திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1717 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1717பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அழகிய இசையோடு கூட – இத் திரு மொழியை –வண் குறிஞ்சி -என்று சொல்லுவார்கள் – இத்தை அப்யசிக்குமவர்கள் –அவர்களுக்கு அவஸ்யம் அநு போக்தவ்யம் -என்கிற பாபங்கள் கிட்டாது) 10
மலி புகழ் கண புர முடைய வெம்மடிகளை வலி கெழு மதிளயல் வயலணி மங்கையர் கலியன தமிழிவை விழுமிய விசையினொடு ஒலி சொலு மடியவ ருறு துயரிலரே –8-7-10
பதவுரை Show / Hide
மலி புகழ், Mali Pugazh - நிறைந்த புகழையுடைய
கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரத்தை
உடைய, Udaiya - இருப்பிடமாகவுடைய
எம் அடிகளை, Em Adigalai - எம்பெருமான் விஷயமாக
வடி கெழு, Vadi Kezhu - திண்மை பொருந்திய
மதிள், Mathil - மதிளையும்
அயல், Ayal - சுற்றுப்புறங்களில்
வயல், Vayal - கழனிகளையும்
அணி, Ani - அலங்காரமாகக்கொண்ட
மங்கையர், Mangaiyar - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான
கலியன, Kaliyan - திருமங்கையாழ்வாருடைய
இவை தமிழ், Ivai Tamil - இத்தமிழ்ப் பாசுரங்களை
விழுமிய இசையினொடு, Vizhumiya Isaiyinodu - சிறந்த இசையோடு கூட
ஒலி சொலும், Oli Solum - அப்யஸிக்கின்ற
அடியவர், Adiyavar - பக்தர்கள்
உறு துயர் இலர், Uru Thuyar Ilir - அவச்யமபவிக்குப்படியாக ஏற்பட்ட துக்கங்களினின்றும் விடுபட்டவராவர்.