திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1257 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1257பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்-நன்மை மிக்க அவதி இன்றிக்கே இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்திலே ஸ்ரீ திருவடி ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் உடன் ஒரு கோவையாய் நச புன ஆவர்த்தத்தே -என்கிறபடி ஒருநாளும் பிரியாதே இருக்கப் பெறுவர்) 10
காரார்ந்த திருமேனிக் கண்ணன் அமர்ந்து உறையும் இடம் சீரார்ந்த பொழில் நாங்கைத் திருத் தேவனார் தொகை மேல் கூரார்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார் ஏரார்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே –4-1-10
பதவுரை Show / Hide
கார் ஆர்ந்த திருமேனி கண்ணன், Kaar Aarntha Thirumeeni Kannaan - மேகத்தோடொத்த திருமேனியை யுடைய கண்ணபிரான் (- (கூர் ஆர்ந்த வேல் கலியன்;))
அமர்ந்து உறையும்; இடம், Amarnthu Uraiyum Idam - பொருந்தி வாழும் திருப்பதியாய்,
சீர் ஆர்ந்த பொழில் நாங்கை, Seer Aarntha Pozhil Naangkai - அழகு பொருந்திய சோலைகளை யுடைய திருநாங்கூரிலுள்ளதான
திருத்தேவனார் தொகைமேல், Thiruththevanar Thogaimel - திருத்தேவனார் தொகை யென்னும் திவ்யதேசம் விஷயமாக
கூறு, Kooru - அருளிச்செய்த
தமிழ் பத்தும், Tamil Padhum - இத்தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும்
வல்லார், Vallar - ஓதவல்லவர்கள்
ஏர் ஆர்ந்த வைகுந்தத்து, Aer Aarntha Vaikundhathu - நன்மை மிக்க ஸ்ரீவைகுண்டத்தில்
இமையவரோடு இருப்பார், Imaiyavarodu Iruppaar - நித்யஸூரிகளோடு கூடி யிருக்கப் பெறுவார்கள்