
பத்தரா யிறந்தார் பெறும் பேற்றைப் பாழித் தோள் விட்டு சித்தன் புத்தூர்க் கோன்
சித்தம் நன்கொருங்கித் திரு மாலைச் செய்த மாலை இவை பத்தும் வல்லார்
சித்தம் நன்கொருங்கித் திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர் தாமே–4-5-10 | பதவுரை Show / Hideசெத்துப் போவது ஓர் போது,Seththu Povadhu Or Podhu - இறந்து போகுங் காலத்திலே செய்கைகள்,Seykaigal - (கடுஞ்) செயல்களை நினைத்து,Ninaiththu - நினைத்து தேவ பிரான் மேல்,Deva Piraan Mel - தேவ பிரான் பக்கலில் பத்தர் ஆய்,Pattar Aai - அன்பு பூண்டவர்களாய் இருந்து இறந்தார்,Irandhaar - (பின்பு) இறந்தவர்கள் பெறும் பேற்றை,Perum Paettrai - அடையக்கூடிய பலன்களைக் குறித்து, பாழி தோள்,Paazhi Thol - (ஸம்ஸாரத்தை வென்ற) மிடுக்கை யுடைய தோள்களை யுடையவரும் புத்தூர்,Puththoor - ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கோன்,Kon - தலைவருமான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் செய்யும்,Seyyum - (யம படர்களால்) செய்யப் படுகிற சித்தம்,Siththam - (தம்முடைய) நெஞ்சை திருமாலை,Thirumaalai - திருமால் திறத்தில் நன்கு,Nangu - நன்றாக ஒருங்கி,Orungi - ஒருபடுத்தி செய்த,Seydha - அருளிச் செய்த மாலை,Maalai - சொல் மாலையாகிய இவை பத்தும்,Ivai Paththum - இப் பத்துப் பாட்டுகளையும் வல்லவர்,Vallavar - ஓத வல்லவர்கள், சித்தம் நன்கு ஒருங்கி,Siththam Nangu Orungi - (ஆழ்வார்க்குப் போல்) நெஞ்சு ஒருபடிப்படப் பெற்று திருமால் மேல்,Thirumaal Mel - திருமால் பக்கலிலே சென்ற,Senra - குடி கொண்ட சிந்தை,Sindhai - மநஸ்ஸை பெறுவர்,Peruvar - உடையராவர். |
| 390 | பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 10 | சீரணி மால் திரு நாமமே யிடத் தேற்றிய
வீரணி தொல் புகழ் விட்டு சித்தன் விரித்த
ஓரணி யொண் தமிழ் ஒன்பதோடொன்றும் வல்லவர்
பேரணி வைகுந்தத்து என்றும் பேணி யிருப்பரே–4-6-10 | பதவுரை Show / Hideசீர்,Seer - கல்யாண குணங்களை அணி,Ani - ஆபரணமாக வுடையவனும் மால்,Maal - (அடியார் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான எம்பெருமானுடைய திரு நாமமே,Thiru Naamame - திருநாமத்தையே இட,Ida - (தம் பிள்ளைகளுக்கு இடும்படி) தேற்றிய,Theatriya - உபதேசித்தருளினவரும் வீரம் அணி,Veeram Ani - (இந்திரியங்களை வெல்லுகை யாகிற) வீரப் பாட்டை ஆபரணமாக வுடையவரும் தொல் புகழ்,Thol Pugazh - சாச்வதமான கீர்த்தியை யுடையவருமான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் விரித்த,Viriththa - விரிவாக அருளிச் செய்தமையும் ஓர் அணி,Or Ani - (கற்பார்க்கு) ஒப்பற்ற ஆபரணம் போன்றவையும் ஒண் தமிழ்,On Tamil - அழகிய தமிழ்ப் பாஷை யுமாயிருந்துள்ள ஒன்பதோடு ஒன்றும்,Onbadhodu Ondrum - இப் பத்துப் பாட்டுக்களையும் வல்லவர்,Vallavar - ஓத வல்லவர் பேர் அணி,Per Ani - பெரியதும் அழகியதுமான வைகுந்தத்து,Vaikunthaththu - ஸ்ரீவைகுண்டத்தில் என்றும்,Endrum - எந்நாளும் பேரணி இருப்பர்,Perani Iruppar - (எம்பெருமானுக்கு) மங்களாசாசனம் பண்ணிக் கொண்டு வாழப் பெறுவர். |
| 401 | பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 11 | பொங்கொலி கங்கைக் கரை மலி கண்டத்து உறை புரு டோத்தம னடிமேல்
வெங்கலி நலியா வில்லி புத் தூர்க் கோன் விட்டு சித்தன் விருப் புற்று
தங்கிய அன்பால் செய் தமிழ் மாலை தங்கிய நாவுடை யார்க்கு
கங்கையில் திருமால் கழலிணைக் கீழே குளித்திருந்த கணக்காமே–4-7-11 | பதவுரை Show / Hideஇத்திருமொழி,Iththirumozhi - நீர்க் கொழிப்பால் வந்து கிளர்த்தியை யுடையதும் ஒலி,Oli - கோபத்தை உடையதுமான கங்கை கரை,Gangai Karai - கங்கைக் கரையிலுள்ளதும் மலி,Mali - எல்லா வகை ஏற்றங்களை உடையதுமான. கண்டத்து,Kandaththu - திருக் கண்டங் கடி நகரில் புருடோத்தமன்,Purudhoaththaman - புருஷோத்தப் பெருமானுடைய அடி மேல்,Adi Meel - திருவடிகளில், வெம்கலி நலியா,Vemkali Naliya - கொடிய கலியினால் நலியப் பெறாத வில்லிபுத்தூர் கோன்,Villipuththoor Kon - ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் விருப்புற்ற,Viruppu Utra - ஆசைப் படல் தங்கிய அன்பால்,Thangiya Anbaal - நிலை நின்ற பக்தியினால் செய்,Sey - அருளிச் செய்த தமிழ் மாலை,Thamizh Maalai - இத்திருமொழி தங்கிய,Thangiya - நிலை நின்றிருக்கப்பெற்ற நா உடையார்க்கு,Naa Udaiyaarkku - நாக்கை உடையவர்களுக்கு கங்கையில்,Gangaiyil - கங்காநதியில் குளித்து,Kuliththu - நீராடி திருமால்,Thirumaal - ஸ்ரீயபதியினுடைய இணை,Inai - ஒன்றொடொன்றொத்த கழல் கீழே,Kazhal Keezhe - திருவடிகளின் கீழே இருந்த கணக்கு ஆம்,Irundha Kanakku Aam - நிரந்தரவேலை பண்ணுமையாகிற பயன் பெற்றதாகும். |
| 411 | பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 10 | பரு வரங்களவை பற்றிப் படையாலித் தெழுந்தானை
செரு வரங்கப் பொருதழித்த திருவாளன் திருப்பதி மேல்
திருவரங்கத் தமிழ் மாலை விட்டு சித்தன் விரித்தன கொண்டு
இருவரங்க மெரித்தானை ஏத்த வல்லா ரடியோமே-4-8-10 | பதவுரை Show / Hideபருவரங்கள் அளை பற்றி,Paruvarangal Alai Patri - பிரமன் முதலியோரிடத்துப் பெற்ற பெரிய வரங்களைப் பலமாகக் கொண்டு படை ஆலித்து எழுந்தானை,Padai Aaliththu Ezhundhaanai - யுத்த விஷயமாகக் கோலாஹலஞ் செய்து வெளிப் புறப்பட்ட இராவணனை செரு,Seru - யுத்தத்திலே அரங்க,Aranga - ஒழியும்படி பொருது,Porudhu - போர் செய்து அழித்த,Azhiththa - ஒழித்தருளின திருவாளன்,Thiruvaalan - (வீர்யமாகிற) லக்ஷ்மியைத் தனக்கு நிருபகமாக உடையனான எம்பெருமானுடைய திருப்பதி மேல்,Thiruppathi Mel - (திருவரங்கமென்னும்) திருப்பதி விஷமாக விட்டுசித்தன்,Vittuchiththan - பெரியாழ்வார் விரித்தன,Viriththana - அருளிச் செய்த திரு அரங்கம் தமிழ் மாலை கொண்டு,Thiru Arangam Tamil Maalai Kondu - (பாட்டுத் தோறு ம்) ‘திருவரங்கம்’ என்கிற திருநாமத்தையுடைய தமிழ் மாலையாகிய இப் பத்துப் பாசுரங்களையுங்கொண்டு. இருவர் அங்கம் மெரித்தானை,Iruvar Angam Meriththaanai - (மதுகைடபர்களாகிற) இருவருடைய உடலைத் (திருவனந்தாழ்வானுடைய மூச்சு வெப்பத்தினால்) கொளுத்திப் போகட்ட எம்பெருமானை ஏத்தவல்லார்,Eaththavallaar - துதிக்க வல்லவர்களுக்கு அடியோம்,Adiyom - அடிமை செய்யக்கடவோம். |
| 422 | பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார்.) 11 | கைந்நாகத் திடர் கடிந்த கனல் ஆழி படை வுடையான் கருதும் கோயில்
தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரந்தத் திருப்பதியின் மேல்
மெய்நாவன் மெய்யடியான் விட்டு சித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார்
எஞ்ஞான்றும் எம்பெருமான் இணை அடிக் கீழ் இணை பிரியாது இருப்பர் தாமே –4-9-11 | பதவுரை Show / Hideகை நாகத்து இடர் கடிந்த,Kai Naagaththu Idar Kadindha - பெரிய துதிக்கையையுடைய கஜேந்திராழ்வா னுடைய துன்பத்தைப் போக்கின கனல் ஆழி,Kanal Aazhi - ஜ்வலியா நின்றுள்ள திருவாழியாழ்வனை படை உடையான்,Padai Udaiyaan - ஆயுதமாகவுடைய எம்பெருமான் கருதும் கோயில்,Karudhum Koyil - விரும்பி எழுந்தருளியிருக்கப்பெற்ற கோயிலாய் தென் நாடும் வட நாடும் தொழ நின்ற,Then Naadum Vada Naadum Thozha Nindra - தென்னாட்டிலுள்ளாரும் வடநாட்டிலுள்ளாரும் ஸேவிக்கும்படி அமைந்த திரு அரங்கம் திருப்பதியின்மேல்,Thiru Arangam Thiruppathiyinmel - திருவரங்கமென்னும் திருப்பதி விஷயமாக மெய் நாவன் மெய் அடியான் விட்டு சித்தன்,Mei Naavan Mei Adiyaan Vittu Siththan - மெய்யே சொல்லா நின்ற நாவையுடையரும் பிரயோஜனத்தை விரும்பாது அடிமை செய்பவருமான பெரியாழ்வார் விரித்த தமிழ்,Viritha Tamil - அருளிச்செய்த இத்தமிழ்ப் பாசுரங்களை உரைக்க வல்லார்,Uraikka Vallaar - ஓதவல்லவர்கள் எம்பெருமான் இணை அடி கீழ்,Emperumaan Inai Adi Keezh - எனக்குச் சேஷியான பரமபத நாதனுடைய ஒன்றோடொன்றொத்த திருவடிகளின் கீழ் எஞ்ஞான்றும் இணைபிரியாது இருப்பர்,Ennyaanrum Inaipiriyaadhu Irupaar - எந்நாளும் (நித்யமுக்தர்களின் திரளாகிற) துணையைப் பிரியாமல் (அவர்களோடு கூடி) வாழ்ந்திருக்கப்பெறுவர் |
| 432 | பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 10 | மாயவனை மது சூதனன் தன்னை மாதவனை மறையோர்க ளேத்தும்
ஆயர்களேற்றினை அச்சுதனன் தன்னை அரங்கத் தரவணைப் பள்ளி யானை
வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டுசித்தன் சொன்ன மாலை
பத்தும் தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக் காளர் தாமே–4-10-10 | பதவுரை Show / Hideமாயவனை,Maayavanai - ஆச்சரிய சக்தி யுடையவனும் மதுசூதனனை,Mathusoothananai,Madusothanai - மது என்ற அசுரனை ஒழித்தருளினவனும் மாதவனை,Maadhavanai,Madhavanai - பெரிய பிராட்டியார்க்கு வல்லபவனும் மறையோர்கள்,Maraiyorgal - வைதிகர்கள் ஏத்தும்,Eaththum - துதிக்கப்படுமவனும் ஆயர்கள் ஏற்றினை,Aayargal Eatrinai - இடையர்களுக்குத் தலைவனும் அச்சுதனை,Achchuthanai - (அடியாரை ஒரு நாளும்) நழுவ விடாதவனும் அரங்கத்து,Arangaththu - கோயிலில் அரவு அணை,Aravu Anai - சேஷ சயநத்தில் பள்ளியானை,Palliyanaai - கண் வளர்த்தருள்பவனுமான எம்பெருமானை நோக்கி வேயர்,Vaeyar - தாம் திருவவதரித்த குடியிலுள்ள ரெல்லோராலும் புகழ்,Pugazh - புகழப் பட்டவரும் வில்லிபுத்தூர்,Villipuththur - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு மன்,Mann - நிர்வாஹருமான விட்டுசித்தன்,Vittuchiththan - பெரியாழ்வார் சொன்ன,Sonna - அருளிச் செய்த மாலை,Maalai - சொல் மாலையான பத்தும்,Paththum - இப் பத்துப் பாசுரங்களையும் தூய மனத்தனர் ஆகி,Thooya Manaththanar Aagi - நிர்மலமான நெஞ்சை யுடையராய்க் கொண்டு வல்லார் தாம்,Vallaar Thaam - ஓத வல்லார்கள் தூய மணி,Thooya Mani - பழிப்பற்ற நீலமணி போன்ற வடிவை யுடைய எம்பெருமானுக்கு ஆளர்,Aalar - அடிமை செய்யப் பெறுவர். (ஏ அசை.) |
| 442 | பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 10 | காமர் தாதை கருதலர் சிங்கம் காண வினிய கருங்குழல் குட்டன்
வாமனன் என் மரகத வண்ணன் மாதவன் மது சூதனன் தன்னை
சேம நன்கமரும் புதுவையர் கோன் விட்டு சித்தன் வியந் தமிழ் பத்தும்
நாம மென்று நவின்றுரைப்பார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணனுலகே–5-1-10 | பதவுரை Show / Hideகாமர் தாதை,Kaamar Thaathai - மன்மதனுக்குத் தந்தையும் கருதலர் சிங்கம்,Karuththalar Singam - (தன்னை) விரோதிப்பவராகிய யானைகட்கு சிங்கம் போன்றவனும் காண,Kaana - ஸேவிப்பதற்கு இனிய,Iniya - அழகாயிருக்கிற கரு குழல் குட்டன்,Karu Kuzhal Kuttan - கறுத்த குழலையுடைய சிறுக்கனானவனும் வாமனன்,Vaamanan - வாமாநாவதாரம் செய்தருளியவனும் என்,En - எனக்குத் தலைவனும் மரகத வண்ணன்,Maragatha Vannan - மரகதப் பச்சை போன்ற வடியையுடையவனும் மாதவன்,Maadhavan - பிராட்டிக்குக் கண்வனும் மதுசூதனன் தன்னை,Madhusoodanan Thannai - மதுவைக் கொன்றவனுமான எம்பெருமானைக் குறித்தருளிச்செய்த சேமம்,Saemam - க்ஷேமமானது நன்கு,Nangu - நன்றாக (குறைவின்றி) அமரும்,Amarum - அமைந்திருக்கப் பெற்ற புதுவையர் கோன்,Puduvaiyar Kon - ஸ்ரீவில்லிபுத்தூரிள்ளார்க்குத் தலைவனான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வாரது வியன் தமிழ் பத்தும்,Viyan Tamil Paththum - பெருமையுள்ள (இத்) தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும் நாமம் என்று,Naamam Endru - (எம்பெருமானது) திருநாமங்களாக பிரதிபத்தி பண்ணி நவின்று,Navinru - அன்பு கொண்டு உரைப்பார்கள்,Uraippaargal - ஓதுமவவர்கள் ஒல்லை,Ollai - விரைவாக நாரணன் உலகு,Naaranan Ulagu - ஸ்ரீவைகுண்டத்தை நண்ணுவார்,Nannuvaar - கிட்டப் பெறுவர்கள். |
| 452 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 10 | அரவத் தமளியி னோடும் அழகிய பாற்கட லோடும்
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவைத் திரை பல மோதப் பள்ளி கொள்கின்ற பிரானை
பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவற் பொருட்டே–5-2-10 | பதவுரை Show / Hideஅரவத்து அமளியினோடும்,Aravaththu Amaliyinodum - திருவனந்தாழ்வனாகிற படுக்கையோடும் அழகிய பால் கடலோடும்,Azhagiya Paal Kadalodum - அழகு பொருந்திய திருப் பாற் கடலோடுங் கூட அரவிந்தப் பாவையும் தானும்,Aravindhap Paavayum Thaanum - செந்தாமரை மகளாகிய பெரிய பிராட்டியாரும் தானும் வந்து,Vandhu - எழுந்து அருளி அகம்படி,Agampadi - (எனது) உடம்பாகிற ஸ்தானத்தில் புகுந்து,Pugundhu - பிரவேசித்து, பரவை,Paravai - (அந்தத்) திருப்பாற்கடலினுடைய பல திசை,Pala Thisai - பல அலைகள் மோத,Moedha - தளும்ப பள்ளி கொள்கின்ற,Palli Kolginra - திருக் கண் வளர்ந்தருளா நின்ற பிரானை,Piranaai - உபகாரகனான எம்பெருமானை விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் பட்டினம் காவல் பொருட்டே,Pattinam Kaaval Poruttrae - ஆத்ம ரக்ஷண நிமித்தமாக பரவுகின்றான்,Paravuginraan - போற்றுகின்றார். |
| 462 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 10 | சென்றுலகம் குடைந்தாடும் சுனைத் திரு மாலிருஞ் சோலை தன்னுள்
நின்ற பிரான் அடி மேல் அடிமைத் திறம் நேர் பட விண்ணப்பஞ்செய்
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக் கோன் விட்டு சித்தன்
ஒன்றினோ டொன்பதும் பாட வல்லார் உலகமளந்தான் தமரே–5-3-10 | பதவுரை Show / Hideஉலகம்,Ulagam - உலகத்தாரெல்லாரும் சென்று,Sendru - (தங்கள் தங்கள் இருப்பிடித்தில் நின்றும்) போய் குடைந்து,Kudainthu - அவகாஹித்து ஆடும்,Aadum - நீராடா நிற்கப் பெற்ற சுனை,Sunai - தீர்த்தங்களை யுடைய திருமாலிருஞ்சோலை தன்னுள்,Thirumaalirunjcholai Thannul - திருமாலிருஞ்சோலை மலையில் நின்ற பிரான்,Nindra Praan - எழுந்தருளி யிருக்கிற எம்பெருமானடைய அடி மேல்,Adi Mael - திருவடிகள் மேல் அடிமைத்திறம்,Adimaiththiram - கைங்கரிய விஷயமாக பொன் திகழ்,Pon Thigal - ஸ்வர்ண மயமாய் விளங்கா நின்ற மாடம்,Maadam - மாடங்களினால் பொலிந்து தோன்றும்,Polindhu Thoondrum - நிறைந்து விளங்கா நின்ற புதுவை,Puduvai - ஸ்ரீ வில்லிபுத்தூர்க்கு கோன்,Koon - தலைவரான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் நேர்பட,Naerpadha - பொருந்தும்படி விண்ணப்பம் செய்,Vinnappam Sei - அருளிச் செய்த ஒன்றினோடு ஒன்பதும்,Onrinodu Onbadum - இப் பத்துப் பாசுரங்களையும் பாட வல்லார்,Paada Vallaar - பாட வல்லவர்கள் உலகம் அளந்தான் தமர்,Ulagam Alandhaan Thamar - திரிவிக்கிரமாவதாரம் செய்தருளின எம்பெருமானுக்குச் சேஷ பூதர்களாகப் பெறுவர் |
| 472 | பெரியாழ்வார் திருமொழி || (5-4 சென்னியோங்கு) - கீழ்ப்பாட்டில் எம்பெருமான் திருப்பாற்கடல் முதலிய திவ்ய ஸ்தாநங்களை மறந்துவிட்டுத் தம்மிடம் போந்தபடியைப் பேசியருளினார்; ஒரு பொருளை மறதியினால் விட்டவர்கள் மீண்டு ஒருநாள் அப்பொருள் நினைவுக்கு வரும்போது அதனை அங்கீகரிப்பதுபோல, எம்பெருமானும் இப்போது திருப்பாற்கடல் முதலிய விடங்களை மறந்துவிட்டானேலும், பின்பொருகால் அவை நினைவுக்குவரின், அவற்றை அங்கீகரித்தருள வானன்றோ? என்று சிலர் சங்கிப்பதாகக் கொண்டு, அச்சங்கைக்குப் பரிஹாரம் பிறக்குமாறு இப்பாட்டை, அருளிச் செய்கின்றாமென்க. ‘இடவகைகள் இகழ்ந்திட்டு’ என்றதில் நோக்கு. ஒருவன் தன் மனைவியை மறந்து மற்றொருத்தியை காதலித்தானாகில், பின்பு ஒரு காலத்தில் மனைவியை ஸ்மரித்து, அவளோடு புணரக் கருதக்கூடும். அவன்றானே அவளிடத்துச் சில குற்றங்குறை காரணமாக அவளை இகழ்ந்து விட்டானாகில், மீண்டு ஒருகாலும் அவளை நெஞ்சிலும் நினையான்; அதுபோல, எம் பெருமான், திருப்பாற்கடல், பரமபதம், ஸ்ரீத்வாரகாபுரி முதலிய இடங்களைத் தானே புத்தி பூர்வமாக இகழ்ந்துவிட்டு வந்தனானாதலால், இனி அவ்விடங்களை ஒருகாலும் நினைக்கவும் மாட்டான் என்பது திருவுள்ளக் கருத்து. பெரியதொரு மலையின் கொடுமுடியில் நிர்மலமாக விளங்குகின்ற ஒரு கொடி எல்லார்க்கும் காண எளிதாயிருக்குமாறுபோல, என்னுடைய ஹ்ருதய கமலத்தினுள்ளே ஸுஸ்பஷ்டமாகப் பளபளவென்று விளங்காநின்ற தேஜஸ் ஸ்வரூபியே! என்று எம்பெருமானை விளிக்கின்றார். முன்னடிகளில். மிளிர்ந்த மின்னும்- மீமிசைச்சொல். தவளம்-வடசொல் திரிபு. இரண்டாமடியில், சுடர், ஒளி, சோதி என்ற இம்மூன்று சொற்களுக்கும், முறையே, திவ்யாத்ம ஸ்வரூபம், திவ்ய மங்கள விக்ரஹம், திவ்ய கல்யாண குணம் எனப் பொருள் வாசி காண்க. மூன்றாமடியில், வடதடமென்பதை, வட மென்னும் வட சொல்லின் விகாரமாகக் கொண்டு, ஆலிலை என்று பொருள் கூறுவாருமுளர்; இகழ்ந்திடுதல்- வெறுப்புக் கொள்ளுதல் என்பால் = பால்- எழலுருபு, இடவகை- இடம். “கொண்டனையே” என்றதற்குப் பின், இப்படியுமொரு ஸௌசீல்யமிருப்பதே! இப்படியுமொரு ஸௌலப்பமிருப்பதே! இப்படியுமொரு வாத்ஸல்யமிருப்பதே! எனக் கூட்டி உயர்யஸிக்க. “உனக்குரிதத்தாக்கினையே” என்பாலிடவகை கொண்டனையே’ என்று- ‘இப்படி செய்தாயே! என்று அவன் திருவடிகளிலே விழுந்து கூப்பிட இவரை யெடுத்து மடியிலே வைத்துத் தானும் ஆச்வஸ்தனான படியைக் கண்டு ப்ரீதராய்த் தலைக்கட்டுகிறார். “அதனிற் பெரிய என் அவா ” என்று நம்மாழ்வாருக்குப் பகவத் விஷயத்திற் பிறந்த அபிநிவேசமெல்லாம், இப் பெரியாழ்வார் பக்கவில் ஈச்வரனுக்குப் பிறந்தபடி இத் திருமொழி” என்ற ஆன்றோர் உரையில் அருளிச் செயல் இங்கு அறியற்பாலது. 10 | தடவரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 -4-10 | பதவுரை Show / Hideதடவரை வாய், Tadavarai vaai - பெரிய பர்வதத்தில் மிளிர்ந்து மின்னும், Milirndhu minnum - மிகவும் விளங்கா நின்றுள்ள தவளம் நெடு கொடி போல், Thavalam nedu kodi pol - பரிசுத்தமான பெரியதொரு கொடி போல சுடர் ஒளி ஆய், Sudar oli aai - மிக்க தேஜஸ் ஸ்வரூபியாய் என் நெஞ்சின் உள்ளே, En nenjin ulle - எனது ஹ்ருதயத்தினுள் தோன்றும், Thondrum - விளங்கா நின்றுள்ள சோதி நம்பீ, Jodhi nambi - ஒளியினால் நிரம்பியவனே! வட தடமும், Vada thadamum - வடதிசையிலுள்ள திருப்பாற்கடலும் வைகுந்தமும், Vaigundhamum - ஸ்ரீவைகுண்டமும் மதிள், Madhil - மதில்களை யுடைய துவராபதியும், Thuvara pathiyum - த்வாரகையும் (ஆகிற) இட வகைகளை, Ida vagaigalai - இடங்களை யெல்லாம் இகழ்ந்திட்டு, Igazhindittu - உபேஷித்து விட்டு என் பால், En paal - என்னிடத்தில் இடவகை கொண்டனையே, ida vagai kondanaiye - வாஸ்தக புத்தியைப் பண்ணி யருளினையே! (இஃது என்ன வாத்ஸல்யம்!) |
| 473 | பெரியாழ்வார் திருமொழி || (5-4 சென்னியோங்கு) - இப்பாட்டால், இத்திருமொழி கற்பவர்களுக்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டுகிறார். விஷ்ணுசித்தர் என்கிற ஆழ்வார் திருநாமத்திற்கு வ்யுதபத்தி இப்பாடல் விசுதமாகும். ‘விஷ்ணுவை ஹ்ருதயத்தில் அமையப் பெற்றுள்ளவர்’ என்ற அத் திருநாமத்தின் பொருள் ஒன்றரை யடிகளால் விரிக்கப்பட்டது. (வேயர் இத்தியாதி) பெரியாழ்வாருடைய திருவம்சத்திற்கு வேயர்குலமென்று திருநாம மென்பர்; “முன்னை வினையகல மூங்கிற்குடியமுதன் என்று- இராமாநுச நூற்றந்தாதி அருளிச் செய்த திருவரங்கமுதனார் மூங்கிற்குடியர் என்றதுபோல, இவர் வேயர்குடியர் என்கிறது. எம்பெருமான் இடைக் குலத்திற் பிறந்து அனைவர்க்கும் எளியனானது போல ஆழ்வார் தமக்கும் எளியனான படியைக் கோவலனை யென்பது குறிக்குமென்க. எம்பெருமான் ஆழ்வார் நெஞ்சிற் புகுந்த பின்பு, விலக்ஷணமானதொரு புகரைப் பெற்றன னென்பதைப் பெறுவிக்கும், “கொழுங்குளிர் முகில்வண்ணனை” என்பது. கொழுமை- செழுமை. எம்பெருமானுடைய ஔதார்யத்திற்கு முகிலை உவமை கூறினானென்றுங் கொள்வர். ஆயரேறு- இடைக்குலத்திற் பிறக்கப்பெற்றோமென்னும் மகிழ்ச்சியினால் காளை போலச் செருக்குற்றிருப்பவன். ஆழ்வார் திருவுள்ளததிற் புகழ் பெற்ற மகிழ்ச்சியினாலும் அங்ஙனமே செருக்குற்றானென்க. அந்தணர்- ஆசிரியர்; நச்சினார்க்கினியர் “அந்தத்தை அணவுபவர்” (வேதாந்தத்தைச் சார்பவர்) என விரித்துக் காரணப் பொருளுரைத்தனர்; “அணவுபவர்” என்றது அணர் என விகாரப்பட்டது. “ஆரணத்தின் சிரமீதுறை” என்ற சடகோரந்தாதிச் சிறப்பாயிரச் செய்யுளின் ஈற்றடியில் “கார் அணனைக் கம்பனை நினைவாம்” என்றவிடம் நோக்கத்தக்கது. அந்தம் + அணர், அந்தணர்; தொகுத்தல். இனி, ‘அம் தம் ஆர்’ னஎப் பிரித்துப்பலவாறகப் பொருள்கௌள்வாரு முளர். “அந்தனரென்போ ரறவோர் மற்றெப்பொருட்ருஞ், செந்தண்மை பூண்டொழுகலான்” என்ற திருவள்ளுவர் திருக்குறளும், அவ்விடத்துப் பரிமேழைகருரையும் நோக்கத்தக்கது. “நூலே காகம் மூக்கோல்மனையே, ஆயுதங்காலை அந்தணர்க்குரிய” என்ற தொல்காப்பிய மரபியற் சூத்திரத்தில் கருத்தை நோக்கினால், அந்தணரென்ற சொல் யதிகளைக் குறிக்குமென்பது தெற்றென விளங்கும். அமுதத்தினை- அத்து, இன் என்ற இரண்டும் சாரியை; ‘அந்தணர்கள் அமுதை’ என்றபடி; உவமையாகுபெயர். சுவையின் மிகுதி பற்றியும் பெறற்கருமை பற்றியும் போக்யமாயிருக்குந் தன்மை பற்றியும், பருகினவர்களை மயக்குந்தன்மை பற்றியும் எம்பெருமானை அமுதமாகக் கூறுதல் ஏற்குமென்க. ஈற்றடியில் ஒரு ஐதிஹ்யம்- பண்டு எம்பெருமானார் திருக்கோட்டியூர் நம்பியைத் திருவடி தொழுவதற்கென்று அங்கு எழுந்தருளின காலத்தில், சிலர் எம்பார் என்ற ஆசிரியரிடம் வந்து “சாயைப்போலப் பாடவல்லர்’ என்ற அடியின் கருத்தை அருளிச் செய்யவேண்டும்” என்று பிரார்த்திக்க, எம்பார், “எம் பெருமானாரிடத்தில் இதன் பொருளை நான் கேட்டுணர்ந்ததில்லை; இப்போது அவரைக் கேட்டு உங்களுக்குச் சொல்லுவோமென்று பார்த்தால், அவர் திருக்கோட்டியூர்க்கு எழுந்தருளியிருக்கிறார்; ஆகிலும் நான் உங்களுக்கு இப்போதே சொன்னேனாகவேணும்” என்று , எம்பெருமானாருடைய திருவடி நிலைகளை யெடுத்துத் தம் திருமுடியின்மீது வைத்துக் கொண்டு,‘இப்போது உடையவர் எனக்கு அருளிச்செய்தார். சொல்லுகிறேன் கேளுங்கள்” என்று, “அந்தணர்தம் அமுதத்தினைப் பாடவல்லார் சாயைப்போல அணுக்கர்கள்” என அவ்வயித்துப் பொருள் கொள்ளுங்கள்’ என்றருளிச் செய்தனராம். தம்முடைய நிழல் தம்மை விட்டு அகலாதவாறு போல, எம்பெருமானைப் பாடுமவர்கள் அவ்வெம் பெருமானைவிட்டு இறையும் அகலாது அவன்றனக்கே அந்தாணிச் சேவகராப் பெறுபவர் என்றவாறு, இனி, ‘சாயைபோல- குளிர்த்தி உண்டாம்படி, பாட வல்லார் தாம் அணுக்கர்கள்’ என்றும் சிலர் உரைப்பர் என்ப, 11 | வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 -4-11 | பதவுரை Show / Hideவேயர் தங்கள், Veyar thangal - வேயர் வைதிகர்களுடைய குலத்து, Kulathu - வம்சத்து (வைதிகர் குலம்) உதித்த, udhitha - அவதரித்த விட்டு சித்தன், Vittu Chithan - பெரியாழ்வாருடைய மனத்து, Manathu - ஹ்ருதயத்தில் கோயில் கொண்ட, kovil konda - திருக் கோயில் கொண்டெழுந்தருளி யிருக்கிற கோவலனை, Kovalanai - கோபாலனும் கொழு குளிர் முகில் வண்ணனை, kozhu kulir mugil vannanai - கொழுமையும் குளிர்ச்சியும் பொருந்தி மேகம் போன்ற நிறத்தை யுடையனும் ஆயரேற்றை, Aayarerrai - இடையர்களுக்குத் தலைவனும் அமரர் கோவை, Amarr kovai - நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹனும் அந்தணர், Andhanar - சனகர் முதலிய ப்ரஹ்ம மஹரிஷிகளுக்கு அமுதத்தினை, Amudhathinai - அம்ருதம் போல் இனியதுமான எம்பெருமானை பாட வல்லார் தாம், Paada vallaar thaam - (இத் திருமொழியினால்) பாட வல்லவர்கள் சாயைப் போல, Saayai pola - நிழல் போல அணுக்கர்களே, Anukkargale - (எம்பெருமானை எப்போதும்) அணுகி இருக்கப் பெறுவர்கள் |
| 502 | திருப்பாவை || கீழெல்லாம் “பறை, பறை” என்று சொல்லி வந்த ஆய்ச்சிகள் அப் பறையின் பொருளை நிஷ்கர்ஷித்து விண்ணப்பஞ்செய்யும் பாசுரம், இது. ‘நாட்டார் இசைகைக்காக ‘நோன்பு’ என்று ஒன்றை வியாஜமாகக் கொண்டு வந்து புகுந்தோமத்தனை யொழிய, எங்களுக்கு உத்தேச்யம் உன் திருவடிகளில் நித்திய கைங்கரியம் பண்ணுகை தான்; இனி ஒரு நொடிப் பொழுதும் உன்னை விட்டு நாங்கள் பிரிந்தோமாக வொண்ணாது; வேறு ஒருவகையான விருப்பமும் எமக்குப் பிறவா வண்ணம் நீயே அருள் புரிய வேணும்’ என்று தலைக் கட்டுகிறார்கள். 29 | சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து
நீ குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும்
உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் | பதவுரை Show / Hideகோவிந்தா, govindhaa - கண்ண பிரானே! சிற்றம் சிறுகாலை, sitram sirukalai - விடி காலத்திலே வந்து, vandhu - (இவ் விடத்தேற) வந்து உன்னை சேவித்து, unnai sevithu - உன்னைத் தண்டனிட்டு உன் பொன் தாமரை அடி போற்றும் பொருள், un pon thaamarai adi potrum porul - உனது அழகிய திருவடித் தாமரைகளை மங்களாசாஸநம் பண்ணுவதற்குப் பிரயோஜனத்தை கேளாய், kelaay - கேட்டருள வேணும்; பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ, perum meydhu unnum kulathil pirandha nee - பசுக்களை மேய்த்து உண்ணும் இடைக்குலத்தில் பிறந்த நீ எங்களை, engalai - எங்களிடத்தில் குற்றேவல், kutraeval - அந்தரங்க கைங்கரியத்தை கொள்ளாமல் போகாது, kollaamal pogadhu - திருவுள்ளம் பற்றாதொழிய வொண்ணாது; இற்றை பறை கொள்வான் அன்று காண், itrai parai kolvaan andru kaan - இன்று (கொடுக்கப்படுகிற இப்) பறையைப் பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் வந்தோமல்லோம்; எற்றைக்கும், ettraikum - காலமுள்ளவளவும் ஏழ் ஏழ் பிறவிக்கும், ez ez piravigkum - (உன்னுடைய) எவ் வவதாரங்களிலும் உன் தன்னோடு, un thannodu - உன்னோடு உற்றோமே ஆவோம், utrome aavom - உறவு உடையவர்களாகக் கடவோம்; உனக்கே, unakke - உனக்கு மாத்திரமே நாம், naam - நாங்கள் ஆள் செய்வோம், aal seyvom - அடிமை செய்யக் கடவோம்; எம், em - எங்களுடைய மற்றை காமங்கள், matrai kaamangal - இதர விஷய விருப்பங்களை மாற்று, maartru - தவிர்க்கருள வேணும்; ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavai - ஏல் ஓர் எம் பாவாய் |
| 503 | திருப்பாவை || இருபத்தொன்பதாம் பாட்டில், தங்களுடைய உத்தேசயத்தை வெளிப்படையாகக் கூறி, இக் கருத்தை நீ நிறைவேற்றாதொழிய வொண்ணாதென்று நிர்ப்பந்தித்துப் பிரார்த்திக்க, அவனும் ‘அப்படியே செய்கிறோம்’ என்று தலைதுலுக்கப் பெற்று மநோரதம் தலைக்கட்டப் பெற்றபடியைப் பிற்காலத்திலே அக்கருத்து நிலைமையோடே ஆண்டாள் அருளிச்செய்த இப்பிரபந்தத்தை ஓதுவார் எம்பெருமானுடைய திருவருட்கு இலக்காகி மகிழப் பெறுவர் என்று நிகமிக்கின்றவாறாகச் செல்லும் பாசுரம், இது. ஆறாயிரப்படி:- “ஸமகாலத்திலே அநுஷ்டித்தாரோ பாதியும், அநந்தர காலத்தில் அநுகரித்தாளோ பாதியும் பிற்பட்ட காலத்தில் கற்றார்க்குப் பலிக்குமென்கை. ‘கன்றிழந்த தலைநாகு, தோல்கன்றைமடுக்க அதுக்கிரங்குமாபோலே, ஸ்நேஹிகள் சொன்ன இப்பாசுரங்கொண்டு புகவே அதில்லாத நமக்கும் பலிக்கும்’ என்று பட்டர்.” 30 | வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை
அணி புதுவைப் பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் | பதவுரை Show / Hideவங்கம் கடல், vangam kadal - கப்பல்களை யுடைய (திருப்பாற்) கடலை கடைந்த, kadaindha - (தேவர்களுக்காகக்) கடைந்த ஸ்ரீ ய:பதியான கேசவனை, kaesavanai - கண்ண பிரானை திங்கள் திரு முகத்து சே இழையார், thingal thiru mukathu se izhaiyaar - சந்திரன் போன்ற அழகிய முகத்தையும் செவ்விய ஆபரணங்களையுமுடைய ஆய்ச்சிகள் சென்று, sendru - அடைந்து இறைஞ்சி, iraainji - வணங்கி அங்கு, angu - அத் திருவாய்ப் பாடியில் பறைகொண்ட ஆ ஆற்றை, paraikonda aa aatrai - (தங்கள்)புருஷார்த்தத்தைப் பெற்ற அந்த விருத்தாந்தத்தை. அணி புதுவை, aṇi pudhuvai - அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் (திரு வவதரித்த) பை கமலம் தண் தெரியல் பட்டர் பிரான், pai kamalam thaṇ theriyal pattar piraan - பசுமை பொருந்திய தாமரை மலர்களினாலான குளிர்ந்த மாலையை யுடைய பெரியாழ்வாருடைய (திருமகளான) கோதை, ko̱thai - ஆண்டாள் சொன்ன, sonna - அருளிச் செய்த சங்கம் தமிழ் மாலை முப்பதும், saṅkam tamizh mālai muppathum - திரள் திரளாக அநுபவிக்க வேண்டிய தமிழ் மாலையாகிய இம் முப்பது பாசுரங்களையும் தப்பாமே, thappaame - தப்பாமல் இங்கு, ingu - இந் நிலத்தில் இ பரிசு, i parisu - இவ் வண்ணமே உரைப்பார், uraippaar - ஓதுமவர்கள் ஈர் இரண்டு மால் வரை தோள், eer irandu maal varai thol - பெரிய மலை போன்ற நான்கு திருத் தோள்களை யுடையவனும் செம்கண் திருமுகத்து, semkan tirumugathu - சிவந்த திருக் கண்களை யுடைய திரு முகத்தை யுடையவனும் செல்வம், selvam - ஐஸ்வர்யத்தை யுடையனும் திருமாலால், thirumaalaal - ஸ்ரீ ய:பதியுமான எம்பெருமானாலே எங்கும், engum - எவ்விடத்தும் திருஅருள் பெற்று, thiruarul petru - (அவனுடைய) க்ருபையைப் பெற்று இன்புறுவர், inpurvar - ப்ரஹ்ம ஆனந்த சாலிகளாக ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavai - ஏல் ஓர் எம்பாவாய் |
| 513 | நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 10 | கருப்பு வில் மலர்க்கணைக் காமவேளைக் கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற
மருப்பினை யொசித்துப் புள் வாய் பிளந்த மணி வண்ணற்கு என்னை வகுத்திடு என்று
பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை
விருப்புடையின் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே | பதவுரை Show / Hideகரும்பு வில் மலர்கணைகாமன் வேளை, Karumbu Vil Malarkanai Kaaman Velai - கரும்பாகிற வில்லையும் புஷ்பங்களாகிற அம்புகளையுமுடைய மன்மதனுடைய கழல் இணை பணிந்து, Kazhal Inai Panindhu - இரண்டு பாதங்களையும் வணங்கி அங்கு ஓர் கரி அலற மருப்பினை ஒசித்து புள்வாய் பிளந்த, Angu Or Kari Alara Maruppinai Oshithu Pulvaai Pilandha - கம்ஸன் மாளிகை வாசலில் (குவாலயாபீடமென்ற) ஒரு யானையானது வீரிடும்படியாக (அதன்) கொம்புகளை முறித்தவனும், பகாஸுரனுடைய வாயைக் கீண்டெறிந்தவனும், மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று, Manivannarku ennai Vakuthidu Endru - நீலமணி போன்ற நிறத்தானுமான கண்ணபிரானுக்கு என்னை அடிமைப்படுத்தவேணும் என்று பொருப்பு அன்ன, Poruppu Anna - மலை போன்ற மாடம், Maadam - மாடங்கள் பொலிந்து தோன்றும், Polindhu Thondrum - மிகவும் விளங்கா நிற்கப் பெற்ற புதுவையர் , Pudhuvaiyar - ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளவர்கட்கு கோன், Kon - ஸ்வாமியான விட்டு சித்தன், Vittu Sithan - பெரியாழ்வாருடைய (மகளாகிற) கோதை, Kodhai - ஆண்டாள் (அருளிச் செய்த) விருப்புடை, Viruppudai - விருப்பமடியாகப் பிறந்த இன் தமிழ் மாலை, In Tamizh Maalai - இனிய தமிழ்மாலை யாகிய இப் பாசுரங்களை வல்லார், Vallar - ஓத வல்லவர்கள் விண்ணவர் கோன், Vinnavar Kon - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய அடி, Adi - திருவடிகளை நண்ணுவர், Nannuvar - கிட்டப் பெறுவர் |
| 523 | நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 10 | சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன்
கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே | பதவுரை Show / Hideவாய் அமுதம், Vaai amudham - அதராம்ருதத்தை உண்டாய், Undaai - பருகினவனே! எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று, Engal sitril nee sidhaiyel endru - நாங்கள் இழைக்குஞ் சிற்றிலை நீ அழிக்கா தொழியவேணும் என்று வீதிவாய், Veethivaai - வீதியிலே விளையாடும், Vilaiyaadum - விளையாமாநின்ற ஆயர் சிறுமியர், Aayar sirumiyar - இடைப் பெண்களுடைய மழலைச் சொல்லை, Mazhalai sollai - இளம் பருவத்துக்குரிய மெல்லிய சொல்லை உட்கொண்டு வேதம் வாய், Vedham vaai - வேதத்தை உச்சாரிக்கின்ற வாயையுடையவர்களும் தொழிலார்கள், Thozhilaargal - வைதிகத் தொழில்களைச் செய்பவருமான (பரமை காந்திகள் வாழ், Vaazh - வாழுமிடமான வில்லிபுத்தூரிர், Villiputhoorir - ஸ்ரீ வில்லிபத்தூரிருக்கு மன், Man - தலைவரான விட்டு சித்தன் தன், Vittu chithan than - பெரியாழ்வாருடைய திருமகளான கோதை, Kothai - ஆண்டாளுடைய வாய் வாக்கில், Vaai vaakkil - நின்று அவதரித்த தமிழ், Thamizh - தமிழ்ப்பாசுரங்களை வல்லவர், Vallavar - ஓதவல்லவர்கள் குறைவு, Kuraivu - இன்றி குறைவில்லாமல் வைகுந்தம் சேர்வர், Vaigundham servar - பரமபதஞ் சேரப்பெறுவர். |
| 533 | நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 10 | கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாட்டை
பொன்னிய மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை
இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே | பதவுரை Show / Hideஎங்கள் நம்பி, Engal nambi - எமக்கு ஸ்வாமியாய் கரிய, Kariya - கார் கலந்த மேனியனான பிரான், Piran - கண்ண பிரான் கன்னிய ரோடு, Kanniyarodu - ஆயர் சிறுமியரோடே செய்த விளையாட்டை, Vilaiyatai - திவ்ய லீலைகளைக் குறித்து பொன் இயல், Pon iyal - ஸ்வர்ண மயமான மாடங்கள் சூழ்ந்த, Maadangal soozhnda - மாடங்களால் சூழப்பட்ட புதுவையர் கோன், Puthuvaiyar kon - ஸ்ரீவில்லிபுத்தூரி லுள்ளார்க்குத் தலைவரான பட்டன் கோதை, Pattan kodhai - பெரியாழ்வார்க்குத் திருமகளான ஆண்டாள் இன் இசையால், In isaiaal - இனிய இசையாலே சொன்ன, Sonna - அருளிச் செய்த மாலை, Maalai - சொல் மாலையாகிய ஈர் ஐந்தும், Eer aindhum - இப் பத்துப் பாட்டுக்களையும் வல்லவர் தாம், Vallavar thaam - கற்க வல்லவர்கள் போய், Poi - (அர்ச்சிராதி மார்க்கமாகப்) போய் வைகுந்தம் புக்கு, Vaigundham pukku - பரம பதத்தை யடைந்து (அவ் விடத்திலே) மன்னிய, Manniya - நித்ய வாஸம் செய்தருளுகிற மாதவனோடு, Madhavanodu - திருமாலோடு கூடி இருப்பார், Irupaar - நித்யா நுபவம் பண்ணிக் கொண்டு வாழ்ந்திருக்கப் பெறுவர். |
| 544 | நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 11 | ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக் குழல் கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே | பதவுரை Show / Hideஊடல் கூடல், Oodal koodal - ஊடலோடே கூடியிருக்கை யென்ன, (அதாவது ப்ரணய ரோஷஸஹிதைகளா யிருக்கை யென்ன) உணர்தல், Uṇardhal - குறைகளை உணர்த்துகை யென்ன புணர்தல், Puṇardhal - (பிறகு) ஸம்ச்லேஷிக்கை யென்ன (இப்படிப் பட்ட காரியங்களிலே) முன், Muṉ - அநாதி காலமாக நீடு நின்ற, Needu nindra - நீடித்துப் பொருந்தி நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர் கூடலை, Nirai pugazh aaichiyar koodalai - நிறைந்த புகழையுடைய ஆய்ப் பெண்கள் (இழைத்த) கூடலைப் பற்றி குழல் கோதை, Kuzhal kothai - அழகிய மயிர் முடியை யுடையனான ஆண்டாள் கூறிய , Kooriya - அருளிச் செய்த பாடல் பத்தும், paadal pathum - பத்துப் பாட்டுக்களையும் வல்லார்க்கு, vallarkku - ஓத வல்லவர்களுக்கு பாவம் இல்லை, paavam illai - (எம்பெருமானைப் பிரிந்து துக்கிக்கும்படியான) பாவம் இல்லையாம் |
| 576 | நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 10 | பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனொடும்
வாய்த்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே | பதவுரை Show / Hideபாஞ்சசன்னியத்தை, Paanjachanniyathai - சங்கை பற்பநாபனோடும், Parpanaabanodum - எம்பெருமானோடே வாய்ந்த பெரு சுற்றம் ஆக்கிய, Vaayndha Peru Suththam Aakkiya - கிட்டின பேருறவை யுடையதாக வார்த்தை சொன்ன வண் புதுவை, Van Pudhuvai - அழகிய ஸ்ரீ வில்லிபுத்தூரில் திருவவதரித்தவளும் ஏய்ந்த புகழ், Eaindha Pugazh - நிறைந்த புகழை யுடையவளும் பட்டர் பிரான் கோதை, Pattar Piran Kodhai - பெரியாழ்வாருடைய ஆண்டாள் (அருளிச் செய்த) தமிழ் ஈர் ஐந்தும், Thamizh Eer Aindhum - இத் தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும் ஆய்ந்து, Aaindhu - அநுஸந்தித்து ஏத்த வல்லார் அவரும், Aetha Vallar Avarum - (இது கொண்டு எம்பெருமானைத்) துதிக்க வல்லவர்களும் அணுக்கர், Anukkar - பாஞ்சஜந்யம் போல் அந்தரங்கராகப் பெறுவர்கள் |
| 585 | நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 9 | மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே | பதவுரை Show / Hideவேங்கடத்தை, Vengadathai - திருமலையை பதி ஆக, Pathi aaga - இருப்பிடமாகக் கொண்டு வாழ்வீர்கள், Vazhveerkal - வாழ்கின்றவையாயும் மதம் யானை போல் எழுந்த, Madham Yaanai pol Ezhundhu - மத்த கஜம் போலே செருக்கிக் கிளர்ந்தவை யாயுமுள்ள மா முகில்காள், Maa Mugilkaal - காள மேகங்களே! பாம்பு அணையான், Paambu Anaiyaan - சேஷ சாயியான எம்பெருமானுடைய வார்த்தை, Vaarthai - வார்த்தை யானது என்னே, Enne - இப்படி பொய்யாய் விட்டதே தான், Thaan - அவ் வெம்பெருமான் தான் என்றும், Endrum - எப்போதைக்கும் கதி ஆவான், Kathi Aavaan - (ஆச்ரிதரகட்கு) ரக்ஷகனா யிருந்து வைத்து கருதாது, Karuthaadhu - அத் தன்மையை நினையாமல் ஓர் பெண் கொடியை, Or Pen Kodiyai - ஒரு பெண் பிள்ளையை வதை செய்தான், Vadhai Seidhaan - கொலை பண்ணினான் என்னும் சொல், Ennum Sol - என்கிற சொல்லை வையகத்தார், Vaiyagathaar - இப் பூமியிலுள்ளவர்கள் மதியாரே, Mathiyaare - மதிக்க மாட்டார்களே |
| 586 | நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 10 | நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவர் அடியார் ஆகுவரே | பதவுரை Show / Hideநல் நுதலாள், Nal Nudhalaal - விலக்ஷணமான முகத்தை யுடையளாய் போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை, Pogathil Vazhuvadha Puthuvaiyar Kon Kodhai - பகவத நுபவத்தில் குறையாதவரான பெரியாழ்வாருடைய மகளான ஆண்டாள் நாகத்தின் அணையான் வேங்கடக் கோனை, Naagathin Anaiyaan Vengada Konai - திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையனான திருவேங்கட முடையானை நயந்து, Nayandhu - ஆசைப்பட்டு உரை செய், Urai Sei - அருளிச் செய்ததாய் மேகத்தை விட்டு அதில் விண்ணப்பம், Megathai Vittu Adhil Vinnapam - மேகத்தை தூது விடுவதாக அமைந்த லிண்ணப்பமாகிய தமிழ், Thamizh - இத் தமிழ்ப் பாசுரங்களை ஆகத்து வைத்து, Aagathu Vaithu - ஹ்ருதயத்திலே வைத்துக் கொண்டு உரைப்பாரவர், Uraipaaravar - ஓத வல்லவர்கள் அடியார் ஆகுவர், Adiyaar Aaguvar - எம்பெருமானுக்கு நித்ய கைங்கரியம் பண்ணப் பெறுவர்கள் |
| 596 | நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 10 | சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே | பதவுரை Show / Hideசந்தொடு, Santhodu - சந்தனக் கட்டைகளையம் கார் அகிலும், Kaar Agilum - காரகிற் கட்டைகளையும் சுமந்து, Sumandhu - அடித்துக் கொண்டு தடங்கள் பொருது வந்து, Thadangal Poruthu Vandhu - பல பல குளங்களையும் அழித்துக் கொண்டு ஓடி வந்து இழியும், Izhiyum - பெருகுகின்ற சிலம்பாறு உடை, Silambaaru udai - நூபுர கங்கையையுடைத்தான மாலிருஞ் சோலை நின்ற சுந்தரனை, Maalirunjolai Nindra Sundharanai - திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளி யிருக்கிற அழகரைக் குறித்து சுரும்பு ஆர் குழல் கோதை, Surumbu Aar Kuzhal Kodhai - வண்டுகள் படித்த கூந்தல் முடியை யுடைய ஆண்டாள் தொகுத்து உரைத்த, Thoguthu uraitha - அழகாக அருளிச் செய்த செம் தமிழ் பத்தும் வல்லார், Sem Thamizh Pathum Vallar - செந்தமிழிலாகிய இப்பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்கள் திருமால் அடி, Thirumaal Adi - ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடிகளை சேர்வர்கள், Servarkal - அடையப் பெறுவர்கள் |
| 606 | நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 10 | நல்ல வென் தோழீ நாகணை மிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே | பதவுரை Show / Hideஎன் நல்ல தோழி!, En nalla thozhi - எனது உயிர்த் தோழியே நாக அணைமிசை, Naaga anaimisai - திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே சயனித்திருக்கிற நம் பரர், Nam parar - நம் பெருமாள் சிறு மானிடவர், Siru maanidavar - க்ஷுத்ர மநுஷ்யரா யிரா நின்றோம் (இப்படிப்பட்ட நாம்) என் செய்வது, En seivadhu - என்ன செய்யலாம்? வில்லி புதுவை விட்டுசித்தர், Villi pudhuvai vittuchithar - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு நிர்ஹகரான பெரியாழ்வார் செல்வர், Selvar - பெருஞ்செல்வம் படைத்தவர் பெரியர், Periyar - எல்லாரினும் மேற்பட்டவர் நாம், Naam - நாமோ வென்றால் தங்கள் தேவரை, Thangal dhevarai - தமக்கு விதேயரா யிருக்கிற அப் பெருமானை வல்ல பரிசு, Valla parisu - தம்மால் கூடின வகைகளாலே வருவிப்பரேல், Varuviparel - அழைப்பராகில் அது காண்டும், Athu kaandum - அப்போது (அவனை) நாம் ஸேவிக்கப் பெறுவோம் |
| 616 | நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 10 | செம்மை யுடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பார்
தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே | பதவுரை Show / Hideசெம்மை உடைய, Semmai Udaya - (மன மொழி மெய்கள் மூன்றும் ஒருபடிப் பட்டிருக்கை யாகிற) செம்மைக் குணமுடைய திரு அரங்கர், Thiru Arangar - ஸ்ரீரங்கநாதர் தாம் பணித்த, Thaam Panitha - (முன்பு) தம் வாயாலே அருளிச் செய்த மெய்ம்மை, meimai - ஸத்யமானதும் பெரு, peru - பெருமை பொருந்தியதுமான வார்த்தை, vaarthai - சரம ச்லோக ரூபமான வார்த்தையை விட்டு சித்தர், Vittu Chithar - (என் திருத் தகப்பனாரான) பெரியாழ்வார் கேட்டு இருப்பர், Ketu Irupar - (குரு முகமாகக்) கேட்டுற (அதில் சொல்லி யிருக்கிறபடி) நிர்ப் பரராயிப்பர் தம்மை உகப்பாரை தாம் உகப்பர் என்னும் சொல், Thammai Ukapaarai Thaam Ukapar Ennum Sol - “தம்மை விரும்பினவர்களைத் தாமும் விரும்புவர்“ என்ற பழமொழியனது தம் இடையே, tham Idaiye - தம்மிடத்திலேயே பொய் ஆனால், poi aanal - பொய்யாய்ப் போய் விட்டால் இனி, ini - அதற்கு மேல் சாதிப்பார் ஆர், saadhipar aar - (அவர் தம்தை) நியமிப்பார் ஆர்? (யாருமில்லை) |
| 626 | நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 10 | மன்னு மதுரை தொடக்கமாக வண் துவாராபதி தன்னளவும்
தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித் தாழ் குழலாள் துணிந்த துணிவை
பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுச்சிதன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே | பதவுரை Show / Hideதாழ் குழலாள், Thaazh kuzhalaal - தாழ்ந்த கூந்தலை யுடையளாய் பொன் இயல்மாடம் பொலிந்துதோன்றும் புதுவையாகோன் விட்டு சித்தன் கோதை, Pon iyalmaadam polindhu thondrum Pudhuvaiyaakon Vittu chithan kodhai - பொன் மயமான மாடங்களினால் விளங்கித் தோன்றுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளார்க்குத் தலைவராகிய பெரியாழ்வாருடைய (திருமகளான) ஆண்டாள் மன்னு மதுரை தொடக்கம் ஆக வண் துவராபதி தன் அளவும் தன்னை, Mannu mathurai thodakkam aaga van Thuvarapathi than alavum thanai - ஸ்ரீமதுரை முதற்கொண்டு ஸ்ரீத்வாரகை வரைக்கும் (சொல்லப்பட்ட சில திவ்யதேசங்களில்) தன்னை (ஆண்டாளை) தமர், Thamar - தன் உறவினர் உய்த்து பெய்ய வேண்டி, Uythu peiya vendi - கொண்டு போய்ச் சேர்க்க வேண்டி துணிந்த துணிவை, Thunindha thunivai - கொண்ட அத்யவஸாயம் விஷயமாக இன் இசையால் சொன்ன, In isaiyaal sonna - இனிய இசையுடன் அருளிச் செய்த செம் சொல் மாலை, Sem sol maalai - அழகிய சொல்மாலை யாகிய இத்திருமொழியை ஏத்த வல்லார்க்கு, Etha vallaarku - ஓத வல்லவர்களுக்கு இடம், Idam - வாழுமிடம் வைகுந்தம், Vaikundham - பரமபதமேயாம் |
| 636 | நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 10 | அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிக விரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே | பதவுரை Show / Hideவில்லை துலைத்த, Villai Thulaitha - வில்லைத் தோற்கடித்த புருவத்தாள், Puruvathaal - புருவங்களை யுடையளாய் வில்லி புதுவை நகர் நம்பி விட்டு சித்தன் வியன் கோதை, Villi Puthuvai nagar Nambi Vittu Chithan Viyan Kodhai - ஸ்ரீவில்லி புத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வாருடைய மகளாய் ஆச்சர்ய குணசாலிநியான ஆண்டாள் அல்லல் விளைத்த பெருமானை, Allal Vilaitha Perumaanai - (திருவாய்ப் பாடி முழுதும்) தீங்கு விளைத்து அதனால் பெருமை பெற்றவனும் ஆயர் பாடிக்கு அணி விளக்கை, Aayar Paadikku Ani Vilakkai - திருவாய்ப் பாடிக்கு மங்கள தீபம் போன்று ப்ரகாசகனுமான கண்ண பிரானை வேட்கை உற்று, Vetkai Utru - ஆசைப் பட்டு மிக விரும்பும் சொல்லை, Miga Virumbum Sollai - மிக்க அபிநிவேசம் தோற்ற அருளிச் செய்த இப் பாசுரங்களை துதிக்க வல்லார்கள், Thuthika Vallargal - புகழ்ந்து ஓத வல்லவர்கள் துன்பம் கடலுள், Thunbam Kadalul - ஸம்ஸார ஸமுத்ரத்தில் துவளார், Thuvalaar - துவண்டு நோவு படமாட்டார்கள் |
| 645 | நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 9 | நாட்டைப் படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டை யாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே | பதவுரை Show / Hideநாட்டை படை என்று, Natai Padai Endru - உலகங்களை ஸ்ருஷ்டி என்று அயன் முதலா, Ayan Mudhalaa - பிரமன் முதலான பிரஜாபதிகளை தந்த, thandha - உண்டாக்கின நளிர் மா மலர் உந்தி வீட்டை பண்ணி, Nalir Maa malar Undhi Veetai Panni - குளிர்ந்த பெரிய மலரை யுடைத்தான திருநாபி யாகிற வீட்டை யுண்டாக்கி விளையாடும், vilaiyaadum - இப்படியாக லீலா ரஸம் அநுபவிக்கிற விமலன் தன்னை, Vimalan Thannai - பரம பாவனனான பெருமானை கண்டீரே?, kandire? - கண்டீரே? தேனுகனும், Thenukanum - தேநுகாஸுரனும் களிறும், kalirum - குவலயாபீட யானையும் புள்ளும், pullum - பகாஸுரனும் உடன் மடிய, udan madiya - உடனே மாளும்படியாக காட்டை நாடி வேட்டை ஆடி வருவானை, kaatai naadi vettai aadi varuvaanai - காட்டிற் சென்று வேட்டையாடி வரும் அப் பெருமானை விருந்தாவனத்தே கண்டோமே, Virundhavanathe Kandome - விருந்தாவனத்தே கண்டோமே |
| 646 | நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 10 | பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே | பதவுரை Show / Hideபரு தாள் களிற்றுக்கு, Paru Thaal Kalitruku - பருத்த கால்களை யுடைய கஜேந்திராழ்வானுக்கு அருள் செய்த, Arul Seidha - க்ருபை பண்ணின பரமன் தன்னை, Paraman thannai - திருமாலை பாரின் மேல், paarin mel - இந் நிலத்திலே விருந்தாவனத்தே கண்டமை, Virundaavanathe Kandamai - ஸ்ரீ ப்ருந்தாவனத்திலே ஸேவிக்கப் பெற்றமையைப் பற்றி விட்டு சித்தன் கோதை சொல், Vittu Chithan Kodhai sol - பெரியாழ்வார் திருமகளான ஆண்டாளருளிச் செய்த இப் பாசுரங்களை மருந்து ஆம் என்று, Marundhu aam endru - (பிறவி நோய்க்கு) மருந்தாகக் கொண்டு தம் மனத்தே, tham Manathe - தங்கள் சிந்தையிலே வைத்துக் கொண்டு வாழ்வார்கள், Vaithu kondu Vaazhvaarkal - அநுஸந்தித்துக் கொண்டு வாழுமவர்கள் பெரு தாள் உடைய பிரான் அடி கீழ், Peru Thaal Udaya Piran Adi Keezh - பெருமை பொருந்திய திருவடிகளை யுடைய எம்பெருமானுடைய திருவடிகளின் கீழே என்றும், Endrum - எந்நாளும் பிரியாது இருப்பார், Piriyadhu Iruppar - பிரியாமலிருந்து நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்கள் |
| 656 | பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 10 | வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா
சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும்
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும்
இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ? | பதவுரை Show / Hideவன், Van - (நைமித்திக ப்ரளயத்தில்) அழியாதிருக்கக் கடவதும பெரு, Peru - பெருமை தங்கியதுமான வானகம், Vaanagam - ஸ்வர்க்கம் முதலிய மேலுலகங்கள் உய்ய, Uyya - உஜ்ஜீவிக்கவும் அமரர், Amarar - தேவர்கள் உய்ய, Uyya - உஜ்ஜீவிக்கவும் மண் உய்ய, Man Uyya - பூலோகம் உஜ்ஜீவிக்கவும் மண் உலகில் மனிசர் உய்ய, Man Ulagil Manisar Uyya - பூலோகத்திலுள்ள மனிதர்களெல்லாம் உஜ்ஜீவிக்கவும் மிகு துன்பம் துயர் அகல, Migu Thunbam Thuyar Akala - மிக்க துக்கத்தை விளைப்பதான பாவங்கள் நீங்கவும் அயர்வு ஒன்று இல்லா சுகம் வளர, Ayirvu Ondru Illa Sugam Valara - துக்கம் கலசாத சுகம் வளரவும் அகம் மகிழும், Aham Makizhum - (எப்போதும்) மனதில் ஆனந்தத்தை யுடையரான தொண்டர், Thondar - ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழ, Vazha - உஜ்ஜீவிக்கவும் அன்போடு, Anbodu - திருவுள்ளத்தில் உகப்போடு தென் திசை நோக்கி, Then Thisai Nookki - தெற்குத் திக்குக்கு அபிமுகமாக பள்ளி கொள்ளும், Palli Kollum - பள்ளி கொண்டிரா நின்ற அணி அரங்கன், Ani Arangan - ஸ்ரீரங்கநாதனுடைய திரு முற்றத்து, Thiru Muttirathu - ஸந்நிதியுள் திரு முற்றத்திலே அடியார் தங்கள், Adiyar Thangal - ஸ்ரீவைஷ்ணவர்களுடைய இன்பம் மிகு பெரு குழுவு கண்டு, Inbam Migu Peru Kuzhuvu Kandu - ஆநந்தம் நிரம்பிய பெரிய கோஷ்டியை சேவித்து யானும், Yaanum - அடியேனும் இசைந்து, Isainthu - (அவர்களுள் ஒருவனாக) மனம் பொருந்தி உடனே, Uthane - அவர்களோடு கூட இருக்கும் நாள் என்று கொல், Irukkum Naal Endru Kol - வாழ்ந்திருக்குங்காலம் எப்போது (வாய்க்குமோ?). |
| 657 | பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 11 | திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு
திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை
கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்
குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள்
கூடலர் கோன் கொடை குலசேகரன் சொல் செய்த
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே | பதவுரை Show / Hideதிடர் விளங்கு கரை, Thidar Vilangu Karai - மணற்குன்றுகள் விளங்கா நின்ற கரையை யுடைத்தான பொன்னி நடுவு பாடு, Ponni Nadivu Paadu - காவிரியின் நடுவிடத்து கடல் விளங்கு, Kadal Vilangu - கடல் போல் விளங்குகின்ற கரு மேனி, Karum Meeni - கரிய திருமேனியை யுடைய அம்மான் தன்னை, Amman Thannai - பெரிய பெருமாளை கண் ஆர கண்டு உகக்கும் காதல் தன்னால், Kan Aara Kandu Ugakkum Kaadhal Thannal - கண்கள் த்ருப்தி யடையும்படி குடை விளங்கு, Kudai Vilangu - (அரசாட்சிக்கு ஏற்ப) வெண் கொற்றக் குடையுடன் விளங்கா நிற்பவரும் விறல் தானை, Viral Thaanai - பராக்கிரமம் மிக்க ஸேஸனைகளை யுடையவரும் கொற்றம் ஒள் வாள், Kotrham Ol Vaal - வெற்றியும் ஒளியும் பொருந்திய வாளை யுடையவரும் கூடலர் கோன், Koodalar Kon - மதுரையிலுள்ளவர்களுக்குத் தலைவரும் கொடை, Kodai - ஔதார்யத்தையே இயற்கையாக வுடையவருமான குலசேகரன், Kulashekaran - குலசேகரப் பெருமாள் சொற்செய்த, Sorzseitha - அருளிச் செய்த நடை விளங்கு, Nadai Vilangu - தமிழ் நடையானது நன்கு விளங்கா நின்ற தமிழ் மாலை பத்தும், Tamizh Maalai Paththum - தமிழ்ப் பிரபந்தரூபமான இப் பத்துப் பாசரங்களையும்; வல்லார், Vallaar - ஓத வல்லார்கள் நலம் திகழ் நாரணன், Nalam Thigazh Naaranan - கல்யாண குண சாலியான ஸ்ரீமந் நாராயணனுடைய அடி கீழ் நண்ணுவார், Adi Keezh Nannuvaaar - திருவடிகளில் சேரப் பெறுவர். |
| 667 | பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 10 | அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்
எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே | பதவுரை Show / Hideஅல்லி மாமலர் மங்கை நாதன், Alli Maamalai Mangai Naathan - அக விதழ்களை யுடைய சிறந்த (தாமரை) மலரில் பிறந்த பிராட்டிக்குக் கணவனான அரங்கன், Arangan - ஸ்ரீரங்கநாதனுடைய மெய் அடியார்கள் தம், Mei Adiyaargal Tham - உண்மையான பக்தர்களுடைய என்றும் மேவு மனத்தன் ஆம், Endrum Mevu Manaththan Aam - எப்போதும் பொருந்திய திரு வுள்ளத்தை யுடையவரும் கொல்லி காவலன், Kolli Kaavalan - கொல்லி நகர்க்கு அரசரும் கூடல் நாயகன், Koodal Naayagan - மதுரைக்கு அரசரும் கோழி கோன், Kozhi Kon - உறையூருக்கு அரசருமான குல சேகரன், Kula Seakaran - குலசேகராழ்வருடைய சொல்லின், Sollin - ஸ்ரீஸூக்திளாலே அமைந்த இன் தமிழ் மாலை வல்லவர், In Tamil Maalai Vallar - இனிய தமிழ்ப் பாசுரங்களை ஒத வல்லவர்கள் தொண்டர் தொண்டர்கள் ஆவர், Thondar Thondargal Aavar - தாஸாநுதாஸராகப் பெறுவர் |
| 676 | பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 9 | அங்கை ஆழி அரங்கன் அடியிணை
தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாம்
கொங்கர் கோன் குலசேகரன் சொன்ன சொல்
இங்கு வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே | பதவுரை Show / Hideஅம் கை ஆழி, Am Kai Aazhi - அழகிய திருக்கையிலே திருவாழி யாழ்வானை ஏந்தி யுள்ள அரங்கன், Arangan - ஸ்ரீரங்கநாதனுடைய அடி இணை, Adi Inai - திருவடிகளில் தங்கு சிந்தை, Thangu Sindhai - பொருந்திய மனமுடையவராய் தனி பெரு பித்தன் ஆம், Thani Peru Piththan Aam - லோக விலக்ஷணரான பெரிய பித்தராய் கொங்கர் கோன், Kongar Kon - சேர தேசத்தவர்களுக்குத் தலைவரான குல சேகரன், Kula Seakaran - குலசேகராழ்வார் சொன்ன, Sonna - அருளிச் செய்த சொல், Sol - இப் பாசுரங்களை இங்கு, Ingu - இவ் விபூதியிலே வல்லவர்க்கு, Vallavarkku - ஓத வல்லவர்களுக்கு ஏதம் ஒன்று இல்லை, Edham Ondru Illai - (பகவதநுபவத்திற்கு) ஒருவிதமான இடையூறும் உண்டாக மாட்டாது. |
| 687 | பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 11 | மன்னிய தண் சாரல் வட வேம்கடத்தான் தன்
பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி
கொன் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே | பதவுரை Show / Hideகொல் நவிலும், Kol Navilum - (பகைவர்களைக்) கொல்லுதலைப் பயின்ற கூர் வேல், Koora Vel - கூர்மையான வேலாயுதத்தை யுடைய குல சேகரன், Kula Seakaran - குல சேகராழ்வார் மன்னிய தண் சாரல் வடவேங்கடத்தான் தன், Manniya Than Saaral Vadaveengadathaan Than - நிலை பெற்ற குளிர்ச்சி யுள்ள சாரல்களை யுடைய பொன் இயலும் சே அடிகள், Pon Iyalaum Se Adigal - பொன்போற் சிறந்த சிவந்த திருவடிகளை காண்பான், Kaanbaan - ஸேவிப்பதற்கு புரிந்து, Purinthu - ஆசைப்பட்டு இறைஞ்சி, Irainji - வணங்கி சொன்ன, Sonna - அருளிச் செய்த பன்னிய நூல் தமிழ், Panniya Nool Tamil - ஆராய்ந்த நூல்களிற் கூறிய இலக்கணத்துக்கு இசைந்த தமிழ்ப் பதிகத்தை வல்லார், Vallaar - கற்று வல்லவர் பாங்கு ஆய பத்தர்கள், Paangu Aaya Paththarkal - அப்பெருமான் திருவுள்ளத்துக்கு இனிய பக்தர்களாவர் அடிவரவு, Adivaravu - ஊன் ஆனாத பின் ஒண் கம்பம் மின் வான் பிறை செடி உம்பர் மன்னிய தரு. |
| 697 | பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 10 | வித்துவ கோட்டு அம்மா ! நீ வேண்டாயேயா யிடினும்
மற்றாரும் பற்றிலேன் என்று அவனை தாள் நயந்த
கொற்ற வேல் தானை குலசேகரன் சொன்ன
நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே | பதவுரை Show / Hideநீ வேண்டாயே ஆயிடினும், Nee Vendaaye Aayidinum - நீ (என்னை) உபேக்ஷித்தாயாகிலும் மற்று ஆரும் பற்றிலேன் என்று, Mattru Aarum Patrilen Endru - வேறு எவரையும் நான் சரணடைய மாட்டேன்’ என்று, Endru - என்று (அத்யவஸாயத்தை வெளியிட்டு) அவனை தாள் நயந்து, Avanai Thaal Nayandhu - அவ்வெம்பெருமானது திருவடிகளிலேயே ஆசை கொண்டு கொற்றம் வேல் தானை குலசேகரன் சொன்ன, Kotrham Vel Thaanai Kulashekaran Sonna - வெற்றியைத் தரும் வேலாயுதத்தையும் நல் தமிழ் பத்தும், Nal Tamil Pathum - நல்ல தமிழ்ப்பாடல்கள் பத்தையும் வல்லார், Vallaar - ஓத வல்லவர்கள் நரகம் நண்ணார், Naragam Nannaar - (கொடிய பாவங்கள் செய்திருந்தாலும்) நரகத்திற் சேர மாட்டார்கள். |
| 707 | பெருமாள் திருமொழி || (ஏர் மலர் பூம் குழல்) - ஆய்ச்சியர் ஊடி அமலனை எள் கல் 10 | அல்லி மலர் திரு மங்கை கேள்வன் தன்னை
நயந்து இள ஆய்ச்சிமார்கள்
எல்லி பொழுதினில் ஏமத்தூடி
எள்கி வுரைத்த வுரையதனை
கொல்லி நகர்க்கு இறை கூடல் கோமான்
குலசேகரன் இன் இசையில் மேவி
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும்
சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பம் தானே | பதவுரை Show / Hideஇள ஆய்ச்சிமார்கள், Ila Aaychchimargal - இளமை தங்கிய இடைப் பெண்கள் அல்லி மலர் திருமங்கை கேள்வன் தன்னை நயந்து, Alli Malar Thirumangai Kelvan Thannai Nayandhu - தாமரைப் பூவில் பிறந்த பிராட்டிக்குக் கொழுநனான கண்ண பிரானை ஆசைப்பட்டு, எல்லி ஏமப் பொழுதினில், Elli Emapp Pozhudhinil - ராத்ரியின் நடுச் சாமத்திலே ஊடி, Oodi - ப்ரணய கலஹம் பண்ணி எள்கி, Elgi - ஈடுபட்டு உரைத்த, Uraitha - சொன்ன உரை அதனை, Urai Adhanai - பாசுரங்களை (உட்கொண்டு) கொல்லி நகர்க்கு இறை, Kolli Nagarkku Irai - கொல்லி என்னும் நகருக்குத் தலைவரும் கூடல் கோமான், Koodal Koman - மதுரைக்கு அரசருமான குல சேகரன், Kula Seakaran - குலசேராழ்வார் இன் இசையில் மேவி, In Isaiyil Mevi - இனிய பண்ணிலே பொருந்த சொல்லிய, Solliya - அருளிச் செய்த இன் தமிழ், In Tamil - பரம போக்யமான தமிழிலாகிய மாலை, Maalai - மாலாரூபமான பத்தும், Pathum - இப் பத்துப் பாட்டையும் சொல்ல வல்லார்க்கு, Solla Vallar Kku - ஒத வல்லவர்களுக்கு துன்பம் இல்லை, Thunbam Illai - ஸம்ஸார துக்கம் அணுகாது. |
| 718 | பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 11 | மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை
வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து
எல்லையில் பிள்ளை செய்வன காணாத்
தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடி மேல்
கோலமாம் குலசேகரன் சொன்ன
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள்
நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே | பதவுரை Show / Hideமல்லை மா நகர்க்கு, Mallai Maa Nagarkku - செல்வம் நிரம்பிய பெரிய நகரமாகிய வட மதுரைக்கு இறையவன் தன்னை, Irayavan Thannai - தலைவனாயிருந்த கம்ஸனை வான் செலுத்தி, Vaan Seluththi - வீர ஸ்வர்க்கத்திற்கு அனுப்பி ஈங்கு வந்து அணை, Eengu Vandu Anai - (தேவகீ ஸமீபமாகிய) இங்கே வந்து சேர்ந்த பிள்ளை, Pillai - கண்ண பிரானுடைய மாயத்து எல்லை இல் செய்வன, Maayaththu Ellai Il Seivana - அற்புதத்தில் எல்லை யில்லாத சேஷடிதங்களை காணா, Kaanaa - (நடந்த போது) காணப் பெறாத தெய்வத் தேவகி, Deivath Devaki - தெய்வத் தன்மை பொருந்திய தேவகி யானவள் புலம்பிய புலம்பல், Pulambiya Pulambal - புலம்பிக் கொண்டு சொன்ன பாசுரங்களை கொல்லி காவலன், Kolli Kaavalan - கொல்லி நகர்க்கு அரசராய் மால் அடி முடி மேல் கோலம் ஆம், Maal Adi Mudi Mael Kolam Aam - ஸர்வேச்வரனுடைய திருவடிகளைத் தம் திருமுடிக்கு அலங்காரமாக வுடையரான குலசேகரன், Kulashekaran - குலசேகராழ்வார் சொன்ன, Sonna - அருளிச் செய்த நல் இசை தமிழ் மாலை, Nal Isai Tamil Maalai - நல்ல இசையையுடைய தமிழினாலாகிய சொல் மாலையை வல்லார்கள், Vallargal - ஓத வல்லவர்கள் ஒல்லை, Ollai - விரைவாக நாரணன் உலகு, Naaranan Ulagu - ஸ்ரீவைகுண்டத்தை நண்ணுவார், Nannuvaar - சேரப் பெறுவர் |
| 728 | பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 10 | தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கண புரத்து என் கரு மணியே!
