திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1497 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1497பெரிய திருமொழி || (6-5–கலங்க) (திரு நறையூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (செப்புமவர்க்குத்-திருமால் -சேமத் துணையாம் –இவனை அடை கொடு பாழ் போக்குகை அன்றிக்கே இவனுடைய ரஷணத்தை முடிய தலைக் கட்டிக் கொடுக்கும் துணையாம்) 10
தாமத் துளப நீண் முடி மாயன் தான் நின்ற நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த நறையூர் மேல் காமக் கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை சேமத் துணையாம் செப்புமவர்க்குத் திருமாலே –6-5-10
பதவுரை Show / Hide
துளபம் தாமம் நீள் முடி, Thulabam Thaamam Neel Mudi - திருத்துழாயினாலாகிய மாலையை நீண்ட திருமுடியிலே யுடையனான
மாயன் தான் நின்ற, Maayan Thaan Nindra - ஸர்வேச்வரன் நித்யவாஸம் பண்ணப்பெற்றதும்,
நாமம், Naamam - புகழ்பெற்றவைகளாய்
திரள் மா மாளிகை, Thiral Maa Maaligai - நெருங்கியிருக்கின்ற பெரிய திருமாளிகைகளினால்
சூழ்ந்த, Sozhndha - சூழப்பட்டதுமான
நறையூர்மேல், Naraiyoor Mel - திருநறையூர் விஷயமாக,-
காமம் கதிர்வேல் வல்லான் கலியன், Kaamam Kathirvel Vallaaan Kaliyam - மிகக் வொளிபொருந்திய வேற்படையைப் பிடிக்க வல்லவரான திருமங்கையாழ்வார்
ஒலி மாலை, Oli Maalai - அருளிச்செய்த இச்சொல் மாலையை
செப்புமவர்க்கு, Seppumavarkku - ஓதவல்லவர்களுக்கு
திருமால், Thirumaal - திருமகள் கொழுநனான ஸர்வேச்வரன்
சேமம் துணை ஆம், Semam Thunai Aam - எப்போதும் ரக்ஷகனான ஸஹாயபூதனாக ஆவன்.