Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: முதல் திருவந்தாதி, பொய்கையாழ்வார் (102 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
0முதல் திருவந்தாதி - தனியன் || (கைதைசேர்) 28
கைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த
பொய்கைப் பிரான்கவிஞர் போரேறு வையத்
தடியவர்கள் வாழ வருந்தமிழ் நூற் றந்தாதி
படிவிளங்கச் செய்தான் பரிந்து
Kaithai, கைதை - தாழைகள்
Ser, சேர் - நெருங்கிவர்த்திக்கிற
Poo, பூ - அழகிய
Pozhil, பொழில் - சோலைகளாலே
Soozh, சூழ் - சூழப்பட்ட
Kachi nagar, கச்சி நகர் - காஞ்சீநகரத்தில் (திருவெஃகாவிலே)
Vandhudiththa, வந்துதித்த - (பொற்றாமரைப் பொய்கையிலே) திருவவதரித்தவராய்
Kavingar poreru, கவிஞர்போரேறு - கவி ச்ரேஷ்டராய்
Poigai piran, பொய்கைப் பிரான் - உபகாரகரான பொய்கையாழ்வார்
Vaiyathu, வையத்து - பூமியிலுள்ள
Adiyavargal, அடியவர்கள் - தாஸபூதரான ஸ்ரீவைஷ்ணவர்கள்
Vaazha, வாழ - வாழும்படிக்கீடாக
Arum, அரும் - (அர்த்த நிர்ணயம் செய்யப்புகில்) அரிதாய்
Tamizh, தமிழ் - தமிழாகையாலே ஸுலபமாய்
Nootranthaadhi, நூற்றந்தாதி - நூறுபாட்டாயிருக்கிற அந்தாதியை
Parinthu, பரிந்து - ஸ்நேஹ யுக்தராய்க்கொண்டு
Padi, படி - பூமியிலே
Vilanga seidhaan, விளங்கச்செய்தான் - ப்ரகாசமாகும்படி செய்தருளினார்
2082முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) பூமியையும் -ஜலத்தையும் -தேஜஸ் சையும் -மூன்றையும் சொல்லி இவை தன்னை அஞ்சுக்கு உப லஷணம் ஆக்கி அவ் வஞ்சாலும் இந்த பூமி தொடக்கமாக இழியும் இடத்தில் இதுக்கு பிரதான குணமான காடின்யத்தையும் ஜலத்தின் உடைய த்ரவத்தையும் தேஜஸ் சினுடைய ஔஷ்ண் யத்தையும் சொல்லிக் கொடு போந்து இவ் வழியாலே லீலா விபூதி யடங்க நினைத்து – நித்ய விபூதி அடங்க உப லஷணமாக திரு வாழி ஆழ்வானைச் சொல்லி ஆக இத்தனையாலும் உபய விபூதி யுக்தன் என்னும் இடத்தைச் சொல்லி இப்படி அவனுடைய சேஷித்வத்தையும்- தம்முடைய சேஷத்வத்தையும் சொல்லி அதுக்கு அநு கூலமாக அவன் திருவடிகளிலே பரிசர்யையும் பண்ணி அவன் உகப்பே இவர் தமக்கு உகப்பாக நினைத்து இருக்கையாலே இவர் செய்தது எல்லாம் தனக்கு அலங்காரமாகவும் போக்யமாகவும் நினைத்து இருக்கிற படியையும் சொல்லி இப்படிப் பட்ட அடிமை செய்யப் பெறாமையாலே வந்த ஸ்வரூப ஹானியைப் பரிஹரிக்கைக்காக – அடிக்கே சூட்டினேன் சொன் மாலை -என்றதாதல் அன்றிக்கே இங்கனே இருப்பதோர் அறிவு நடையாடாமையாலே சம்சாரம் இங்கனே நித்யமாய்ச் சொல்லுகிறது என்று பார்த்து அதுக்காக செய்தாராய் இருக்கிறது – 1
வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக, – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடர் ஆழி நீங்குகவே யென்று
வையம் தகளி ஆ,Vaiyam Thagali Aa - பூமி அகலாகவும்
வார் கடலே நெய் ஆக,Vaar Kadaley Ney Aaga - அந்தப் பூமியைச் சுற்றியிருக்கிற கடலே நெய்யாகவும்.
வெய்ய கதிரோன் விளக்கு ஆக,Veyya Kathiron Vilakku Aaga - உஷ்ணகிரணனான ஸூர்யன் விளக்காகவும்,
செய்ய சுடர் ஆழியான் அடிக்கே,Seyya Sudar Azhiyan Adikke - செஞ்சுடர்ச் சக்கரைக்கையனான எம்பெருமானது திருவடிகளில்.
சொல் மாலை,Sol Maalai - இப்பாமாலையகிற பூ மாலையை
சூட்டினேன்,Soottineen - சாத்தினேன்;
இடர் ஆழி நீங்குக என்று,Idar Aazhi Neenguga Endru - (ஏதுக்காகவென்னில்;) (பகவத் கைங்கரியத்திற்கு இடையூறாகவுள்ள) துன்பக்கடல் நீங்குகைக்காக.
2083முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) என் சொன்னோம் ஆனோம் – ஒரு கார்யாத் காரண அநு மானம் கொண்டு நிச்சயிக்க வேண்டும்படியாய் இருந்ததோ – அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்கள் கிடக்கச் செய்தே -என்கிறார் 2
என்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது,
ஒன்று மதனை யுணரேன் நான், – அன்று
தடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி, இதுநீ
படைத்திடந் துண்டுமிழ்ந்த பார்.
கடல் கடைந்தது,Kadal Kadaindhathu - (தேவர்களுக்காகக்) கடலைக் கடைந்தது
2083முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) என் சொன்னோம் ஆனோம் – ஒரு கார்யாத் காரண அநு மானம் கொண்டு நிச்சயிக்க வேண்டும்படியாய் இருந்ததோ – அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்கள் கிடக்கச் செய்தே -என்கிறார் 2
என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது
ஒன்றும் அதனை யுணரேன் நான் -அன்று அது
அடைத்து உடைத்துக் கண் படுத்த வாழி இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார்
என்று,Enru - எந்த நாள்?
நீர் ஏற்றது,Neer Aetrathu - (மாவலி) தாரை வார்த்து தத்தஞ் செய்யப்பெற்றது
எ உலகம்,E Ulagam - எந்த உலகம்?
அதனை,Adhanai - அவற்றை
நான் ஒன்றும் உணரேன்,Naan Ondrum Unaraen - நான் அடியோடு அரிகின்றிலேன்;
அது,Adhu - அந்தக் கடலானது
அன்று,Andru - ஸ்ரீராமாவதார காலத்தில்
அடைத்து,Adaiththu - மலைகளைக்கொண்டு திருவணைகட்டித் தூர்த்து
உடைத்து,Udaiththu - (இராவணனை முடித்துத் திரும்புங்கால் அந்தத் திருவணையை) உடைத்து.
கண்படுத்த,Kanpadutha - எப்போதும் பள்ளிகொள்ளுமிடமாகக் கொண்டிருக்கப்பெற்ற
ஆழி,Aazhi - ஸமுத்ரமாம்;
இது,Idhu - (நீரேற்றுப்பெற்ற) இவ்வுலகமானது
நீ,Nee - ஸர்வேச்வரனான உன்னாலே
படைத்து,Padaiththu - ஸ்ருஷ்டிக்கப்பட்டும்
இடந்து,Idandhu - (வராஹாவதார காலத்தில் அண்டபித்தியில் நின்று) ஒட்டு விடுவித்தெடுக்கப்பட்டும்
உண்டு,Undu - (பிரளய வெள்ளம் கோத்தபோது) திருவயிற்றிலே வைத்துப் பாதுகாக்கப்பட்டும்
உமிழ்ந்த,Umizhndha - பின்பு வெளிப்படுத்தப்பட்டதுமான
பார்,Paar - பூமியாகும்.
2084முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இவ்வோவ பதானங்கள் எல்லாம் வேணுமோ -இதுக்கு அவனே நிர்வாஹகன் என்கைக்கு அதி மானுஷமான இது ஒரு செயலும் அமையாதா என்கிறார் 3
பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –சூருருவின்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்
நீயளவு கண்ட நெறி
ஓர் அடி,Oor Adi - ஒரு திருவடியை
பார் அளவும் வைத்து,Paar Alavum Vaiththu - பூமிப்பரப்பு உள்ளவரையிலும் போரும்படி வைக்க
ஓர் அடியும்,Oru Adiyum - மற்றொரு திருவடியும்
பார் உடுத்த,Paar Uduththa - இந்த அண்ட கடாஹத்தைச் சூழ்ந்துகொண்டிருக்கிற
நீர் அளவும்,Neer Alavum - ஆவரண ஜலம் வரையில்
செல்ல,Sella - செல்லும்படி
நிமிர்ந்தது,Nimirndhadhu - ஓங்கிற்று;
சூர் உருவின் பேய்,Soor Uruvin Pei - தெய்வமகளான யசோதையின் வடிவுகொண்டு வந்த பூதனையை
அளவுகண்ட பெருமான்,Alavukanda Perumaan - முடித்த ஸ்வாமியியே!
நீ அளவு கண்டநெறி,Nee Alavu Kandanerhi - நீ உலகளந்த விதத்தை
அறிகிலேன்,Arikilain - அளவிட்டுக் காணவல்ல அறிவுடையேனல்லேன்.
2085முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவன் தான் தந்த வெளிச் சிறப்பு உடைய நான் இன்னும் நீச்சு நீரிலே புக்கப் போலே அலமரா நிற்க நாலு நாள் மூக்குப் புதைத்த வேற்றம் கொண்டு ஒருவன் இவ் வஸ்துவை ஸ்வ யத்னத்தாலே காண ஒருப்படுவதே – என்ன அறியானை தான் -என்கிறார் 4
நெறி வாசல் தானேயாய் நின்றானை யைந்து
பொறி வாசல் போர்க்கதவம் சாத்தி அறிவானாம்
ஆலமர நீழல் அறம் நால்வர்க்கு அன்றுரைத்த
ஆலமர் கண்டத் தரன்
அன்று,Andru - முன்பொரு காலத்தில்,
ஆலமரம் நீழல்,Aalamaram Neezhal - ஆலமரத்தின் நிழலிலே (இருந்துகொண்டு)
நால்வர்க்கு,Naalvarkku - அகஸ்தியர்,புலஸ்தியர், தக்ஷர், மார்க்கண்டேயர் என்கிற நான்கு சிஷ்யர்களுக்கு
அறம் உரைத்த,Aram Uraitha - தருமோபதேசம் செய்தவனும்
ஆலம் அமர் கண்டத்து,Aalam Amar Kandathu - விஷத்தைக் கழுத்தளவிலே அடக்கிக்கொண்டுள்ளவனுமான
அரன்,Aran - சிவன்
ஜந்து பொறி வாசல்,Jandhu Pori Vaasal - செவி வாய் கண் மூக்கு உடல் என்கிற ஐந்து இந்திரியங்கள் செல்லும்வழியில்
போர் கதவம் சார்த்தி,Por Kadhavam Saartthi - வலிய கதவுகளையிட்டு அடைத்து [இந்திரியங்கள் பட்டிமேய வொண்ணாதபடி அவற்றை வென்று]
நெறிவாசல் தானே ஆய் நின்றானை,Nerivaasal Thaaney Aay Nindraanai - உபாயமும் உபேயமும் தானேயாயிருக்கிற எம்பெருமானை
அறிவான் ஆம்,Arivaan Aam - அறிந்து விட்டதாகச் செருக்குற்றிருக்கிறானே! (இஃது என்ன அறிவு கேடு!.)
2086முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஆகக் கீழ் – எல்லாம் கூட அவனே சர்வேஸ்வரன் என்று சொல்லிற்றாய் நின்றது இனி – அல்லாதாருடைய அநீஸ்வரத்வம் சொல்ல வேண்டி வருமே அதுக்கு உறுப்பாக அல்லாதார் உடைய அநீஸ்வரத்வம் சொல்லுகிறார் மேல் அறிவானாம் -என்று நீர் ருத்ரனை ஷேபியா நின்றீர் நாட்டார் அவனையும் ஈஸ்வரனாக அன்றோ பிரதிபத்தி பண்ணிப் போருகிறது -என்ன இன்னான் ஈஸ்வரன் – இன்னான் ஈஸ்வரன் அல்லன் -என்னும் இடம் அவர்கள் உடைய ஸ்வ பாவங்கள் கொண்டே அறியலாம் – என்கிறார் – 5
அரன் நாரணன் நாமம் ஆன்விடைபுள்ளூர்த்தி,
உரைநூல் மறையுறையும் கோயில், – வரைநீர்
கருமம் அழிப்பளிப்புக் கையதுவேல் நேமி,
உருவமெரி கார்மேனி ஒன்று.