ஏவரி வெஞ்சிலை வலவா! ராகவனே! தாலேலோ | பதவுரை Show / Hideதேவரையும், Devaraiyum - தேவர்களையும் அசுரரையும், Asuraraiyum - அஸுரர்களையும் திசைகளையும், Thisaigalaiyum - திக்குக்களையும் (அதாவது எல்லா ப்ரதேசங்களையும்) படைத்தவனே, Padaithavaney - ஸ்ருஷ்டித்தவனே யாவரும் வந்து அடி வணங்க, Yavarum Vandu Adi Vananga - ஸகல சேதநரும் வந்து திருவடிகளில் ஸேவிக்கும்படியாக அரங்கம் நகர், Arangam Nagar - ஸ்ரீரங்கத்திலே துயின்றவனே, Thuyinravane - பள்ளி கொண்டிருப்பவனே! காவிரி நல் நதி, Kaviri Nal Nathi - காவேரி யென்கிற சிறந்த நதி யானது பாயும், Payum - ப்ரவஹிக்கப் பெற்ற கண புரத்து, Kanna Purathu - திருக் கண்ணபுரத்தில் எழுந்தருளி யிருக்கிற ஏ வரி வெம் சிலை வலவா, E Vari Vem Silai Valavaa - அம்புகள் தொடுக்கப்பெற்று அழகியதாய் (ச் சத்துருக்களுக்கு)க் கொடிதா யிருந்துள்ள வில்லை ஆள வல்லவனே |
| 729 | பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 11 | கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன்
தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே | பதவுரை Show / Hideஎன் காகுத்தன் தன் அடி மேல், En Kaakuththan Than Adi Mel - என் ஸ்வாமியான இராமபிரான் விஷயமாக தாலேலோ என்று உரைத்த, Thalelo Endru Uraitha - (கௌஸல்யை) தாலாட்டிச் சொன்ன பாசுரங்களை (உட்கொண்டு) கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன், Kol Navilum Vel Valavan Kudai Kulashekaran - கொலைத் தொழில் புரிகின்ற வேலாயுதத்தைச் செலுத்த கன்னி நல் மா மதிள் புடை சூழ் கண புரத்து, Kanni Nal Maa Mathil Pudai Soozh Kanapurathu - சாச்வதமான சிறந்த அழகிய மதிள்கள் நாற்புறமும் சூழப் பெற்ற திருக்கண்ணபுரத்திலே சொன்ன, Sonna - அருளிச் செய்த பன்னிய நூல் தமிழ் மாலை பத்தும், Panniya Nool Tamil Maalai Paththum - பரம்பியதாய் ஸலக்ஷணமாய்த் தமிழ்ப் பாமாலை ஆகிய இப்பத்துப் பாசுரங்களையும் வல்லார், Vallaar - அதிகரிக்க வல்லவர்கள் |
| 740 | பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 11 | ஏரார்ந்த கரு நெடுமால் ராமனாய்
வனம் புக்க வதனுக்கு ஆற்றா
தாரர்ந்த தடவரை தோள் தயரதன் தான்
புலம்பிய அப் புலம்பல் தன்னை
கூரார்ந்த வேல் வலவன் கோழியூர் கோன்
குடை குலசேகரன் சொல் செய்த
சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார்
தீ நெறி கண் செல்லார் தாமே | பதவுரை Show / Hideஏர் ஆர்ந்த, Aer Aarntha - அழகு நிறைந்த கரு, Karuthu - கரு நிறமுடைய நெடுமால், Nedumaal - மஹா விஷ்ணு இராமன் ஆய், Iraman Aayi - ஸ்ரீ ராமனாகத் திருவவதரித்து வனம் புக்க, Vanam Pukka - காட்டுக்குச் சென்றதான அதனுக்கு, Adhanukku - அச் செயலை ஆற்றா, Aartra - பொறுக்க மாட்டாமல் தார் ஆர்ந்த தட வரை தோள் தயரதன் புலம்பிய, Thaar Aarntha Thada Varai Thol Thayaratthan Pulampiya - வெற்றி மாலை பொருந்திய பெரிய மாலை போன்ற அப் புலம்பல் தன்னை, Ap Pulampal Thannai - அக் கதறல்களை, கூர் ஆர்ந்த, Koora Aarntha - கூர்மை மிக்க வேல் வலவன், Vel Valavan - வேற்படையின் தொழிலில் வல்லவரும கோழியர் கோன், Kozhiyar Kon - உறையூரிலுள்ளார்க்குத் தலைவரும் குடை, Kudai - கொற்றக்குடையை உடையவருமான குலசேகரன், Kulashekaran - குலசேகராழ்வார் சொல் செய்த, Sol Seitha - அருளிச் செய்த சீர் ஆர்ந்த, Seer Aarntha - சிறப்பு மிக்க தமிழ் மாலை இவை, Tamil Maalai Ivai - தமிழ்ப் பிரபந்தரூபமான இப் பத்துப் பாசுரங்களையும் வல்லார், Vallaar - கற்க வல்லவர்கள் தீ நெறிக்கண், Thee Nerikkan - கொடிய வழி யொன்றிலும் செல்லார், Sellaar - சென்று சேர மாட்டார்கள். (தான், தாம்–அசைகள்) |
| 750 | பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 10 | அன்று சரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி
அடல் அரவ பகை ஏறி அசுரர் தம்மை
வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற
விண் முழுதும் எதிர் வர தான் தாமமேவி
சென்று இனிது வீற்று இருந்த அம்மான் தன்னை
தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும்
இறைஞ்சுமினோ எப் பொழுதும் தொண்டீர்! நீரே | பதவுரை Show / Hideஅன்று, Anru - (தன்னடிச்சோதிக்கு எழுந்தருள்கிற) அந்நாளில் சர அசரங்களை, Sara Asarangalai - (அயோத்யாபுரியிலுள்ள) ஜங்கமும் தாவரமுமான எல்லா வுயிர்களையும் வைகுந்தத்து ஏற்றி, Vaikundhathu Aetri - பரமபதத்துக்குப் போகச் செய்து அடல் அரவம் பகை ஏறி, Adal Aravam Pagai Aeri - வலிமையை யுடைய பாம்புகளுக்குப் பகையான கருடன் மேல் ஏறிக் கொண்டு அசுரர் தம்மை வென்று, Asurar Thammai Vendru - அசுரர்களை ஜயித்து இலங்கும் அணி நெடு தோள் நான்கும் தோன்ற, Ilangum Ani Nedu Thol Naangum Thondra - (அந்த ஜயலக்ஷ்மி) விளங்கப் பெற்ற அழகிய விண் முழுதும், Vin Muzhudhum - பரமபதத்திலுள்ளாரெல்லாரும் எதிர் வர, Edhir Vara - எதிர் கொண்டு உபசரிக்கும்படி தன் தாமம் மேவி சென்று, Than Thaamam Mevi Sendru - தமது ஸ்தாநமான அப் பரம பதத்திலே போய்ப் புக்கு இனிது வீற்றிருந்த, Inidhu Veetirundha - (தன் மேன்மை யெல்லாம் தோன்றும்படி) இனிமையாகத் (திவ்ய ஸிம்ஹாஸநத்தில்) எழுந்தருளியிருந்த அம்மான் தன்னை தில்லை நகர் திரு சித்ரகூடம் தன்னுள் என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி, Ammaan Thannai Thillai Nagar Thiru Chithrakoodam Thannul Endrum Nindraan Avan Ivan Endru Aethi - ஸர்வேச்வரனை (அந்த இருப்பில் ஒன்றுங் குறையாமல் அவ்வாறே) தில்லைச் சித்ரக்கூடத்தில் எந்நாளும் (நமக்காக) தொண்டீர் நீர், Thondir Neer - அவனுக்கு அடியவர்களான நீங்கள் நாளும் எப்பொழுதும், Naalum Eppozhudhum - தினந்தோறும் எப்பொழுதும் இறைஞ்சு மின், Irainthu Min - வணங்கி உஜ்ஜீவியுங்கள் (ஏ – இசைநிறை.) |
| 751 | பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 11 | தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே | பதவுரை Show / Hideதிறல் விளங்கும், Thiral Vilangum - பல பராக்கிரமம் விளங்கப் பெற்ற மாருதியோடு, Marudiyodu - அனுமானுடனே அமர்ந்தான் தன்னை, Amarnthaan Thannai - நித்யவாஸம் பண்ணுகிற எம் பெருமானைக் குறித்து எல்லை இல்சீர் தயரதன் தன் மகன் ஆய் தோன்றிற்று அது முதல் ஆ தன் உலகம் புக்கது ஈறு ஆ, Ellai Ilseer Thayaratthan Than Magan Aayi Thonrihtru Adhu Muthal Aa Than Ulagam Pukkadhu Eeru Aa - அழிவில்லாத (ஸ்ரீராமாயணத்தை முழுதையும் ஸங்க்ரஹமாக அமைத்து) கொல் இயலும் படை தானை கொற்றம் ஒள்வாள் கோழியர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த, Kol Iyallum Padai Thaanai Kotrham Olvaal Kozhiyer Kon Kudai Kulashekaran Sol Seitha - (பகைவர்களைக்) கொல்லுதல் நல் இயல், Nal Iyall - சிறந்த இயற்றமிழிலக் கணத்துக்கு இசைந்த இன் தமிழ் மாலை பத்தும், In Tamil Maalai Paththum - இனிய தமிழ்ப் பிரபந்த ரூபமான இப்பத்துப் பாசுரங்களையும் வல்லார், Vallaar - கற்று வல்லவர்கள் நலம் திகழ, Nalam Thigazha - பரமபதத்தில் விளங்குகிற நாரணன், Naaranan - ஸ்ரீமந் நாராயணனுடைய அடிகீழ் நண்ணுவார், Adikeezh Nannuvaar - திருவடிகளிற் சேரப் பெறுவார்கள். |
| 870 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 119 | பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண மாய கேள்
என்னதாவி என்னும் வல் வினையினுள் கொழுந்து எழுந்து
உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர்க் கொழு மலர்
மன்ன வந்து பூண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே | பதவுரை Show / Hideஅரங்கம், Arangam - திருவரங்கத்திலே பொன்னிசூழ், Ponnichool - காவிரிசூழ்ந்த மேய, Meya - நித்யவாஸம் செய்தருள்கிற பூவை வண்ண, Poovai Vanna - காயம்பூப்போன்ற திருமேனியையுடைய மாய!, Maaya - ஆச்சர்யபூதரான பெரிய பெருமானே! கேள், Keel - (இவ்விண்ணப்பத்தைக்) கேட்டருள வேணும்; என்னது, Ennathu - என்னுடையது ஆவி என்னும், Aavi Ennum - ஆத்மா என்கிற வல்வினையினுள், Valvinaiyinul - வலிய பாபராசியிலே கொழுந்து எழுந்து உள்ள, Kozhundhu Ezhunthu Ulla - (தேவரீர் விஷயமான அநுராகமாகிற) கொழுந்து கிளர்ந்து உள்ள தேவரீருடைய பாதழ் என்ன நின்று, Paathazh Enna Nindru - திருவடியென்கிற ஒண்சுடர் கொழுமலர், Onchudar Kozhumalar - அழகிய சுடர்மிக்க புஷ்பத்திலே மன்னவந்து பூண்டு, Mannavandhu Poondhu - ஸ்திரமாக வந்து படிந்து எங்கும், Engum - தேவரீருடைய விபூதிகள் எல்லாவற்றிலும் வாட்டம் இன்றி நின்றது., Vattam Inri Nindrathu - குறையாமல் வியாபியா நின்றது |
| 871 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 120 | இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
துயக் கொண் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி யாதலால் என்னாவி தான்
இயக்கொலா மறுத்தறாத வின்ப வீடு பெற்றதே | பதவுரை Show / Hideஉயக்கொள், Uyakkol - (நம்போல்வாரை) உஜ்ஜீவிக்கச் செய்பவனான மேகவண்ணன், Megavannan - காளமேக நிபச்யாமனான பெருமான் இன்று, Indru - இன்றைக்கு (நிர்ஹேதகமாக) இயக்கு அறாத பல் பிறப்பில், Iyakku Aradha Pal Pirappil - தொடர்ச்சிமாறாமல் நெடுகச் செல்லும்படியான பலவகைப் பிறப்புகளினின்றும் என்னை, Ennai - அடியேனை மாற்றி, Maatri - மாற்றுகைக்குத் திருவுள்ளம் பற்றி வந்து நண்ணி, Vandhu Nanni - இங்கேயெழுந்தருளி நெருங்கி தன்னில் ஆய என்னுள், Thannil Aaya Ennul - தன்னோடு அவிகாபூதமான என்னுள்ளே தன், Than - தன்னுடைய மன்னுசோதி, Mannuchothi - நித்ய ஜ்யோதிர்மயமான திவ்ய மங்கள விக்ரஹத்தை மயக்கினான், Mayakkinaan - ஸம்ச்லேஷிப்பித்தான்! ஆதலால், Aadhalal - இப்படி புரையாறக் கலந்தருளுகையாலே என் ஆவி தான், En Aavi Than - எனது ஆத்ம வஸ்துவானது இயக்கு எல்லாம் அறுத்து, Iyakku Ellam Aruththu - ஒன்றோடொன்று இணைந்து கிடந்த அவித்யாதிகளை வேரறுத்து அறாத இன்பம் வீடு:, Aradha Inbam Veedu - ஒருநாளும் முடியாத இன்பமாகிய மோக்ஷஸுகத்தை பெற்றது, Pettrathu - பெற்றாதயிற்று |
| 915 | திருமாலை || (பிரமன் முதலியோருக்கும் அரிதான பேற்றை ஒரு திர்யக் ஜந்துவுக்கு அருள் செய்தமையைக் கூறுகிறார்) 44 | பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா யூழி யூழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த
கண்ணுறா வுன்னை என்னோ களை கணாக் கருதுமாறே | பதவுரை Show / Hidepen ulam chatiyinanum,பெண் உலாம் சடையினானும் - கங்கா நதி உலாவுகின்ற சடையை யுடையனான சிவனும் piramanum,பிரமனும் - நான் முகக் கடவுளும் unnai kanban,உன்னைக் காண்பான் - உன்னைக் காண்பதற்காக en ila uli uli,எண் இலா ஊழி ஊழி - எண்ண முடியாத நெடுங்காலமாக thavam seithar,தவம் செய்தார் - தவம் புரிந்தவர்களாய் (அவ் வளவிலும் காணப் பெறாமையாலே) velki nirpa,வெள்கி நிற்ப - வெட்கமடைந்து கவிழ்தலை யிட்டிருக்க anru,அன்று - அக் காலத்திலே aanai kuu,ஆனைக்கு - (முதலை வாயிலகப்பட்ட) ஸ்ரீகஜேந்த்ராழ்வானுக்காக vantu,வந்து - (மடுவின் கரையில்) எழுந்தருளி vin ulaar viyappa arulai eentha,விண் உளார் வியப்ப அருளை ஈந்த - நித்ய ஸூரிகளும் ஆச்சிரியப்படும்படி பரம க்ருபையைச் செய்தருளிய kannarai,கண்ணறாய் - (என்னிடத்து அருள் செய்யாமையாலே) தயவில்லாதவனே! unnai,உன்னை - உன்னை kalai kana,களை கணா - தஞ்சமாக karutum aaru enno,கருதும் ஆறு என்னோ - நினைக்கலாகுமோ? |
| 916 | திருமாலை || (இப் பிரபந்தத்தில் எம்பெருமானுக்கு உள்ள போக்யதையை வெளி இட்டார்) 45 | வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்க மாலைத்
துளவத் தொண்டைய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி சொல்
இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே | பதவுரை Show / Hidevalam elum thavalam maadam,வளம் எழும் தவளம் மாடம் - அழகு விஞ்சியிருப்பதும் வெண்ணிறமுடையதுமான மாடங்களை யுடைய ma madhurai nagaram thannul,மா மதுரை நகரம் தன்னுள் - பெருமை தங்கிய வட மதுரையில் kavalam maal yaanai kontra,கவளம் மால் யானை கொன்ற - கவளங் கொண்டிருப்பதும் பெருத்ததுமான (குவலயாபீடமென்னும் கம்ஸனுடைய) யானையைக் கொலை செய்தருளின kannanai,கண்ணனை - ஸ்ரீ க்ருஷ்ணனாகிய arangam maalai,அரங்கம் மாலை - கோயிலிலே (கண் வளரும்) எம்பெருமானைக் குறித்து thulapam thondu aay,துளபம் தொண்டு ஆய - திருத் துழாய்க் கைங்கர்ய நிஷ்டரும் thol seer,தொல் சீர் - இயற்கையான சேஷத்வத்திலே நிலை நின்றவருமான thondaradi podi,தொண்டரடிப் பொடி - தொண்டரடிப் பொடி யாழ்வார் (அருளிச் செய்த) sol,சொல் - திருமாலை யாகிய இத்திருமொழி ilaiya pun kavithai elum,இளைய புன் கவிதை ஏலும் - மிகவும் குற்றங்குறைகளை யுடைய கவித்வமாயிருந்த போதிலும் empiraagu,எம்பிராற்கு - பெரிய பெருமாளுக்கு inidhe aarey,இனிதே ஆறே - பரம போக்யமாயிருந்தபடி யென்! என்று ஈடுபடுகிறார்.) |
| 925 | திருப்பள்ளியெழுச்சி || (ஸ்ரீ நஞ்சீயர் ) - திருப் பள்ளி உணர்ந்தருளும் போதை யழகு கண்டு திருவடித் தொழவும், அழகோலக்கம் இருக்கும்படி கண்டு அடிமை செய்யவும் வேணுமென்று தந்தாமுடைய பரிகரமான மங்கள வாத்யங்களும் வீணைகளுமாய் உகளித்துக் கொண்டு யக்ஷ கந்தர்வாதி,கள் வந்து நின்றார்கள்; அடியேனுக்காகத் (அழகோலக்கமாக?) திருப்பள்ளி யுணர்ந் தருளி அடிமை கொண்டருள வேணுமென்கிறார். 9 | ஏதமில் தண்ணுமை எக்கமத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவர் அவர் கங்குலுகள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே | பதவுரை Show / Hideஏதம் இல், yedham il - குற்றமற்ற தண்ணுமை, thannumai - சிறுபறையும் எக்கம், ekkam - ஒற்றைத் தந்தியை யுடைய வாத்யமும் மத்தளி, maththali - மத்தளமும் யாழ், yaal - வீணையும் குழல், kulal - புல்லாங்குழல்களுமாய் திசை, thisai - திக்குக்களெங்கும் முழவமோடு, muzhavamodu - இவற்றின் முழக்கத்தோடு இசை கெழுமி கீதங்கள் பாடினர், isai kelumi keethangal paadinarr - இசை மாட்டியப் பாட்டு பாடக் கடவரான கின்னரர், kinnarar - கின்னார்களும் கருடர், karudar - கருடர்களும் கெந்தருவரும், kendharuvarum - கந்தர்வர்களும் இவர், ivar - இதோ மற்றுள்ளவர்களும் மா தவர், maa thavar - மஹர்ஷிகளும் வானவர், vaanavar - தேவர்களும் சாரணர், saaranar - சாரணர்களும் இயக்கர், iyakkar - யக்ஷர்களும் சித்தரும், sidharum - ஸித்தர்களும் திருவடி தொழுவான், thiruvadi thozhuvan - (தேவரீடைய) திருவடிகளில் வணங்குகைக்காக கங்குலும் எல்லாம், kangulum ellaam - இரவெல்லாம் மயங்கினர், mayanginar - (நெருக்கத்தில் வருந்தி) மோஹமுற்றனர்; ஆதலில், aadhali - ஆகையாலே அவர்க்கு, avarkku - அவர்களுக்கு நாள் ஒலக்கம் அருள, naal olakam arul - பகலோலக்க மருளுகைக்காக அரங்கத்தம்மா, arangathamama - திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே! பள்ளியெழுந்தருளாய், palliyezhundharulaay - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும் |
| 936 | அமலனாதிபிரான் || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — நிகமத்தில் -இவ்வளவும் ஜ்ஞான சாஷாத் காரம் – மேல் லோக ஸாரங்க மஹா முனிகள் தோளில் வந்து புகுந்து விண்ணப்பம் செய்கிறார் . 10 | கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே | பதவுரை Show / Hideகொண்டல் வண்ணனை, Kondal Vannanai - காள மேகம்போன்ற வடிவையுடையனும் கோவலன் ஆய் வெண்ணெய் உண்ட வாயன், Kovalan Aay Vennay Unda Vayan - கோபால குமாரனாகப் பிறந்து வெண்ணெயமுது செய்த திருவாயை யுடையனும் என் உள்ளம், En Ullam - என்னுடைய நெஞ்சை கவர்ந்தானை, Kavarnthaanai - கொள்ளை கொண்டவனும் அண்டர் கோன், Andar Kon - நித்யஸூரிகட்குத் தலைவனும் அணி அரங்கன், Ani Arangan - (பூமண்டலத்துக்கு) அலங்காரமான திருவரங்கத்தில் கண்வளர்ந்தருள்வபனும் என் அமுதினை, En Amudhinai - எனக்குப் பரம போக்யமான அம்ருதமாயிருப்பவனுமான அழகிய மணவாளனை கண்ட கண்கள், Kanda Kangal - ஸேவிக்கப் பெற்ற (பரமபத நாதனையும்) காணா, Kaana - காண மாட்டா. |
| 946 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — ( ஆட் புக்க காதல் அடிமைப்பயன் -சொல்லி உடனே பயன் இல்லை பாங்கு இல்லை என்கிறீரே -அவர் திருத்த திருந்தி உள்ளீர் -பாங்கும் உண்டே -என்னில் தம்மைப் பார்த்தால் இப்படி தின்றும் -அவர் செய்து அருளினை உபகாரம் அனுசந்தித்த வாறே இப்படி தோற்றும் -)ஆழ்வார் தமக்கு உபகரித்த உபகாரத்தை அனுசந்தித்தவாறே தாம் இதுக்கு முன் ஆழ்வார் விஷயத்தில் நின்ற நிலை யடங்க முதலடி இட்டிலராகித் தோற்றுகையாலே –அவர் பண்ணின உபகாரத்தைப் பேசுகிறார் – ஆசார்யன் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் இல்லையோ என்னில் – க்ருத்ஸ்நாம் வாப்ருதிவீம் தத்யான்ன தத் துல்யம் கதஞ்சன -என்கிறபடியே- பஞ்சாசத் கோடி விச்தீர்ணையான பூமியும் சத்ருசமம் அல்ல என்று இ றே சாஸ்திரம் -(பொன்னுலகு ஆளீரோ புவனம் எல்லாம் ஆளீரோ – )அவன் இவனுக்கு உபகரித்தது சர்வாதிகமாய் இருப்பதொரு மிதுனைத்தை யானால்-அப்படியே இருப்பதொரு மிதுனத்தை உபகரித்தால் இ றே இவன் பிரத்யுபகாரம் பண்ணினான் ஆவது – ஆகையால் -ஆச்சார்யர் விஷயத்தில் எல்லாம் செய்தாலும் -அவன் பண்ணின உபகாரத்தைப் பார்த்தால் -ஒன்றும் செய்திலேன் நான் -என்று முகக் குறைவாளனாய் போரும் இத்தனை 10 | பயனன்றாகிலும் பாங்கலராகிலும்
செயல்நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில்சூழ் குருகூர்நம்பி
முயல்கின்றேனுன்றன் மொய்கழற்கன்பையே | பதவுரை Show / Hideபயன் அன்று ஆகிலும், Payan Andru Agilum - (பிறர் திருந்துவதால்) தமக்கொரு பயனில்லாமற் போனாலும் பாங்கு அலர் ஆகிலும், Paangu Alar Agilum - (அவர்கள் திருந்துகைக்குப்) பாங்காக அமையாமற் போனாலும் செயல், Seyal - தமது அநுஷ்டாகத்தாலே நன்றாக திருத்தி, Nandraaga Thiruthi - நன்றாக சிக்ஷித்து பணி கொள்வான், Pani Kolvaaan - (அவர்களை) ஆட்கொள்வதற்காக குயில் நின்று ஆல் பொழில் சூழ் குருகூர் - குயில்களானவை நின்று ஆரவாரஞ் செய்யப் பெற்ற சோலைகளாலே சூழப்பட்ட திருநகரியிலே (எழுந்தருளியிருக்கிற) நம்பி!, Nambi! - ஆழ்வாரே! உன் தன், Un Than - தேவரீருடைய மொய் கழற்கு, Moi Kazharkku - சிறந்த திருவடிகளில் அன்பையே, Anbaiye - அன்பு உண்டாவதைக் குறித்தே முயல்கின்றேன், Muyalkindren - முயற்சி செய்கின்றேன் |
| 947 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — நிகமத்தில் இப்ப்ரபந்தத்தையே தஞ்சமாக நினைத்து இருக்குமவர்களுக்கு வாசபூமி பரமபதம் -என்கிறார். 11 | அன்பன் தன்னை யடைந்தவர் கட்கெல்லாம்
அன்பன் தென்குரு கூர்நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்னசொல்
நம்புவார்ப்பதி வைகுந்தம் காண்மினே | பதவுரை Show / Hideஅன்பன் தன்னை, Anban Thannai - ஆச்ரித பக்ஷபாதியான எம்பெருமானை அடைந்தவர்கட்கு எல்லாம், Adainthavarkatku Ellam - ஆச்ரயித்தவர்களான ஸகல பாகவதர் பக்கலிலும் அன்பன், Anban - பக்தியை யுடையரான தென் குருகூர் நகர் நம்பிக்கு, Then Kurugoor Nagar Nambikku - நம்மாழ்வர் விஷயத்திலே அன்பன் ஆய், Anban Ai - பக்தனாயிருந்து கொண்டு மதுரகவி சொன்ன சொல், Madhurakavi Sonna Sol - மதுரகவி அருளிச் செய்த இத் திவ்வியப் பிரபந்தத்தை நம்புவார், Nambuvaar - (தங்களுக்குத் தஞ்சமாகக்) விச்வஸித் திருப்பவர்களுக்கு பதி, Pathi - வாஸஸ்தாநமாவது வைகுந்தம் காண்மின், Vaikundam Kaanmin - பரம பதமாம் |
| 956 | பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் ” என்று பலகால் அருளிச் செய்கின்ற ஆழ்வாரை நோக்கிச் சிலர் ‘நீர் ஆதரித்துப் போருகிற இத்திருநாமம் என்ன பலனைத் தரக்கூடியது?’ என்று கேட்க, இது தரமாட்டாத பலனே உலகில் இல்லை யென்கிறார்.) 9 | குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயராயின வெல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளோடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் யாயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-9 | பதவுரை Show / Hideநாராயணா என்னும் நாமம், Narayana ennum namam - நாராயண நாமமானது (தன்னை அநுஸந்திக்கு மவர்கட்கு) குலம் தரும், Kulam tharum - உயர்ந்த குலத்தைக் கொடுக்கும் செல்வம் தந்திடும், Selvam thandhidum - ஐச்வரியத்தை அளிக்கும் அடியார் படு துயர் ஆயின எல்லாம், Adiyaar padu thuyar aayina ellaam - அடியவர்கள் அனுபவிக்கிற துக்கம் என்று பேர்பெற்றவை எல்லாவற்றையும் நிலம் தரம் செய்யும், Nilam tharam seiyum - தரை மட்டமாக்கிவிடும் நீள் விசும்பு அருளும், Neel visumbu arulum - பரமபதத்தைக் கொடுக்கும் அருளொடு, Arulodu - எம்பெருமானுடைய கிருபையையும் பெரு நிலம், Peru nilam - கைங்கரியமாகிற மஹா பதவியையும் அளிக்கும், Alikkum - உண்டாக்கும் வலம் தரும், Valam tharum - (பகவதநுபவத்துக்குப் பாங்கான) சக்தியைக் கொடுக்கும் மற்றும், Matrum - இன்னமும் வேண்டிய நன்மைகளை எல்லாம் தந்திடும், Thandhidum - செய்து கொடுக்கும் பெற்ற தாயினும், Petra thaayinum - பெற்று வளர்க்கும் தாயைக் காட்டிலும் ஆயின செய்யும், Aayina seiyum - ஹிதங்களைச் செய்து கொடுக்கும் (ஆக இப்படி) நலம் தரும் சொல்லை நான், Nalam tharum sollai naan - வேண்டிய நன்மைகளைத்தருமதான நாராயண நாமத்தை கண்டு கொண்டேன், Kandu konden - அடியேன் லபிக்கப் பெற்றேன் |
| 957 | பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இது திருநாமப்பாட்டு எனப்படும். கலியன் சொன்ன இப்பாசுரங்கள் வழியாக நாராயணா வென்னும் நாமத்தை எப்போதும் அநுஸந்தியுங்கள்; பாவங்களெல்லாம் பறந்தோடிப்போம் - என்று தலைக்கட்டுகிறார்.) 10 | மஞ்சுலாம் சோலை வண்டு அறை மா நீர் மங்கையார் வாள் கலி கன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை இவை கொண்டு சிக்கெனத் தொண்டீர்
துஞ்சும் போது அழைமின் துயர்வரில் நினைமின் துயரிலீர் சொல்லிலும் நன்றாம்
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா வென்னும் நாமம் –1-1-10 | பதவுரை Show / Hideமஞ்சு உலாம் சோலை வண்டு, Manju ulaam solai vandu - மேகங்கள் உலாவுகின்ற சோலைகளையுடையதும் வண்டுஅறை மா நீர், Vandu arai maa neer - வண்டுகள் படிந்து ஒலிசெய்கின்ற சிறந்த தீர்த்தத்தை உடையதுமான மங்கையார், Mangaiyaar - திருமங்கையென்னும் நாட்டிலே உள்ளவர்கட்குத் தலைவரும் வாள், Vaal - வாளை உடையவருமான கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார் செம் சொலால் எடுத்த, Sem solaal edutha - செவ்விய சொற்களைக்கொண்டு அருளிச்செய்த தெய்வம், Dheivam - திவ்யமான நல்மாலை இவை, Nal malai ivai - இந்த நல்ல சொல் மாலையை சிக்கென கொண்டு, Sikkena kondu - நாவிலே த்ருடமாகக்கொண்டு தொண்டீர், Thondir - பாகவதர்காள்! துஞ்சும் போது அழைமின், Thunjum pothu azhaimin - சரீரம் முடியுங் காலத்தில் இத்திருநாமங்களைச் சொல்லுங்கோள் துயர்வரில் நினைமின், Thuyarvaril ninaimin - மற்றும் துக்கங்களுண்டான போதும் இவற்றையே நினையுங்கோள் துயர்இலீர் சொல்லிலும் நன்று ஆம், Thuyar ileer sollilum nanru aam - துக்கமொன்று இல்லாதவர்கள் இவற்றை அநுஸத்தித்தாலும் நன்மையாகும் நாராயணா என்னும் நாமம், Narayana ennum namam - நாராயண நாமமானது நம்முடை வினைக்கு, Nammudai vinaikku - நமது பாபங்களை முடிப்பதற்கு நஞ்சு தான் கண்டிர், Nanju thaan kandir - விஷமேயாமென்பது தின்ணம் |
| 967 | பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆழ்வாருடைய சொல்மாலையாகிய இத் திரு மொழியினது அருமையான இனிய இசையைப் பாடவல்ல விலக்ஷண பாகவதர்களுக்கு மஹாபாபங்களொன்றும் கிட்டமாட்டா என்று தலைக் கட்டுகிறார்) 10 | கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறு என்று
பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி எம்பெருமானை
வரி கொள் வண்டு அரை பைம் பொழில் மங்கையர் கலியனதொலி மாலை
அரியவின்னிசை பாடு நல்லடியவர்க்கு அருவினை யடையாவே –1-2-10 | பதவுரை Show / Hideகரியமாமுகில் படலங்கள் அவை, Kariyamamukil Padalangal Avai - கறுத்த மஹாமேகங்களின் கூட்டங்களானவை கிடந்து, Kidandhu - (நீர்க்கனத்தாலே திரிய மாட்டாமல்) ஓரிடத்திலே இருந்து கொண்டு முழங்கிட, Muzhangida - கர்ஜிக்க, (அந்த கர்ஜனையைக் கேட்டு) பெரிய மாசுணம், Periya Maasunam - பெரிய மலைப்பாம்புகளானவை களிறு என்று, Kaliru Endru - (நமக்கு இரையாம்படி) யானைகள் (வருகின்றன) என்று நினைத்து வரை என பெயர்தரு, Varai Ena Peyartharu - மலை பேர்ந்தாற் போலே பெயர்ந்து கிட்ட வருமிடமான பிரிதி, Pridhi - திருப்பிரிதியிலே (எழுந்தருளியிருக்கிற) எம்பெருமானை, Emperumaanai - எம்பெருமானைக் குறித்து வரிகொள் வண்டு அறை பை பொழில் மங்கையர், Varikol Vandu Arai Pai Pozhil Mangaiyar - அழகிய வண்டுகள் ஒலிக்கின்ற விசாலமான சோலைகளையுடைய திருமங்கையிலே உள்ளவர்கட்குத் தலைவரான கலியனது, Kaliyanathu - ஆழ்வாருடைய ஒலிமாலை, Olimaalai - சொல்மாலையாகிய இத் திரு மொழியினது அரிய இன் இசை பாடும், Ariya In Isai Paadum - அருமையான இனிய இசையைப் பாடவல்ல நல் அடியவர்க்கு, Nal Adiyavarkku - விலக்ஷண பாகவதர்களுக்கு அரு வினை அடையா, Aru Vinai Adaiyaa - மஹாபாபங்களொன்றும் கிட்டமாட்டா |
| 977 | பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டுகிற பாசுரம் இது.) 10 | வண்டு தண் தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை
கொண்டு தொண்டர் பாடி யாடக் கூடிடில் நீள் விசும்பில்
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே –1-3-10 | பதவுரை Show / Hideவண்டு, Vandu - வண்டுகளானவை தண் தேன் உண்டு வாழும் வதரி, Than Then Undu Vazhume Vadhari - குளிர்ந்த தேனைப் பருகிக் களித்து வாழுமிடமான ஸ்ரீபதரியில் எழுந்தருளியிருக்கிற நெடு மாலை, Nedu Maalai - ஸர்வேச்ரன் விஷயமாக, கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன், Kandal Veli Mangai Vendan Kalyan - தாழைகளை வேலியாகக் கொண்ட திருமங்கைக்குத் தலைவரான ஆழ்வார் ஒலி, Oli - அருளிச்செய்த மாலை கொண்டு, Malai Kondo - இந்தச் சொல் மாலையைக் கொண்டு தொண்டர், Thondar - பக்திமான்கள் பாடி ஆட கூடிடில், Paadi Aada Koodidil - பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் அநுபவிக்கப் பெற்றால் அவர்க்கு, Avarkku - அப்படிப்பட்ட மஹான்களுக்கு நீள் விசும்பில் அண்டம் அல்லால், Neel Visumbil Andam Allal - பரமகாசத்திலேயுள்ள பரம பதத்தைத் தவிர மற்று ஓர் ஆட்சி அறியோம், Mattru Oru Aatchi Ariyom - வேறொரு லோகமாளப் பெறுதல் இல்லை. |
| 987 | பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டும் பாசுரம் இது.) 10 | வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானை
கரும் கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாயொலி செய்த பனுவல்
வரம் செய்த வைந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி
இரும் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவராகுவர் தாமே –1-4-10 | பதவுரை Show / Hideவரும் திரை மணி நீர் கங்கையின் கரை மேல், Varum Thirai Mani Neer Gangaiyin Karai Mel - (பெரிய வேகத்தோடு) வருகிற அலைகளை யுடைத்தாய் தெளிந்த ஜலத்தை யுடைத்தான கங்கையின் கரை மேல், Gangaiyin Karai Mel - கங்கையின் கரை மேலே வதரியாச்சிராமத்து உள்ளானை, Vathariyachiramaithu Ullanai - ஸ்ரீபதரிகாச்ரமத்தில் எழுந்தருளியிருக்கிற கரு முந்நீர் கடல் வண்ணனை, Karum Munneer Kadal Vannana - கறுத்த மூன்று வகைப்பட்ட நீரையுடைய கடல் போன்ற நிறத்தனான ஸ்ரீமந் நாராயனனை. எண்ணி, Enni - அநுஸந்தித்து கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் வாய் ஒலி செய்த, Vaai Oli Seitha - திருவாய்மலர்ந்தருளிய பனுவல், Panoval - பாசுரமாய் வரம் செய்த, Varam Seitha - சிறந்ததான ஐந்தும் ஐந்தும், Aindhum Aindhum - இப்பத்துப்பாசுரங்களையும் வல்லார்கள் தாம், Vallargal Thaam - ஓதவல்லவர்கள் வெண் குடை கீழ், Ven Kudai Keel - வெண் கொற்றக் குடையின் கீழ் வாழ்ந்து கொண்டு இரு கடல் உலகம் ஆண்டு, Iru Kadal Ulagam Aandu - பெரிய கடல்சூழ்ந்த இப்பூமியை ஆண்டபின் உடன், Udan - அடுத்தபடியாக வானவர் உலகு மருவி, Vaanavar Ulagu Maruvi - ப்ரஹ்மலோக நிர்வாஹகராக இருந்து இமையவர் ஆகுவர், Imaiyavar Aaguvar - (அதன் பிறகு) நித்யசூரியளாகவும் ஆவர்கள். |
| 997 | பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாராவாரும்.) எம்பெருமானுடைய ஸஹஸ்ரநாமங்களை ஸங்கீர்த்தனம் பண்ணுவதும் இந்தத் திருமொழியைக் கற்பதும் துல்ய பலமென்கிறார். 10 | தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத் தடிகளை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
ஆரார் உலகத்தறிவுடையார் அமரர் நன்னாட்டரசு ஆள
பேர் ஆயிரமும் ஒதுமின்கள் அன்றி யிவையே பிதற்றுமினே –1-5-10 | பதவுரை Show / Hideஉலகத்து, Ulagaththu - இவ்வுலகத்திலே அறிவு உடையார் ஆரார், Arivu Udaiyaar Aaraar - விவேகமுள்ளவர்கள் ஆரார் இருக்கிறீர்களோ(அவர்களெல்லீரும்) அமரர் நல் நாடு அரசு ஆள, Amarar Nal Naadu Arasu Aala - நித்யஸூரிகளுடைய வில க்ஷணமான ஸ்ரீவைகுண்டத்தை அரசாளும் படியாக பேர்ஆயிரமும் ஓதுமின்கள், Peraayiramum Othuminngal - (ஸ்ரீ வைகுண்டநாதனுடைய) ஆயிரந் திரு நாமங்களையும் ஓதுங்கள்: அன்றி, Andri - அல்லது, கார் ஆர் புறவில் மங்கை வேந்தன் கலியன், Kaar Aar Puravil Mangai Vendan Kalyan - மேகங்கள் படிந்துள்ள தோட்டங்களையுடைய திருமங்கை நாட்டுக்குத் தலைவரான திருமங்கையாழ்வார் தாரா ஆரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை, Tharaa Aarum Vayal Soozhntha Saalakkiraamathu Adigalai - ஸாரஸபக்ஷிகள் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட ஸ்ரீஸாளக்ராமத்திலே எழுந்தருளியிருக்கு மெம்பெருமான் விஷயமாக ஒலி செய், Oli Sei - அருளிச்செய்த தமிழ்மாலை இவையே, Thamizhmaalai Ivaiye - தமிழ் மாலையாகிய இப்பாசுரங்களையே பிதற்றுமின், Pithatrumin - வாய்வந்தபடி சொல்லுங்கள். |
| 1007 | பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இமையோர் நாதனாகிய இந்திரன் தனது பரிவாரங்களை யெல்லாம் அழைத்து நாம் எல்லாரும் நைமிசாரணியத்துள் சென்று எம்பெருமானை ஸேவிப்போம் வாருங்கள்;) 10 | ஏதம் வந்து அணுகா வண்ண நாம் எண்ணி எழுமினோ தொழுதும் என்று இமையோர்
நாதன் வந்து இறைஞ்சும் நைமி சாரணி யத்து எந்தையைச் சிந்தையுள் வைத்து
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலி செய் மாலை தான் கற்று வல்லார்கள்
ஓத நீர் வையகம் ஆண்டு வெண் குடைக் கீழ் உம்பரும் ஆகுவர் தாமே –1-6-10 | பதவுரை Show / Hideஏதம் வந்து அணுகா வண்ணம், nan - “துக்கங்கள் நம்மிடம் வந்து சேராத வகையை நாம் எண்ணி, nan - நாம் எண்ணியிருப்போமாகில் தொழுதும் எழு மின் என்று, nan - (நைமிசாரண்யத்திலேபோய்த்) தொழுவோம் வாருங்கள்” என்று சொல்லி இமையோர் நாதன் வந்து, nan - தேவேந்திரன் வந்து இறைஞ்சும், nan - ஆச்ரயிக்கப்பெற்ற நைமிச அரணியத்து எந்தையை, nan - நைமிசாரண்யத்தில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானை சிந்தையுள் வைத்து, nan - தியானம் செய்து காதல் மிகுந்த, nan - பகவத்பக்தி அதிகரிக்கப்பெற்ற கலியன், nan - திருமங்கையாழ்வார் வாய் ஒலி செய்மாலை, nan - அருளிச் செய்த இச்சொல் மாலையை கற்று வல்லுநர்கள் தாம், nan - அப்யஸித்துத் தேறினவர்கள் ஓதம்நீர் வையகம், nan - கடல் சூழ்ந்த இப்பூமண்டலத்தை வெண் குடை கீழ் ஆண்டு, nan - வெளுத்த குடை நிழலின் கீழே இருந்துகொண்டு அரசாட்சி செய்தபின்பு உம்பரும் ஆகுவர், nan - நித்யஸூரிகளோடும் சேரப்பெறுவர்கள். |
| 1017 | பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வீரலக்ஷ்மி விளங்குங் கண்களையுடைய சிங்கங் களானவை யானைக்கோடு முதலியவற்றைக் கொண்டு ஸமர்ப்பித்து வணங்குமிட மான சிங்கவேழ் குன்றத்திலே யெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் விஷயமாகத் திருமங்கை மன்னன் அருளிச்செய்த சொல்மாலையை ஓதவல்லவர்கள் தீங்கின்றி வாழ்வார்கள் என்று – இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.) 10 | செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே –1-7-10 | பதவுரை Show / Hideசெம்கண் ஆளி, Semkan Aali - சிவந்த கண்களையுடைய சிங்கங்கள் இட்டு, Ittu - (தமக்குக் கிடைத்த யானைத் தந்தம் முதலியவற்றைத்) திருவடிகளிலே ஸமர்ப்பித்து இறைஞ்சும், Iraichum - வணங்குமிடமான சிங்க வேழ் குன்று உடைய, Singam Vezh Kuntru Udaiya - சிங்கவேழ் குன்றத்தை இருப்பிடமாகவுடையனாய் எங்கள் ஈசன், Engal Eesan - ஸம்ஸாரிகளான நமக்கெல்லார்க்கும் ஸ்வாமியாய் எம் பிரானை, Em Piraanai - நமக்கு உபகாரகனாயுமுள்ள ஸ்ரீ நரஸிம்ஹமூர்த்தி விஷயமாக, இரு தமிழ் நூல் புலவன், Iru Tamil Nool Pulavan - பெரிய தமிழ் சாஸ்த்ரத்தில் வல்லவராய் மங்கை ஆளன், Mangai Aalan - திருமங்கை நாட்டுக்குத் தலைவராய் மன்னு தொல்சீர், Mannu Tholseer - நித்யஸித்தமான ஸ்ரீ வைஷ்ணவலஷ்மியை உடையவராய் வண்டு அறைதார், Vandu Araidhaar - வண்டுகள் படிந்து ஒலி செய்கின்ற மாலையை யணிந்தவராய் செம் கை ஆளன், Sem Kai Aalan - மிக்க உதாரரான கலியன், Kaliyan - ஆழ்வாரருளிச்செய்த செம் சொல் மாலை, Sem Sol Maalai - செவ்விய இச்சொல் மாலையை வல்லவர், Vallavar - ஓதவல்லவர்கள் தீது இலர், Theethu Ilar - தீமை யொன்றுமின்றி நன்மை பெற்றவராவர். |
| 1027 | பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (யௌவனபருவத்திற்குத் தகுதி யாகச் சிவந்த நிறத்தையுடைய கயல்களானவை ஒன்றோடொன்று களித்து விளையாடப்பெற்ற சுனைகளையுடைய திருவேங்கட மலையிலே நித்யவாஸம் செய் தருள்கின்ற பெருமானைக்குறித்துத் திருமங்கைமன்னன் அழகிய தமிழிலே செவ்விய சொல்லாலே அருளிச்செய்த இச்சொல்மாலையைத் தரித்துச் சொல்லவல்லவர்கள் இவ்விபூதியிலுள்ள வளவும் ராஜாதி ராஜர்களாய் விளங்கி, பின்னை நித்திய விபூதிக்கும் நிர்வாஹகராகப் பெறுவர்களென்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.) 10 | செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேம்கடத்துறை செல்வனை
மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள்
சங்கை யின்றித் தரித்து உரைக்க வல்லார்கள் தஞ்சமதாகவே
வங்க மா கடல் வையம் காவலராகி வானுல காள்வரே –1-8-10 | பதவுரை Show / Hideசெம் கயல், Sem Kayal - (இளமையாலே) சிவந்த மீன்கள் திளைக்கும், Thilaikkum - களித்து விளையாடப் பெற்ற சுனை, Sunai - நீர் நிலைகளையுடைய திரு வேங்கடத்து, Thiru Vengadaththu - திருமலையிலே உறை, Urai - நித்யவாஸம் பண்ணா நின்ற செல்வனை, Selvanai - திருமாலைக் குறித்து, மங்கையர் தலைவன் கலிகன்றி, Mangaiyar Thalaivan Kalikanri - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான கலியன் (அருளிச் செய்த) வண் தமிழ், Van Tamil - அழகிய தமிழினாலாகிய செம் சொல் மாலைகள், Sem Sol Maalaigal - சிறந்த சொல் மாலையை சங்கை இன்றி தரித்து உரைக்க வல்லார்கள், Sangai Indri Tharithu Uraikka Vallarhal - ‘இது பலன்தருமோ, தராதோ’ என்கிற ஸந்தேஹமில்லாமல் (விச்வாஸத்துடனே) அப்யஸித்து அநுஸந்திக்க வல்லவர்கள் வங்கம் மா கடல் வையம், Vangam Maa Kadal Vaiyam - கப்பல்கள் நிறைந்த பெரிய கடலால் சூழப்பட்ட பூமண்டலத்திலுள்ளார்க்கு தஞ்சம் அது ஆகவே காவலர் ஆகி, Thanjam Adhu Aagave Kaavalar Aagi - புகலிடமாய்க்கொண்டு அவர்களுக்கு ரக்ஷகராகி (இப்படி லீலாவிபூதியை நிர்வஹித்த பின்பு) வான் உலகு ஆள்வர், Vaan Ulagu Aalvar - பரமபதத்தையும் ஆளப் பெறுவர்கள். |
| 1037 | பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (“கண்ணாவானென்றும் மண்ணோர் விண்ணோர்க்குத், தண்ணார் வேங்கடவிண்ணோர் வெற்பனே” என்றபடி) 10 | கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்
பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே –1-9-10 | பதவுரை Show / Hideஏழ் உலகுக்கு, Ezhu Ulagukku - எல்லா வுலகங்களுக்கும் கண் ஆய், Kan Aay - கண் போன்றவனும் உயிர் ஆய, Uyir Aay - உயிர் போன்றவனும் எம், Em - எமக்காக கார் வண்ணணை, Kaar Vannanaik - மேகம் போன்ற திரு நிறத்தையுடையவனும் விண்ணோர் தாம் பரவும்பொழில் வேங்கடம், Vinnor Thaam Paravumpozhil Vengadam - நித்ய ஸூரிகளும் வந்து துதிக்கப்பெற்ற, சோலை சூழ்ந்த திருமலையிலே வேதியதனை, Vediyathanai - வேத ப்ரதிபாத்யனாய் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமானைக் குறித்து திண் ஆர் மாடங்கள் சூழ் திரு மங்கையர்கோன் கலியன், Thin Ar Maadangal Soozh Thiru Mangaiyarkon Kalyan - திண்ணிய மாடங்கள் சூழ்ந்த திருமங்கையி லுள்ளார்க்குத் தலைவரான கலியன் (அருளிச் செய்த) பண் ஆர் பாடல் பத்தும், Pan Ar Paadal Paththum - பண்ணோடு கூடிய இப்பத்துப் பாசுரங்களையும் பயில்வார்க்கு, Payilvaarakku - ஓதுமவர்களுக்கு பாவங்கள் இல்லை, Paavangal Illai - பிரதிபந்தங்களெல்லாம் தொலைந்து போம். |
| 1047 | பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருமலையிலே வில்லுங்கையுமான வேடர்கள் நிறைந்து கிடப்பது வருணிப்பதன் கருத்து யாதெனில்; ஆழ்வார் மங்களாசாஸநபரராகையாலே தம்மைப்போன்ற மங்களாசாஸநபரர்கள் திருமலையிலே பலருளர் என்றபடி.) 10 | வில்லார் மலி வேங்கட மா மலை மேய
மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை
வல்லார் வர் வானவர் ஆகுவர் தாமே –1-10-10 | பதவுரை Show / Hideவில்லார் மலி, Villaar Mali - வேடர்கள் நிறைந்திருக்கப்பெற்ற வேங்கடம் மாமலை, Vengadam Mamalai - திருவேங்கடமென்னும் சிறந்த மலையிலே மேய, Meya - எழுந்தருளியிருப்பவனும் மல் ஆர் திரள் தோள், Mal Aar Thiral Thol - மிடுக்குமிக்குத் திரண்ட திருத்தோள்களை யுடையவனும் மணிவண்ணன், Manivannan - நீலமணி போன்ற திருநிறத்தையுடையவனுமான அம்மானை, Ammanai - எம்பெருமானைக் குறித்து, கல் ஆர் திரள் தோள், Kal Aar Thiral Thol - மலைபோன்ற திரண்ட தோள்களையுடையரான கலியன், Kaliyan - திருமங்கைமன்னன் சொன்ன, Sonna - அருளிச்செய்த மாலை, Maalai - இச்சொல்மாலையை வல்லாரவர் தாம், Vallaaravar Thaam - ஓதவல்லவர்கள் வானவர் ஆகுவர், Vaanavar Aaguvar - நித்யஸூரிகளாகப் பெறுவர்கள். |
| 1057 | பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருமங்கையில் உள்ளாருக்கு பிரதாநரான ஸ்ரீ ஆழ்வார் இன் தமிழாலே அருளிச் செய்த இப்பத்தும் பாட வல்லார்க்கு பூண்ட வடிமை நித்யமாக செல்லும் தேசத்தை இருப்பிடமாக உடையவர் ஆவர்- என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10 | மின்னு மாமுகில் மேவு தண்திரு வேங்க டமலை கோயில்மேவிய,
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை,
கன்னி மாமதிள் மங்கை யர்க்கலி கன்றி யிந்தமி ழாலு ரைத்த, இம்
மன்னு பாடல்வல் லார்க்கிட மாகும் வானுலகே. –2-1-10 | பதவுரை Show / Hideமின்னும் மா முகில் மேவு, Minnum Maa Mukil Mevu - மின்னுகின்ற காளமேகங்கள் வந்து சேருகிற தண் திரு வேங்கடம் மலை கோயில் மேவிய, Than Thiru Vengadam Malai Koyil Meviyah - குளிர்ந்த திருமலையைக் கோயிலாகக் கொண்டு எழுந்தருளி யிருப்பவனும், அன்னம் ஆய் நிகழ்ந்த, Annam Aay Nigazhndha - ஹம்ஸ ரூபியாய்த் திரு வவதரித்தவனும் அமரர் பெருமானை, Amarar Perumanai - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனுமான பெருமான் விஷயமாக, கன்னி மா மதிள் மங்கையர் கலிகன்றி, Kanni Maa Madi Mangkaiyar Kalikanri - நிலைநின்ற பெரிய மதில்களையுடைய திருமங்கை நாட்டில் உள்ளவர்களுக்குத் தலைவரான ஆழ்வார் இன் தமிழால் உரைத்த, In Tamizhal Uraitha - செவிக்கினிய தமிழ்ப் பாஷையாலே அருளிச்செய்த மன்னு, Mannu - (வேதம்போலே) நித்யமான இப்பாடல், Ippadal - இப்பாசுரங்களை வல்லார்க்கு, Vallarkku - ஓதவல்லவர்களுக்கு வான் உலகு, Vaan Ulagu - பரமபதம் இடம் ஆகும், Idam Aakum - வாஸஸ்தானமாகும். |
| 1067 | பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இங்கே வந்து சாய்ந்த படியாலே பகவத் குணங்கள் நெஞ்சிலே ஊற்றிருந்து சொல்லி அல்லது நிற்க ஒண்ணாதபடி அவை ப்ரேரிக்க பாடின மாலை-இது கற்றார் அண்டத்தை ஆளுகை நிச்சயம் – அவனைப் பற்றியும் இத்தைப் பெறுமத்தனையோ – என்று விரக்தர் ஆனார்கள் ஆகில் அவர்கள் ஆளுமது பரம பதம் —என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10 | இண்டை கொண்டு தொண்டரேத்த எவ்வுள் கிடந்தானை,
வண்டு பாடும் பைபுறவில் மங்கையர் கோன்கலியன்,
கொண்ட சீரால் தண்டமிழ்செய் மாலையீ ரைந்தும்வல்லார்,
அண்ட மாள்வ தாணையன்றே லாள்வ ரருலகே. –2-2-10 | பதவுரை Show / Hideதொண்டர், Thondar - பக்தர்கள் இண்டை கொண்டு, Indai Kondu - புஷ்ப மாலைகளை ஏந்திக் கொண்டு ஏத்த, Aetha - துதிக்கும்படியாக எவ்வுள் கிடந்தானை, Evvul Kidandhaanai - திருவெவ்வுளூரிலே சயனித்தருள்பவனான பெருமான் விஷயமாக, வண்டு பாடும் பை புறவில் மங்கையர்கோன் கலியன், Vandu Paadum Pai Puravil Mangaiyarkon Kalyan - வண்டுகள் களித்துப் பாடா நின்ற விசாலமான சோலைகளையுடைய திருமங்கையிலுள்ளார்க்கு ஸ்வாமியான ஆழ்வார் கொண்ட சீரால், Konda Seeraal - நெஞ்சிலே கொண்ட பகவத் குணங்களாலே தண் தமிழ் செய், Than Tamil Sei - அழகிய தமிழ்ப் பாஷையிலருளிச் செய்த மாலை, Maalai - சொல்மாலையாகிய ஈர் ஐந்தும், Eer Aindhum - இப்பத்துப் பாசுரங்களையும் வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள் அண்டம் ஆள்வது ஆணை, Andam Aalvathu Aanai - இந்த பிரஹ்மாண்டங்களையெல்லாம் செங்கோல் செலுத்தி ஆளப் பெறுவது திண்ணம்; அன்றேல், Andrel - இவ் வுலகங்களை ஆள்வதில் ஆசையற்றவர்களாகில் அமரர் உலகு ஆள்வர், Amarar Ulagu Aalvar - பரமபதந் தன்னையே ஆளப் பெறுவர்கள். அமருலகு, Amarulagu - அமரருவகு. |
| 1077 | பெரிய திருமொழி || (2-3–விற்பெருவிழவும்) (திருவல்லிக்கேணி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை உடைய ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –நித்ய அனுபவம் பண்ணலாம் படியான ஸ்ரீ நித்ய விபூதியைப் ப்ராபிக்க பெறுவர் .) 10 | மன்னுதண் பொழிலும் வாவியும் மதிளும் மாடமா ளிகையும்மண் டபமும்,
தென்னன்தொண் டையர்க்கோன் செய்தநன்மயிலைத் திருவல்லிக் கேணிநின் றானை,
கன்னிநன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க்கலி கன்றி,
சொன்னசொன் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர்வா னுலகே. –2-3-10 | பதவுரை Show / Hideமன்னு தண் பொழிலும், Mannu Than Pozhilum - நித்தியமாய் குளிர்ந்த சோலைகளும் வாவியும், Vaaviyum - நீர் நிலங்களும் மதிளும், Mathilum - மதில்களும் மாடம் மாளிகையும், Maadam Maaligaiyum - மாட மாளிகைகளும் மண்டபமும், Mandapamum - மண்டபங்களும் உண்டாம்படி தென்னன் தொண்டையர்கோன் செய்த, Thennan Thondaiyarkon Seitha - பாண்டிய குலத்தவனான தொண்டைமான் சக்கரவர்த்தி நிருமித்த நல் மயிலை திரு அல்லிக்கேணி நின்றாணை, Nal Mayilai Thiru Allikeni Nindraanai - அழகியமயிலைக்கடுத்த திருவல்லிக்கேணியிலே நின்றளும் பெருமான் விஷயமாக, கன்னி நல் மாடம் மங்கையர்தலைவன், Kanni Nal Maadam Mangaiyarthalaivan - அழிவில்லாத நல்ல மாடங்களையுடைய திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரும் காமரு சீர், Kaamaru Seer - சிறந்த ஸ்ரீவைஷ்ணவலக்ஷ்மியை உடையவருமான கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார் சொன்ன, Sonna - அருளிச்செய்த சொல் மாலை பத்து உடன், Sol Maalai Pattu Udan - சொல்மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையும் வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள் சுகம் இனிதுவான் உலகு, Sukam Inidhuvaan Ulagu - ஆநந்தமயமான பரமபதத்தை ஆள்வர், Aalvar - ஆளப்பெறுவர்கள். |
| 1087 | பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரயண காலத்திலேயே கர்மங்கள் அடைய விட்டோடிப் போம் – அதுக்கு மேலே பிராப்தியும் வேண்டி இருக்கில் அதுவும் அவர்க்கு சுலபமாம் – அன்றிக்கே-பூமிக்கு எல்லாம் தாங்களே நிர்வாஹகராய் ஐஸ்வர்யத்தை அனுபவித்து பின்னையும் திருவடிகளிலே கூடப் பெறுவர்–என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10 | நெடுமாலவன் மேவிய நீர்மலைமேல் நிலவும்புகழ் மங்கையர் கோன்,அமரில்
கடமாகளி யானைவல்லான் கலியன் ஒலிசெய்தமிழ் மாலைவல் லார்க்கு,
உடனே விடுமால்வினை வேண்டிடில் மேலுலகும் எளிதாயிடு மன்றியி லங்கொலிசேர்,
கொடுமாகடல் வையக மாண்டுமதிக் குடைமன்னவ ராயடி கூடுவரே. –2-4-10 | பதவுரை Show / Hideநெடு மால் அவன் மேவிய, Nedu Maal Aavan Meviyai - ஸர்வேச்வரன் நித்யவாஸம் செய்தருளப்பெற்ற (- (ஆல்-அசை.) (பின்பு)) நீர்மலை மேல், Neermalai Mel - திருநீர்மலை விஷயமாக, நிலவும் புகழ், Nilavum Pugazh - நித்யமான புகழையடையரும் மங்கையர்கோன், Mangaiyarkon - திருமங்கைநாட்டி லுள்ளார்க்குத் தலைவரும் அமரில், Amaril - போர்க்களத்திலே கடம் மா களி யானை வல்லான், Kadham Maa Kali Yaanai Vallaaan - மதத்தாலே மிகவும் களித்த யானையை நடத்தவல்லவருமான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் ஒலிசெய், Olisei - அருளிச்செய்த தமிழ் மாலை, Tamizh Maalai - இத்தமிழ்த்தொடையை வல்லார்க்கு, Vallarkku - ஓதவல்லவர்களுக்கு வினை, Vinai - (உள்ள) பாவங்கள் உடனே, Udane - அப்போதே விடும், Vidum - அகன்றொழியும்; வேண்டிடில், Vendidil - அபேக்ஷை யுண்டாகில் மேல் உலகும், Mel Ulakum - சுவர்க்கம் முதலிய மேலுலகங்களின் அநுபவமும் எளிது ஆயிடும், Ezhithu Aayidum - ஸூலபமாகும்; அன்றி, Andri - அதுவுமல்லாமல், இலங்கு ஒலி சேர் கொடு மா கடல் வையகம், Ilangu Oli Ser Kodu Maa Kadal Vaiyagam - விளங்காநின்ற கோஷத்தையுடைய வளைந்த பெரிய கடலால் சூழப்பட்ட பூமியை மதி குடை மன்னவர் ஆய் ஆண்டு, Mathi Kudai Mannavar Aay Aandu - சந்திரனை யொத்த வெண் கொற்றக்குடையை யுடைய ராஜாக்களாய் அரசாண்டு அடி கூடுவர், Adi Kooduvar - அவனது திருவடிகளைக் கிட்டப் பெறுவர்கள். |
| 1097 | பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வாதிகனான புண்டரீகாஷன் என்று தோற்றும் படி கண் வளர்ந்து அருளினவனை ஆயிற்று கவி பாடிற்று – இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –ப்ராக்தமான கர்மங்களை தாங்களே வாசனையோடு போக்க வல்லார் ஆவார்கள் பாபங்களை கூடு பூரித்துக் கொள்ளும் இத்தனை போக்கி எலி எலும்பனான இவனால் இது போக்கிக் கொள்ளலாம் என்றால் -இது கூடுமோ என்னில் –அதில் ஒரு தட்டு இல்லை இது த்ருடம் -என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10 | படநாகத் தணைக்கிடந்தன் றவுணர்கோனைப் படவெகுண்டு மருதிடைப்போய்ப் பழனவேலி,
தடமார்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத் தாமரைக்கண் துயிலமர்ந்த தலைவன்தன்னை,
கடமாரும் கருங்களிறு வல்லான்வெல்போர்க் கலிகன்றி யொலிசெய்த இன்பப்பாடல்,
திடமாக விவையைந்து மைந்தும்வல்லார் தீவினையை முதலரிய வல்லார்தாமெ. –2-5-10 | பதவுரை Show / Hideபடம் நாகம் அணை கிடந்து, Padam Naagam Anai Kidandhu - படங்களையுடைய சேஷசயனத்திலே பள்ளிகொள்பவனும் அன்று, Andru - முன்பொருகால் அவுணர் கோனை படவெகுண்டு, Avaunar Konai Padavegundhu - அசுரர் தலைவனான இரணியனை முடியும்படி சீறினவனும் மருது இடை போய், Maruthu Idai Poi - இரட்டை மருதமரங்களின் நடுவே தவழ்ந்து சென்றவனும் பழனம் வேலி, Pazhanam Veli - நீர் நிலங்களைச் சுற்றிலுமுடைத்தாய் தடம் ஆர்ந்த, Thadam Aarntha - தடாகங்கள் நிறையப்பெற்றதான கடல்மல்லை தலசயனத்து, Kadalmallai Thalasayanaththu - திருக்கடல்மல்லையிலே தாமரை கண்துயில் அமர்ந்த, Thamarai Kanthuyil Amarntha - தாமரைபோன்ற திருக்கண்கள் துயில்கொண்டிராநின்ற தலைவர் தம்மை, Thalaivar Thammai - ஸ்வாமியுமான தலசயனத்துறைவாரைப் பற்றி, கடம் ஆரும் கருகளிறு வல்லான், Kadham Aarum Karugaliru Vallan - மதம்மிக்க பெரிய யானையை நடத்தவல்லவரும் போர் வெல், Por Vel - யுத்தத்திலே வெற்றி பெறுமவருமான கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார் ஒலிசெய்த, Oliseitha - அருளிச்செய்த இன்பம், Inbam - இன்பம் விளைக்கவல்ல இவை ஐந்து ஐந்து பாடலும், Ivai Ainthu Ainthu Paadalum - இப்பத்துப் பாசுரங்களையும் திடம் ஆக, Thidam Aaga - உறுதியாக வல்லார் தாம், Vallaar Thaam - ஓதவல்லவர்கள் தீவினையை, Theevinaiyai - பாவங்களை முதல் அரிய வல்லார், Muthal Ariya Vallaar - வேரறுக்க வல்லவராவர்கள். |
| 1107 | பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷிக்கைக்கு – கையில் வேல் பிடித்தால் போலே ஆயிற்று சேஷத்வத்திலும் -பாகவத சேஷத்வத்தில் நின்றபடி – இத் திருமொழியை அப்யசிக்க வல்லார் –முடியை உடையராய் நாட்டுக்கு அநந்ய பிரதானராய் இருந்துள்ள ஷத்ரியருக்கு பிரதானரான ப்ரஹ்மாதிகளுக்கும் நிர்வாஹகராய் நித்ய ஸூரிகளோடு சத்ருசராகப் பெறுவர்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10 | கடிகமழு நெடுமறுகில் கடல்மல்லைத் தலசயனத்து,
அடிகளடி யேநினையு மடியவர்கள் தம்மடியான்,
வடிகொள்நெடு வேல்வலவன் கலிகன்றி யொலிவல்லார்,
முடிகொள்நெடு மன்னவர்தம் முதல்வர்முத லாவாரே. –2-6-10 | பதவுரை Show / Hideகடி கமழும் நெடுமறுகின், Kadi Kamazhum Nedumarugin - பரிமளம் வீசுகின்ற நீண்ட வீதிகளையுடைய கடல்மல்லை தலசயனத்து, Kadalmallai Thalasayanaththu - திருக்கடல்மல்லையி லெழுந்தருளியிருக்கிற அடிகள், Adigal - எம்பெருமானுடைய அடியேநினையும், Adiyeninaiyum - திருவடிகளையே தியானிக்கின்ற அடியவர்கள் தம், Adiyavarkal Tham - பாகவதர்கட்கு அடியான், Adiyan - தாஸபூதரும். வடிகொள் நெடு வேல் வலவன், Vadikol Neduveel Valavan - கூர்மை பொருந்திய பெரிய வேலைக்கொண்டு பொருவதில் வல்லவருமான கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வாருடைய ஒலி, Oli - இவ்வருளிச்செயலை வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள், முடி கொள் நெடு மன்னவர் தம் முதல்வர் முதல் ஆவார், Mudi Kol Nedumannar Tham Muthalvar Muthal Avar - கிரீடமணிந்த ராஜாதி ராஜர்களுக்கும் தலைவராகப் பெறுபவர்கள். |
| 1117 | பெரிய திருமொழி || (2-7–திவளும்) (திருவிடவெந்தை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அறிவு குடி போய் நோவு பட தமக்கு அறிவு கொடுத்த அவதாரங்களை நினைக்கிறார் அவதாரங்களுக்கு பிற்பட்டவர்கள் உடைய இழவு தீர்க்கைக்காக ஸ்ரீ திருவிடவெந்தையில் வந்து நிற்கிற உபகாரகனை யாயிற்று கவி பாடிற்று – இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –பிராரப்த கர்மாக்களை வாசனையோடு போக்கப் பெறுவார்கள் தாம் மோஹிப்பது உணர்வதாக திருத் தாயார் கூப்பிடுவதாக வேண்டாதபடி பகவத் அனுபவமே யாத்ரையான தேசத்திலே புக்கு அனுபவிக்கப் பெறுவார்கள் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10 | அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆயஎம் மாயனே !அருளாய்,
என்னுமின் தொண்டர்க் கின்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை,
மன்னுமா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள்,
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்றறுப் பாரே! –2-7-10 | பதவுரை Show / Hideஅன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய, Annamum Meenum Aamaiyum Ariyum Aaya - “ஹம்ஸரூபியாகவும் மத்ஸ்யரூபியாகவும் கூர்மரூபியாகவும் நரஸிம்ஹரூபியாகவும் திருவவதரித்த எம் மாயனே, Em Maayaney - எம்பெருமானே! அருளாய் என்னும், Arulai Ennum - “கிருபை பண்ணவேணும்”. என்று பிரார்த்திக்கின்ற இன் தொண்டர்க்கு, In Thondarkku - பரமபக்தர்களுக்கு இன் அருள் புரியும், In Arul Puriyum - பரம க்ருபையைச் செய்தருள்கின்ற. இடவெந்தை எந்தைபிரானை, Idaventhai Endhaipiraanai - திருவிடவெந்தைப் பெருமான் விஷயமாக, மன்னு மா மாடம் மங்கையர்தலைவன், Mannu Maa Maadam Mangaiyarthalaivan - சாச்வதமான பெரிய மாடங்களையுடைய திருமங்கையிலுள்ளார்க்குத் தலைவரும் மானம் வேல், Maanam Vel - சிறந்த வேலாயுதத்தையுடையவருமான கலியன், Kaliyan - ஆழ்வார் வாய் ஒலிகள் பன்னிய, Vaai Oligal Panniya - விஸ்தரித்த அருளிச்செய்த பனுவல், Panoval - இப்பாசுரங்களை பாடுவார், Paaduvaar - பாடுமவர்கள் நாளும், Naalum - எந்நாளும் பழ வினை பற்று அறுப்பார், Pazha Vinai Patru Aruppaar - கல்மஷ ஸம்பந்தமற்றிருப்பர்கள். |
| 1127 | பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உருவு வெளிப்பாட்ட்டாலே அனுபவித்து பிறருக்கு இருந்து சொல்ல வேண்டாதே நித்ய அனுபவம் பண்ணிக் களிக்கலாம் தேசத்திலே புகப் பெறுவர் என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10 | மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும் நீள்முடி மாலை வயிரமேகன்,
தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி அட்ட புயகரத் தாதிதன்னை,
கன்னிநன் மாமதிள் மங்கைவேந்தன் காமரு சீர்க்கலி கன்றி,குன்றா
