திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2050 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2050திருக்குறுந்தாண்டகம் || எம்பெருமானுகந்தருளின திவ்ய தேசங்களிலெங்கும் “பதியே பரவித் தொழுந்தொண்டர்“ என்னும்படியாக அவகாஹித்திருக்கும் அவர்கள் உஜ்ஜீவிக்க வழியுண்டே யல்லது அல்லாதவர்களுக்கு ஒருநாளும் உஜ்ஜீவிக்க வழியில்லை யென்கிறார். 19
பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை திரி தந்து உண்ணும் முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே
பதவுரை Show / Hide
பிண்டி ஆர் மண்டை ஏந்தி, Pindhi Ar Mandai Aendhi - உளுத்த பொடிகள் உதிருகிற தலை யோட்டைக் கையிலேந்திக் கொண்டு
பிறர் மனை, Pirar Manai - அயலாருடைய வீடுகளிலே
திரி தந்து, Thiri Thandhu - திரிந்து (பிச்சை யெடுத்து)
உண்ணும், Unnum - ஜீவித்த
முண்டியான், Mundiyan - மொட்டையாண்டியான ருத்ரனுடைய
சாபம், Saapam - ப்ரஹ்ம ஹத்தி சாபத்தை
தீர்த்த, Theertha - போக்கின
ஒருவன், Oruvan - அத்விதீயனான் எம்பெருமானுடைய
ஊர், Oor - திருப்பதிகளாய்
உலகம் ஏந்தும், Ulagam Aendhum - உலகத்தவர்களால் கொண்டாடப்பட்டன வாயு முள்ள
கண்டியூர், Kandiyur - திருக்கண்டியூரென்ன
அரங்கம், Arangam - திருவரங்கமென்ன
மெய்யம், Meyyam - திருமெய்யமென்ன
கச்சி, Kacchi - திருக்கச்சியென்ன
பேர், Per - திருப்பேர்நகரென்ன
மல்லை, Mallai - திருக் கடன்மல்லை யென்ன
என்று, Endru - ஆகிய இத் திருப்பதிகளைப் பேசிக் கொண்டு
மண்டினார், Mandinaar - அவகாஹிக்குமவர்கள்
உய்யல் அல்லால், Uyyaal Allaal - உஜ்ஜீவிக்கலாமத்தனை யொழிய
மற்றையார்க்கு, Mattraiyaarkku - அல்லாதவர்களுக்கு
உய்யல் ஆமே, Uyyaal Aame - உஜ்ஜீவிக்க வழியுண்டோ? (இல்லை)