நாமம்,Naamam - ஒருவனுடைய பெயர்
அரன்,Aran - எல்லாவற்றையும் அழிப்பதையே தொழிலாகவுடையவனென்று காட்டுகிற ஹரனென்பது;
நாரணன்,Naarayanan - (மற்றொரு மூர்த்தியின் திருநாமமோ வென்னில்) (ஸர்வவ்யாபகனென்றும் ரக்ஷகனெனெறும் காட்டுகிற) நாராயணனென்பது
ஊர்தி,Ooruthi - ஒருவனுடைய வாஹனம்
ஆன்விடை,Aanvidai - மூடத்தனத்துக்கு உதாரணமாகக் காட்டப்படுகிற எருதாம்;
புள்,Pul - (மற்றொரு மூர்த்தியின் திருநாமமோ வென்னில்) (வேதமூர்த்தியான) கருடப்பறவையாகும்;
உரை,Urai - ஒருவனைப்பற்றிச் சொல்லுகிற பிரமாணம்
நூல்,Nool - மனிசரால் ஆக்கப்பட்ட ஆகமம்;
மறை,Marai - (மற்றொரு மூர்த்தியைப்பற்றிச் சொல்லுகிற பிரமாணமோ வென்னில்) (ஸ்வயம்வ்யக்தமான) வேதமாகும்;
உறையும் கோவில்,Urayum Kovil - ஒருவனுடைய வாஸஸ்தானம்
வரை,Varai - (கடினத்தன்மையுள்ள) கைலாசமலையாம்;
நீர்,Neer - (மற்றொரு மூர்த்தியின் இருப்பிடமோ வென்னில்) (அவனுடைய நீர்மைக்குத் தகுதியான) திருப்பாற்கடலாம்;
கருமம்,Karumam - ஒருவனுடைய தொழில்
அழிப்பு,Azhippu - (கல்நெஞ்சனென்று சொல்லும்படியான) ஸம்ஹாரத்தொழிலாம்;
அளிப்பு,Azhippu - (மற்றொரு மூர்த்தியின் காரியமோ வென்னில்) (இன்னருளுக்குரிய) ரக்ஷணத் தொழிலாம்;
கையது,Kaiyadhu - ஒருவனுடைய கையிலுள்ள அயுதம்.
வேல்,Veel - (கொலைத்தொழிலுக்கு ஏற்ற) சூலாயுதம்;
நேமி,Nemi - (மற்றொரு மூர்த்தியின் ஆயுதமோ வென்னில்) அருளார் திருச்சக்கரம்
உருவம்,Uruvam - வடிவம்
எரி,Eri - (கண்கொண்டு காண வொண்ணாதபடி) காலாக்நி போன்றதாம்;
கார்,Kaar - (மற்றொரு மூர்த்தியின் திருமேனியோ வென்னில்) (கண்டபோதே தாபங்களெல்லாம் தீரும்படியான) காளமேகவுருவாம்;
ஒன்று,Ondru - சிவனாகிய ஒருவன்
மேனி,Meeni - (ஸ்ரீமந் நாராயணனுக்கு) சரீர பூதன்; [ஸ்ரீமந்நாராயண மூர்த்தியோ அந்த சிவனுமுட்பட எல்லாவற்றையும் சரீரமாக வுடையவனென்பது ஸித்தம்]
2087முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அறிவானாம் என்றும் சரீரதயா சேஷ பூதன் -என்றும் ருத்ரனைச் சிரிக்கிற நீர் தாம் சேஷ பூதர் அன்றோ – நீர் பின்னை அவனை எங்கனே அறிந்த படியும் உபதேசிக்கிற படியும் என்ன அவன் தனக்கு சத்வம் தலை எடுத்த போது அவனை உள்ளபடி அறியும் அல்லாத போது ரஜஸ் தமஸ் ஸூ க்களாலே அபி பூதனாய் தான் அதிகரித்த கார்யத்தை புத்தி பண்ணி ஈஸ்வரோஹம் -என்று இருக்கும் எனக்கு அங்கன் அன்றிக்கே அவன் தான் காட்டக் கண்டேன் ஒருவன் ஆகையாலே எனக்கு ஒரு காலும் விஸ்ம்ருதி இல்லை என்கிறார் 6
ஓன்று மறந்து அறியேன் ஓதம் நீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ வேழைகாள் -அன்று
கருவரங்கத் துட்கிடந்து கை தொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை
அன்று,Andru - அறிவு நடையாடுகைக்கு யோக்யதை யில்லாத காலத்திலே
கரு அரங்கத்துள் கிடந்து,Karun Arangaththul Kidandhu - கர்ப்பப்பையாகிற ஸ்தானத்திலே இருந்துகொண்டு,
திருஅரங்கம்மேயான்,Thiruarangammeeyan - ஸ்ரீரங்கத்திலே வந்து பள்ளி கொண்டிரா நின்ற பெரிய பெருமாளுடைய
திசை,Thisai - ஸ்வபாவங்களையெல்லாம்
கண்டேன்,Kandein - ஸாக்ஷாத்கரித்தவனாய்
கைதொழுதேன்,Kaithozhuthen - அஞ்ஜலியும் செய்தவனாகிய நான்
ஓதம் நீர் வண்ணனை,Otham Neer Vannana - வெள்ளம் பரந்த ஸமுத்ரஜலம்போலே குளிர்ந்த வடிவழகுள்ள அப்பெருமானை.
ஒன்றும் மறந்து அறியேன்,Ondrum Marandhu Ariyeen - க்ஷணகாலமும் மறந்தறிய மாட்டேன்:
ஏழைகாள்,Ezhaikaal - (விஷயாந்தரங்களை விரும்பித்திரிகிற) அறிவு கேடர்களே!
நான்,Naan - (அவனை மறக்கக்கூடிய கர்ப்பஸ்தானத்திருக்கச் செய்தேயும் மறவாதிருந்த) தான்.
இன்று,Inru - (மறக்க முடியாதபடி ஞானவிகாஸம் பெற்ற இக்காலத்திலே)
மறப்பனே,Marappane - எப்படி மறப்பேன் [மறக்கவே மாட்டேன்.]
2088முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஆக நீர் அவனையே ஆஸ்ரயணீயன் என்னா நின்றீர் பார்த்த பார்த்த இடம் எங்கும் ஆஸ்ரயிப்பாரும் ஆஸ்ரயணீயாருமாய் அன்றோ கிடக்கிறது -என்ன அவை எல்லாம் அவன் தானே காட்ட நான் கண்டாப் போலே காண்கை அன்றிக்கே தாம் தாமே காண நினைப்பார் – தன்னை வந்து கிட்டாமைக்கு அவன் பண்ணின மயக்கு -என்கிறார் தேபி மாமேவ கௌந்தேய யஜந்தி அவிதி பூர்வகம் -கீதை -9-23- யேऽப்யந்யதேவதாபக்தா யஜந்தே ஸ்ரத்தயாந்விதா: தேऽபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதிபூர்வகம்–கீதை -9-23- கௌந்தேய-குந்தியின் மகனே, யே பக்தா-எந்த பக்தர்கள், ஸ்ரத்தயா அந்விதா: அபி-நம்பிக்கையுடன் கூடியவர்களாக இருந்த போதிலும், அந்ய தேவதா: யஜந்தே-மற்ற தேவதைகளை வழிபடுகிறார்களோ, தே அபி அவிதி பூர்வகம்- அவர்களும் விதிமுறைப்படி அல்லாமல் (அஞ்ஞானத்துடன்), மாம் ஏவ யஜந்தி-என்னையே தொழுகின்றனர். அந்நிய தேவதைகளை நம்பிக்கையுடன் தொழும் அன்பரும், குந்தியின் மகனே, விதி வழுவி என்னையே தொழுகின்றனர். சிரத்தையோடு கூடியிருத்தல் என்பது ஆஸ்திக்ய புத்தியுடைத்திருத்தல் அல்லது தெய்வம் துணைபுரியும் என்ற நம்பிக்கையுடனிருத்தலாம். அக்ஞானத்தால் விதிவழுவிச் செய்யும் செயல் அவிதிபூர்வகம் எனப்படுகிறது. மம மாயா துரத்த்யயா -கீதை -7-14- தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே–கீதை -7-14- ஹி ஏஷா குணமயீ மம தைவீ மாயா-ஏனெனில் இந்த குணமாகிய எனது தேவமாயை, துரத்யயா-கடத்தற்கரியது, யே மாம் ஏவ ப்ரபத்யந்தே-யாவர் என்னையே சரணடைவரோ, தே ஏதாம் மாயாம், தரந்தி-அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள். இந்த குணமாகிய எனது தேவமாயை கடத்தற்கரியது. என்னையே யாவர் சரணடைவரோ அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள். 7
திசையும் திசையுறு தெய்வமும் தெய்வத்
திசையும் கருமங்கள் எல்லாம் அசைவில் சீர்க்
கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத
வண்ணன் படைத்த மயக்கு
திசையும்,Thisaiyum - திக்குக்களோடு கூடிய உலகங்களும்
திசைஉறு தெய்வமும்,Thisaiyuru Theivamum - அந்தந்த திசைகளிலே வாழும் தேவதைகளும்
தெய்வத்து இசையும் கருமங்கள்,Theivathu Isaiyum Karumangal - அந்தந்த தேவதைகளுக்கு ஏற்ற (ஸ்ருஷ்டி முதலிய) வியாபாரங்களும்
எல்லாம்,Ellam - ஆகிய இவையெல்லாம்,
அசைவு இல்சீர்,Asaivu Ilseer - கேடில்லாத [நித்யமான] குணங்களையுடைய
கண்ணன்,Kannan - ஸ்ரீகிருஷ்ணனாயவதரித்த
நெடு மால்,Nedu Maal - மிகப் பெருமையையுடையவனாய்
கடல் கடைந்த,Kadal Kadaindha - (தன்பெருமையைப் பாராது சரணா கதர்களுக்காக உடம்புநோவக்) கடல் கடைந்தவனாய்
கார் ஓதம் வண்ணன்,Kaar Oodham Vannan - மேகம் போலவும் கடல் போலவும் குளிர்ந்த வடிவையுடையவனான எம்பெருமான்
படைத்த,Padaitha - (தன்னிடம் வந்து பணியமாட்டா தவர்களை அகற்றுகைக்காக உண்டாக்கிவைத்த
மயக்கு,Mayakku - அறிவை மயக்கும் பொருள்களாம்.
2089முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஆக இப்படி மதி மயங்கி எல்லாரும் தன்னை அறியாதே போம் இத்தனையோ -என்னில் அது செய்வது சாதாரண விஷயத்தில் ஆஸ்ரித விஷயத்தில் அசத்திய பிரதிஜ்ஞ்ஞனாய்க் கொண்டு அவர்கள் பக்கல் தன் பஷ பாதம் தோற்றக் கார்யம் செய்யும் என்கிறார் 8
மயங்க வலம் புரி வாய் வைத்து வானத்
தியங்கு மெரி கதிரோன் தன்னை முயங்க மருள்
தோராழி யால் மறைத்த தென் நீ திரு மாலே
போராழிக் கையால் பொருது
திருமாலே நீ,Thirumaale Nee - லஷ்மீநாதனே!, நீ
முயங்கு அமருள்,Muyangu Amarul - (எண்ணிறந்த மன்னர்கள்) நெருங்கிக் கிடந்த பாரதப் போர்க்க்களத்திலே
மயங்க,Mayanga - எதிரிகள் அஞ்சி அறிவு கலங்கும்படியாக்
வலம்புரி,Valampuri - ஸ்ரீபாஞ்சஜந்ய மென்னும் திருச்சங்கை
வாய் வைத்து,Vaai Vaiththu - தனது திருப்பவளத்திலே வைத்து ஊதி
போர் ஆழிகையால்,Por Azhikayal - போர்செய்வதற்கு உபகரணமான திருவாழியை ஏந்தின கையாலே
பொருது,Poruthu - (பீஷ்மர் முதலானவர்களைத் துரத்தி) யுத்தம் செய்து
வானத்து இயங்கும் எறி கதிரோனை,Vaanaththu Iyanguum Eri Kathironae - ஆகாயத்தில் ஸஞ்சரித்துக் கொண்டேயிருக்கிற ஸூர்யனை
தேர் ஆழியால்,Thaer Aazhiyaal - சக்கராயுதத்தினால்
மறைத்தது என்,Maraiththathu En - மறைத்தது எதுக்காக?
2090முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இவ்வளவே அன்று கிடீர் – ஆபத்து வந்தால் ஆஸ்ரித அநாஸ்ரித விபாகம் அறத் தன்னை அழிய மாறியும் காரியம் செய்யும் ஸ்வபாவங்கள் கிடீர் என்கிறார் 9
பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன்
ஒரு கோட்டின் மேல் கிடந்த தன்றே விரி தோட்ட
சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க
மாவடிவின் நீ யளந்த மண்
விரி தோட்ட,Viri Thoatta - ஒளி விரிகின்ற திருக்குண்டலங்களை அணிந்துள்ளவனே!
சே அடியை நீட்டி,Sae Adiyai Neetti - செந்தாமரை போன்ற திருவடிகளை வளரச் செய்து
திசை நடுங்க,Thisai Natunga - பூதலத்திலுள்ளவர்கள் நடுங்கும்படியாகவும்
விண் துளங்க,Vin Thulangka - மேலுலகங்களிலுள்ளவர்கள் நடுங்கும்படியாகவும்
மா வடிவில்,Maa Vadivil - (திரிவிக்கிரமனாக வளர்ந்த) பெரிய உருவத்தோடு
நீ அளந்த,Nee Alandha - நீ அளந்து திருவடி கீழ் இட்டுக்கொண்ட
மண்,Man - பூமியானது,
பொருகோடு ஓர் ஏனம் ஆய்,Porukodu Oor Aenam Aay - நிலத்தைக்குத்தியெடுத்துக்கொண்டுதிரிகிற கோரப்பற்களையுடைய விலக்ஷணமான வராஹ மூர்த்தியாய்
புக்கு,Pukku - (பிரளயஜலத்திலே முழுகி)
இடந்தாய்க்கு அன்று,Idandhaaykku Andru - அண்டபித்தியில் நின்றும் இந்தப் பூமியைக் குத்தியெடுத்துக் கொண்டுவந்த அக்காலத்தில்
உன்,Un - உன்னுடைய
ஒரு கோட்டின்மேல்,Oru Kottinmael - ஒரு கோரப்பல்லின் ஏகதேசத்திலே
கிடந்தது அன்றே,Kidandhathu Andrae - அடங்கிக்கிடந்த தல்லவோ?