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை யேத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே. –2-8-10 | பதவுரை Show / Hideதொண்டையர்கோன், Thondaiyarkon - தொண்டை மண்டலத்திலுள்ளவர்கட்குத் தலைவனான மன்னவன், Mannavan - அரசனாலே வணங்கும், Vanangum - வணங்கப்பட்ட நீள்முடி மாலை, Neelmuti Maalai - நீண்ட திருவபிக்ஷேகத்தையுடைய ஸர்வேச்வரனாயும், வயிரமேகன் தன் வலி, Vayiramegan Than Vali - வயிரமேகனென்னும் பிரபுவின் பராக்கிரமும் கீர்த்தியும் மலிந்த புகழ் சூழ்ந்த கச்சி, Pugazh Soozhntha Katchi - காஞ்சிபுரியிலே அட்டபுயகரத்து, Attapuyakarathu - திருவட்டபுயகரத்திருப்பதியிலே எழுந்தருளியிருப்பவனாயுமுள்ள ஆதிதன்னை, Aadhithannai - முதல்வனான எம்பெருமானைக்குறித்து கன்னி நல் மாமதிள் மங்கை வேந்தன், Kanni Nal Maamathil Mangai Vendan - அழிவற்ற நல்ல பெரிய மதிள்களையுடைய திரு மங்கைக்குத் தலைவரும் காமரு சீர், Kaamaru Seer - விரும்பத்தக்க குணங்களையுடையவருமான கலிகன்றி, Kalikanri - கலியன் குன்றா இன் இசையால் சொன்ன, Kundraa In Isaiyaal Sonna - குறைவில்லாத இனிய இசையுடனே அருளிச்செய்த செம் சொல் மாலை, Sem Sol Maalai - அழகிய இச்சொல் மாலையைக்கொண்டு ஏத்த வல்லார்க்கு, Aetha Vallarukku - (எம்பெருமானைத்) துதிக்க வல்லவர்களுக்கு இடம் வைகுந்தம், Idam Vaikundham - இருப்பிடம் வைகுண்டமாகும். |
| 1137 | பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பகவத் குணங்கள் நெருங்கத் தொடுத்த செவ்விய தமிழ்த் தொடை வல்லார் பெரிய பிராட்டியார் உடைய கடாஷத்தாலே லோகத்திலே மகா ரதராய் கடல் சூழ்ந்த பூமியை அடைய ஆண்டு – உஜ்ஜ்வலர் ஆவார்கள்-இந்த ஐஸ்வர்யம் அடைய மலடாய் போகாமே இவரைப் போலே பாகவத சேஷமாக்கப் பெறுவார் என்கிறார் பத்தாம் பாசுரத்தில் ஆக இத்திரு மொழியால் சர்வேஸ்வரன் விரும்பும் நிலம் ஆகையாலே இத்தேசம் ஆஸ்ரயணீயம் என்றும் அது தான் சர்வ சமாஸ்ரயணீயம் என்றும் சொல்லிற்று ஆயிற்று – அதாகிறது சமதமாத்யுபேதர்க்கு இறே ஆஸ்ரயணீ யத்தில் அதிகாரம் உள்ளது – அவை இல்லாதவனும் தம் தானாய் ஆஸ்ரயிக்கும் படியான தேசம் இறே) 10 | பார்மன்னு தொல்புகழ்ப் பல்லவர்கோன் பணிந் தபர மேச்சுர விண்ணகர்மேல்,
கார்மன்னு நீள்வயல் மங்கையர் தந்தலை வன்கலி கன்றிகுன் றாதுரைத்த,
சீர்மன்னு செந்தமிழ் மாலைவல்லார்த் திரு மாமகள் தன்னரு ளால்,உலகில்
தேர்மன்ன ராயொலி மாகடல்சூழ் செழு நீருல காண்டு திகழ்வர்களே. –2-9-10 | பதவுரை Show / Hideபார்மன்னு தொல் புகழ், Paarmannu Thol Pugazh - இப்பூமியிலே நிலைத்து நின்ற பெரும்புகழையுடைய பல்லவர்கோன், Pallavarkon - பல்லவராஜன் பணிந்த, Panintha - கைங்கரியங்கள் செய்யப்பெற்ற பரமேச்சுரவிண்ணகரிமேல், Paramechuravinnagarimeel - பரமேச்சுரவிண்ணகர மென்னும் திருப்பதி விஷயமாக கார்மன்னு நீள்வயல், Kaarmannu Neelvayal - சினைகொண்ட பெரிய கழனிகளையுடைய மங்கையர்தம்தலைவன், Mangaiyarthamthalaivan - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான கலிகன்றி, Kalikanri - கலியன் குன்றாது, Kunraathu - இலக்கணக் குறையொன்றுமின்றி உரைத்த, Uraitha - அருளிச்செய்த சீர்மன்னு செம் தமிழ் மாலை, Seermannu Sem Tamil Maalai - அழகு பொருந்திய செந்தமிழினாகிய இப்பாமாலைகள் வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள் திரு மா மகள் தன் அருளால், Thiru Maa Magal Than Arulaal - பெரிய பிராட்டியாருடைய கிருபையினால் உலகில், Ulagil - இவ்வுலகத்திலே தேர்மன்னர் ஆய், Thermannar Aay - தேரை நடத்தவல்ல அரசர்களாகி ஒலி மா கடல் சூழ், Oli Maa Kadal Soozh - ஆரவாரிக்கின்ற பெரிய கடலாலே சூழப்பட்ட செழு நீர்உலகு, Sezhu Neerulagu - செழிப்பான நீர்மையையுடைய உலகையெல்லாம் ஆண்டு, Aandu - ஆண்டுகொண்டு திகழ்வர்கள், Thigalvargal - விளங்குவார்கள். |
| 1147 | பெரிய திருமொழி || (2-10–மஞ்சாடு) (திருக்கோவலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பத்தையும் அப்யசிக்க வல்லவர்கள் –ஐஸ்வர்யாத்துக்காகவும் ஆத்ம பிராப்திக்காகவும் பகவத் பிராப்திக்காகவும் லோகத்தில் உள்ளார் திரண்டு ஆஸ்ரயிக்க- ஆஸ்ரயித்த போதே ஆஸ்ரயித்தார் அபேஷிதத்தை கொடுக்கைக்காக எங்கும் புக்கு வியாபித்து அந்யைரத்ருஷ்டனாய்-நம்மை ஆஸ்ரயிப்பாரோ என்று அவசர பிரதீஷனாய் நிற்கிறவனைக் காணப் பெறுவார்- என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10 | வாரணங்கொ ளிடர்க்கடிந்த மாலை நீல மரதகத்தை மழைமுகிலே போல்வான்றன்னை,
சீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவ லூரதனுள் கண்டேன், என்று
வாரணங்கு முலைமடவார் மங்கை வேந்தன் வாட்கலிய னொலியைந்து மைந்தும் வல்லார்,
காரணங்க லாலுகங் கலந்தங்க் கேத்தக் கரந்தெங்கும் பரந்தானைக் காண்பர் தாமே. –2-10-10 | பதவுரை Show / Hideவாரணம் கொள் இடர் கடிந்த மாலை, Vaaranam Kol Idar Kadintha Maalai - கஜேந்திராழ்வானடைந்த துக்கத்தைப் போக்கின பெருமானும் (- (என்ன பலனைப் பெறுவர்களெனில்)) நீலம் மரதகம் மழை முகில்போல்வான் தன்னை, Neelam Maradhagam Mazhai Mukilpolvan Thannai - கருநெய்தற்பூ, மரகதப்பச்சை, குளிர்ந்தமேகம் ஆகிய இவற்றை யொத்தவனுமான கோபாலனை சீர், Seer - ஆத்ம குணங்களாலே அணங்கு, Anangu - (அனைவரும்) ஆசைப்படக்கூடிய மறையாளர், Maraiyalar - வைதிகரிகள் நிறைந்த செல்வம், Niraindha Selvam - நிறைந்திருக்கையாகிற அழகு பொருந்திய திரு கோவலூர்அதனுள், Thiru Kovalooradhanul - திருக்கோவலூரென்னுந் திருப்பதியிலே கண்டேன் என்று, Kandeen Endru - ஸேவிக்கப்பெற்றேனென்று, வார்அணங்கு முலை மடவார்மங்கை, Vaaranangu Mulai Madavarmangai - கச்சினால் அழகுபெற்ற முலைகளையுடைய மாதர்நிறைந்த திருமங்கை நாட்டுக்கு வேந்தன், Vendhan - தலைவரும் வாள், Vaal - வாட்படையை நிருபகமாகவுடையருமான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிற்செய்த ஐந்தும் ஐந்தும், Aindhum Aindhum - இப்பத்துப் பாசுரங்களையும் வல்லார்தாம், Vallaartham - ஓதவல்லவர்கள், உலகம், Ulagam - உலகத்திலுள்ள பலவகையதிகாரிகள் காரணங்களால், Kaaranangalal - தங்கள் தங்களுக்கு இஷ்டமான பலன்களைப் பெற வேண்டியகாரணத்தினால் கலந்து, Kalandhu - திரண்டு வந்து ஏத்த, Aetha - துதிக்க கரந்து ஏங்கும் பரந்தானை, Karandhu Aengum Parandhanai - ஒருவர்க்கும் க்ரிணவொண்ணாதபடியிருந்து எல்லாவிடங்களிலும் வியாபித்திருக்கின்ற பரமாத்மாவை காண்பர், Kaanbar - ஸேவிக்கப்பெறுவர்கள். |
| 1157 | பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வ நியந்தாவாய் ஆயிற்று –ஆபத் சகனும் ஆயிற்று-தேவானாம் தனவாநாஞ்ச-என்கிறபடியே தன்னாலே ஸ்ருஜ்யரான இவர்கள் இரண்டு திறத்தாருக்கும் ஒத்து இருக்கையாலே தம்தாமுடைய அபேஷித சித்திக்காக தேவர்களும் அசுரர்களும் அடைய சென்று ஆஸ்ரயிகலாம் படி திருவயிந்திரபுரத்தில் நித்ய வாசம் பண்ணி அத்தாலே பரம பதத்தில் காட்டிலும் உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை எல்லாம் இல்லை இறே பரமபதத்தில் இவர்களுக்கு அபேஷிதம் விதானம் பண்ணுகையால் வந்த ஏற்றம் உண்டு இறே இங்கு- பாடிட-பாப அனுபவம் பண்ணுகைக்காக இறே சம்சாரத்தில் பிறக்கிறது அத்தை அனுபவிக்க வந்த இத் தேசத்தில் இத்தை அதிகரிக்கில் அவை தாம் நமக்கு இருப்பிடம் இல்லை என்று விட்டு ஓடிப் போம்) 10 | மூவராகிய ஒருவனை மூ வுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்சத் தண் திருவயிந்திரபுரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலி கன்றி விரித்து உரைத்த
பாவு தண் தமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே –3-1-10 | பதவுரை Show / Hideமூவர் ஆகிய ஒருவனை, Moovar Aagiya Oruvanai - தானொருவனே மும்மூர்த்தியாக உருவெடுத்து முத்தொழில் நிகழ்த்துமவனாய மூ உலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை., Moovulagu Undu Umizhndhu Alandhanai - (பிரளயகாலத்தில்) மூன்று லோகங்களையும் உட்கொண்டு (பிறகு) வெளிப்படுத்தி (மற்றொருகால் திரிவிக்கிரமனாகி) அளந்தவனாய் தேவர் தானவர் சென்றுசென்று இறைஞ்ச, Thevar Thanavar Senru Senru Irainja - தேவரும் தானவரும் வந்து வந்து வணங்கலாம்படி தண்திரு அயிந்திராபுரத்து மேவு சோதியை, Thanthiru Ayindhirapurathu Mevu Sothiyai - குளிர்ந்த திருவயிந்திரபுரத்திலே நித்யவாஸம் பண்ணுகிற பரஞ்சோதியான பெருமானைக்குறித்து வேல் வலவன் கலிகன்றி, Vel Valavan Kalikanri - வேல் பிடிக்கவல்ல திருமங்கை மன்னன் விரித்து உரைத்த, Virithu Uraitha - விரிவாக அருளிச்செய்த பாவு தன் தமிழ் இவை பத்து பாடிட, Paavu Than Tamil Ivai Paththu Paadida - அழகிய விஸ்தார கவியாக அமைந்த இப்பத்துப் பாசுரங்களையும் பாடியநுஸந்திக்குமளவில் பாவங்கள் பயிலா பாவங்கள் சேரமாட்டா. |
| 1167 | பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரம உதாரரான ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் குறையாத ஓசை உடைத்தாக அருளிச் செய்த ஸ்ரீ திரு மொழி பத்தும் வல்லார் ப்ருதீவி பிரசுரமான லோகத்தை அளந்த திருவடிகளில் கீழே காலம் எல்லாம் வர்த்திக்கும்படி வாழ்வர்) 10 | சீரார் பொழில் சூழ்ந்து அழகாய தில்லைத் திருச் சித்ரகூடத்துறை செங்கண் மாலுக்கு
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும்
காரார் புயல் கைக் கலிகன்றி குன்றா வொலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்
பாரார் உலகம் அளந்தான் அடிக் கீழ்ப் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே –3-2-10 | பதவுரை Show / Hideசீர்ஆர்பொழில் சூழ்ந்து அழகாய தில்லை திரு சித்ர கூடத்து, Seeraarpozhil Soozhndhu Azhagaya Thillai Thiru Chithra Koodaththu - சிறந்த சோலைகளால் சூழப்பட்டு அழகுபெற்ற தில்லைத் திருச்சித்திர கூடத்திலே உறை செங்கண் மாலுக்கு, Urai Chengkan Malukku - நித்யவாஸம் பண்ணுகிற புண்டரி காக்ஷனான பெருமான் விஷயமாக, ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப, Aaradha Ullaththavar Kaettu Uvappa - எவ்வளவு பகவதநுபவம் பண்ணினாலும் திருப்தி பிறவாத நெஞ்சை யுடையரான அன்பர்கள் கேட்டு ஆநந்திக்கும்படி, அலைநீர்உலகுக்கு அருளே புரியும், Alainirulakukku Arule Puriyum - கடல் சூழ்ந்த இவ்வுலகத்திலுள்ளார்க்கு அருள் செய்யுமவராய் கார்ஆர்புயல் கை கலிகன்றி, Kaararpuval Kai Kalikanri - காளமேகம்போல் உதாரரான திருமங்கையாழ்வார் (அருளிச்செய்த) குன்றா ஒலி மாலை ஓர்ஒன்பதோடு ஒன்றும் வல்லார்தாம், Kundraa Oli Maalai Ooronpathodu Ondrum Vallartham - குறையாத ஓசையை யுடைத்தான சொல்மாலையாகிய் இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கள், பார்ஆர்உலகம் அளந்தான் அடி கீழ், Paararulakham Alandhaan Adi Keezh - பூமியையும் ஸ்வர்க்காதிலோகங்களையும் அளந்தவனான பெருமானுடைய திருவடிவாரத்திலே பல காலம் நிற்கும்படி வாழ்வர், Pala Kaalam Nirkkumpadi Vaalvar - நெடுங்காலம் அடிமைசெய்து நிற்கும்படி வாழப் பெறுவர். |
| 1177 | பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சத்ருக்கள் சரீரமே தனக்கு உறையாக உடைய வேலை உடைய ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த அழகிய தமிழான இப்பத்தும் அப்யசித்தவர்கள் பக்கலில் அவர்கள் பண்ணின பாபம் பல அனுபவத்துக்கு சாரா) 10 | தேனமர் பூம் பொழில் தில்லைச் சித்திர கூடம் அமர்ந்த
வானவர் தங்கள் பிரானை மங்கையர் கோன் மருவார்
ஊனமர் வேல் கலி கன்றி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்
தானிவை கற்று வல்லார் மேல் சாரா தீ வினை தானே –3-3-10 | பதவுரை Show / Hideதேன் அமர் பூ பொழில் தில்லை சித்திரகூடம் அமர்ந்த, Then Amar Poo Pozhil Thillai Chithirakoodam Amarntha - வண்டுகள் மொய்த்து அழகிய சோலைகளையுடைய தில்லைத்திருச் சித்திரகூடத்திலே நித்யவாஸஞ் செய்தருள்கிற வானவர் தங்கள் பிரானை, Vaanavar Thangal Piraanai - தேவாதிதேவன் விஷயமாக, மங்கையர்கோன், Mangaiyarkon - திருமங்கையிலுள்ளார்க்குத் தலைவரும் மருவார்ஊன் அமர்வேல், Maruvaroon Amarveel - எதிரிகளின் சரிரத்திலே பொருந்தித் தைக்கும் வேற்படையையுடைய வருமான கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார்(அருளிச் செய்த) ஒண் தமிழ் இவை ஒன்பதோடு ஒன்றும், On Tamil Ivai Onpathodu Ondrum - அழகிய தமிழினாலாகிய இப்பத்துப் பாசுரங்களையும் கற்று வல்லார்மேல், Kattru Vallarmeel - ஓதித் தேறினவர்களிடத்தில் தீவினை சாரா, Theevinai Saara - பாவங்கள் கிட்டமாட்டா |
| 1187 | பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாயந்தே தேவரைக் கவி பாட என்று துடங்கி தம்மைக் கவி பாடிக் கொண்டார் என்ன – அதுவும் நம்மை அன்றோ சொல்லிற்று என்று திரு உள்ளம் ஆனார் ஸ்ரீ சர்வேஸ்வரனைப் போலே எல்லார்க்கும் தாங்களே ஆஸ்ரயணீயராவார்) 10 | செங்கமலத் தயன் அனைய மறையோர் காழிச் சீராம விண்ணகர் என் செங்கண் மாலை
அங்கமலத் தடம் வயல் சூழ் ஆலிநாடன் அருள்மாரி யரட்டமுக்கி யடையார்சீயம்
கொங்குமலர் குழலியர் கோன் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன
சங்க முத்தமிழ் மாலை பத்தும் வல்லார் தடம் கடல் சூழ் உலக்குக்கு தலைவர் தாமே –3-4-10 | பதவுரை Show / Hideசெங்கமலத்து அயன் அனைய மறையோர், Chengamalathu Ayan Anaiya Maraiyor - (திருநாபிக்) கமலத்திற் பிறந்த பிரமனையொத்த வைதிகரிகள் வாழ்கிற காழி சீராம விண்ணகரின், Kaazhi Seeraama Vinnagarin - காழிச் சீராம விண்ணகரத்திலுள்ள செங் கண் மாலை, Cheng Kan Maalai - செந்தாமரை போற் கண்ணனான பெருமான் விஷயமாக அம் கமலம் தடம் வயல் சூழ் ஆலி நாடன், Am Kamalam Thadam Vayal Soozh Aali Naadan - அழகிய தாமரைத்தடாகங்களையுடைய வயல்களால் சூழப்பட்ட திருவாலி நாட்டுக்குத் தலைவரும் அருள் மாரி, Arul Maari - (பக்தர்கட்கு) அருளைப் பொழியும் மேகம் போன்றவரும் அரட்டு அமுக்கி, Arattu Amukki - தீங்கு செய்யுமவர்களைத் தலையெடுக்க வொட்டாதே அமுங்கச் செய்பவரும் அடையார்சீயம், Adaiyaarcheeyam - சத்ருக்களுக்கு ஸிம்ஹம் போன்றவரும் கொங்கு மலர்குழலியர்வேள், Kongu Malarkuzhaliyarveel - தேன்மிக்க பூக்களையணிந்த கூந்தலையுடைய மாதர்க்கு விரும்பத்தக்கவரும் மங்கை வேந்தன், Mangai Vendan - திருமங்கைக்கு நிர்வாஹகரும் பரகாலன், Parakaalan - எதிரிகட்கு யமன் போன்றவரும் கொற்றம் வேல், Kotrama Veel - வெற்றி பொருந்தியவேற்படையை யுடையவருமான கலியன், Kaliyan - ஆழ்வார் சொன்ன, Sonna - அருளிச் செய்த சங்கம் முகம் தமிழ் மாலை பத்தும் வல்லார்தாம், Sangam Mukam Tamil Maalai Pathum Vallaartaam - (புலவர்) கூட்டங்கூடிக் கொண்டாடத் தகுந்த தமிழ்ப் பாசுரங்களான இப்பத்தையும் ஓதவல்லவர்கள் தட கடல் சூழ் உலகுக்கு தலைவர், Thada Kadal Soozh Ulagukku Thalaivar - பரந்த கடலால் சூழப்பட்ட உலகத்திலுள்ளார்க்கெல்லாம் மேலாயிருக்கப் பெறுவர். |
| 1197 | பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதில் உண்டான ஆதராதி அதிசயத்தாலே விட மாட்டாமை பிரித்து பிரித்து அருளிச் செய்கிறார்) 10 | புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ் தென்னாலி யிருந்த மாயனை
கல்லின் மன்னு திண தோள் கலியன் ஒலி செய்த
நல்ல இன்னிசை மாலை நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று தாம் உடனே
வல்லராய் யுரைப்பார்க்கு இடமாகும் வானுலகே –3-5-10 | பதவுரை Show / Hideவண்டு புல்லி அறையும் பொழில் சூழ், Vandu Pulli Arayum Pozhil Soozh - வண்டுகளானவை ஒன்றோடொன்று அணைந்து இசைலே சுற்றிலுஞ் சூழப்பட்ட தென் ஆலி இருந்த மாயனே, Then Aali Irundha Maayane - திருவாலியிலே எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் விஷயமாக, கல்லின் திண் மன்னு தோள், Kallin Thin Mannu Thol - மலைபோலே திடமாயும் நித்யனாயு மிருக்கிற தோள்களையுடைய கலியன் ஒலி செய்த, Kalyan Oli Seidha - திருமங்கை யாழ்வார்அருளிச்செய்த நல்ல இன் இசை மாலே நாலும் ஓரைந்தும் ஒன்றும், Nalla In Isai Maale Naalum Ooraindhum Ondrum - அழகிய இனிய இசையை யுடைத்தான சொல்மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையும் நவின்று, Navindru - அபயளித்து தாம் உடன் வல்லராய் உரைப்பார்க்கு, Thaam Udan Vallarai Uraipaarakku - அர்த்தாநுஸந்தாகம் பண்ணிக் கொண்டுரைக்கு மவர்கட்கு வான் உலகு இடம் ஆகும், Vaan Ulaku Idam Aakum - பரமபதம் இருப்பிடமாகும். |
| 1207 | பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெடுமாலை –தூது விடவும் வார்த்தை சொல்லவும் மாட்டாதே நிற்கிறான் போலே காணும் தூது விட மாட்டாத படி யாயிற்று அத்தலை பட்டுக் கிடக்கிறது – இத்தலை ஊர்த்த்வம் மாசான் நா ஜீவிஷ்யதே -என்றால்-ந ஜீவேயம் -என்னும் அத்தனை இறே அத்தலை – அவன் சேஷித்வ சூசகமாக திரு ஆழியைப் பிடித்தால் போலே ஆயிற்று இவர் சேஷத்வ சூசகமாக திரு வேலைப் பிடித்த படி -சேவகனுக்கு வேல் நிரூபகம் என்றது ஆயிற்று – சர்வேஸ்வரனைப் பிரிந்து தூது விடப் புக்கு-அது தானும் கூட மாட்டாதே படும் வியசனம் பட வேண்டா – இப்பத்தையும் அப்யசித்தாருக்கு தூது விடுவான் அவன் தான் ஆயிற்று) 10 | மையிலங்கு கருங்குவளை மருங்கலரும் வயலாலி
நெய்யிலங்கு சுடராழிப் படையானை நெடுமாலை
கையிலங்கு வேல் கலியன் கண்டுரைத்த தமிழ் மாலை
ஐயிரண்டும் இவை வல்லார்க்கு அருவினைகள் அடையாவே –3-6-10 | பதவுரை Show / Hideகை இலக்கு வேல் கலியன், Kai Ilakku Vel Kalyan - கையில் விளங்குகின்ற வேலையுடைய திருமங்கையாழ்வார், மை இலங்கு கரு குவளை, Mai Ilangu Karu Kuvalai - மைபோல் விளங்குகின்ற கறுத்த குவளை மலர்கள் மருங்கு அலரும் வயல், Marungu Alarum Vayal - ஸமீபங்களிலே விகஸிக்கப் பெற்ற கழனிகளையுடைய ஆலி, Aali - திருவாலியிலே இருக்கிற நெய் இலங்கு சுடர் ஆழி, Ney Ilangu Sudar Aazhi - நெய் பூசப்பட்டு விளங்குகின்றதும் சுடரையுடையதுமான படையானை, Padaiyaanai - சக்கரத்தை ஆயுதமாகக் கொண்டுள்ள நெடு மாலை, Nedu Maalai - ஸர்வேச்வரனை கண்டு உரைத்த, Kandu Uraitha - ஸேவித்துக் சொன்ன தமிழ் மாலை, Tamil Maalai - தமிழ்த் தொடைகளான இவை ஐ இரண்டும், Ivai Ai Irandum - இப்பத்துப் பாசுரங்களையும் வல்லார்க்கு, Vallarkku - ஓதவல்லவர்களுக்கு அரு வினைகள், Aru Vinaigal - துஷ்கருமங்கள் அடையா, Adaiyaa - சேரமாட்டா. |
| 1217 | பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பத்தும் சஹ்ருதயமாக கற்க வல்லாருக்கு பரம பதம் நிச்சிதம் –தாயார் தனி வழியே போனாள் என்று பயப்பட வேண்டா – ஆதி வாஹிக கணத்தோடு தானே வழி காட்டிப் போம்) 10 | தாய் மனம் நின்று இரங்கத் தனியே நெடுமால் துணையா
போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர் என்று
காய்சின வேல் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை பத்தும்
மேவிய நெஞ்சுடையார் தஞ்சமாவது விண்ணுலகே –3-7-10 | பதவுரை Show / Hideதாய், Thaai - தாயானவள் நின்று மனம் இரங்க, Ninru Manam Irangka - வயிறொயி நிற்க தனியே, Thaniye - தாயினிடம் சொல்லாமல் தன் இஷ்டப்படியே நெடு மால் துணை ஆ, Nedu Maal Thunai Aa - ஸர்வேச்வரனைத் துணையாகக் கொண்டு போயின, Poyin - புறப்பட்டுப் போன பூ கொடியாள், Poo Kodiyal - அழகிய கொடிபோன்ற என் மகளும் (அவனும் ஆகிய இருவரும்) புனல் ஆலி, Punal Aali - நீர்வளம் மிக்க திருவாலியிலே புருவர் என்று, Puruvaar Endru - சென்று சேர்ந்திருப்பர்களோ என்று சிந்தைப்படுவதாக காய் சினம் வேல் கலியன், Kaai Sinam Vel Kalyan - எதிரிகளைத் தபிக்கச் செய்கின்ற கோபத்தையும் வேலையுமுடையரான திருமங்கையாழ்வார் ஒலிசெய், Olisei - அருளிச்செய்த தமிழ் மாலை பத்தும், Tamil Maalai Pathum - இத்தமிழ்ப் பாமாலை பத்தையும் மேவிய நெஞ்சு உடையார், Meviya Nenju Udaiyaar - (கற்க) விரும்பும் மனமுடைய வர்கட்கு விண் உலகு, Vin Ulagu - பரமபதம் தஞ்சம் ஆவது, Thanjam Aavathu - ப்ராப்யபூமியாம். |
| 1227 | பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத் திருமொழிக்கு கற்றாருக்கு பலம் சொல்லுகிறது –அனுகூல பிரதி கூல சீலர் என்று வாசி அன்றிக்கே லோகமாக தங்கள் காலிலே வந்து விழும்படி மத்தகத்தின் மேல் ஏறி கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலராய் – ஷத்ரிய ஜன்மத்திலே பிறந்து வந்து பூமிக்கு தாங்களே நிர்வாஹகராய் ஆகாசத்திலே சென்று கிட்டும் படியாக முத்துக் குடையின் கீழே கடல் சூழ்ந்த பூமியை ஆண்டு விரும்பப் படுவர்-நிரதிசய ப்ரீதி உடையார் ஆவார்கள் – ஐஸ்வர்யத்தை புருஷார்த்தமாக சொல்லுவான் என் என்று ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ பட்டரைக் கேட்க ஸ்ரீ ஈச்வரனே ஆகிலும் ஒரு கால் பிறந்து அபிஷேகம் பண்ண அமையும் ஸ்ரீ பாகவத சேஷம் ஆகலாம் ஆகில் என்று காணும் ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் இருப்பது -என்று அருளிச் செய்து அருளினார்) 10 | வண்டார் பொழில் சூழ்ந்து அழகாய நாங்கூர் மணி மாடக் கோயில் நெடுமாலுக்கு என்றும்
தொண்டைய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்
கண்டார் வணங்கக் களியானை மாதே கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலராய்
விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ் விரி நீர் உலகாண்டு விரும்புவரே –3-8-10 | பதவுரை Show / Hideஎன்றும் தொண்டு ஆய தொல் சீர்வயல் மங்கையர்கோன் கலியன, Endrum Thondu Aaya Thol Seervayal Mangaiyarkon Kaliyana - நித்ய கைங்காரியம் செய்வதையே ஸஹஜகுணமாகவுடையரும் வயல் சூழ்ந்த மங்கை நாட்டிலுள்ளார்க் குத் தலைவருமான ஆழ்வார் ஒலி செய்தமிழ் மாலை, Oli Seithamil Maalai - அருளிச் செய்த தமிழ்த் தொடையான இத்திருமொழியை வல்லார், Vallaar - ஓதவல்லர்கள் கண்டார்வணங்க, Kandaarvananga - கண்டவரெல்லாம் காலிலே விழும்படி காளியனை மீதே, Kaaliyana Meedhe - மத்தகஜத்தின் மேலேறி (இருந்து) கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலர்ஆய், Kadal Soozh Ulakukku Oru Kaavalaraai - கடல் சூழ்ந்த மண்ணுலகம் முழுமைக்கும் தாங்களே துணையற்ற அரசராகி விண் தோய் நெடு வெண்குடை நிழலின் கீழ், Vin Thoi Nedhu Venkudai Nizhalin Keel - வானத்தளவுமளாவிய நீண்ட வெண்கொற்றக் குடையின் கீழிருந்து விரி நீர்உலகு ஆண்டு விரும்புவர், Viri Neerulagu Aandu Virumbuvar - ஆவாரண ஜலம் சூழ்ந்த பிரம்மாண்டத்தை ஆண்டு கொண்டு மகிழ்ந்திருக்கப்பெறுவர். |
| 1237 | பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித அர்த்தமாக ஸ்ரீ பஞ்ச ஆயுதங்களையும் தரித்துக் கொண்டு இருக்கிற புண்டரீ காஷனான ஸ்ரீ சர்வேஸ்வரன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்-தமிழ் தொடை பத்தையும் வல்லார்கள் உபய விபூதியையும் தாங்கள் இட்ட வழக்காம் படியான பிரபாவத்தை உடையராய்ப் பெறுவர்) 10 | சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும்
தாமரைக் கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில்
வங்கமலி கடலுலகில் மலி வெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகர் மேல் வண்டறையும் பொழில் சூழ்
மங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல் துணிய
வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன
சங்க மலி தமிழ் மாலை பத்து இவை வல்லார்கள்
தரணியோடும் விசும்பாளும் தன்மை பெறுவாரே –3-9-10 | பதவுரை Show / Hideசங்கு மலி தண்டு சக்கரம் முதல் முன் வந்தும், Sangu Mali Thandu Chakkaram Mudhal Mun Vandhum - ஸ்ரீ பாஞ்சஜந்யமும் பொருந்திய கௌமோதகியும் ஸூதர்சநமும் முதலான திவ்யா யுதங்களை கண் முன்னே தரித்துக் கொண்டிருக்கிற நெடிய தாமரை கண் பிரான் தான், Nedhiya Thamarai Kan Piraan Thaan - நீண்ட தாமரை போன்ற திருக்கண்களையுடைய ஸர்வேச்வரன் அமரும் கோயில், Amarum Koyil - நித்யவாஸம் பண்ணுகிய ஸந் நிதியாய் வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்து நாங்கூர், Vangam Mali Kadal Ulagil Malivu Eythu Nangoor - கப்பல்கள் நிறைந்த கடலால் சூழப்பட்ட நிலவுலகத்தில் பிரஸித்திபெற்ற திருநாங்கூரிலுள்ளதான் வைகுந்த விண்ணகர்மேல், Vaikundha Vinnakarmel - வைகுந்த விண்ணகரத் திருபதி விஷயமாக வண்டு அறையும் பொழில் சூழ் மங்கையர்த்தம் தலைவன், Vandu Araiym Pozhil Soozh Mangaiyartham Thalaivan - வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற சோலைகளினால் சூழப்பட்ட திருமங்களை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரும் மருவலர்தம் உடல் துணியவாள் வீசும்பரகாலன் கலிகன்றி சொன்ன, Maruvalartham Udal Thuniyavaal Veesumparakalan Kalikanri Sonna - பகைவருடைய சரீரங்கள் தொலையும்படி வாட்படையை வீசுகின்றவரும் பரகாலனென்னுந் திருநாமமுடையவருமான திருமங்கையாழ் வார் அருளிச் செய்த சங்கம் மலி தமிழ் மாலை இவை பத்து வல்லார்கள், Sangam Mali Tamil Maalai Ivai Paththu Vallarhal - சங்கப்புலவர்கள் கொண்டாடத்தக்க தமிழ்மாலையாகிய இப்பத்துப் பரசுரங்களையும் ஓதவல்லவர்கள் தரணியொடு விசும்பு ஆளும் தன்மை பெறுவார், Tharaniyodu Vizhumbu Aalum Thanmai Peruvar - பூமியையும் பரமபதத்தையும் ஆளும்படியான அதிசஙத்தைப் பெறுவார்கள். |
| 1247 | பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவை நின்ற இடத்திலே சென்று சினத்தை உடைத்தாய் இருக்கிற ருஷபங்கள் ஏழையும் முடியும்படி அடர்த்து ஸ்ரீ பின்னை பிராட்டி உடைய செவ்வியை உடைத்தாய் இருந்துள்ள தோள் உடன் அணைந்து ஸ்ரீயபதியாய் வர்த்திக்கிற கோயில்- இத்தை அப்யசிதவர்கள்-இஹலோகத்திலே ஹர்ஷர்கள் பயிலும் திரு உடையர் எவரேலும் எம்மை ஆளும் பரமரே-என்னும்படி அவர்களுக்கு தலைவராய் திருவடி திரு அநந்த ஆழ்வான் போல்வார் உடன் ஒரு கோவையாக ஆகப் பெறுவார்) 10 | சென்று சினவிடை ஏழும் பட அடர்த்துப் பின்னை
செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால் கோயில்
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர்
அரி மேய விண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை
கன்றிநெடு வேல் வலவன் மங்கையர் தம் கோமான்
கலிகன்றி யொலி மாலை ஐந்தினோடு மூன்றும்
ஒன்றினோடும் ஒன்றும் இவை கற்று வல்லார் உலகத்து
உத்தமர்கட்கு உத்தமராய் உம்பரும் ஆவர்களே –3-10-10 | பதவுரை Show / Hideசென்றுசினம் ஏழ் விடையும் பட அடர்ந்து, Senru Sinam Ezhu Vidaiyum Pada Adarnthu - தானே சென்று கொடுமை மிகுந்த ஏழு ரிஷபங்களும் முடியும்படி பொருது பின்னை செவ்வி தோள் புணர்ந்து உகந்த திருமால் தன் கோயில், Pinnai Sevvi Thol Punarndhu Ugandha Thirumal Than Koyil - நப்பின்னைப் பிராட்டியினுடைய அழகிய தோளோடே கலந்து திருவுள்ளம் மகிழ்ந்த லக்ஷ்மீநாதனுடைய ஸந்நிதியாய் அமர்ந்த, Amarntha - பொருந்தி யெழுந்தருளியிக்கிற செழு குன்றை, Sezhu Kunrai - அழகிய மலைபோன்ற எம்பொருமானைக் குறித்து கன்றிநெடு வேல் வலவன் மங்கை யர்தம் கோமான் கலிகன்றி, Kanrinedu Vel Valavan Mangai Yartham Koman Kalikanri - கோபக்குறியோடு கூடினதாய் நீண்டதான வேற் படையைத் தரிக்கவல்லவரும் திரு மங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவருமான திருமங்கை யாழ்வார் அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர், Ayanum Aran Seyyum Anaiyavargal Nangoor - பிரமனையும் ருத்ரபுத்திரனான ஸூப்ரஹ்மண்யனையும் ஒத்திருக்கின்றவர்கள் (வேதம் வல்லவர்களாய் அழகியவர்காளன அந்தணர்கள்) வாழ்கிற திருநாங்கூரில் அரிமேய வண்ணகரம், Arimeya Vannakaram - அரிமேய விண்ணககரமென்னுந் திருப்பதியில் ஒலிமாலை ஐந்தினொடு மூன்றும் ஒன்றினொடும் ஒன்றும் இவை, Olimaalai Aindhinodu Moondrum Ondrinodum Ondrum Ivai - அருளிச் செய்த சொல்மலையாகிய இப்பத்துப் பரிசுகளையும் கற்றுவல்லார், Kattruvallar - ஓதி யுணர்ந்து ஸேவிக்க வல்லவர்கள் உலகத்து, Ulakatthu - இவ்வுலகத்திலே உத்தமர்கட்கு உத்தமர் ஆய், Uttamarkadku Uttamar Aay - மிகவம் உத்க்ருஷ்டர்களா வாழ்ந்திருந்து (பின்பு) உம்பரும் ஆவர்கள், Umbarum Aavarkal - நித்யஸூரிகளோடு சேர்ந்வர்களுமாவர் |
| 1257 | பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்-நன்மை மிக்க அவதி இன்றிக்கே இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்திலே ஸ்ரீ திருவடி ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் உடன் ஒரு கோவையாய் நச புன ஆவர்த்தத்தே -என்கிறபடி ஒருநாளும் பிரியாதே இருக்கப் பெறுவர்) 10 | காரார்ந்த திருமேனிக் கண்ணன் அமர்ந்து உறையும் இடம்
சீரார்ந்த பொழில் நாங்கைத் திருத் தேவனார் தொகை மேல்
கூரார்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார்
ஏரார்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே –4-1-10 | பதவுரை Show / Hideகார் ஆர்ந்த திருமேனி கண்ணன், Kaar Aarntha Thirumeeni Kannaan - மேகத்தோடொத்த திருமேனியை யுடைய கண்ணபிரான் (- (கூர் ஆர்ந்த வேல் கலியன்;)) அமர்ந்து உறையும்; இடம், Amarnthu Uraiyum Idam - பொருந்தி வாழும் திருப்பதியாய், சீர் ஆர்ந்த பொழில் நாங்கை, Seer Aarntha Pozhil Naangkai - அழகு பொருந்திய சோலைகளை யுடைய திருநாங்கூரிலுள்ளதான திருத்தேவனார் தொகைமேல், Thiruththevanar Thogaimel - திருத்தேவனார் தொகை யென்னும் திவ்யதேசம் விஷயமாக கூறு, Kooru - அருளிச்செய்த தமிழ் பத்தும், Tamil Padhum - இத்தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும் வல்லார், Vallar - ஓதவல்லவர்கள் ஏர் ஆர்ந்த வைகுந்தத்து, Aer Aarntha Vaikundhathu - நன்மை மிக்க ஸ்ரீவைகுண்டத்தில் இமையவரோடு இருப்பார், Imaiyavarodu Iruppaar - நித்யஸூரிகளோடு கூடி யிருக்கப் பெறுவார்கள் |
| 1267 | பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அருள் மாரி-ஆஸ்ரிதருக்கு பிரசாதம் பண்ணும் இடத்தில் மேகம் போலே உதாரரான ஸ்ரீ ஆழ்வார் பண்ணிலே ஆரும்படியாக பாடிய இப்பாடல் இப் பத்தையும் வல்லவர்கள் லோகத்திலே நிரவதிகமான ஆனந்தத்தை உடையராய்-அநந்தரம் நிரவதிக ப்ரீதி உக்தரான ஸ்ரீ நித்ய சூரிகளோடு ஒரு கோவையாக பெறுவர்) 10 | மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர் வண் புருடோத்தமத்துள்
அண்ணல் சேவடிக் கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலிமன் அருள் மாரி
பண்ணுளார் தரப் பாடிய பாடல் இப்பத்தும் வல்லார் உலகில்
எண்ணிலாத பேரின்பம் உற்று இமையவரோடும் கூடுவரே –4-2-10 | பதவுரை Show / Hideமண்ணுள் ஆர் புகழ் வேதியர் நாங்கூர், Mannul Aar Pugazh Vedhiyar Naangoor - பூமண்டலத்தில் நிறைந்த புகழையுடைய வைதிகர்கள் வாழ்கிற திருநாங்கூரிலுள்ள வண்புருடோத்தமத்துள், Vanpurudoththama Thul - வண்புருடோத்தம மென்னுத் திருப்பதியில் எழுந்தருளியிருக்கிற அண்ணல், Annal - ஸ்வாமியினுடைய சே அடிக்கீழ் அடைந்து உய்ந்தவன், Sae Adikizh Adayndhu Uyndhavan - திருவடிகளின் கீழே சேர்ந்து உஜ்ஜீவித்தவரும் ஆலி மன் –, Aali Man - திருவாலி நாட்டுக்குத் தலைவரும் அருள் மாரி, Arul Maari - கிருபையை வர்ஷிக்கும்மேகமா-யுள்ளவருமான திருமங்கையாழ்வார் பண்ணுள் ஆர்தர பாடிய பாடல் இப்பத்தும் வல்லார், Pannul Aarthar Paadiya Paadal Ippaththum Vallar - கானத்திலே பொருந்தும்படி பாடின பாசுரமான இத்திருமொழியை ஓதவல்லவர்கள் உலகில் எண் இலாத பேர் இன்பம் உற்று, Ulagil En Iladha Per Inbam Utrum - இவ்வுலகின்கண் அளவற்ற மஹாநந்தங்களை அநுபவித்து (பிறகு) இமையவரோடும் கூடுவர், Imayavaro Thum Kooduvar - நித்யஸூரிகளோடும் கூட்டி வாழப் பெறுவர். |
| 1277 | பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரப்பை உடைத்தான வெண் கொற்றக் குடைக் கீழே பூமியை அடைய பாகவத சேஷம் ஆக்குகைகாக நிர்வஹித்து அநந்தரம்-நிரவதிக ப்ரீதி உக்தராய் நித்ய சூரிகளோடு ஒரு கோவையாகப் பெறுவர் பேரருளாளன் எம்பிரான் -என்று உபக்ரமித்து வானவர் கோனை -என்று உபசம்ஹரிக்கிறார் தேவ ராஜா பிதாமகர் தனம் -அயர்வறும் அமரர்கள் அதிபதி நலமுடையவன் அருளினன் அயர்வறும் அமரர்கள் அதிபதி – கோயில் திருமலை பெருமாள் கோயில் உய்ந்து ஒழிந்தேன் வாழ்ந்து ஒழிந்தேன் அல்லல் தீர்ந்தேன் -ஒன்பது பாட்டும் ஒரு தட்டு இந்த பல சுருதி ஒரு தட்டு -ஒன்பதோடு ஒன்றும்) 10 | தேனமர் சோலை நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே
வானவர் கோனைக் கண்டமை சொல்லும் மங்கையார் வாள் கலிகன்றி
ஊனமில் பாடல் ஒன்பதோடு ஒன்றும் ஒழிவின்றிக் கற்று வல்லார்கள்
மான வெண் குடைக் கீழ் வையகம் ஆண்டு வானவர் ஆகுவர் மகிழ்ந்தே –4-3-10 | பதவுரை Show / Hideதேன் அமர் சோலை, Then Amar Solai - வண்டுகள் படிந்த சோலைகளையுடைய நாங்கை, Naangkai - திருநாங்கூரில் நல் நடுவுன், Nal Naduvun - நட்ட நடுவில் செம்பொன்செய் கோயிலின் உள்ளே, Sembonsei Koyilin Ullae - செம்பொன்செய் கோயிலென்னுந் திருப்பதியிலே வானவர் கோனை, Vaanavar Konai - தேவாதிதேவனை கண்டமை, Kandamai - தாம் ஸேவித்தபடியை சொல்லும், Sollum - அருளிச்செய்தவரும் மங்கையார், Mangaiyaar - திருமங்கையில் உள்ளார்க்குத் தலைவரும் வாள், Vaal - வாட்படையை யுடையவருமான கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வாருடைய, ஊனம் இல் பாடல், Oonam Il Paadal - குறையொன்றுமில்லாத பாசுரமான ஓன்பதோடு ஒன்றும், Onpathodu Onrum - இப்பத்துப்பாட்டுகளையும் ஒழிவு இன்றி, Ozhivu Inri - ஒன்றும் விடாமல்; கற்று வல்லார்கள், Kattru Vallarhal - ஓதி யுணரவல்லவர்கள் மானம், Maanam - பரப்பையுடைய வெண் குடை கீழ், Ven Kudai Keezh - வெண்கொற்றக் குடையின் கீழ் (இருந்துகொண்டு) வையகம், Vaiyagam - பூ மண்டலத்தை ஆண்டு, Aandu - அரசாண்டு மகிழ்ந்து, Magizhndu - உவந்து வானவர் ஆகுவர், Vaanavar Aaguvar - (பிறகு) நித்யஸூரிகளுமாவர் |
| 1287 | பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஐந்தும் ஐந்தும் வல்லார்-ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் அபதானங்கள் ஐந்தும் அது கலசாத ஐந்தும் ஐஹிகத்தில் ஐஸ்வர்யமும் குறைவற புஜித்து ஸ்ரீ பரம பதத்தில் ஸ்ரீ நித்ய சூரிகளோடு ஒரு கோவையாக விளங்குவர்) 10 | சீரணிந்த மணி மாடம் திகழு திரு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலைக்
கூரணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி
பாரணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
சீரணிந்து உலகத்து மன்னராகிச் சேண் விசும்பில் வானவராய்த் திகழ்வர் தாமே –4-4-10 | பதவுரை Show / Hideசீர் அணிந்த, Seer Anindha - சிறப்புப் பொருந்திய மணி மாடம், Mani Maadam - மணிமாடங்கள் திகழும், Thigazhum - விளங்கப்பெற்ற நாங்கூர், Naangoor - திருநாங்கூரிலுள்ள திருத்தெற்றியம்பலத்து, Thiruththetriyampalathu - திருத்தெற்றியம்பல மென்னந் திருப்பதியி லெழுந்தருளியிருக்கிற என், En - எனக்கு ஸ்வாமியான செம் கண் மாலை, Sem Kan Maalai - செந்தாமரைக்கண் பெருமான் விஷயமாக, கூர் அணிந்த வேல் வலவன், Koora Anindha Vel Valavan - கூர்மை பொருந்திய வேற்படையை ஆளுமவரும் ஆலி நாடன், Aali Naadan - திருவாலி நாட்டுக்குத் தலைவரும் கோடி மாடம் மங்கையர் கோன், Kodi Maadam Mangaiyar Kon - கொடிகளணிந்த மாடங்களையுடைய திருமங்கையிலுள்ளார்க்குத் தலைவரும் குறையல் ஆளி, Kuraiyal Aali - திருக்குறையலூரை ஆள்பவரும் பார் அணிந்த தொல் புகழான், Paar Anindha Thol Pugazhaan - பூமிக்கு அலங்காரமான தொல்புகழை உடையவருமான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் சொன்ன, Sonna - அருளிச்செய்த பாமாலை இவை ஐந்தும் ஐந்தும், Paamalai Ivai Aindhum Aindhum - இப் பத்துப்பாசுரங்களையும் வல்லார் தாம், Vallaar Thaam - ஓத வல்லவர்கள் உலகத்து, Ulakatthu - இவ்வுலகத்தில் சீர் அணிந்த மன்னர் ஆகி, Seer Anintha Mannar Aagi - அரசர்களாகி வாழ்ந்து (பிறகு) சேண் விசும்பில், Seen Visumbil - பரமாகாச மென்கிற பரமபதத்திலே வானவர் ஆய், Vaanavar Aayi - நித்ய ஸூரிகளோடு ஒத்தவர்களாய் நிகழ்வர், Nigalvar - விளங்கப்பெறுவர்கள் |
| 1297 | பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தை வல்லவர்கள் கடல் சூழ்ந்த பூமியை ஆண்டு ஸ்வர்க்கத்தை நிர்வஹித்து அதுக்கு மேலே ஆதித்ய மண்டலத்தின் நடுவிட்டு ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கமே போய் பரமபதத்திலே சென்று ஸ்வ ஸ்வரூபத்தை பெற்று உஜ்ஜ்வலராவர் சர்வ நிர்வாஹகன் -சர்வ அபேஷித ப்ரதன் -விரோதி நிரசன சீலன்-விரோதி நிவ்ருத்த பூர்வக பல ப்ரதத்வம் அதிகாரிகள் பேதம் பற்ற அருளிச் செய்கிறார்) 10 | திங்கள் தோய் மாட நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானை
மங்கையர் தலைவன் வண்டார் கலியன் வாயொலிகள் வல்லார்
பொங்கு நீருலகம் ஆண்டு பொன்னுலகு ஆண்டு பின்னும்
வெங்கதிர்ப் பருதி வட்டத்தூடு போய் விளங்குவாரே –4-5-10 | பதவுரை Show / Hideதிங்கள் தோய் மாடம் நாங்கூர், Thingal Thoi Maadam Naangoor - சந்திர மண்டலத்திலே போய்ப் படிந்திருக்கிற மாடங்களையுடைய திருநாங்கூரிலுள்ள திருமணிக் கூடத்தானை, Thirumanik Koodaththanai - திருமணிக்கூடமென்னுந் திருப்பதியிலெழுந்தருளியுள்ள எம்பெருமான் விஷயமாக, மங்கையர் தலைவன், Mangaiyar Thalaivan - திருமங்கையிலுள்ளார்க்குத் தலைவரும் வண் தார், Van Thaar - அழகிய மாலையை யணிந்தவருமான கலியன், Kaliyan - ஆழ்வார் வாய், Vaai - திருவாய்மலர்ந்தருளிய ஒலிகள், Oligal - இப்பாசுரங்களை வல்லார், Vallar - ஓதவல்லவர்கள், பொங்கு நீர் உலகம் ஆண்டு, Pongu Neer Ulagam Aandu - கடல் சூழ்ந்த இவ்வுலகை அரசாட்சி புரிந்து (அதன் பிறகு) பொன் உலகு ஆண்டு, Pon Ulagu Aandu - ஸ்வர்க்கலோகத்தை அனுபவித்து பின்னும், Pinnum - அதற்குமேலும் வெம் கதிர் பரிதி வட்டத்தூடு போய், Vem Kadhir Paridhi Vattathoodu Poi - வெவ்விய கிரணங்களையுடையனான ஸூர்யனுடைய மண்டலத்தின் வழியேசென்று விளங்குவார், Vilanguvaar - (பரமபதத்தில்) வாழப்பெறுவர். |
| 1307 | பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருக் காவளம் பாடியிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிற கிருஷ்ணனை கிருஷ்ண அவதாரம் பர தசையோடு ஒக்கச் சொல்லலாம் படி இறே இங்குத்தை சௌலப்யம் இப்பத்தையும் வல்லவர்-மோஷத்தை பலமாகச் சொல்லில் அதிகாரிகள் கிடையாது -என்று அபிமத சாதனம் என்னவே கற்பர்கள் பின்னை மோஷத்தில் கொடு போய் மூட்டுகிறோம் -என்று-ஐஸ்வர்யத்தை பலமாகச் சொல்லிற்று) 10 | மாவளம் பெருகி மன்னு மறையவர் வாழு நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணனை கலியன் சொன்ன
பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை அரசராகிக்
கோவிள மன்னர் தாழக் குடை நிழல் பொலிவர் தாமே –4-6-10 | பதவுரை Show / Hideமா வளம் பெருகி மன்னு மறையலர் வாழும் நாங்கை, Maa Valam Perugi Mannu Maraiyalar Vaalum Naangkai - மிக்க செல்வமானது அபிவிருத்தியடைந்து பொருந்தியிருக்கிற வைதிகர்கள் வாழுமிடமான திருநாங்கூரில் காவளம்பாடி மேய கண்ணனை, Kavalampadi Mey Kannanai - திருக்காவளம்பாடியில் எழுந்தருளியுள்ள எம்பொருமான் விஷயமாக கலியன் சொன்ன, Kaliyan Sonna - திருமங்கையாழ்வாரருளிச் செய்த வளம் பா பத்தும் வல்லார் தாம், Valam Paa Pathum Vallar Thaam - அழகுபொருந்திய இப்பாசுரங்கள் பத்தையும் ஓதவல்லவர்கள் பார் மிசை அரசர் ஆகி, Paar Misai Arasar Aagi - பூமியிலே, அரசர்களாயிருந்து கொண்டு கோ இள மனனர் தாழ, Ko Ilamana Thaa - (மற்றுள்ள) ராஜாக்களும் இளவரசர்களும் வணங்குமாறு குடை நிழல் பொலிவர், Kudai Nizhal Polivar - ஒற்றைக்குடை நிழலில் விளங்கப்பெறுவர் |
| 1317 | பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வல்லவர்கள் நித்ய சூரிகளோடு ஒரு கோவை ஆவர்கள்) 10 | நல்லன்புடை வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வன் திரு வெள்ளக் குளத்து உறைவானைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
வல்லர் யென வல்லவர் வானவர் தாமே — –4-7-10 | பதவுரை Show / Hideநுல் அன்பு உடைவேதியர் மன்னிய நாங்கூர், Nul Anbu Udaivediyar Manniya Nangoor - சிறந்த பக்தியையுடையரான வைதிகர்கள் நித்யவாஸம் பண்ணுகிற திருநாங்கூரில் திருவெள்ளக் குளத்து உறைவான் செல்வனை, Thiruvellak Kulathu Uraivaan Selvanai - திருவெள்ளக்குள மென்னுந்திருப்பதியிலே எழுந்தருளியிருக்கிற திருமால் விஷயமாக, கல்லின், Kallin - மலையைக் காட்டிலும் மலி, Mali - அதிசயித்த வலிவுள்ள தோள், Thol - புஜங்களை யுடையரான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் சொன்ன, Sonna - அருளிச்செய்த மாலை, Maala - இச் சொல்மாலையை வல்லர் என வல்லவர் தாம், Vallar En Vallarvar Thaam - ‘இவர்கள் ஸமர்த்தர்கள்’ என்று (அனைவரும்) சொல்லும்படியாக ஓதவல்லவர்கள் வானவர், Vaanavar - நித்யஸூரிகளோடு சோப்பெறுவர். வல்லரென வல்லவர், Vallarena Vallarvar - இவர் பெரிய திருமொழிப் புலவர்’ என்று பிறர் கொண்டாடும்படியாகக் கற்குமவர்கள் என்கை. |
| 1327 | பெரிய திருமொழி || (4-8–கவளயானை) (திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிராட்டி தசை வந்து ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தும் வல்லார் ஒருத்தி வாய் வெருவ-ஒருத்தி கூப்பிட்ட எளிவரவு தீர -ஒரு நாளும் பிரிய வேண்டாதே இருக்கிற தேசத்திலே இருக்கப் பெறுவார்) 10 | பாருள் நல்ல மறையோர் நாங்கைப் பார்த்தன் பள்ளி செங்கண் மாலை
வார்கொள் நல்ல முலை மடவாள் பாடலைத் தாய் மொழிந்த மாற்றம்
கூர் கொள் நல்ல வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார்
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளும் எய்துவாரே— –4-8-10 | பதவுரை Show / Hideபந்தோடு கழல் மருவாள், Pandhodu Kazhal Maruvaal - பந்தையும் கழற்காய்களையும் தொடுகிறதுமில்லை; (- (என் மகள்) (என் மகளை செய்தனகள் அம்மனைமீர்! அறிகிலேன், அந்தோ!)) பை கிளியும் பால் ஊட்டாள், Pai Kiliyum Paal Oottal - (தனது) பசுமை தங்கிய கிளிக்குப் பாலூட்டுகிறதுமில்லை; பாவை பேணாள், Paavai Peenaal - (விளையாட்டுக் கருவியான) மரப்பாச்சியை நோக்குவதுமில்லை; திருஅரங்கன், Thiruarangan - “ஸ்ரீரங்கநாதன் வந்தானோ வாரானோ என்று என்றே, Vandaano Vaaraano Endru Endrae - வந்து விட்டானோ? என்றும் வரமாட்டானோ?” என்றும் சொல்லிக்கொண்டு வளையும் சோரும், Valaiyum Soorum - கைவளைகள் கழல நிற்கின்றாள் சந்தோகன், Sandhogan - சாந்தோக்ய உபநிஷத்தினால் ப்ரதிபாத்யனும் பௌழியன், Pauzhiyan - கௌஷீதகீப்ராஹ்மணத்தினால் ப்ரதிபாத்யனும் ஐந்து அழல் ஓம்பு, Ainthu Azhai Oombu - பஞ்சாக்நிகளினால் ஆராதிக்கப் படுபவனும் தைத்திரியன், Thaitthiriyan - தைத்திரிய உபநிஷத்தினால் பிரதிபாதிக்கப் படுபவனும் சாமவேதி, Saamavethi - ஸாமவேதப்ரதிபாத்யனுமான பெருமான் வந்து, Vandhu - இவ்விடம் வந்து |
| 1337 | பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவற்றை அப்யசித்து-அந்த கர்வத்தாலே யமாதிகள் தலைமேலே அடி இட்டுத் திரியுமவர்கள் இவற்றை அப்யசிக்கும் அத்தனையே வேண்டுவது அவர்களுக்கு ஜன்ம வ்ருத்தாதிகள் ஏதேனும் ஆகவுமாம்- அந்த ஜன்மத்திலே-அந்த வ்ருத்தத்திலே-அந்த ஞானத்திலே அந்த ஜன்மாதிகளால் வரும் உத்கர்ஷம் வேண்டாதே ஸ்வத உத்கர்ஷத்தை உடையரான நித்ய சூரிககளால் சிரஸா வஹிக்கப் பெறுவர்) 10 | ஏரார் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானைக்
காரார் புறவில் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த
சீரார் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்து
ஆராரவரே யமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே –4-9-10 | பதவுரை Show / Hideஏர் ஆர் பொழில் சூழ் இந்தளூரில், Aer Ar Pozhil Soozh Indhalooril - அழகிய சோலைகளாலே சூழப்பட்ட எந்தை பெருமனை, Endhai Perumanai - எம்பெருமான் விஷயமாக கார் ஆர் புறவின் மங்கை வேந்தன், Kaar Ar Puravin Mangai Vendan - மேகங்கள்படித்த தோப்புகளையுடைய திருமங்கை நகர்க்குத் தலைவரான கலியன், Kaliyan - ஆழ்வார் ஒலி செய்த, Oli Seitha - அருளிச்செய்த சீர் ஆர் இன் சொல் மாலை, Seer Ar In Sol Maalai - சிறந்த மதுரமான இச்சொல் மாலையை கற்று, Kattru - ஓதி திரிவார், Thirivaar - திரிகின்றவர்கள் உலகத்து ஆர் ஆர், Ulagaththu Ar Ar - இவ்வுலகத்தில் எவரெவருண்டோ, அவரே, Avarae - அவர்களே என்றும், Endrum - எக்காலத்திலும் அமரர்க்கு, Amararukku - நித்யஸூரிகளுக்கும் அமரர் ஆவார், Amarar Aavaar - கௌரவிக்கத்தக்கவராவர் |
| 1347 | பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமியை இடந்து திரு எயிற்றினில் கொண்டு அந்த ஸ்ரமம் ஆறும்படியாக கடல் திரைகளில் குருந் திவலைகள் துடை குத்தி உறக்கத் ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவன் ஆய்த்து ஸ்ரீ திரு வெள்ளியங்குடியிலே சந்நிஹிதன் ஆனான்) 10 | பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை
வண்டறை சோலை மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
கொண்டிவை பாடும் தவம் உடையார்கள் ஆள்வர் இக் குரை கடல் உலகே –4-10-10 | பதவுரை Show / Hideபண்டு முன் அன்று ஒருகால் எனம் ஆகி பார் இடந்து, Pandhu Mun Andru Orukal Enam Aagi Paar Idandhu - முன்பொருகாலத்தில் வராஹரூபியாய்த் திருவவதரித்துப் பூமியைக் குத்தியெடுத்து எயிற்றினில் கொண்டு, Eiyirtrinil Konda - கோட்டின் மேற் கொண்டவனும் தெண் தரை வருட பால் கடல் துயின்ற, Then Tarai Varuda Paal Kadal Thuyindra - தெளிந்த அலைகள் (திருவடிகளின் மேல்) மோதும்படி திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருள்பவனும் திருவெள்ளியங்குடியானை, Thiruvelliyangudiyanai - திருவெள்ளியங்குடியில் திருக்கோயில் கொண்டிருப்பவனுமான எம்பெருமான் விஷயமாக, வண்டு அறை சோலை மங்கையர் தலைவன், Vandu Arai Solai Mangaiyar Thalaivan - வண்டுகள் முரலும் சோலைகளை யுடைய திருமங்கை காட்டில் உள்ளவர்களுக்கு ஸ்வாமியும் மானம் வேல், Manam Vel - பெருமை தங்கிய வேற்படையையுடையவருமான கலியன், Kaliyan - ஆழ்வாருடைய வாய் ஒலிகள் இவை, Vaai Oligal Ivai - ஸ்ரீஸூக்தியாகிய இத்திருமொழியை கொண்டு, Kondhu - காலில் கொண்டு பாடும் தவம் உடையார்கள், Paadum Thavam Udaiyargal - பாடும் பாக்கியமுடையவர்கள், குரை கடல் இவ்வுலகு ஆள்வர், Kurai Kadal Ivvalagu Aalvar - கோஷிக்கின்ற கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தை ஆளப்பெறுவகள். |
| 1357 | பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ராமோ ராமோ ராம -என்கிற படியே இரண்டு அஷரம் பிணைக்க வல்லார் எங்கும் உண்டு – ஸ்ரீ ஆழ்வாரும் ஒருவரே -என்னா நிற்கும் அத்தனை யாய்த்து – நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே யாய்த்து கொடை இருப்பது – இத் திரு மொழியை உபகரித்தவர் இறே – சொல் தான் ஈரைந்து இவை பாட-இதுக்கு மேற்பட்டது இல்லை இறே ரச்யதைக்கு- இவ்வாத்ம வஸ்துவை சோரக் கொடுக்கும் வினை நில்லாது) 10 | கற்றா மறித்துக் காளியன் தன் சென்னி நடுங்க நடம் பயின்ற
பொற்றாமரையாள் தன் கேள்வன் புள்ளம் பூதங்குடி தன் மேல்
கற்றார் பரவும் மங்கையர் கோன் காரார் புயல் கைக் கலிகன்றி
சொல் தான் ஈரைந்து இவை பாடச் சோரா நில்லா துயர் தானே –5-1-10 | பதவுரை Show / Hideகன்று ஆ மறித்து, Kandru Aa Mariththu - கன்றுகளோடு கூடின பசுக்களை மடக்கி மேய்த்தவனும் காளியன் தன் சென்னி நடுங்க நடம் பயின்ற, Kaaliyan Than Chennai Nadunga Nadam Payindra - காளிய நாகத்தின் தலையிலே (அந்த நாகம்) நடுங்கும்படி கூத்தாடினவனும் பொன் தாமரையாள் தன் கேள்வன், Pon Thamaraiyal Than Kelvan - அழகிய தாமரைப்பூவிற் பிறந்த பிராட்டிக்கு வல்லபனுமான பெருமானுடைய புள்ளம்பூதங்குடி தன் மேல், Pullampoothangudi Than Mel - திருப்புள்ளம் பூதங்குடி விஷயமாக, கற்றார் பரவும், –, Kattrar Paravum - கற்றவர்களால் கொண்டாடப்படுபவரும் மங்கையர் கோன், Mangaiyar Kon - திருமங்கையிலுள்ளார்க்குத் தலைவரும் கார் ஆர் புயல் கை, Kaar Aar Puyal Kai - காளமேகம்போன்ற உதாரருமான கலிகன்றி, Kalikanri - கலியனுடைய சொல் இவை ஈர் ஐந்து பாட, Sol Ivai Eer Aindhu Paada - ஸ்ரீஸூக்தியாகிய இப்பத்துப் பாசுரங்களையும் பாடப்பெற்றால் துயர் சோர நில்லா, Thuyar Soora Nillaa - துன்பங்கள் (இவ்வாத்மா) சோர்வு அடையும்படி தங்கியிருக்கமாட்டா |
| 1367 | பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காவி போலேயும் பெரும் கடல் போலேயும் இருந்துள்ள வடிவை உடைய ஸ்ரீ கிருஷ்ணன் திரு உள்ளத்தோடு பொருந்தி உஜ்ஜ்வலனாய் வர்த்திக்கிற ஸ்ரீ திருக் கூடலூர்) 10 | காவிப் பெரு நீர் வண்ணன் கண்ணன்
மேவித் திகழும் கூடலூர் மேல்
கோவைத் தமிழால் கலியன் சொன்ன
பாவைப் பாடப் பாவம் போமே –5-2-10 | பதவுரை Show / Hideகாலி பெரு நீர் வண்ணன் கண்ணன், Kaali Peru Neer Vannan Kannan - கருநெய்தற் பூப்போலவும் கடல்போலவும் நிறமுடையனான எம்பெருமான் மேவி திகழும் கூடலூர் மேல், Mevi Thigazhum Koodalur Mel - பொருந்தி விளங்கப்பெற்ற கூடலூர் விஷயமாக கலியன், Kaliyan - திருமங்கைமன்னன் கோவை தமிழால் சொன்ன, Kovai Tamizhal Sonna - ஒழுங்கான தமிழினால் அருளிச் செய்த பாவை, Paavai - இப்பாசுரங்களை பாட, Paada - பாடவே பாவம் போம், Paavam Pom - பாவங்கள் தொலைந்துபோம் |
| 1377 | பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அசந்நிஹிதனே யாகிலும் விட ஒண்ணாதது யாய்த்து வடிவழகு – அழகு இல்லை யாகிலும் விட ஒண்ணாதது ஆய்த்து பிராப்தி – பிராப்தி இல்லை யாகிலும் விட ஒண்ணாதது யாய்த்து போக்யதை – இப்பத்தையும் ஒன்றும் விடாதே ஏத்த வல்லவர்களை ஸ்ரீ நித்ய சூரிகள் ஸ்ரீ வைகுண்ட நாதனை விட்டு இவர்களை ஆதரியா நிற்பர்கள்) 10 | மஞ்சுலா மணி மாடங்கள் சூழ் திரு வெள்ளறை அதன் மேய
அஞ்சனம் புரையும் திரு வுருவனை யாதியை யமுதத்தை
நஞ்சுலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐ இரண்டும்
எஞ்சலின்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசர் ஆவர்களே –5-3-10 | பதவுரை Show / Hideமஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ், Manju Ulaam Mani Maadangal Soozh - மேகங்கள் படிந்து உலாவப்பெற்ற நவரத்நங்கள் பதித்த மாளிகைகளினால் சூழப்பட்ட திருவெள்ளறை அதன் மேய, Thiruvellarai Adan Meyya - திருவெள்ளறையில் நித்ய வாஸம் செய்பவனும் அஞ்சனம் புரையும் திரு உருவனை, Anjanam Puraiyum Thiru Uruvanei - மை போன்ற திவ்யமான வடிவையுடையவனும் ஆதியை, Aadhiye - ஸகல ஜகத்காரண பூதனும் அமுதத்தை, Amudhatthai - அமுதம்போல் போக்யனுமான எம்பெருமானை, நஞ்சு உலாவிய வேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும், Nanju Ulaaviya Vel Valavan Kalikanri Sol Aiy Irandum - விஷம்தங்கிய வேற்படையைச் செலுத்தவல்லவரான திருமங்கையாழ்வார் அருளிச்செய்த இப்பத்துப் பாசுரங்களைக் கொண்டு எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார், Enjal Inri Nindru Aetha Vallar - குறைவின்றி மனம் நிலைபெற்று துதிக்க வல்லவர்கள் இமையோர்க்கு அரசு ஆவர்கள் –, Imaiyorkku Arasu Aavargal - நித்யஸூரிகளுக்கும் ஆதரிக்கத் தக்கவராவலர்கள் |
| 1387 | பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உந்தி – வையம் -இரண்டும் ஸ்ரீ உலகுண்ட ஸ்ரீ வடதள சாயி விஷயம் விளைத்த -வம்பு -ஸ்ரீ ராமன் விஷயம் கலை -கஞ்சன் -ஸ்ரீ கிருஷ்ண விஷயம் சேயன் -அல்லி -ஸ்ரீ யபதி விஷயம்–இப்படி நாலு இரண்டும் பண்டு -ஸ்ரீ திருக் குறளன் விஷயம் ஏனம் -சகல அவதார சமுதாய விஷயம்–இப்படி இரண்டும்-இவற்றை சாபிப்ராயமாக அப்யசிக்க வல்லார்கள் ஸ்ரீ கோயிலிலே இருந்து அனுபவித்து பின்னை சரீர சமனந்தரம் ஸ்ரீ பரம பதம் தாங்கள் இட்ட வழக்காக பெறுவர்கள்) 10 | அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தைக்
கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல்
நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும் உடன்
வல்லவர் தாம் உலகாண்டு பின் வானுலகு ஆள்வரே –5-4-10 | பதவுரை Show / Hideஅல்லி மாதர் அமரும் திருமார்வன் அரங்கத்தை, Alli Maathar Amarum Thirumaarvan Arangaththai - பூவிற் பிறந்த பெரியபிராட்டியா பொருந்தி வாழப்பெற்ற திருமார்வையுடையனான ஸர்வேச்வரனுடைய திருவரங்கம் விஷயமாக, கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலிகன்றி, Kallin Mannu Mathil Mangaiyar Kon Kalikanri - கல்லாலே கட்டப்பட்ட திடமாயிக்கிற மதிளையுடைத்தான திருமங்கை நகரில் உள்ளவர்களுக்கு தலைவரான ஆழ்வார் சொல் நல் இசை மாலைகள், Sol Nal Isai Maalaigal - அருளிச்செய்த நல்ல இசையோடு கூடின சொல் மாலையாகிய நாலிரண்டும் இரண்டும், Naalirandum Irandum - இப்பத்துப்பாட்டுக்களையும் உடன் வல்லவர்தாம், Udan Vallarvartaam - கருத்தோடுகூட ஓதவல்லவர்கள் உலகு ஆண்டு, Ulaku Aandu - இவ்வுலகில் (கோயில் வாழ்ச்சியை) அநுபவித்து பின் வான் உலகு ஆள்வர், Pin Vaan Ulaku Aalvar - பரமபதாநுபவத்தைப் பெறக்கடவர். |
| 1397 | பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதன் பொருளை ஆசார்யர்களோடே கற்று அறியுமவர்கள்-தனி முத்துக் குடைக் கீழே இதில் அபேஷை உண்டாகில் ஐஸ்வர்யத்தை அனுபவித்து ஸ்ரீ பரம பதத்திலே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்) 10 | சேலுகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானைச் சிந்தை செய்த
நீல மலர்க் கண் மடவாள் நிறைவழிவைத் தாய் மொழிந்த வதனை நேரார்
கால வேல் பரகாலன் கலி கன்றி ஒலி மாலை கற்று வல்லார்
