திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1657 | பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரமபதத்தில் -ஆண்மின்கள் -என்றபடியே தாங்களே நிர்வாஹகராய் -இவ்வருகு உள்ளார் அடங்கலும் சாத்யர் ஆவார்கள்) 10 | மாவளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று
காவளரும் கடி பொழில் சூழ் கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன
பாவளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
பூவளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய் புகழ் தக்கோரே –8-1-10 | பதவுரை Show / Hideமா வளரும் மென் நோக்கி, Maa Valarum Men Nookki - மானினுடைய நோக்குப் போன்று விசாலமாய் மெல்லிதான நோக்கை யுடையளான மாதராள், Madharaal - (பரகால) நாயகியானவள் மாயவனை கண்டாள் என்று, Maayavanai Kandaal Endru - ஆச்சரியனான எம்பெருமானைக் கண்டாள் கொலோ என்று கா வளரும் கடி பொழில் சூழ், Kaa Valarum Kadi Pozhil Soozh - சோலைகளில் வளரும் பரிமளமானது பூமியெங்கும் பரவப்பெற்ற கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளியுள்ள அம்மானை, Ammaanai - ஸ்வாமியைக் குறித்து கலியன் சொன்ன, Kaliyan Sonna - திருமங்கையாழ்வாரருளிச் செய்த பா வளரும், Paa Valarum - சந்தங்கள் நிறைந்திருக்கப் பெற்ற தமிழ் மாலை, Tamizh Maalai - தமிழ்ப் பாசுர மாலையாகிய பன்னிய நூல், Panniya Nool - கொண்டாடுதற்கு உரிய இத்திவ்ய ப்ரபந்தத்திற் சேர்ந்த இவை ஐந்தும் ஐந்தும், Ivai Aindhum Aindhum - இப்பத்துப் பாட்டையும் வல்லார், Vallaar - ஓதியுணரவல்லவர்கள் பூ வளரும், Poo Valarum - பூக்கள் நிறைந்த கற்பகம் சேர், Karppagam Ser - கல்ப வ்ருக்ஷம் பொருந்திய பொன்னுலகில், Ponnulakil - பரமபதத்தில் மன்னவர் ஆய், Mannavar Aay - நிர்வாஹகர்களாகவும் புகழ் தக்கோர், Pugazh Thakkor - (இங்குள்ளவரையில்) புகழ்க்குத் தகுதியுடையவர்களாகவும் இருக்கப் பெறுவர். அடிவரவு, Adivaravu - சிலை, செரு, துன்னு, தார், அடி, பேர், செவ்வரத்த, கொற்ற, வண்டு, மாவளரும், தெள்ளியீர். |