2091முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) பெரிய வடிவைக் கொண்டு சிறிய செயலைச் செய்த படி சொல்லிற்று கீழ் இங்குச் சிறிய வடிவைக் கொண்டு பெரிய செயலைச் செய்தபடி சொல்லுகிறது 10
மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய்யன்பர் எண்ணில்
அலகளவு கண்ட சீராழி யாய்க்க்கு அன்றிவ்
வுலகளவும் உண்டோ வுன் வாய்
மண்ணும்,Mannum - பூமியும்
மலையும்,Malaiyum - குலபர்வதங்களும்
மறிகடலும்,Marikadalum - அலையெறிகிற ஸமுத்ரங்களும்
மாருதமும்,Maaruthamum - காற்றும்
விண்ணும்,Vinnum - ஆகாசமும் ஆகிய இவற்றை யெல்லாம்
விழுங்கியது,Vilunkiyatu - (உனது திருவயிற்றின் ஒரு மூலையிலே அடங்கும்படி) அமுது செய்ததை
மெய் என்பர்,Mei Enbar - ஸத்யமாகச் சொல்லுவர்கள் (வைதிகர்கள்);
எண்ணில்,Ennil - இதனை ஆராயுமளவில்
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு உன் வாய்,Alaku Alavu Kanta Sir Aliyaykku Un Vay - அளவிடுதற்கு உறுப்பான எண்ணிக்கைகளை யெல்லாம் எல்லை கண்டிருக்கிற [-எண்ணிறந்த] கல்யாண குணங்களுக்குக் கடல் போன்றவனான உன்னுடைய வாயானது
அன்று,Andru - இவற்றை யெல்லாம் விழுங்கின வக்காலத்தில்
இஉலகு அளவும் உண்டோ,Iulaku Alavum Undoo - இந்த ஜகத்தளவு விசாலமாகவும் இருந்திருக்குமோ?
2092முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படி சர்வ ரஷகனானவனை ஒழிய நான் மற்று எங்கேனும் போகிலும் -என்னுடைய இந்த்ரியங்கள் ஆனவை அவனை ஒழிய வேறு சிலரை ஸ்தோத்ரம் பண்ணாது -என்கிறார் அவன் ஜகத் ரஷணத்தில் நின்றும் மீளாதாப் போலே இவருடைய இந்த்ரியங்களும் அவனை விட்டு மீளா – அல்லாதார்க்கு அவன் பக்கலிலே இந்த்ரியங்களை மூட்டுகைக்கு உள்ள அருமை போரும் இவர்க்கு அகற்றுகைக்கு 11
வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம்
தாயவனை அல்லது தாந்தொழ பேய் முலை நஞ்
சூணாக வுண்டான் உருவோடு பேர் அல்லால்
காணாக் கண் கேளா செவி
வாய், Vaai - எனது வாயானது
அவனை அல்லது, அவனை அல்லது - ஸர்வேச்வரனைத் தவிர
வாழ்த்தாது, வாழ்த்தாது - (மற்றொன்றைப்) புகழாது;
கை தாம், கை தாம் - கைகளானவை
உலகம் தாயவனை அல்லது தொழா, உலகம் தாயவனை அல்லது தொழா - உலகங்களைத்தாவியளந்துகொண்ட திரு விக்கிரமனை யல்லது வேறொருவனைத் தொழமாட்டா;
பேய் முலை நஞ்சு, பேய் முலை நஞ்சு - பேயான பூதனையின் முலைகளில் தடவியிருந்த விஷத்தை
ஊண் ஆக, ஊண் ஆக - உணவாக
உண்டான், உண்டான் - அமுது செய்த கண்ண பிரானுடைய
உருவொடு பேர் அல்லால், உருவொடு பேர் அல்லால் - திருமேனியையும் திருநாமத்தையு மல்லது (மற்றெதையும்)
கண் கணா செவி கேளா, கண் கணா செவி கேளா - கண்கள் காணமாட்டா; காதுகள் கேட்கமாட்டா.
2093முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) கீழே சர்வ சமாஸ்ரயணீயன் அவனே என்றார் – இங்கு ஆஸ்ரயணீயத்துக்கு அநுரூபமான சாதனம் இன்னது என்று பக்தியை விதிக்கிறார் 12
செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே
ஏனமாய் நின்றார்க்கு இயல்வு
ஏனம் ஆய் நின்றாற்கு, ஏனம் ஆய் நின்றாற்கு - வராஹாவதாரம் செய் தருளித் தானே காரியங்களை கடத்துகிற பெருமானைப் பெறுவதற்கு
செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும், செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் - (இயல்வு ஏற்ற ஸாதனமாவது-,) செவிதொடக்கமாகச் சொல்லப்படுகிற ஞானேந்திரியங்கள் ஐந்தும்
செம் தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும், செம் தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் - தேஜஸ் முதலான பஞ்ச பூதங்களினாலியன்ற தேஹமும்
அவியாத ஞானமும், அவியாத ஞானமும் - (இந்தக் கரண களேபரங்களாலே ஸாதிக்கப் படுவதாய்) இடை விடாது எம்பெருமானைச் சிந்திப்பதான பக்தியும்
வேள்வியும், வேள்வியும் - அந்த பக்தி உண்டாகி வளர்வதற்குக் காரணமான அக்நிஹோத்ரம் முதலிய சடங்கும்
நல் அறமும், நல் அறமும் - (நாடோறும் பக்தியை வளர்க்கக் கடவதான) விவேகம் முதலிய நற்குணங்களும்
இயல்வு என்பரே, இயல்வு என்பரே - ஸாதனங்கள் என்று சொல்லுகிறார்களே (இது தகுதியோ? என்றவாறு)
2094முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) வாய் அவனை அல்லாது வாழ்த்தாது -என்னும் படியாய் இருந்தது உம்மது அல்லாதார்க்கு அவனை ஆஸ்ரயிக்கும் போது அவதானம் வேணும் எங்கனே கூடுமோ என்னில் ப்ரக்ருத்யா ஆஸ்ரயித்து இருக்கிறவர்கள் நித்ய ஸூரிகள் அல்லாதாரும் யதா சக்தி ஆஸ்ரயிக்கும் படிக்கு ஈடாகத் தானே பிரதம பாவியாம் – என்கிறது 13
இயல்வாக யீன் துழாயான் அடிக்கே செல்ல
முயல்வார் இயல் அமரர் முன்னம் -இயல்வாக
நீதியால் ஓதி நியமங்களால் பரவ
ஆதியாய் நின்றார் அவர்
ஈன் துழாயான் அடிக்கே செல்ல இயல்வு ஆக, ஈன் துழாயான் அடிக்கே செல்ல இயல்வு ஆக - அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமானது திரு வடிகளில் கிட்டுதற்குத் தகுதியாக
முன்னம், Munnam - அநாதிகாலமாக
முயல்வார், முயல்வார் - முயற்சி செய்பவர்கள்
இயல் அமரர், இயல் அமரர் - (யாரென்றால்) யோக்யதையுள்ள நித்ய ஸூரிகளேயாவர்;
இயல்வு ஆக, இயல்வு ஆக - (நம்போன்றவர்களும் அவனை இழக்க வேண்டாதபடி) பொருத்தமாக
நீதியால் ஓதி, நீதியால் ஓதி - முறைமை தவறாமல் வேதத்தை அத்யயனம் செய்து
நியமங்களால் பரவ, நியமங்களால் பரவ - (அந்தவேதத்தின் பொருளை உணர்ந்து அதிற் சொன்ன நியமங்களோடே தன்னைத் துதி செய்யுமாறு
அவர், அவர் - அந்த எம்பெருமான்
ஆதி ஆய் நின்றார், ஆதி ஆய் நின்றார் - முற்பட்டு ஸித்தராக இருக்கின்றார்.
2095முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவன் முற்பாடனுமாய் ருசி ஜனகனுமாய் இருக்கச் செய்தே சம்சாரிகள் புறம்பே சிலரை ஆஸ்ரயணீயராகக் கொண்டு போரா நின்றார்களே என்னில் அவர்கள் அப்படிச் செய்தார்களே யாகிலும் அந்த ஆஸ்ரயணீயர் தங்களுக்கும் ஆஸ்ரயணீயர் சர்வேஸ்வரனே –என்கிறார் 14
அவரவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி
இவர் இவர் எம்பெருமான் என்று சுவர் மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த
மூர்த்தி யுருவே முதல்
அவர் அவர், அவர் அவர் - ராஜஸரும் தாமஸருமாகிய சில அதிகாரிகள்
தாம் தாம் அறிந்த ஆறு ஏத்தி, தாம் தாம் அறிந்த ஆறு ஏத்தி - (தங்களுடைய ரஜஸ்தமோ குணங்களுக்குத்தக்கபடி) தாங்கள் எப்படி அறிந்திருக்கிறார்களோ அப்படி வாய்விட்டுப் புகழ்ந்து
இவர் இவர் எம்பெருமான் என்று, இவர் இவர் எம்பெருமான் என்று - தாங்களறிந்த சில தேவதாந்தரங்களையே கடவுளாகச் சொல்லிக் கொண்டு
சுவர்மிசை சார்த்தியும், சுவர்மிசை சார்த்தியும் - சுவரிலே சித்திர ரூபமாக எழுதியும்
வைத்தும், வைத்தும் - பிரதிமையாக ஆங்காங்கு ஸ்தாபித்தும்
தொழுவர், தொழுவர் - தொழுகின்றார்கள்;
உலகு அளந்த மூர்த்தி, உலகு அளந்த மூர்த்தி - (எவர் என்ன செய்தாலும்) (எல்லாத் தெய்வங்களும் தன் காலின் கீழே அடங்கும்படி) உலகங்களை யளந்த ஸ்வாமியினுடைய
உருவே, உருவே - திருமேனியொன்றே
முதல், முதல் - முக்கியமானது
2096முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) நீர் அவனையே பிரதானனாகச் சொல்லா நின்றீர் – நாட்டிலே சிலரைச் சிலர் ஆஸ்ரயிக்கையும் அவர்கள் அவர்களுக்குப் பல பிரதானம் பண்ணுகையுமாய் அன்றோ இருக்கிறது -என்ன அவர்கள் அங்கனே செய்தார்களே யாகிலும் அவை யடங்க வ்யர்த்தம் -என்கிறா 15
முதலாவார் மூவரே அம்மூவருள்ளும்
முதலாவான் மூரி நீர் வண்ணன் -முதலாய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப்
பல்லார் அருளும் பழுது
மூவரே, மூவரே - (உலகத்தில் பலபல தெய்வங்கள் வழங்கப்பட்டாலும்) ஸ்ருஷ்டிஸ்திதி (ஸம்ஹாரங்களுக்கு உரியவரான) பிரமன் விஷ்ணு ருத்ரன் என்கிற மூவருமே
முதல் ஆவார், முதல் ஆவார் - முக்கியரான தேவர்களாவார்;
அம்மூவர் உள்ளும், அம்மூவர் உள்ளும் - அந்த த்ரிமூர்த்திகளுக்குள்ளே
மூரி நீர் வண்ணன், மூரி நீர் வண்ணன் - கடல் வண்ணனாகிய திருமாலே
முதல் ஆவான், முதல் ஆவான் - தலைவனாயிருப்பவன்;
முதல் ஆய, முதல் ஆய - உலகுக்கெல்லாம் காரண பூதனும்
நல்லான், நல்லான் - நற்குணங்களமைந்தவனுமான அப்பெருமானுடைய
அருள் அல்லால், அருள் அல்லால் - கிருபையானது நன்மையை விளைக்குமேயொழிய
நாமம்நீர் வையகத்து, நாமம்நீர் வையகத்து - கடல்சூழ்ந்த இப்பூமியில்
பல்லார், பல்லார் - அத்திருமால் தவிர மற்றும் பலருடைய
அருளும், அருளும் - தயையும்
பழுது, பழுது - பயனற்றதாம்
2097முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) நான் இவ் விஷயத்தை நெடுங்காலம் உபாயாந்தரங்களிலும் தேவதாந்த்ரங்களிலும் பிரவணனாய் இழந்தேன் கிடீர் என்று சோகிக்கிறார் 16
பழுதே பலபகலும் போயின வென்று அஞ்சி
அழுதேன் அரவணை மேல் கண்டு தொழுதேன்
கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண்
அடலோத வண்ணரடி
கடல் ஓதம், கடல் ஓதம் - கடலலையானது
கால், கால் - தன்திருவடி வாரத்திலே
அலைப்ப, அலைப்ப - (துடைதட்டி உறங்கச் செய்வதுபோல) வீச
கண்வளரும், கண்வளரும் - யோகநித்திரை செய்கின்ற
செம்கண், செம்கண் - செந்தாமரை போன்ற திருக்கண்களையுடையவரும்
அடல் ஓதம் வண்ணர், அடல் ஓதம் வண்ணர் - அநுபவிக்க இழிந்தவர்களை அநுபவிக்கவொட்டாமல் அடர்கின்ற செளந்தரியமாகிற அலைகளோடு கூடிய வடிவையுடையவருமான பெருமாளுடைய
அடி, Adi - திருவடிகளை
அரவு அணை மேல், Aravu Anai Mel - சேஷசயனத்தின் மீது
கண்டு தொழுதேன், கண்டு தொழுதேன் - கண்ணாரக்கண்டு (இன்று) ஸேவிக்கப்பெற்ற அடியேன்
பல பகலும், பல பகலும் - “கீழ்க்கழிந்த கால மெல்லாம்
பழுதே போயின என்று, பழுதே போயின என்று - (இவ்விதமாகக் கழியாமல்) வீணாகக் கழிந்தனவே!” என்று
அஞ்சி அழுதேன், அஞ்சி அழுதேன் - மிகவும் சோகமுற்றுக் கிடக்கின்றேன்.