மாலை சேர் வெண் குடைக் கீழ் மன்னவராய்ப் பொன் உலகில் வாழ்வர் தாமே –5-5-10 | பதவுரை Show / Hideசேல் உகளும் வயல் புடை சூழ் திருஅரங்கத்து அம்மானை, Sel Uhalum Vayal Pudai Soozh Thiruarangathu Ammaanai - மீன்கள் துள்ளி விளையாடப் பெற்ற கழனிகளினால் சுற்றும் சூழப்பட்ட திருவரங்கத்திலுள்ள எம்பெருமானை (- (இஹலோக ஐச்வர்யங்களையநுபவித்துப் பின்பு)) சிந்தை செய்த, Sindhai Seitha - தியானித்துக் கொண்டிருக்கின்ற நீலம் மலர் கண்மடவான் நிறை அழிவை, Neelam Malar Kanmadavaan Nirai Azhivai - கருநெய்தல் போன்ற கண்களை யுடையனான பரகால நாயகியினது அடக்கம் அழிந்தமையைக் குறித்து தாய் மொழிந்த அதனை, Thaai Mozhintha Adhanai - தாய்பேசின பாசுரமாக, நேரார் சாலன், Neraar Saalan - பகைவர்க்கு யமன் போன்ற வரும் வேல், Veel - வேற்படையையுடையரும் பரகாலன், Parakalan - பரகாலனென்ற திருநாமமுடையவருமான கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச்செய்த மாலை, Malai - இச் சொல்மாலையை கற்று வல்லார் தாம், Kattru Vallar Thaam - ஓதி உணரவல்லவர்கள், மாலை சேர் வெண் குடை கீழ், Malai Ser Ven Kudai Keel - முத்துஸரங்கள் தொங்கவிடப் பெற்ற வெண்குடை நிழலில் மன்னவர் ஆய், Mannavar Aay - அரசர்களாயிருந்துகொண்டு போன் உலகில் வாழ்வர், Poon Ulagil Vazhvar - பரமபதத்தில் நித்யாநுபவம் பண்ணப்பெறுவர். |
| 1407 | பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ ரஷணத்துக்கு ஒரு கைம்முதல் இல்லாத பசுக்களை அவற்றோடு பொருந்தி ரஷித்து அது தான் பர தசை-என்னும்படி ஸ்ரீ கோயிலிலே வந்து சந்நிஹிதன் ஆனவனை -சுலபன் ஆனவனை – மனஸ் சோடே இத்தை அனுசந்தித்துக் கற்றவர்கள் மேல் இவர்கள் போக்க வேணும் -என்று நினையாதே இருக்க துஷ் கர்மங்கள் தாமே இது நமக்கு நிலம் அல்ல -என்று விட்டு ஓடிப் போம்) 10 | ஆமருவி நிரை மேய்த்த வணி யரங்கத்து யம்மானைக்
காமரு சீர்க் கலிகன்றி யொலி செய்த மலி புகழ் சேர்
நாமருவு தமிழ் மாலை நால் இரண்டோடு இரண்டினையும்
தாமருவி வல்லார் மேல் சாரா தீ வினை தானே –5-6-10 | பதவுரை Show / Hideஆ நிரை, Aa Nirai - பசுக்கூட்டங்களை மருவி மேய்த்த, Maruvi Meyththa - விரும்பி மேய்த்தவனாம் அணி அரங்கத்து அம்மானை, Ani Arangaththu Ammanaik - திருவரங்கத்தில் எழுந்தருளி யிருப்பவனான பெருமானைக் குறித்து, காமரு சீர் கலி கன்றி ஒலிசெய்த, Kamaru Seer Kali Kandrai Oliseiththa - விரும்பத்தக்க சீர்மையையுடைய திருமங்கையாழ்வார் அருளிச் செய்ததும் மலி புகழ் சேர், Mali Pugazh Ser - நிரம்பிய கீர்த்தியையுடையதும் நா மருவு, Naa Maruvu - நாவுக்குப் பொருந்தியிருப்பதுமான தமிழ் மாலை நாலிரண்டோடு இரண்டினையும், Tamil Maalai Naalirandodu Irandinaikku - இத்தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும் தாம் மருவி வல்லார் மேல், Thaam Maruvi Vallar Mel - தாமே விரும்பிக் கற்குமவர்களிடத்து தீ வினை சாரா, Thee Vinai Saaraa - பாவங்கள் அணுகமாட்டா |
| 1417 | பெரிய திருமொழி || (5-7–பண்டை) (திருவரங்கம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (லஷணங்களில் ஒன்றும் குறையாத படி விஸ்ருதமான வித்தை அப்யசிக்க வல்லார் ப்ராரப்தமான கர்மங்களை வாசனையோடு போக்கப் பெறுவார்) 10 | பொன்னு மா மணியும் முத்தமும் சுமந்து பொரு திரை மா நதி புடை சூழ்ந்து
அன்னம் மாடுலவு மலை புனல் சூழ்ந்த வரங்க மா நகர் அமர்ந்தானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே –5-7-10 | பதவுரை Show / Hideபொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து, Ponnum Maa Maniyum Muththamum Sumandhu - பொன்களையும் சிறந்த ரத்தனங்களையும் முத்துக்களையும் திரட்டிக்கொண்டு திரை பொரு மா நதி புடை சூழ்ந்து, Thirai Poru Maa Nathi Pudai Soozhndhu - அலையெறிந்துகொண்டு வருகின்ற பெரியநதியாகிய திருக்காவேரியினால் இரு பக்கமும் சூழப்பெற்றும் மாடு அன்னம் உலவும் அலை புனல் சூழ்ந்த, Maadu Annan Ulavum Alai Punal Soozhndhu - பக்கங்களிலே அன்னப்பறவைகள் உலாவப்பெற்ற அலைகொண்ட தடாகங்களினால் சூழப் பெற்றுமிருக்கின்ற அரங்கம் மா நகர், Arangam Maa Nagar - திருவரங்கம் பெரிய கோயிலில் அமர்ந்தானை, Amarnthaanai - பொருந்தியுள்ள பெருமானைக்குறித்து, மன்னு மா மாடம் மங்கையர் தலைவன், Mannu Maa Maadam Mangaiyar Thalaivan - சாச்வதமான பெரிய மாடங்களையுடைய திருமங்கையில் உள்ளார்க்குத் தலைவரும் மானம் வேல், Maanam Vel - சிறந்த வேலாயதத்தையுடையவருமான கலியன், Kaliyan - ஆழ்வார் வாய் ஒலிகள் பன்னிய பனுவல், Vaai Oligal Panniya Panuval - விஸ்தரித்தருளிச் செய்த இப்பாசுரங்களை பாடுவார், Paaduvaar - பாடுமவர்கள் நாளும் பழ வினைபற்று அறுப்பார், Naalum Pazha Vinaipatru Aruppaar - எந்நாளும் கல்மஷ ஸம்பந்தமற்றிருப்பர்கள். |
| 1427 | பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவருடைய பாவ வருத்தி இல்லையாகிலும் இவருடைய பாசுரத்தைச் சொல்லவே ப்ராப்தி பிரதிகந்தகங்கள் போம் என்கிறது) 10 | மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –5-8-10 | பதவுரை Show / Hideமாடம் மாளிகை சூழ், Maadam Maaligai Soozh - உபரிகைகளை யுடைய வீடுகள் எங்கும் நிறைந்திருக்கப்பெற்ற திரு மங்கை, Thiru Mangai - திருமங்கை யென்னும் நாட்டுக்கு மன்னன், Mannan - அரசரும் ஒன்னலர் தங்களை வெல்லும், Onnalaar Thangalai Vellum - பகைவர்களை வெல்லுகின்ற ஆடல் மா, Aadal Maa - ஆட்டத்திற்சிறந்த குதிரையை ஏறிச் செலுத்துதலில் வலவன், Valavan - வல்லவருமான கலிகன்றி, Kalikanri - ஆழ்வார் அணி பொழில் திரு அரங்கத்து அம்மானை, Ani Pozhil Thiru Arangathu Ammanaai - அழகிய சோலைகள் சூழ்ந்த ஸ்ரீரங்கத்திற்பள்ளி கொண்டருள்கின்ற ஸ்வாமியும் தொல், Tol - தொன்றுதொட்டு வருகிற நீடு புகழ், Needu Pugazh - மிக்க கீர்த்தியையுடைய ஆழி, Aazhi - திருவாழியாழ்வானைப் பிரயோகித்தலில் வல்லானை, Vallaanai - வல்லவனும் எந்தையை, Endhaiyai - எமது தலைவனுமான நெடு மாலை, Nedu Maalai - பெருமையையுடைய ஸ்ரீமந்நாராயணனை நினைந்த, Ninaindha - மனத்தினால் அநுபவித்து அருளிச் செய்த இவை பத்து பாடல், Ivai Paththu Paadal - இந்தப் பத்துப் பாசுரங்களையும் தொண்டீர், Thondeer - எம்பெருமானடியார்களே! பாடுமின், Paadumin - நீங்கள் ஓதுங்கள்; பாட, Paada - அங்ஙனம் ஓதவே நும்மிடை பாவம் நில்லா, Nummidai Paavam Nillaa - உங்களித்திற் பாவங்கள் நிற்கமாட்டா. |
| 1437 | பெரிய திருமொழி || (5-9–கையிலங்கு) (திருப்பேர் நகர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக இவ் வனுபவத்துக்கு மேலே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்) 10 | வண்டறை பொழில் திருப்பேர் வரிவரவு அணையில் பள்ளி
கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கை
திண் திறல் தோள் கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை
கொண்டிவை பாடி யாடக் கூடுவர் நீள் விசும்பே –5-9-10 | பதவுரை Show / Hideவண்டு அறை பொழில், Vandu Arai Pozhil - வண்டுகள் ஒலிசெய்யப் பெற்ற சோலைகளையுடைய திருப்பேர், Thirupper - திருப்பேர் நகரில் வரி அரவு அணையில், Vari Aravu Anaiyil - வரிகளையுடைய ஆதிசேஷனாகிற படுக்கையிலே பள்ளி கொண்டு, Palli Kondo - சயனித்துக்கொண்டு உறைகின்ற மாலை, Uraikindra Maalai - நித்யவாஸம் பண்ணுகிற ஸர்வேச்வரனைக் குறித்து, கொடி மதிள் மாடம் மங்கை, Kodi Mathil Maadam Mangai - கொடி கள் விளங்கப்பெற்ற மதிள்களையும் மாளிகைகளையு முடைத்தான திருமங்கையில் அவதரித்தவராய் திண்திறல் தோற் கலியன், Thinthiral Thor Kalayan - மிக்க வலிமைகொண்ட திருத்தோள்களையுடையரான ஆழ்வார் செம் சொலால், Sem Solal - அழகிய சொற்களைக் கொண்டு மொழிந்த, Mozhinda - அருளிச்செய்த மாலை இவை, Maali Ivai - இச்சொல்மாலையை கொண்டு, Kondo - அதிகரித்து பாடி ஆட, Paadi Aada - பாடவுமாடவும் பெற்றால் நீள் விசும்பு கூடுவர், Neel Visumbu Kooduvar - பரமபதம் சென்று சேரப்பெறுவர்கள், |
| 1447 | பெரிய திருமொழி || (5-10–தீதறு) (திருநந்திபுர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நண்ணு மனமே என்று உத்தேச்யமாக சொன்ன தேசம் ஆகையாலே இவ்விடம் நமக்கு ஆஸ்ரயநீய ஸ்தலம் என்னும் பிரதிபத்தியோடே கூட அப்யசிக்க வல்ல அடியவர்கள் உடைய க்ரூரமாய் அனுபவித்தால் அல்லது நசிக்கக் கடவது அன்றிக்கே இருக்கிற பாபங்கள் சவாசனமாகப் போம்) 10 | நறை செய் பொழில் மழை தவழும் நந்தி புர விண்ணகரம் நண்ணி யுறையும்
உறை கொள் புகராழி சுரி சங்கமவை அங்கை யுடையானை ஒளி சேர்
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை யிவை ஐந்தும் ஐந்தும்
முறையிலிவை பயில வல வடியவர்கள் கொடு வினைகள் முழுதகலுமே –5-10-10 | பதவுரை Show / Hideநறை செய் பொழில் மழை தவழும், Narai Sei Pozhil Mazhai Thavazhum - தேன் மிக்க சோலைகளில் மேகங்கள் வந்து சேரப்பெற்ற நந்திபுரவிண்ணகரம், Nandhipuravin Nagaram - நந்திபுரவிண்ணகர மென்னுந் திருப்பதியை நண்ணி, Nanni - அடைந்து உறையும், Uraiyum - அங்கே நித்யவாஸம் பண்ணுமிடத்து உறை கொள் புகர் ஆழி, Urai Kol Pugar Aazhi - உறையிலிடப்பட்டுத் தேஜஸ்ஸு மிகுந்த திருவாழியையும் சுரி சங்கம், Suri Sangam - வலம்புரிச் சங்கத்தையும் அவை, Avai - மற்றுமுள்ள திவ்யாயுதங்களையும் அம் கை உடையானை, Am Kai Udaiyanai - அழகிய திருக்கையிலுடையனான எம்பெருமானைக் குறித்து, கறை வளரும், Karai Valarum - ரக்தக்கறை மிக்கிருப்பதும் ஒளி சேர், Oli Ser - ஒளிபொருந்தியதுமான வேல், Veel - வேற்படையை வல்ல, Valla - ஆளவல்ல கலியன் ஒலி, Kaliyan Oli - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த இவை மாலை, Ivai Maalai - இத்திவ்யப் பிரபந்தத்தினுள் இவை ஐந்தும் ஐந்தும், Ivai Aindhum Aindhum - இப்பத்துப் பாசுரங்களையும் முறையில், Murail - கிரமப்படியே பயில வல, Payila Val - அதிகரிக்கவல்ல அடியவர்கள், Adiyavargal - பக்தர்களுடைய கொடு வினைகள் முழுது, Kodu Vinaigal Muzhuthu - பாவங்களெல்லாம் அகலும், Akalam - நீங்கியொழியும் |
| 1457 | பெரிய திருமொழி || (6-1–வண்டுணும்) (திருவிண்ணகர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நல்ல சந்தஸ்ஸூக்களை உடைத்தான இவற்றை அப்யசிக்க வல்லார்கள் இவர் வேண்டேன் என்றதை தவிர்ந்து-அருளுதியேல் -என்ற பேற்றைப் பெறுவார்) 10 | பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல்
காமரு சீர்க் கலிகன்றி சொன்ன
பாமரு தமிழ் இவை பாட வல்லார்
வாமனன் அடி இணை மருவுவரே –6-1-10 | பதவுரை Show / Hideபூமரு, Poomaru - (எப்போதும்) பூக்கள் பொருந்தி இருக்கப்பெற்ற பொழில், Pozhil - சோலைகளாலே அணி, Ani - அலங்கரிக்கப்பட்ட விண்ணகர் மேல், Vinnagar Mael - திருவிண்ணகர்த் திருப்பதி விஷயமாக, காமரு சீர் கலிகன்றி சொன்ன, Kaamaru Seer Kalikanri Sonna - விரும்பத்தக்க ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷமியை யுடையரான திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பா மரு தமிழ் இவை, Paa Maru Tamil Ivai - தமிழ் பாசுரங்கள் நிறைந்த இத்திருப்பதிகத்தை பாட வல்லார், Paada Vallar - ஓத வல்லவர்கள் வாமனன், Vaamanan - ஸர்வேச்வரனுடைய அடி இணை, Adi Inai - உபய பாதங்களை மருவுவர், Maruvuvaar - பொருந்தப் பெறுவர். |
| 1467 | பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பத்தும் வல்லார் –அங்கே போய் சிலருக்கு பரதந்த்ரராய் இருக்கை அன்றிக்கே ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே-தாங்கள் அங்குத்தைக்கு நிர்வாஹகராய்க் கொண்டு ஸ்ரீ வைகுண்டத்தைப் பிராபிக்கப் பெறுவார்) 10 | தேனார் பூம் புறவில் திரு விண்ணகர் மேயவனை
வானாரும் மதிள் சூழ் வயல் மங்கையர் கோன் மருவார்
ஊனார் வேல் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்
கோனாய் வானவர் தம் கொடி மா நகர் கூடுவரே –6-2-10 | பதவுரை Show / Hideதேன் ஆர் பூ புறவின், Then Aar Poo Puravin - தேன்நிறைந்த பூக்களை யுடைய சோலைகள் யுடைத்தான திரு விண்ணகர், Thiru Vinnagar - திருவிண்ணகர்த் திருப்பதியிலே மேயவனை, Meyavanai - நித்யவாஸஞ்செய்தருளு மெம்பெருமான் விஷயமாக, வான் ஆரும் மதிள் வயல் சூழ் மங்கையர் கோன், Vaan Aarum Mathil Vayal Soozh Mangaiyar Kon - ஆகாசத்தையளாவியிருக்கிற மதிள்களாலும் கழனிகளாலும் சூழப்பட்ட திருமங்கையிலுள்ளார்க்கு ஸ்வாமியாய், மருவார், Maruvar - பகைவருடைய ஊன் ஆர், Oon Aar - சரீரங்களிலே புகுவதான வேற்படையையுடையரான கலியன், Kaliyan - ஆழ்வார் ஒலிசெய், Olisei - அருளிச்செய்த தமிழ் மாலை, Tamil Malai - இத் தமிழ்ப்பாசுரங்களை வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள் கோன் ஆய், Kon Aay - ஸ்ரீவைகுண்ட நிர்வாஹகராய்க் கொண்டு வானவர் தம் கொடி மா நகர், Vaanavar Tham Kodi Maa Nagar - நித்யஸூரிகளுடைய கொடிகளால் அலங்கரிக்கப் பட்ட சிறந்ததான ஸ்ரீவைகுண்டத்தை கூடுவர், Kooduvar - அடையப்பெறுவர். |
| 1477 | பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜன்ம வ்ருத்தாதிகள் ஏதேனும் ஒரு படியாக அமையும்-இத்தை அதிகரிக்கைக்கு அடியான ருசியில் கண் அழிவு அற்று இருக்கும் அத்தனையே வேண்டுவது அவர்களுக்கு பகவத் பிராப்தி பிரதிபந்தகங்கள்-போக வேணும் என்று இவர்கள் இரக்க வேண்டா அவை தானே -நமக்கு இவ்விடம் இருப்பல்ல -என்று கால் வாங்கிப் போம்) 10 | தாரார் மலர்க் கமலத் தடம் சூழ்ந்த தண் புறவில்
சீரார் நெடு மறுகில் திரு விண்ணகரானைக்
காரார் புயல் தடக்கைக் கலியன் ஒலி மாலை
ஆரார் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே –6-3-10 | பதவுரை Show / Hideதார் ஆர் மலர், Thaar Aar Malar - இதழ்மிக்க பூக்களையுடைத்தான கமலம் தடம், Kamalam Thadam - தாமரைத் தடாகங்களினால் சூழ்ந்த, Sozhndha - சூழப்பட்ட தண் புறவின், Than Puravin - குளிர்ந்த தோட்டங்களை யுடையதாய் சீர் ஆர் நெடு மறுகில், Seer Aar Nedum Marugil - செல்வம் மிக்க நீண்ட வீதிகளையுடையதான திரு விண்ணகரானை, Thiru Vinnakaranai - திருவிண்ணகரிலே எழுந்தருளியிருக்கிற அப்பன்விஷயமாக, கார் ஆர் புயல் தடக்கை கலியன், Kaar Aar Puyal Thadakkai Kalyan - காளமேகம் போன்று ஔதார்யத்தையுடைய நீண்ட கைகளையுடையரான திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச்செய்த மாலை, Maala - சொல்மாலையாகிய இவை, Ivai - இப்பாசுரங்களை ஆர் ஆர் வல்லார், Ar Ar Vallar - எவரெவர் ஓதுகின்றனரோ, அவர்க்கு, Avarkku - அவரவர்கட்கு அல்லல், Allal - பாவங்கள் நில்லா, Nilla - தங்கமாட்டாமல் ஓடிப்போய்விடும். |
| 1487 | பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்திரீகளும் கண்ணுக்கு இலக்கான யௌவனமும் உண்டான போதாக இத்தை மறவாதே அப்யசிக்க வல்லவர்கள் என்றும் ஒக்க பஞ்ச விம்சதி வார்ஷிகரான நித்ய சூரிகள் உடைய தேசத்துக்கு நியாமகராகப் பெறுவார் – என்றும் ஒக்க ஏக ரூபராய் இருக்கும் அவர்கள் இறே அவர்கள் –அவன் சாம்யா பத்தி கொடுத்து வைக்கையாலே) 10 | பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை யிலாத முன்
நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு நெஞ்சமே என்ற
கறையார் நெடுவேல் மங்கையர் கோன் கலிகன்றி சொல்
மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன்னரசு ஆவரே –6-4-10 | பதவுரை Show / Hideபிறை சேர் நுதலார், Pirai Ser Nudhalaar - சந்திரகலைபோன்ற நெற்றியை யுடையரான பெண்கள் நம்மை, Nammai - நம் விஷயத்தில் பேணுதல் இலாத முன், Penuthal Iladha Mun - ஆதரவைத் தவிர்த்துக் கொள்ளும்படியான கிழத்தனம் வருவதற்கு முன்னே, நெஞ்சமே, Nenjamai - ‘ஓ மனமே! நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு என்ற, Nirai Ser Pozhil Soozh Naraiyoor Thozha Enra - தேன் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருநறையூரை வணங்கு’ என்று உபதேசித்தவரும். கறை ஆர் நெடு வேல், Karai Aar Nedu Vel - ரத்தக்கரை நிரம்பிய நீண்ட வேற்படையை யுடையவரும் மங்கையர் கோன், Mangaiyar Kon - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவருமான கலிகன்றி, Kalikanri - ஆழ்வாருடைய சொல், Sol - இந்த ஸ்ரீஸூக்திகளை மறவாது உரைப்பவர், Maravathu Uraippavar - மறவாமல் ஓதுமவர்கள் வானவர்க்கு, Vaanavarkku - நித்ய ஸூரிகளுக்கும் இன் அரசு ஆவர், In Arasu Aavar - மேற்பட்டவர்களாவர். |
| 1497 | பெரிய திருமொழி || (6-5–கலங்க) (திரு நறையூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (செப்புமவர்க்குத்-திருமால் -சேமத் துணையாம் –இவனை அடை கொடு பாழ் போக்குகை அன்றிக்கே இவனுடைய ரஷணத்தை முடிய தலைக் கட்டிக் கொடுக்கும் துணையாம்) 10 | தாமத் துளப நீண் முடி மாயன் தான் நின்ற
நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த நறையூர் மேல்
காமக் கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை
சேமத் துணையாம் செப்புமவர்க்குத் திருமாலே –6-5-10 | பதவுரை Show / Hideதுளபம் தாமம் நீள் முடி, Thulabam Thaamam Neel Mudi - திருத்துழாயினாலாகிய மாலையை நீண்ட திருமுடியிலே யுடையனான மாயன் தான் நின்ற, Maayan Thaan Nindra - ஸர்வேச்வரன் நித்யவாஸம் பண்ணப்பெற்றதும், நாமம், Naamam - புகழ்பெற்றவைகளாய் திரள் மா மாளிகை, Thiral Maa Maaligai - நெருங்கியிருக்கின்ற பெரிய திருமாளிகைகளினால் சூழ்ந்த, Sozhndha - சூழப்பட்டதுமான நறையூர்மேல், Naraiyoor Mel - திருநறையூர் விஷயமாக,- காமம் கதிர்வேல் வல்லான் கலியன், Kaamam Kathirvel Vallaaan Kaliyam - மிகக் வொளிபொருந்திய வேற்படையைப் பிடிக்க வல்லவரான திருமங்கையாழ்வார் ஒலி மாலை, Oli Maalai - அருளிச்செய்த இச்சொல் மாலையை செப்புமவர்க்கு, Seppumavarkku - ஓதவல்லவர்களுக்கு திருமால், Thirumaal - திருமகள் கொழுநனான ஸர்வேச்வரன் சேமம் துணை ஆம், Semam Thunai Aam - எப்போதும் ரக்ஷகனான ஸஹாயபூதனாக ஆவன். |
| 1507 | பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (புறம்பே உண்டு உடுத்து போது போக்குகிற சம்சார விபூதியிலே வ்யாவ்ருத்தராய்க் கொண்டு அதிகரிப்பார் யமபடருடைய குரூரமான சப்தம் கேட்டு அஞ்சாதே –மேல் பெரும் பேறு இருந்த படி சொல்லில் – ஸ்ரீ பரம பதத்திலே போய் பதியினில் பாங்கினில் -என்கிறபடியே ஸ்ரீ நித்ய சூரிகள் எதிரே வந்து தந்தாம் இருப்பிடங்களிலே கொண்டு புக்கு உயர வைத்துத் தாங்கள் தாழ விருந்து ஸ்ரீ பாதம் விளக்கி கொண்டாடும்படியான பெருமையை உடையராய் ஆவார்கள்) 10 | செம்மொழி வாய் நால்வேத வாணர் வாழும் திரு நறையூர் மணி மாடச் செங்கண் மாலைப்
பொய்ம்மொழி யொன்றில்லாத மெய்ம்மையாளன் புலங்கைக் குல வேந்தன் புலமை யார்ந்த
அம்மொழி வாய்க் கலிகன்றி யின்பப் பாடல் பாடுவார் வியனுலகில் நமனார் பாடி
வெம்மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்தாகும் பெரும் தக்கோரே –6-6-10 | பதவுரை Show / Hideசெம் மொழி வாய், Sem Mozhi Vaai - உண்மை யுரைப்பவர்களும் நால் வேதம் வாணர், Naal Vedham Vaanar - நான்கு வேதங்களையும் அதிகரித்தவர்களுமான ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழும், Vazhum - வாழுமிடமான திருநறையூர், Thirunaraiyoor - திருநறையூரென்னுந் திருப்பதியில் மணிமாடம், Manimaadam - மணிமாடத்தில் எழுந்தருளியிக்கிற செம் கண் மாலை, Sem Kan Maalai - புண்டரீகாக்ஷனான ஸர்வேச்வரன் விஷயமாக பொய் மொழி ஒன்று இல்லாத, Poi Mozhi Ondru Illadha - பொய்யுரைகள் சிறிதும் கலசாத மெய்ம்மை ஆளன், Meimmai Aalan - ஸத்ய வசனத்தையுடையரும் புலம் மங்கை குலம், Pulam Mangai Kulam - அழகிய திருமங்கை நாட்டுக்கு வேந்தன், Vendan - தலைவரும் புலமை ஆர்ந்த அம் மொழி வாய், Pulamai Aarntha Am Mozhi Vaai - பாண்டித்யம் நிரம்பிய அப்படிப்பட்ட ஸ்ரீஸூதிகளை திருவாயிலே உடையவருமான கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வாருடைய இன்பம் பாடல், Inbam Paadal - ஆநந்தமயமான (இந்தப்) பாசுரங்களை வியன் உலகில், Viyan Ulagil - இப்பெரியவுலகத்திலே பாடுவார், Paaduvaar - பாடுமவர்கள் மெய்ம்மை சொல்லில், Meimmai Sollil - (பெறும்பலனை) உள்ளபடி சொல்லப்புகுந்தால், நமனார் பாடி, Namanar Paadi - யமலோகத்திலுண்டாகக் கூடிய வெம் மொழி கேட்டு, Vem Mozhi Kettu - கடுஞ்சொற்களைக் கேட்டு அஞ்சாமல் விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெருந்தக்கோர், Vinnavarkku Virundhu Aakum Perunthakoor - நித்யஸூரிகள் ஆதரித்துக் கொண்டாடும்படியான பெருமை பொருந்தியவராவர் |
| 1517 | பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (லோகத்திலே ஆராய்ந்து சொல்லிமவர்கள் உடைய அருகே-பாபங்கள் ஆனவை கிட்டாது – பாபங்கள் வரப் போக்க வேணும் என்று அர்த்திக்கும் படி இருக்கை அன்றிக்கே இவ்விடம் நமக்கு இருப்பிடம் அன்று என்று பிராக்தமான பாபங்கள் தானே விட்டுப் போம் சம்சாரத்தில் நெடுநாள் இருந்து ஐஹிக போகங்களையும் புஜித்து பின்னை ஸ்ரீ பரம பதத்தே போய் ஸ்ரீ நித்ய சூரிகள் ஆதரிக்க நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்) 10 | நன்மை யுடைய மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியை
கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
பண்ணி யுலகில் பாடுவார் பாடு சாரா பழ வினைகள்
மன்னி யுலகம் ஆண்டு போய் வானோர் வணங்க வாழ்வாரே –6-7-10 | பதவுரை Show / Hideநன்மை உடைய மறையோர் வாழ், Nanmai Udaiya Maraiyore Vaal - விலக்ஷணரான வைதிக ப்ராஹ்மணர்கள் வாழப்பெற்ற நறையூர், Naraiyoor - திருநறையூரிலே நின்ற, Nindra - நித்யவாஸஞ் செய்தருள்நின்ற நம்பியை, Nambiyai - எம்பெருமான் விஷயமாக கன்னி மதிள் வயல் சூழ் மங்கை கலியன், Kanni Mathil Vayal Soozh Mangai Kalyan - அழிவில்லாத மதிள்களாலும் கழனிகளாலும் சூழப்பட்ட திருமங்கைக்குத் தலைவரான ஆழ்வார் ஒலி செய்த, Oli Seitha - அருளிச்செய்த தமிழ் மாலை, Tamil Malai - தமிழ்த்தொடையான இத்திருமொழியை உலகில் பன்னி பாடுவார்பாடு, Ulagil Panni Paaduvaarpaadu - இவ்விபூதியிலே ஆராய்ந்து பாடுமவர்களிடத்தில் பழ வினைகள், Pazha Vinaigal - முன்னைத் தீவினைகள் சாரா, Saraa - அணுகமாட்டா; (அன்றியும் அவர்கள்) மன்னி உலகம் ஆண்டு, Manni Ulagam Aandu - நெடுநாள் வாழ்ந்திருந்து இவ்வுலகை அரசாட்சி புரிந்து போய், Poi - (பின்பு, பரமபதத்திலே) சென்று வானோர் வணங்க வாழ்வார், Vaanor Vananga Vaalvaar - அங்குள்ள நித்யமுக்தர்கள் ஆதரிக்கும்படிவாழப்பெறுவர். |
| 1527 | பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ மதுரையில் காட்டிலும் மிக்க நன்மை உடைத்தான ஸ்ரீ திரு நறையூரிலே நிற்கிற கல்யாண குண பூர்ணனை – ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் ஒலி உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ்த் தொடை வல்லவர்கள் ஸ்ரீ பரம பதத்தில் அங்கு உள்ள ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு தைவங்கள் ஆவார்கள் வைகுந்தன் தமர் எமர் -என்று இறே அவர்கள் சொல்லுவது –அவர்களுக்கு ஆஸ்ரயநீயர் ஆவார்கள்) 10 | மன்னு மதுரை வசுதேவர் வாழ் முதலை
நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ் தார்க்
கன்னவிலும் தோளான் கலியன் ஒலிவல்லார்
பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே –6-8-10 | பதவுரை Show / Hideமன்னு, Mannu - (பகவத்ஸம்பந்தம் ஒரு நாளும் மாறாமல்) நித்யமாயிருக்கிற (- (நல் நறையூர் நின்ற நம்பியை-;)) மதுரை, Madurai - வடமதுரையில் வசுதேவர் வாழ் முதலை, Vasudevar Vazh Mudhalai - வசுதேவருடைய வாழ்வுக்கு மூலகந்தமாக வந்து பிறந்தவனான வம்பு அவிழ் தார், Vambu Avizh Thar - பரிமளம் விளங்குகின்ற மாலையையுடையராய் கல் நவிலும் தோளான், Kal Navilum Tholan - மலையென்று சொல்லத் தகுந்த புஜங்களை யுடையரான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச்செய்த இத்திரு மொழியை வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள் பொன் உலகில், Pon Ulagil - பரமபதத்திற்சென்று வானவர்க்கு, Vaanavarkku - அங்குள்ள நித்யஸூரிகளுக்கு புத்தேளிர் ஆகுவர், Puttelir Aaghuvar - பூஜ்யராகப் பெறுவர். |
| 1537 | பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பாடல் பத்தும் வல்லார் –போக பூமிகளில் பிரதானமான ஸ்ரீ பரம பதத்திலே போய் ஸ்ரீ நித்ய சூரிகள் உடன் ஒரு கோவையாய் அவனை நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்) 10 | திண் களக மதிள் புடை சூழ் திருநறையூர் நின்றானை
வண் களக நில வெறிக்கும் வயல் மங்கை நகராளன்
பண் களகம் பயின்ற சீர் பாடல் இவை பத்தும் வல்லார்
விண் களகதது இமையவராய் வீற்று இருந்து வாழ்வாரே –6-9-10 | பதவுரை Show / Hideதிண் களகம் மதிள் புடைசூழ், Thin Kalagam Mathil Pudaisool - திடமாய் (சுண்ணாம்புச்) சாந்து இடப்பெற்றதான திருமதிளாலே நாற்புறமும் சூழப்பட்ட திருநறையூர், Thirunaraiyoor - திருநறையூரில் நின்றானை, Nindraanai - எழுந்தருளியிருக்குமெம்பெருமான் விஷயமாக வண் களகம், Van Kalagam - அழகிய அன்னப்பறவைகள் நிலவு எறிக்கும், Nilavu Erikkum - நிலாப்போல் விளங்கப்பெற்ற வயல், Vayal - கழனிகளையுடைத்தான மங்கை நகராளன், Mangai Nagaralan - திருமங்கை நாட்டுக்குத் தலைவரான ஆழ்வார் பண்கள் அகம் பயின்ற, Pankal Agam Payindra - பண்களுக்குள்ளே ஸாரமான பண்ணிலே அருளிச்செய்த சீர், Seer - சீர்மை பொருந்திய பாடல் இவை பத்தும், Paadal Ivai Paththum - இப்பாசுரங்கள் பத்தையும் வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள் விண்கள் அகத்து, Vingkal Akaththu - மேலுலகங்களுள் முக்கியமான பரமபதத்தில் இமையவர்ஆய், Imaiyavar Aayi - நித்யஸூரிகளோடு ஒரு கோஷ்டியாய் வீற்றிருந்து, Veetrirundhu - பெருமைபெறவிருந்து வாழ்வார், Vaalvaar - வாழப்பெறுவர். |
| 1547 | பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதிலே பொருந்தி இத்தை சொல்ல வல்லவர்கள் உடைய பாபம் இவர்கள் பக்கலில் நில்லாது – இவர்களை விட்டுப் போய் பின்னையும் தான் நிற்கை அன்றிக்கே நசிக்கும் – த்விஷந்த பாபக்ருத்யாம் -என்கைக்கு முதல் இல்லை) 10 | வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று நறையூர் நெடுமாலை
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தைக்
காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை
மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே –6-10-10 | பதவுரை Show / Hideவாவி தடம் சூழ், Vaavi Thadam Sool - நடைவாவிகளாலும் தடாகங்களாலும் சூழப்பட்டதும் மணிமுத்தாறு, Manimuthaaru - மணிமுத்தாற்றை யுடையதுமான நறையூர், Naraiyoor - திருநறையூரி லெழுந்தருளியிருக்கிற நெடுமாலை, Nedumalaik - ஸர்வேச்வரனை நாவின் பரவி, Naavin Paravi - நாவினால் துதித்தும் நெஞ்சில் கொண்டு, Nenjil Kondu - நெஞ்சில் சிந்தித்தும் நம்பி நாமத்தை, Nambi Naamathai - அந்தத் திருநறையூர் நம்பியின் திருநாமம் விஷயமாக காவி தட கண் மடவார்கேள்வன், Kaavi Thada Kan Madavaarkelvan - கருநெய்தற் பூப்போன்று பரந்த கண்களையுடைய மடவார்கட்கு விரும்பத் தகுந்தவராயிருந்த கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச்செய்த மாலை, Maala - இச்சொல்மாலையை மேவி, Mevi - விரும்பி சொல்ல வல்லார் பாவம், Solla Vallar Paavam - சொல்ல வல்லவர்களுடைய பாபங்கள் நில்லா, Nilla - நிற்கமாட்டாமல் வீயும், Veeyum - அழிந்துபோதும். |
| 1557 | பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னைப் போலே நீங்களும் இவ் விஷயத்திலே ருசியை உடையிகோளாய் பாடுவது ஆடுவதாகவே ஸ்ரீ பரம பதம் தன்னடையே சித்திக்கும் படியாம் – அதுக்கு விரோதியான பாபம் தன்னடையே போம்) 10 | வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும்
தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ் மாலை
தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்றாட
உண்டே விசும்பு உந்தமக்கு இல்லை துயரே –7-1-10 | பதவுரை Show / Hideதொண்டீர், Thondir - பக்தர்களே! (- (விசும்பு உண்டு பரமபதம் கிடைக்கும்.)) வண்டு ஆர் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு, Vandu Aar Pozhil Soozh Naraiyur Nambikku - வண்டுகள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருநறையூரி லெழுந்தருளி யிருக்கும் பெருமானுக்கு என்றும், Endrum - எக்காலத்தும் தொண்டு ஆய், Thondu Aay - அடிமைபூண்டு கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் ஒலி செய், Oli Sei - அருளிச் செய்த தமிழ் மாலை இவை, Tamil Maalai Ivai - இத்தமிழ்ப் பாசுரங்களை பாடுமின், Paadumin - பாடுங்கோள் பாடி நின்று ஆட, Paadi Nindru Aada - (அப்படி) பாடியாடப்பெறில் உந்தமக்கு, Undhamakku - உங்களுக்கு துயர் இல்லை, Thuyar Illai - ஸம்ஸாரத் துன்பங்கள் இல்லையாய்விடும்; |
| 1567 | பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தை அனுசந்தித்தார்க்கு -இது ஒரு சப்தமே -என்று கொண்டாடும் இதுவே ஸ்வ பாவமாம் படி இருக்கிற சொல் தொடையைச் சொல்லும் அவர்கள்-இத்தை சொல்லுகையே போரும் ஆய்த்து பிரயோஜனம் – அதுக்கு மேலே-போக பூமிகளிலே மேலாய் இருக்கிற ஸ்ரீ பரம பதத்திலே போய் இவ் வாத்மாவின் உடைய ஸ்வரூப அனுரூபமான முறையாலே நிரதிசய ஸ்வரூபா நந்திகளாய் பின்னை ஒரு நாளும் புநரா வ்ருத்தி இல்லாத பேற்றைப் பெறுவார்கள்) 10 | நன்னீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியைக்
கன்னீர் மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர் கோன்
சொன்னீர் சொல் மாலை சொல்லுவார்கள் சூழ் விசும்பில்
நன்னீர்மையால் மகிழ்ந்து நெடும் காலம் வாழ்வாரே –7-2-10 | பதவுரை Show / Hideநல் நீர் வயல் புடை சூழ் நறையூர், Nal Neer Vayal Pudai Soozh Naraiyoor - நல்ல நீரையுடைய கழனிகளாலே நாற்புறமுஞ் சூழப்பட்ட திருநறையூரில் நின்ற, Nindra - நித்யாவஸம் செய்தருள்கின்ற நம்பியை, Nambiyai - எம்பெருமான் விஷயமாக, கல் நீர மால் வரை தோள், Kal Neera Maal Varai Thol - ஒலிக்கின்ற அருவிநீரையுடைய பெரிய மலைபோன்ற திருத்தோள்களை யுடையவரும் மங்கையர் கோன், Mangaiyar Koon - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவருமான கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார் (அருளிச்செய்த) சொல் நீர, Sol Neera - கொண்டாடிச் சொல்ல வேண்டுவதையே ஸ்வபாவமாகவுடைய சொல் மாலை, Sol Maalai - இச்சொல் மாலைகளை சொல்லுவார்கள், Solluvaargal - கற்பவர்கள் சூழ் விசும்பில், Sozh Vizhumbil - பெரிய திருநாட்டில் நல் நீர்மையால், Nal Neermaiyaal - (நித்தியகைங்கர்யமாகிற) சிறந்த ஸ்வபாவத்தோடு கூடி நெடுங்காலம், Nedungkaalam - சாச்வதாமாக மகிழ்ந்து வாழ்வார், Magizhndhu Vaazvaar - பரமாநந்தங்கொண்டு வாழப்பெறுவர். |
| 1577 | பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பகவத் விஷயத்தில் ருசி உடையார் இத்தைப் பாடப் பாருங்கோள்-கரும்பு தின்னக் கூலி இறே பாடுகை தானே பிரயோஜனமாக போந்து இருக்க அதுக்கு மேலே பிராப்தி பிரதிபந்தகமான பாபங்கள் நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம் இல்லை -என்று தன்னடையே விட்டுப் போம்) 10 | தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி
நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –7-3-10 | பதவுரை Show / Hideதோடு, Thodu - இதழ்களானவை விண்டு, Vindhu - விரிந்து அலர், Alar - விகஸிக்கப்பெற்ற பூ பொழில், Poo Pozhil - பூஞ்சோலைகளையுடைய மங்கையர் தோன்றல், Mangaiyar Thondral - திருமங்கை நாட்டிலுள்ளவர்கட்குத் தலைவரும் திரு ஆலி நாடன், Thiru Aali Naadan - திருவாலி நாட்டுக்குப் பிரபுவானவரும் வாள், Vaal - வாளை யுடையவருமான கலியன் அவன், Kalyan Avan - அத் திருமங்கையாழ்வார் நல் நறையூர் நின்ற நம்பி தன், Nal Naraiyur Nindra Nambi Than - திருநறையூர் நம்பியினுடைய நல்ல மா மலர் சே அடி, Nalla Maa Malar Che Adi - அழகிய சிறந்த திருவடித்தாமரைகளை சென்னியில் சூடியும், Chennaiyil Soodyum - (தமது) தலைமே லணிந்துகொண்டும் தொழுதும், Thozhudum - வணங்கியும் எழுந்து, Ezhundhu - எழுந்திருந்து ஆடியும், Aadiyum - (ப்ரீதிக்குப் போக்கு வீடாகக்) கூத்தாடியும் தொண்டர் கட்கு, Thondar Kadku - பாகவதர்களுக்கு (உஜ்ஜீவனமாக) சொன்ன, Sonna - அருளிச் செய்த சொல் மாலை, Sol Maalai - சொல் தொடையாகிய இவை பத்து பாடல், Ivai Paththu Paadal - இந்தப் பத்துப் பாசுரங்களையும் தொண்டீர், Thondir - எம்பெருமானடியார்களே! பாடுமின், Paadumin - நீங்கள் ஓதுங்கள்; பாட, Paada - அங்ஙனம் ஓதவே நும்மிடை பாவம் நில்லா, Nummidai Paavam Nilla - உங்களிடத்திற் பாவங்கள் நிற்கமாட்டா. |
| 1587 | பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஆழ்வார்-ஒலியை உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ் தொடையைக் கொண்டு-பகவத் விஷயத்தில் ருசி உடையீர் – ஹேய ப்ரத்ய நீகமாய்-தர்ச நீயமாய் இருந்துள்ள திருவடிகளிலே சூட்டுங்கோள்- அது செய்யும் பொது அஞ்சலியைப் பண்ணா நின்ற கையை உடையராய்க் கொண்டு தொழுது இம்மாலையைச் சூட்டுங்கோள்) 10 | பூ மாண் சேர் கருங்கழலார் போல் நடந்து வயல் நின்ற பெடையோடு அன்னம்
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும் தண் சேறை அம்மான் தன்னை
வா மான் தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை தொண்டீர்
தூ மாண் சேர் பொன்னடி மேல் சூட்டுமின் நும் துணைக் கையால் தொழுது நின்றே –7-4-10 | பதவுரை Show / Hideஅன்னம், Annam - அன்னப்பறவைகள் வயல் நின்ற பெடையோடு, Vayal Nindra Pedaiyodu - கழனிகளில் திரிகிற பேடைகளோடு கூட, பூ மாண் சேர் கரு குழலார் போல் நடந்து, Poo Maan Ser Karu Kuzhalar Pol Nadandhu - பூக்களணிந்து அழகு பெற்ற கறுத்த கூந்தலை யுடைய இளம் பெண்களைப்போல நடந்து (பின்பு) தே மாவின், The Maavin - தேன் மாமரத்தினுடைய இன் நிழலில், In Nizhalil - இனிமையான நிழலில் கண் துயிலும், Kan Thuyilum - கண்ணுறங்கப்பெற்ற தண் சேறை, Than Serai - திருச்சேறையி லெழுந்தருளி யிருக்கிற அம்மான் தன்னை, Ammaan Thannai - எம்பெருமான் விஷயமாக,- வாம்மான் தேர், Vaammaan Ther - ஓடிவருகின்ற குதிரைகள் பூண்ட தேரையுடையரான பரகாலன் கலிகன்றி, Parakalan Kalikanri - திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச் செய்த மாலை கொண்டு, Maalai Kondu - இச் சொல்மாலைகளைக் கொண்டு தொண்டீர், Thondir - ஓ பக்தர்களே!, தூ, Thoo - பரிசுத்தமாய் மாண் சேர், Maan Ser - மாட்சிமை தங்கியதாய் பொன், Pon - விரும்பத்தக்கதான அடிமேல், Adimael - (அப்பெருமானது) திருவடிகளின் மேல் நும் துணை கையால், Num Thunai Kaiyal - உங்களுடைய அஞ்ஜலிபந்தமான கைகளினால் தொழுது நின்று, Thozhudhu Nindru - ஸேவித்திருந்து சூட்டுமின், Sootumin - சூட்டுங்கோள். |
| 1597 | பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சொல்களால் சம்ருத்தமாய் உள்ள தமிழ் தொடையை வாயாலே சொல்ல – பாவத்தை உண்டாக்குவதானாலும் தவிர ஒண்ணாததைச் சொல்ல பாவங்கள் தன்னடையே போம்) 10 | நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை
வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன்
சொல்லில் பொதிந்த தமிழ் மாலை சொல்லப் பாவம் நில்லாதே –7-5-10 | பதவுரை Show / Hideநெல்லில், Nellil - நெற்பயிரினிடையே (முளைத்த) குவளை, Kuvazhai - கருநெய்தற் பூக்கள் கண் காட்ட, Kan Kaatta - (அவ்வூர் பெண்களது) கண்கள் போன்றுவிளங்கவும் நீரில், Neeril - நீரிலே முளைத்த குமுதம், Kumudham - ஆமபல் பூக்கள் வாய் காட்ட, Vaai Kaatta - (அவர்களது) வாய் போன்று விளங்கவும் அல்லி கமலம், Alli Kamalam - இதழ்மிக்க தாமரைப் பூக்கள் முகம் காட்டும், Mugam Kaatum - (அவர்களது) முகம்போன்று விளங்கவும் பெற்ற கழனி, Kazhani - கழனிகளையுடைய அழுந்தூர், Azhundhoor - திருவழுந்தூரிலே நின்றானை, Nindraanai - எழுந்தருளியிருக்கு மெம்பிரான் விஷயமாக.- வல்லி பொதும்பில், Valli Pothumbil - பூங்கொடிகள் மிக்க முழஞ்சுகளிலே குயில் கூவும், Kuyil Koovum - குயில்கள் கூவப்பெற்ற மங்கை, Mangai - திருமங்கை நாட்டுக்கு வேந்தன், Vendan - தலைவரான பரகாலன், Parakalan - ஆழ்வார் (அருளிச்செய்த) சொல்லில் பொலிந்த, Sollil Polintha - நல்ல சொற்களினால் விளங்குகின்ற தமிழ் மாலை, Tamil Maalai - இத்தமிழ்ப் பாசுரங்களை சொல்ல, Solla - ஓதவே பாவம், Paavam - பாவங்கள் நில்லா, Nilla - இல்லையாய் விடும். |
| 1607 | பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அடைவில் தப்பாதபடி அனுசந்திக்க வல்லவர்கள்-ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே த்ரிபாத் விபூதி அடையத் தாங்கள் இட்ட வழக்காகப் பெறுவர்கள்) 10 | திறல் முருகன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அறமுதல் ஆனவனை யணி யாலியர் கோன் மருவார்
கறை நெடுவேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும்
முறை வழுவாமை வல்லார் முழுதாள்வர் வானுலகே –7-6-10 | பதவுரை Show / Hideதிறல் முருகன் அனையார், Thiral Murugan Anaiyar - வலிமையில் ஸுப்ரஹ்மண்யன் போன்றவாகள் நிறைந்த (- (தென் அழுந்தையில், மன்னி நின்ற-;)) அறம் முதல்வனவனை, Aram Muthalvanavanai - ஸகலதர்மங்களுக்கும் மூலகாரணமான பெருமாள் விஷயமாக, அணி ஆலியர் கோன், Ani Aliyar Kon - அழகிய திருவாலிப்பதியிலுள்ளார்க்குத் தலைவராய் மருவார், Maruvar - பகைவருடைய கறை, Karai - ரக்தக்கறையையுடைத்தான நெடுவேல், Neduvel - நீண்டவேற்படையை வலவன், Valavan - ஆளவல்லவரான கலிகன்றி, Kalikanri - ஆழ்வார் சொல், Sol - அருளிச்செய்ய ஐ இரண்டும், Ai Irandum - இப்பத்துப்பாசுரங்களையும் முறை வழுவாமை, Murai Vazhuvamai - முறைதப்பாமல் வல்லார், Vallar - ஓதவல்லவர்கள் வான் உலகு, Vaan Ulagu - பாரமபதத்தை முழுது, Muzhuthu - பூர்ணமாக ஆள்வர், Aalvar - ஆளப்பெறுவர். |
| 1617 | பெரிய திருமொழி || (7-7–திருவுக்கும்) (திருவழுந்தூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பத்தையும் அப்யசிக்க வல்லார் –சிரகாலம் ராஜாக்களாய் -லோகங்களை அடைய நிர்வஹித்து பெரிய முத்தின் குடைக்கீழே இருந்து நிரவதிக ப்ரீதி யுக்தராய்ப் பெறுவார் – இந்த்ரிய வஸ்தையை அனுசந்தித்து அஞ்சின ஸ்ரீ ஆழ்வார் இத்தை பலமாகச் சொல்லுவான் என் என்னில் இவருக்கு அந்த ஐஸ்வர்யம் பாகவத சேஷமாக்குக்கைக்கு உடலாகையாலே அதுவும் புருஷார்த்தத்திலே புக்குப் போய்த்து காண்-என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தாராம்) 10 | அன்னம் மன்னும் பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானைக்
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன் மங்கைக் குல வேந்தன்
சொன்ன இந் தமிழ் நன் மணிக் கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார்
மன்னி மன்னவராய் உலகாண்டு மான வெண் குடைக் கீழ் மன்னுவாரே –7-7-10 | பதவுரை Show / Hideஅன்னம் மன்னு, Annam Mannu - அன்னப்பறவைகள் பொருந்திவாழ்கிற பை பூ பொழில் சூழ்ந்த, Pai Poo Pozhil Soozhntha - பரந்த பூஞ்சோலைகளாற் சூழப்பட்ட அழுந்தூர், Azhundhoor - திருவழுந்தூரில் மேல் திசை நின்ற, Mel Thisai Nindra - மேலைத்திக்கில் எழுந்தருளியிருக்கின்ற அம்மானை, Ammaanai - எம்பெருமானைக்குறித்து,- கன்னி மன்னு திண் தோள், Kanni Mannu Thin Thol - ஒரு நாளு மழியாத மிடுக்கை யுடைய தோள்களை யுடையராய் ஆலி நாடன், Aali Naadan - திருவாலிநாட்டுக்குத் தலைவராய் மங்கை, Mangai - திருமங்கையிலுள்ளார்க்கு குலம் வேந்தன், Kulam Vendan - குலக்கிரமமக வந்த ராஜாவான கலிகன்றி, Kalikanri - ஆழ்வார் சொன்ன, Sonna - அருளிச்செய்த இன் தமிழ், In Tamil - மதுரமான தமிழ்ப்பாஷையினாலாகிய! நல் மணி கோவை, Nal Mani Kovai - நல்ல ரத்னமாலை போலச் சிறந்த தூய மாலை இவை பத்தும், Thuya Maalai Ivai Paththum - பரிசுத்தமான இந்தச் சொல்மாலைகள் பத்தையும் வல்லார், Vallar - ஓதி யுணருமவர் மன்னவர் ஆய், Mannavar Aay - பிரபுக்களாய் மன்னி, Manni - நெடுநாள் வாழ்ந்து உலகு ஆண்டு, Ulaku Aandu - லோகங்களை அரசாட்சி செய்துக்கொண்டு மானம், Maanam - பெரிய பெண் குடை கீழ், Pen Kudai Keezh - வெண்குடை நிழலிலே இருந்து மகிழ்வர், Magizhvar - மகிழப்பெறுவர். |
| 1627 | பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வ வித ரஷணங்களையும் பண்ணும் இடத்தில்தன்னை எண்ணினால் பின்னை ஒருவரையும் எண்ணாது இருக்கிற சர்வாதிகனை –ஸ்ரீ திரு வழுந்தூரிலே நின்று அருளின சர்வாதிகன் ஆனவனை – இப்பத்தையும் வல்லார்-ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும்-என்று தாம் சேர்த்து அனுபவித்த பிரகாரம் இருக்கிறபடி – முதல் பாட்டு -ஸ்ரீ ஷீரார்ணவம்/ 2-4-5-10—திர்யக் திருவவதாரம் -நான்கு பாடல்களிலும் ஸ்ரீ கஜேந்திர ரஷணம் ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண திரு வவதாரம் -மீது ஐந்து பாசுரங்கள் இவற்றை அப்யசிக்க வல்லாருக்கு ப்ரஹ்மாதிகள் உடைய பதம் உண்டாக முன்னம் தட்டில்லை – ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் தாம் பாகவத சேஷத்வம் ஆக்குகைக்கு உடலாய் இருக்கையாலே ஐஸ்வர் யத்தையும் ஆதரித்து அருளினார் என்று அருளிச் செய்வர்) 10 | பன்றியாய் மீனாகி யரியாய் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை
கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் கலி கன்றி ஒலி செய்த இன்பப் பாடல்
ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும் வல்லார் ஒலி கடல் சூழ் உலகாளும் உம்பர் தாமே –7-8-10 | பதவுரை Show / Hideஅன்று, Andru - முன்பொருகாலத்தில் பன்றி ஆய், Panri Aayi - வராஹாவதாரமாகியும் மீன் ஆகி, Meen Aagi - மத்ஸ்யாவதாரமாகியும் அரி ஆய், Ari Aay - நரஸிம்ஹாவதாரமாகியும் பாரை, Paarai - நிலவுலகத்தை படைத்து, Padaithu - ஸ்ருஷ்டித்தும் காத்து, Kaathu - ரக்ஷித்தும் உண்டு, Undu - பிரளய காலத்தில் உட்கொண்டும் உமிழ்ந்த, Umizhndha - (அந்தப்பிரளயம் நீங்கினவாறே வெளிநாடுகாண) உமிழ்ந்துமருளிய பரமன் தன்னை, Paraman Thannai - பரம்பொருளானவனும் அமரர்க்கு அதிபதியும், Amararukku Adhipathiyum - தேவர்கட்குத் தலைவனான இந்திரனென்ன அயனும், Ayanum - பிரம்மதேவனென்ன சேயும், Seyum - அவனது மகனான சிவபிரானென்ன ஆகிய இவர்கள் அடிபணிய, Adhipaniya - தனது திருவடிகளை வணங்கும்படி அணி அழுந்தூர் நின்ற, Ani Azhundhoor Nindra - திருவழுந்தூரில் நின்ற திருக்கோலமாக எழுந்தருளியிருக்கிற கோவை, Kovai - தேவாதிதேவனுமான எம்பெருமானைப்பற்றி கன்றி நெடு வேல் வலவன், Kandri Nedhu Vel Valavan - சினங்கொண்டு நீண்டுள்ள வேற்படையில் வல்லவரும் ஆலி நாடன், Aali Naadan - திருவாலிநாட்டுக்குத் தலைவரும் கலிகன்றி, Kalikanri - கலிகன்றியென்னும் திருநாமமுடையவருமான திருமங்கை யாழ்வார் ஒலிசெய்த, Oliseitha - இன்னோசையுடையனவாம்படி பாடியருளிய இன்பம் பாடல், Inbam Paadal - மதுரமான பாடல்களான ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும், Ondrinodu Naangum Oru Aindhum - இப் பத்துப் பாசுரங்களையும் வல்லார், Vallar - ஓதியுணர்ந்தவர்கள் ஒலிகடல் சூழ், Olikaadal Soozh - ஒலிக்கின்ற கடலாற் சூழப்பட்ட உலகு, Ulaku - இவ்வுலகங்களை ஆளும், Aalum - ஆளவல்ல உம்பர் தாம், Umbar Thaam - தேவர்களாவர். |
| 1637 | பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாபம் வருகைக்கு யோக்யமான தேசத்திலே இருக்கச் செய்தேயும் இவற்றை வாயாலே சொல்லி ஆஸ்ரயிக்க- பாபங்கள் தானே நமக்கு இவ்விடம் இருப்பிடம் அல்ல -என்று விட்டுப் போம்) 10 | சீரார் நெடுமறுகில் சிறுபுலியூர்ச் சல சயனத்து
ஏரார் முகில் வண்ணன் தன்னை இமையோர் பெருமானைக்
காரார் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை
பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே –7-9-10 | பதவுரை Show / Hideசீர் ஆர் நெடு மறுகில், Seer Ar Nedum Marukil - சீர்மைபொருந்திய நீண்ட திருவீதிகளை யுடைத்தான (- சலசயனக்கோயிலிலே (எழுந்தருளியிருக்கின்ற)) சிறுபுலியூர், Sirupuliyoor - சிறுபுலியூரில் சலசயனத்து ஏர் ஆர், Eer Ar - அழகுமிக்க முகில்வண்ணன் தன்னை, Mukilvannan Thannai - மேகம்போன்ற திருநிறத்தையுடையனாய் இமையோர் பெருமானை, Imaiyor Perumanai - நித்யஸூரிகட்குத் தலைவனான திருமாலைக்குறித்து,- கார் ஆர் வயல் மங்கைக்கு, Kar Ar Vayal Mangaiyku - கருமைபொருந்திய கழனிகளையுடைய திருமங்கை நாட்டுக்கு இறை, Irai - தலைவரான கலியன், Kaliyan - ஆழ்வார் ஒலி, Oli - அருளிச்செய்த மாலை இவை, Malai Ivai - இச்சொல் மாலைகளை பாரார், Paarar - பூமியிலுள்ளவர்கள் பரவி, Paravi - சொல்லி தொழ, Thozha - (அப்பெருமானைத்) தொழுமளவில் பாவம், Paavam - பாவங்கள் பயிலா, Payila - நிற்கமாட்டா (தொலைந்துபோம்) |
| 1647 | பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது-என்னோடு அதிகரிக்கில் அறியலாம் ஒரு வசிஷ்டனோடே-ஒரு சாந்தீபனோடே தாழ நின்று அதிகரிக்கக் கடவ அவனுக்கு ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ – இவை பத்தையும் –அனுசந்திப்பார்க்கு அடைவு படச் சொல்லுகையால் உண்டான அருமையாலே வல்லராய் உபாதான லோகங்களில் போக பூமிகள் எல்லாம் புக்கு அங்கு உண்டான போகங்களைப் புஜிப்பார்கள்) 10 | கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10 | பதவுரை Show / Hideகலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார் கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்று, Kannamankaiyul Kandu Konden Enru - ‘திருக்கண்ணமங்கையில் (எம்பெருமானை) ஸேவிக்கப்பெற்றேன்’ என்று காதலால் உரை செய்த, Kadalal Urai Seyta - அன்புடனருளிச் செய்த வண்ணம் ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்று இவை, Vannam On Tamil Onpatotu Onru Ivai - இசையையுடைத்தாய் அழகியதான இத்தமிழ்ப் பாசுரங்ள் பத்தையும் வல்லர் ஆய் உரைப்பார், Vallar Ay Uraippar - நிபுணராய்ச் சொல்லுமவர்கள் மதியம் தவழ் விண்ணில், Madhiyam Taval Vinnil - சந்தியன் தவழப்பெற்ற மேலுலகங்களில் (சென்று) விண்ணவர் ஆய், Vinnavar Ay - தேவர்களாய் மகிழ்வு எய்துவர், Makizhvu Eytuvar - (போகங்களையநுபவித்து) ஆநந்த மடைவர்கள்; மெய்ம்மை சொல்லில், Meimmai Sollil - உண்மையாகச் சொல்லப் புகுந்தால், வெண் சங்கம் ஒன்று ஏந்திய கண்ண, Ven Sangam Onru Entin Kanna - வெண்ணிறமாய் விலக்ஷணமான ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தைத் தரித்துள்ள பெருமானே! குறிப்பு ஆகில், Kurippu Agil - திருவுள்ளமாயின் கவியின் பொருள், Kaviyin Porul - இப்பாசுரங்களின் பொருள் நின் தனக்கும் கற்கலாம், Nin Tanakkum Karkalam - (ஸர்வஜ்ஞனான) உனக்கும் கேட்டுணரத்தக்கதாகும். |
| 1657 | பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரமபதத்தில் -ஆண்மின்கள் -என்றபடியே தாங்களே நிர்வாஹகராய் -இவ்வருகு உள்ளார் அடங்கலும் சாத்யர் ஆவார்கள்) 10 | மாவளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று
காவளரும் கடி பொழில் சூழ் கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன
பாவளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
பூவளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய் புகழ் தக்கோரே –8-1-10 | பதவுரை Show / Hideமா வளரும் மென் நோக்கி, Maa Valarum Men Nookki - மானினுடைய நோக்குப் போன்று விசாலமாய் மெல்லிதான நோக்கை யுடையளான மாதராள், Madharaal - (பரகால) நாயகியானவள் மாயவனை கண்டாள் என்று, Maayavanai Kandaal Endru - ஆச்சரியனான எம்பெருமானைக் கண்டாள் கொலோ என்று கா வளரும் கடி பொழில் சூழ், Kaa Valarum Kadi Pozhil Soozh - சோலைகளில் வளரும் பரிமளமானது பூமியெங்கும் பரவப்பெற்ற கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளியுள்ள அம்மானை, Ammaanai - ஸ்வாமியைக் குறித்து கலியன் சொன்ன, Kaliyan Sonna - திருமங்கையாழ்வாரருளிச் செய்த பா வளரும், Paa Valarum - சந்தங்கள் நிறைந்திருக்கப் பெற்ற தமிழ் மாலை, Tamizh Maalai - தமிழ்ப் பாசுர மாலையாகிய பன்னிய நூல், Panniya Nool - கொண்டாடுதற்கு உரிய இத்திவ்ய ப்ரபந்தத்திற் சேர்ந்த இவை ஐந்தும் ஐந்தும், Ivai Aindhum Aindhum - இப்பத்துப் பாட்டையும் வல்லார், Vallaar - ஓதியுணரவல்லவர்கள் பூ வளரும், Poo Valarum - பூக்கள் நிறைந்த கற்பகம் சேர், Karppagam Ser - கல்ப வ்ருக்ஷம் பொருந்திய பொன்னுலகில், Ponnulakil - பரமபதத்தில் மன்னவர் ஆய், Mannavar Aay - நிர்வாஹகர்களாகவும் புகழ் தக்கோர், Pugazh Thakkor - (இங்குள்ளவரையில்) புகழ்க்குத் தகுதியுடையவர்களாகவும் இருக்கப் பெறுவர். அடிவரவு, Adivaravu - சிலை, செரு, துன்னு, தார், அடி, பேர், செவ்வரத்த, கொற்ற, வண்டு, மாவளரும், தெள்ளியீர். |
| 1667 | பெரிய திருமொழி || (8-2–தெள்ளியீர்) (திரு கண்ணபுரம் 2) - (தலைவியின் நிலை கண்ட தாய் தலைமகளை இயற்பழித்தும் தலைமகளது இளமைக்கு இறங்கியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தால்-கவி பாடிற்று இன்னாரை பாடினேன் இந் நான் என் கவி தான் இன்னது -இது கற்றார்க்கு பலம் இன்னது -என்று இவை நாலையும் சொல்லுகிறார்) 10 | கார்மலி கண்ண புரத்து எம் அடிகளை
பார்மலி மங்கையர் கோன் பரகாலன் சொல்
சீர்மலி பாடல் இவை பத்தும் வல்லவர்
நீர்மலி வையத்து நீடு நிற்பார்களே –8-2-10 | பதவுரை Show / Hideகார் மலி, Kaar Mali - மேகங்கள் நிறைந்திருக்கப்பெற்ற கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருக்கிற எம் அடிகளை, Em Adigalai - எம்பெருமானைக் குறித்து பார் மலி மங்கையர் கோன் பரகாலன், Paar Mali Mangaiyar Kon Barakalan - இப்பூமியெங்கும் புகழ் மிக்க திருமங்கையாழ்வார் சொல், Sol - அருளிச்செய்த சீர் மலி, Seer Mali - பகவத்குணங்கள் நிறைந்த பாடல், Paadal - பாசுரங்கள் இவை பத்தும், Ivai Pathum - இத்திருமொழியை வல்லவர், Vallavar - கற்றுணரவல்லவர்கள் நீர் மலி, Neer Mali - கடல் சூழ்ந்த வையத்து, Vaiyathu - இப் பூண்டலத்திலே நீடு, Needu - நீண்டகாலம் நிற்பார்கள், Nirpargal - நிலைநிற்கப் பெறுவர். |
| 1677 | பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாவிலே பொருந்தும் படி பாட சஹ்ருதயமாக பண்ணின பாபங்களும் விட்டுப் போம் – உக்தி மாத்ரத்தைச் சொல்ல புத்தி பூர்வகமாக பண்ணின பாபங்கள் கிட்டா -என்கிறார்) 10 | தேமருவு பொழில் புடை சூழ் திருக் கண்ண புரத் துறையும்
வாமனனை மறி கடல் சூழ் வயலாலி வள நாடன்
காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை
நா மருவி யிவை பாட வினையாய நண்ணாவே –8-3-10 | பதவுரை Show / Hideதே மருவு, The Maruvu - தேன் பொருந்திய பொழில், Pozhil - சோலைகளினால் புடை சூழ், Pudai Soozh - நாற்புறமுஞ் சூழப்பட்ட திருக்கண்ணபுரத்து, Thirukkannapurathu - திருக்கண்ணபுரத்தில் உறையும், Urayum - நித்யவாஸம் பண்ணுகிற வாமனனை, Vamananai - வாமநாவதாரம் செய்தருளின பெருமானைக் குறித்து, மறி கடல் சூழ், Mari Kadal Soozh - அலை மடிகின்ற கடலாலே சூழப்பட்டு வயல் வளம், Vayal Valam - வயல் வளங்களையு முடைத்தான ஆலி நாடன், Aali Naadan - திருவாலிநாட்டுக்குத் தலைவரும் காமரு சீர், Kamaru Seer - விரும்பத்தக்க குணங்களையுடையவருமான கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார் கண்டு உரைத்த, Kandu Uraitha - ஆராய்ந்து அருளிச்செய்த தமிழ் மாலை இவை, Tamizh Maalai Ivai - இத்தமிழ்ப் பாசுரங்களை நாமருவி, Naamaaruvi - நாவிலே பொருந்தவைத்து பாட, Paada - பாடுமளவிலே வினை ஆய, Vinai Aaya - பாபமென்று உள்ளவை யெல்லாம் நண்ணா, Nannaa - கிட்டாதே ஒழிந்துபோம் |
| 1687 | பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேஷ பூதரான நாங்கள் இவற்றைக் கொண்டு பாடும்படியாக நீ உன் ஹிருதயத்திலே கொண்டு அவன் பக்கலிலே அறிவித்து எங்களுக்கு அவன் முகம் தரும்படி பண்ணி எங்கள் குறையைத் தீர்க்கப் பாராய் – என்கிறார் பத்தாம் பாசுரத்தில் இவர் ஒருவரும் ஆஸ்வஸ்தர் ஆகவே எல்லாரும் ஆஸ்வஸ்தர் காணும்) 10 | வண்டமரும் சோலை வயலாலி நன்னாடன்
கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை
கொண்டல் நிற வண்ணன் கண்ண புரத்தானைத்
தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோல்தும்பீ –8-4-10 | பதவுரை Show / Hideவண்டு அமரும் சோலை, Vandu Amarum Solai - வண்டுகள் படிந்த சோலைகளையுடையதும் (- (கோல் தும்பீ!-)) வயல், Vayal - கழனிகளை யுடையதுமான ஆலி, Aali - திருவாலி யென்கிற நல் நாடன், Nal Naadan - நல்ல நாட்டுக்குத் தலைவரும் கண்ட சீர், Kanda Seer - பிரத்யக்ஷமான திருக்குணங்களையுடையவரும் வென்றி, Vendri - ஜயசீலருமான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச்செய்த மாலை, Maalaik - இச்சொல் மாலையைக் கொண்டு, கொண்டல் நிறம் வண்ணன், Kondal Niram Vannaan - மேகத்தின் நிறம்போன்ற நிறத்தையுடையனான கண்ண புரத்தானை, Kanna Puraththaanai - திருக்கண்ணபுரத் தெம்பெருமானை தொண்டரோம், Thondarom - அடியோங்கள் பாட, Paada - பாடும்படியாக நினைந்து, Ninaindhu - நீ நெஞ்சிற்கொண்டு ஊதாய், Oodhai - ஊதவேணும். |
