திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1137 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1137பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பகவத் குணங்கள் நெருங்கத் தொடுத்த செவ்விய தமிழ்த் தொடை வல்லார் பெரிய பிராட்டியார் உடைய கடாஷத்தாலே லோகத்திலே மகா ரதராய் கடல் சூழ்ந்த பூமியை அடைய ஆண்டு – உஜ்ஜ்வலர் ஆவார்கள்-இந்த ஐஸ்வர்யம் அடைய மலடாய் போகாமே இவரைப் போலே பாகவத சேஷமாக்கப் பெறுவார் என்கிறார் பத்தாம் பாசுரத்தில் ஆக இத்திரு மொழியால் சர்வேஸ்வரன் விரும்பும் நிலம் ஆகையாலே இத்தேசம் ஆஸ்ரயணீயம் என்றும் அது தான் சர்வ சமாஸ்ரயணீயம் என்றும் சொல்லிற்று ஆயிற்று – அதாகிறது சமதமாத்யுபேதர்க்கு இறே ஆஸ்ரயணீ யத்தில் அதிகாரம் உள்ளது – அவை இல்லாதவனும் தம் தானாய் ஆஸ்ரயிக்கும் படியான தேசம் இறே) 10
பார்மன்னு தொல்புகழ்ப் பல்லவர்கோன் பணிந் தபர மேச்சுர விண்ணகர்மேல், கார்மன்னு நீள்வயல் மங்கையர் தந்தலை வன்கலி கன்றிகுன் றாதுரைத்த, சீர்மன்னு செந்தமிழ் மாலைவல்லார்த் திரு மாமகள் தன்னரு ளால்,உலகில் தேர்மன்ன ராயொலி மாகடல்சூழ் செழு நீருல காண்டு திகழ்வர்களே. –2-9-10
பதவுரை Show / Hide
பார்மன்னு தொல் புகழ், Paarmannu Thol Pugazh - இப்பூமியிலே நிலைத்து நின்ற பெரும்புகழையுடைய
பல்லவர்கோன், Pallavarkon - பல்லவராஜன்
பணிந்த, Panintha - கைங்கரியங்கள் செய்யப்பெற்ற
பரமேச்சுரவிண்ணகரிமேல், Paramechuravinnagarimeel - பரமேச்சுரவிண்ணகர மென்னும் திருப்பதி விஷயமாக
கார்மன்னு நீள்வயல், Kaarmannu Neelvayal - சினைகொண்ட பெரிய கழனிகளையுடைய
மங்கையர்தம்தலைவன், Mangaiyarthamthalaivan - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான
கலிகன்றி, Kalikanri - கலியன்
குன்றாது, Kunraathu - இலக்கணக் குறையொன்றுமின்றி
உரைத்த, Uraitha - அருளிச்செய்த
சீர்மன்னு செம் தமிழ் மாலை, Seermannu Sem Tamil Maalai - அழகு பொருந்திய செந்தமிழினாகிய இப்பாமாலைகள்
வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள்
திரு மா மகள் தன் அருளால், Thiru Maa Magal Than Arulaal - பெரிய பிராட்டியாருடைய கிருபையினால்
உலகில், Ulagil - இவ்வுலகத்திலே
தேர்மன்னர் ஆய், Thermannar Aay - தேரை நடத்தவல்ல அரசர்களாகி
ஒலி மா கடல் சூழ், Oli Maa Kadal Soozh - ஆரவாரிக்கின்ற பெரிய கடலாலே சூழப்பட்ட
செழு நீர்உலகு, Sezhu Neerulagu - செழிப்பான நீர்மையையுடைய உலகையெல்லாம்
ஆண்டு, Aandu - ஆண்டுகொண்டு
திகழ்வர்கள், Thigalvargal - விளங்குவார்கள்.