2098முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) திருப் பாற் கடலிலே போய்க் கிட்ட வேண்டும்படி தூரமாய் நான் இழந்தேனோ அவன் தானே வந்து சந்நிஹிதனாகச் செய்தே கிடீர் நான் இழந்தது – என்கிறார் – சம்சாரத்தில் நினைத்த படி எல்லாம் அநுபவிக்கப் போமோ – பரம பதத்தில் போனால் அன்றோ அனுபவிக்கலாவது -என்ன இங்கே வெள்ளம் இட்ட வன்று பெற்றேனோ -என்கிறார் 17
அடியும் படிகடப்பத் தோள் திசை மேல் செல்ல
முடியும் விசும்பும் அளந்தது என்பர் வடியுகிரா
லீர்ந்தான் இரணியன தாகம் இருஞ்சிறைப் புள்
ளூர்ந்தான் உலகளந்த நான்று
இரணியனது, Iraniyanadhu - ஹிரண்யாஸுரனுடய
ஆகம், Aagam - மார்வை
வடி உகிரால், வடி உகிரால் - கூர்மையான நகங்களாலே
ஈர்ந்தான், ஈர்ந்தான் - கிழித்தெறிந்தவனும்
இரு சிறை புன் ஊர்ந்தான், இரு சிறை புன் ஊர்ந்தான் - பெரிய சிறகையுடைய கருடனை ஏறிநடத்து பவனுமாகிய எம்பெருமான்
உலகு அளந்த நான்று, உலகு அளந்த நான்று - உலகளந்த காலத்திலே
அடியும், அடியும் - திருவடி
படி கடப்ப, படி கடப்ப - பூமியை அளந்துகொள்ள
தோள், Thol - திருத்தோள்கள்
திசைமேல் செல்ல, திசைமேல் செல்ல - திக்குகளிலே வியாபிக்க
முடியும், முடியும் - கிரீடம்
விசும்பு, விசும்பு - மேலுலகத்தை
அளந்தது, அளந்தது - அளவுபடுத்திக்கொண்டது
என்பர், Enbar - என்று சொல்லுவர்கள். (ஐயோ! நான் நேரில் ஸேவிக்கப் பெறவில்லையே!!)
2099முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) திருப் பாற் கடல் ஏறப் போக வேண்டுதல் – திரு வுலகு அளந்து அருளின இடத்து ஏறப் போதல் செய்து நான் இழந்தேனோ – அதுக்கும் இவ்வருகே போந்து கிருஷ்ணனாய் வந்து வவதரிக்கச் செய்தே கிடீர் நான் இழந்தது என்கிறார் – வரையாதே தீண்டிப் பரிமாறுகையும் அழகும் ஐஸ்வர்யமும் பஷபாதமும் உள்ளிட்டவை திரு உலகு அளந்து அருளின் இடத்துக்கும் கிருஷ்ணாவதாரத்துக்கும் ஒத்து இருக்கும் 18
நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய்
தோன்ற வுண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றிப்
பொருதுடைவு கண்டானும் புள்ளின் வாய் கீண்டானும்
மருதிடை போய் மண்ணளந்த மால்
நான்ற முலைத் தலை, நான்ற முலைத் தலை - (பேய்ச்சியான பூதனையினுடைய) சரிந்து தொங்குகின்ற முலையிலுள்ள
நஞ்சு, Nanju - விஷத்தை
உண்டி, உண்டி - (அவள் பிணமாய் விழும்படி) அமுது செய்து
உறி, உறி - உறிகளிலே வைத்த
வெண்ணெய், Vennai - வெண்ணெயை(க் களவு செய்து)
தோன்ற, தோன்ற - இச்செயல் எங்கும் ப்ரஸித்தமாம்படி
உண்டான், உண்டான் - அமுது செய்தவனாகி
வென்றி, Vendri - ஜயத்தையுடைய
சூழ், Sool - எதிர்ப்பவர்களைத் தப்பாமல் தன் கையில் அகப்படுத்திக்கொள்ளவல்ல
களிற்றை, களிற்றை - (கம்ஸனுடைய) யானையை
ஊன்றி பொருது, ஊன்றி பொருது - எதிர் நின்று யுத்தம் செய்து
உடைவு கண்டாலும், உடைவு கண்டாலும் - அழித்தொழித்தவனும்
புள் வாய் கீண்டானும், புள் வாய் கீண்டானும் - பகாசுரனுடய வாயைக் கிழித்து போகட்டவனும் ( யாவனெனில்?)
மருது இடை போய், மருது இடை போய் - இரட்டை மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்றவனாய்
மண் அளந்த, மண் அளந்த - உலகங்களை அளந்து கொண்டவனான
மால், Maal - எம்பெருமானேயாவன்.
2100முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவன் ஒரு நாள் வந்து கிட்டுன விடத்திலும் நான் அவனைப் பெற்றிலேன் அவன் தானே வந்து சாய என்றும் அனுபவிக்கப் பெற்ற நீ என்ன பாக்யத்தைப் பண்ணினாயோ -என்கிறார் – பூமியைப் போலே ஒருகால் அன்றியிலே நித்ய சம்ச்லேஷம் பண்ணப் பெறுவதே கடல் என்று கொண்டாடுகிறார் 19
மாலும் கருங்கடலே என் நோற்றாய் வையகமுண்
டாலி னிலைத் துயின்ற வாழியான் கோலக்
கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப் பெற்று
வையகம், வையகம் - இவ்வுலகத்தை யெல்லாம்
உண்டு, Undu - (பிரளயம் கொள்ளாதபடி) திருவயிற்றினுள்ளே வைத்து
ஆலின் இலை, ஆலின் இலை - ஆலந்தளிரிலே
துயின்ற, துயின்ற - சயனித்துக் கொண்டவனும்
ஆழியான், ஆழியான் - திருவாழியை யுடையவனும்
கோலம் கரு மேனி, கோலம் கரு மேனி - அழகிய கறுத்த திருமேனியையுடையவனும்
செம் கண், Sem Kan - செந்தாமரைக் கண்ணனுமான
மால், Maal - எம்பெருமான்
கண்படையுள், கண்படையுள் - உறங்குகையில்
என்றும், Endrum - எப்போதும்
திருமேனி, Thirumeeni - அவனுடைய திருமேனியை
தீண்ட பெற்று, தீண்ட பெற்று - ஸ்பர்சிக்கப்பெற்று
மாலும், மாலும் - (அந்த ஸ்பர்ச ஸுகத்தினால்) மயங்கிக்கிடக்கிற
கரு கடலே, கரு கடலே - கரிய ஸமுத்ரமே!
நீ என் நோற்றாய், நீ என் நோற்றாய் - (இந்தப் பாக்கியம் உனக்குக் கிடைக்குமாறு) நீ என்ன நோன்பு நோற்றாயோ?
2101முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) கடல் அவனைப் பெற்று களித்த படி சொல்லிற்று கீழ் அவன் படுக்கையை விட்டுப் போந்த இடத்திலும் சில பாக்யாதிகர் கிட்டி அனுபவிக்கப் பெற்றார்கள் கிடீர் -என்கிறார் 20
பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்
செற்றார் படி கடந்த செங்கண் மால் நற்றா
மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று
பெற்றார், பெற்றார் - மாதா பிதாக்களான வஸுதேவ தேவகிகளுடைய
தளை கழல, தளை கழல - கால் விலங்கு அற்றுப் போம்படியாக
பேர்ந்து, Perndhu - (திருப்பாற்கடலில் நின்றும்) பெயர்ந்து (க்ருஷ்ணனாக வந்து பிறந்தவனும்)
ஓர் குறள் உரு ஆய், ஓர் குறள் உரு ஆய் - விலக்ஷண வாமந வேஷத்தையுடையனாய்
செற்றார் படி, செற்றார் படி - ஆச்ரித விரோதியான மாவலி தன்னதென்று நினைத்திருந்த பூமியை
கடந்த, கடந்த - அளந்து தன்னுடைய தாக்கிக்கொண்ட
செம் கண் மால், செம் கண் மால் - புண்டரீகாக்ஷனுடைய
நல் தாமரை மலர் சே அடியை, நல் தாமரை மலர் சே அடியை - அழகிய தாமரைபோற் சிவந்த திருவடிகளை
வானவர், வானவர் - இந்திராதி தேவர்கள்
கைகூப்பி, கைகூப்பி - அஞ்ஜலி செய்துகொண்டு
நிரை மலர் கொண்டு நின்று, நிரை மலர் கொண்டு நின்று - தொடைவாய்த்திருந்துள்ள பூக்களை ஸமர்ப்பித்துக்கொண்டு பணிந்து
ஏத்துவர், ஏத்துவர் - துதிப்பர்கள்;
ஆல், Aal - ஐயோ! (அப்போது அவர்களைப்போலே தாமும் துதிக்கப்பெறவில்லையே யென்கிற துக்கத்தைச் காட்டுகிறது.)
2102முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஐஸ்வர்யத்தைக் கொண்டு பிற்காலியாதே நெஞ்சே அவன் ஆஸ்ரித சம்ஸ்லேஷைக ஸ்வபாவன் கிடீர் -என்கிறார் – அங்கன் அன்றிக்கே பெரிய மேன்மையை யுடையனாய் இருந்து வைத்து அவை ஒன்றும் பாராதே ஆஸ்ரிதர்க்காகத் தன்னை அழிய மாறியும் கார்யம் செய்யுமவன் கிடீர் என்கிறார் 21
நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசை யளந்த செங்கண் மாற்கு என்றும்
படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே அறி
சென்று நின்று, சென்று நின்று - (மஹாபலியின் யாகபூமியிற்) போய் நின்று
அம் கை, Am Kai - (தனது) அழகிய திருக்கையினால்
நிலம் நீரேற்று, நிலம் நீரேற்று - பூமிதானம்வாங்கி
மூ அடியால், மூ அடியால் - மூன்றடிகளாலே
திசை அளந்த, திசை அளந்த - எல்லாயிடங்களையும் ஸ்வாதீனப் படுத்திக்கொண்ட
செம்கண்மாற்கு, செம்கண்மாற்கு - செந்தாமரைக் கண்ணனான எம்பெருமானுக்கு
என்றும், Endrum - எப்போதும்
ஆழி, Aazhi - சக்கரமானது
படை, படை - ஆயுதமாயிருக்கும்;
புள், புள் - கருடன்
ஊர்தி, ஊர்தி - வாஹனமா யிருப்பன்;
ஆழி நெஞ்சே, Aazhi Nenjae - கம்பீரமான மனமே!
அறி, அறி - நான் சொல்வதை ஆராய்ந்துகொள்;
பாம்பு அணையான் பாதம் அடை, பாம்பு அணையான் பாதம் அடை - சேஷசயனனான அப்பெருமானுடைய திருவடிகளை அடைந்திடு.
2103முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) நம்மை ஆஸ்ரித சம்ஸ்லேஷ ஏக ஸ்வ பாவனாகச் சொன்னீர் அது நாம் அறிகிறிலோம் நீர் அறிந்த படி என் -என்ன நீ என் வாயைப் புதைத்தாலும் -நாட்டார் வாயைப் புதைக்கலாமோ -என்கிறார் 22
அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்
பொறி கொள் சிறை யவண மூர்த்தாயை வெறி கமழும்
காம்பேய் மென் தோளி கடை வெண்ணெய் யுண்டாயைத்
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு
பொறிகொள் சிறை, பொறிகொள் சிறை - பலநிறங்களையுங்கொண்ட சிறகுகளையுடைய
உவணம், உவணம் - கருடாழ்வானை
ஊர்ந்தாய், ஊர்ந்தாய் - ஏறி நடத்தும் பெருமானே!
காம்பு ஏய் மென் தோளி, காம்பு ஏய் மென் தோளி - மூங்கிலையொத்த மெல்லிய தோள்களையுடைய யசோதையினாலே
கடை, Kadai - கடையப்பட்டு
வெறி கமழும், வெறி கமழும் - பரிமளம் வீசப்பெற்ற
வெண்ணெய், Vennai - வெண்ணெயை
உண்டாயை, உண்டாயை - (களவிலே) அமுது செய்த வுன்னை
தாம்பேகொண்டு, தாம்பேகொண்டு - (கையில் கிடைத்ததொரு) தாம்பைகொண்டு
ஆர்த்த, ஆர்த்த - கட்டியதனா லுண்டான
தழும்ப, தழும்ப - காய்ப்பை (அறிபவன்)
யானேயும் அல்லேன், யானேயும் அல்லேன் - நானொருவனே யன்று;
உலகு எல்லாம் அறியும், உலகு எல்லாம் அறியும் - உலகத்திலுள்ளாரெல்லாரும் அறிவர்கள்.