| 1697 | பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத் திரு மொழியை அப்யசிக்க வல்லார் –பிரிவாற்றாமை கூப்பிடுவது தவிர்ந்து நித்ய விபூதியில் நித்ய சூரிகளோடே கூடி அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்கிறபடியே ஹர்ஷத்துக்கு போக்கு விட்டுக் கூப்பிட்டு பின்னை ஒரு காலும் புனராவ்ருத்தி இல்லாத பேற்றைப் பெறுவர்) 10 | வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை யறிந்து முன்னுரை செய்த
கார் கொள் பூம்பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி வல்லார்
ஏர் கொள் வைகுந்த மா நகர் புக்கு இமையவரோடும் கூடுவரே –8-5-10 | பதவுரை Show / Hideவார் கொள், Vaar Kol - கச்சு அணிந்த மென் முலை, Men Mulai - மெல்லிய முலைகளையடைய மடந்தையர் அவர், Madandaiyar Avar - (திருவாய்ப்பாடியிலுள்ள) அப்பெண்கள் தட கடல் வண்ணன், Thada Kadal Vannan - பெரிய கடலின் நிறம் போன்ற நிற முடையனான கண்ணபிரானுடைய தாளை, Thaalai - திருவடிகளை நயந்து, Nayandhu - ஆசைப்பட்டு ஆர்வத்தால், Aarvaththal - அன்பினால் முன் புலம்பிய புலம்பலை, Mun Pulambiya Pulambalai - முன்பு கதறின கதறலை அறிந்து, Arindhu - உட்கொண்டு, கார் கொள் பை பொழில் மங்கையர் காவலன், Kaar Kol Pai Pozhil Mangaiyar Kaavalan - மேக ஸஞ்சாரத்தையுடைய பரந்தசோலைகளையுடைத்தான திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான கலிகன்றி, Kalikanri - ஆழ்வார் உரைசெய்த, Uraichseitha - அருளிச் செய்த ஒலி, Oli - இச்சொற்களை வல்லார், Vallaar - ஓதியுரணவல்லவர்கள் ஏர்கொள், Aerkol - அழகிய வைகுந்தம் மா நகர், Vaikundham Maa Nagar - பரமபதமென்னுந் திருநாட்டிலே புக்கு, Pukku - புகுந்து இமையவரோடும், Imaiyavarodum - நித்யஸுரிகளோடே கூடுவர், Koodhuvar - சேரப்பெறுவர்கள். |
| 1707 | பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத் திரு மொழியை வல்லார் –பௌமம் மநோ ரதம் ஸ்வர்க்க்யம் -என்கிறபடியே அலங்காரங்கள் எல்லாம் -சத்ர சாமராதி ராஜ சிஹ்னங்களை-பெற்று –இவ்வளவிலே போகாதே ஸ்ரீ பரமபதத்திலே போய் புக்கு பதியினில் பாங்கினில் -என்கிறபடி ஸ்ரீ நித்ய சூரிகள் திருவடிகளில் விழும்படியான பேற்றைப் பெறுவார்) 10 | கருமா முகில் தோய் நெடுமாடக் கண்ண புரத் தெம்மடிகளைத்
திரு மா மகளால் அருள் மாரிச் செழு நீராலி வள நாடன்
மருவார் புயல்கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார்
இரு மா நிலத்துக்கு அரசாகி யிமையோர் இறைஞ்ச வாழ்வாரே –8-6-10 | பதவுரை Show / Hideகரு மா முகில், Karumaa Mukil - கறுத்துப் பெருத்தமேகங்கள் (- (மேல் பரமபதத்திலுஞ்சென்று)) தோய், Thoy - வந்து படியப் பெற்ற நெடு மாடம், Nedu Maadam - பெரிய மாளிகைகளையுடைத்தான கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளியிருக்கிற எம் அடிகளை, Em Adigalai - எம்பெருமான் விஷயமாக, திருமாமகளால், Thirumaamagalal - பெரிய பிராட்டியாரடியாக அருள்மாரி, Arulmaari - ‘அருள் மாரி’ என்ற திருநாமம் பெற்றவரும் செழு நீர் ஆலி வளம் நாடன், Sezhu Neer Aali Valam Naadan - ஜலஸம்ருத்தியையுடைய திருவாலி வளநாட்டுக்குத் தலைவரும் மருவு ஆர் புயல் கை, Maruvu Aar Puyal Kai - எப்போதும் நிலைத்திருக்குந் தன்மைவாய்ந்த காளமேகத்தோடொத்த ஔதார்யத்தை யுடையவரும் மங்கை வேந்தன், Mangai Vendan - திருமங்கைக்குப் பிரபுவுமான கலிகன்றி, Kalikanri - ஆழ்வார் அருளிச்செய்த ஒலி, Oli - இப்பாசுரங்களை வல்லார், Vallaar - கற்றுவல்லவர்கள் இரு மா நிலத்துக்கு அரசு ஆகி, Iru Maa Nilaththukku Arasu Aagi - (பூமியும் ஸ்வர்க்கமுமாகிற) இரண்டு உலகங்களுக்கும் அரசராயிருக்கப்பெற்று, இமையோர், Imaiyor - நித்தியமுக்தர்கள் இறைஞ்ச, Irainj - ஸத்கரிக்கும்படி வாழ்வார், Vazhvar - வாழப்பெறுவர்கள். |
| 1717 | பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அழகிய இசையோடு கூட – இத் திரு மொழியை –வண் குறிஞ்சி -என்று சொல்லுவார்கள் – இத்தை அப்யசிக்குமவர்கள் –அவர்களுக்கு அவஸ்யம் அநு போக்தவ்யம் -என்கிற பாபங்கள் கிட்டாது) 10 | மலி புகழ் கண புர முடைய வெம்மடிகளை
வலி கெழு மதிளயல் வயலணி மங்கையர்
கலியன தமிழிவை விழுமிய விசையினொடு
ஒலி சொலு மடியவ ருறு துயரிலரே –8-7-10 | பதவுரை Show / Hideமலி புகழ், Mali Pugazh - நிறைந்த புகழையுடைய கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரத்தை உடைய, Udaiya - இருப்பிடமாகவுடைய எம் அடிகளை, Em Adigalai - எம்பெருமான் விஷயமாக வடி கெழு, Vadi Kezhu - திண்மை பொருந்திய மதிள், Mathil - மதிளையும் அயல், Ayal - சுற்றுப்புறங்களில் வயல், Vayal - கழனிகளையும் அணி, Ani - அலங்காரமாகக்கொண்ட மங்கையர், Mangaiyar - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான கலியன, Kaliyan - திருமங்கையாழ்வாருடைய இவை தமிழ், Ivai Tamil - இத்தமிழ்ப் பாசுரங்களை விழுமிய இசையினொடு, Vizhumiya Isaiyinodu - சிறந்த இசையோடு கூட ஒலி சொலும், Oli Solum - அப்யஸிக்கின்ற அடியவர், Adiyavar - பக்தர்கள் உறு துயர் இலர், Uru Thuyar Ilir - அவச்யமபவிக்குப்படியாக ஏற்பட்ட துக்கங்களினின்றும் விடுபட்டவராவர். |
| 1727 | பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே கண்டு அடிமை புக்க –ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த தேனோடு ஒத்த நல்ல சொல்லை உடைய தமிழ் மாலை சொல்ல பாவமானது போம்) 10 | மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே –8-8-10 | பதவுரை Show / Hideமீனோடு, Meenodu - மத்ஸ்ய ரூபியாயும் ஆமை, Aamai - கூர்ம ரூபியாயும் கேழல், Kezhal - வராஹரூபியாயும் அரி, Ari - நரஸிம்ஹ ரூபியாயும் குறள் ஆய், Kural Aay - வாமநமூர்த்தியாயும் முன்னும் இராமன் அய், Munnum Iraaman Ayi - பரசுராம மூர்த்தியாயும் தான் ஆய், Thaan Aay - ஸாக்ஷாதவதாரமான ஸ்ரீராமபிரானாயும் பின்னும் இராமன் ஆய், Pinnum Iraaman Aay - பலராமனாயும் தாமோதரன் ஆய், Thaamodharan Aay - கண்ணபிரானாயும் கற்கியும் ஆனான் தன்னை, Karkiyum Aanaan Thannai - கல்கியாயும் திருவவதாரஞ் செய்யுமியல் பினனான எம்பெருமானை கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே (ஸேவித்து) அடியன், Adiyan - சேஷபூதரான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் ஒலி செய், Oli Sei - அருளிச் செய்த தேன் ஆர் இன் சொல், Then Aar In Sol - தேன் போன்று மதுரமான சொற்களையுடைய தமிழ் மாலை, Tamizh Maalai - இத்தமிழ்ப்பாசுரங்களை செப்ப, Seppa - அப்யஸிக்குமளவில் பாவம், Paavam - பாவங்கள் நில்லா, Nilla - நிற்கமாட்டாமல் அகன்றொழியும், |
| 1737 | பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இன் தமிழாகிற இசைத் தொடையைக் கொண்டு கைங்கர்ய ருசியை உடையரான நீங்கள் –கடல் சூழ்ந்த பூமியிலே இவற்றைப் பாடுவது ஆடுவதாய் உஜ்ஜீவித்துப் போகப் பாருங்கோள் – அன்றிக்கே – சர்க்கே பி நோ பஜா யந்தே பிரளயே நவ்ய தந்திச -என்கிறபடியே வரக் கடவதான பிரளயத்திலே புக்கு அழுந்தி நோவு படாமே நீங்கள் இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக உங்கள் சஞ்சாரத்தாலே ஜகத்தை உஜ்ஜீவிப்பிக்க பாருங்கோள் என்னுதல்) 10 | செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன்
கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை
இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள் கொண்டு தொண்டீர்
வரு நீர் வையம் உய்ய விவை பாடி யாடுமினே –8-9-10 | பதவுரை Show / Hideகரு, Karhu - கர்ப்பத்தில் நீர், Neer - நீர்கொண்ட முகில், Mugil - மேகம் போன்ற வண்ணன், Vannan - திருநிறத்தையுடையரான கண்ணபுரத்தானை, Kannapuraththaanai - சௌரிப்பெருமாள் விஷயமாக,- செரு நீர வேல் வலவன், Seru Neera Vel Valavan - யுத்தம் செய்வதையே இயல்வாக வுடைய வேற்படையைப் பிரயோகிக்கவல்லவரும் மங்கையர் கோன், Mangaiyar Kon - திருமங்கையிலுள்ளார்க்கு அரசருமான கலிகன்றி, Kalikanri - ஆழ்வார் (அருளிச்செய்த) இரு நீர், Iru Neer - மிக்க நீர்மையையுடைய இன் தமிழ், In Tamil - இனிய தமிழினாலாகிய இன் இசை, In Isai - இனிய இசையையுடைய இவை மாலைகள் கொண்டு, Ivai Malaigal Kondo - இச்சொல் மாலைகளைக் கொண்டு தொண்டீர், Thondheer - தொண்டர்களே! வரு நீர் வையம் உய்ய, Varu Neera Vaiyam Uyy - கடல் சூழ்ந்த உலகம் உஜ்ஜீவிக்கும்படி பாடி, Paadi - வாயாரப்பாடி ஆடுமின், Aadumin - மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாகக் கூத்தாடுங்கள் |
| 1747 | பெரிய திருமொழி || (8-10–வண்டார்) (திரு கண்ணபுரம் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவற்றை நிதியாக கொண்டு பாடும் அடியார்களுக்கு கால தத்வம் உள்ளதனையும் ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே ஸ்ரீ பரமபதம் ஆட்சியாகக் கடவது – ஸ்ரீ சர்வேஸ்வரன் என் பக்கல் பண்ணின ஓரம் இருந்தபடி கண்டேனுக்கு இத்தை அப்யசித்தவர்களுக்கும் அவ்வளவு சென்று அல்லது பர்யவசிக்க ஒண்ணாது என்னும் இடத்தை அழகியதாக அறிந்தோம்) 10 | கண்ட சீர்க் கண்ண புரத்துறை யம்மானை
கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை
பண்டமாய்ப் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும்
அண்டம் போய் ஆட்சி யவர்க்கு அது அறிந்தோமே –8-10-10 | பதவுரை Show / Hideகண்ட சீர், Kanda Seer - கண்ணாலே ப்ரத்யக்ஷமாகக் காணக்கூடிய செல்வம் பொருந்திய கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே உறை, Urai - நித்யவாஸஞ்செய்தருள்கின்ற அம்மானை, Ammaanai - சௌரிப் பெருமான் விஷயமாக, சீர் கொண்ட, Seer Konda - ஸ்ரீ வைஷ்ணவலக்ஷமி வாய்ந்த தொண்டன், Thondan - தாஸனான கலியன், Kaliyan - திருமங்கைமன்னன் ஒலி, Oli - அருளிச்செய்த மாலை, Maalaik - இப்பாமாலையை பண்டம் ஆய், Pandam Aay - நிதியாகக் கொண்டு பாடும், Paadum - பாடவல்ல அடியவர்க்கு, Adiyavarkku - ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு எஞ்ஞான்றும், Ennjanrum - எப்போதும் அண்டம் போய் ஆட்சி, Andam Poi Aatchi - பரமபதத்திலிருந்து கொண்டு வானகமாளப் பெறுவதாகும்; அவர்க்கு அது அறிந்தோம், Avarkku Adhu Arindhom - அவர்கட்கு அதுவே பேறு என்பதை நிச்சயமாகத் தெரிந்து கொண்டோம். |
| 1757 | பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கும் அழியாத ஊரை வில்லாலே அக்னி கிளரும்படியாக செற்ற ஸ்ரீ திருக் கண்ணங்குடியுள் நின்றானை – ஸ்ரீ ஆழ்வார் ஒலியை உடைத்தாக அருளிச் செய்தவையாய்–லஷணங்களில் குறை அற்று இருந்துள்ள இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்க்களுக்கு ஸ்ரீ பகவத் தாரித்ர்யம் இல்லை – என்கிறார்) 10 | கலையுலா வல்குல் காரிகை திறத்துக் கடல் பெரும் படையொடும் சென்று
சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற திருக் கண்ணங்குடியுள் நின்றானை
மலைகுலா மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
உலவு சொல் மாலை யொன்பதொடு ஒன்றும் வல்லவர்க்கு இல்லை நல்குரவே –9-1-10 | பதவுரை Show / Hideகலை உலா அல்குல், Kalai Ula Alkul - நல்ல ஆடை உலாவுகின்ற இடுப்பையுடையளான காரிகை திறத்து, Kaarikai Thirathu - அழகிற்சிறந்த ஸீதாபிராட்டிக்காக கடல் பெரு படையொடும் சென்று, Kadal Peru Padaiyodum Sendru - ஸமுத்திரத்திற் காட்டில பெரிதான (வானர) சேனையோடே எழுந்தருளி சிலையினால், Silaithinaal - சார்ங்கவில்லாலே இலங்கை தீ எழ செற்ற, Ilankai Thee Ezh Setra - இலங்கை நெருப்புப்பற்றி யெரியும்படி அழித்தவனும் திருக்கண்ணங்குடியுள் நின்றானை, Thirukkannangudiyul Nindraanai - திருக்கண்ணங்குடியில் எழுந்தருளு யிருப்பவனுமான எம்பெருமான் விஷயமாக; மலைகுலா மாடம், Malaikula Maadam - மலையென்று கொண்டாடிச் சொல்லத்தக்க மாடங்களை யுடைத்தான மங்கையர், Mangaiyar - திருமங்கை நாட்டில் உள்ளவர்கட்கு தலைவன், Thalaivan - தலைவரும் மானம் வேல், Maanam Veel - சிறந்த வேற்படையை யுடையவருவான கலியன், Kaliyan - ஆழ்வாருடைய வாய் ஒலிகள், Vaai Oligal - ஸ்ரீ ஸூக்தியாய் உலவு, Ulavu - லக்ஷணங்களில் குறையற்றவையான சொல் மாலை ஒன்பதோடு ஒன்றும், Sol Maalai Onpathodu Ondrum - இப்பத்துப் பாசுரங்களையும் வல்லவர்க்கு, Vallavarkku - ஓதவல்லவர்களுக்கு நல்குரவு, Nalkuravu - ஏழைமை இல்லை, Illai - இல்லையாம். |
| 1767 | பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னை பிராபிக்கைக்கு வழி இட்டுக் கொடுத்த ஜகத் காரண பூதனானவன் –ஸ்ரீ திரு நாகையிலே தன் அழகாலே விட ஒண்ணாத படி பண்ணிக் கொண்டு நின்றான் ஆயிற்று – தம்மால் அளவிட ஒண்ணாமையால் பிரித்து அனுபவிக்கிறார்-உயிர் தோழியும் தானுமாய் அனுபவித்த ஏழு பாடல்கள் எல்லாரையும் குறித்த இரண்டு பாடல்கள்-பல ஸ்ருதி ஒன்றும் இத்தை அப்யசிக்க வல்லார்கள் இங்கும் கோலின பலங்களும் பெற்று இது தன்னின் பலமான ஸ்ரீ நித்ய சூரிகளோடு ஒரு கோவையாய் இனியராகப் பெறுவார்கள்) 10 | அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே –9-2-10 | பதவுரை Show / Hideஅன்னமும், Annamum - ஹம்ஸமாகவும் கேழலும், Keelalum - வராஹமாகவும் மீனும், Meenum - மத்ஸ்யமாகவும் ஆய, Aaya - அவதரித்த ஆதியை, Aadhiyai - ஜகத்காரணபூதரும் நாகை, Naagai - திருநாகையில் எழுந்தருளியிருக்கின்ற அழகியாரை, Azhagiyaarai - அழகிற்சிறந்தவருமான ஸௌந்தர்யராஜப் பெருமாளைக் குறித்து, கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன், Kanni Nal Maa Madil Mangai Vendan - அழிவற்ற நல்ல பெரிய மதில்களையுடைய திருமங்கைக்குத் தலைவரும் காமரு சீர், Kaamaru Seer - விரும்பத்தக்க குணங்களையுடையவருமான கலிகன்றி, Kalikanri - கலியன் குன்றா இன் இசையால் சொன்ன, Kundraa In Isaiyaal Sonna - குறைவில்லாத இனிய இசையுடனே அருளிச்செய்த செம் சொல் மாலை, Sem Sol Maalai - அழகிய சொல்மாலையாகிய ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும், Ezham Irandum Oor Ondrum - இப்பத்துப்பாசுரங்களையும் வல்லார், Vallar - கற்றுவல்லவர்கள் மன்னவர் ஆய், Mannavar Aayi - (இவ்வுலகில்) சக்கரவர்த்திகளாயிருந்து உலகு ஆண்டு, Ulaku Aandu - அரசாட்சிபுரிந்து மீண்டும், Meendum - அதற்குமேலும் வானவர் ஆய், Vaanavar Aayi - முக்தர்களாகி மகிழ்வு எய்துவர், Magizhvu Eydhuvar - ஆனந்தமடைவர்கள். |
| 1777 | பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பத்து பாட்டையும் அதிகரிக்கவுமாம் அன்றிக்கே ஒரு பாட்டை அதிகரிக்கவுமாம் அதில் அர்த்தானுசந்தானம் பண்ணவுமாம் அதில் இசையை அப்யசிக்கவுமாம் – இவ்விசை தன்னை ஒருவன் பாடா நின்றால் அதில் அசஹமானனாம் அதன்றிக்கே ஒழியுமுமாம் – ஏதேனும் ஒரு ஆகாரத்தில் அந்வயமே வேண்டுவது – அவர்களுக்கு வாசஸ் ஸ்தான தேசம் -துக்க கந்த ரஹீதமான நித்ய விபூதியே இத்தை இங்கே அப்யசிக்க அவர்கள் இங்குத்தை தனிமை தீர அர்ச்சிராதி மார்க்கமே அங்குள்ளார் கொண்டாடப் போய் நித்ய விபூதியிலே புக்கு நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்) 10 | இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப்
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்து அழகிய புல்லாணி மேல்
கலங்கல் இல்லாப் புகழான் கலியன் ஒலி மாலை
வலம் கொள் தொண்டர்க்கு இடமாவது பாடல் வைகுந்தமே –9-3-10 | பதவுரை Show / Hideஇலங்கு முத்தும், Ilangu Muthum - விளங்குகின்ற முத்துக்களையும் பவளம் கொழுந்தும், Pavalam Kozhundum - பவளத்துளிர்களையும் எழில் தாமரை, Ezhil Thamarai - அழகிய தாமரைகளையு முடைத்தாய் புலங்கள் முற்றும், Pulangal Mutrum - உள்ள இடங்கள் முழுதும் பொழில் சூழ்ந்து, Pozhil Soozhndu - சோலைகளால் சூழப்பட்டதாய் அழகு ஆய, Azhagu Aaya - அழகியதான புல்லாணி மேல், Pullaani Mael - திருப்புல்லாணிவிஷமாக, கலங்கல் இல்வா புகழான், Kalangal Ilvaa Pugazhaan - கலக்கமற்ற கீர்த்தியையுடைய வரான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச் செய்த மாலை, Maala - சொல்மாலையாகிய இத்திரு மொழியை வலங்கொள் தொண்டர்க்கு, Valangol Thondarkku - அதிகரிக்கின்ற பாகவதர்களுக்கு இடம் ஆவது, Idam Aavadhu - இருப்பிடமாவது (எவ்விடமென்றால்) பாடு இல்லைகுந்தம், Paadu Illaikundham - ஒரு துன்பமுமில்லாத ஸ்ரீவைகுண்டமே. |
| 1787 | பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த ஸ்ரீ திரு மொழியை அப்யசிக்க வல்லார் –இங்கும் குறைவற அனுபவித்து அங்கும் குறைவற அனுபவிக்கப் பெறுவார்கள்) 10 | பொன்னலரும் புன்னை சூழ் புல்லாணி யம்மானை
மின்னிடையார் வேட்கை நோய் கூர விருந்ததனைக்
கன்னவிலும் திண தோள் கலியன் ஒலி வல்லார்
மன்னவராய் மண்ணாண்டு வானாளும் உன்னுவரே –9-4-10 | பதவுரை Show / Hideபொன் அலரும் புன்னை சூழ், Pon Alarum Punnai Soozh - பொன் போன்ற பூக்கள் மலரப்பெற்ற புன்னை மரங்களால் சூழப்பட்ட புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியி லெழுந்தருளியிருக்கிற அம்மானை, Ammaanai - எம்பெருமான் விஷயத்திலே மின் இடையார், Min Idaiyaar - மின்னல்போல் நுண்ணிய இடையை யுடையரான பெண் பிறந்தவர்கள் வேட்கை நோய் கூர, Vetkai Noi Koora - ஆசை நோய் மிகும்படியாக இருந்தனை, Irundhanai - இருக்கும் நிலைமையைப் பற்றி கல் நவிலும் திண்தோள் கலியன், Kal Navilum Thinthol Kalyan - மலையென்று போற்றத் தகுந்த திண்ணிய திருத்தோள்களை யுடையரான ஆழ்வார் ஒலி, Oli - அருளிச் செய்த இப்பாசுரங்களை வல்லார், Vallar - கற்று வல்லவர்கள் மன்னவர் ஆய், Mannavar Aay - அரசர்களாகி மண் ஆண்டு, Man Aandu - பூமியை ஆட்சிபுரிந்து (பிறகு) வான் நாடும், Vaan Naadum - பரமபத நாட்டிற்கும் உன்னுவர், Unnuvar - விரைந்தெழுவர் |
| 1797 | பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் வர்த்திக்கிற குறுங்குடி யிலே என்னைக் கொடு போய் பொகடுங்கோள் – இதுக்கு வேறு ஒரு பலம் சொல்லா விட்டது -உகந்து அருளின தேச பிராப்தி தானே பலமாய் இருக்கையாலே) 10 | செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவபிரான் திரு மா மகளைப்
பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட பேரருளாளன் பெருமை பேசக்
கற்றவன் காமரு சீர்க் கலியன் கண்ணகத்தும் மனத்தும் அகலாக்
கொற்றவன் முற்றுலக ஆளி நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் –9-5-10 | பதவுரை Show / Hideதென் இலங்கை, Then Ilangai - தென் திசையிலுள்ள இலங்கா புரியானது மலங்க, Malanga - கலங்கும்படியாக செற்றவன், Settravan - த்வம்ஸம்பண்ணினவனும் தேவபிரான், Devapiraan - தேவர்களுக்குப் பிரபுவானவனும் திரு மாமகனை டிபற்றும் என் நெஞ்சம் கோயில் கொண்ட, Thiru Mamakanai Tipratum En Nenjam Koyil Konda - பெரிய பிராட்டியாரைப் பெற்றுவைத்தும் என் மனதைக் கோயிலாகக்கொண்டுள்ளவனுமான பேரருளாளன், Perarulalan - பேரருளாளப்பெருமானுடைய பெருமை, Perumai - பெருமையை பேச கற்றவன், Pesakattravan - அருளிச் செய்ய வல்லவரும் காமரு சீர், Kaamaru Seer - விரும்பத்தக்க குணங்களை யுடையவருமான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வாருடைய கண்ணகத்தும், Kannagathum - கண்களினுள்ளும் மனத்தும், Manathum - நெஞ்சினுள்ளும் அகலா, Akala - விட்டுநீங்காத கொற்றவன், Kotravan - ஸர்வேச்வரனாய் முற்றுலகு ஆளி, Mutrulagu Aali - ஸகலலோகநாதனான பெருமான் நின்ற, Nindra - நித்யவாஸம்பண்ணப்பெற்ற குறுங்குடிக்கே, என்னை உய்த்திடுமின் |
| 1807 | பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உக்தி ஆபாசங்களால் அழிக்க ஒண்ணாத படியான திண்மையை உடைய இத்தை அஹ்ருத்யமாகச் சொல்ல புத்தி பூர்வகமாகப் பண்ணின பாபங்கள் போம்) 10 | சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம்
கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல்
கலையார் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை
நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே –9-6-10 | பதவுரை Show / Hideசிலைபால், Silaihaal - சார்ங்கத்தாலே இலங்கை, Ilankai - லங்காபுரியை செற்றான், Setraan - அழித்தவனும் மற்று, Mattru - அன்றியும் சினம், Sinam - சிற்றங்கொண்ட ஓர் வேழம், Oru Vezham - (குவலயாபீடமென்கிற) ஒரு யானையினது கொலை ஆர், Kolai Aar - கொலைத் தொழில்வல்ல கொம்பு, Kombu - தந்தங்களை கொண்டான், Kondaan - முறித்துக் கொண்டவனான பெருமான் மேய, Meya - நித்யவாஸம் பண்ணுகிற குறுங்குடி மேல், Kurungkudi Mael - திருக்குறுங்குடி விஷயமாக கலை ஆர் பனுவல்வல்லான், Kalai Aar Panuvalvallaaan - சாஸ்த்ரோக்த லக்ஷணங்களமைந்த கவிகளைப் பாட வல்லவரான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச் செய்த மாலை, Maala - சொல்மாலையாகிய நிலை ஆர் பாடல், Nilai Aar Paadal - நிலைநிற்கும் பாசுரமாகிய (வேதரூபமான) இத்திருமொழியை பாட, Paada - பாடவே பாவம், Paavam - பாவங்கள் நில்லா, Nilla - நில்லாமல் ஓடிப்போம் |
| 1817 | பெரிய திருமொழி || (9-7–தந்தை தாய்) (திரு வல்லவாழ்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தைக் கற்று வல்லார் –பூமிப் பரப்புக்கு அடைய தாங்களே நிர்வாஹகராய் தேஹ சமனந்தரம்-நித்ய விபூதியிலே புக்கு-ஏஷஹ்யேவா நந்தயாதி -என்கிறபடியே நிரதிசய ஆநந்த யுக்தராவார்) 10 | மறைவலார் குறைவிலா ருறையுமூர் வல்ல வாழடிகள் தம்மை
சிறைகுலா வண்டறை சோலை சூழ் கோல நீளாலி நாடன்
கறையுலா வேல் வல்ல கலியன் வாயொலி யிவைகற்று வல்லார்
இறைவராய் இருநிலம் காவல் பூண்டு இன்ப நன்கெய்துவாரே –9-7-10 | பதவுரை Show / Hideமறை வலார், Marai Valar - வேதமல்லவர்கள் குறைவு இலார், Kuraivu Ilar - குறைவொன்றுமில்லாதவர்களாய்க் கொண்டு உறையும் ஊர், Urayum Oor - நித்யவாஸம்பண்ணுமிட மான வல்லவாழ், Vallavaazh - திருவல்லவாழில் எழுந்தருளியிருக்கிற அடிகள் தம்மை, Adigal Thammai - ஸ்வாமிவிஷயமாக சிறைகுலாவண்டு அறைசோலை சூழ், Sirai Kulavandu Araisolai Soozh - சிறகையும் கொண்டாட்டத்தையுமுடைய வண்டுகள் ரீங்காரஞ் செய்யப்பெற்ற சோலைகளால் சூழப்பட்ட கோலம், Kolam - அழகிய நீள், Neel - பெரிய ஆலி நாடன், Aali Naadan - திருவாலிநாட்டுக்குத் தலைவரும் கறை உலாம், Karai Ulaam - ரத்தக்களைகழுவாத வேல் வல்ல, Vel Valla - வேற்படையை யுடையருமான சலியன், Saliyan - திருமங்கையாழ்வார் வாய் ஒலி, Vaai Oli - திருவாயமலர்ந்த இவை, Ivai - இப்பத்துப் பாசுரங்களை கற்று வல்லார், Kattru Vallar - ஓதியுணரவல்லவர்கள் இறைவர் ஆய், Iraivar Aay - அரசர்களாயிருந்துகொண்டு இரு நிலம், Iru Nilam - விசாலமான இந்நிலத்தை காவல் பூண்டு, Kaval Poondhu - ஆண்டு கொண்டு நன்கு இன்பம் எய்துவரார், Nangu Inbam Eydhuvarar - பரமாநந்தமடையப்பெறுவர் |
| 1827 | பெரிய திருமொழி || (9-8–முந்துற) (திரு மாலிருஞ்சோலை 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ ஹிருதயத்திலே அனுசந்தித்துக் கொண்டு பாடுகைக்கு ஈடான பாக்கியம் உடையவர்கள் இக்கடல் சூழ்ந்த பூமிக்கு நிர்வாஹகர் ஆகப் பெறுவார்) 10 | வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை மா மணி வண்ணரை வணங்கும்
தொண்டரைப் பரவும் சுடரொளி நெடு வேல் சூழ் வயலாலி நன்னாடன்
கண்டல் நல வேலி மங்கையர் தலைவன் கலியன் வாயொலி செய்த பனுவல்
கொண்டிவை பாடும் தவம் உடையார்கள் ஆழ்வார் இக்குரை கடலுலகே –9-8-10 | பதவுரை Show / Hideவண்டு அமர், Vandu Amar - வண்டுகள் படிந்த சாரல், Saaral - பக்கங்களையுடைய மாலிருஞ் சோலை, Maalirunj Cholai - திருமாலிருஞ்சோலையிலுள்ள மா மணி வண்ணரை, Maa Mani Vannarai - நீலமணிவண்ணரான அழகரை வணங்கும் தொண்டவர், Vanangum Thondavar - வணங்குகின்ற பாகவதர்களை பரவும், Paravum - துதிப்பவரும் சுடர் ஒளி நெடு வேல், Sudar Oli Nedu Vel - மிக்கவொளி பொருந்திய பெரிய வேற்படையை யுடையவரும் சூழ் வயல் ஆலி நல் நாடன், Sool Vayal Aali Nal Naadan - பரந்த வயல்களை யுடைய நல்ல திருவாலி நாட்டுக்குத் தலைவரும் கண்டல் நல் வேலி மங்கையர் தலைவன், Kandal Nal Veli Mangaiyar Thalaivan - தாழைகளை அழகிய வேலையாகக் கொண்ட மங்கைநாட்டிலுள்ளார்க்கு நிர்வாஹகருமான கலியன், Kaliyan - ஆழ்வார் வாய் ஒலி செய்த, Vaai Oli Seitha - திருவாய்மலர்ந்தருளிய பனுவல இவை கொண்டு, Panuvai Ivai Kondu - இப்பாசுரங்களைக் கொண்டு பாடும் தவம் உடையார்கள், Paadum Thavam Udaiyargal - பாடும்படியான பாக்கிய முடையவர்கள் குரை கடல் இவ்வுலகு, Kurai Kadal Ivvalagu - ஒலிக்கின்ற கடலால் சூழப்பட்ட இவ்வுலகை ஆள்வர், Aalvar - ஆளப்பெறுவர். |
| 1837 | பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாடலான பனுவல் பத்தையும் அப்யசிப்பார்க்கு பிராப்தி பிரதிபந்தங்கள் அடங்கலும் போம் – காணும் கொலோ என்கிற சம்சயம் இவர் தம்மோடேயாய் இவர் உடைய பிரபந்தம் அப்யசிப்பார்க்கு பிராப்தியில் ஒரு கண் அழிவு இல்லை) 10 | தேடற்கு அரியவனைத் திரு மாலிருஞ்சோலை நின்ற
ஆடற்பரவையனை அணியா யிழை காணும் என்று
மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே –9-9-10 | பதவுரை Show / Hideதேடற்கு அரயவனை, Theedarku Arayavananai - (ஒருவற்கும் தன்முயற்சியாலே) தேடிப்பிடிக்க முடியாதவனும் திருமாலிருஞ்சோலை நின்ற, Thirumaliruncholai Nindra - திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளியிருப்பவனும் ஆடல் பறவையனை, Aadal Paravaiyai - (ஸந்தோஷத்திற்குப் போக்குவிடன) ஆட்டத்திற்சிறந்த பெரிய திருவடியை ஊர்தியாகவுடையனுமான ஸுந்தரபாஹுவை. அணி ஆய் இழை காணும் என்று, Ani Aay Izhai Kaanum Endru - அழகிய ஆபரணங்களையுடைய என்மகள் காணப்பெறுவளென்று. மாடம் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன, Maadam Kodi Mathil Soozh Mangaiyaar Kalikanri Sonna - மாடங்களில் நாட்டின் கொடிகளோடு கூடின திருமதிள்களாலே சூழப்பட்ட திருமங்கை நாட்லுள்ளர்க்கு தலைவரான ஆழிவார்ருளிச்செய்த பாடல், Paadal - பாடலாகிய பனுவல் பத்தும், Panoval Pathum - இப்பத்துப்பாசுரங்களையும் பயில்பார்க்கு, Payilpaarakku - கற்பவர்களுக்கு பாவங்கள் இல்லை, Paavangal Illai - பாவமொன்று மில்லையாகும். |
| 1847 | பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தும் வல்லார்களுக்கு ஸ்ரீபரமபதமே வாசஸ் ஸ்தானம் என்கிறார்) 10 | ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணி பொழில்
சேல்கள் பாய் கழனித் திருக் கோட்டியூரானை
நீல மா முகில் வண்ணனை நெடுமாலை யின் தமிழால் நினைந்த விந்
நாலும் ஆறும் வல்லார்க்கு இடமாகும் வானுலகே –9-10-10 | பதவுரை Show / Hideஆலும் மா வலவன், Aalum Maa Valavan - ஆடல்செய்நின்ற குதிரையை ஏறிச்செலுத்துதலில் ஸமர்த்தரும் மங்கையர் தலைவன், Mangaiyar Thalaivan - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவருமான கலிகன்றி, Kalikanri - ஆழ்வார், அணி யொழில், Ani Yozhil - அழகிய சோலைகளையும் சேல்கள் பாய் கழனி, Selgal Pai Kazhani - மீன்கள் துள்ளிவிளையாடுகின்ற கழனிகளையுமுடைத்தான திருக்கோட்டி யானை, Thirukkoatti Yaanai - திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருப்பவனும் முகில் வண்ணனை, Mugil Vannana - மேகம்போன்ற நிறத்தை யுடையவனும் நெடு மாலை, Nedu Maalai - (அடியார்திறத்தில்) அதிகமான வியாமோஹத்தை யுடையனுமான எம்பெருமானை இன் தமிழால், In Tamizhal - இனிய தமிழ்ப்பாசுரங்களைக் கொண்டு நினைத்த, Ninaiththa - சிந்தித்த இ நாலும் ஆறும், I Naalum Aarum - இப்பத்துப் பாசுரங்களையும் வல்லார்க்கு, Vallarkku - ஓதவல்லவர்களுக்கு வான் உலகு, Vaan Ulagu - பரமபதம் இடம் ஆகும், Idam Aakum - இருப்பிடமாகும் |
| 1857 | பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவை சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு விச்சேதம் இல்லை –நச புனராவர்த்ததே ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே-நித்ய அனுபவம் பண்ணலாம் தேசத்தை ஆளுவார்கள்) 10 | பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனைக்
கற்ற நூல் கலிகன்றி யுரை செய்த
சொல் திறமிவை சொல்லிய தொண்டர்க்கு
அற்றமில்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே –10-1-10 | பதவுரை Show / Hideபெற்றம் ஆளியை, Petram Aalaiya - பசுக்களை ஆளப்பிறந்தவனும் பேரில், Peril - திருப்பேர் நகரில் மணளனை, Manalanai - மணவாளப்பிள்ளையாக ;ஸேவை ஸாதிப்பவனுமான பெருமான் விஷயமாக, நூல் கற்ற கலிகன்றி உரைசெய்த, Nool Katra Kalikanri Uraichaidha - நூல்களைப் பயின்ற திருமங்கையாழ்வார் அருளிச்செய்த சொல் திறம் இவை, Sol Thiram Ivai - இந்த சப்தராசியை சொல்லிய தொண்டர் கட்கு, Solliya Thondar Kadku - ஓதுகின்ற பாகவதர்களுக்கு அற்றம் இல்லை, Attram Illai - (கைங்கரியத்திற்கு) இடையூறு (ஒருநாளும்) இல்லையாம். அவர்க்கு அண்டம் ஆட்சி, Avarkku Andam Aatchi - அவர்களுக்குப் பரமபதம் ஆளவுரியதாம். |
| 1867 | பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தொண்டீர் -அந்த ராஷசர்கே கண்ட பாசுரம் அன்று இது-ஜிதந்தே -என்றால் -எல்லாருக்கும் சொல்ல வேணும் இறே- இச் சரீர அநந்தரம் இருக்கும் இடம் ஸ்ரீ பரம பதம் –அது தான் அனுபவத்தால் அறிந்து கொள்ளும் அத்தனை – எல்லாரும் அறியச் சொன்னோம்) 10 | அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை யழித்தவன் தன்னைப்
பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம் கொண்டு இவ்வுலகினில்
எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர் இம்மையே இடரில்லை இறந்தால்
தங்குமூர் அண்டமே கண்டு கொண்மின் சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-10 | பதவுரை Show / Hideதொண்டீர், Thondir - பகவத் பக்தர்களே!, (- (இது செய்தால்)) அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர, Angu Vaanavarkku Aakulam Theera - தேவலோகத்திலுள்ள தேவதைகளின் மனக்குழப்பம் தீரும்படி அணி இலங்கை அழித்தவன் தன்னை, Ani Ilangai Azhithavan Thannai - அழகிய லங்காபுரியை அழித்தருளின பெருமான் விஷயமாக, பொங்குமா வலவன் கலிகன்றி, Pongumaa Valavan Kalikanri - கிளர்த்தியையுடைய ‘ஆடல்மா’ என்னுங் குதிரையை நடத்த வல்லவரான ஆழ்வார் புகன்ற, Pugandra - அருளிச்செய்த பொங்கத்தம் கொண்டு, Pongattham Kondo - ‘பொங்கத்தம் பொங்கோ’ என்ற இந்த வெற்றியைப் பாசுரங்களைக் கொண்டு இ உலகினில், I Ulaginil - இவ்விபூதியிலே எங்கும், Engum - எல்லாவிடங்களிலும் பாடி நின்று ஆடுமின், Paadi Nindru Aadumin - பாடிக்கொண்டு கூத்தாடுங்கள், இம்மையே இடல் இல்லை, Immaye Idal Illai - (உங்கட்கு) இப்பிறவியில் ஒருவகைத்துன்பமு முண்டாகாது, இறந்தால், Irandhaal - மரணமானபின்பு தங்கும் ஊர், Thangum Oor - நீங்கள் போய்ச்சேர்ந்து நிலை நிற்குமிடம் அண்டமே, Andame - பரமபதமேயாம், கண்டு கொண்மின், Kandu Konmin - (இதனை அநுபவத்தாலே) கண்டு கொள்ளுங்கள் சாற்றினோம், Saatrinom - இஃது எல்லாருமறியச்சொன்னோம் தடம் பொங்கத்தம் பொங்கோ, Thadam Pongatham Pongoo - வெற்றியோ வெற்றி |
| 1877 | பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ மகா ராஜரை நோக்கிச் சொன்ன ஒன்றும் ஒன்றும் -இரண்டு பாசுரங்கள் வானர முதலிளைக் குறித்து சொன்ன ஐந்து பாசுரங்கள் பரோபதேச ரூபமான மூன்று பாசுரங்கள் – இப்பத்தையும் பாடிக் கொண்டாட-உங்களுக்கு இனி வரக் கடவதொரு பயம் இல்லை – நாவலிட்டு உழி தருகின்றோம் -என்று வேண்டின படி ஆடித் திரியுங்கோள்) 10 | வென்ற தொல் சீர் தென்னிலங்கை வெஞ்சமத்து அன்று அரக்கர்
குன்றமன்னார் ஆடியுய்ந்த குழ மணி தூரத்தைக்
கன்றி நெய்நீர் நின்ற வேற்கைக் கலியன் ஒலி மாலை
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் பாடி நின்றாடுமினே –10-3-10 | பதவுரை Show / Hideதொல், Thol - நெடுநாளாக வென்றி சீர், Vendri Seer - வெற்றியையே இயல்பாக வுடைத்தாயிருந்த தென் இலங்கை, Then Ilangai - தென்னிலங்கையில் வெம் சமத்து, Vem Samathu - வெவ்வியபோர்க்களத்திலே அன்று, Anru - அப்போது அரக்கர், Arakkar - ராக்ஷஸர்கள் குன்றம் அன்னார், Kundram Annar - மலைபோன்றவர்களாக ஆடி உய்ந்த குழமணி தூரத்தை, Aadi Uyndha Kuzhamani Thoorathai - குழமணிதூரக்கூத்தாடி உயிர் தப்பினபடியைக் குறித்து, கன்றி நெய் நீர் நின்ற வேல் கை, Kandri Ney Neer Nindra Vel Kai - சினக்குறிப்புடன் கூடிய தாய் நெய்யிட்டிருப்பதை நீர்மையாகவுடைத்தாய் நின்ற வேற்படையைக் கையிலுடையரான கலியன், Kalyan - திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச்செய்த மாலை ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும், Maalaik Ondrum Ondrum Aindhum Moondrum - சொல்மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையும் பாடி நின்று, Paadi Nindru - பாடிக்கொண்டு ஆடுமின், Aadumin - (ஆநந்தத்துக்குப் போக்கு வீடாகக்) கூத்தாடுங்கோள் |
| 1887 | பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அம்மம் உண் என்று சொன்ன இப்பத்தையும் –அந்த பாவ வ்ருத்தியோடே சொல்லுவாருக்கு வந்தேறியான முக்தர் ஆனவர்கள் அன்றிக்கே அஸ்ப்ருஷ்ட சம்சாரிகளான ஸ்ரீ நித்ய சூரிகளோடே ஒக்க தரம் பெறலாம்) 10 | இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி
செம்மைப் பனுவல் நூல் கொண்டு செங்கண் நெடியவன் தன்னை
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும்
மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலுமாமே –10-4-10 | பதவுரை Show / Hideஎழில ஏந்து தோள் கலிகன்றி, Ezhil Aenthu Thol Kalikanri - அழகை ஏந்தியிருக்கின்ற தோள்களையுடையவரான திருமங்கையாழ்வார் இம்மை இடர்கெட வேண்டி, Immai Idarkeda Vendi - இப்பிறவியிலுண்டான இடரெல்லாம் அழியவேண்டி செம் கண் நெடியவன் தன்னை, Sem Kan Nediyavan Thannai - புண்டரீகாக்ஷனான ஸர்வேச்வரனை நோக்கி செம்மை நூல் பனுவல் கொண்டு, Semmai Nool Panuval Kondo - சிறந்த சாஸ்த்ரமாகிய அருளிச்செயலைக் கொண்டு அம்மம் உண் என்று உரைக்கின்ற இவை பாடல் ஐந்தும் ஐந்தும், Amma Um Enru Uraikkindra Ivai Paadal Aindhum Aindhum - ‘முலைப்பாலுண்ண வா’ என்று அழைப்பதான இப்பத்துப் பாசுரங்களையும் மெய்ம்மை, Meimmai - யதார்த்தமான அன்பு பொலிய மனத்து வைத்து, Manaththu Vaiththu - நெஞ்சிற்கொண்டு ஏத்த, Aetha - அநுஸந்திக்குமளவில் விண்ணவர் ஆகலும் ஆம், Vinnavar Aagalum Aam - நித்யஸூரிகளாகப் பெறுதலும் அவர்கட்கு நேரும். |
| 1897 | பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பேராளன் –ஸ்ரீ நம் ஆழ்வார் -சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு -என்னா-அநந்தரம் -யாவர் நிகர் -என்றாப் போலே கவி பாடப் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே தாமே தம்மைப் புகழ்ந்தால் போலே பேராளன் -என்கிறார் – இவருடைய திரு உள்ளத்தை விட்டு பிரியாதே இங்கே நித்ய வாஸம் பண்ணுகையால் உள்ள சம்பத்தை உடையனான இது – ஸ்ரீ பிராட்டியை தனக்கு உடையனானதுக்கு மேலே ஒன்றாயிற்று – இதுக்கு பல சுருதி சொல்லாமல் விட்டது தம்மை அறியாமை இவ்வனுபவம் தானே பிறருக்கும் பலமாய் இருக்கிறது) 10 | காரார் புயல் கைக்கலி கன்றி மங்கையர் கோன்
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட
சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்
தாராளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி –10-5-10 | பதவுரை Show / Hideகார் ஆர் புயல் கை, Kaar Aar Puyal Kai - கார்காலத்து நிறையநீர் கொண்டெழுந்த மேகம் போன்ற ஔதார்யமுடையவராய் (- (சப்பாணி கொட்டாய்) (சப்பாணி கொட்டாய்)) மங்கையர் கோன், Mangaiyar Kon - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவராய் பேராளன், Peraalan - பெருமை பொருந்தியவரான கலி கன்றி, Kali Kankri - திருமங்கையாழ்வாருடைய நெஞ்சில், Nenjil - திருவுள்ளத்திலே பிரியாது, Priyaadhu - ஒரு நொடிப்பொழுதும் விட்டுப்பிரியாமல் இடம் கொண்ட, Idam Konda - நித்யவாஸம் பண்ணுகின்ற சீரானா, Seerana - சீர்மை பொருந்தியவனே! செம் தாமரை கண்ணா, Sem Thaamarai Kanna - செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களையுடையவனே! தண் துழாய் தார் ஆளா, Than Thuzhai Thar Aala - குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்துள்ளவனே! தட மார்வா, Thad Marvaa - விசாலமான திருமார்வை யுடையவனே! |
| 1907 | பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு காலும் துக்கத்தை ப்ராபியார்கள் –நிரதிசய ஆனந்தத்தை ப்ராபித்து ப்ரஹ்மாதிகள் குடி இருப்புக்கும் அவ்வருகான பரம பதத்தை ப்ராபிப்பார்) 10 | நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறியில் தயிர் நெய்
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல்
நன்றாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார்
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்து இமையோர்க்கும் அப்பால் செல வெய்துவாரே –10-6-10 | பதவுரை Show / Hideநின்றார் முகப்பு, Ninraar Mukappu - தன்னைக் காணவந்து நின்றவர்களெதிரே சிறிதும் நினையான், Sirithum Ninaithyaan - கொஞ்சமும் வெட்கப்பட வறியாதவனாய் வயிற்றை நிறைப்பான், Vayittrai Niraippaan - வயிற்றை நிறைப்பதற்காக ஆய்ச்சியர், Aaychiyar - இடைச்சிகளுடைய உறி, Uri - உறிகளிலேயிருந்த பால், Paal - பாலையும் தயிர், Thayir - தயிரையும் நெய், Ney - நெய்யையும் வெண்ணெய், Vennai - வெண்ணெயையும் விழுங்கி, Vizhungi - (களவாடி) அமுதுசெய்து அன்று, Anru - அப்போது உரலோடு, Uralodu - உரலோடே ஆப்புண்டிருந்த, Aappundirundha - கட்டுண்டிருந்த பெருமான், Perumaan - கண்ணபிரானுடைய அடிமேல், Adimeel - திருவடிகளின்மேலே நன்று ஆய தொல் சீர், Nandru Aaya Thol Seer - விலக்ஷணமான ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயையுடையராய் வயல் மங்கையர், Vayal Mangaiyar - வயல் சூழ்ந்த மங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான கலியன், Kalyan - ஆழ்வார் ஒலி செய் –, Oli Sei - அருளிச்செய்த தமிர் மாலை, Tamir Maalai - இப்பாசுரங்களை வல்லார், Vallaar - கற்றுவல்லவர்கள் என்றாலும், Endraalum - ஒருகாலும் இடர் எய்தார், Idar Eydhaar - துன்பமடையார்கள் இன்பம் எய்தி, Inbam Eydhi - நித்யாநந்தத்தைப் பெற்று இமையோர்க்கும் அப்பால செல, Imaiyorkkum Appaal Sela - தேவர்களுக்கும் அவ்வருகான பரமபதத்தையடையும்படியான பாக்கியத்தை எய்துவார், Eydhuvaar - பெறுவார்கள். |
| 1921 | பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்திரு மொழியை வல்லவர்களுக்கு ஸ்ரீ யசோதைப் பிராட்டியார் உடைய அனுபவித்தில் குறைய அனுபவிக்க வேண்டா -என்கிறார்) 14 | அன்ன நடை மட வாய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அருவரை போல்
மன்னு கருங்களிற்று ஆர் உயிர் வவ்விய மைந்தனை மா கடல் சூழ்
கன்னி நன் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி
இன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே –10-7-14 | பதவுரை Show / Hideஅன்னம் நடை, Annam Nadai - அன்னத்தின் நடைபோன்ற நடையையும் மடம், Madham - மடமைக் குணத்தையுமுடையளான ஆய்ச்சி, Aaychi - யசோதைப்பிராட்டியானவள் வயிறு அடித்து அஞ்ச, Vayiru Adithu Anja - வயிற்றிலே மோதிக்கொண்டு பயப்படும்படியாக அரு வரை போல்மன்னு, Aru Varai Polmannu - பெரிய மலைபோலப் பேராதே நின்ற கரு களிறு, Karhu Kaliru - (குவலயாபீட மென்கிற) கரிய யானையினுடைய ஆர் உயிர், Aar Uyir - அருமையான உயிரை வவ்விய, Vavviya - கவர்ந்த மைந்தனை, Mainthanai - மிடுக்கனான கண்ணபிரான் விஷயமாக, மா கடல் சூழ், Maa Kadal Soozh - பெரிய கடலாலே சூழப்பட்டு கன்னி நல் மா மதிள், Kanni Nal Maa Mathil - ஸ்திரமாய் விலக்ஷணமான பெரிய திருமதிள்களை யுடைத்தான மங்கையர், Mangaiyar - திருமங்கைநாட்டில் உள்ளவர்கட்கு காவலன், Kavalan - பரிபாலகாய் காமரு சீர், Kaamaru Seer - விரும்பத்தக்க திருக்குணங்களை யுடையரான கலிகன்றி, Kalikanri - ஆழ்வார் (அருளிச்செய்த) இன் இசை மாலைகள் ஈர் ஏழும், In Isai Maalaigal Eer Aezhum - மதுரமான இசையை யுடைய சொல்மாலை யான இப்பதினான்கு பாசுரங்களையும் வல்லவர்க்கு, Vallavarkku - ஓதவல்லவர்களுக்கு இடர் ஏதும் இல்லை, Idar Aedhum Illai - துன்பமொன்றுமில்லை யாகும். |
| 1931 | பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் தானே வந்து மேல் விழச் செய்தேயும் இவர்களுக்கு பாவ பந்தம் கனத்து இருக்கச் செய்தேயும் ஏறிட்டுக் கொண்ட சங்கல்பம் குலையாத படி நின்றதொரு நிலை உண்டு இறே இது கற்றார்க்கு அந்த மிறுக்கு இல்லை) 10 | அல்லிக் கமலக் கண்ணனை யங்கோர் ஆய்ச்சி
எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
சொல்லித் துதிப்பார் அவர் துக்கமிலரே –10-8-10 | பதவுரை Show / Hideஅல்லி கமலம் கண்ணனை, Alli Kamalam Kannanai - தாதுகளையுடைய தாமரைப் பூப்போன்ற திருக்கண்களையுடைய கண்ணபிரானைக்குறித்து அங்கு, Angu - திருவாய்ப்பாடியில் ஓர் ஆய்ச்சி, Or Aaychi - ஓரிடைச்சி எல்லி பொழுது, Elli Pozhudhu - இராப்பொழுதிலே ஊடிய, Oodiya - ப்ரணயரோஷந் தோற்றப்பேசின ஊடல் திறத்தை, Oodal Thirathai - வெறுப்புவார்த்தை விஷயமாக கல்லில் மலி, Kallil Mali - மலையைக்காட்டிலும் அதிசயத்த (வலிமைகொண்ட) தோள், Thol - திருத்தோள்களையுடையரான கலியன், Kalyan - திருமங்கையாழ்வார் சொன்ன, Sonna - அருளிச்செய்த மாலை, Maalaik - இச்சொல்மாலையை துதிப்பார் அவர், Thudhippar Avar - எம்பெருமானை ஏத்துமவர்கள் துக்கம் இலர், Thukkam Ilir - துன்பமற்று வாழப்பெற்றுவர்கள். |
| 1941 | பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தான் ஓன்று கண்டு சொல்லுகை அன்றிக்கே-முன்பு உள்ளார் சொன்ன பாசுரத்தை யாயிற்று சொல்லிற்று – யன் மங்களம் ஸூ பர்ணச்ய வினதாகல்ப யத்புரா அம்ருதம் ப்ரார்த்தயா நஸ- -பரம பக்தி இருந்த படியை சொன்ன படி – அதுக்கு அநந்தரம் உண்டாம் கைங்கர்ய லஷ்மியைப் பெற்று விஸ்த்ருதமாம்) 10 | வேட்டத்தைக் கருதா தடியிணை வணங்கி மெய்ம்மை நின்று எம்பெருமானை
வாள் திறல் தானை மங்கையர் தலைவன் மான வேற் கலியன் வாய் ஒலிகள்
தோட்டலர் பைந்தார்ச் சுடர் முடியானைப் பழ மொழியால் பணிந்து உரைத்த
பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் சித்தமும் திருவோடு மிகுமே –10-9-10 | பதவுரை Show / Hideவேட்டந்தை கருதாது, Vettandhai Karudhadhu - மேன்மேலே பெருகி வருகிற காமனைகளைக் கொள்ளாமல் அடி இணை வணங்கி, Adi Inai Vanangi - தன் திருவடியிணைகளையே (பரமப்ரயோஜனமாக்க் கொண்டு) வணங்கிநிற்க மெய்ம்மை நின்ற, Meimmai Nindra - (அப்படிப்பட்ட பசுமை காந்திகளுக்கு) உண்மையாகத் தன்னைக் காட்டிக் கொடுக்குமவனும் தோடு அலர் பை தார் சுடர் முடியானை, Thodu Alar Pai Thaar Sudar Mudiyanaai - இதழ்களானவை விரிந்து விகஸிக்கப்பெற்ற பசுமைதங்கிய (திருத்துழாய்) மாலையை ஒளிமிக்க திருமுடியிலே அணிந்துள்ளவனுமான எம் பெருமானை, Em Perumaanai - எம்பெருமானை நோக்கி, வாள் திறல் தானே, Vaal Thiral Thaaney - வாள் வலி கொண்ட சேனையையுடையவரும் மங்கையர் தலைவன், Mangaiyar Thalaivan - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரும் மானம் வேல், Maanam Veel - பெருமைதங்கிய வேற்படையையுடைய வருமான கலியன், Kalyan - திருமங்கையாழ்வாருடைய வாய் ஒலிகள், Vaai Oligal - ஸ்ரீஸூக்தியாய் பழமொழியால் பணிந்து உரைத்த, Pazhamozhiyal Panindhu Uraitha - பழமொழிகளைக் கொண்டு விநயத்துடன் அருளிச் செய்தவையான பாட்டு இவை பாட, Paatu Ivai Paada - இப்பாசுரங்களைப் பாடவே சித்தம், Siththam - (பாடுமவர்களது) நெஞ்சானது பத்திமை பெருகி, Pathimai Perugi - பரமபக்திதலையெடுக்கப் பெற்று திருவொடு மிகும், Thiruvodu Mikum - (எம்பெருமானது திருவடிகளில் நித்ய கைங்கரிய விருப்பமாகிற) செல்வமும் விஞ்சிவளரப்பெறும். |
| 1951 | பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பல ஸ்ருதி சொல்லாது ஒழிந்தது-இது தானே பிரயோஜனம் -ஆகையாலே) 10 | தொண்டீர் பாடுமினோ
சுரும்பார் பொழில் மங்கையர் கோன்
ஒண்டார் வேல் கலியன் ஒலி மாலைகள்
தொண்டீர் பாடுமினோ –10-10-10 | பதவுரை Show / Hideதொண்டீர் அன்னே!, Thondir Anne - பாகவதர்களே (- (தொண்டீர்! பாடுமின்-.)) சுரும்பு ஆர் பொழில், Surumbu Ar Pozhil - வண்டுகள் நிறையப்படிந்த சோலைகளையுடைய மங்கையர் கோன், Mangaiyar Kon - திருமங்கை நாட்டில் உள்ளவர்கட்குத் தலைவரும் ஒண் தர்வேல், On Tharveel - அழகிய மாலையையும் வேற் படையையுமுடையவருமான் கலியன், Kalyan - ஆழ்வார் ஒலி, Oli - அருளிச்செய்த மாலைகள், Maalaihal - இச்சொல்மாலையை பாடுமின், Paadumin - பாடுங்கள் |
| 1961 | பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இத்தை அப்யசிக்க வல்லார்களுக்கு பாதக பதார்த்தங்களால் நோவு பட வேண்டாதே நித்ய சம்ஸ்லேஷத்தோடே காலம் செல்லப் பெறுவர்–அல்லல் ஆகிறது இத் திரு மொழியில் பட்ட கிலேசம்) 10 | அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச்
சென்ற மாயனைச் செங்கண் மாலினை
மன்றிலார் புகழ் மங்கை வாள் கலி
கன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே –11-1-10 | பதவுரை Show / Hideஅன்று, Anru - முன்பொருகால் பாரதத்து, Bharathaththu - பாரத யுத்தத்திற்குப் பூர்வாங்கமாக ஐவர் தூதன் ஆய், Aivar Thoodhan Aay - பஞ்சபாண்டவர்கட்குத் தூதுவனாய் சென்று, Sendru - எழுந்தருளின மாயனை, Maayanai - ஆச்சரிய சக்தியுத்தனும் செம் கண் மாலினை, Sem Kan Malinai - செந்தமாரைக் கண்ணனுமான ஸர்வேச்வரன் விஷயகமாக மன்றில் ஆர் புகழ், Manril Aar Pugazh - நூறத்திகள் தோறும் நிறைந்த மங்கை, Mangai - திருமங்கை நாட்டையுடையவரும் வாள், Vaal - வாட்படை கொண்டவருமான கலிகன்றி, Kalikanri - ஆழ்வார்(அருளிச்செய்த) சொல், Sol - இந்த ஸ்ரீ ஸூக்திகளை வல்லார்க்கு, Vallarkku - ஓதவல்லவாக்ளுக்கு அல்லல் இல்லை, Allal Illai - ஒரு துன்பமும் உண்டாக மாட்டாது. |
| 1971 | பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்கள் சில நாள் போய் சில நாள் நிற்கை அன்றிக்கே ஒரு நாளும் ஒன்றும் நில்லாது –இவ்வளவு அன்றிக்கே மேல் பெறப் புகுகிற பேற்றின் கனத்தைச் சொல்லப் புகில் – வருந்தி பனை நிழல் போலே தங்கள் அளவிலே போகை அன்றிக்கே இவர்கள் இருந்த தேசத்திலும் கூட இன்றிக்கே ஒழியும் – பாதக பதார்த்தங்களின் கையிலே நோவு படாதே அவை தானே அனுகூலமாம் படி அவனோடு நித்ய சம்ச்லேஷம் பண்ணப் பெறுவர்) 10 | வென்று விடை யுடன் ஏழு அடர்த்த வடிகளை
மன்றின் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் உரைப்பவர் தங்கள் மேல்
என்றும் நில்லா வினை யொன்றும் சொல்லில் உலகிலே –11-2-10 | பதவுரை Show / Hideவென்றி, Vendri - வெற்றியைத் தொழிலாகவுடைய (- (வினை ஒன்றும் நில்லா)) விடை ஏழ், Vidai Ezh - ஏழு ரிஷபங்களை உடன், Udan - உடனே அடர்த்த, Adarttha - திரஸ்காரித்த அடிகளை, Adigalai - எம்பெருமான் விஷயமாக மன்றில் மலி புகழ், Manril Mali Pugazh - நாற்சந்திகளிலே நிறைந்த புகழையுடையரும் மங்கை மன், Mangai Man - திருமங்கை நாட்டுக்குத் தலைவருமான கலிகன்றி, Kalikanri - ஆழ்வார் சொல், Sol - அருளிச்செய்த ஒன்று நின்ற ஒன்பது, Onru Nindra Onbathu - ஒன்றோடே கூடி நின்ற ஒன்பது பாட்டாகிய இத்திருமொழியை உரைப்பவர் தங்கள்மேல், Uraippavar Thangalmel - அநுஸந்திப்பவாக்ளிடத்திலே வினை ஒன்றும், Vinai Onrum - ஒருவகையான கருமமும் என்றும், Endrum - ஒருநாளும் நில்லா, Nilla - நிற்கமாட்டாது சொல்லில், Sollil - இன்னமும்பலனை விவாரித்து சொல்லப்புக்கால் உலகிலே, Ulagile - அவாக்ளிருந்ததேசத்திலுங்கூட |
| 1981 | பெரிய திருமொழி || (11-3–மின்னிலங்கு) - (தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கற்றோர்கள் பூமி அடங்கலும் ஆள்வர்கள்- கற்க வேண்டா – இவை கேட்போம் யென்று செவி தாழ்த்தார்க்கு அனுபவிக்க வேண்டியது ஒரு துயர் இல்லையே) 10 | பெற்றார் ஆயிரம் பேரானைப் பேர் பாடப்
பெற்றான் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
கற்றோர் முற்று உலகு ஆள்வர் இவை கேட்க
உற்றார்க்கு உறு துயர் இல்லை யுலகத்தே –11-3-10 | பதவுரை Show / Hideஆயிரம் பேரானை, Aayiram Peraanai - ஆயிரந்திருநாமங்களையுடையனான எம்பெருமானுடைய பேர், Pera - திருநாமங்களை பாடப் பெற்றாள், Padap Petraal - பாடப்பெற்றவரான கலியன், Kaliyan - ஆழ்வார் ஒலிசெய், Olisei - அருளிச்செய்த தமிழ் மாலை, Tamil Maalai - தமிழ்ச் சொல்மாலையாகிய திருமொழியை கற்றார், Kattrar - கற்பவர்கள் பெற்றுஆரார், Petruaar - அந்த எம்பெருமானை லபித்தும் த்ருப்தியடைய மாட்டார்க்ள் முற்று உலக ஆள்வார், Muttru Ulaga Aalvaar - உலகங்கள் முழுவதையும் ஆளப்பெறுவாக்ள் இவை, Ivai - இப்பாசுரங்களை கேட்கல் உற்றார்க்கு, Kedkal Utrarkku - செவிதாழ்த்துக்கேட்கு மவாக்ளுக்கு உலகத்தே, Ulagatthae - உலகமெங்கும் உறு துயர் இல்லை, Uru Thuyar Illai - அநுபவிக்கக்கூடிய துக்க மொன்றுமில்லையாகும் |
| 1991 | பெரிய திருமொழி || (11-4–நிலை) - (திருமாலின் திரு அவதாரங்களில் ஈடுபடுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெஞ்சாலே தரித்தும்-இதுவே யாத்ரையாக யுழலு கிறவர்கள் ஸ்ரீ பரம பதத்தைப் பெற்று அனுபவிப்பார்கள்) 10 | கொலை கெழு செம்முகத்த களிறொன்று கொன்று கொடியோன் இலங்கை பொடியா
சிலை கெழு செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமாலை வேலை புடை சூழ
கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலி கன்றி சொன்ன பனுவல்
ஒழி கெழு பாடல் பாடி யுழல் கின்ற தொண்டரவர் ஆள்வர் உம்பர் உலகே –11-4-10 | பதவுரை Show / Hideகொலை கெழு, Kolai Kezhu - கொலை செய்யுமியல்வு விளக்கப் பெற்ற செம் முகத்த, Sem Mugath - சிவந்த முகத்தையுடையத்தாயக் கொண்டுவந்த களிறு ஒன்று, Kaliru Ondru - (குவலயாபீடமென்னும்) ஒரு யானையை கொன்று, Kondru - கொன்றொழித்தவனாயும் கொடியோன், Kodiyon - கொடியவனான இராவணனுடைய பொடி ஆ, Podi Aa - பொடியாகும்படி சிலை கெழு செம் சரங்கள் செல உய்த்த, Silai Kezhu Sem Sarangal Sel Uytha - வில்லிலுள்ள நெருப்புப் போன்ற அம்புகளைப் பிரயோகித்தவனாயுமுள்ள நங்கள் திருமாலை, Nangal Thirumalai - எம்பெருமானைக் குறித்து, வேலை புடை சூழ, Velai Pudai Soozha - கடலாலே சுற்றுஞ் சூழப்பட்டதாய் கலி கெழு மாடம் வீதி, Kali Kezhu Maadam Veethi - வலிமைமிக்க மாடவீதிகளை யுடையதாய் வயல், Vayal - கழனிகளையுடைத்தான மங்கை, Mangai - திருமங்கைநாட்டிலே மன்னு, Mannu - பொருந்திவாழ்கிற கலிகன்றி, Kalikanri - ஆழ்வார் சொன்ன, Sonna - அருளிச்செய்த பனுவல், Panoval - ஸ்ரீஸூக்தியாய் ஒலி கெழு, Oli Kezhu - சொற்கள் சிறந்த பாடி, Paadi - வாயாரப்பாடி உழல்கின்ற, Uzhalginra - இதுவே போதுபோக்காய்த் திரிகின்ற தொண்டர் அவர், Thondar Avar - பாகவதர்கள் உம்பர் உலகு, Umbar Ulagu - பரமபத்த்தை ஆள்வர் –, Aalvar - ஆளப்பெறுவர்கள் |
| 2001 | பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கிரித்ரிம வேஷத்தைக் கொண்டு சிலருக்குச் சென்று கிட்ட ஒண்ணாத படி ஸ்ரீ திருப் பாற் கடலிலே காண் அவன் கிடப்பது – சடக்கெனெ சென்று காண ஒண்ணாத படி ஸ்ரீ திருமலையிலே காண் அவன் நிற்பது -என்பார்கள் காண் அப்படி இருக்கிறவன் காண் ஆழ்வார் ஹிருதயத்தில் நின்றும் புறப்படத் தள்ளினாலும் புறப்படாதே கிடக்கிறான்) 10 | கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி
உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே –11-5-10 | பதவுரை Show / Hideஏடீ, Eadi - தோழீ! (- (ஒருவர்க்கும் எளியவனாகாதபடி)) கள்ளத்தால், Kallathaal - கபடவேடித்தினால் மாவலியை, Mavalaiya - மாவலியிடத்தில் மூ அடி மண் கோண்டு, Moo Adi Man Koondhu - மூன்றடிமண்ணை இரந்து பெற்று அளந்தான், Alandhaan - அளந்துகொண்டவன் வெள்ளத்தான், Vellaththaan - திருப்பாற்கடலிலே உள்ளான் வேங்கடத்தான், Vengadaththaan - திருமலையிலே உள்ளான் என்பர்காண், Enpar Kaan - என்று சொல்லுகிறார்களன்றோ? சாழலே, Saalale - தோழீ! வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும், Vellaththaan Vengadaththaan Aelum - திருப்பாற்கடலிலும் திருமலையிலும் அருமைப்படவுள்ளவனே யாகிலும் கலிகன்றி, Kalikanri - கலியனுடைய உள்ளத்தின் உள்ளே, Ullaththin Ullae - ஹ்ருதயத்தினுள்ளே |
| 2011 | பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பாட்டுக்கு இதையே பொருள் திரண்டு பரந்த சோலைகள் உடைய ஸ்ரீ திரு மங்கைக்கு நிர்வாஹகர் அறிந்து உரைத்தார் – இதையே பொருள் -ஸ்ரீ த்வயத்தின் க்ரமத்திலே பல சுருதி அருளுகிறார் – சூழ் புனல் குடந்தையே தொழுது என் நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் -என்றும் குடந்தையே தொழுமின் என்றும் –உபக்ரமித்து – தண் குடந்தை பாடி ஆடீர்களே என்று உபதேசித்துத் தலைக் கட்டுகிறார்) 10 | தேவரையும் அசுரர்களையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்
யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
காவளரும் பொழில் மங்கைக் கலி கன்றி யொலி மாலை கற்று வல்லார்
