Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2181 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2181முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஆக – இப்படிப் பட்டவனைப் பெறுகைக்கு நமக்குச் செய்ய வேண்டுவது -என் என்னில் பெறுவதும் அவனையே பெறுகைக்கு சாதனமும் அவனே என்று – அத்யவசித்துப்   போவாய் – என்கிறார் – 100
ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும்,
ஈரடியும் காணலா மென்னெஞ்சே. – ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண்டுழாய் மாலைசேர்,
மாயவனை யேமனத்து வை.
என் நெஞ்சே, En Nenje - எனது மனமே!
ஓர் அடியின், Oru Adiyin - (தனது) ஒப்பற்ற அடிவைப்பினாலே
தாயவனை, Thaayavani - லோகங்களையெல்லாம் அளந்து கொண்டவனும்
கேசவனை, Keesavani - கேசியென்னும் அஸுரனைக் கொன்றவனும்
தண் துழாய்மாலை சேர், Than Thuzhaimalaik Seer - குளிர்ந்த திருத்துழாய் மலையோடு சேர்ந்தவனுமான
மாயவனையே, Maayavanaiye - எம்பெருமானையே
மனத்து வை, Manaththu Vai - மனத்தில் உறுதியாக்க் கொள்வாயாக (இப்படி அவனே உபாயமென்று உறுதிகொண்டால்)
ஓர் அடியும், Oor Adiyum - உலகங்களையெல்லாம் அளந்துகொண்ட ஒரு திருவடியும்
சாடு உதைத்த ஒண்மலர் சேஅடியும், Saadu Uthaitha Onmalai Seadiyum - சகடம் முறிந்து விழும்படி உதைத்த அழகிய பூப்போன்ற திருவடியும் ஆகிய
ஈர் அடியும் காணலாம், Eer Adiyum Kaanalam - இரண்டு திருவடிகளையும் ஸேவிக்கப்பெறலாங்கான்