2104முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) நாம் அஞ்சுகையாவது என் நான் சிலருக்குக் கட்டுண்கை யாவது என் அது பின் நாட்டார் அறிகை யாவது என் என்று அத்தை மறைக்கப் புக்கான் ஒரு தழும்பு ஆகில் அன்றோ உன்னால் மறைக்கலாவது உன் உடம்பு அடங்கலும் ஆஸ்ரிதர்க்காகக் காரியம் செய்து அத்தால் வந்த தழும்பு அன்றோ என்கிறார் 23
தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்தவா மங்கை
தழும்பிருந்த தாள் சகடம் சாடி தழும்பிருந்த
பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரால் மார்பிடந்த
வீங்கோத வண்ணர் விரல்
வீங்கு ஓதம் வண்ணர், வீங்கு ஓதம் வண்ணர் - பொங்கி அலை யெறியுங் கடல் போன்ற வடிவையுடைய எம்பெருமானது
அம் கை, Am Kai - அழகிய திருக்கைகளில்
சார்ங்கம், Saarnggam - சார்ங்க வில்லினுடைய
நாண், நாண் - நாணி
தோய்ந்த, தோய்ந்த - உராய்ந்த்தனா லுண்டான
தழும்பு, தழும்பு - காய்ப்பானது
இருந்த ஆம், இருந்த ஆம் - இருக்கின்றதுகாண்;
தாள், தாள் - திருவடிகளிலே
சகடம் சாடி, சகடம் சாடி - சகடத்தை யுதைத்து (அதனாலுண்டான)
தழும்பு இருந்த, தழும்பு இருந்த - காய்ப்பு இருக்கின்றது;
பூங் கோதையாள், பூங் கோதையாள் - அழகிய மயிர் முடியையுடைய பிராட்டி
வெருவ, வெருவ - (என்ன நேரிடுமோ என்று) அஞ்சும்படியாக மிக்க சீற்றத்துடனே
பொன் பெயரோன், பொன் பெயரோன் - இரணியாசுரனுடைய
மார்பு இடந்த தழும்பு, மார்பு இடந்த தழும்பு - மார்பைக் கிழித்தெறிந்த தனாலுண்டான காய்ப்பு
விரல், விரல் - விரல்களிலே
இருந்த, இருந்த - இருக்கின்றது.
2105முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) நமக்கு அவாப்த சமஸ்த காமனாய் யாய்த்து பிரசித்தி இங்கனே இருக்கிற நாம் ஒன்றை வேண்டி அது பெறாமையாலே களவு காணப் புக்கு கட்டுண்டோமாக வேணுமோ -என்ன கட்டுண்டு இருக்கிறபடி அறியாயோ -என்கிறார் 24
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி
உரலோடு உறப் பிணித்த நான்று -குரலோவா
தேங்கி நினைந்த அயலார் காண இருந்திலையே
ஒங்கோத வண்ணா வுரை
ஓங்கு ஓதம் வண்ணா, ஓங்கு ஓதம் வண்ணா - ஓங்கிக் கிளர்ந்த கடல் போன்ற வடிவையுடையவனே!
விரலோடு வாய் தோய்ந்த, விரலோடு வாய் தோய்ந்த - (நீ வெண்ணெய் திருடி உண்ணும்போது) உன் விரலிலும் வாயிலும் படிந்திருந்த
வெண்ணெய், Vennai - வெண்ணெயை
ஆய்ச்சி, Aaychi - யசோதையானவள்
கண்டு, கண்டு - பார்த்து
உரலோடு உற பிணித்த நான்று, உரலோடு உற பிணித்த நான்று - (உன்னைத் தண்டிக்கவேண்டி) உரலோடு சேர்த்துக் கட்டிவைத்தபோது
குரல் ஓவாது, குரல் ஓவாது - நீ கத்துகிற கத்தல் நீங்காமல்
ஏங்கி, ஏங்கி - ஏங்கிக்கொண்டு
நினைந்து, நினைந்து - (அப்போதும் வெண்ணெய் திருடுவதையே) சிந்தித்துக்கொண்டு
அயலார் காண, அயலார் காண - அயலாரெல்லாரும் வேடிக்கை பார்க்கும்படி
இருந்திலையே, இருந்திலையே - இருந்தாயல்லவோ?
உரை, உரை - உண்மையாகச் சொல்லு.
2106முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவன் ஓவாதே அழுகிற படியைக் கண்டு இவரும் அவ்விருப்பிலே ஈடுபடுகிறார் ஓவாதே ஏத்தவும் தொடங்கினார் அவனுக்கு நினைவும் பேச்சும் வெண்ணெயிலே ஆனாப் போலே ஆழ்வார்க்கும் நினைவும் பேச்சும் இவன் பக்கலிலே யான படி 25
உரை மேல் கொண்டு என்னுள்ளம் ஓவாது எப்போதும்
வரை மேல் மரகதமே போலே திரை மேல்
கிடந்தானைக் கீண்டானைக் கேழலாய்ப் பூமி
இடந்தானை யேத்தி எழும்
வரை மேல், வரை மேல் - ஒரு மலையின்மேலே
மரகதமே போல, மரகதமே போல - மரகதப்பச்சை படிந்தாற்போல
திரை மேல், திரை மேல் - திருப்பாற்கடலிலே
கிடந்தானை, கிடந்தானை - சயனித்திருப்பவனும்
கீண்டானை, கீண்டானை - இரணியனுடலைப் பிளந்தவனும்
கேழல் ஆய், Kezhal Aay - வராஹமூர்த்தியாகி
பூமி இடந்தானை, பூமி இடந்தானை - பூமியை உத்தரிப்பித்தவனுமான எம்பெருமானை.
என் உள்ளம், என் உள்ளம் - எனது மனமானது
உரை மேற்கொண்டு, உரை மேற்கொண்டு - உரைப்பதில் ஊற்றங்கொண்டு
ஓவாது எப்போதும், ஓவாது எப்போதும் - இடைவிடாமல் எப்போதும்
ஏத்தி, Aethi - அப்பெருமானது சரிதைகளைப் (புகழ்ந்து)
எழும், எழும் - உஜ்ஜீவிக்கும்.
2107முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவ்வோ அவதாரங்களில் உதாவாதார் உடைய இழவும் தீர்க்கைக்காக திருமலையிலே புகுந்து நின்றான் கிடீர் என்கிறார் 26
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை
எழுவார், எழுவார் - (தாங்கள் விரும்பின ஐச்வரியம் கிடைத்தவுடனே எம்பெருமானைக்) கைவிட்டுப் போகின்ற ஐச்வர்யார்த்திகளும்
விடை கொள்வார், விடை கொள்வார் - (தாங்கள் விரும்பின கைவல்யமோக்ஷம் கைப்பட்டபின் எம்பெருமானைத் திரும்பிப்பாராமல்) விடைப்பெற்றுக் கொண்டு போமவர்களான கைவல்யார்த்திகளும்
ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார், ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் - இனிய திருத்துழாயை அணிந்தவனான திருமாலை ஒருநாளும் விட்டு நீங்காதபடி சிந்தித்து எப்போதும் அநுபவிப்பவர்களான முமுக்ஷூக்களுமாகிய இம் மூவகை அதிகாரிகளுடைய
வினை சுடரை, வினை சுடரை - (அவரவர் வேண்டுகின்ற பலன்களுக்குத் தடையான ) தீவினையாகிய நெருப்பை
நந்துவிக்கும், நந்துவிக்கும் - அணைக்கின்ற
வேங்கடமே, Venkatame - திருவேங்கடமலையே
வானோர், Vaanor - நித்ய ஸூரிகளுடைய
மனம் சுடரை, மனம் சுடரை - ஹ்ருதயமாகிற விளக்கை
தூண்டும், தூண்டும் - தூண்டி ஜ்வலிப்பிக்கின்ற
மலை, Malai - மலையாகும்.
2108முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஆக திருமலையிலே வந்து நிற்கிற படியை அனுசந்தித்தார் அந்த நிலை தன்னையே கொண்டு இவனுடைய கைகள் ஆனவை உகவாதார் மண் உண்ணும்படி வளர்ந்தவை என்று கொண்டு நிச்சயிக்கலாம் படி நின்றது என்கிறார் 27
மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து
சிலையால் மராமரம் ஏழ் செற்று கொலையானைப்
போர்க்கோடு ஒசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும்
கார்க்கோடு பற்றியான் கை
மலையால், மலையால் - கோவர்த்தன கிரியைக்கொண்டு
குடை கவித்து, குடை கவித்து - குடையாகப் பிடித்தும்,
மா வாய் பிளந்து, மா வாய் பிளந்து - குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியென்னும் அஸுரனுடைய வாயைப்பிளந்தும்,
சிலையால், சிலையால் - வில்லைக்கொண்டு
மராமரம் ஏழ் செற்று, மராமரம் ஏழ் செற்று - ஸப்த ஸாலவிருக்ஷங்களை அழித்தும்,
கொலை யானை, கொலை யானை - (இச்செயல்களோடு நிற்காமல்) கொலைசெய்வதாக வந்த குவலயா பீடமென்னும் யானையினுடைய
போர் கோடு, போர் கோடு - சண்டைசெய்ய உதவியாயிருந்த தந்தங்களை
ஒசித்தனவும், ஒசித்தனவும் - பிடுங்கினவையும்.
பூ குருந்தம், பூ குருந்தம் - பூ வோடுகூடிய குருந்த மரத்தை
சாய்த்தனவும், சாய்த்தனவும் - வேரோடே பறித்துத் தள்ளினவையும் (எவையென்றால்)
கார், கார் - (கம்பீரமாக முழங்குவதில்) மேகத்தையொத்த
கோடு, Kodu - சங்கை
பற்றியான், பற்றியான் - ஏந்தியிருக்கின்ற பெருமானுடைய
கை, Kai - திருக்கைகளேயாகும்.
2109முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அந்நிலை தன்னிலே ஐஸ்வர்யம் தோற்றும்படி இரா நின்றது என்னுதல்- அன்றிக்கே – பெரிய அழகு அடங்கலும் தோற்றும்படியாய் இரா நின்றது என்னுதல் – அன்றிக்கே நீர்மையைச் சொல்லிற்று ஆதல் 28
கைய வலம் புரியும் நேமியும் கார் வண்ணத்
தைய மலர்மகள் நின்னாகத் தாள் செய்ய
மறையான் நின்னுந்தியான் மா மதிள் மூன்று எய்த
இறையான் நின்னாகத் திறை
கார் வண்ணத்து ஐய, கார் வண்ணத்து ஐய - மேகம்போன்ற வடிவையுடைய பெருமானே
வலம்புரியும், வலம்புரியும் - வலம்புரிச்சங்கமும்
நேமியும், நேமியும் - சக்கரமும்
கைய, Kaiya - என் கையிலுள்ளன;
மலர் மகள், Malar Magal - பெரியபிராட்டியார்
நின் ஆகத்தால், நின் ஆகத்தால் - உனது திருமார்பைப் பிரியாதிருப்பவள்;
செய்ய மறையான், செய்ய மறையான் - சிறந்த வேதத்தை நிரூபகமாக வுடைய பிரான்
நின் உந்தியான், நின் உந்தியான் - உனது உந்திக்கமலத்திலுள்ளான்;
மா மதிள் மூன்று எய்த இறையான், மா மதிள் மூன்று எய்த இறையான் - பெரிய மதிளையுடைய மூன்று பட்டணங்களை முடித்த சிவபெருமான்
நின் ஆகத்து இறை, நின் ஆகத்து இறை - உனது திருமேனியின் ஏகதேசம்
2110முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படி சர்வேஸ்வரனாய் இருந்தான் என்று பிற்காலியாதே நெஞ்சே அவன் ஆஸ்ரித பரதந்த்ரன் கிடாய் இத்தை அழகிதாக புத்தி பண்ணு என்கிறார் 29
இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும்
அறை புனலும் செந்தீயும் ஆவான் பிறை மருப்பின்
பைங்கண் மால் யானை படு துயரம் காத்தளித்த
செங்கண் மால் கண்டாய் தெளி
இறையும், இறையும் - ஸ்ரீவைகுண்ட நாதனாயும்
நிலனும் இருவிசும்பும் காற்றும் அறை புனலும் செம்தீயும் ஆவான், நிலனும் இருவிசும்பும் காற்றும் அறை புனலும் செம்தீயும் ஆவான் - பூமியென்ன பரவிய ஆகாச மென்ன வாயுவென்ன அலை யெறிகிற ஜலமென்ன சிவந்த நிறமுள்ள அக்நியென்ன ஆகிய பஞ்ச பூதங்களினாலாகிய லீலா விபூதியையுடையவனாயுமிருக்கிற எம்பெருமான்,
பிறை மருப்பின், பிறை மருப்பின் - பிறைபோன்ற தந்தத்தையுடையதும்
பைங்கண், பைங்கண் - பசுமைதங்கிய கண்களையுடையதுமான
மால் யானை, மால் யானை - பெரியகஜேந்திரனை
படு துயரம், படு துயரம் - (முதலையின் வாயிலே அகப்பட்டுப்) பட்ட துக்கத்தில் நின்றும்
காத்து அளித்த, காத்து அளித்த - ரக்ஷித்தருளின
செம் கண் மால் கண்டாய், செம் கண் மால் கண்டாய் - புண்டரீகாக்ஷனான பெருமான்காண்;
தெளி, தெளி - [நெஞ்சே!] நீ இதனைத் தெரிந்துகொள்.