பூவளரும் திரு மகளால் அருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே –11-6-10 | பதவுரை Show / Hideதேவரையும், Thevaraiyum - தேவர்களையும் அசுரரையும், Asuraraiyum - அசுரர்களையும் திசைகளையும், Thisaigalaiyum - திருக்குக்களையும் கடல்களையும், Kadalgalaiyum - ஸப்த ஸாகரங்களையும் முற்றும் முற்றும் யாவரையும் ஒழியாமே, Mutrum Mutrum Yaavaraiyum Ozhiyamae - மற்றுமுள்ள எல்லாவற்றையும் ஒன்று தப்பாமல் எம் பெருமான் உண்டு உமிழ்ந்த்து, Em Perumaan Undu Umizhndhu - எம்பெருமான் (பிரளய காலத்தில்) திருவயிற்றிலேவைத்து (ப்பின்பு) வெளிப்படுத்தியதை அறிந்து, Arindhu - உள்ளபடியறிந்து சொன்ன, Sonna - அருளிச்செய்த கா வளரும் பொழில் மங்கை, Kaa Valarum Pozhil Mangai - பூந்தோட்டங் வளரப்பெற்ற சோலைகளை யுடையவருமங்கை நாட்டுத் தலைவரான கலிகன்றி, Kalikanri - ஆழ்வாருடைய ஒலி மாலை, Oli Maalai - சொல்மாலையாகிற இத்திருமொழியை கற்று வல்லார் தாம், Kattru Vallar Thaam - ஓதி உணரவல்லவர்கள் பூவளரும் திரு மகளால் அருள் பெற்று, Poovalarum Thiru Magalal Arul Petru - தாமரைப்பூவில் வளர்கின்ற பெரிய பிராட்டியாராலே அருள்செய்யப்பெற்று பொன் உலகில், Pon Ulavil - நித்ய விபூதியிலே பொலிவர், Polivar - விளங்கப்பெறுவர்கள் |
| 2021 | பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எல்லாரையும் ஆக்கிக் கொள்ளும் திருவடிகள் –திருவடிகளுக்கு ஆகாதார் இல்லை – இத் திருவடிகளைச் சூடும் ஸ்ரீ ஆழ்வார் –சேஷித்வத்துக்கு அவன் ஸ்ரீ திரு வாழியைப் பிடித்தால் போலே சேஷத்த்வத்துக்கு இவர் வேலைப் பிடித்த படி- முன்பே பாசுரம் இட்டுத் தந்தோம் – இனி சரீரத்தால் உள்ள விநியோகம் கொள்ளுங்கோள்) 10 | மெய்நின்ற பாவம் அகலத் திருமாலைக்
கைநின்ற ஆழியான் சூழும் கழல் சூடி
கைந்நின்ற வேற்க் கை கலியன் ஒலி மாலை
ஐ ஒன்றும் ஐந்தும் இவை பாடி ஆடுமினே –11-7-10 | பதவுரை Show / Hideமெய்நின்ற, Mei Nindra - பிரகிருதியிலே அநுபவிக்க வேண்டிநின்ற பாவம், Paavam - பாவங்கள் அகல, Akala - ஒழிவதற்காக கை நின்ற ஆழியான், Kai Nindra Azhiyan - திருக்கையில் பொருந்திய திருவாழியையுடையனான திரு மாலை, Thiru Maalai - திருமகள் கொழுநனுடைய சூழும் கழல், Soolum Kazhal - ஸர்வ்வ்யாபியான திருவடிகளை சூடி, Soodi - முடிமேற்கொள்ளுமவராய் கை நின்ற வேல் கை, Kai Nindra Vel Kai - கையும் வேற்படையுமாய் நிற்பவரான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச்செய்த மாலை, Malai - சொல்மாலையாகிய ஐ ஒன்றும் ஐந்தும் இவை, Ai Ondrum Aindhum Ivai - இப்பத்துப்பாசுரங்களையும் பாடி, Paadi - வாயாரப்பாடி ஆடுமின், Aadumin - நர்த்தனம் பண்ணுங்கோள் |
| 2031 | பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒன்பது பாட்டிலும் இவருக்கு ஓடின வ்யசனமும்-வாசனையோடு கழியும் படி அஹம் -என்று ரஷகனான தன்னைக் காட்டினான் – இவர் நோவு பட்ட ஒன்பது பாட்டும்-அதுக்கு பரிஹாரமாகச் சொன்ன ஒரு பாட்டையும் சொல்ல வல்லவர்களுக்கு – பதினெட்டு ஒத்திலும் சோகத்தை உபபாதித்து-மாஸூச -என்று பரிஹரித்தால் போலே யாயிற்று ஒன்பது பாட்டாலும் நோவு பட்டவர்க்கு-ஒரு பாட்டாலே நோவு பரிஹரித்த படி – சம்சாரத்துக்கு ஹேதுவான அவித்யாதிகள் கழிந்து பின்னையும்-வித்து முதல் கிடந்து அரும்புகை அன்றிக்கே இவர் தாம் -த்வத் அனுபவ விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று பிரார்த்தித்த படியே சவாசனமாகக் கழியும்) 10 | குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே –11-8-10 | பதவுரை Show / Hideகுற்றம் எடுத்து, Kutram Eduthu - (கோவர்த்தன) மலையைக் குடையாகவெடுத்துப் பிடித்து (- (அது கொண்டு பெருமழையைத் தடுத்து)) ஆ நிரை, A Nirai - பசுக்கூட்டத்தை காத்தவன் தன்னை, Kaaththavan Thannai - பாதுகாத்தவனான எம்பெருமானைக்குறித்து மன்றில் புகழ், Manril Pugazh - சபைகளில் புகழப்படுவராய் மங்கை மன், Mangai Man - திருமங்கை நாட்டுக்குத் தலைவரான கலிகன்றி, Kalikanri - ஆழ்வார் சொல், Sol - அருளிச்செய்த ஒன்று நின்ற ஒன்பதும், Onru Nindra Onpathum - இப்பத்துப் பாசுரங்களையும் வல்லவர் தம் மேல், Vallavar Tham Mel - ஓதியுணர்ந்தவர்களின் மேல் வினை ஆயின, Vinai Aayina - கருமங்கள் என்றும், Endrum - எப்பொழுதும் சார கில்லா, Saar Killa - அணுகிப் பயன்விளைக்கமாட்டா |
| 2050 | திருக்குறுந்தாண்டகம் || எம்பெருமானுகந்தருளின திவ்ய தேசங்களிலெங்கும் “பதியே பரவித் தொழுந்தொண்டர்“ என்னும்படியாக அவகாஹித்திருக்கும் அவர்கள் உஜ்ஜீவிக்க வழியுண்டே யல்லது அல்லாதவர்களுக்கு ஒருநாளும் உஜ்ஜீவிக்க வழியில்லை யென்கிறார். 19 | பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை திரி தந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே | பதவுரை Show / Hideபிண்டி ஆர் மண்டை ஏந்தி, Pindhi Ar Mandai Aendhi - உளுத்த பொடிகள் உதிருகிற தலை யோட்டைக் கையிலேந்திக் கொண்டு பிறர் மனை, Pirar Manai - அயலாருடைய வீடுகளிலே திரி தந்து, Thiri Thandhu - திரிந்து (பிச்சை யெடுத்து) உண்ணும், Unnum - ஜீவித்த முண்டியான், Mundiyan - மொட்டையாண்டியான ருத்ரனுடைய சாபம், Saapam - ப்ரஹ்ம ஹத்தி சாபத்தை தீர்த்த, Theertha - போக்கின ஒருவன், Oruvan - அத்விதீயனான் எம்பெருமானுடைய ஊர், Oor - திருப்பதிகளாய் உலகம் ஏந்தும், Ulagam Aendhum - உலகத்தவர்களால் கொண்டாடப்பட்டன வாயு முள்ள கண்டியூர், Kandiyur - திருக்கண்டியூரென்ன அரங்கம், Arangam - திருவரங்கமென்ன மெய்யம், Meyyam - திருமெய்யமென்ன கச்சி, Kacchi - திருக்கச்சியென்ன பேர், Per - திருப்பேர்நகரென்ன மல்லை, Mallai - திருக் கடன்மல்லை யென்ன என்று, Endru - ஆகிய இத் திருப்பதிகளைப் பேசிக் கொண்டு மண்டினார், Mandinaar - அவகாஹிக்குமவர்கள் உய்யல் அல்லால், Uyyaal Allaal - உஜ்ஜீவிக்கலாமத்தனை யொழிய மற்றையார்க்கு, Mattraiyaarkku - அல்லாதவர்களுக்கு உய்யல் ஆமே, Uyyaal Aame - உஜ்ஜீவிக்க வழியுண்டோ? (இல்லை) |
| 2051 | திருக்குறுந்தாண்டகம் || தேவர்கட்கு இறைவனான இந்திரனும் திருநாபிக் கமலத்தில் தோன்றிய நான் முகக் கடவுளும் இடைவிடாது நன் மலர்களைப் பணிமாறி ஸ்துதிக்கப் பெற்றிருக்கின்ற செங்கண்மால் விஷயமாகக் கொற்ற வேற் பரகாலன் கலியன் சொன்ன இவ்விருபது பாசுரங்களையும் ப்ரயோஜநாந்தரங்களை விரும்புதலாகிற ஊனமின்றியே அநந்யப்ரயோஜநராய்க் கற்று வல்லவர்கள் தெளிவிசும்பான திருநாட்டை ஆளப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக் கட்டினாராயிற்று. 20 | வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை
மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும்
ஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே | பதவுரை Show / Hideவானவர் தங்கள் கோனும், Vaanavar Thangal Koonum - தேவேந்திரனும் மலர்மிசை அயனும், Malar Misai Ayanum - பூவிற் பிறந்த பிரமனும் நாளும், Naalum - நாள் தோறும் தே மலர் தூவி, The Malar Thoovi - தேன்மிக்க புஷ்பங்களைப் பணிமாறி ஏத்தும், Aethum - துதிக்கும் படியாக வுள்ள சே அடி, Sae Adi - செவ்விய திருவடிகளை யுடையனாய் செம் கண், Sem Kan - செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையனான மாலை, Maalai - ஸர்வேச்வரனைக் குறித்து, மானம் வேல், Maanam Vel - பெருமை தங்கிய வேற் படையை யுடையரான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் சொன்ன, Sonna - அருளிச்செய்த வண் தமிழ், Van Tamil - செந்தமிழினாலாகிய மாலை நாலைந்தும், Maalai Naalaindhum - இப்பாசுரமிருபதையும் ஊனம் அது இன்றி, Unam Adhu Inri - குறையொன்று மில்லாமல் வல்லார் தாம், Vallar Thaam - கற்று வல்லவர்கள் ஒளி விசும்பு, Oli Visumbu - பரமபதத்தை ஆள்வர், Aalvar - ஆளப்பெறுவர் |
| 2080 | திரு நெடும் தாண்டகம் || கீழ்ப்பாட்டில் ப்ரணயரோஷந் தலையெடுத்து ஒரு நிலை நின்றார்; அதாவது ‘எம்பெருமான் வந்தவாறே அவனுக்கு ஏதொவொரு சிஷை செய்து தாம் முடிந்து பிழைப்பதாகப் பேசினார். அவன் வந்தாலன்றோ அது செய்யலாவது; வரக் காணாமையாலே கதறிக் கூப்பிடுகிறார். விபவாவதாரங்களையும் அர்ச்சாவதாரங்களையும் பேசிக் கதறுகிறார். நம்மாழ்வார்க்கு * முனியேநான் முகனே யென்கிற திருவாய்மொழி போலே யிருக்கிறதாயிற்று இவர்க்கு இப்பாசுரம். 29 | அன்றாயர் குலமகளுக் கரையன் றன்னை அலைகடலைக் கடைந்தடைத்த அம்மான் றன்னை,
குன்றாத வலியரக்கர் கோனை மாளக் கொடுஞ்சிலைவாய்ச் சரந்துரந்து குலங்க ளைந்து
வென்றானை, குன்றெடுத்த தோளி னானை விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானை, தண்குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடிநாயேன் நினைந்திட் டேனே. - 29 | பதவுரை Show / Hideஅன்று,Andru - முன் பொருகாலத்தில் ஆயர் குலம் மகளுக்கு,Aayar Kulam Magalukku - இடைக்குலத்துச் சிறந்த மகளாக அவதரித்த நப்பினைப் பிராட்டிக்கு அரையன் தன்னை,Arayan Thannai - நாயகரானவரும் அலை கடலை கடைந்து,Alai Kadalai Kadaindhu - அலையெறிகின்ற கடலைக் கடைந்தவரும் அடைத்த அம்மான் தன்னை,Adaitha Ammaan Thannai - (அதில்) அணை கட்டின ஸ்வாமி யானவரும் குன்றாத வலி,Kunraadha Vali - குறைதலில்லாத மிடுக்கை யுடைய அரக்கர் கோனை மாள,Arakkar Konai Maala - இராவணன் முடியும்படியாக கொடும் சிலைவாய்,Kodom Silaivaai - கொடிய வில்லிலே சரம் துரந்து,Saram Thurandhu - அம்புகளைத் தொடுத்துப் பிரயோகித்து குலம் களைந்து வென்றானை,Kulam Kalaindhu Vendraanai - அரக்கர் குலங்களை நிர்மூலமாக்கி வெற்றி பெற்றவரும் குன்று எடுத்த,Kunru Eduttha - கோவர்த்தனமலையைக் குடையாக எடுத்த தோளினானை,Tholinaanai - புஜத்தையுடையவரும் விரி திரை நீர் விண்ணகரம் மருவி,Viri Thirai Neer Vinnagaram Maruvi - பரந்த அலைகளையுடைய பொய்கைகள் நிரம்பிய திருவிண்ணகரிலே பொருந்தி நாளும் நின்றானை,Naalum Ninranaai - எப்போதும் ஸந்நிதிபண்ணி யிருப்பவரும் தண்குடந்தை,Than Kudanthai - குளிர்ந்த திருக்குடந்தை யிலே கிடந்த மாலை,Kidandha Maalai - பள்ளிக் கொண்டிருக்கும் ஆச்ரிதவத்ஸலரும் நெடியானை,Nediyaanaai - ஸர்வோத்தமருமான பெருமானை நாய் அடியேன்,Naai Adiyen - நாய்போல் நீசனான அடியேன் நினைந்திட்டேன்,Ninaindhittaen - நினைத்தேன். |
| 2081 | திரு நெடும் தாண்டகம் || இத்திவ்வியப் பிரபந்தம் கற்பார்க்குப் பயனுரைத்துத் தலைகட்டும் பாசுரம் இது. “பன்னிய நூல் தமிழ் மாலைவல்லார் தொல்லைப் பழவினையை முதலரிய வல்லார் தாமே“ என்று பயனுரைக்கும் முகத்தால் அப்படிப்பட்ட பேற்றைத் தாம் பெற்று மகிழ்ந்தமை தொனிப்பிக்கப்பட்டதாகும். 30 | மின்னுமா மழைதவழும் மேக வண்ணா விண்ணவர்தம் பெருமானே அருளாய், என்று,
அன்னமாய் முனிவரோ டமர ரேத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் றன்னை,
மன்னுமா மணிமாட வேந்தன் மானவேல் பரகாலன் கலியன் சொன்ன பன்னியநூல்
தமிழ்மாலை வல்லார் தொல்லைப் பழவி னையை முதலரிய வல்லர் தாமே. - 30 | பதவுரை Show / Hideமுனிவரோடு அமரர் ஏத்த,Munivarodu Amarar Aettha - முனிவர்களும் தேவர்களும் ஸ்தோத்ரம் பண்ண அன்னம் ஆய் ஹம்ஸரூபியாய் அவதரித்து அருமறையை,Arumaraiyai - அருமையான வேதங்களை வெளிப்படுத்த,Velippaduttha - பிரகாசிப்பித்த அம்மான் தன்னை,Ammaan Thannai - ஸர்வேச்வரன் விஷயமாக, மன்னு மாமாணி மாடம்மங்கை வேந்தன்,Mannu Maamaani Maadam Mangai Vaendhan - சாச்வதமான சிறந்த மணிமாடங்களையுடைய திருமங்கைநாட்டுக்குத் தலைவரும் மானம் வேல்,Maanam Vael - பெருமைதங்கிய வேற்படையை யுடைவரும் கலியன்,Kaliyan - திருமங்கையாழ்வார் மின்னும் மா மழை தவழும் மேகம் வண்ணா,Minnum Maa Mazhai Thavazhum Megam Vannaa - ‘மின்னலோடுகூடியும் மிகவும் குளிர்ந்தும் தவழ்ந்து வருகின்றமேகம் போன்ற வடிவையுடையவனே! விண்ணவர் தம் பெருமானே,Vinnavar Tham Perumaanae - தேவாதி தேவனே! அருளாய்,Arulaai - அருள்புரியவேணும் என்று சொன்ன,Endru Sonnna - என்று பிரார்த்தித்து அருளிச் செய்த பன்னிய,Panniya - மிகவும் பரம்பின தமிழ் நூல்,Tamil Nool - தமிழ் சாஸ்த்ரமாயிராநின்ற மாலை,Maalai - இச் சொல்மாலையை வல்லார் தாம்,Vallaar Thaam - ஓதவல்லவர்கள் தொல்லை,Tollai - அநாதியான பழ வினையை,Pazha Vinaiyai - முன்னே வினைகளை முதல்,Mudhal - வேரோடே அரிய வல்லார்,Ariya Vallaar - களைந்தொழிக்க வல்லவராவர். |
| 2180 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படி சர்வ ரஷகனான சர்வேஸ்வரன் திருப்பாற் கடல் தொடக்க மானவற்றிலே வந்து சந்நிஹிதானாய்த்துத் தான் ஏது என்னில் விலக்காதார் நெஞ்சு பெருந்தனையும் கிடாய் – ஆன பின்பு -நெஞ்சே நீ இத்தை புத்தி பண்ணு -என்கிறார் – நாட்டில் பெரியராய் இருக்கிறவர்களும் தங்களுக்கேற ஷேத்ரஞ்ஞர்கள் ஆனவர் இருக்கச் செய்தே ஈஸ்வர்களாக பிரமித்து இருக்கிற படியைக் கண்டு திரு உள்ளம் பயப்பட நாம் கழுத்திலே கயிற்றை இட்டுக் கொண்டால் அறுத்து விழ விடுகைக்கு ஒருத்தன் உண்டு காண் – என்கிறார் – 99 | உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன் என்றும்
உளன்கண்டாய், உள்ளூவா ருள்ளத் – துளன்கண்டாய்,
வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும்,
உள்ளத்தி னுள்ளனென் றோர். | பதவுரை Show / Hideநல் நெஞ்சே, Nal Nenjee - எனக்குப் பாங்கான மனமே! உத்தமன், Uthaman - புருஷோத்தமனான எம்பெருமான் உளன்கண்டாய், Ulan Kandai - (நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்; என்றும் உளன் கண்டாய், Endrum Ulan Kandai - எக்காலத்திலும் ( நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷைகொண்டு) இருக்கிறான் காண்; உள்ளுவார் உள்ளத்து, Ulluvaar Ullaththu - ஆஸ்திகர்களுடைய மனத்திலே உளன், Ulan - நித்யவாளம் கண்டாய், Kandai - பண்ணுமவன் காண்; வெள்ளத்தின் உள்ளானும், Vellaththin Ullaanum - திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருள்பவனும் வேங்கடத்து மேயானும், Vengadathu Meyaanum - திருமலையிலே நிற்பவனும் உள்ளத்தின் உள்ளான் என்று, Ullaththin Ullaan Endru - இப்போது நம்முடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து நித்யவாஸம் பண்ணுகிறானென்று ஓர், Oru - தெரிந்துகொள். |
| 2181 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஆக – இப்படிப் பட்டவனைப் பெறுகைக்கு நமக்குச் செய்ய வேண்டுவது -என் என்னில் பெறுவதும் அவனையே பெறுகைக்கு சாதனமும் அவனே என்று – அத்யவசித்துப் போவாய் – என்கிறார் – 100 | ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும்,
ஈரடியும் காணலா மென்னெஞ்சே. – ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண்டுழாய் மாலைசேர்,
மாயவனை யேமனத்து வை. | பதவுரை Show / Hideஎன் நெஞ்சே, En Nenje - எனது மனமே! ஓர் அடியின், Oru Adiyin - (தனது) ஒப்பற்ற அடிவைப்பினாலே தாயவனை, Thaayavani - லோகங்களையெல்லாம் அளந்து கொண்டவனும் கேசவனை, Keesavani - கேசியென்னும் அஸுரனைக் கொன்றவனும் தண் துழாய்மாலை சேர், Than Thuzhaimalaik Seer - குளிர்ந்த திருத்துழாய் மலையோடு சேர்ந்தவனுமான மாயவனையே, Maayavanaiye - எம்பெருமானையே மனத்து வை, Manaththu Vai - மனத்தில் உறுதியாக்க் கொள்வாயாக (இப்படி அவனே உபாயமென்று உறுதிகொண்டால்) ஓர் அடியும், Oor Adiyum - உலகங்களையெல்லாம் அளந்துகொண்ட ஒரு திருவடியும் சாடு உதைத்த ஒண்மலர் சேஅடியும், Saadu Uthaitha Onmalai Seadiyum - சகடம் முறிந்து விழும்படி உதைத்த அழகிய பூப்போன்ற திருவடியும் ஆகிய ஈர் அடியும் காணலாம், Eer Adiyum Kaanalam - இரண்டு திருவடிகளையும் ஸேவிக்கப்பெறலாங்கான் |
| 2280 | இரண்டாம் திருவந்தாதி || பிரயோஜனாந்தர பரரான தேவர்களுக்குக் கார்யம் செய்யும் படியைச் சொல்லுகிறார் – ஆஸ்ரித அர்த்தமாக சுருக்கின வடிவை உடையவனாய் மகாபலி பக்கலிலே மண் கொண்ட வ்யாமுக்தன்- பிரயோஜனாந்த பரரான தேவர்களுக்குக் கார்யம் செய்யும் படியை அருளிச் செய்கிறார் – 99 | இறையெம் பெருமான் அருளென்று, இமையோர்
முறைநின்று மொய்ம்மலர்கள் தூவ, – அறைகழல
சேவடியான் செங்க ணெடியான், குறளுருவாய்
மாவடிவில் மண்கொண்டான் மால். | பதவுரை Show / Hideஇமையோர், Imaiyor - (பிரமன் முதலான) தேவர்கள் எம்பெருமான், Emperumaan - ‘எம்பெருமானே!‘ (எங்கள் விஷயத்தில்) இறை, Irai - கொஞ்சம் அருள் என்று, Arul Endru - கிருபைபண்ண வேணும் என்று சொல்லி முறை நின்று, Murai Nindru - அடிமைக்கு ஏற்ப நின்று மொய் மலர்கள், Moyi Malargal - அழகிய புஷ்பங்களை தூவ, Thuva - பணிமாறும்படியாக, அறை கழல சே அடியான், Arai Kazhala Se Adiyaan - ஒலிக்கின்ற வீரக்கழலையுடைய திருவடிகளை யுடையவனும் செம் கண், Sem Kan - செந்தாமரைக் கண்ணனும் நெடியான், Nediyan - எல்லாரிலும் மேம்பட்டவனுமான மால், Maal - திருமால் குறள் உரு ஆய், Kurall Uru Aay - (மாவலிபக்கல்) வாமநரூபியான் வந்து தோன்றி மா வடிவின், Maa Vadivin - பெரிய வடிவினாலே மண் கொண்டான், Man Kondaaan - பூமியை அளந்து கொண்டான். |
| 2281 | இரண்டாம் திருவந்தாதி || பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் -உமக்குச் செய்வது சொல்லீர் -என்ன அன்பை ஆஸ்ரயத்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார்- என் ஆஸ்ரயத்தின் அளவன்று உன் பக்கல் ச்நேஹம்-இத்தை யகஞ்சுரிப் படுத்த வேணும் பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் -உமக்குச் செய்யும் படி சொல்லீர் என்ன – கொள் கொம்பு மூடப் படர்ந்த அன்பை ஆஸ்ரயித்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார் – 100 | மாலே! நெடியோனே! கண்ணனே, விண்ணவர்க்கு
மேலா! வியந்துழாய்க் கண்ணியனே, – மேலால்
விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே, என்றன்
அளவன்றால் யானுடைய அன்பு . | பதவுரை Show / Hideமாலே, Maale - (அடியாரிடத்தில்) வியாமோஹ முள்ளவனே! நெடியோனே, Nediyone - ஸர்வஸ்மாத்பரனே! கண்ணனே, Kannane - ஸ்ரீக்ருஷ்ணனே! விண்ணவர்க்கு மேலா, Vinnavarkku Meela - நித்யஸூரிகளுக்குத் தலைவனே! வியன் துழாய் கண்ணியனே, Viyan Thuzhai Kanniyaane - அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனே! மேலால், Melaal - முன்னொரு காலத்தில் விளவின்காய், Vilavinkai - விளங்காயை கன்றினால், Kanrinhaal - ஒரு கன்றைக் கொண்டு வீழ்த்தவனே, Veelthavane - உதிர்த்துத்தள்ளினவனே!, யான் உடை, Yaan Udai - (உன்னிடத்தில்) அடியேன் வைத்திருக்கிற அன்பு, Anbu - அன்பானது என்தன் அளவு அன்று, Enthan Alavu Andru - என்னளவில்அடங்கி நிற்பதன்று. |
| 2380 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் ஸ்வ பாவனான ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளே நமக்கு பரம பிராப்யம் என்கிறார் – ஆஸ்ரித விரோதிகளை போக்கும் ஸ்வபாவனான ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளே பரம ப்ராப்யம் என்கிறார் – 99 | தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்,
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று, – குட்டத்துக்
கோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள்முதலே நங்கட்குச் சார்வு. | பதவுரை Show / Hideதொட்ட, Thotta - ஏந்தின படை எட்டும், Padai Ettum - எட்டு திவ்யாயுதங்களாலும் தோலாத, Tholaadha - தோல்வியடையாத வென்றியான், Vendriyaan - ஜயசீலனும் அட்டபுய காத்தான், Attapuy Kaaththaan - கச்சித் திருவட்டபுயகரத் திருப்பதியிலுள்ளவனும் அந்நான்று, Annanru - முன்பொருகாலத்தில் குட்டத்து, Kuttaththu - நீர்ப் பொய்கையிலே கோள் முதலை துஞ்ச, Kol Muthalai Thunja - மிடுக்குடைய முதலை முடியும்படியாக குறித்து எறிந்த சக்கரத்தான், Kuriththu Erintha Chakkaraththaan - இலக்குத் தப்பாமல் பிரயோகிக்கப்பட்ட திருவாழியையுடைய பெருமானது தாள் முதலே, Thaal Mudhale - பாதமூலமே நங்கட்கு, Nangadku - எங்களுக்கு சார்வு, Saarvu - பரமப்ராப்யம் |
| 2381 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்ரீ எம்பெருமான் புகலிடமாவது ஸ்ரீ பெரிய பிராட்டியார் திருவடிகளை என்றும் புகலிடமாகப் பற்றினாருக்கு என்கிறார் – ஸ்ரீ எம்பெருமான் ஆபாஸ்ரயமான ஸ்ரீ பெரிய பிராட்டியார் திருவடிகளே என்றும் புகலிடமாம் பற்றினார்க்கு என்றுமாம் – 100 | சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த்
தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும், – காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண்,
தேனமரும் பூமேல் திரு. | பதவுரை Show / Hideசக்கரத்தான், Chakkaraththaan - திருவாழியைக் கையிலே உடையவனும் தண் துழாய் தார் வாழ், Than Thuzhai Thaar Vaal - குளிர்ந்த திருத்துழாய் மாலை விளங்கப்பெற்ற வரை மார்பன் தான், Varai Maarban Thaan - மலைபோன்ற திருமார்பை யுடையனுமான எம்பெருமானால் முயங்கும், Muyankum - ஸம்ச்லேஷிக்கப்படுகின்றவளாய் கார் ஆர்ந்த வான், Kar Arnta Van - மேகங்கள் செறிந்த ஆகாசத்திலே அமரும், Amarum - நிலைத்து நிற்கக் கூடியதான மின், Min - மின்னல்போல இமைக்கும், Imaykkum - விளங்குகின்றவளாய் வண் தாமரை, Van Thamarai - அழகிய தாமரைப் பூப்போன்ற நெடு, Netu - நீண்ட கண், Kan - திருக்கண்களை யுடையளாய் தேன் அமரும் பூமேல், Ten Amarum Pumel - தேன் நிறைந்த தாமரைப் பூவில் வஸிப்பவளான திரு, Thiru - பெரிய பிராட்டியார் நமக்கு என்றும் சார்வு, Namakku Enrum Carvu - நமக்கு எப்போதும் சரணம். |
| 2476 | நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ திரு நாட்டில் சேருவதற்கு பாங்காக-பரம பக்தி நிரம்பப் பெற்றேன்- மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே -என்றால் போலே – வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் என்றுமாம் – ப்ரஹ்மாதிகளுக்கு என்னைக் கண்டால் கூச வேண்டும் படி-ஜ்ஞான பக்திகளாலே பூரணன் ஆனேன்- அதுக்கு மேலே புண்ய பலம் புஜிக்கும்-ஸ்வர்க்காதி லோகங்களையும்-புண்யார்ஜனம் பண்ணும் பூமியையும் உபேஷித்து அவற்றில் விலஷணமாய் இடமுடைத்தான-ஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி இப்போது பரபக்தி யுக்தனானேன் என்கிறார்- 95 | ஏன்றேன் அடிமை இழிந் தேன் பிறப்பிடும்பை
ஆன்றேன் அமரர்க் கமராமை, – ஆன்றேன்
கடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு,மேலை
இடநாடு காண இனி. | பதவுரை Show / Hideஅடிமை,Adimai - அடிமையை என்றேன்,Endraen - ஏற்றுக் கொண்டேன் பிறப்பு இடும்பை,Pirappu Idumbai - ஸம்ஸாரதுக்கங்களில் நின்றும் இழிந்தேன்,Izhindhen - நீங்கினேன் அமரர்க்கு,Amarar Kku - பிரமன் முதலிய தேவர்களுக்கும் அமராமை,Amaramai - என் அருகு நாடாவெண்ணாதபடி ஆன்றேன்,Aandren - (ஞானம் பக்தி முதலிய வற்றால்) நிரம்பினேன் கடன்நாடும்,Kadannaadum - ஸ்வர்க்கம் முதலிய லோகங்களையும் மண் நாடும்,Man Naadum - இப்பூலோகத்தையும் கை விட்டு,Kai Vittu - உபேக்ஷித்து மேலே,Mele - எல்லாவற்றுக்கும் மேற்பட்டுள்ளதாய் இடம்,Idam - (அடியார்கள் குழாங்களுக்குத் தகுதியாக) இட முடைத்தான் நாடு,Naadu - திருநாட்டை காண,Kaan - கண்டு அநுபவிக்கலாம்படி இனி,Ini - இப்போது ஆன்றேன்,Aandren - (பரம பக்தி) நிரம்பப் பெற்றேன் |
| 2477 | நான்முகன் திருவந்தாதி || நிர்ஹேதுகமாக ரஷிக்கும் ஸ்வ பாவனாய்-அதுக்கடியான சேஷியான ஸ்ரீ மன் நாராயணன் நீ நன்கு அறிந்தேன் நான்-இப்பொருள் எனக்கு அழகியதாக கை வந்தது என்கிறார்- சகல பிரபஞ்சத்துக்கும் காரணனான ஸ்ரீ நாராயணனே பர தெய்வம் என்று முதல் பாட்டிலே ப்ரதிஜ்ஜை பண்ணி சுருதி ஸ்ம்ருதி இதிகாசம் நியாயம் இவற்றாலும் -ஸ்ரீ யபதித்தவாதி சின்னங்களாலும் அத்தையே நெடுக உபபாதித்திக் கொண்டு வந்து அடியில் பண்ணின ப்ரதிஜ்ஜைக்குத் தகுதியாக ஸ்ரீ மன் நாராயண பரத்வத்தை நிலை நாட்டித் தலைக் கட்டுகிறார் தேவதாந்த்ர பரத்வ ப்ரமத்தை தவிர்த்து ஸ்ரீ மன் நாராயணன் இடத்திலே பரத்வத்தை ஸ்தாபிப்பதிலேயே இப்பிரபந்தத்தின் முழு நோக்கு – 96 | இனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனியறிந்தேன் எம்பெருமான். உன்னை – இனியறிந்தேன்
காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ, நற்கிரிசை
நாரணன்நீ நன்கறிந்தேன் நான். | பதவுரை Show / Hideஎம்பெருமான்,Emperumaan - எம்பெருமானே! உன்னை,Unnai - உன்னை ஈசற்கும்,Eesarkkum - ருத்ரனுக்கும் நான் முகற்கும்,Naan Mukarkkum - பிரமனுக்கும் தெய்வம்,Deivam - தெய்வமாக இனி அறிந்தேன் இனி அறிந்தேன்,Ini Arindhen Ini Arindhen - இப்போது திட்டமாகத் தெரிந்து கொண்டேன் காரணன் நீ,Kaaranan Nee - ஸகலஜகத்துக்கும் காரணபூதன் நீ கற்றவை நீ,Kattravai Nee - இதற்கு முன்பு அறியப்பட்ட பொருள்களெல்லாம் நீ கற்பவை நீ,Karppavai Nee - இனிமேலறியப்படும் பொருள்களும் நீ (என்கிற இதனையும்) நல் கிரிசை,Nal Kirisai - நிர்ஹேதுகரக்ஷண மாகிற நல்ல வ்யாபாரத்தை யுடையனான நாரணன் நீ,Naaranan Nee - நாராயணன் நீ நான் நன்கு அறிந்தேன்,Naan Nangu Arindhen - நான் நன்றாகத் தெரிந்து கொண்டேன் |
| 2576 | திருவிருத்தம் || 99 | ஈனச்சொல் லாயினு மாக, எறிதிரை வையம்முற்றும்
ஏனத் துருவாய் இடந்தபி ரான்,இருங் கற்பகம்சேர்
வானத் தவர்க்குமல் லாதவர்க் கும்மற்றெல் லாயவர்க்கும்
ஞானப் பிரானையல் லாலில்லை நான் கண்ட நல்லதுவே | பதவுரை Show / Hideஈனம் சொல் ஆயினும் ஆக, Eenam Sol Aayinum Aaga - (என்னுடைய ஸித்தாந்தம் சிலர்க்கு) இழி சொல்லாயினும் ஆகுக.; எறி திரை வையம் முற்றம், Eri Thirai Vaiyam Muttram - வீசுகிற அலைகளையுடைய பிரளய வெள்ளத்திலாழ்ந்த பூமி முழுவதையும் எனத்து உரு ஆய் கிடந்த, Enathu Uru Aay Kidandha - வராஹமீர்த்தியாய்க் கோட்டாற் குத்தி யெடுதபுதுவந்த பிரான், Piraan - தலைவனும் இரு கற்பகம் சேர் வானத்தவர்க்கும், Iru Karppagam Seer Vaanaththavarkkum - பெரிய கல்பவ்ருக்ஷங்கள் பொருந்திய ஸ்வர்க்கலோகத்திலுள்ள தேவர்கட்கும் அல்லாதவர்க்கும், Allaadavarkkum - அவர்களலல்லாத மனிதர்கட்கும் மற்றுஎல்லாயவர்க்கும், Mattru Ellaiyavarkkum - மற்றுமுள்ள நரகர் முதலியோ ரெல்லோர்க்கும் ஞானம், Gyaanam - அறிவைக் கொடுக்கிற பிரானை அல்லால், Piranai Allal - தலைவனுமாகிய எம்பெருமானையன்றி நான் கண்ட நல்லது இல்லை., Naan Kanda Nallathu Illai - நான் அறிந்த நற்பொருள் வேறு இல்லை. |
| 2577 | திருவிருத்தம் || 100 | நல்லார் நவில்குரு கூர்நக ரான்,திரு மால்திருப்பேர்
வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன்விண் ணப்பஞ்செய்த
சொல்லார் தொடையலிந் _றும்வல் லார்அழுந் தார்பிறப்பாம்
பொல்லா அருவினை மாயவன் சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே | பதவுரை Show / Hideநல்லார், Nallar - நல்ல குணங்களையும் நல்ல காரியங்களையுமுடையரான மஹான்கள் நவில், Navil - புகழ்ந்து கூறப்பெற்ற குருகூர் நகரான், Kurugur Nagarayan - திருக்குருகூரென்னும் திருப்பதியில் திருவவதரித்தவரும். திருமால், Thirumaal - லக்ஷ்மீபதியான எம்பெருமானது திருபேர், Thiruper - திருநாமங்களை நல்லார், Nallar - பயின்றவரான அடியார்களுடைய அடி, Adi - திருவடிகளாகிற கண்ணி, Kanni - பூமாலையை சூடிய, Soodiya - தமது முடிக்கு அணியாகக் கொண்டவருமான மாறன், Maran - நம்மாழ்வார் விண்ணப்பம் செய்த, Vinnappam Seitha - (பகவத் ஸந்நிதாநத்திலே) விஜ்ஞாபநஞ்செய்த சொல் ஆர் தொடையல், Sol Ar Thodaiyal - சொற்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை வடிவமான இ நூறும், I Noorum - இந்த நூறு பாசுரங்களையும் வல்லார், Vallar - கற்றுவல்லவர்கள் பிறப்பு ஆம், Pirappu Aam - ஸம்ஸாரத்திற்குக் காரணமும் காரியமுமாகிய பொல்லா அருவினை, Pollaa Aruvinai - கொடியவையாய்போக்க முடியாதவையான ஊழ்வினைகளாகிற மாயம் வல் சேறு அள்ளல், Maayam Val Seeru Allal - கொடிய சேற்றின் அடர்த்தியையுடைய பொய் நிலத்து, Poi Nilaththu - பொய்யாகிய பிரகிருதி மண்டலத்தில் அழுந்தார், Azhundhaar - அழுத்தமாட்டார்கள் (முக்கிராகப் பெறுபவர்கள் என்றவாறு.) |
| 2584 | திருவாசிரியம் || 7 | நளிர் மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிரொளி யிமையவர் தலைவனும் முதலா,
யாவகை யுலகமும் யாவரும் அகப்பட, நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க, ஒரு பொருள் புறப்பா டின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓர் ஆலிலைச் சேர்ந்த வெம்
பெருமா மாயனை யல்லது,ஒருமா தெய்வம் மற்றுடையமோ யாமே | பதவுரை Show / Hideநளிர்மதி சடையனும், Nalirmadhi Sadayanum - குளிர்ந்த சந்திரனை ஜடையிலே யுடைய சிவனும் நான்முகன் கடவுளும், Naanmugan Kadavulum - பிரமதேவனும் தளிர்ஒளி இமையவர் தலைவனும் முதலா, Thaliroli Himaiyavar Thalaivanum Mudhala - தழைத்த ஒளிபொருந்திய தேவேந்திரனும் ஆகிய இவர்கள் முதலாக யாவரும், Yaavarum - எல்லாப் பிராணிகளும் யாவகை உலகமும், Yaavagai Ulagamum - எல்லா வுலகமும் அகப்பட, Akappada - உட்பட நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும், Nilam Neer Thee Kaal Sudar Iru Visumbum - பூமி ஜலம் அக்நி வாயு, தேஜஸ் ஸுக்களையுடைய மஹத்தான ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களும் மலர் சுடர் பிறவும், Malar Sudar Piravum - சந்திரன் ஸூர்யன் முதலிய மற்றும் சிறந்த தேஜஸ் பதார்த்தங்களும் சிறிது, Siridhu - சிறியதான திருவயிற்றின் ஒரு பக்கத்தில் மயங்க, Mayangka - கலசும்படியாக ஒரு பொருள் புறப்பாடு இன்றி, Oru Porul Purappadu Indri - ஒரு வஸ்துவும் வெளிப்படாதபடி முழுவதும், Muzhavadum - எல்லாப் பொருள்களையும் அகப்பட சுரந்து, Akappada Surandhu - உள்ளேயிட்டு மறைத்து ஓர் ஆல் இலை சேர்ந்த, Or Aal Ilai Serndha - அத்விதீயமான வொரு ஆலந்தளிரிலே பள்ளி கொண்ட எம், Em - எமக்கு ஸ்வாமியாய் பெரு மா மாயனை அல்லது, Peru Maa Maayanai Alladhu - மிகப்பெரிய ஆச்சரியங்களை யுடையனான ஸ்ரீமந் நாராயணனைத் தவிர்த்து மற்று ஒரு மா தெய்வம், Mattru Oru Maa Deivam - வேறொரு க்ஷுத்ர தேவதையை யாம் உடையமோ, Yaam Udaiyamo - நாம் சேஷியாகக் கொள்ளுவோமோ? (கொள்ள மாட்டோம்) |
| 2670 | பெரிய திருவந்தாதி || 86 | கார்க்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்,
பார்க்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்,-சீர்கலந்த
சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை,
என்நினைந்து போக்குவரிப் போது. | பதவுரை Show / Hideகார் கலந்த மேனியான், Kaar Kalanda Meniyaan - மேகத்தோடொத்த திருமேனியை யுடையவனும் கை கலந்த ஆழியான், Kai Kalanda Azhiyaan - கையோடு சேர்ந்த திருவாழியை யுடையவனும். பார் கலந்த வல் வயிற்றான், Paar Kalanda Val Vayitran - (பிரளய காலத்தில்) உலகமெல்லாம் வந்து சோப் பெற்ற வலிய திருவயிற்றையுடையவனும் பாம்பு அணையான், Paambu Anaiyaan - திருவன்நதாழ்வானைப் படுக்கையாகவுடையவனுமான பெருமானுடைய சீர் கலந்து, Seer Kalandhu - திருக்குணங்கள் நிரம்பிய சொல், Sol - ஸ்ரீஸூக்திகளை நினைந்து, Ninaindhu - அநுணுந்தித்து சூழ்வினையின் ஆழ் அவரை போக்கார் எம், Sozhvinainin Aazh Avarai Pokkaar Em - கொடிய பாவங்களினாலுண்டாகும் மிக்க துன்பங்களைப் போக்கிக்கொள்ளார்களாகில் (ஒழியட்டும்) என் நினைந்து இப்போது போகுவர், En Ninaindhu Ippodhu Poguvaar - வேறு எதை அநுஸந்தித்து இந்தப் போதைப் போக்குவார்கள். |
| 2671 | பெரிய திருவந்தாதி || 87 | இப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும்
எப்போது மீதேசொல் என்னெஞ்சே–எப்போதும்
கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்
மெய்கழலே ஏத்த முயல். | பதவுரை Show / Hideஎன் நெஞ்சே, En Nenchae - எனது மனமே! நம்மேல் வினை கடிவான், Nammael Vinai Kadivaan - நம்மிடத்திலுள்ள பாவங்களைப் போக்குவதற்காக எப்போதும் கை கழலா நேமியான், Eppodhum Kai Kazhalaa Nemiyaan - ஒருபோதும் கையை விட்டுப் பேராத திருவாழியை யுடையனான எமபெருமானுடைய மொய்கழலே, Moykazhale - அழகிய திருவடிகளையே ஏந்த, Aentha - அதிக்க இப்போதும், Ippodhum - இக்காலத்திலும் இன்னம் இனி சிறிது நின்றாலும், Innam Ini Siridhu Nindraalum - மேலுள்ள காலத்திலும் எப்போதும், Eppodhum - ஆக எந்தக் காலத்திலும் ஈதே சொல், Eedhe Sol - இதுவே (உனக்கு நான் சொல்லும்) ஹிதோபதேசமாகும். |
| 2685 | திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (இப் பதிகம் கற்பார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டுகிறது இது இவை பத்தும்வீடே யென்றது இப்பத்துப் பாசுரமும் வீடாகிய மோக்ஷ ஸாம்ராஜ்யத்தைத் தரவல்லது என்றபடி.) 11 | கடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற
பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரனிறை யாயிரத்து இவை பத்தும் வீடே –1-1-11 | பதவுரை Show / Hideகரம், Karam - திடமான விசும்பு, Visumbu - ஆகாசமென்ன எரி, Eri - அக்னியென்ன வளி, Vali - வாயுவென்ன நீர், Neer - ஜலமென்ன நிலம், Nilam - பூமியென்ன (ஆகிய) இவை மிசை, Ivai misai - இவற்றின் மீதுள்ள (இவற்றிற்கு ஸ்வபாவங்களாயுள்ள) வரன், Varan - சிறந்த நவில், Navil - சப்தமென்ன திறல், Thiral - (கொளுத்தும்) சக்தி யென்ன வலி, Vali - (எதையும் தூக்க வல்ல) பலமென்ன அளி, Ali - குளிர்ச்சி யென்ன பொறை, Porai - எதையும் பொறுத்துக் கொண்டிருப்பதாகிற க்ஷமையென்ன ஆய் நின்ற, Aay ninra - ஆகிய இத் தருமங்களெல்லாம் தன் வசமாயிருக்கப் பெற்ற பரன், Paran - ஸர்வேச்வரனுடைய அடிமேல், Adimel - திருவடி விஷயமாக குருகூர் சடகோபன் சொல், Kurukoor Sadagopan Sol - திருநகரியில் திருவவதரித்த நம்மாழ்வார் அருளிச் செய்த நிரல் நிறை, Niral nirai - சப்த பூர்த்தியும் அர்த்த பூர்த்தியுங்கொண்ட ஆயிரத்து, Ayirathu - ஆயிரம் பாசுரங்களிலே இவை பத்தும், Ivai pathum - இப் பத்துப் பாசுரமும் வீடு, Veedu - மோஷ பிராபகம். |
| 2696 | திருவாய்மொழி || ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி - நிகமத்தில் எம்பெருமானுடைய குணங்களைத் தொடுத்த ஆயிரம் திருவாய் மொழியும் ஆராய்ந்து சொல்லப் பட்டன இவை என்கிறார் 11 | சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே –1-2-11 | பதவுரை Show / Hideசேர் தடம், ser tadam - செறிந்த தடாகங்களை யுடைய தென் சுருகூர் சடகோபன் சொல், then kurugoor,kurugur sadagopan sol - திருநகரியில் அவதரித்த நம்மாழ்வார் அருளிச் செய்த சீர் தொடை, seer thodai - கவி யுறுப்புக்களெல்லாம் நன்கு அமையப் பெற்ற ஆயிரத்து, ayirattu - ஆயிரத்தினுள்ளே இ பத்து, i pattu - இப்பத்துப் பாசுரமும் ஓர்த்த, orta,ortha - ஆராய்ந்து சொல்லப்பட்டது. |
| 2707 | திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (இத்திருவாய்மொழி வல்லவர்கள் நித்யஸூரிகளோடொக்க உயர்த்தியைப் போய்ப்பெற்று ஸம்ஸார ஸம்பந்தமறப் பெறுவரென்று பலன் சொல்லிக்காட்டுகிற பாசுரம் இது) 11 | அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11-
| பதவுரை Show / Hideஅமரர், Amarar - தேவர்கள் தொழுது எழ, Tholuthu elu - ஸேவித்து விருத்தியை யடைய அமரர், Amarar - பொருந்தின பொழில் வளம், Pozhil valam - சோலை வளமுள்ள குருகூர், Kurugoor - திருக் குருகூரில் அவதரித்த சடகோபன், Sadagopan - ஆழ்வாருடைய குற்றேவல்கள், Kurraevalgal - (வாக்கினாலாகிய) கைங்கரியமான அமரர் சுவை, Amarar suvai - சுவையமைந்த ஆயிரத்து அவற்றினுள், Aayirathu avatrinul - ஆயிரம் பாடலுக்குள் அலைகடல், Alaikadal - அலையெறிகின்ற திருப்பாற்கடலை கடைந்தவன் தன்னை, Kadaindavan thanai - கடைந்தவனான ஸர்வேச்வரனைக் குறித்து இவை பத்தும், Ivai pattum - இந்தப் பத்துப் பாசுரமும் வல்லார், Vallar - கற்க வல்லவர்கள் அமரரோடு, Amararodu - நித்யஸூரிகளோடு உயர்வில், Uyarvil - பரமபதத்தில் சென்று, sendru - சேர்ந்து தம்பிறவி, Thambiravi - தம் பிறப்பாகிற அம் சிறை, Am sirai - உறுதியான பந்தத்தில் நின்றும் அறுவர், Aruvar - நீங்கப் பெறுவர்கள். |
| 2718 | திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டும் பாசுரம் இது. இத் திருவாய்மொழியில் சொல் மாத்திரத்தைக் கற்றாலும் திருநாட்டைப் பெறுதற்குப் போதும் என்கிறார். 11 | அளவியின்ற வேழுலகத்தவர் பெருமான் கண்ணனை
வளவயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற வந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே –1-4-11 | பதவுரை Show / HideAlavu iyanra,அளவு இயன்ற - எல்லையைக் கடந்த Ezh ulagathavar perumaan,ஏழ் உலகத்தவர் பெருமான் - ஏழுலகங்களிலுமுள்ள சேதநர்களுக்கும் தலைவனான Kannanai,கண்ணனை - எம்பெருமானைக் குறித்து, Valam vayal soo,வளம் வயல் சூழ் - வளர்ப்ப முள்ள கழனிகள் சூழ்ந்த Van kurukoor,வண் குருகூர் - அழகிய திருநகரிக்குத் தலைவராகிய Sadagopan,சடகோபன் - ஆழ்வார் Vainthu uraitha,வாய்ந்து உரைத்த - அன்பு பூண்டு அருளிச் செய்த Alavu iyanra,அளவு இயன்ற - கட்டளைப் பட்ட (ஸகல லக்ஷண ஸம்பந்தமான) Andhaathi,அந்தாதி - அந்தாதித் தொடையான Aayiraththul,ஆயிரத்துள் - ஆயிரத்துக்குள்ளே Ippaththin,இப் பத்தின் - இப் பதிகத்தினுடைய Valam uraiyaal,வளம்உரையால் - வளமாகிய சொல்லளவினாலே Vaan oongu peruvalam,வான் ஓங்கு பெருவளம் - பரம பதத்தில் சிறந்த செல்வமாகிய கைங்கரிய ஸம்பத்து Peral aagum,பெறல் ஆகும் - அடையலாகும் |
| 2729 | திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (இத் திருவாய்மொழியைக் கற்பார்க்கு ஒருவகைத் துன்பமும் நேரிடாதென்று பயனுரைத்துத் தலைகட்டுகிறார். எம்பெருமான் ஸேவை ஸாதிக்கவர ‘நான் அயோக்யன்’ என்ற அகன்று தாம் பட்ட வருத்தங்கள் இத் திருவாய்மொழி கற்பார்க்கு உண்டாக்கமாட்டாவென்றவாறு.) 11 | மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –-1-5-11 | பதவுரை Show / Hideமாலே,Maale - பெரியோனே! மாயம் பெருமானே,Mayam perumane - ஆச்சரிய குண நிதியே! மா மாயனே,Ma mayane - மஹத்தான ஆச்சரிய சேஷ்டிதங்களை யுடையவனே! என்று என்று,Endru endru - என்று இங்ஙனம் பல விதங்களான திருநாமங்களைச் சொல்லி மாலே ஏறி,Maale yēri - பித்தம் பிடித்து மால் அருளால் மன்னு குருகூர் சடகோபன்,Maal arulaal mannu kurukoor sadagopan - ஸர்வேச்வரனது க்ருபையினால் பொருந்தப் பெற்ற திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார் பால் ஏய் தமிழர்,Paal aay thamizhar - (அருளிச் செய்ததான) பாலுக்குச் சமானமான இனிமை யுள்ள தமிழில் வல்லவர்களென்ன இசைகாரர்,Isaikaarar - இசையறிந்து பாடவல்லவர்களென்ன பத்தர்,Pathtar - பக்திமான்களென்ன ஆகிய இவர்களல்லாரும் பரவும்,Paravum - கொண்டாடும்படியமைந்த ஆயிரத்தின் பால்,Aayirathin paal - ஆயிரம் பாட்டினுள் பட்ட,Patta - தோன்றின இவை பத்தும்,Ivai pattum - இந்தப் பத்துப்பாட்டையும் வல்லார்க்கு,Vallarkku - ஓத வல்லவர்களுக்கு பரிவது இல்லை,Parivathu illai - யாதொரு துக்கமும் உண்டாக மாட்டாது. |
| 2795 | திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (இப்படி எம்பெருமானைப் பிரிந்த துயரத்தினால் முடியப்புகுகிற தம்மை உய்வித்தற் பொருட்டு ஸேவை ஸாதித்தருளின எம்பெருமானைக் கண்டு தாம் உஜ்ஜீவித்து, தம்முடைய உஜ்ஜீவனத்தாலே எம்பெருமானுடைய ஸர்வேச்வரத்வம் ஒளி பெற்ற படியைக்கண்டு சாலவுமுவந்து அவனுடைய ஸர்வேச்வரத்தை நெஞ்சார அநுபவித்து, இப்படி ஸர்வேச்வரனாயிருந்த எம்பெருமான் பக்கலுள்ள ஆசையாலே இத்திருவாய்மொழியை நியதமர்க அநுஸந்திக்குமவர்கள் ஒருநாளும் எம்பெருமானைப் பிரியார்கள்.இது திண்ணம் என்று இப்பதிகம் கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.) 11 | சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11 | பதவுரை Show / Hideசோராத,sooraada - ஒன்றுங்குறையாத எப்பொருட்கும்,eporutkum - எல்லாப் பொருள்களுக்கும் ஆதி ஆம்,aadhi aam - காரண பூதனாகப்பெற்ற சோதிக்கே,sothikke, jyothike - ஒளியுருவனான எம்பெருமானுக்கே ஆராத காதல்,aaraadha kaadal - அடங்காத ஆசையையுடையரான குருகூர்சடகோபன்,kurukoor sadagopan - ஆழ்வார் ஓர்ஆயிரம்,oar aayiram - ஓராயிரமாக சொன்ன அவற்றுள்,sonna avartrul - அருளிச்செய்த பாசுரங்களுக்குள்ளே இவை பத்தும்,ivai pattum - இ;ந்த பத்துப் பாசுரங்களையும் சோரார்,sooraar - மறவாதவர்கள் வைகுந்தம் –,vaigundham, vaikuntam - பரமபதத்தை திண்ணெனவே,thinave - திடமாகவே விடார் கண்டீர்,vidar kandeer - விடாமல் நித்யானுபவம் பண்ணப்பெறுவர்கள். (கண்டீர்—–முன்னிலையசை.) |
| 2806 | திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (இத் திருவாய் மொழியைக் கருத்துடனே கற்று வல்லார்க்கு, எம்பெருமான் ஈச்வரனல்லன்’ என்று புத்தி பண்ணுதல். ‘இதர தேவதைகள் ஈச்வரர்கள்’ என்று புத்தி பண்ணதல் ஆகிற அவத்யமொன்றும் உண்டாகமாட்டாதென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்
கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே –2-2-11 | பதவுரை Show / Hideஏத்த,yetha - (அனைவரும் துதிக்க ஏழ் உலகும் கொண்ட,Ezhu ulagum konda - எல்லா வுலகங்களையு மளந்து கொண்ட கோலம் கூத்தனை,Kolam kootthanai - அழகிய கூத்தனான எம்பெருமானைக் குறித்து குருகூர்சடகோபன் சொல்,kurukoor sadagopan sol - ஆழ்வார் அருளிச் செய்த வாய்த்த,Vaaytha - உலகுக்கு மஹா பாக்யமாகக் கிடைத்த ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரத்தில் இவை பத்து,Ivai pattu - இப் பத்துப் பாசுரங்களையும் உடன்,Udan - அர்தத்தோடு (கற்று) ஏத்த வல்லவர்க்கு,yetha vallavarkku - ஸ்துதி சொல்ல வல்லவர்கட்கு ஓர் ஊனம் இல்லை,or oonam illai - ஒரு குறையுமில்லையாகும் |
| 2817 | திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (ஒவ்வொரு பதிகத்திலும் ஈற்றுப் பாசுரத்தில் பயனுரைத்து வருகின்ற ஆழ்வார் இப் பதிகத்திற்குப் பயன் கூறாது, இத்திருவாய்மொழி, பாகவதர் பெருந்திரளாக இருந்து அநுபவிக்கத்தக்கது என்று சொல்லித் தலைக்கட்டுகின்றார். இதற்கொரு பலன் எதிர்பார்க்கவேண்டா; பெரிய கோஷ்டியாக இருந்து இதனை அநுபவிப்பதுதானே ஸ்வயம் ப்ரோயஜனம் என்று தெரிவித்தவாறு. அன்றியே, இத்திருவாய்மொழியைக் கற்கப் பெறில் என்னைப் போல் தனியே யிருந்து துவளாமல் பாகவத கோஷ்டிகளுடன் கூடி அனுபவிக்கும்படியான பெரும்பேறு பெறுவீர்கள் என்று இதனை இத்திருவாய்மொழி கற்கையின் பயனாகவே அருளிச்செய்தாரென்றுங் கொள்ளலாம். ஆடுமின் என்றது ஆடப் பெறுவீர்களாக என்றபடி.) 11 | குழாங்கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடிக்
குழாங்களாய் அடியீர்! உடன் கூடி நின்று ஆடுமினே–2-3-11 | பதவுரை Show / Hideஅடியீர்,Adiyir - பக்தர்களே! குழாம் கொள்,Kulam kol - கூட்டங்கூட்டமான சேனைகளைக் கொண்ட பேர்,Per - மிக்க பெருமை பொருந்திய அரக்கன்,Arakkan - ராக்ஷஸ ராஜனாகிய இராவணனுடைய குலம்,Kulam - குடும்பம் வீய,Veeya - தொலையும்படி முனிந்தவனை,Munindhavanai - சீறி யருளின பெருமான் விஷயமாக குழாம் கொள் தென்குருகூர்,Kulam kol thenkurukoor - (ஸ்ரீவைஷ்ணவ) கோஷ்டிகளை யுடைத்தான திரு நகரிக்குத் தலைவரான சடகோபன்,Sadagopan - ஆழ்வார் தெரிந்து,Therindhu - ஆராய்ந்து உரைத்த,Uraitha - அருளிச் செய்த குழாம் கொள் ஆயிரத்துள்,Kulam kol aayiraththul - பாசுரங்களின் கூட்டம் நிரம்பிய இவ் வாயிரத்தினுள் இவை பத்தும்,Ivai pattum - இப் பத்துப் பாட்டையும் உடன்,Udan - பொருளுடனே பாடி,Paadi - பாடி குழாங்கள் ஆய்,Kulangaal aay - பெரிய கோஷ்டியாய் உடன் கூடி நின்று,Udan koodi nindru - ஒரு மிக்கக் கலந்திருந்த ஆடுமின்,Aadumin - கூத்தாடுங்கள். |
| 2828 | திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (இத் திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக் கட்டுகிறது. ஆழ்வார் பட்ட கிலேசமொன்றும் படாதே எம்பெருமான் திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் பண்ணப் பெறலாமென்கிறது. --இங்கு வாமனன் என்றது தன்பொருளை விடமாட்டாதவன் என்பதைக் காட்டுதற்காக.) 11 | வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே –2-4-11 | பதவுரை Show / Hideவாட்டம் இல் புகழ்,Vaattam il pugazh - வாட்டமற்ற புகழுடையனான வாமனனை,Vaamananai - வாமனனைக்குறித்து வண்சடகோபன்,Vancha sadagopan - உதாரரான ஆழ்வார் இசை கூட்டி,Isai kooti - இசையோடே சேர்த்து சொல்,Sol - அருளிச்செய்த அமை,Amai - இலக்கணமமைந்த பாட்டு ஓர் ஆயிரத்து,Paattu or aayiraththu - ஓராயிரம் பாசுரங்களுள் இப்பத்தால்,Ippathaal - இப்பதிகத்தினால் அடி,Adi - (அந்த வாமனமூர்த்தியின்) திருவடிகளில் அம் தாமம்,Am thamam - அழகிய புஷ்பங்களை சூட்டல் ஆகும்,Suttal aagum - ஸமாப்பிக்கும் படியான பேறு உண்டாகும். |
| 2839 | திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) ((கூறுதல்) இத்திருவாய்மொழியைக் கற்பார் இதிற்சொன்னபடியே எம்பெருமானைப் பாரிபூர்ணமாகத் திருநாட்டிலே நித்யாநுபவம் பண்ணப்பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது. 11 | கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே –2-5-11 | பதவுரை Show / Hideஒன்று கூறுதல் ஆரா,Ondru kurudhal aaraa - ஒரு குணத்தைச் சொல்லுதலும் முடியாத குடக் கூத்த அம்மானை,Kudak kootha ammaanai - குடக் கூத்தாடின கண்ணபிரானைப்பற்றி கூறுதல் மேவி,Koorudhal mevi - சொல்லுவதில் ஆசை கொண்டு குருகூர்சடகோபன் கூறின,Kurugoor Sadagoban koorina - அந்தாதி அந்தாதித் தொடையான ஓர்ஆயிரத்துள்,Oraayiraththul - ஆயிரம் பாசுரத்தினுள்ளே இப்பத்தும்,Ippaththum - இத்திருவாய்மொழியை கூறுதல் வல்லார்,Koorudhal vallaar - ஓத வல்லவர்கள் உளர் ஏல்,Ular yel - உண்டாகில்(அவர்) வைகுந்தம் கூடுவர்,Vaigundam kooduvar - பரமபதம் சேரப்பெறுவர் |
| 2850 | திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (இப்பதிகத்தை இனிதாக அநுஸந்திக்குமவர்கள், பாகவதர் என்ற போக்கு உரியவராவர் என்று, இது கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார்.) 11 | கண்ணித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே –2-6-11 | பதவுரை Show / Hideதண் அம்துழாய் கண்ணிமுடி,Than Am Thuzhai Kanni Mudhi - குளிர்ந்தழகிய திருத்துழாய் மாலையணிந்த முடியையும் கமலம் தடம் பெரு கண்ணனை,Kamalam Thadam Peru Kannanai - தாமரை போன்று விசாலமான நீண்ட திருக்கண்களையுடைய பெருமானுடைய புகழ் நண்ணி,Pugazh Nanni - திருக்குணங்களை அநுபவித்து தென் குருகூர் சடகோபன் மாறன் சொன்ன,Then Kurukoor Sadagoan Maran Sonna - தென் குருகூர் சடகோபன் மாறன் சொன்ன எண்ணில் சோர்வு இல்,Ennil Sorvu Il - அநுஸந்தானத்தில் சோர்வு இல்லாத அந்தாதி,Andhaadhi - அந்தாதித்தொடையான ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து,Aayiraththul Ivaiyum Orpaththu - ஆயிரத்தினுள்ளே இப்பத்துப் பாட்டையும் இசையொடும்,Isaiyodum - இசையோடுகூட பண்ணில் பாட வல்லார்அவர்,Pannil Paada Vallaravaru - பண்ணில் அமைத்துப் பாட வல்லவர்கள் கேசவன் தமர்,Kaesavan Thamar - எம்பெருமானடியாராகப் பெறுவர்ர்கள். |
| 2863 | திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (இத்திருவாய்மொழி வல்லார் எம்பெருமானைப் பெறுவர்ரென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறார்.) 13 | வண்ணமாமணிச்சோதியை யமரர்தலைமகனை,
கண்ணனைநெடுமாலைத் தென்குருகூர்ச்சடகோபன்,
பண்ணியதமிழ்மாலை யாயிரத்துள்ளிவைபன்னிரண்டும்,
பண்ணில்பன்னிரு நாமப் பாட்டண்ணல்தாளணைவிக்குமே.–2-7-13 | பதவுரை Show / Hideவண்ணம் மாமணி சோதியை,Vannam Maamani Sodhiyai - நல்ல நிறமுடைய நீலமணியின் ஒளியை யுடையனாய் கண்ணனை,Kannanai - ஸ்ரீக்ருஷ்ணனாகத் திருவவதாரித்தவனாய் நெடு மாலை,Nedu Maalai - (ஆச்ரிதர் பக்கலில்) அளவு கடந்து செல்லுகின்ற வியாமோஹத்தை யுடையவனான எம்பெருமானைக் குறித்து தென் குருகூர்சடகோபன்,Then Kurugoor Sadagopan - ஆழ்வார் அமரர் தலை மகனை,Amarar Thalai Maganai - நித்யஸூரி நிர்வாஹகனாய் பண்ணிய,Panniya - அருளிச்செய்த தமிழ்மாலை ஆயிரத்துள்,Thamizh Maalai Aayirathul - தமிழ் மாலையாகிய இவ்வாயிரத்தினுள்ளும் பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு இவை பன்னிரண்டும்,Pannil Panniru Naamap Pattu Ivai Pannirandu - பண்ணோடு கூடின த்வாதச நாம கர்ப்பிதமர்ன இப் பன்னிரண்டு பாசுரங்களும் அண்ணல்,Annal - ஸர்வேச்வரனுடைய தாள்,Thaal - திருவடிகளை அணைவிக்கும்,Anaivikum - சேர்ப்பிக்கும் |
| 2874 | திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (பரந்து சிவந்திருந்துள்ள திருக்கண்களையும் அவற்றுக்குப் பரபாகமாகக் கறுத்த திருமேனியையுமுடைய எம்பெருமானைக் குறித்து, ஆழ்வார்பண்ணின் மேலே அருளிச்செய்தவாயிரத்துள் இப்பதிகத்தை ஓதவல்லவர்கள், திருநாட்டிலே வீற்றிருந்து நித்யானந்த மனுபவிக்கப் பெறுவார்களென்று, இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டிற்றாயிற்று.) 11 | கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –2-8-11 | பதவுரை Show / Hideகண் தலங்கள் செய்ய,Kan thalangal seiya - திருக்கண்கள் சிவந்திருக்கப் பெற்றவனாய் கரு மேனி,Karu meni - கரிய திருமேனியை யுடையனான அம்மானை,Ammaanai - ஸ்வாமி விஷயமாக வண்டு அலம்பும் சோலை வளம் வழுதி நாடன்,Vandu alampum solai valam vazhuthi naadan - வண்டுகள் ஒலிக்கின்ற சோலை வளம் பொருந்திய திருவழுதி நாட்டுக்குத் தலைவரான ஆழ்வார் பண் தலையில் சொன்ன,Pan thalaiyil sonna - தலைமையாகிய பண்களில் அமைத்துச் சொன்ன தமிழ் ஆயிரத்து,Thamizh aayirathu - இப்பத்தும் வல்லார் விண் தலையில்,Vin thalaiyil - பரமபதத்தில் வீற்றிருந்து,Veettrindru - வஸிக்கப்பெற்று எம்மா வீடு,Emma veedu - அறப்பெரிய ப்ரஹ்மானந்தத்தை ஆள்வர்,Aalvar - அநுபவிக்கப் பெறுவர் |
| 2885 | திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (இத்திருவாய்மொழியை ஓதவே, இதுதானே புருஷார்த்தத்தைப் பெறுவிக்குமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே –2-9-11 | பதவுரை Show / Hideவிடல் இல்,Vidal il - விடுதலில்லாத சக்கரத்து,chakkarathu - திருவாழியையுடைய அண்ணலை,Annalai - எம்பெருமானை மேவல் விடல் இல்,Meval vidal il - பொருந்துவது ஒரு போதும் விடாமலிருக்கப் பெற்ற வண்குருகூர்சொல்,Vangurukoor sol - சடகோபன் அருளிச் செய்த கெடல் இல்,Kedal il - அழிவற்ற (நித்யமான) ஆயிரத்துள்,Aayirathul - ஆயிரம் பாடலுள்ளும் இவை பத்தும்,Ivai paththum - இப்பதிகம் கிளர்வார்க்கு,Kilarvaarkku - தன்னை ஓதுமவர்களுக்கு கெடல் இல் வீடு செய்யும்,Kedal il veedu seyyum - கெடுதல் ஒன்றுமில்லாத மோஷானந்தத்தைப் பண்ணிக் கொடுக்கும். |
| 2896 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி - நிகமத்தில் இது திருவாய் மொழி கற்றாரை திரு வாய் மொழி தானே ஜென்மத்தை முடித்து அழகர் திருவடிகளில் சேர்க்கும் என்கிறார் ) 11 | பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11 | பதவுரை Show / Hideporul enru,பொருள் என்று - (ஒருநாளாகிலும்) பிரயோஜனப்படுமென்று i ulakam,இ உலகம் - இவ்வுலகங்களை pataittavan,படைத்தவன் - ஸ்ருஷ்டித்த பெருமானுடைய pukal mel,புகழ் மேல் - திருக்கல்யாண குணங்களில் marul il,மருள் இல் - அஜ்ஞான மில்லாத van kurukur van catakopan,வண் குருகூர் வண் சடகோபன் - வண் குருகூர் வண் சடகோபன் terul kolla,தெருள் கொள்ள - (சேதநர்க்குத்) தெளிந்த ஞானமுண்டாகுமாறு conna,சொன்ன - அருளிச் செய்த or ayirattul,ஓர் ஆயிரத்துள் - ஆயிரம் பாசுரங்களுள் ippattu,இப்பத்து - இப்பதிகம் mutittu,முடித்து - ஸம்ஸார பந்தத்தைப் போக்கி arul utaiyavan tal,அருள் உடையவன் தாள் - பரமதயாளுவான எம்பெருமானது திருவடிகளில் anaivikkum,அணைவிக்கும் - சேர்விக்கும் |
| 2918 | திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (இத்திருவாய்மொழி கற்பார, தம்மைப்போலே நோவுபடாதே ஸம்ஸார விமோசனம் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின் மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.–3-2-11 | பதவுரை Show / Hideஎல்லா உயிர்கள்,Ellaa uyirgal - ஸகல ஜீவராசிகளையும் எல்லா உலகமும்,Ellaa ulagamum - எல்லா உலகங்களையும் உடையவனை,Udaiyavanai - உடைமையாகக் கொண்டுள்ள எம்பெருமானைக் குறித்து குயில் கொள் சோலை தென் குருகூர் சடகோபன்,Kuyil kol solai then Kurugur Sadagopan - குயில்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருநகரிக்குத் தலைவரான ஆழ்வாரருளிய செயிர் இல்,Seyir il - குற்றமற்ற சொல்,Sol - சொற்களையுடையத்தாய் இசை,Isai - இசையோடுங்கூடின மாலை,Maalai - தொடையையுடைய ஆயிரத்துள்,Aayirathul - ஆயிரத்திலும் இ பத்தும்,e paththum - இப் பத்துப்பாட்டும் உயிரின் மேல்,Uyirin mel - ஆத்மாவின்மேல் வந்தேறியான ஊன் இடை,Oon idai - மாம்ஸமயமான ஆக்கை,Aakai - சரீரத்தை ஒழிவிக்கும்,Ozhivikkum - போக்குவிக்கும் |
| 2929 | திருவாய்மொழி || (3-3–ஒழிவில்) - (இத் திருவாய் மொழியை ஓதவல்லவர்கள் உலகமெல்லாங் கொண்டாடும் படியான வாழ்ச்சியைப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார்.) 11 | தாள் பரப்பி மண் தாவிய ஈசனை,
நீள் பொழில் குரு கூர்ச் சட கோபன் சொல்,
கேழில் ஆயிரத்திப் பத்தும் வல்லவர்,
வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே.–3-3-11 | பதவுரை Show / Hideதாள் பரப்பி, thaal parappi - திருவடியை விரித்து மண் தாவிய, man thaaviya - பூமியெல்லாம் அளந்து கொண்ட ஈசனை, eesanai - எம்பெருமானைக் குறித்து நீள் பொழில், neel pozhil - உயர்ந்த சோலைகளையுடைய குருகூர் சடகோபன், kurugoor sadagopan - ஆழ்வார் சொல், sol - அருளிச்செய்த கேழ் இல், kezh il - ஒப்பற்றதான ஆயிரத்து, aayirathu - ஆயிரத்தில் இப் பத்தும், ip pathum - இத்திருவாய்மொழியை வல்லவர், vallavar - ஓதவல்லவர்கள் ஞாலம் புகழ, nyaalam pugazha - உலகம் யாவும் கொண்டாடும் படி வாழ்வு எய்தி, vaazhvu eidhi - வாழ்ச்சிபெற்று வாழ்வர், vaazhvar - (அந்த வாழ்ச்சி ஒருநாளும் குன்றாமே) விளங்குவர். |
