திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1767 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1767பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னை பிராபிக்கைக்கு வழி இட்டுக் கொடுத்த ஜகத் காரண பூதனானவன் –ஸ்ரீ திரு நாகையிலே தன் அழகாலே விட ஒண்ணாத படி பண்ணிக் கொண்டு நின்றான் ஆயிற்று – தம்மால் அளவிட ஒண்ணாமையால் பிரித்து அனுபவிக்கிறார்-உயிர் தோழியும் தானுமாய் அனுபவித்த ஏழு பாடல்கள் எல்லாரையும் குறித்த இரண்டு பாடல்கள்-பல ஸ்ருதி ஒன்றும் இத்தை அப்யசிக்க வல்லார்கள் இங்கும் கோலின பலங்களும் பெற்று இது தன்னின் பலமான ஸ்ரீ நித்ய சூரிகளோடு ஒரு கோவையாய் இனியராகப் பெறுவார்கள்) 10
அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார் மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே –9-2-10
பதவுரை Show / Hide
அன்னமும், Annamum - ஹம்ஸமாகவும்
கேழலும், Keelalum - வராஹமாகவும்
மீனும், Meenum - மத்ஸ்யமாகவும்
ஆய, Aaya - அவதரித்த
ஆதியை, Aadhiyai - ஜகத்காரணபூதரும்
நாகை, Naagai - திருநாகையில் எழுந்தருளியிருக்கின்ற
அழகியாரை, Azhagiyaarai - அழகிற்சிறந்தவருமான ஸௌந்தர்யராஜப் பெருமாளைக் குறித்து,
கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன், Kanni Nal Maa Madil Mangai Vendan - அழிவற்ற நல்ல பெரிய மதில்களையுடைய திருமங்கைக்குத் தலைவரும்
காமரு சீர், Kaamaru Seer - விரும்பத்தக்க குணங்களையுடையவருமான
கலிகன்றி, Kalikanri - கலியன்
குன்றா இன் இசையால் சொன்ன, Kundraa In Isaiyaal Sonna - குறைவில்லாத இனிய இசையுடனே அருளிச்செய்த
செம் சொல் மாலை, Sem Sol Maalai - அழகிய சொல்மாலையாகிய
ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும், Ezham Irandum Oor Ondrum - இப்பத்துப்பாசுரங்களையும்
வல்லார், Vallar - கற்றுவல்லவர்கள்
மன்னவர் ஆய், Mannavar Aayi - (இவ்வுலகில்) சக்கரவர்த்திகளாயிருந்து
உலகு ஆண்டு, Ulaku Aandu - அரசாட்சிபுரிந்து
மீண்டும், Meendum - அதற்குமேலும்
வானவர் ஆய், Vaanavar Aayi - முக்தர்களாகி
மகிழ்வு எய்துவர், Magizhvu Eydhuvar - ஆனந்தமடைவர்கள்.