2111முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) சம்சாரத்தில் சமாஸ்ரயணீயர் பலர் உண்டு என்று பிரமிக்க வேண்டா சம்பந்த ஜ்ஞானம் உண்டாக நெஞ்சு தானே அவனை யாராய்ந்து பற்றும் கண் அழிவற்ற பக்தியை யுடையாருக்கு அவன் தானே வந்து கிட்டும் அளவும் க்ரம ப்ராப்தி பார்த்து இருக்க ஒண்ணாது கிடீர் என்கிறார் 30
தெளிதாக உள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத்
தெளிதாக நன்குணர்வார் சிந்தை எளிதாகத்
தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே
போய் நாடிக் கொள்ளும் புரிந்து
உள்ளத்தை, உள்ளத்தை - மனத்தை
தெளிது ஆக, தெளிது ஆக - [ஐம்புலன்களில் மேய்வதனாலுண்டான கலக்கம் நீங்கித்] தெளிவையுடைய தாம்படி
செம் நிறீஇ, செம் நிறீஇ - செவ்வனே நிறுத்தி [எம்பெருமானிடத்தில் மனத்தைமூட்டி]
ஞானம், ஞானம் - பகவத்விஷய பக்தியாலே
தெளிது ஆக, தெளிது ஆக - ‘அவன் தலைவன் நாம் அடிமை’ என்கிற தெளிவு உண்டாகும்படி
நன்கு, நன்கு - நன்றாக
உணர்வார், உணர்வார் - அறிபவர்களுடைய
சிந்தை, Sindhai - மனமானது.
எளிது ஆக-, எளிது ஆக- - வருத்தமில்லாமல்
தாய்நாடு கன்றேபோல், தாய்நாடு கன்றேபோல் - [பெரிய பசுக்கூட்டத்தினிடையே] ‘தன் தாயைத் தேடிக்கொண்டு கிட்டுகிற கன்றைப்போல,
தண் துழாயான் அடிக்கே, தண் துழாயான் அடிக்கே - குளிர்ந்த திருத்துழாய் மாலையையணிந்த எம்பெருமானது திருவடிகளையே
புரிந்து, Purindhu - விரும்பி
போய் நாடிக்கொள்ளும், போய் நாடிக்கொள்ளும் - தானே சென்று தேடிச்சேரும்.
2112முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படிப் பட்ட விஷயத்தில் அநவரத பக்தியைப் பண்ணுமது ஒழிய வ்யதிரிக்த விஷயங்களை ஷண காலமும் ஸ்மரிக்கல் ஆகாது கிடீர்–என்கிறார் அவனுடைய ஆஸ்ரித பார தந்த்ர்யத்தை அனுசந்தித்தால் வேறே யொன்றை நினைக்கப் போமோ -என்கிறார் 31
புரியொரு கை பற்றியோர் பொன்னாழி ஏந்தி
அரி யுருவும் ஆளுருவுமாகி எரியுருவ
வண்ணத்தான் மார்பிடந்த மாலடியை யல்லால் மற்று
எண்ணத்தான் ஆமோ இமை
ஒரு கை புரி பற்றி, ஒரு கை புரி பற்றி - ஒரு திருக்கையிலே வலம்புரிச் சங்கத்தை ஏந்தி
ஓர் பொன் ஆழி ஏந்தி, ஓர் பொன் ஆழி ஏந்தி - (மற்றொரு திருக்கையிலே) ஒப்பற்ற அழகிய திருவாழியை ஏந்தி
ஆள் உருவம் அரி உருவம், ஆள் உருவம் அரி உருவம் - நரமும் சிங்கமும் கலந்த வடிவை யுடையனாய்க் கொண்டு
எரி உருவம் வண்ணத்தான், எரி உருவம் வண்ணத்தான் - அக்நியின் வடிவம்போலே [கண்ணெடுத்துக்காண முடியாத] வடிவத்தையுடையனான இரணியனுடைய
மார்பு, Maarbu - மார்பை
இடந்த, இடந்த - நகத்தால் குத்திப்பிளந்து போட்ட
மால், Maal - திருமாலினுடைய
அடியை அல்லால், அடியை அல்லால் - திருவடிகளைத்தவிர
மற்று, Mattru - வேறொரு விஷயத்தை
இமை, Imai - க்ஷணகாலமேனும்
எண்ணத்தான் ஆமோ, Ennaththaan Aamo - நினைப்பதற்கேனும் முடியுமோ? [முடியாது.]
2113முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) சாஸ்த்ரங்களில் சொல்லுகிற சாதன அனுஷ்டானத்தில் அந்வயம் இல்லையே யாகிலும் அவன் சேஷீ நாம் சேஷம் -என்கிற இந்த ஜ்ஞானம் உடையவர்களுக்கு அந்த சாஸ்த்ரங்களில் சொல்லுகிற தேசத்தை சென்று ப்ராபிக்கலாம் கிடீர் -என்னுதல் அன்றிக்கே அந்த சாதன அனுஷ்டானம் பண்ணாதார்க்கு அவனைச் சென்று கிட்டப் போமோ -என்றாதல் 32
இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல்
ஆகத் தணைப்பார் அணைவரே ஆயிர வாய்
நாகத் தணையான் நகர்
இமையாத கண்ணால், இமையாத கண்ணால் - [ஞானத்தில் குறைவில்லாதநெஞ்சு என்னும்] உட்கண்ணாலே
இருள் அகல, இருள் அகல - [அஜ்ஞாநமாகிய] அந்தகாரம் நீங்கும்படியாக
நோக்கி, Nookki - (தன் ஸ்வரூபத்தையும் பரப்ரஹ்ம ஸ்வரூபத்தையும் உள்ளபடி) கண்டு
அமையா, அமையா - த்ருப்திபெற்று அடங்கியிராத
பொறி புலன்கள் ஐந்தும், பொறி புலன்கள் ஐந்தும் - பஞ்சேந்திரியங்களையும் (அவற்றிற்கு உரிய சப்தாதி) பஞ்சவிஷயங்களையும்
நமையாமல், நமையாமல் - அடக்காமலே
ஆகத்து அணைப்பார், ஆகத்து அணைப்பார் - (மாதர்களின்) தேஹத்தை அணைத்துக்கொண்டு கண்டபடி திரிபவர்கள்
ஆயிரம் வாய் நாகத்து அணையான், ஆயிரம் வாய் நாகத்து அணையான் - ஆயிரம் வாய்களைக் கொண்ட ஆதி சேஷனைப்படுக்கையாகவுடைய எம்பெருமானது
நகர், நகர் - நகரமாகிய ஸ்ரீவைகுண்டத்தை
அணைவரே, அணைவரே - கிட்டப்பெறுவர்களோ?.
2114முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படி இருக்கிறவனை உள்ளீடாகக் கொள்ளாதே நாட்டார் ஓதுவது உரு எண்ணுவதாய்க் கொண்டு செய்யா நிற்கிற சந்த்யாதி கர்மங்களாலே ஒரு பிரயோஜனம் இல்லை கிடீர் என்கிறார் 33
நகர மருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல்
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே
புந்தியால் சிந்தியா தோதி யுரு வெண்ணும்
அந்தியா லாம் பயன் அங்கு என்
பூமேல், பூமேல் - திருநாபிக் கமலத்திலே
நான்முகற்கு, நான்முகற்கு - பிரமனுக்கு
நகரம் அருள் புரிந்து, நகரம் அருள் புரிந்து - இருப்பிடத்தை ஏற்படுத்தியருளியும்
பகர, பகர - (யோக்யர்களெல்லாரும்) ஓதும்படியாக
மறை, Marai - வேதத்தை
பயந்த, பயந்த - உபகரித்தும்வைத்த
பண்பன், பண்பன் - குணசாலியான எம் பெருமானுடைய
பெயரினை, பெயரினை - திருநாமங்களை
பிந்தியால், பிந்தியால் - மனத்தினால்
சிந்தியாது, சிந்தியாது - எண்ணாமல்
ஓதி உரு எண்ணும், ஓதி உரு எண்ணும் - ஜபம் செய்வதும் உருச் சொல்வதுமான ஸந்த்யாவந்தனம் முதலிய கர்மாநுஷ்டாநங்களால்
அங்கு ஆம் பயன் என், அங்கு ஆம் பயன் என் - உண்டாகப்போகிற பிரயோஜனம் என்ன?(ஒன்றுமில்லை.)
2115முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இவ் விஷயத்தில் தலையான பக்தி உடையளாய்க் கொண்டு பெற்றாள் யசோதைப் பிராட்டி ஒருத்தியும் இறே என்கிறார் புந்தியால் சிந்தியாது பெற்றாள் அவள் போலே காணும் – என் இதுவும் ஒரு எத்திறம் போலே இருக்கிறது அன்றிக்கே இத்தை ஒருவர் மெய் என்னும்படி எங்கனே – என்னவுமாம் 34
என்னொருவர் மெய்யென்பர் ஏழு உலகு உண்டு ஆலிலையில்
முன்னோருவனாய முகில் வண்ணா நின்னுருகிப்
பேய்த்தாய் முலை தந்தாள் பேரிந்திலளால் பேரமர்க்கண்
ஆய்த்தாய் முலை தந்தவாறே
முன், Mun - முற்காலத்தில்
ஏழ் உலகு உண்டு, ஏழ் உலகு உண்டு - ஏழுலகங்களையும் (பிரளயத்திலழியாதபடி) அமுது செய்து
ஆல் இலையில், ஆல் இலையில் - ஓர் ஆலந்தளிரிலே
ஒருவன் ஆய, ஒருவன் ஆய - துணையற்றவனாய்க் கண் வளர்ந்தருளின
முகில்வண்ணா, முகில்வண்ணா - காளமேகத் திருவுருவனான பெருமானே!
நின் உருகி, நின் உருகி - உன்விஷயத்தில் உருக்கம் கொண்டவள்போல மேலுக்குக்காட்டி
முலை தந்தாள், முலை தந்தாள் - முலை கொடுத்தவளான
பேய் தாய், பேய் தாய் - பேய்த் தாயாகிய பூதனை யானவள்.
பேர்ந்திலள், பேர்ந்திலள் - அவ்விடத்தில் றின்றும் பேரமாட்டாமல் (பிணமாய்) விழுந்தாள்;
பேர் அமர் கண், பேர் அமர் கண் - பெரிய அந்தயுத்த பூமியில்
ஆய் தாய், ஆய் தாய் - இடைத்தாயாகிய யசோதையானவள்
முலை தந்த ஆறு, முலை தந்த ஆறு - முலை கொடுத்தவிதத்தை
ஒருவர், ஒருவர் - ஞானத்தில் ஒப்பற்றவர்களான வ்யாஸபராகராதி ரிஷிகள்
மெய் என்பர், மெய் என்பர் - மெய்யென்றுசொல்லாநிற்பர்கள்;
என், என் - இது என்ன ஆச்சரியம்?
2116முதல் திருவந்தாதி || யசோதைப் பிராட்டி உடைய பக்தியை அனுசந்திக்க அல்லாதார் உடைய பக்தி ப்ராதி கூல்யம் என்னும் படி இருந்தது – அப்படி இருந்ததே ஆகிலும் இனி இது தனக்கு அவனையே கால் கட்டி பொறுப்பித்துக் கொள்ளுகை ஒழிய இல்லை என்று பார்த்து அவனை ஷமை கொள்ளுகிறார் 35
ஆறிய அன்பில் அடியார்தம் ஆர்வத்தால்,
கூறிய குற்றமாக் கொள்ளல்நீ – தேறி,
நெடியோய் அடியடைதற் கன்றே,ஈ ரைந்து
முடியான் படைத்த முரண்?
ஆறிய அன்பு இல், ஆறிய அன்பு இல் - நிரம்பின பக்தியில்லாதவர்களாய்
அடியார், அடியார் - சேஷத்வஜ்ஞாநமாத்திரத்தை யுடையராயிருப்பவர்கள்
தம் ஆர்வத்தால், தம் ஆர்வத்தால் - தங்களுடைய ஸ்நேஹத்தாலே
கூறிய, கூறிய - சொல்லும் வார்த்தைகளை
குற்றம் ஆ, குற்றம் ஆ - குற்றமாக
நீ கொள்ளல், நீ கொள்ளல் - நீ கொள்ளாதே;
ஈர் ஐந்து முடியான், ஈர் ஐந்து முடியான் - (அது ஏனெனில்) பத்துத்தலைகளையுடையனானராவணன்.
படைத்த, படைத்த - புத்திபூர்வகமாகப் பண்ணின
முரண், முரண் - தப்புக்காரியமானது
நெடியோய், நெடியோய் - பெருமை பொருந்திய உன்னுடைய
அடி, Adi - திருவடிகளை
தேறி அடைதற்கு அன்றே, தேறி அடைதற்கு அன்றே - தெளிந்துவந்து (காலக்ரமத்திலே சிசுபாலனாகிக் ) கிட்டுகைக்குக் காரணமாகி விட்டதன்றோ?
2117முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) கூறிய குற்றமாகக் கொள்ளல் நீ என்று இரக்க வேண்டாத படி அவன் தானே வந்து அர்த்தியாய் நின்ற படியை அநு சந்தித்து நீ இப்படி உன்னை அழிய மாறிக் கொண்டு வந்து கார்யம் செய்து சம்சாரிகளை உனக்காக்கிக் கொள்ளலாம் என்று பார்த்து -அத்தாலே -என்கிறார் – 36
முரணை வலிதொலைதற் காமன்றே, முன்னம்
தரணி தனதாகத் தானே – இரணியனைப்
புண்நிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால்,நீ
மண்ணிரந்து கொண்ட வகை?