| 2951 | திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (இத்திருவாய்மொழி கற்றார்க்கு பகவத்குணாநுஸந்தானத்தினால் ஒரு விகாரம் பிறவாமையாகிற மஹா பாபத்தை இதுதானே போக்குமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11 | தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்த்த புகழ்அச் சுதனை அமரர் பிரானைஎம் மானை
வாய்ந்த வளவயல் சூழ்தண் வளம் குரு கூர்ச்சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும் அருவினை நீறு செய்யுமே.–3-5-11 | பதவுரை Show / Hideதீர்ந்த,Theerndha - தனக்கே அற்றுத் தீர்ந்த அடியவர்,Adiyavar - விரோதிகள் அற ஸ்வீகரித்து பணி கொள்ள வல்ல,Pani kolla vala - (அவர்கள் மூலமாக) நித்திய கைங்கரியத்தைக் கொள்ள வல்லவனும் ஆர்ந்த புகழ்,Aarndha pugazh - நிறைந்த புகழுடையவனும் அச்சுதனை,Acchudhanai - அச்யுத னென்னும் திருநாமமுடையவனும் அமரர் பிரானை,Amarar piranaai - தேவர்களுக்கு ப்ரபுவுமான எம்மானை,Emmaanai - எம்பெருமாளை வாய்ந்த,Vaaindha - கிட்டின வளம் வயல் சூழ் தண்வளம்,Valam vayal sooal thanvalam - வளம் வயல் சூழ் தண்வளம் குருகூர் சடகோபன்,kurukoor Sadagopan - திருக்குருகூரிலவதரித்த நம்மாழ்வார் நேர்ந்த,Neerndha - அருளிச் செய்த ஓர் ஆயிரத்து,Oar aayiraththu - ஆயிரத்துள் இ பத்து,I pattu - இத்திருவாய்மொழி அரு வினை,Aru vinai - போக்கவரிய பாவங்களை நீறு செய்யும்,Neeru seyyum - பஸ்மமாக்கிவிடும். |
| 2962 | திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (இத்திருவாய்மொழியை ஓத, பழுதில்லாத பக்தியுடையராகை திண்ணம்; ஆனபின்பு இத்திருவாய்மொழியை ஓதுங்கள் என்கிறார்) 11 | கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11 | பதவுரை Show / Hideகண்கள் காண்டற்கு,Kangal kaandarku - கண்களால் பார்ப்பதற்கு அரியன் ஆய்,Ariyan aai - அருமைப்பட்டவனாகி கருத்துக்கு,Karuthukku - தியானத்திற்கு நன்றும் எளியன் ஆய்,Nandrum eliyan aai - மிகவும் சுலபனாய் மண் கொள் ஞாலத்து,Man kol gnaalathu - பூமண்டலத்திலுள்ள உயிர்க்கு எல்லாம்,Uyirkku ellaam - பிராணிகளுக்கெல்லாம் அருள் செய்யும்,Arul seyyum - (அர்ச்சாவதார முகத்தாலே) க்ருபைபண்ணுகிற வானவர் ஈசனை,Vaanavar esanai - தேவாதிதேவனைக் குறித்து, பண் கொள் சோலை,Pan kol solai - (வண்டு முதலியவற்றின்) இசைமிகுந்த சோலைகளையுடைய வழுதி நாடன்,Vazhudi naadan - திருவழுதி நாட்டை யுடையராய் குருகை கோன்,Kurugai kon - திருநகரிக்குத் தலைவரான சடகோபன்,Sadagopan - ஆழ்வார் சொல்,Sol - அருளிச்செய்த பண் கொள் ஆயிரத்து,Pan kol aayirathu - ராகப்ரதாநமான இவ்வாயிரத்தினுள்ளும் இப்பத்தால்,Ippathaal - இப்பதிகத்தினால் பத்தார் ஆக கூடும்,Paththaar aaga koodum - பக்தியை யுடையவராகக் கூடும்: பயிலுமின்,Payilumin - (ஆதலால் இப்பதிகத்தை) அப்யஸியுங்கோள். |
| 2995 | திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (இத்திருவாய்மொழி கற்றார்க்கு, பிறரைக்கவிபாடுவதற்குரிய நீசப்பிறவி நேராதென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–3-9-11 | பதவுரை Show / Hideஏற்கும் பெரும் புகழ்,Erkum perum pugazh - தனக்கு ஏற்றிருக்கின்ற மிக்க புகழுடையனாய் வானவர் ஈசன் வண் குருகூர்ச் சடகோபன்,Vaanavar eesan van kurugoor Sadagopan - நித்யஸூரி நாதனான எம்பெருமான் ஏற்கும் பெரும்புகழ் குருகூர் சடகோபன் சொல்,Sol - அருளிச்செய்த ஏற்கும் பெரும் புகழ்,Yerkum perum pugazh - ஏற்ற பெரும்புகழையுடைய ஆயிரத்துள்,Aayiraththul - இவ்வாயிரத்தினுள் கண்ணன் தனக்கு,Kannnan thanakku - கண்ணபிரான் விஷயமாக ஏற்கும் பெரும் புகழ்,Yerkum perum pugazh - தகுதியான சிறந்த புகழையுடைத்தான இவை ஓர் பத்தும்,Evai OrPaththum - இந்தத் திருவாய்மொழியை சொல்ல வல்லார்க்கு,Solla vallaarkku - ஓதவல்லவர்க்கு சன்மம் இல்லை,Sanmam ellai - மறுபிறப்பு இல்லை |
| 3017 | திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (துயரங்கள் தீர்ந்து ஆத்மோஜ்ஜூவநம் பெறுவதே இத்திருவாய்மொழி கற்பதற்குப் பலன் என்று பயனுரைத்துத் தலைகாட்டுகிறார்.) 11 | அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11 | பதவுரை Show / Hideஉய்யப் புகும் ஆறு,Uyyap pugum aaru - உஜ்ஜீவநோபாயம் அஃதே என்று,Akdhe endru - திருநாராணன் தாள்களேயென்று அறுதியிட்டு கண்ணன்,Kannan - எம்பெருமானுடைய கழல்கள் மேல்,Kazhalkal mel - திருவடிகள் விஷயமாக கொய் பூ,Koi poo - திருவடிகள் விஷயமாக பொழில் சூழ்,Pozhil soozh - கொய்வதற்குரிய பூக்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட குருகூர்,Kurugoor - திருநகரிக்குத் தவைரான சடகோபன்,Sadagopan - ஆழ்வாருடைய குற்றேவல்,Kutreval - வாசிக கைங்கர்ய ரூபமாயும் செய் கோலத்து,Sei kolathu - ஸர்வாலங்கார ஸம்பந்தமாயுமிருக்கிற ஆயிரம்,Aayiram - ஆயிரந்தொகையுள்ள சீர் தொடை பாடல்,Seer thodai paadal - திருக்குணங்களை யிட்டுத் தொடுத்த மாலை போன்ற இப்பாடலில் இவை பத்தும்,Ivai pathum - இப்பத்துப் பாசுரங்களையும் அஃகாமல்,Akhamal - குறைவின்றி கற்பவர்,Karppavar - ஓதுமவர்கள் ஆழ் துயர் போய்,Aazh thuyar poi - ஆழ்ந்த துயர் நீங்கப்பெற்ற உய்யற்பாலர்,Uyyar paalar - உஜ்ஜூவிக்குந் தன்மையை யுடையராவர். |
| 3028 | திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (இத்திருவாய்மொழி கற்றார் நித்யஸூரிகளோடு ஒரு கோவையாகப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிற பாசுரமிது. ஆழ்வார் மெலியுமளவான வளவிலே எம்பெருமான் வந்து முகங்காட்டி ஆற்றாமையைப் போக்கி ஒருவாறு ஆச்வஸிப்பித்தம்மை முதலடியில் தொனிக்கும்.) 11 | மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலிபுகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மலிபுகழ் வானவர்க்கு ஆவர் நற்கோவையே.–4-2-11 | பதவுரை Show / Hideமெலியும் நோய் தீர்க்கும்,meliyum noy theerkkum - மெலிவை விளைக்கும்படியான பிரிவுநோயைப் போக்கவல்லவனான நம் கண்ணன்,nam kannan - நமது கண்ணபிரானுடைய கழல்கள் மேல்,kazhalkal mel - திருவடி விஷயமாக மலி புகழ்,mali pugal - வளர்ந்த புகழையுடைய வண் குருகூர் சடகோபன்,van kurukoor sadagopan - திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார் சொல்,sol - அருளிச்செய்த ஒலி புகழ்,oli pugal - கொண்டாடப்பட்ட குணபூர்த்தியையுடைய ஆயிரத்து,aayiraththu - ஆயிரத்திலும் இப்பத்தும்,ippattum - இப்பத்துப் பாசுரங்களையும் வல்லவர்,vallavar - ஓதவல்லவர்கள் மலி புகழ்,mali pugal - மிக்கபுகழையுடைய வானவர்க்கு,vaanavarkku - நிதய்சூரிகளுக்கு நல் கோவை ஆவர்,nal kovai aavar - நல்ல சேர்த்தியாவர். |
| 3039 | திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (இத்திருவாய் மொழியை ஓதுமவர்கள் உபய விபூதியையும் தாம் இட்ட வழக்காக நிர்வஹிக்கப் பெறுவர்களென்கிறார்.) 11 | உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–4-3-11 | பதவுரை Show / Hideமற்று,Matru - வேறு வழியினால் உய்வு உபாயம் இன்மை,Uyvupayam inmai - தரிக்கவிரகில்லாமையை தேறி,Theri - துணிந்து கண்ணன்,Kannan - எம்பெருமானுடைய ஓண் கழல்கள் மேல்,On kazhalgal mel - அழகிய திருவடிகள் விஷயமாக, செய்ய தாமரை பழனம்,Seyya tamarai pazhanam - செந்தாமரைகள் நிறைந்த நீர்நிலங்களையுடைய தென் நன் குருகூர்,Then nan kurugoor - தென் திசையிலுள்ள அழகிய திருக்குருகூர்க்குத் தலைவரான சடகோபன்,Sadagopan - ஆழ்வார் (அருளிச் செய்ததான) பொய் இல் பாடல் ஆயிரத்துள்,Poi il paadal aayirathul - யதார்த்தம் பொருந்திய ஆயிரத்தினுள்ளும் இவை பத்தும்,Ivai patthum - இப்பத்துப் பாசுரங்களையும் வல்லார்கள்,Vallargal - ஓதவல்லவர்கள் வையம்,Vaiyam - இப்பூமண்டலத்திலே மன்னி வீற்றிருந்து,Manni veetrirundhu - நெடுங்காலம் பொருந்தியிருந்து மண்ணூடே,Mannude - இந்நிலத்திலேயே விண்ணும் ஆள்வர்,Vinnum aaluvar - பரம பதத்தையும் ஆளப் பெறுவர்கள். |
| 3050 | திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (இத்திருவாய்மொழி கற்பவர்கள் எல்லாத்துன்பங்களும் தொலையப்பெற்றுத் திருநாட்டிலே நித்யஸூரிகள் ஆதரிக்கும்படியான பெருமைபெற்று மகிழ்வரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே.–4-4-11 | பதவுரை Show / Hideவல்வினை,Valvinai - ஸகல பாபங்களையும் தீர்க்கும் கண்ணனை,Theerkkum Kannani - போக்குமியல்வினனான க்ருஷ்ணனை வண் குருகூர் சடகோபன்,Van Kurugoor Sadagopan - வளப்பமுடைய திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார் சொல் வினையால்,Sol vinayal - சொல்லுந் தொழில் வன்மையால் சொன்ன பாடல்,Sonna paadal - அருளிச் செய்த பாட்டுக்கள் ஆயிரத்துள் இவை பத்தும்,Aayiraththul ivai patthum - ஆயிரத்துள் இவை பத்துப்பாட்டுக்களையும் நல் வினை என்று கற்பார்கள்,Nal vinai endru karporgal - இது நல்ல செய்கை என்று கருதிக் கற்குமவர்கள் நலன் உடை,Nalan udai - (பகவதநுபவமாகிற) ஆனந்தத்தை யுடைத்தான வைகுந்தம் நண்ணி,Vaikuntham nanni - பரமபதத்தைக் கிட்டி தொல்வினை தீர,Tolvinai theera - அநாதியான பாபங்கள் மறுவிலடாதபடி ஒழிய எல்லாரும் தொழுது எழ,Ellarum thozhuthu ezha - பெரியகிளர்த்தியை யுடையராம்படியாக வீற்றிருப்பார்,Veetriruppar - இருக்கப்பெறுவர்கள். |
| 3061 | திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (இத்திருவாய்மொழி கற்பாருடைய தீ வினைகளையெல்லாம் பெரியபிராட்டியார் தீர்த்தருளக்கூடுமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே.–4-5-11 | பதவுரை Show / Hideமாரி மாறாத,Maari maaraadha - மழைதப்பாதபடியினாலே தண்,Than - குளிர்ந்து அம்,Am - அழகியதான வேங்கடம் மலை,Vengadam malai - திருவேங்கடம்மலையிலேயுள்ள அண்ணலை,Annalai - ஸ்வாமி விஷயமாக வாரி மாறாத,Vaari maaraadha - ஜலஸம்ருத்தி குறையாத பை பூ பொழில் சூழ்,Pai poo pozhl sooL - பரந்த பூஞ்சோலைகளாலே சூழப்பட்ட குருகூர் நகர்,Kurukoor nagar - திருநகரியில் (அவதரித்த) காரி மாறன் சடகோபன்,Kaari maaran sadagopan - ஆழ்வார் சொல்,Sol - அருளிச்செய்த ஆயிரத்து,Aayiraththu - ஆயிரத்தில் இப்பத்தால்,Ippathaal - இப்பத்துப் பாசுரங்களினால், வேரி மாறாத,Veeri maaraadha - பரிமளம் அறாத பூ மேல் இருப்பாள்,Poo mel iruppaal - தாமரை மலரிலே நித்ய வாஸம் பண்ணுகிற பிராட்டி வினை தீர்க்கும்,Vinai theerkkum - எல்லாப் பாபங்களையும் போக்கியருள்பவன் |
| 3072 | திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (இத்திருவாய்மொழியை அன்போடு அதிகரிக்குமவர்கள் எம்பெருமானைப் பிரிந்து படுகையாகிற துக்கமின்றிக்கே வாழப்பெறுவர்கள் என்று பயனுரைத்துத் தலைக் கட்டுகின்றார்.) 11 | தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடிப் பாடவல்லார் துக்க சீலம் இலர்களே.–4-6-11 | பதவுரை Show / Hideதொழுது ஆடி,Tozhuthu aadi - வணங்குதலும் கூத்தாடுதலுஞ் செய்து தூ மணிவண்ணனுக்கு,Thoo manivannanukku - அழகிய நீலமணிபோன்ற நிறமுடையனான எம்பெருமானுக்கு ஆள் செய்து,Aal seydu - அடிமைத்தொழில் செய்து நோய் தீர்ந்த,Noy tirnta - நோய் தீரப்பெற்றவரும், வழுவாத,Valuvad - அவத்யமடையாத தொல் புகழ்,Tol pugal - இயற்கையான புகழையுடையவரும் வண் குருகூர்,Van kurukoor - அழகிய திருநகரிக்குத் தலைவருமான சடகோபன்,Sadagopan - ஆழ்வார் சொல்,Sol - அருளிச் செய்த வழுவாத,Valuvad - குறையற்றதான ஆயிரத்துள்,Ayirattul - ஆயிரத்தினுள்ளே வெறிகள்,Verikal - வெறிவிலக்கு விஷயமான இவை பத்தும்,Ivai pattum - இப்பதிகத்தை தொழுதும் ஆடி,Tozhutum aadi - தொழுவதும் ஆடவதுமாய்க் கொண்டு பாட வல்லார்,Pada vallar - பாடவல்லார்கள் துக்க சீலம் இலர்கள்,Tukka cilam ilarkal - துக்கப்படுந்தன்மையில்லாதவராவர். |
| 3083 | திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) ((தழுவிநின்ற.) இத்திருவாய்மொழியைக்கற்று ப்ரேம பரவசராமவர்கள் திருநாட்டிலே சென்று நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்காட்டுகிறார்.) 11 | தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.–4-7-11 | பதவுரை Show / Hideதழுவி நின்ற,Thazhuvi nindra - விட்டு நீங்காத காதல் தன்னால்,Kaadhal thannal - (பகவதனுபவத்திலுள்ள) ஆசையினாலே தாமரை கண்ணன் தன்னை,Thamarai kannan thannai - செந்தாமரைக்கண்ணனான எம்பெருமானைக்குறிந்து குழுவு மாடம் தென்குருகூர்,Kuzhuvu madam thenkurugur - திரண்ட மாடங்களையுடைய திருநகரிக்குத் தலைவரான மாறன் சடகோபன்,Maran sadagopan - ஆழ்வார் சொல்,Sol - அருளிச்செய்த வழு இலாத,Vazhu ilaadha - குறையற்ற ஒண் தமிழ்கள்,On tamilkal - அழகிய தமிழ்ப்பாஷையினாலாகிய ஆயிரத்துள்,Ayirathul - ஆயிரம் பாட்டினுள் இ பத்தும்,I pathum - இத்திருவாய்மொழியை தழுவ,Thazhuva - கருத்தோடுகூட பாடி,Paadi - இசைபாடி ஆட வல்லார்,Aada vallaar - களித்துக் கூத்தாடவல்லவர்கள் கைகுந்தம் ஏறுவர்,Vaikundham yeruvar - திருநாட்டில் ஏறப்பெறுவர்கள். |
| 3094 | திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (இருள் தருமாஞாலத்தில் பிறப்பையறுத்துப் பரமபதம் பெறுதற்கு இத்திருவாய்மொழி ஸாதனமாயிருக்குமென்று பயலுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11 | உயிரினால் குறை இல்லா உலகு ஏழ் தன் உள் ஒடுக்கித்
தயிர் வெண்ணெய் உண்டானைத் தடங் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப் பத்தால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே.–4-8-11 | பதவுரை Show / Hideஉயிரினால் குறைவு இல்லா,Uyirinaal kuraivu ella - எண்ணிறந்த ஆத்மாக்களையுடைய ஏழ் உலகு,Ezh ulagu - ஸமந்த லோகங்களையும் தன்னுள்; ஒடுக்கி,Thannul; odugi - தன்னுடைய ஸங்கல்பத்திலே யடக்கிவைத்து தயிர் வெண்ணெய் உண்டானை,Thayir vennai undaanai - தயிரும் வெண்ணெயும் அமுது செய்தவனான எம்பெருமான் விஷயமாக தடம் குருகூர் சடகோபன்,Tadam kurugoor sadagopan; - தடம் குருகூர் சடகோபன்; செயிர் இல்,Seir il - குற்றமற்ற இசை,Isai - இசையோடு கூடின சொல்மாலை,Solmaalai - சொல்மாலையாகிய ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரம் பாட்டினுள்ளே இபத்தால்,Ipaththaal - இந்தப்பதிகத்தினால் வயிரம் சேர் பிறப்பு அறுத்து,Vairam saer pirappu aruthu - உரமேறின ஸம்ஸாரத்தை அடியறுத்து வைகுந்தம்,Vaigundham - பரமபதத்தை நண்ணுவர்,Nannuvar - கிட்டப்பெறுவர். |
| 3105 | திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (இத்திருவாய்மொழியானது, தன்னைக் தற்பவர்களை அவன் திருவடிகளோடே சேர்விக்கும் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11 | திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங் குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே.–4-9-11 | பதவுரை Show / Hideதிரு அடியை,Thiru adiyai - ஸர்வாமியாய் காரணனை,Kaarananai - நாராயணானாய் கேசவனை,Kaeshavanai - பரஞ்சோதியாயிருக்கிற எம்பெருமானை திரு அடி சேர்வது கருதி,Thiru adi saervadhu karuthi - கிட்டியநுபவிக்க விரும்பி செழு குருகூர் சடகோபன்;,Sezhu kurukoor sadagopan - செழு குருகூர் சடகோபன்; திரு அடி மேல்,Thiru adi mel - அவனது திருவடிகளின் மீது உரைத்த,Uraitha - அருளிச்செய்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்;,Thamil aayiraththul ippattum - தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்; திரு அடியே,Thiru adiye - அந்தத் திருவடிகளையே அடைவிக்கும்,Adaivikkum - அடையப்பண்ணும்; திரு அடி சேர்ந்து,Thiru adi serndhu - (ஆதலால், நீங்கள்) அந்தத் திருவடிகளைக் கிட்டி ஒன்றுமின்,Ondrumin - பொருந்தியிருக்கப் பாருங்கள் |
| 3116 | திருவாய்மொழி || (4-10–ஒன்றும் தேவும்) - (இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டும் பாசுரம் இது.) 11 | ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11 | பதவுரை Show / Hideஆள் செய்து, Aal seidhu - (உபதேச முகத்தாலே ஸம்ஸாரிகளைத் திருத்திப்பணிகொள்ளுகையாகிற) கைங்கரியத்தைப் பண்ணி ஆழி பிரானை சேர்ந்தவன், Aazhi piraanai serndhavan - ஆழியங்கையனான பெருமானை அடைந்தவரும் வண் குருகூர் நகரான், Van Kurukoor nagaraan - திருநகரிக்குத் தலைவரும் நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன், Naal kamazh magizh maalai maarbinan - பரிமளம் மாறாதமாலையைத் திருமார்பிலே அணிந்தவருமான மாறன் சடகோபன், Maaran Sadagopan - ஆழ்வார் வேட்கையால், Vetkaiyaal - ஆதரத்தோடு சொன்ன பாடல் ஆயிரத்துள், Sonna paadal aayirathul - ஆயிரம்பாட்டினுள்ளே இ பத்தும், I pathum - இப்பதிகத்தை வல்லார், Vallar - ஓதவல்லவர்களுக்கு மீட்சி இன்றி, Meetchi indri - மீண்டும் திரும்பிதலில்லாத வைகுந்தம் மாநகர் மற்றது, Vaigundham maanagar mattrathu - ஸ்ரீ வைகுண்டமஹாநகரமாகிய அவ்விடம் கையது, Kaiyadhu - கரஸ்தம். |
| 3127 | திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) இப்பத்தும் வல்லவர் ஸ்ரீவைஷ்ணன் ஸ்ரீ மிக்கவர்களாய்க் கொண்டு எம்பெருமான் திருவடிக் கீழே புகுவர்களென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறார்.) 11 | கார் வண்ணன் கண்ண பிரான் கமலத் தடங்கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே.–5-1-11 | பதவுரை Show / Hideகார் வண்ணன்,Kaar Vannan - மேகவண்ணனும் கண்ணபிரான்,Kannapiraan - ஸர்வஸுலபனும் கமலம் தட கண்ணன் தன்னை,Kamalam Tada Kannan Thannai - தாமரைபோன்ற விசாலமான திருக்கண்களையுடையனுமான எம் பெருமானைக் குறித்து. ஏர் வளம் ஒண் கழனி,Aer Valam On Kalani - எங்களின் மிகுதியையுடைத்தாய் அழகியவான கழனிகளையுடைய குருகூர்,Kurugoor - திருநகரிக்குத்தலைவரான சடகோபன்,Sadagopan - ஆழ்வார் சொன்ன,Sonna - அருளிச்செய்த சீர் வண்ணம் ஒண் தமிழர்கள்,Seer Vannam On Tamilarkal - சீரும் வண்ணமும் குறையாத தமிழினாலான இவை ஆயிரத்துள் இ பத்தும்-;,Ivai Aayiraththul I Patthum-; - இவை ஆயிரத்துள் இ பத்தும்-; ஆர் வண்ணத்தால்,Aar Vannathaal - அமிருதபானம் பண்றுமாபோலே உரைப்பர்,Uraippar - ஓதுமவர்கள் பொலிந்து,Polindhu - ஸம்ருத்தியோடே யிருந்து அடிகீழ்,Adikeezh - அவ்வெம்பெருமான் திருவடிகளின் கீழே புகுலார்,Pugulaar - புகப்பெறுவர்கள். |
| 3138 | திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (இத் திருவாய்மொழியான தன்னைக் கற்பவர்களது நெஞ்சிலுள்ள ஸகல விதமான அழுக்கையுமறுக்குமென்று பயலுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–5-2-11 | பதவுரை Show / Hideதன் அடியார்க்கு,Than adiyarkku - தன் அடியவர்களுக்கு கலியுகம் ஒன்றும் இன்றிக்கே,Kaliyugam ondrum indrikke - கலியுகதோஷம் ஒன்றும் தட்டாதபடி அருள் செய்யும்,Arul seyyum - கிருபை பண்ணுகின்ற மலியும் சுடர் ஒளி மூர்த்தி,Maliyum sudar oli moorthi - மிகுந்த பிரகாசம் பொருந்திய தேஜோமயு திவ்யவிரஹதிதையுடையவனும் மாயம் பிரான்.,Maayam pirano - வேஷ்டி தங்களையுடைய ப்ரபுவுமான கண்ணன் தன்னை,Kannan thannai - எம்பெருமானைக் குறித்து கலி வயல்,Kali vayal - நிறைந்த வயல்களையுடைய தென் திசை,Then disai - தென் திசையிலுள்ள குருகூர்,Kurugoor - திருநகரிக்குத்தலைவரான காரி மாறன் சடகோபன்,Kaari maaran Sadagopan - ஆழ்வார் புகழ்,Pugazh - கீர்த்திமிக்க ஆயிரத்து பத்து,Aayirathu paththu - ஆயிரத்தினுள் இத்திருவாய்மொழி உள்ளத்தை,Ullathai - (கற்பாருடைய) நெஞ்சை மாசு அருக்கும்,Maasu arukkum - கல்மஷமற்றதாகச் செய் |
| 3149 | திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -நிகமத்தில் இத்திருவாய் மொழி சொல்லும் தேசத்தில் எம்பெருமான் தானே வந்து நித்ய சம்ச்லேஷம் பண்ணும் -என்கிறார்) 11 | இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை
விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக் கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–5-3-11 | பதவுரை Show / Hideஇரைக்கும்,Iraikum - கோக்ஷிக்கின்ற ஈறா கடல் கண்ணன்,Eeraa kadal kannan - கருங்கடல் போன்ற வடிவழகையுடையவன் கண்ணபிரான் தன்னை,Kannapiraan thannai - கண்ணபிரானான எம்பெருமானைக் குறித்து விரை கொள்பொழில்,Virai kolpozhil - பரிமனம்மிக்க சோலைகளையுடைய குருகூர்,Gurukoor - திருநகரியில் அவதரித்த சடகோபன்,Sadagopan - ஆழியார் சொன்ன,Sonna - அருளிச் செய்த நிரைகொள்,Nirai kol - சாஸ்த்ரமரியாதைப்படியே ஒழுங்குகளைக்கொண்ட அந்தாதி,Andaadhi - அந்தாதித் தொடையாமைந்த ஓர் ஆயிரத்துள்,Oor aayiraththul - ஆயிரம் பாசுரங்களிலுள்ளே இயற்றும்,Iyarrum - இப்பதிகத்தை உரைக்க வல்லார்க்கு,Urakk valarkkum - ஓதவல்லவர்களுக்கு தம் ஊர் எல்லாம்,Tham oor ellaam - தம்தம் இருப்பிடமெல்லாம் வைகுந்தம் ஆகும்,Vaikundham aagum - பரமபதம் போலே பேரின்பசீலமாக விளங்கும் |
| 3160 | திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -நிகமத்தில் இப்பாசுரம் கேட்டார் இவர் தசையை அனுசந்தித்தார் பிழையார் என்கிறார் -பரமபத சித்தி சொல்லிற்று -முடிந்தால் புகுமிடம் அதுவாகையாலே சொன்னது அத்தனை.) 11 | உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11 | பதவுரை Show / Hideஉறங்குபவன்போல்,Urangubavan pol - நித்திரை செய்பவன்போல் யோகு செய்து,Yogu seidhu - ரக்ஷனோபாய சிந்தை பண்ணிக் கொண்டிருக்கிற பெருமானை,Perumanaai - எம்பெருமான் விஷயமாக சிறந்த தொழில் சூழ் குருகூர் சடகோபன்,Sirandha thozhil sool kurugoor sadagopan - அழகிய சோலைகளாலே சூழப்பட்ட திருநகரிலிருக்குந் தலைவரான ஆழ்வார் சொல்,Sol - அருளிச் செய்த நிதம் கிளர்ந்த,Nitham kilarndha - பண் விஞ்சின அந்தாதி,Anthaathi - அந்தாதிக் கொடையான ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரம் பாசுரங்களும் இப்பத்தால்,Ippathaal - இப்பதிகத்தினால் இறந்துபோய்,Iranthupoy - (அவரவர்கள்) சரீர வியோகம் பெற்றபின்பு வைகுந்தம்,Vaikundham - பரமபதத்தில் சேரா ஆறு,Seraa aaru - புகாதொழிவது எங்களை,Engalai - எவ்வண்ணம்? (புகவே புகுவர்களென்கை.) |
| 3171 | திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் இத்திருவாய் மொழியை அப்யசித்தவர்களுக்கு பகவச் சேஷத்வம் ஆகிற ஸ்வரூப லாபம் பலமாக அருளிச் செய்கிறார்.) 11 | அறி வரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக் குறுங்குடி யதன் மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே.–5-5-11 | பதவுரை Show / Hideஅறிவு துரிய பிரானை,Arivu thuriya piranai - ஒருவர்க்குமறிய வொண்ணாக ஸ்வாமியாயும் ஆழி அம் கை யணையே,Aazhi am kai yanaiye - திருவாழியை அழகிய திருக்கையிலே உடையவனாயுமிருக்கிற எம்பெருமானையே அலற்றி,Alattri - வாய்வெருவி ஈறிய,Eeriya - பரிமளம் மிக்க நல் மலர் நாடி,Nal malar naadi - நல்ல பூக்களை நாடுபவரான நன் குருகூர் சடகோபன் சொன்ன-;,Nan kurukoor Sadagopan sonna-; - நன் குருகூர் சடகோபன் சொன்ன-; ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரம் பாசுரங்களுள் திருக் குறுங்குடி அதன் மேல்,Thiru kudungudi adhan mel - திருக்குறுங்குடி விஷயமாகப்பேசினதாய் குறி கொள்,Kuri kol - எம்பெருமானுடைய திவ்யாவயவ திவ்யாயுத திவ்யாபரணலாஞ்சனம்களை யுடையதான இவைபத்தும்,Ivaipaththum - இத்திருவாய்மொழியை அறிய,Ariya - பொருளும் தெரியும்படி கற்று,Katru - ஓதி வல்லார்,Vallar - தேறினவர்கள் ஆழ் கடல்,Azh kadal - ஆழ்ந்த கடல் சூழ்ந்த இந்நிலத்துள் வைட்டணவர்,Vaittanavar - சிறந்த ஸ்ரீஐவஷ்ணவர்களாகக் கொண்டாடப்படுவர்கள். |
| 3182 | திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (இத் திருவாய்மொழியை ஓதவல்லவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அடிமை செய்யப்பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11 | கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11 | பதவுரை Show / Hideகூந்தல்,Koondhal - விலக்ஷணமான மயிர் முடியையுடையனான மலர் மங்கைக்கும்,Malar manghaikum - பெரியபிராட்டிக்கும் மண் மடந்தைக்கும்,Man madanthaikum - பூமிப்பிராட்டிக்கும் குலம் ஆயர் கொழுந்துக்கும்,Kulam aayar kolundhukkum - நல்லகுடிப்பிறப்பையுடைய நப்பின்னைப் பிராட்டிக்கும் ஆய்ந்த,Aayndha - ஆராய்ந்து அருளிச் செய்த தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்-;,Thamizh maalai aayiraththul ivaiyum oru paththum vallaar-; - தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்-; உலகில்,Ulagil - இவ்வுலகத்திலே ஏந்து பெரு செல்வத்தர் ஆய்,Aendhu peru selvaththar aay - எல்லாரும்கொண்டாடும்படியான ஸ்ரீவைஷ்ணவ லக்ஷ்மியையுடையராய்க் கொண்டு கேள்வன் தன்னை,Kelvan thannai - நாயனான எம்பெருமான் விஷயமாக வாய்ந்த வழுதி வனம் நாடன் மன்னுருருகூர் சடகோபன்,Vaayndha vazhuthi vanam naadan mannururukoor sadagopan - ஆழ்வார் குற்றேவல் செய்த,Kuttreval seydh - அந்தரங்கரைங்கர்ய ரூபமாக திரு மால் அடியார்களை,Thiru maal adiyaarkalai - பகவத்பக்தர்களான ஸ்ரீவைஷ்ணவர்களை பூசிக்க,Poosikka - ஆராதிக்க நோற்றார்கள்,Noatraargal - ஸுக்ருதம் பண்ணினவர்களாவர். |
| 3193 | திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் இத்திருவாய்மொழியைப் பாட வல்லவர்கள் நித்ய ஸூ ரிகளுக்கு நிரந்தர போக்யராவார்கள் என்று பலத்தை அருளிச் செய்கிறார்.) 11 | தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.–5-7-11 | பதவுரை Show / Hideதெய்வநாயகன் நாரணன் திரிவிக்கிரமன்,Dheivanayakan Naranan Thirivikkiraman - எம்பெருமானுடைய அடி இணை மிசை,Adi inai misai - உபய பாதங்களிலே, கொய் கொள் பூ பொழில் சூழ் குருகூர் சடகோபன்,Koi kol poo pozhil soo zhul kuru kur sadagopan - ஆழ்வார் செய்த,Seydha - அருளிச் செய்த ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரத்தினுள்ளே இவை,Ivai - இந்த தண் சிரீவர மங்கை மேய பத்து,Than Sreevara Mangai meya paththu - வானமாமலைப்தி விஷயமான பதிகத்தை உடன்,Udan - கருத்துடனே வைகல்,Vaigal - எப்போதும் பாட வல்லார்,Paada vallaar - பாட வல்லவர்கள் வானோர்க்கு,Vaanorkku - நித்ய ஸூரிகளுக்கு ஆரா அமுது,Aaraa amuthu - ஆராவமுதமாயிருப்பர்கள். |
| 3203 | திருவாய்மொழி || (5-8–ஆரா அமுதே) - (திருக்குடந்தையிலே புகவே நம் அபேக்ஷிதங்களெல்லாம் பெறலாமென்று புக்க ஆழ்வார்) 10 | வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்!
ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்! உனக் காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–5-8-10 | பதவுரை Show / Hideவாரா,vaara - திருவுருவத்தோடு வாராமல் அரு ஆய் வரும்,aru aay varum - அரூபியாய் உள்ளேவந்து தோன்றுகின்ற என் மாயா,en maaya - என் மாயவனே! மாயா மூர்த்தியார்,maaya moorthiyaar - ஒருநாளும் அழியாத திவ்ய மங்கள விக்ரஹத்தையுடையவனே! ஆரா அமுது ஆய்,ara amuthu aay - எவ்வளவு அனுபவித்தாலும் திருப்திபிறவாத அமிருதமாய்க் கொண்டு அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்,adiyen aavi agame tittipai - என் உள்ளுக்குள்ளே தித்தித்திருக்குமவனே! தீரா வினைகள் தீர,teera vingal teera - தொலையாத பாவங்களும் தொலையும்படியாக என்னை ஆண்டாய்,ennai aandaay - அடியேனை ஆண்டருளினவனே! திரு குடந்தை ஊரா,tiru kutantai oora - திருக்குடந்தைப்பதியோளே! அடியேன்,adiyen - அடியேன் உனக்கு ஆள்பட்டும்,unakku aalpattum - உனக்கு அடிமைப்பட்டும் இன்னம் உழல்வேனோ,innam uzhalveno - இன்னமும் கிலேப்படுவேனோ! |
| 3204 | திருவாய்மொழி || (5-8–ஆரா அமுதே) - (இப்பதிகம் பழூதறக் கற்கவல்லார் காமிநிகளுக்குக் காமுகர்போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு யோக்யராவர் என்று பலனுரைத்துத் தலைக்கட்டுகிறார்) 11 | உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11 | பதவுரை Show / Hideஉழலை என் பின் பேய்ச்சி,uzhalai en pin peyschi - உழல்தடிபோன்ற எலும்புகளையுடைளான பூதனையினுடைய முலை ஊடு,mulai oodu - முலை வழியாக அவள் உயிரை உண்டான்,aval uyirai undaan - அவளது உயிரை முடித்த பெருமானுடைய கழல்கள் அவையே,kazalkal avaiye - திருவடிகளையே சரண் ஆக கொண்ட,saran aka konda - சரணமாகப்பற்றின குகூர் சடகோபன்,kukoor sadagopan - ஆழ்வார் குழலின் மலிய,kulalin maliya - குழலோசையித் காட்டிலும் இனிதாக சொன்ன,sonna - அருளிச்செய்த ஓர் ஆயிரத்துள்,or aayirattu - ஒப்பற்ற ஆயிரத்தினுள்ளே இ பத்தும்,i pattum - இப்பதிகத்தை மழலை தீர,malalai teera - தமது அறியாமை தொலையும்படி வல்லார்,vallaar - அதிகரிக்கவல்லவர்கள் மான் ஏய் நோக்கியர்க்கு,maan aay nokkiyarkku - மான்போன்ற நோக்கையுடைய திவ்யாப்ஸரன்ஸுக்களுக்கு காமர்,kaamar - ஆதரிக்கத்தக்கவராவர். |
| 3215 | திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இப்பத்தும் வல்லார் சம்சாரத்திலே இருந்து வைத்தே எல்லாரிலும் சிறந்தவர் என்கிறார்.) 11 | நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11 | பதவுரை Show / Hideநாமங்கள் ஆயிரம் உடைய,Naamangal aayiram udaiya - ஸஹஸஸ்தரநாமங்களையுடையனான நம் பெருமான்,Nam perumaan - எம்பெருமானுடைய அடிமேல்,Adimel - திருவடிகளின்மேலே சேமம் கொள்,Semam kol - திண்ணிய அத்யவஸாய முடையவரான தென் குருகூர் சடகோபன்,Then kurugoor sadagopan - ஆழ்வார் தெரிந்து உரைத்த,Therindhu uraitha - ஆராய்ந்து அருளிச் செய்த நாமக்கள் ஆயிரத்துள்,Namakal aayirathul - அவனது திருநாமம் போன்றதான ஆயிரத்தினுள்ளே திருவல்லவாழ் சேமம் கொள் தென் நகர் மேல் இவை பத்தும்,Thiruvallazh semam kol then nagar mel ivai pattum - திருவல்லுலாழாகிற அரணமைந்த அழகிய திருப்பதி விஷயமான இப்பத்தையும் செப்புவார்,Seppuvaar - ஓதவல்லவர்கள் பிறந்தே,Piranthe - இவ்விருள் தருமா ஞாலத்தில் பிறந்து வைத்தே சிறந்தார்,Sirandaar - சிறந்தவராவர் |
| 3226 | திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (இத்திருவாய்மொழி கற்கைக்குப் பலனாகப் பரமபதத்தில் ப்ரஹ்மாநந்த ப்ராப்தியை அருளிச் செய்கிறார்.) 11 | நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11 | பதவுரை Show / Hideநாகணை மிசை நம் பிரான் சரணே நமக்கு சரண் என்று,Naaganaai Misai Nam Piran Sarane Namakku Saran Endru - சேஷசாயியான எம்பெருமானுடைய திருவடிகளே நமக்குத் தஞ்சமென்று நாள் தொறும் ஏக சிந்தையன் ஆண்,Naal Thorum Eka Sinthaiyan Aan - ஸ்திரமான ஆத்யவஸாயத்தை யுடையராய்க் கொண்டு குருகூர் சடகோபன் மாறன்,Kurugoor Sadagopan Maaran - ஆழ்வார் ஆக,Aaga - தாம்ஸத்தைபெறுவதற்கு நூற்ற,Noortra - அருளிச் செய்த அந்தாதி,Andaadhi - அந்தாதித் தொடையான ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரத்தினுள்ளே இவையும் ஓர் பத்தும் வல்லார், Ivaiyum Or Paththum Vallar - இத் திருவாய்மொழியை ஓத வல்லவர்கள் மாகம் வைகுந்தத்து,Maagam Vaikundaththu - பரமாகாசமான ஸ்ரீவைகுண்டத்திலே வைகலும்,Vaigalum - ஆத்மாவுள்ளதனையும் மகிழ்வு எய்துவர்,Magizhvu Eydhuvar - ஆனந்திகளாயிருப்பார்கள். |
| 3237 | திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (இத்திருவாய்மொழி கற்பார் எம்பெருமானுக்கும் அவனடியார்கட்கும். விரும்பத் தக்கவராவர் என்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறது.) 11 | மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வ னடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திரு வண் வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே.–6-1-11 | பதவுரை Show / Hideமின் கொள் சேர் புரிநூல் குறள் ஆய்,Min Kol Ser Purinool Kural Aai - ஒளியையுடைத்தாய், திருமேனிக்குச் சேர்ந்த்தான் யஜ்ஞோபவீதமணிந்த வாமனமூர்த்தியாகி அகல் ஞாலம் கொண்ட,Agal Gnalam Konda - விசாலமான பூமி முழுவதையும் அளந்து கொண்ட வன் கள்வன்,Van Kalvan - மஹாவஞ்சகனான எம்பெருமானுடைய அடிமேல்,Adimel - திருவடிகள் விஷயமாக குருகூர் சடகோபன் சொன்ன,Kurukoor Sadagopan Sonna - நம்மாழ்வார் அருளிச் செய்த பண் கொள் ஆயிரத்துள்,Pan Kol Aayirathul - பண்மிகுந்த ஆயிரத்தினுள்ளே திருவண்வண்டூர்க்கு,Thiru Vanvandurukku - திருவண்வண்டூர் விஷயமான இன் கொள் பாடல்,In Kol Paadal - பரமபோக்யமான பாடலான இவை பத்தும்,Ivai Pathum - இப்பத்துப்பாசுரங்களையும் வல்லார்,Vallar - ஓதவல்லவர்கள் மின் இடையவர்க்கு மதனர்,Min Idaiyavarkku Madhanar - காமினிகளுக்குக் காமுகர்போல் எம்பெருமானுக்கு ஸ்ப்ருஹணீயராவர்கள் |
| 3248 | திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி - அதில் ஸ்நேஹினியான யசோதைபி பிராட்டி வெண்ணெய் களவு கண்டாய் என்று பொடித்த போது போலே ஆழ்வார் தாம் ப்ராணாய கோபத்தாலே எம்பெருமானோடு கலப்பேன் அல்லேன் என்று அகல அது பொறுக்க மாட்டாமே தளர்ந்த தளர்த்தியை அநு சந்தித்து இனியராய் அவ்வெம்பெருமானை எத்தின இத்திருவாய் மொழியை இப்பான வ்ருத்தி இன்றிக்கே சொன்னார்க்கும் எம்பெருமான் ஸந்நிஹிதனாய் இருக்கச் செய்தே -பிறங்கி-செறிந்து -தாம் பட்ட துக்கம் பட வேண்டா என்கிறார் .) 11 | ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டழு
கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல் குரவே.–6-2-11 | பதவுரை Show / Hideஅன்று,Andru - பண்டொருகாலத்தில் வெண்ணெய் வார்த்தையுள்,Vennai varthaiyul - வெண்ணெய்களவு ஸம்பந்தமான ப்ரஸ்தாவம் வந்தவளவிலே ஆய்ச்சி ஆகிய அன்னையால்,Aaychchi aagiya annaiyal - இடைக்குலத்துகித்த யசோதை யாகிய தாயாலே அழு கூத்தன்,Azhukuuthan - அழுகையாகிற கூத்தைச் செய்தவனான அப்பன் தன்னை,Appan thannai - ஸ்வாமியைக் குறித்து குரு கூர் சடகோபன்,Kurukoor sadagopan - ஆழ்வார் ஏத்திய,Eththiya - ஸ்தோத்ர்ரூபமாகச் செய்த தமிழ் மாலை ஆயரத்துள்,Tamil maalai aayaraththul - தமிழ்த் தொடையான ஆயிரம் பாசுரங்களில் இவையும் ஓர் பத்து,Ivaiyum or paththu - இப்பத்துப் பாசுரங்களை இசையொடும்,Isaiyodum - இசையோடு கூட நா தன்னால் நவில உரைப்பார்க்கு,Naa thannal naviLa uraipparkku - நாவினாலே செறியச்சொல்லுமவர்களுக்கு நல்குரவு இல்லை,Nalguravu illai - பகவதநுபவம் கிடையாமையாகிற தாரித்ரியம் இல்லையாம். |
| 3259 | திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (இத் திருவாய்மொழியை அதிகரிக்க வல்லவர்கள் நித்ய ஸூரிகளுக்கும் கௌரவிக்கத் தகுந்தவராவர் என்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறார்.) 11 | காண்மின்கள் உலகீர்! என்று கண் முகப்பே நிமிர்ந்த
தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திரு விண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11 | பதவுரை Show / Hideஉலகீர்,ulagir - உலகத்திலுள்வர்களே! கரண்மின்கள் என்று,karanminkal enru - இந்த விநோதத்தைக் காணுங்கோள் என்று (சொல்பவன் போன்று) கண் முகப்பே நிமிர்ந்த,kan mukappe nimirnda - கண்ணெதிரே ஓங்கி வளர்ந்த தான் இணையன் தன்னை,thaan inaiyan thannai - உபயபாதங்களை யுடையவனான எம்பெருமான் விஷயமாக குருகூர் சடகோபன் சொன்ன,kurukoor sadagopan sonna - நம்மாழ்வார் அருளிச் செய்த ஆணை ஆயிரத்து,aanai aayirathu - பகவதாஜ்ஞா ரூபமான ஆயிரத்தினுள்ளும் திருவிண்ணகர் பத்தும் வல்லார்,tiruvinnagar paththum vallaar - திருவிண்ணகர் விஷயமான இப்பதிகத்தை ஓத வல்லவர்கள் விண்ணோர்க்கு,vinnorkku - நிர்யஸூரிகளுக்கு கோணை இன்றி ,konai indri - மிறுக்கு இல்லாமல் என்றும் குரவர்கள் ஆவர்,endrum kuravargal aavar - எப்போதும் கௌரவிக்கத்தகுந்தவராவர்கள். |
| 3270 | திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நிகமத்தில் கிருஷ்ண சேஷ்டிதங்களை பேசின இப்பத்தும் கற்றார் ஆழ்வார் தம்மைப் போலே கிருஷ்ணனுக்கே பக்தராவார் என்கிறார்.) 11 | நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்
வாயகம் புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத்திப் பத்தால் பத்தராவர் துவளின்றியே.–6-4-11 | பதவுரை Show / Hideமுழு ஏழ் உலகுக்கும் நாயகன் அய்,Muzhu ez ulagukkum naayagan ai - எல்லா வுலகங்களுக்கும் நிர்வாஹகனாகி முழு ஏழ் உலகும் தன் வாயகம் புகவைத்து உமிழ்ந்து,Muzhu ez ulagukkum than vaayagam pugavaithu umizhndhu - அந்த ஸகல்லோகங்களையும் (ப்ரளயம்கொள்ளாதபடி) தன் வாய்க்குள்ளே புகவிட்டுப் பிறகு வெளிப்படுத்தி. அவை ஆய்,Avai ai - அவை தானேயாய் அவை அல்லனும்,Avai allanum - அவற்றின் படியே யுடையனல்லாதவனுமான கேசவன்,Kesavan - எம்பெருமானுடை அடி இணை மிசை,Adi inai misai - உபயபாதங்கள் விஷயமாக குருகூர் சடகோபன் சொன்ன,Kurugoor Sadagopan sonna - ஆழ்வார் அருளிச்செய்த தூய ஆயிரத்து,Thooya aayiraththu - பரிசுத்தமான ஆயிரத்துள்ளே துவள் இன்றி பக்தர் ஆவர்,Thuval indri bakthar aavar - அநந்யப்ரயோஜந பக்தி மான்களாகப் பெறுவர்கள். |
| 3281 | திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (இத்திருவாமொழி கற்பவர் கைங்கர்ய ஸாம்ராஜ்யமாகிற மஹாபலத்தைப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11 | சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11 | பதவுரை Show / Hideதேவபிரானையே தந்தை தாய் என்று,Thevapiraanaiye thandhai thay endru - தேவ பிரானையே ஸகலவித பந்துவுமாக அறுதியிட்டு சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் அடைந்த,Sinthaiyaalum sollaalum seykaiyinaalum adaintha - முக்யு காரணங்களாலும் ஆச்ரயித்த வண் குருகூரவர் சடகோபன்,Van kuru Kooravar Sadagopan - ஆழ்வார் முந்தை ஆயிரத்துள்,Mundhai aayiraththul - அனாதியான இவ்வாயிரத்திலுள்ளளே துலைவல்லி மங்கலத்தை சொன்ன இவை செந்தமிழிபத்தும் வல்லார்,Thulaivalli Mangalaththai sonna ivai senthamizh paththum vallaar - துலைவில்லித் திருப்பதி விஷயமாக அருளிச்செய்த இப்பதிகத்தை ஓதவல்லவர்கள் திருமாலுக்கு அடிமை செய்வார்,Thirumalukku adimai seyvaar - பரவாஸு தேவனுக்கு நித்யகைங்கர்யம் பண்ணப் பெறுவர்கள். |
| 3292 | திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பதிகம் கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டுகிற பாசுரமிது. முழுதுமும் மிக அழகாக விளங்குகின்ற சோலைகளையுடைத்தான திருவேங்கட மலையிலே நித்ய வாஸம் செய்தருளா நின்ற பெருமான் விஷயமாக ஆழ்வார் அருளிச்செய்த ஆயிரத்தினுள்ளும் இப்பதிகம் வல்லார் ஸ்வரூபாநுபமான திவ்ய போகத்தை அநுபவிக்கப்பெறுவர்களென்று பயனுரைத்ததாயிற்று. கீழ்ப் பத்துப் பாசுரங்களிலும் திருவேங்கட முடையானுடைய ப்ரஸ்தாவமே இல்லாமலிருக்க இப்போது நிகமத்தில் “நல் வேங்கடவாணனை“ என்று கூறினவிது என்னே? எனின், கிழே மூன்றாம் பத்தில் * சொன்னால் விரோதத்தில் * தென்னா தெனாவென்று வண்டு முரல் திருவேங்கடத்து என்னானையென்னப்ப னெம்பெருமானுளனாக – என்னாவிலின்கவி யானொரு வர்க்குங் கொடுக்கிலேன் * என்றருளிச் செய்தவராகையாலே இங்ஙனே கூறக்குறையில்லை யென்பர்) 11 | கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென் குருகூர்ச் சட கோபன் சொல்
கட்டெழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம் உண்பாரே.–6-6-11 | பதவுரை Show / Hideகட்டெழில் சாலை,Kattezhil saalai - நறுமணம் மிக்க சோலையையுடைத்தான நல் வேங்கடம் வாணனை,Nal vengadam vaananaai - திருவேங்கட மலையிலே வாழ்பவனான எம்பெருமான் விஷயமாக கட்டெழில் தென்குருகூர் சடகோபன்சொல்,Kattezhil thengurukoor sadagopan sol - அரணழகு பொருந்திய தென்குருகூரில் அவதரித்த ஆழ்வார் அருளிச்செய்த கட்டெழில் ஆயிரத்து,Kattezhil aayiraththu - தொடையழகையுடைத்தான ஆயிரத்தினுள்ளே இ பத்தும் வல்லவர்,ePathum vallavar - இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கள் கட்டெழில் வானவர் போகம்,Kattezhil vaanavar pogam - பரமவிலக்ஷணமான நித்யஸூரிபோகத்தை உண்பார்,Unbaar - அனுபவிக்கப் பெறுவர்கள். |
| 3303 | திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (நிகமத்தில் இப்பத்தும் வல்லார் இட்ட வழக்காய் இருக்கும் திருநாடு என்கிறார்) 11 | வைத்த மா நிதியாம் மது சூதனையே அலற்றிக்
கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக் கோளூர்க்கே
சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11 | பதவுரை Show / Hideவைத்த மா நிதி ஆம்,Vaitha maa nidhi aam - சேமித்து வைத்த மஹா நிதிபோன்ற மது சூதனையே அலற்றி,Madhu soodanaie alatri - எம்பெருமானையே வாய்வெருவி கொத்து அலர்பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன கொத்து அலர்பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன,Kothu alar pozhil soozh kurugur sadagopan sonna - பூங்கொத்து அலருகிற சோலைகளால் சூழப்பட்ட திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்க்குத் அருளிச்செய்த பத்து நூற்றுள்,Pathu nootrul - ஆயிரத்தினுள்ளே இப் பத்து,ep pathu - இத்திருவாய்மொழியை அவன் சேர் திருக்கோளூர்க்கே சித்தம் வைத்து,Avan ser thirukolurkkay siththam vaiththu - அவன் வர்த்திக்கிற திருக்கோளூரிலேயே மனம் பதிந்து உரைப்பார்,Uraippar - உரைக்க வல்லவர்கள் திகழ்,Thigazh - நித்யமாக விளங்குகின்ற பொன் உலகு ஆள்வார்,Pon ulagu aalvaar - பரமபதத்தை ஆளப் பெறுவர்கள். |
| 3314 | திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (ரீ ஒன்பதினாயிரப்படி –6-8-11- நிகமத்தில் -இப்பத்தில் ஆழ்வாருடைய ஆர்த்தியை அனுசந்தித்தார் ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராய் என்கிறார்) 11 | மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மதுசூத பிரான் அடி மேல்
நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
தோற்றங்களாயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராயே.–6-8-11 | பதவுரை Show / Hideநாற்றம் கொள் பூ பொழில்சூழ் குரு கூர் சடகோபன்,Maatram kol poo pozhi soozh kuru koor Sadagopan - பரிமளப்ரசுரமான பூஞ்சோலைகள் சூழ்ந்த திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார் மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு,Maatramgal aynthu kondu - சொற்களை ஆராய்ந்தெடுத்து மது சூதபிரான் அடி மேல்,Madhu soodhapiraan adi mel - எம்பெருமான் திருவடி விஷயமாக சொன்ன,Sonna - அருளிச்செய்த தோற்றங்கள் ஆயிரத்துள்,Thotramgal aayirathul - ஆவிர்ப்பாவரூபமான இந்த ஆயிரத்தினுள் ஊற்றின கண் நுண் மணல்போல்,Ootrin kan nun manal pol - ஊற்றினிடத்தேயுள்ள நுண்ணிய மணல்போல் நீர் ஆய் உருகா நிற்பர்,Neer aay urugaa nirpar - நீர்ப்பண்டமாக உருகப்பெறுவர்கள் |
| 3325 | திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (இத் திருவாய்மொழியானது தன்னோடு அந்வயமுடையாரை ஸர்வரக்ஷகனான எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷ பூதராக்குமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11 | பதவுரை Show / Hideதெரித்தல் நினைதல் எண்ணல் ஆகா,Teriththal ninaiththal ennall aakaa - சாஸ்த்ரஜ்ஞானத்தாலும் மனனத்தாலும் த்யானத்தாலும் பரிச்சேகதிக்க முடியாத திரு மாலுக்கு,Thiru Maalukku - ஸ்ரீமந்நாராயணனுக்கு தொண்டர் தொண்டர்,Thondar thondar - உரிய அநந்யார்ஹ சேஷ பூதர்களான பக்த பக்தர்களுக்கு தொண்டன்,Thondan - பக்தரான சடகோபன்,Sadagopan - நம்மாழ்வார் தெரிய சொன்ன,Theriyat sonna - விசதமாக அருளிச்செய்த ஓர் ஆயிரத்துள்,Oor aayiraththul - விலக்ஷணமான ஆயிரத்தினுள்ளே இ பத்தும்,ePaththum - இந்தத் திருவாமொழி (தன்னைக் கற்குமவர்களை) உலகம் உண்டாதற்கு,Ulagam undaatharku - உலக முண்டவனான எம்பெருமான் விஷயத்திலே உரிய தொண்டர் ஆக்கும்,Uriya thondar aakum - அநந்யார்ஹ சேஷ பூதாரக்கும். |
| 3335 | திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((அகலகில்லேன்) கீழ் ஒன்பது பாட்டாலும் சரண்யனான ஸர்வேச்வரனுடைய ஸ்வரூபத்தையும் தம்முடைய ஆற்றாமையையும் சொன்னார், இப்பாட்டில், தம்முடைய அபேக்ஷிதம் சடக்கென ஆகிஞ்சந்யத்தையும் அநந்யகதித்வத்தையும் தெரிவித்துக் கொண்டு திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.) 10 | அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10 | பதவுரை Show / Hidealar mel mangai,அலர் மேல் மங்கை - பூவில் வாழ்மகளான பெரிய பிராட்டியார் iraiyum akala killeen endru,இறையும் அகல கில்லேன் என்று - ஒருக்ஷணமும் பிரிந்திருக்கமாட்டேனென்று சொல்லிக்கொண்டு urai maarpa,உறை மார்பா - நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருமார்வையுடையவனே! nigar il pugazhai,நிகர் இல் புகழாய் - ஒப்பற்றதான புகழை யுடைய வனே! ulagam moonru udaiyaa,உலகம் மூன்று உடையாய் - சேதநாசேதங்களுக்கும் ஸ்வாமியே! ennai aal,என்னை ஆள் - நீசனே என்னையுமடிமை கொள்பவனே! vaane,வானே - பவனே! amarar,அமரர் - தேவர்களும் muni kanangal,முனி கணங்கள் - மஹர்ஷி ஸமூஹங்களும் virumbum,விரும்பும் - விரும்பிவந்து பணியுமிடமான thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - திருமலையில் வாழ்பவனே! pugal ondru illa adiyen,புகல் ஒன்று இல்லா அடியேன் - அநந்யகதியான நான் un adi keel,உன் அடி கீழ் - உனது திருவடி வாரத்திலே amarndhu pugundhaen,அமர்ந்து புகுந்தேன் - மிகப் பொருத்தமாக அந்வயித்துவிட்டேன் |
| 3336 | திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((அடிக்கீழமாந்து) இத்திருவாய்மொழியைப் பற்றினவர்கள் திருநாட்டிலே நித்யாநுபலம் பண்ணப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகின்றார்.) 11 | அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.–6-10-11 | பதவுரை Show / Hideadiyeeir,அடியீர் - அடியவர்களே! adi keel amarndhu pugundhu vaazhmin endru endru,அடி கீழ் அமர்ந்து புகுந்து வாழ்மின் என்று என்று - நம்முடைய திருவடிகளின் கீழே புகுந்திருந்து உஜ்ஜீவித்துப் போருங்கள்“ என்று அநவாதமும் காட்டிக்கொடுத்து, arul kodukkum,அருள் கொடுக்கும் - க்ருபை பண்ணுகிறவனும் padi kel ella perumaanai,படி கேழ் இல்லா பெருமானை - சீர் நிலங்களை பெருமை வாய்ந்தவனுமான ஸர்வேச்வரனைக்குறித்து mudipaan sonna,முடிப்பான் சொன்ன - ஸம்ஸாரத்தை முடிப்பதற்காக அருளிச்செய்த aayirathu,ஆயிரத்து - ஆயிரத்தினுள்ளும் thiruvengadathukku ivaipaththum,திருவேங்கடத்துக்கு இவைபத்தும் - திருவேங்கடமலை விஷயமான இத்திருவாய்மொழியை pidithaar pidithaar,பிடித்தார்பிடித்தார் - ஸாக்ஷாத்தாகவும் பரம்பரையாகவும் அவலம்பித்தவர்கள் periya vaanul,பெரிய வானுள் - பாமாகாசமென்கிற பரமபதத்திலே veettrindhu nilaavular,வீற்றிருந்து நிலாவுலர் - நிலை நின்று வீற்றிருப்பர்கள். |
| 3347 | திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (இத்திருவாய்மொழியைப் பாடவல்லார்க்கு இந்திரியங்களால் நலிவு படவேண்டிய பாவங்கள் தொலையுமென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகின்றார்.) 11 | கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப்
புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே.–7-1-11 | பதவுரை Show / Hideகுணங்கள் கொண்ட,gunangal kondha - ஸத்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்களைக் கொண்ட. மூர்த்தி ஓர் மூவர் ஆய்,moorthi or moovar aay - மும்மூர்த்திகளுமாய் படைத்து அளித்து கெடுக்கும்,padaitthu alithu kettum - ஸ்வருஷ்டிஸ்திதிகளுமாய் அப்புண்டரீகம் கொப்பூழ்,appundariyam koppuul - அப்படிப்பட்ட பத்மநாபனாய் புனல் பள்ளி அப்பனுக்கே,punal palli appanuke - காரண ஜலத்திலே கண்வளர்ந்த பெருமானுக்கு தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்,thondar thondar thondan sadagopan - தாஸாது தாஸராண ஆழ்வார் சொல் ஆயிரத்துள்,sol aayiraththul - அருளிச் செய்த ஆயிரத்தினுள் இப் பத்தும்,ip pattum - இப் பத்துப் பாசுரங்களையும் கங்குலும் பகலும்,Kangulum pagalum - ஸதாகாலமும் கண்டு பாட வல்லார்,kandu paada vallaar - பொருள் கண்டு பாடவல்லாருடைய வினை போம்,vinai poam - பாவங்கா தொலைந்துபோம். |
| 3358 | திருவாய்மொழி || (7-2–கங்குலும் பகலும்) - ((முகில்வண்ணனடியை.) பெரியபெருமாள் திருவடிகளைச் சேர்ந்து ஸர்வப்ரகார ஸம்ச்லேஷமும் பண்ணப் பெறுகையாலே உஜ்ஜீவனம் பெற்றவராய் தாம்ரபர்ணீ தீரவாஸியான ஆழ்வார் முகில்வண்ணனடிமேற் சொன்ன சொல்மாலையாயிரத்துள் இப்பத்தும் வல்லர்வர்கள் திருநாட்டிலே அயர்வறு மமரர்கள் சூழ் ஆனந்தக்கடலிலே ஆழ்ந்திருக்கப் பெறுவர்களென்று பயனுரைத்துக் தலைக் கட்டினாராயிற்று.) 11 | முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி
உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ்
வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை
ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ
இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11 | பதவுரை Show / Hideமுகில் வண்ணன் அடியை அடைந்து, Mugil vannan adiyai adaindhu - மேகவண்ணனான் எம்பெருமானுடைய திருவடிகளை யடைந்து அருள் சூடி உயந்தவன், Arul soodi uyandhavan - அவனுடைய திருவருளைத் தலைக்கொண்டு உஜ்ஜீவிததவரும், மொய் புனல் பொருநல், Moi punal porunal - உத்தமதீர்த்தனான தாமிரப்ரணியினுடைய துகில் வண்ணம் தூ நீர் சேர்ப்பன், Thugil vannam thoo neer serppan - துகிலின் நிறம்போலே பரிசுத்தமான ஜலத்தின் கரையிலே சேர்ந்திருப்பவரும் வண் பொழில் சூழ் வண் குருகூர், Van pozhil soozh van kurukoor - வளம்மிக்க சோலைகள் சூழந்த திருநகரிக்குத் தலைவருமான் முகில் வண்ணன் அடிமேல் சொன்ன, Mukil vannan adimel sonna - மேகவணணனான எம்பெருமானது திருவடிகளை நோக்தியருளிச் செய்த சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார், Sol maalai aayirathu ippathum vallaar - சொல் தொடையான ஆயிரத்தினுள் இப்பதிகத்தை ஒதவல்லவர்கள் முகில் வண்ணம் வானத்து, Mukil vannam vaanathu - முகில் வண்ணனுடைய நிழலீட்டாலே முகில் வண்ணமாயிருக்கின்ற பரமபதத்திலே இமையவர் சூழ, imaiyavar soozha - நித்தியசூரிகள் புடைசூழ பேர் இன்பம் வெள்ளத்தே, Per inbam vellathe - ப்ரஹமானந்த ப்ரவாஹித்தில் இருப்பர், iruppar - மூழ்கியிருக்கப்பெறுவர்கள். |
| 3369 | திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (இத் திருவாய்மொழி கற்பார்க்கு பகவத் கைங்கர்யத்திலே அவகாஹனம் பலிக்குமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | ஊழிதோறு ஊழி உருவும் பேரும்
செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை
அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந் தாதி ஓர் ஆயிரத்துள்
இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார்
அவர் அடிமைத் திறத்து ஆழியாரே.–7-3-11 | பதவுரை Show / Hideஊழி ஊழி தோறு,Oozhi oozhi thoru - கல்பங்கள் தோறும் பேரும் உருவும் செய்கையும்,Perum uruvum seykaiyum - நாமம் ரூபம் வியாபாரம் ஆகிய இவற்றை வேறவன்,Veraavan - வேறாகவுடையனாய்க் கொண்டு வையம் காக்கும்,Vaiyam kaakkum - உலகங்களைக் காத்தருள் பவனாய் ஆழி நீர் வண்ணனை,Aazhi neer vannanai - கடல் வண்ணனாய் அச்சுதனை,Achchudhanai - அடியார்களை ஒருகாலும் நழுவ விடாதவனான பெருமானைக் குறித்து அணி குருகூர்சடகோபன் சொன்ன,Ani KuruKoor Sadagopan sonna - நம்மாழ்வார் அருளிச்செய்த கேழ் இல்,Kael il - ஒப்பில்லாத அந்தாதி ஓர் ஆயிரத்துள்,Anthaadi or aayiraththul - அந்தாதித் தொடையான ஆயிரத்தினுள்ளும் திருப்பே ரெயில் மேய இவை பத்தும்,Thiruppeer eyil meya ivai pattum - தென் திருப்பேரைப்பதி விஷயமான இப்பதிகத்தைக் கொண்டு ஆழி அம்கையனை ஏத்த வல்லார் அவர்,Aazhi amkaiyanai etta vallaar avar - கையுந் திருவாழியுமான எம்பெருமானைத்துதிக்கவல்லவர்கள் அடிமை திறத்து,Adimai thirattu - நித்ய கைங்கர்யத்திலே ஆழியார்,Aazhiyaar - ஆழ்ந்தவராவர். |
| 3380 | திருவாய்மொழி || (7-4–ஆழி எழ) - ((குன்றமெடுத்த.) எம்பெருமானுடைய விஜய பரம்பரைகளைத் தொடுத்த இத்திருவாய்மொழியை ஒதவல்லவர்கள் எல்லா வகையான விஜயமும் பெறுவார்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11 | குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11 | பதவுரை Show / Hidekunram edutha piran,குன்றம் எடுத்த பிரான் - கோவர்த்தன மலையையெடுத்த கண்ணபிரானுடைய adiyarodum,அடியாரொடும் - அடியார்களோடு கூட ondri nindra,ஒன்றி நின்ற - ஒருமைப்பட்டிராநின்ற sadagopan,சடகோபன் - நம்மாழ்வாருடைய urai seyal,உரை செயல் - அருளிச்செயலாய் or aayirathu nanri punaintha,ஓர் ஆயிரத்துள் நன்றி புனைந்த - ஆயிரத்தினுள்ளே நலம் மிக்கதான ivai pathum,இவை பத்தும் - இத்திருவாய்மொழி mevi karparkku,மேவி கற்பார்க்கு - தன்னை விரும்பிக் கற்குமவர்களுக்கு venri tharum,வென்றி தரும் - பலவகையான விஜயத்தையுங் கொடுக்கும் |
| 3391 | திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (இத்திருவாய்மொழியைக் கற்பவர்கள் இவ்விருள்தரு மாஞாலத்தில் இருக்கச் செய்தேயும் தெளிந்த சிந்தையராயிருப்பர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11 | தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–7-5-11 | பதவுரை Show / Hideதெளிவு உற்று,Thelivu uttru - ஸ்வரூபத்தில் தெளிவு பெற்று வீவு இன்றி நின்றவர்க்கு,Veivu indri nindruvargu - அந்தத் தெளிவுக்கு ஒரு நாளும் விச்சேதமில்லாமலிருப்பவர்களுக்கு இன்பம் கதி செய்யம்,Inbam kathi seyyam - இன்பமே வடிவெடுத்ததான கதியைச் செய்விப்பவனாய் தெளிவு உற்ற கண்ணனை,Thelivu uttru kannanai - தெளிவு தானே வடிவெடுத்திருப்பவனான எம்பெருமானைக் குறித்து தென் குருகூர் சடகோபன் சொல்,Then Kurukoor Sadagopan sol - ஆழ்வார் அருளிச்செய்ததான தெளிவு உற்ற ஆயிரத்துள்,Thelivu uttru ayiraththul - தெளிந்த ஆயிரத்தினுள்ளை இவை பத்தும் வல்லார் அவர்,Ivai pattum vallar avar - இத்திருவாய்மொழியை ஒதவல்லவர்கள் பா மரு மூஉலகத்துள்ளே,Pa maru mooulagaththule - பாபபூயிஷ்டமான உலகத்திலிருந்துவைத்தே தெளிவு உற்ற சிந்தையர்,Thelivu uttru chintaiyar - தெளிவு பெற்ற மனமுடையராவர். |
| 3402 | திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (இத்திருவாய்மொழி கற்றார் மதிமுகமடந்தையர் லிரும்பிப் பல்லாண்டு பாடி ஸத்கரிக்கும்படியான பெருமையைப் பெறுவர்களென்று பலன் சொல்லித் தலைக்கட்டுகிற பாசுரமிது.) 11 | புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வர் ஏழையரே.–7-6-11 | பதவுரை Show / Hideஅ அரி உரு ஆய புக்கு,A ari uru aaya pukku - அப்படிப்பட்ட சிங்க வடிவையுடையனாய்த் தோன்றி அவுணன் உடல் கீண்டு உகந்த,Avunan udal keenndu ugandha - இரணியாசுரனுடைய உடலே இருபிளவாக்கித் திருவுள்ளமுகந்த சக்கரம் செல்வன்,Chakkaram selvan - திருவாழியையுடைய திருமாலைக் குறித்து குருகூர் சட கோபன் சொன்ன,Kurukoor Sadagopan sonna - ஆழ்வார் அருளிச் செய்த மிக்க ஓர் ஆயிரத்துள்,Mikka or aayiraththul - மிகச் சிறந்த ஆயிரத்தினுள்ளே இவை பத்தும் வல்லாரவரை,Ivai pattum vallaaravari - இத்திருவாய்மொழியை ஓத வல்லவர்களை ஏழையா,Ezhaiya - திருநாட்டிலுள்ள திவ்யாப்ஸரஸ்ஸுக்கள் தொக்கு,Tokku - திரள் திரளாக விருந்து பல்லாண்டு இசைத்து,Pallaandu isaithu - மங்களாசாஸனம் பண்ணி கவரி செய்வர்,Kavari seyvar - சாமரை வீசுதல் முதலிய கிஞ்சி காரங்களைச் செய்பவர்கள். |
| 3413 | திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (இத்திருவாய்மொழியை ஓதுமவர்கள் எம்பெருமானைப் பிரிந்து வருந்தாதே நித்யஸூரிகளோடே கூடி நித்யாதுபவம் பண்ணப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | கட்குஅரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்குஅரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்குஉடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
உட்குஉடை வானவரோடு உட னாய் என்றும் மாயாரே.–7-7-11 | பதவுரை Show / Hideகட்கு அரிய,Katku ariya - மனிதா முதலானாருடைய கண்ணுக்க இலக்காகாத பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கு,Piraman sivan indiran endra ivarkku - பிரமன் சிவன் இந்திரன் என்று சொல்லிப் பட்ட இவர்களுடைய கட்கும் அரிய,Katkum ariya - கண்ணுக்கும் காணவர்யனான கண்ணனை,Kannanai - எம்பெருமானைக் குறித்து குருகூர்சட கோபன் சொன்ன,Kurukoor Sadagopan sonna - நம்மாழ்வார் அருளிச்செய்த உட்கு உடை ஆயிரத்துள்,Udkku udai aayirathul - எம்பெருமானை உள்ளபடி பேசும் வல்லமை வாய்ந்த ஆயிரத்தினுள்ளே இவையும் ஒரு பத்தும் வல்லார்,Ivaiyum oru pathum vallaar - இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கள் உட்கு உடை வானவரோடு உடன் ஆய் என்றும்,Udkku udai vaanavarodu utan aai endrum - ஆற்றல்மிக்க நித்ய ஸூரிகளோடு கூடியவர்களாய் மாயார்,Maayaar - ஒரு நாளும் பிரியாதிருக்கப் பெறுவர்கள் |
| 3424 | திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நிகமத்தில் ஒருவராலும் ஒரு வகையும் அறிய ஒண்ணாத சர்வேஸ்வரனை உள்ளபடியே அறிந்து அங்குத்தைக்கு சத்ருசமாக ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலும் இத் திருவாய் மொழியை யதா சக்தி சொல்லுமவர்கள் என்றைக்கும் க்ருதக்ருத்யர் என்கிறார். ஆம் வண்ண ஒண் தமிழ் ஆவது –நல்ல சந்தஸ் ஸை யுடைத்தான அழகிய தமிழ் என்றுமாம்.) 11 | ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ண த்தால் குரு கூர்ச் சடகோபன் அறிந்து உரை த்த
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே.–7-8-11 | பதவுரை Show / Hideஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று,Aam vannam innadhu ondru endru - இன்னபடிப் பட்டிருப்பதொரு ஸ்வபாவ மென்று அறிவது அரிய அரியை,Arivathu ariya ariyai - (ஒருவராலும்) அறிய முடியாத ஸர்வேச்வரனை குருகூர் சட கோபன்,Kurukoor Sadagopan - நம்மாழ்வார் ஆம் வண்ணத்தால் அறிந்து உரைத்த,Aam vannathaal arinthu uraittha - உள்ளபடியறிந்து அருளிச் செய்த ஆம் வண்ணம் ஒண்தமிழ்கள் இவை ஆயிரத்துள்,Aam vannam ondhthamizhal ivai aayirathul - தகுதியான சந்தஸ்ஸையுடைய அழகிய தமிழினாலான இவ்வாயிரத்துள் பத்தும்,Pathum - இப்பதிகத்தை ஆம் வண்ணத்தால் உரைப்பார்,Aam vannathaal uraippaar - இயன்றவளவு சொல்ல வல்லவர்கள்;. என்றைக்கும்,Endraikkum - ஆத்மாவுள்ளவரைக்கும் தமக்கு அமைந்தார்,Thamakku amaindhaar - க்ருதக்ருத்யர்கள். |
| 3435 | திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நிகமத்தில் இத்திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு எங்கனே சொல்லிலும் ப்ரீதியை விளைக்கும் என்கிறார்.) 11 | இங்கும் அங்கும் திரு மால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குரு கூர்ச் சட கோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே.–7-9-11 | பதவுரை Show / Hideஇங்கும் அங்கும்,Ingum angum - இவ்விபூதியிலுண்டான ஆச்ரயண வேளையிலும் அவ்விபூதியிலுண்டான கைங்கர்ய தசையிலும் திருமால் அன்றி இன்மை கண்டு,Thirumaal andri inmai kandu - லக்ஷ்மீபதியல்லது வேறெருவர் உர்தேச்யால்லாமையை யறுதியிட்டு அங்ஙனே வண் குரு கூர் சட கோபன்,Anggane van van Kurukoor Sadagopan - அவ்வண்ணமாகவே யிருப்பவரான ஆழ்வார் இங்ஙனே சொன்ன,Anggane sonna - இப்படியருளிச் செய்த ஒர் ஆயிரத்து இப்பத்தும்,Or aayirathu ippaththum - ஆயிரத்துள் இப்பதிகம் எங்ஙனே சொல்லிலும்,Enggane sollilum - எப்படிச் சொன்னாலும் இன்பம் பயக்கும்,Inbam payakkum - ஆனந்தாவஹமாகும். |
| 3446 | திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (இத்திருவாய்மொழியை ஒதுமவர்கள் நித்யஸூரிகள் போரவும் கௌரவிப்பர்களென்று அதனையே பலனாகக் கூறித் தலைக் கட்டுகிறார்.) 11 | தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11 | பதவுரை Show / Hideதீர்த்தனுக்கு அற்றபின்,Theerththanukku attrapin - பரமபவித்திரனான எம்பெருமானுக்கு அநந்யார் ஹப்பட்டபின்பு மற்று ஒர் சரண இல்லை என்று எண்ணி,Matru or saran illai endru enni - வேறொரு உபாயமில்லை யென்று அறுதியிட்டு தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனன் ஆகி,TheerththanukkE theertha manadhthanan aagi - அப்பெருமானுக்கே அறுதியாக்கப்பட்ட நெஞ்சையுடையவராய்க் கொண்டு செழு குருகூர் சடகோபன் சொன்ன;,Sezhu kurukoor Sadagopan sonna; - செழு குருகூர் சடகோபன் சொன்ன; தீர்த்தகங்கள் ஆயிரத்துள்,Theerththakangal aayiraththul - ஆயிரம் பாட்டும் ஆயிரம் தீர்த்தங்களென்னும் படியாக வுள்ளத்திலே இவை பத்தும் வல்லார்களை,Ivai pathum vallaargalai - இப்பதிகத்தை ஓத வல்லவர்களைப் பற்றி தேவர்,Devar - நித்யஸூரிகள் வைகல்,Vaikal - எப்போதும் தம் தேவியர்க்கு,Tham deviyarkku - தங்கள் மஹிஷிகளிடத்திலே தீர்த்தங்களே,Theerththangalai - ‘இவர்கள் பரமபவித்தரங்களே’ என்று ஸபஹூமானமாகச் சொல்லுவர்கள். |
| 3457 | திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (இப்பதிகத்திற் சொன்ன பொருள்களையெல்லாம் சுருங்கச் சொல்லி இப்பதிகம் கற்றார்க்கு எம்பெருமானைப் பெற்று உஜ்ஜீவிக்கை எளிதாமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11 | பதவுரை Show / Hideபெரிய அப்பனை,Periya appanai - எல்லாரினும் பெருமை பெற்றஸ்வாமியும் பிரமன் அப்பனை,Brahman appanai - உலகங்களைப்படைத்தவனான பிரமனையும் படைத்தவனும் உருத்திரன் அப்பனை,Uruthiran appanai - ஸம்ஹாரக்கடவுளாகிய ருத்ரனுக்கு தலைவனும் முனிவர்க்கு உரிய அப்பனை,Munivarkku uriya appanai - ஸநகர் முதலிய முனிவர்கட்கும் தகுதிவாய்ந்த ஸ்வாமியும் அமரர் அப்பனை,Amarar appanai - ஸகல தேவர்களுக்கும் ஸ்வாமியும் உலகுக்கு ஓர் தனி அப்பன் தன்னை,Ulakukku oru thani appan thani - ஸகல வோகங்களுக்கும் ஒப்பற்ற நாயகனுமான வனைக்குறித்து, பெரியவண் குருகூர்ச் வண் சடகோபன்,Periyavan kurukoor van sadagopan - ஆழ்வார் பேணின ஆயிரத்துள்ளும்,Penina aayiraththullum - ஆதரித்துச்சொன்ன ஆயிரத்தினுள்ளும் உரிய சொல் மாலை இவை பத்தும் இவற்றால்,Uriya sol maalai ivai paththum ivatraal - தகுந்த சொற்சேர்த்தீவாய்ந்த இப்பத்துப்பாசுரங்களினால் தொண்டீர்நங்கட்கு உய்யலாம்,Thondeernankadkku uyyaalaam - தொண்டர்களே! நாம் உஜ்ஜீவிக்கவமையும். |
| 3468 | திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டுகிற பாசுரமிது, உபயவிபூதியிலும் பகவதநுபவமே யாத்திரையாயிருப்பதே இத்திருவாய்மொழி கற்கைக்குப் பலன் என்கிறது.) 11 | பாதமடைவதன் பாசத்தாலே
மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல்
வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி
இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11 | பதவுரை Show / Hideபாதம் அடைவதன் பாசத்தாலே,Paadam adainvadhane paasaththaale - திருவடியை யடைவதிலுண்டான ஆசையினால் மற்ற வல் பாசங்கள் முற்ற விட்டு,Matra val paasangal muttra vittu - புறம்புண்டான பற்றுக்களையடைய வாஸனையோடேவிட்டு கோது இல் புகழ் கண்ணன் தன் அடிமேல்,Koothu il pugazh kannan than adimael - கோதற்ற புகழையுடைய கண்ணபிரானது திருவடி விஷயமாக. வண் குருகூர் சடகோபன் சொன்ன,Van kurukoor sadagopan sonna - உதாரரான ஆழ்வார் அருளிச்செய்த தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள்,Theethu il andhaadhi oor aayiraththul - தீதற்றதாய் அந்தாதித் தொரடையாயமைந்த ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து,Ivaiyum oor paththu - இவை பத்தையும் இசையோடும் வல்லார் தாம்,Isaiyodum vallaar thaam - இசையோடுங்கூடப் பயிலவுல்லவர்கள் ஆதும் ஓர் தீது இலர் ஆகி,Aadhum oor theethu ilar aagi - ஒருவகைக்குற்றமுமற்றவர்களாகி இங்கும் அங்கும்,Ingum angum - உபய விபூதியிலும் எல்லாம் அமைவார்கள்,Ellam amaivargal - எல்லாவகை நிறைவும் பெற்று விளங்குவர் |
| 3479 | திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (இத்திருவாய்மொழி கற்பார் எம்பெருமானுடைய தனிமைக்கண்டு அஞ்சவேண்டும் நிலமான ஸம்ஸாரத்திலே பிறவார் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே–8-3-11 | பதவுரை Show / Hideஉரையா வெம்நோய் தவிர,Urayaa vemnoy thavira - வாய்கொண்டு சொல்லாவொண்ணாதபடி வெவ்விய கலக்கமாகிற நோயானது தீரும்படி அருள்,Arul - க்ருபை செய்தருளின நீள் முடியானை,Neel mudiyaanai - ஸர்வாதிக சேஷியானவனைக்குறித்து, வரை ஆர் மாடம் மன்னு குருகூர் சடகோபன்,Varai aar maadam mannai kurukoor sadagopan - மலைபோன்ற மாடங்கள் பொருந்திய திருநகரிக்குத் தலைவரான ஆழ்வாருடைய உரை எய் சொல்தொடை ஓர்ஆயிரத்துல் இபத்தும்,Urai ey solthodai or aayiraththul ippaththum - ஸ்ரீ ஸூக்தியாயமைந்த ஆயிரம் பாசுரங்களினுள்ளும் இப்பதிகத்தை நிரையே வல்லார்,Niraiye vallaar - அடைவுபட ஓதவல்லவர்கள் நீடு உலகத்து பிறவா,Needu ulagaththu piravaa - கடல் சூழ்ந்த மண்ணுலகில் இனியொருநாளும் பிறக்க மாட்டார்கள். |
| 3501 | திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (இத்திருவாய்மொழிவல்லார் தாம்பட்ட துக்கம்படாதே இவ்வுலகிலே இப்பிறப்பிலே எம்பெருமானைப் பெற்று நிரந்தரமாக இன்புறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | எங்கே காண்கேன்
ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால்
அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர்
எல்லியும் காலையே–8-5-11 | பதவுரை Show / Hideஈன் துழாய் அம்மான் தன்னை,Een thuzhaai ammaan thannai - பரமபோக்யமான திருத்துழாய் மாலையையுடைய ஸர்வேச்வரனை யான் எங்கே காண்கேன் என்று என்று,Yaan engge kaankaein endru endru - நான் எங்கே காணக் கடவேனென்று பலகாலுஞ் சொல்லி அங்கே தாழ்ந்த சொற்களால்,Angge thaalndha sorngalaal - அவ்விஷயத்திலேயே ப்ரவணமான சொற்களினாலே அம் தண் குருகூர் சடகோபன்,Am than kurukoor sadagopan - ஆழ்வார் செம் கேழ் சொன்ன ஆயிரத்துள்,Sem kaezh sonna aayiraththul - மிகவும் செவ்விதாகச சொன்ன ஆயிரத்திலுள்ளே இவையும் பத்தும் வல்லார்கள்,Ivaiyum paththum vallargal - இவை பத்தையும் ஓத வல்லவர்கள் இங்கே காண,Ingae kaana - இந்நிலத்தே எல்லாரும் காணும்படி இப்பிறப்பே, EpPirappe - இந்த ஜன்மத்திலேயே எல்லியும் காலை மகிழ்வர்,Elliyum kaalai magizhvar - இரவும் பகலும் இடைவீடின்றி மகிழ்ந்திருக்கப் பெறுவர்கள். |
| 3512 | திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (இப்பதிகமானது தன்னைக் கற்றவர்களைத் தானே திருநாட்டிலே கொண்டு போய்வைக்குமென்று பயனுரைத்துத் தலைகட்டுகின்றார்.) 11 | சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே–8-6-11 | பதவுரை Show / Hideசோலை திருக்கடித் தானத்து உறை திருமாலை,Solai thirukkadiththaanaththul urai thirumaalai - சோலைமிக்க திருக்கடித்தானப்பதியில் வாழும் திருமாலைக்குறித்து மதிள் குருகூர் சட கோபன்,Madhil kurukoor sadagopan - நம்மாழ்வார் சொல்,Sol - அருளிச்செய்ததாய் பாலோடு அமுது அன்ன,Paalodu amudhu annam - பாலும் அமுதும் கலந்தாற்போல் பரம போக்யமான ஆயிரத்து,Aayirathu - ஆயிரத்தினுள்ளே இ பத்தும்,Ip paththum - இப்பதிகம் மேலை வைகுந்தத்து,Melai vaikundhathu - ஸர்வோத்தமான ஸ்ரீ வைகுண்டத்திலே வியந்து இருத்தும்,Viyandhu iruththum - உகந்து இருக்கச் செய்யும். |
| 3523 | திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (இத்திருவாய்மொழி கற்கைக்குப் பயனாக ஜன்ம ஸம்பந்த நிவ்ருத்தியை யருளிச் செய்கிறார்.) 11 | சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–8-7-11 | பதவுரை Show / Hideசுடர் பாம்பு அணை நம் பரனை திருமாலை,Sudar paambu anai nam paranai thirumaalai - தேசுமிக்கசேஷயனனாய் அஸ்மத் ஸ்வாமியான திருமாலை அடி சேர் வகைவண் குருகூர் சடகோபன்,Adi ser vagaivan kurukoor sadagopan - திருவடி பணிகையையே இயல்வாகவுடையரான ஆழ்வார் முடிப்பான் சொன்ன,Mudippaan sonna - ஸம்ஸாரஸம்பந்தத்தை முடிப்பதற்காக அருளிச்செய்த ஆயிரத்து,Aayiraththu - ஆயிரத்தினுள் இ பத்தும்,I paththum - இப்பதிகம் சன்மம் அற தேய்ந்து விட,Sanmam ara theyndhu vida - பிறப்பானது நன்றாகத் தொலைந்துபோம்படி தன் கண்கள் சிவந்து நோக்கும்,Than kankal sivandhu nokkum - தன் கண்கள் சிவக்கப்பார்க்கும் |
| 3534 | திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (இத்திருவாய்மொழி பகவத் ப்ராப்தியைப் பண்ணி தருமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | தெருளும் மருளும் மாய்த்துத்
தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம்
அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன்
ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும்
நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11 | பதவுரை Show / Hideதெருளும் மருளும் மாய்த்து,Therulum marulum maayththu - ஜ்ஞாரா ஜ்ஞானங்கள் கலசிவருகிற ரீதியை யொழித்து தன்,Than - தன்னுடைய திருந்து செம்பொன் கழல் அடி கீழ்,Thirundhu sempon kazhal adi keezh - அழகிய செம்பொன்னாலான வீரக்கழணிந்த திருவடிகளின் கீழே அருளி இருத்தும்,Aruli iruththum - பரம கிருபைபண்ணி ஸ்தாபிக்கிற அம்மான் ஆம்,Ammaan aam - ஸ்வாமியாய் அயன் ஆம் சிவன் ஆம் திருமாலால்,Ayan aam sivan aam thirumaalal - பிரமனுக்கும் சிவனுக்கும் அந்தர்யாமியாயிருந்து ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களை நிர்வஹிக்கிற எம்பெருமானாலே அருளப்பட்ட,Arulappatta - மயர்வற மதிநலமருளப்பெற்ற சடகோபன்,Sadagopan - நம்மாழ்வாருடைய ஓர் ஆயிரத்துள் இ பத்தால்,Or aayiraththul i paththaal - ஆயிரத்துள் இப்பதிகம் நிமித்தமாக நம் அண்ணல் கருமாணிக்கம்,Nam annal karumaanikkam - கரியமாணிக்கம் போன்ற நம் ஸ்வாமி அருளி அடி கீழ் இருந்தும்,Aruli adi keezh irundhum - (இத்திருவாய்மொழியை ஓதுமவர்களை) கிருபை பண்ணித் தன் திருவடிகளின்கீழே இருத்துவன் |
| 3545 | திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (இப்பதிகம் கற்றவர்கள் இவ்வாத்மாவுக்குச் சிறந்த புருஷார்த்தமான பகவத்கைங்கரியத்தைப் பண்ணப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார்.) 11 | நேர்பட்ட நிறை மூவுலகுக்கும்
நாயகன் தன்னடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்
தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை
ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார்
நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11 | பதவுரை Show / Hideநின்ற மூ உலகுக்கும் நேர்பட்ட நாயகன் தன்,Ninra moo ulakukkum nerpatta naayagan than - உலகங்களெல்லாவற்றுக்கும் வாய்த்த ஸ்வாமியானவனுடைய அடிமை,Adimai - கைங்கரியத்திற்கு நேர்பட்ட,Nerpatta - தகுதியையுடைய தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்,Thondar thondar thondar thondan sadagopan - தாஸ தாஸ தாஸாநு தாஸரான ஆழ்வாருடைய சொல் நேர்பட்ட,Soll nerpatta - சொல்வாய்ப்பையுடைய தமிழ் மாலை,Tamizh maalai - தமிழ் மாலையான ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரத்திலுள்ளே இவை பத்தும் நேர்பட்டார் அவர்,Ivai pathum nerpattaar avar - இப்பதிகத்தைப் பயிலப்பெற்றவர்கள் நெடுமாற்கு அடிமை செய்ய நேர்பட்டார்,Nedumarku adimai seiyya nerpattaar - ஸர்வேச்வரனுக்கு அடிமை செய்ய வாய்த்தவராவர். |
| 3556 | திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (இத்திருவாய்மொழியை ஓத வல்லவர்கள் இதிற்சொன்ன பாகவத சேஷத்வத்தைப் பெற்று ஸகுடும்பமாக வாழப் பெறுவரென்று பயனுரைத்த தலைக் கட்டுகிறார்.) 11 | நல்ல கோட்பாட்டுலகங்கள்
மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை
அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர்
கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11 | பதவுரை Show / HideNalla kootpaadu,நல்ல கோட்பாடு - நல்ல கட்டளைப்பாடுடைய Ulagangal moonru in ulloam,உலகங்கள் மூன்றின் உள்ளும் - மூவுலகங்களினுள்ளும் Thaan niraintha,தான் நிறைந்த - வியாபீத்த Alli kamalam kannanai,அல்லி கமலம் கண்ணனை - விகஸித்த தாமரைப் பூப்போன்ற கண்களையுடைய பெருமான் விஷயமாக Am than kurukoor sadagopan sollappatta aayirathul,அம் தண் குருகூர் சடகோபன் சொல்லப்பட்ட ஆயிரத்துள் - ஆழ்வாரா வருளிச் செய்யப்பட்ட ஆயிரத்தினுள் Ivaaiyum pattum vallaarkal,இவையும் பத்தும் வல்லார்கள் - இவை பத்தையும் ஓதவல்லவர்கள் Konda pentir makkale,கொண்ட பெண்டிர் மக்களே - ஸ குடும்பமாக Nalla pathal,நல்ல பத்த்தால் - பாகவத சேஷ்த்வ பர்யந்தமான சிறப்புடனே Manai vaazhvaar,மனை வாழ்வார் - க்ருஹஸ்தர்களாக வாழப்பெறுவர்கள். |
| 3567 | திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பலனுரைக்கும் பாசுதமானவிது விலக்ஷணமாகத் தோன்றியுள்ளது. “இப்பத்து மோதவல்லபிராக்கள் பண்டே நம்மையாளுடையார்கள்” என்கிறார். இப்பதிகத்தை யோதவல்லவர்களுக்கு ஆழ்வார் தாம் அடிமைப்படுவதாக அருளிச்செய்கிறார்.) 11 | ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே–9-1-11 | பதவுரை Show / Hideதாது சேர்தோள் கண்ணனை,Thaathu serthol kannanai - மாலையணிந்த தோள்களையுடைய பெருமானைக் குறித்து அவனில் மற்று ஆதல் என்றதுவே துணிந்து,Avanil matru aadhal endrathuvae thuninthu - அவனையொழிய வேறெதுவு மில்லை யென்னுமத்யவஸாயத்தையே கொண்டு குருகூர் சடகோபன் சொன்ன,Kurukoor Sadagopan sonna - ஆழ்வாரருளிச் செய் ஒனா தமிழ்கள்,Ona tamizhkal - அழகிய தமிழினாலான தீது இல்லாத இவை,Theethu illatha ivai - தீதற்ற இவ்வாயிரத்தினுள்ளே ஆயிரத்துள் இப்பத்தும் ஒதவல்ல,Ippathum othavalla - இப்பதிகத்தைக் கற்கவல்ல பிராக்கள்,Pirakkal - உபகாரர்களான் ஸ்வாமிகள் பண்டே நம்மை ஆளுடையார்கள்,Pande nammai aaludaiyaargal - ஏற்கெனவே நம்மை அடிமை கொண்டவராவர் |
| 3578 | திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (இத்திருவாய்மொழி கற்கைக்குப் பலன் எம்பெருமானுடைய திருவடிகளை நிரந்தரம் சிந்திக்கப் பெறுதலேயாம் என்று தலைக்கட்டியருளுகிறார்.) 11 | கூவுதல் வருதல் செய்திடாய் என்று
குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல்
வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும்
இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான்
அடி இணை யுள்ளத்தோர் வாரே–9-2-11 | பதவுரை Show / Hideகுரைகடல் கடைந்தவன் தன்னை,Kuraikadal kadainthavan thannai - குமுறுகின்ற கடலைக் கடைந்தவனான எம்பெருமானைக் குறித்து கூவுதல் வருதல் செய்திடாய் என்று,Koovudhal varudhal seidhidai endru - அழைத்துக் கொள்வதோ வந்தருள்வதோ இரண்டதொன்று செய்ய வேணுமென்று அபேக்ஷித்து மேலி நன்கு அமர்ந்த,Meli nangu amarntha - (அப்படியே பெறுகையாலே) நன்கு தரிக்கப்பெற்ற வியன்புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன்,Viyan punal porunal vazhuthi naadan sadagopan - பரிபூர்ணமான தீர்த்ததையுடைய தாமிர பர்ணி சூழ்ந்த வழுதி நாட்டுக்குத் தலைவரான ஆழ்வாருடைய நாஇயல் பாடல்,Naa iyal paadal - திருநாவின் தொழிலான லாகிய ஆயிரத்துள்ளும்,Aayirathullum - ஆயிரம் பாசுரங்களினுள்ள இவையும் பத்தும் வல்லார்கள்,Ivaiyum paththum vallargal - இப்பதிகத்தைக் கற்க வல்லவர்கள் மூன்று உலகம் அளந்தான் அடி இணை,Moondru ulagam alandhaan adi inai - திரி விக்கிரமனுடைய பாதங்களை ஓவுதல் இன்றி,Ovudhal inri - அநவரதமும் உள்ளத்து ஓர்வார்,Ullathu oorvaar - நெஞ்சிலே அநுஸ்திக்கப் பெறுவர்கள். |
| 3589 | திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (இப்பதிகம் கற்பார் திருநாடு செல்லுகை ஆச்சரியமன்று, ப்ராப்தமே என்கிறார்.) 11 | சீலம் எல்லை இலான் அடிமேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே–9-3-11 | பதவுரை Show / Hideசீலம் எல்லை இலான் அடிமேல்,Seelam ellai ilaan adimael - எல்லையற்ற சீல குணத்தையுடைய பெருமான் திருவடிகளைப் பற்றி அணி கோலம் நீள் கருகூர் சடகோபன்,Ani kolam neel karukoor sadagopan - மிகவழகிய திருக்குருசடரியைதரித்த ஆழ்வாருடைய சொல் மாலை,Sol maalai - சொற்களினாலான மாலையநயிருக்கிற ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரத்தினுள்ளே இவை பத்தினின்,Ivai paththinin - இப்பதிகத்திலே அந்வயித்தவர்கள் பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மை,Vaikundham erudhal paanmai - பரமபதத்தில் ஏறப்பெறுவது இயல்லாம் |
| 3600 | திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (இப்பதிகம் வானவர்தமின்னுயிர்க்கு ஏறேதருமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே–9-4-11 | பதவுரை Show / Hideஆறாமதம் யானை,Aaraamadam yaanai - ஒரு நாளும் மாறாத மதத்தையுடைய குவலயாபீட யானையை அடர்த்தவன் தன்னை,Adarththavan thannai - பங்கப்படுத்தின பெருமானைக் குறித்து சேறு ஆர் அயல் குருகூர் சடகோபன்,Seru aar ayal kurukoor sadagopan - சேறு மிக்க வயலை யுடைத்தான தென் குருகூர்க்குத் தலைவரான ஆழ்வார் நூறே சொன்ன,Noorai sonna - நூறு நூறாக வருளிச் செய்த ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்,Or aayiraththul ippaththum - ஆயிரத்தினுள்ளே இப்பதிகமானது வானவர் தம் இன் உயிர்க்கு ஏறு,Vaanavar tham in uyirkkum eeru - நித்ய ஸுரிகளின் இன்னுயிர்த் தலைவனான எம்பெருமானை தரும்,Tharum - கொடுக்கும் (பகவத் ப்ராப்தியைப் பண்ணித்தருமென்றபடி) |
| 3611 | திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (இப்பதிகத்திற்கு பாசுரம் நெஞ்சிலே பட்டால், ஆரேனுமாகிலும் உருகியே நிற்பர்கள் என்கிறார். பலனுரைத்துத் தலைக்கட்டுகிற பாசுரத்தில் ஒரு பலன் சொல்லதே இங்ஙனே சொல்லலாமோ வென்னில் இதுவும் பயனுரைத்த படியேயாம்; ஒன்றுக்கும் கரையாதே உருகாதே கல்லாயிருப்பவர்களையும் உருகச் செய்வது ஒரு பலனன்றோ.) 11 | இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே–9-5-11 | பதவுரை Show / Hideஇன்பம் தலைப் பெய்து,Inbam thalaip peydhu - பேரின்பத்தை விளைவித்துக் கொண்டு எங்கும் தழைத்த,Engum thazhaitha - எங்கும் மவியாபித் திருக்கின்ற தன் புகழ்,Than pugazh - எம்பெருமான்றனது கீர்த்திகளை பல் ஊழிக்கு ஏத்த,Pal oozhikku aetha - ஊழிதோறூழியோவாமல் அதிக்கும்படியாக தனக்கு அருள் செய்த,Thanakku arul seitha - தமக்கு பரம கிருமை பண்ணின மாயனை,Maayanai - ஆச்சரிய குணசீலனான எம்பெருமானைக் குறித்து தென் குருகூர் சடகோபன் சொல்,Then kurukoor sadagopan sol - ஆழ்வாரருளிச் செய்த ஆயிரத்துள்,Aayirathul - ஆயிரத்தினுள்ளே இவை ஒன்பதோடு ஒன்றுக்கு,Ivai onbadhodu onrukku - இப்பதிகத்திற்கு மூ உலகும் உருகும்,Moo ulagam urugum - மூவுலகத்தவரும் உருகுவர்கள் |
| 3622 | திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (இந்தத் திருவாய்மொழி கற்றார்க்குப் பிறவி முடிந்து அதுக்கடியான ஸம்ஸாரமும் நசிக்குமென்று பயனுரைத்துத் தலைகாட்டுகிறார்.) 11 | கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11 | பதவுரை Show / Hideகடியன் ஆய் கஞ்சனை பிரான் தன்னை,Kadian aayi kanjanai piraan thannai - விரைந்து கம்ஸனைக் கொன்ற கண்ணபிரான் விஷயமாக கொடி மதில் தென் குரு கூர் சடகோபன் சொல்,Kodi madil then guru koor sadagopan sol - ஆழ்வாரளிச் செய்த வடிவுஅமை ஆயிரத்து,Vadivu amai aayirathu - சொற்பொருளழகு பொலிந்த ஆயிரத்தினுள்ளும் இ பத்தினால்,E paththinaal - இப்பதிகத்தினால் எம் சன்மம் முடிவு எய்தி,Em sanmam mudivu eedhi - நம்முடைய ஜன்ம பரம்பரைகள் முடிவு பெற்று கானல்,Kaanal - கானலென்னும்படியான ஸம்ஸாரம் நாசம் கண்டீர்கள்,Naasam kandeergaal - நாசமடைந்தொழியு மென்பது திண்ணம். |
| 3633 | திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (இத்திருவாய்மொழியானது தன்னைப்பயிலுமவர்கட்கு பகவத்விச்லேஷ ஹேலுவான ஸம்ஸார வியாதியையறுக்கு மென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11 | பதவுரை Show / Hideஒழிவு இன்றி,Ozhivu indri - நிரந்தரமாக திருமூழிக்களத்து உறையும்,Thirumoozhikkalathu uraiyum - திருமூழிக்களத்திலே வாழ்கிற ஒண் சுடரை,On sudarai - தேஜோமூர்த்தியான எம்பெருமானை ஒழிவு இல்லா அணி மழலை கிளி மொழி யாள் அலற்றிய சொல்,Ozhivu illa ani mazhalai kili mozhi yaal alatriya sol - மபிரிந்து தரிக்கமாட்டாத வொரு மென்கிளிமொழித் தலைவி சொன்ன சொல்லாகவைத்து வழு இல்லாவண் குருகூர் சடகோபன் உரைத்த,Vazhu illaavan kurukoor sadagopan uraitha - அன்பில் குறைவில்ல தவரான ஆழ்வார் ஆழ்ந்து அருளிர் செய்க அழிவு இல்லா ஆயிரம்,Azhivu illa aayiram - நித்யவேதமான இவ்வாயிரத்தினுள் இப்பத்தும்,Ippaththum - இப்பதிகம் நோய் அதுக்கும்,Noi athukkum - ஸம்ஸார வியாதியைத் தீர்த்துக் கொடுக்கும் |
| 3644 | திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (இத்திருவாய்மொழி வல்லார் ஐஹிக ஆமுஷ்மிக ஸகலபோகங்களையும் புஜிக்கப் பெறுவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே–9-8-11 | பதவுரை Show / Hideவண்ணம் மணி மாடம்,Vannam mani maadam - அழகிய மணி மாடங்களை யுடைத்தான நல் நாவாய் உள்ளானை,Nal naavaai ullaanai - விலக்ஷணமான திருநாவாயிவெழுந் தருளியிருக்கும் பெருமானைக் குறித்து திண் அம்மதின் தென் குருகூர் சடகோபன்,Thin ammadhin then kurukoor sadagopan - திடமாயழகிய மதிள்களையுடைத்தான திருநகரிக்குத் தலைவரான ஆழ்வாருடையதாய் பண் ஆர் தமிழ்,Pan aar tamizh - பண்ணிறைந்த தமிழான ஆயிரத்தில் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்,Ippaththum vallaar - இப்பத்தையும் ஒதவல்லவர்கள் மண் ஆண்டு,Man aandu - இவ்விபூதியை நெடுங்காலம் ஆண்டு மல்லிகை மணம் கமழ்வர்,Malligai manam kamalvar - “ஸர்வகந்த:” என்னப்படுகிற எம்பெரு மானோடே ஸாம்யாபத்தி பெறுவர்கள் |
| 3655 | திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நிகமத்தில் அவன் பக்கல் சாபலமுடையார் இத்திருவாய் மொழியைச் சொல்லி அவனைப் பெறுங்கோள் என்கிறாள்.) 11 | அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா
அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி
அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த
ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்
அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–9-9-11 | பதவுரை Show / Hideஅவனை விட்டு அகன்று,Avanai vittu akandra - கண்ண பிரானை விட்டுப் பிரிந்து உயிர் ஆற்றகில்லா,Uyir aatrakillaa - உயிர் தரிக்கமாட்டாத அணி இழை ஆராய்ச்சியர்,Ani izhai aaraaychiyar - அழகிய ஆபரணங்களணிந்த கோபிமார்கள் மாலை பூசல்,Maalai poosal - மாலைப் பொழுதிலே பட்ட பாட்டை அவனை விட்டு அவல்வதற்கே இரங்கி,Avanai vittu avalvadharke irangi - அப்பெருமானை விட்டு பிரிந்திருக்கை காரணமாக நோவுபட்டு அணி குருகூர் சடகோபன் மாறன்,Ani Kurukoor Sadagopan Maaraṉ - ஆழ்வார் அவனி உண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த,Avani undu umizhndhavan meel uraintha - பூமிணை உண்டுமிழ்ந்த அப்பெருமான் விஷயமாக அருளிச் செய்த ஆயிரத்ததுள் இவை பத்தும் கொண்டு,Aayirathathul ivai pathum kondu - ஆயிரத்தினுள் இப்பதிகங் கொண்டு தொண்டீர்,Thondir - தொண்டர்களே அவனியுள் அலற்றி நின்று,Avaniyul alattri ninru - பூமிக்குள்ளே உகந்து அநுஸந்தித்து |
| 3677 | திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (இத் திருவாய்மொழியைக் கற்கவல்லார்க்கு சரீராவஸானத்தில் வழித்துணையில்லையே என்று க்லேசப்பட வேண்டாதபடி காளமேகம் வழித்துணையாமென்று பலன் சொல்லித் தலைக்கட்டுகிறார்.) 11 | ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே–10-1-11 | பதவுரை Show / Hideநமர்காள் ஏத்துமின் என்று தான் குடம் ஆடு கூத்தனை,Namarkal aeththumin enru thaan kudam aadu kooththanai - எம்முடையவர்கள்! ஏத்துங்கேளென்று தானே சொல்லிக் குடக் கூத்தாடின பெருமாளைக் குறித்து இவை வண் திருமோகூர்க்கு ஈத்த பத்து,Evai van thirumogoorukku eetha paththu - இப்பத்துப் பாசுரங்களும் திருமோகூர் விஷயமாக ஸமரிப்பித்தவை; குருகூர் சடகோபன் குற்றேவல்கள் வாய்த்த ஆயிரத்துள்,Kurukoor sadagopan kutraevargal vaayththa ayiraththul - நம்மாழ்வாருடைய திருவாக்காலான கைங்கரியமாக வாய்த்த ஆயிரத்துக்குள்ளே. இவை ஏத்த வல்லார்க்கு இடர்கெடும்,Evai aeththa vallarkku idarkedum - இவற்றைக் கொண்டு எம்பெருமானைத் துதிக்க வல்லவர்களுக்குத் துன்பங்கள் தொலைந்துபோம். |
| 3688 | திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (இத்திருவாய் மொழி கற்கைக்குப் பலன் பரமபதத்தில் திவ்யாப்ஸரஸ்ஸுக்களாலே ப்ரஹ்மாலங்கார ப்ராப்தி பெறுவதென்கிறார்.) 11 | அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11 | பதவுரை Show / Hideஅந்தம் இல் புகழ்,Andham el pugazh - அழிவில்லாத புகழை யுடையனான போய்,Pooi - (சாராவஸரனத்தில் அர்ச்சிராதி மார்க்கத்தாலே) சென்று அனந்தபுரம் நகர் ஆதி தன்னை,Ananthapuram nagar aadhi thannai - திருவனந்தபுர மென்னும் திவ்ய தேசத்திலே யெழுந்தருளியிருக்கிற ஆதி புருஷனைக் குறித்து, அமர் உலகில்,Amar ulakil - நித்ய விபூதியில் கொந்து அலர் பொழில் குருகூர் மாறன் சொல்,Kondu alar pozhil kurukoor maaran sol - பூங்கொத்துக்கள் அலருகிற பொழில் சூந்த திருநகர்க்குத் தலைவரான ஆழ்வார் அருளிச் செய்த பை நொடி மடந்தையர் தம் அழகிய ஹஸ்த பூஷணங்களணிந்த (பரமபதத்து) திவ்ய,Azhagiya hasta pooshanangal anindha (paramapadathu) divya - அப்ஸரஸ்ஸுக்கனுடைய ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களையும்,Aayiraththul aayiram paasurangalaiyum - வேய் மரு தோள் இணை வேய் போன்ற தோளினைகளால் நேரும் ஸத்காரங்களை,Vei poondra tholinigalal nerum sathkaarangkalai - ஐந்தினோடு ஐந்தும் வல்லார் இப்பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்கள,eppaththu paasurangalaiyum oadha vallavargal - அணைவர் அநுபவிக்கப் பெறுவர்கள். |
| 3710 | திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (இத் திருவாய்மொழியைக் கற்றார்க்கு எம்பெருமான் திருவடிகள் ஸுலபமாமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11 | பதவுரை Show / Hideபரம பரம்பரனை,Parama paramparanai - பராத்பரனையும் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள்,Thodai anthaadhi or aayirathul - அந்தாதித் தொடையான ஆயிரத்தினுள் மல் திண் தோள்,Mal thin thol - மிடுக்குப் பொருந்திய திருத்தோள்களை யுடையனாயிமிருக்கிற இப் பத்தும் கற்றார்க்கு,Ip paththum katraarkku - இப்பதிகத்தைப் பயின்றவர்களுக்கு மாலை,Maalai - ஸர்வேச்வரனை பற்று என்று பற்றி,Patru endru patri - தமக்குப் புகலாக வுறுதி யிட்டு கண்ணன் கழல் இணை ஓர் பற்று,Kannan kazhal inai or patru - கண்ணனது உபயபாதங்கள் வழுதி வளநாடன் சொல்,Vazhudhi valanaadan sol - ஆழ்வார் அருளிச்செய்த ஆகும்,Aagum - ஒப்பற்ற ப்ராப்யமாகும். |
| 3721 | திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (இப்பதிகம் வல்லார், தம்மைப்போலே நெடியானருள் சூடும்படியாவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே–10-5-11 | பதவுரை Show / Hideநெடியன் அருள்,Nedhiyan arul - ஸர்வேச்வரனுடைய க்ருபையை, ஆயிரத்து இருபத்து,Aayirathu irupathu - ஆயிரத்தினுள் இப்பதிகமானது சூடும் படியான்,Soodum padhiyaan - அநுபவிக்கு மியல்வினரான சடகோபன்,Sadagopan - ஆழ்வார் நொடி,Nodi - அருளிச் செய்ததான அடியார்க்கு,Adiyaarkku - பக்தர்களுக்கு அருள் பேறு,Arul paeru - ப்ரஸாத லாபமாயிருக்கும் |
| 3732 | திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைக்குமதான இப்பாட்டில் ஆயிரத்துளிப்பத்துங் கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே” என்கிறார்; இது பயனுரைத்ததாக எங்ஙனே யாகுமென்று சிலர்சங்கிப்பர்கள்; கேண்மின்; நித்யஸூரிகள் இப்பாசுரங்களைக் கேட்பது எவ்விதமாக? என்று பார்க்க வேணும். இங்கிருந்து போரும் முக்தர்கள் சொல்ல, அவர்களது வாய்வழியே கேட்கவேணும். ஆகவே இப்பதிகம் வல்லார் நித்யஸூரிகளைக் கேட்பிக்க வல்லவராவர் என்று பயனுரைத்ததாகவே ஆயிற்று.) 11 | காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11 | பதவுரை Show / Hideதள் கனைகழல்கள் காட்டி,Thal kanaikazhalgal kaatti - தன் திருவடிகளைக் காட்டியருளி பாட்டு ஆய தமிழ் மாலை ஆயிரத்துள்,Paatu aaya thamizh maalai aayirathul - பாட்டாயிருக்கிற தமிழ்த் தொடையான அயிரத்துள் கடு நரகம் புகல் ஒழித்த,Kadu naragam pugal ozhiththa - கடுமையான ஸம்ஸாரநரக ப்ரவேசத்தை யொழித்த செவிக்கு இனிய செம் சொல் இப்பத்தும்,Sevikku iniya sem sol ippaththum - கர்ணம்ருதமான செவ்விய சொற்களினாலாகிய இப்பதிகத்தை வாட்டாறு எம்பெருமானை,Vaattaaru emperumaanai - திருவாட்டாற் றெம்பெருமானைக் குறித்து வளம் குருகூர் சடகோபன்,Valam kurukoor sadagopan - ஆழ்வார் (அருளிச்செய்த) வானவர்கள் கேட்டு ஆரா,Vaanavargal kaettu aaraa - நித்ய ஸூரிகள் முக்தர்கள் வாயிலாகக் கேட்டு திருப்தி பெறமாட்டார்கள். |
| 3743 | திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் இத்திருவாய் மொழிக்குப் பலமாக இவர் அர்த்தித்த படியே ஈஸ்வரனுடைய விரோதி நிரசன உத்யோகத்தைச் சொல்லிக் கொண்டு அதுவே இத்திருவாய் மொழிக்குப் பலமாக அருளிச் செய்கிறார்.) 11 | மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11 | பதவுரை Show / Hideமான் ஆங்காரம் மனம் கெட,Maan aangaara manam keda - மஹான் அஹங்காரம் மனம் என்னுமிவை கெடும்படியாகவும் வன்கையர்; ஐவர் மங்க,Vankaiyar; aivar manga - கொடிய இந்திரியங்களைந்தும் தொலையும்படியாகவும் தான் ஆங்காரம்,Thaan aangaaraam - தானே அபிமானியாய்ப் புகுந்து தானே தானே ஆனானே,Thaane thaane aananae - ஆத்மாத்மீயர்கள் தானேயாயிருக்கிற பெருமானை, தேன் ஆங்காரம் பொழில்,Then aangaara pozhil - வண்டுகனுடைய செருக்கையுடைத்தான சோலை சூழ்ந்த குருகூர்,Kurukoor - திருநகாரிக்குத் தலைவரான சடகோபன் சொல்,Sadagopan sol - ஆழ்வாரருளிச் செய்த ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரத்தில் மான் ஆங்காரத்து இவை பத்;தும்,Maan aangaaraaththu ivai paththum - மஹதஹங்காரதி ரூபமான ப்ரக்ருதி தொலைவதற்காகச் சொன்ன இப்பதிகம். திருமாலிருஞ் சோலை மலைக்கே,Thirumaalirunj solai malaikke - திருமாலிருஞ்சோலை விஷயமாயி;ற்று. |
| 3754 | திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (இத்திருவாய்மொழி கற்கைக்குப் பரமபத ஸாம்ராஜ்யமே பலனென்றருளிச் செய்கிறார்.) 11 | நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11 | பதவுரை Show / Hideஅல்லல் நில்லா,Allal nillaa - துக்கங்களானவை தானே விட்டுப் போகுமிடமாய் நீள் வயல் சூழ்,Neel vayal soozh - பெருத்த வயல்களாலே சூழ்ப்பட்டதான திருப்பேர் மேல்,Thirupper mel - திருப்பேர் நகர் விஷயமாக நல்லார் பலர்வாழ் குருகூர்ச் சடகோபன்,Nallaar palarvaal kurukoorch sadagopan - நல்லார் நவில் குருகூர் நகரரான ஆழ்வாருடையதான சொல் ஆர் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்,Sol aar tamizh aayiraththul ivai paththum vallaar - தமிழிச்சொல் நிரம்பிய ஆயிரத்தினுள் இப்பதிகத்தைக் கற்கவல்லவர்களான தொண்டர் ஆள்வது,Thondar aalvadhu - பாகவதர் களானவர்கள் ஆளுமிடம் சூழ்பொன் விசும்பு.,Soozh pon visumbu - பரமபதமாகும் |
| 3765 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (இப்பதிகம் வல்லார், நித்ய விபூதியிலே பகவத் குணாநுபவம் பண்ணி அதிலே யீடுபட்டு அதுக்கவ்வாருகு கால்வாங்க மாட்டாதே யிருப்பாரோ டொப்பர்களென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறாராயிற்று. கீழ்ப் பாசுரங்களில் சொல்லிற்றை யெல்லாம் ஸங்க்ரஹமாக அநுபாஷிக்கிறாராயிற்று) 11 | வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11 | பதவுரை Show / HideAvar vandhu edhir kolla,அவர் வந்து எதிர் கொள்ள - அந்த பெருமாளும் பிராட்டியும் வந்து எதிரிகொள்ள Mamani mandapathu,மாமணி மண்ட பத்து - திருமாமணி மண்டபத்திலே Antham il perinpathu,அந்தம் இல் பேர் இன்பத்து - முடிவில்லாத மஹானந் தத்தை யுடைய Adiyarodu,அடியரோடு - பரம்பாகவதர்களோடே கூடி Kotthu alarpoliz kurukur sadagopan,கொத்து அலர்பொழில் குரு கூர் சடகோபன் - பூங்கொத்து அலருகிற சோர்லைகளை யுடைத்தான திருநகாரிக்குத் தலைவரான ஆழ்வார் Sol,சொல் - அருளிச்செய்த Sandhangalḷ ayirathu,சந்தங்;கள் ஆயிரத்து - வேதரூபமான ஆயிரம் பாசுரங்களில் Ivai,இவை - இப்பத்துப் பாசுரங்களை Vallar,வல்லார் - ஒதவல்லவர்கள் Munivare,முனிவரே - பகவத்குணங்களை மனனம் பண்ணும் முனிவராவர் |
| 3775 | திருவாய்மொழி || 10-10 முனியே (பெரியபிராட்டியா ராணையிட்டுத தடுத்தப் பெரிய ஆர்த்தியோடே கூப்பிட்ட ஆழ்வாருடைய காரியம் செய்தல்லது நிற்கவொண்ணாதபடி யாயிற்று எம்பெருமாளுக்கு; அதனால் இவர் பிரார்த்தித்தபடியே பாரிபூர்ணனாய்க் கொண்டு வந்து ஸமச்லேஷித்தருளினான்; அதுகண்டு என்னுடைய அபாரிமிதமான விடாயெல்லாம் தீரவந்து என்னோடே கலந்தாய்; என்னுடைய மநோரதமும் ஒருபடி நிறைவேறப்பெற்றேன்’ என்று போரின்பம் பொலிய விண்ணப்பஞ் செய்கிறார்.) 10 | சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10 | பதவுரை Show / Hideசூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த, Soozhndhu Agandru Aazhndhu Uyarndha - பத்து திக்கிலும் வ்யாப்தமாய் முடிவு இல், Mudivu il - நித்யமாயிருக்கிற பெரு பாழே ஓ, Peru Paazhe O - ப்ரக்ருதி தத்வத்துக்கு நியாமகனாய் நிற்கிறவனே! சூழ்ந்து, Soozhndhu - (தர்மபூத ஜ்ஞானத்தாலே, அதையும் வியாபித்து அதனில் பெரிய, Adhanil Periya - அதற்காட்டிலும் பெரியதாய் பரம், Param - மேற்பட்டதாய் நல்மலர்சோதீ ஒ, Nal Malarsodhi O - வகஸ்வர தேஜோரூபமான ஆத்ம வஸ்துவுக்கும் ஆத்மாவானவனே! சூழ்ந்து, Soozhndhu - கீழ்ச் சொன்ன இரண்டு தத்வங்களையும் வியாபித்து அகற்றுக்கும் நிர்வாஹகமாய் சுடர் ஞானம் இன்பமே ஓ, Sudar Gnanam Inbame O - ஙை;கல்ப பமாய் ஸூகரூபமான ஞானத்தை யுடையவனே! சூழ்ந்து, Soozhndhu - அந்த தத்வத்ரயத்தையும் வளைத்துக்கொண்டு அதனில் பெரிய, Adhanil Periya - அதிலும் மிகப் பெரிதான என் அவா, En Avaa - என் அபிநிலேசமானது அற, Ara - தீரும்படியாக சூழ்ந்தாயே, Soozhndhaye - வந்து ஸம்ச்லேஷித்தாயே! |
| 3776 | திருவாய்மொழி || 10-10 முனியே (பரபக்தி பரஜ்ஞான பரமபக்தி தசைகளென்று மூன்றுண்டே; சூழ்விசும்பணி முகிலுக்கு முன்வரையில் பரபக்தி தசையாய்ச் சென்றது. சூழ்விசும்பணி முகில் திருவாய் மொழியானது பரஜ்ஞான தசையிற் சென்றது. முனியே நான்முகனே யென்கிற இத்திருவாய் மொழியானது பரமபக்தி தசையிற் சென்றது. பரமபக்திக்கே ‘முடிந்த அவா’ என்று பெயர். இப்படிப்பட்ட பரமபக்தி பேசுவித்த இப்பதிகம் வல்லவர்கள் இவ்விருள் தருமா ஞாலத்திற் பிறந்து வைத்தே ‘நித்ய ஸூரிகளேயிவர்கள் என்னும்படியான பெருமையோடே பொலிவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11 | பதவுரை Show / Hideஅவா அற, Ava Ara - அடியேனுடைய அபிநி வேசம் தீரும்படி சூழ், Soozh - ஸம்ச்லேஷிப்பவனாய் அர்யை, Aryai - இப்படி தாபத்தை ஹாரிப்பவனாகையாலே ஹாரியென்று திருநாமம் பெற்றவானாய் அயனை, Ayanai - பிரமனுக்கு அந்தரியாமியாய் அரணை, Aranai - ருத்ரனுக்கு அந்தரியாமியாய்யிருக்கிற எம்பெருமானை அலற்றி, Alatri - கூப்பிட்டு அவா அற்று வீடு பெற்ற, Ava Attru Veedu Petra - ஆசை தீர்ந்து வீடு பெற்ற வாரன குருகூர் சடகோ பன், Kurukoor Sadagoban - நம்மாழ்வார் சொன்ன, Sonna - அருளிச் செய்ததாய் அவாவில், Avaavil - பக்தியினா லுண்டானதான அந்தா திகளால், Antha thigalaal - அந்தாதித் தொடையான பாசுரங்களால் நிறைந்த இவை ஆயிரமும், Ivai Aayiramum - இவ்வாயிரத்தினுள்ளே முடிந்த அவாவில், Mudintha Avavil - பரம பக்தியாலே பிறந்ததான அந்தாதி, Anthaathi - அந்தாதியான இப்பத்து, Ippathu - இப்பதிகத்தை அறிந்தார், Arindhaar - அறியக் கற்குமவர்கள் பிறந்தே உயர்ந்தார், Pirandhe Uyarndhar - ஸம்ஸாரத்தில் பிறந்தருக்கச் செய்தேயும் உயர்ந்த வர்களாவர் |
| 3882 | இராமாநுச நூற்றந்தாதி || 106 | இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ் சோலை யென்னும்
பொருப்பிடம் மாயனுக் கென்பர் நல் லோர்,அவை தன்னொடு வந்
திருப்பிடம் மாயன் இராமா னுசன் மனத் தின்றவன் வந்
திருப்பிடம் என்றன் இதயத்துள் ளே தனக் கின்புறவே | பதவுரை Show / Hideமாயனாக்கு, Maayanakku - ஸர்வேச்வரனுக்கு இருப்பு இடம், Iruppu Idam - வாஸஸ்தானம் (எவை யென்றால்) வைகுந்தம், Vaikundham - பரமபதமும் வேங்கடம், Vengadam - திருவேங்கடமலையும் மாலிருஞ் சோலை என்னும் பொருப்பு இடம், Malirunj Cholai Ennum Poruppu Idam - திருமாலிருஞ் சோலை யென்கிற திருமலையும் (ஆகிய இவையாம்) என்பர் கல்லோர், Enbar Kallor - என்று ஸத்துக்கள் சொல்லுவர்கள். மாயன், Maayan - (இவற்றை இருப்பிடமாக வுடைய) ஸர்வேச்வரன் அவை தன்னொடும், Avai Thannodum - அந்த ஸ்ரீவைகுண்டம் முதலியவற்றோடே கூட வந்து எழுந்தருளி யிருப்பது வந்து இருப்பிடம், Vandhu Iruppidam - எம்பெருமானாருடைய இராமாநுசன் மனத்து, Iraamanusan Manathu - திரு வுள்ளத்திலேயாம்; அவன், Avan - அவ் வெம்பெருமானார் தாம் இன்று வந்து, Indru Vandhu - இப்போது வந்து தனக்கு இன்பு உற இருப்பிடம், Thanakku Inbu Ura Iruppidam - தமக்கு ஆநந்தமாக எழுந்தருளி யிருப்பது என் தன் இதயத்து உள்ளே, En Than Idhayaththu Ullae - அடியேனுடைய ஹ்ருத யத்தினுள்ளேயாம். |
| 3883 | இராமாநுச நூற்றந்தாதி || 107 | இன்புற்ற சீலத் திராமா னுச, என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்று வீயினும் சொல்லுவதொன்றுண்டுன் தொண்டர்கட்கே
அன்புற் றிருக்கும் படி, என்னை யாக்கியங் காட்படுத்தே | பதவுரை Show / Hideஇன்பு உற்ற, Inbu Utra - ஆநந்த பூர்ணரா யெழுந்தருளி யிருக்கிற ஸௌசீல்ய குணமுடைய சீலத்து இராமாநுசா, Seelaththu Iraamanuchaa - எம்பெருமானாரே! சொல்லுவது ஒன்று உண்டு, Solluvadhu Ondru Undu - தேவரீரிடத்தில் அடியேன் விஞ்ஞாபிக்க வேண்டியவிஷயம் ஒன்றுண்டு என்பு உற்ற நோய் உடல் தோறும், Enbu Utra Noi Udal Thoram - எலும்பிலே உறைந்து நலியக் கூடிய வியாதிகளுக்கு இருப்பிடமான சரிரங்களிலெல்லாம் பிறந்து இறந்து, Pirandhu Irandhu - பிறப்பதும் இறப்பதுமாகி எண்ண அரிய துன்பு, Enna Ariya Thunbu - எண்ண முடியாத துன்பங்களை யநுபவித்து உற்ற வீயினாம், Utra Veeyinaam - முடிந்து போனாலும் என்றும், Endrum - எல்லாக் காலங்களிலும் எவ் இடத்தும், Ev Idaththum - எல்லா விடங்களிலும் உன் தொண்டர்கட்கே, Un Thondar Kadtke - தேவரீருடைய பக்தர்கள் விஷயத்திலேயே அன்பு உற்று இருக்கும், Anbu Utra Irukkum - பக்தனாயிருக்கும் படி படி என்னை ஆக்கி, Padi Ennai Aakki - அடியேனைச் செய்தருளி அங்கு, Angu - அந்த பக்தர்களிடத்தில் ஆள் படுத்து, Aal Paduthu - (அடியேனை) ஆட்படுத்தி யருள வேணும்; |
| 3884 | இராமாநுச நூற்றந்தாதி || 108 | அங்கயல் பாய் வயல் தென்னரங் கன், அணி ஆகமன்னும்
பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே! நந் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமா னுசனடிப் பூ மன்னவே | பதவுரை Show / Hideநெஞ்சே, Nenchae - ஓ மனமே! பக்தி எல்லாம் தங்கியது என்ன தழைத்து, Bhakti Ellam Thangiyathu Enna Thazhaithu - பக்தி யெல்லாம் நம்மிடத்திலே குடி கொண்ட தென்று சொல்லும்படியாக வீறு பெற்று, பொங்கிய கீர்த்தி இராமாநுசன் அடி பூ, Pongiya Keerthi Raamanusan Adi Poo - பரந்த புகழை யுடையரான எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகள் நம் தலைமிசையே மன்ன, Nam Thalaimisaiye Manna - நமது தலை மேலே நித்ய வாஸம் பண்ணும்படியாக, அம் கயல் பாய் வயல் தென் அரங்கன், Am Kayal Pai Vayal Then Arangan - அழகிய கயல் மீன்கள் பாய்கிற கழனிகள் சூழ்ந்த தென்னரங்கத்தில் உறையும் பெருமானுடைய அணி ஆகம் மன்னும், Ani Aagam Mannum - அழகிய திருமார்பிலே நித்ய வாஸம் பண்ணுகிறவளாய் பங்கயம் மா மலர் பாவையை, Pangayam Maa Malar Paavai - சிறந்த தாமரைப் பூவில் பிறந்த பதுமை போன்றவளான ஸ்ரீ மஹாலக்ஷ்மியை போற்றதும், Poatradhu - வாழ்த்துவோம். |
| 3956 | உபதேச ரத்னமாலை || 72 | பூர்வாச்சார்யர்கள் போத மனுட்டானங்கள்
கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு நீர் -தேறி
இருள் தரும் மா ஞாலத்தே இன்புற்று வாழும்
தெருள் தருமா தேசிகனைச் சேர்ந்து | பதவுரை Show / Hideபூர்வாசாரியர்களின் உடைய ஜ்ஞான அனுஷ்டானங்களை எடுத்துச் சொல்லுகின்ற மகான்களின் உடைய ஸ்ரீ சூக்திகளினால் நீங்கள் தெளிவு பெற்று நல்லறிவை -நிதியாகக் கொண்டு -உபகரித்து அருளவல்ல சிறந்த ஆசாரியரை அடி பணிந்து இவ்விருள் தரும் மா ஞாலத்திலே ஆனந்த நிர்ப்பரர்களாய் வாழுங்கோள். நலமந்த மில்லதோர் நாடாகவே தோற்றும் -இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் |
| 3957 | உபதேச ரத்னமாலை || 73 | இந்த யுபதேச ரத்ன மாலை தன்னைச்
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் -எந்தை
எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகிச்
சதிராக வாழ்ந்திடுவர் தாம் | பதவுரை Show / Hide-இப்பத்தும் உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் -போலே -இதுவே தெருள் தரும் மா ஞாலமாகி விடும் என்ற திரு உள்ளம் தோன்றும் – எம்பெருமானார் திரு உள்ளாத்திற்கு உகப்பான விஷயங்களையே தொடுத்து அருளிச் செய்த இந்த சொல் மாலையைச் சிந்தையிலே அணிந்து கொள்ளுமவர்க்கு எம்பெருமானாருடைய பரம கிருபையே பேறாகும் என்று பலன் அருளிச் செய்து தலைக் கட்டி அருளுகிறார் |
| 3957 | உபதேச ரத்னமாலை || எறும்பி அப்பா அருளிச் செய்தது 74 | மன்னுயிர்காள் இங்கே மணவாள மா முனிவன்
பொன்னடியாம் செங்கமலப் போதுகளை -உன்னிச்
சிரத்தாலே தீண்டின் அமானவனும் நம்மைக்
கரத்தாலே தீண்டல் கடன் | பதவுரை Show / Hide74 சிம்ஹாச நாபதிகள் -74 பாசுரங்கள் பாடி அருள மா முனிகள் திரு உள்ளம் -அவரையே தெய்வமாக கொண்ட எறும்பி அப்பா இறுதி பாசுரம் பணித்து பெரிய பெருமாள் இடம் திருவடி பணிந்து பிரார்த்திக்க அப்படியே பகவன் நியமனம் ஆயிற்று இந்த உடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி –விரசை தனில் குளித்து அங்கு அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று -என்றபடி முக்தி சாம்ராஜ்ய அனுபவத்துக்கு முன்னாக அமானவ கர ஸ்பர்சம் இன்றியமையாதது ஆகும் – அது மா முனிகளின் பக்தர்களுக்கு நேருவது கடைமையாகும் -என்றும் அது நேருவது அவசியம் அற்றது என்றும் இருவகைப் பொருளில் அருளிச் செய்கிறார் |
| 4055 | திருவாய்மொழி நூற்றந்தாதி || தொண்ணூற்றெட்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானை “அநாதிகாலமாக என்னைக் கைவிட்ட நீ, இப்பொழுது என்னைக் கைக்கொண்ட காரணம் என்?” என்று கேட்க அதற்கு எம்பெருமான் பதிலற்று இருப்பதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார். 98 | திருமால் தன் பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு
அருமாயத்து அன்று அகல்விப்பானென்? – பெருமால் நீ
இன்றென்பால் செய்வான் என்னென்ன இடருற்று நின்றான்
துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து | பதவுரை Show / Hideஸ்ரீமந் நாராயணன் தன் விஷயத்தில் கொண்டிருக்கும் சிறந்த ஈடுபாட்டைக் கண்ட, மிகப் பெருமை வாய்ந்த ஆழ்வார் எம்பெருமானை “எம்பெருமானே! அநாதி காலமாக என்னை ஏன் ஸம்ஸாரத்தில் வைத்து உன்னிடமிருந்து தள்ளி வைத்திருந்தாய்? இப்பொழுது என்னிடம் இவ்வளவு அன்பு காட்டுவது ஏன்?” என்று கேட்க, இதற்குப் பதில் இல்லாத எம்பெருமான் வருத்தத்துடன் பவ்யமாக இருந்தான். |
| 4056 | திருவாய்மொழி நூற்றந்தாதி || தொண்ணூற்றொன்பதாம் பாசுரம். மாமுனிகள், அர்ச்சிராதி மார்க்கத்தில் தனக்குக் கிடைத்த வரவேற்பை எம்பெருமான் காட்டிக் கொடுக்க, அதை அனுபவித்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார். 99 | சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட
ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து – வாழ்ந்து அங்கு
அடியருடனே இருந்தவாற்றை உரை செய்தான்
முடி மகிழ் சேர் ஞான முனி | பதவுரை Show / Hideஎம்பெருமான் ஆழ்வாரைச் சூழ்ந்து நின்று, பரமபதத்தை அடைவிக்கும் பழையதான அர்ச்சிராதி மார்க்கத்தைக் காட்டிக் கொடுக்க, திருமுடியில் வகுள மாலையைச் சூடியிருக்கும் ஞான முனியான ஆழ்வார், அங்கே ஆனந்த ஸாகரத்தில் மூழ்கியிருந்ததை முழுவதும் அனுபவித்து, அங்கே ஆனந்தமாக ஒரு பாரமும் இல்லாமல் கருடர் விஷ்வக்ஸேனர் முதலிய அடியார்களுடன் வாழ்ந்ததை அருளிச்செய்தார். |
| 4057 | திருவாய்மொழி நூற்றந்தாதி || நூறாம் பாசுரம். மாமுனிகள், பரமபக்தியால் உயர்ந்த குறிக்கோளை அடைந்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார். 100 | முனி மாறன் முன்பு உரை செய் முற்றின்பம் நீங்கி
தனியாகி நின்று தளர்ந்து – நனியாம்
பரம பத்தியால் நைந்து பங்கயத் தாள் கோனை
ஒருமையுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து | பதவுரை Show / Hideமுனிவரான ஆழ்வார், முன்பு கண்ட ஆனந்தங்களிலிருந்து விடுபட்டு, வருத்தத்துடன் தனியாக இருந்தார். நன்கு வளர்ந்த பரமபக்தியால் பரிபக்குவத்தை அடைந்து, ச்ரிய:பதியுடன் தன் திருவுள்ளத்தில் ஒன்றுபட்டு, நித்யஸூரிகளின் பெருமையை அதனால் அடைந்து, பிராட்டியும் எம்பெருமானும் ஆன சேர்த்தியை நேரில் கண்டு, அவர்களுக்குத் தொண்டு செய்யப் பெற்றார். |