முன்னம், Munnam - முற்காலத்தில்
தரணி தனது ஆக தானே, Tharani Thanadu Aaga Thane - பூமியெல்லாம் தன்னுடையதென்று அஹங்காரங்கொண்டிருந்த
இரணியனை, Iraniyanai - ஹிரண்யாஸுரனை
புண் நிரந்த, Pun Nirandha - புண்படுத்திப் பிளந்த
வள் உகிர் ஆர், Val Ukir Aar - கூர்மையான நகங்கள் பொருந்திய
பொன் ஆழி கையால், Pon Aazhi Kaiyala - அழகிய திருவாழியைக்கொண்ட திருக்கையினால்
நீ, Nee - நீ
மண் இரந்துகொண்ட வகை, Man Irandhukonda Vagai - (மாவலியிடத்தில்) பூமியை யாசித்துப் பெற்றதானது
முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே, Muranai Vali Tholaitharku Aam Endrae - (ஸம்ஸாரிகளின்) முரட்டுத்தனத்தின் மிடுக்கைத் தொலைக்கலாமென்றல்லவோ?.
2118முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஒரு நாள் தன்னை இரப்பாளனாக்கிக் கொடு வந்து போன வளவேயோ – என்றும் தன்னை இரப்பாளனாக்கி நித்ய சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு திரு மலையிலே வந்து சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் – நாம் அவதாரத்துக்குப் பிற்பட்டோம் தீர்த்தம் பிரசாதித்துப் போய்த்து இறே என்ன வேண்டாதபடி திருமலையிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார்  – 37
வகையறு நுண்கேள்வி வாய்வார்கள், நாளும்
புகைவிளக்கும் பூம்புனலும் ஏந்தி, – திசைதிசையின்
வேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே, வெண்சங்கம்
ஊதியவாய் மாலுகந்த வூர்.
வகை அறு, Vagai Aru - அற்ப பலன்களையும் பரம புருஷார்த்தத்தையும் உட்புகுந்து இன்னவகை இன்னவகை என்று அறுதியிடுவதற்குறுப்பான
நுண் கேள்வி வாய்வார்கள், Nun Kaelvi Vaivargal - ஸூக்ஷ்மார்த்தச்ரவணமுடையவர்களான
வேதியர்கள், Vedhiyargal - வைதிகர்கள்
நாளும், Naalum - நித்தியமும்
புகை விளக்கும், Pugai Vilakkum - தூபதீபங்களையும்
பூ புனலும், Poo Punalum - புஷ்பங்களையும் தீர்த்தத்தையும்
ஏந்தி, Aendi - தரித்துக்கொண்டு
திசை திசையின், Thisai Thisaiyin - பலதிக்குக்களில் நின்றும்
சென்று, Sendru - வந்து சேர்ந்து
இறைஞ்சும், Iraichum - வணங்குமிடமான
வேங்கடம், Vengadam - திருவேங்கடமலையானது,
வெண்சங்கம் ஊதிய வாய் மால், Venchankam Oothiya Vaai Maal - வெளுத்த சங்கைத் திருப்பவளத்திலே வைத்து ஊதின எம்பெருமான்
உகந்த, Ugantha - திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்கப்பெற்ற
ஊர், Oor - திவ்யதேசமாம்.
2119முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவன் தேசத்தை உகந்த படியைக் கண்டு இவரும் அங்கு உள்ள பதார்த்தங்களை உகக்கப் புக்கார் – ஒரு தேசம் ப்ராப்யம் என்று பிரதிபத்தி பிறந்த பின்னை அங்கு உள்ளது எல்லாம் உத்தேச்யமாய் இருக்கக் கடவது இறே – பரம பதத்தில் உள்ளார் அடைய உத்தேச்யர் ஆமா போலே- 38
ஊரும் வரியரவம் ஒண்குறவர் மால்யானை,
பேர எறிந்த பெருமணியை, – காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே, மேலசுரர்
என்னென்ற மால திடம்.
ஊரும், Oorum - திரிகின்ற
வரி அரவம், Vari Aravam - (உடம்பில்) கோடுகளையுடைய ஸர்ப்பமானது,
ஒண் குறவர், On Kuravar - அழகிய குறவர்கள்
மால் யானை பேர, Maal Yaanai Pera - (பட்டி மேய்கின்ற ) பெரிய யானைகள் (தங்களுடைய புனத்தில் நின்றும் ) அப்பால் போவதற்காக
எறிந்த, Erintha - (அவ்யானைகளின்மேல்) வீசியெறிந்த
பெரு மணியை, Peru Maniyai - பெரியதொரு மாணிக்கத்தை (கண்டு)
கார் உடைய மின் என்று, Kaar Udaya Min Endru - மேகத்தினிடையே தோன்றுகிற மின்னலென்று பிரமித்து (இடிக்கு அஞ்சி)
புற்று அடையும் வேங்கடம், Putru Adayum Vengadam - புற்றினுள்ளே நுழையுமிடமான திருமலை,
மேல சுரர், Mela Surar - மேற்பட்டவர்களான நித்யஸூரிகள்
எம் என்னும் மாலது, Em Ennum Maalathu - ‘எங்களுடையவன்’ என்று அபிமாநிக்கும்படியாகவுள்ள எம்பெருமானது
இடம், Idam - திவ்யதேசமாம்.
2120முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவனது அல்லாத தேசம் உண்டோ – அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணாத வியாபாரம் உண்டோ ஆன பின்பு இங்குத்தைக்கு இத்தனை விசேஷம் என்னென்ன அல்லாத இடங்கள் போல் அன்றிக்கே இவ் விடம் அவன் விரும்பி நித்ய வாஸம் பண்ணுகிற  தேசம்  – என்கிறார் – 39
இடந்தது பூமி எடுத்தது குன்றம்,
கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச, – கிடந்ததுவும்
நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே,
பேரோத வண்ணர் பெரிது.
பேர் ஓதம் வண்ணர், Per Ootham Vannaar - பெரிய கடலின் நிறம் போன்ற நிறமுடைய பெருமான்
முன், Mun - முற்காலத்தில்
இடந்தது, Idanthu - (மஹாவராஹமாகிக்) கோட்டார்குத்தி யெடுத்தது
பூமி, Bhoomi - பூமியாம்;
எடுத்தது, Eduthathu - குடையாக வெடுத்துப் பிடித்தது
குன்றம், Kundram - கோவர்த்தனமலையாம்
அஞ்ச கடந்தது, Anja Kadandhu - அஞ்சி முடிந்துபோம்படி செய்தது
கஞ்சனை, Kanjanai - கம்ஸனையாம்;
கிடந்ததுவும், Kidandhathuvum - திருக்கண் வளர்ந்தருளினது
ஓதம் நீர் மாகடல், Otham Neer Magadal - பெருவெள்ளமுடைய திருப்பாற்கடலிலாம்
பெரிது நின்றதும், Peridhu Nindrathum - பெருமையெல்லாம் தோற்றநின்றது
வேங்கடம், Vengadam - திருமலையிலாம்.
2121முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இங்குற்றை நித்ய வாசம் தனக்கு அவன் பிரயோஜனமாக நினைத்து இருப்பது ஆஸ்ரித விரோதிகளைப் போக்கி யுகக்குமத்தை கிடீர் – என்கிறார் – 40
பெருவில் பகழிக் குறவர்கைச் செந்தீ
வெருவிப் புனம்துறந்த வேழம், – இருவிசும்பில்
மீன்வீழக் கண்டஞ்சும் வேங்கடமே, மேலசுரர்
கோன்வீழ கண்டுகந்தான் குன்று.
பெருவில், Peruvil - பெரிய வில்லையும்
பகழி, Pagazhi - அம்புகளை முடையரான
குறவர், Kuravar - குறவர்களினுடைய
கை, Kai - கையிற்பிடித்திருந்த
செம் தீ, Sem Thee - சிவந்த நெருப்புக்கு
வெருவி, Veruvi - பயப்பட்டு
புனம் துறந்த, Punam Thurandha - கொல்லையை விட்டு நீங்கின
வேழம், Vezham - யானையானது,
இரு விசிம்பில், Iru Visimbil - பரந்த ஆகாசத்தில் நின்றும்
மீன் வீழ, Meen Veezha - நக்ஷத்திரம் விழ
கண்டு, Kandu - அதனைப்பார்த்து (நாம் அப்பால் போகமுடியாதபடி குறவர்கள் கை கொள்ளியைப் பூமியிலே எறிந்தார்கள் என்று ப்ரமித்து)
அஞ்சும், Anjum - பயப்படுமிடமான
வேங்கடம், Vengadam - திருவேங்கடமானது
மேல், Mel - முன்பொருகால்
அசுரர் கோன் வீழ கண்டு, Asurar Kon Veezha Kandu - இரணியாசுரனை முடித்து
உகந்தான், Uganthaan - ப்ரஹ்லாதனுடைய விரோதி தொலைந்தது என்று மகிழ்ந்த பெருமானுடைய
குன்று, Kunru - திருமலையாம்
2122முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படிப் பட்ட பந்தம் உண்டே யாகிலும் அவன் விரோதி நிரசன சீலனாகிலும் குற்றவாளரான நமக்கு அவன் பாடு செல்ல ஒண்ணுமோ -என்ன அவன் குற்றம் பொறுக்கைக்காகவே வந்து நின்றான் – நமக்கு ஒரு க்ருத்யமும் இல்லை – இனி  நீ ஆபி முக்யத்தைப் பண்ணி அவனை அனுபவித்து இருக்கப் பார் என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் – 41
குன்றனைய குற்றஞ் செயினும் குணங்கொள்ளும்
இன்று முதலாக என்னெஞ்சே, – என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு.
என் நெஞ்சே, En Nenje - எனது மனமே!
என்றும், Endrum - எப்போதும்
புறன் உரையே ஆயினும், Puran Uraiye Aayinum - (உள்ளூர இல்லாமல் மேலுக்குச் சொல்லுகிற வார்த்தையாயிருந்தாலும்
பொன் ஆழி கையான் திறன் உரையே, Pon Aazhi Kaiyaan Thiran Uraiye - சக்ரபாணியான எம்பெருமான் விஷயமாகப் பேசும் பேச்சையே
சிந்தித்து இரு, Sindhithu Iru - அநுஸந்தித்துக் கொண்டிரு;
இன்று முதலாக, Indru Mudhalaga - (அப்படியிருந்தால்) இன்று தொடங்கி
குன்று அனைய குற்றம் செய்யினும், Kunru Anaiya Kuttram Seyyinum - மலைபோல் (பெருப்பெருத்த குற்றங்களைச் செய்தாலும்
குணம் கொள்ளும், Gunam Kollum - (அவற்றையெல்லாம் எம்பெருமான்) குணமாகவே திருவுள்ளம் பற்றுவன்
2123முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படிக் குற்றம் பொறுக்க வேண்டுகிற ஹேது என் என்னில் அங்கே பிராட்டிமார் நித்ய வாசம் பண்ணுகையாலே -என்கிறார் குற்றத்தைப் பொறுப்பித்து குணத்தை குவாலாக்குவார்கள் – அவள் -பாபா நாம் வா ஸூ பா நாம் வா -யுத்த -116-44-என்றால் இவன் -தோஷோ யத்யபி தஸ்யஸ்யாத்  -யுத்த -18-3-என்னத் தட்டு உண்டோ – 42
திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவா றென்கொல், – திருமகள்மேல்
பாலோதம் சிந்தப் படநா கணைக்கிடந்த,
மாலோத வண்ணர் மனம்?
பால் ஓதம் சிந்த, Paal Odam Sindha - திருப்பாற்கடலில் சிறு திவலைகளானவை சிதறி விழுந்துஸுகப்படுத்த,
படம் நாக அனை கிடந்த, Padam Naaga Anaikidandha - படமெடுத்த பாம்பினணையிற் பள்ளிகொண்ட
மால் ஓதம் வண்ணர், Maal Odam Vannaar - பெரிய கடல் போன்ற வடிவை யுடையனான எம்பெருமானது
திரு மகள் மேல் மனம், Thiru Magal Mel Manam - பெரிய பிராட்டியார்மேல் (காதல் கொண்ட) திருவுள்ளமானது.
திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால், Thirumagalum Manmagalum Aaymagalum Serndhaal - ஸ்ரீதேவி பூதேவி நீளா தேவி மூவரோடும் கலந்து பரிமாறும் போது
திருமகட்கே தீர்ந்த ஆறு என்கொல், Thirumagathke Theerndha Aaru Enkol - பெரிய பிராட்டி யொருத்தியின் மேலே அற்றுத்தீர்ந்திருக்கிற விதம் என்னோ?
2124முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) பிராட்டிமார் சந்நிதி எப்போதும் உண்டாகையாலே இனி விரோதியைப் போக்குகை என்று ஒரு பணி இல்லை – தம் தாமுடைய ருசிக்கு அநு ரூபமான வ்ருத்தியிலே அன்வயிக்கவே – விரோதிகள் அடங்கலும் தன்னடையே விட்டோடிப் போம் என்கிறார் 43
மனமாசு தீரு மறுவி னையும் சார,
தனமாய தானேகை கூடும், – புனமேய
பூந்துழா யானடிக்கே போதொடு நீரேந்தி,
தாம்தொழா நிற்பார் தமர்.
புனம் மேய பூ துழாயான் அடிக்கே, Punam Maeya Poo Thuzhaayaan Adikke - தன்னிலத்தி லிருப்பது போலவே செல்வி குன்றாதிருக்கிற திருத்துழையை அணிந்துள்ள எம்பெருமான் திருவடிகளில்
போதொடு நீர் ஏந்தி, Pothodu Neer Aendhi - (திருவாராதநத்துக்கு உப கரணமான) புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் எடுத்துக்கொண்டு
தொழா நிற்பார் தமர் தாம், Thozha Nirpaar Thamar Thaam - வணங்குமவர்களான பாகவதர்களுக்கு
மனம் மாசு தீரும், Manam Maasu Theerum - மனக்குற்றங்கள் விட்டு நீங்கும்
அருவினையும் சாரா, Aruvinaiyum Saaraa - (ஸ்வப்ரயத்நத்தால்) நீக்க முடியாத தீவினைகளும் அணுகமாட்டா:
தனம் ஆய, Thanam Aaya - (பக்திமான்களுக்கு செல்வமாகிய பரமபக்தி முதலியவைகளும்
தானே கைகூடும்), Thane Kaikoodum - தனக்குத்தானே வந்து கைபுகுரும்
2125முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இவர்கள் தங்கள் ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தியிலே சமையவே அவனும் இவர்களுக்கு ஈடாகத் தன்னைச் சமைத்துக் கொடுக்கும் என்கிறார் – 44
தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே,
தமருகந்த தெப்பேர்மற் றப்பேர், – தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே,
அவ்வண்ணம் அழியா னாம்.
ஆழியான், Azhiyan - திருவாளியாழ்வான் முதலிய நித்திய ஸூரிகளைப் பரிஜநமாகவுடைய எம்பெருமான்,
தமர் உகந்தது எவ்வுருவம், Thamar Ugandhadhu Evvuruvam - ஆச்ரிதர்களால் உகக்கப்பட்ட உருவம் எதுவோ,
அவ்வுருவம் தானே ஆம், Avvuruvam Thane Aam - அவ்வுருவமாகத்தான் பரிணாமமடைவன்;
தமர் உகந்த்து எப்பேர், Thamar Ugandthu Eppaar - ஆச்ரிதர்களால் உகக்கப்பட்ட திருநாமம் எதுவோ
அப்பேர் ஆம், Appeer Aam - அந்தத் திருநாமமே தனக் காம்படியிருப்பன்;
தமர், Thamar - ஆச்ரிதர்கள்
உகந்து, Ugandhu - உகப்புடனே
எவ்வண்ணம் சிந்தித்து, Evvanam Sindhiththu - குணம் சேஷ்ட்டிதம் முதலியவற்றில் யாதொரு விதத்தை அநுஸந்தித்து
இமையாது இருப்பர், Imaiyadhu Irupper - ஓயாமல் பாவநை பண்ணிக்கொண்டிருப்பார்களோ
அவ்வண்ணம் ஆம், Avvanam Aam - அவ்வண்ணமே யாவன்
2126முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படி இருக்கிறவனுடைய நீர்மை ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் நிலம் அன்று கிடீர் என்கிறார் – 45
ஆமே யமரர்க் கறிய? அதுநிற்க,
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே, – பூமேய
மாதவத்தோன் தாள்பணிந்த வாளரக்கன் நீண்முடியை,
பாதமத்தா லேண்ணினான் பண்பு.
நல் நெஞ்சே, Nal Nenjee - நல்ல மனமே!
பூ மேய மாதவத் தோன் தாள்பணிந்த, Poo Maeya Maadhavath Thon Thaalpanindha - திருநாபிக் கமலத்திற்பொருந்திய மஹா தபஸ்வியான பிரமனுடைய பாதத்திலே வந்து ஆச்ரயித்த
வாள் அரக்கன், Vaal Arakkan - கொடிய இராவணனுடைய
நீள் முடியை, Neel Mudiyai - நீண்ட பத்துத்தலைகளையும்
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு, Paadham Aththal Enninraan Panbu - அந்தத் திருவடிகளாலே கீறி எண்ணிக்காட்டின எம்பெருமானுடைய குணம்.
அமரர்க்கு அறிய ஆமே, Amararukku Ariya Aame - பிரமன் முதலிய தேவர்கட்கு அறியக் கூடியதோ?
அது நிற்க, Adhu Nirka - அவர்கள் அறிய வல்லரல்லர் என்பது கிடக்கட்டும்;
நாமே அறிகிற்போம், Naam E Ariyikirpom - (எம்பெருமானுடைய நீர்ஹேதுக க்ருபாகடாக்ஷத்திற்குப் பாத்திரமாகிய) நாம் அறியக் கடவோம்.
2127முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இவர்களுக்குத் தான் முற்கோலி நின்று ஹித பரனாகை அன்றிக்கே இவர்கள் தாங்கள் உகந்தபடி கடக்கப் போய் அனர்த்தங்களைச் சூழ்த்துக் கொண்டு நிற்கும் அன்றும் பாபத்தைப் போக்கி ரஷிப்பான் அவன் கிடீர் – என்கிறார் – கீழே ப்ரஹ்மாவினுடைய அறிவு கேடு சொல்லிற்று – இதில் ருத்ரனுடைய அறிவு கேடு சொல்லுகிறது  – 46
பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற,
வெண்புரிநூல் மார்பன் வினைதீர, – புண்புரிந்த
ஆகத்தான் தாள்பணிவார் கண்டீர், அமரர்தம்
போகத்தால் பூமியாள் வார்.
பண் புரிந்த நான்மறை யோன், Pan Purintha Nanmarai Yon - ஸ்வரங்களோடு கூடின நால் வேதஙளை நிரூபமாக வுடையனான பிரமனுடைய
சென்னி, Sennai - தலையில்
பலி ஏற்ற, Pali Aetra - [கிள்ளி யெறிந்ததனால் கையிலொட்டிக்கொண்ட கபாலத்தில்] பிச்சை யெடுத்துத்திரிந்தவனும்
வெண் புரி நூல் மார்பன், Ven Puri Nool Marban - வெளுத்த யஜ்ஞோ பவீத்த்தை மார்பிலே அணிந்தவனுமான ருத்ரனுடைய
வினை, Vinai - ப்ரஹ்மஹத்தி பாபமானது
தீர, Theera - நீங்கும்படியாக
புண் புரிந்த ஆகத்தான், Pun Purintha Agaththan - [ரக்த ஜலத்தை எடுத்துக் கொடுப்பதற்காக] தன்னுடைய திரு மார்பைப் புண்படித்தி கொண்டவனுடை எம்பெருமானுடைய
தாள், Thaal - திருவடிகளை
பணிவார், Panivaar - ஆச்ரயிக்குமவர்கள்
அமரர்தம் போகத்தால், Amarartham Pogaththal - நித்யஸூரிகளின் போகமாகிய பரமபதாநு பவத்தோடு
பூமி, Bhoomi - இந்தலீலா விபூதியை
ஆள்வார், Aalvaar - ஆட்சிபுரிவர்கள்.
2128முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) விஷயங்களில் இந்த்ரியங்கள் போகாதபடி நியமித்து சமயக் ஜ்ஞானத்தை யுடையராய்க் கொண்டு ஆஸ்ரயிப்பார்க்கு அல்லது அவன் திருவடிகளைக் கிட்டித்தாய் விட ஒண்ணாது என்கிறார் – 47
வாரி சுருக்கி மதக்களி றைந்தினையும்,
சேரி திரியாமல் செந்நிறீஇ, – கூரிய
மெய்ஞ்ஞானத் தாலுணர்வார் காண்பரே, மேலொருநாள்
கைந்நாகம் காத்தான் கழல்.
மதம் களிறு ஐந்தைனையும், Madhama Kaliru Aindhainaiyum - மதம்பிடித்த ஐந்து யானைகளை போன்ற பஞ்சேங்திரியங்களையும்
வாரி சுருக்கி, Vaari Surukki - ஜலம் போன்ற சப்தாதி விஷயங்களில் நின்றும் இழுத்துப்பிடித்து.
சேரி திரியாமல் செம் நிறீஇ, Seyri Thiriyamal Sem Nireei - கண்டவிடங்களிலும் திரியவொட்டாமல் செவ்வையாக நிலைநிறுத்தி
கூரிய, Kooriya - மிகவும் ஸூக்ஷ்மமான
மெய் ஞானத்தால், Mei Gnanaththal - உண்மையான பக்தி ரூபா பந்நஜ்ஞானத்தாலே
உணர்வார், Unarvaar - (அவனை) உள்ளபடி உணர வல்லவர்கள்
மேல் ஒரு நாள், Mel Oru Naal - முன்பொரு காலத்திலே
கை நாகம் காத்தான், Kai Naagam Kaaththaan - கஜேந்திராழ்வானை ரக்ஷித்தவனான அப்பெருமானுடைய
கழல், Kazhal - திருவடிகளை
காண்பர், Kaanbar - கண்டு அநுபவிக்கப் பெறுவர்கள்.
2129முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) நெஞ்சே -நமக்கு இத் தேவைகள் எல்லாம் வேண்டா கிடாய் அவன் தானே தாம் இருந்த விடத்தே தன்னைக் கொடு வந்து தரும் ஸ்வ பாவனாய் இருந்தான் ஆன பின்பு நீ அவனை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பார் கிடாய் என்கிறார் – 48
கழலொன் றெடுத்தொருகை சுற்றியோர் கைமேல்,
சுழலும் சுராசுரர்க ளஞ்ச, – அழலும்
செருவாழி யேந்தினான் சேவடிக்கே செல்ல,
மருவாழி நெஞ்சே மகிழ்.
ஆழி நெஞ்சே, Aazhi Nenje - கம்பீரமான மனமே!
ஒரு கழல், Oru Kazhal - [முன்பு திருவிக்ரமாவதார காலத்தில்] ஒரு திருவடியை
எடுத்து, Eduthu - மேலுலகங்களிலே செல்ல நீட்டி
ஒரு கை, Oru Kai - ஒரு திருக்கையாலே
சுற்றி, Sutri - [பிரதிகூலரான நமுசி முதலானவர்களைச்] சுழற்றியெறிந்து
ஓர் கை மேல், Oru Kai Mel - மற்றொரு திருக்கையிலே.
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும்செரு ஆழி ஏந்தினான், Suzhalum Surasurargal Anja Azhalumcheru Aazhi Aendinaan - இவனுக்கு என்ன நேரிடுமோ வென்று) தவிக்கிற [அநுகூலரான] தேவர்களும் [பிரதிகூலரான] அசுரர்களும் அஞ்சும்படியாக [எதிரிகளின் மேல்] அழலையுமிழ்கிற யுத்தசாதநமான சக்கரத்தை ஏந்தின எம்பெருமானுடைய
சே அடிக்கே செல்ல, Sae Adikke Sella - திருவடிகளிலே சென்று கிட்டும்படி
மருவு, Maruvu - பொருந்துவாயாக;
மகிழ், Magizh - இதை ஆனந்தரூபமாக ஏற்றுக்கொள்.
2130முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) எல்லாம் செய்தாலும் இவ்வருகு உண்டான பிரகிருதி பிராக்ருதங்களில் விரக்தி பிறந்து அவனை ஆஸ்ரயிப்பார்க்கு அல்லது ஒரு படி கண்டதாய்த் தலைக் கட்ட முடியாது என்கிறார் – 49
மகிழல கொன்றேபோல் மாறும்பல் யாக்கை,
நெகிழ முயல்கிற்பார்க் கல்லால், – முகில்விரிந்த
சோதிபோல் தோன்றும் சுடர்ப்பொன் நெடுமுடி,எம்
ஆதிகாண் பார்க்கு மரிது.
மகிழ் அலகு ஒன்றே போல், Magizh Alagu Ondre Pol - (கணக்கில் நிபுணனான ஒருவனால் வைக்கப்பட்ட) ஒரு மகிழும் விதையே காணிஸ்தாநத்திலும் கோடிஸ்தாநத்திலும் மாறி மாறி நிற்பதுபோல
மாறும் பல் யாக்கை, Maarum Pal Yaakkai - மாறி மாறிப் பலவகையாக வருகின்ற சரீரங்கள்
நெகிழ, Negizhal - தன்னடையேவிட்டு நீங்கும்படியாக
முயலகிற்பார்க்கு அல்லால், Muyalakirparkku Allaal - முயற்சி செய்யக் கூடியவர்களுக்குத் தவிர
ஆர்க்கும், Aarkkum - மற்ற எவர்க்கும்
முகிழ் விரிந்த சோதிபோல் தோன்றும் சுடர் பொன் நெடுமுடி எம் ஆதி காண்பு, Mugizh Virindha Sothipol Thondrum Sudar Pon Nedumudi Em Aadhi Kaanbu - விண்டு விருந்த தேஜஸ்ஸைப் போல் தோன்றுகிற தேஜஸ்ஸையுடைய அழகிய பெரிய திருவபிஷேகத்தை யுடையனான எம்பெருமானைக் காண்பது
அரிது, Aridhu - கூடாதகாரியம்.
2131முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) புறம்புள்ள அந்ய பரதை போய் அவன் பக்கலிலே சிநேக யுக்தராய்க் கொண்டு அவனைக் காண்கை சால எளிது என்கிறார் – 50
அரியபுல னைந்தடக்கி யாய்மலர்கொண்டு, ஆர்வம்
பரியப் பரிசினால் புல்கில், – பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த மாவலிபால், வண்கைநீர்
ஏற்றானைக் காண்ப தெளிது.
அரிய, Ariya - அடக்கமுடியாத
புலன் ஐந்து, Pulan Aindhu - பஞ்சேந்திருயங்களையும்
அடக்கி, Adakki - கட்டுப்படுத்தி,
ஆய், Aai - ஆராயந்தெடுக்கப்பட்ட
மலர், Malar - புஷ்பங்களை
கொண்டு, Kondhu - கையில் ஏந்திகொண்டு
ஆர்வம் புரிய பரிசினால், Aarvam Puriya Parisinaal - அன்பு மிகுந்த விதத்தினாலே
புல்கில், Pulkil - கிட்டப்பார்த்தால்
பெரியன் ஆய் மாற்றாது வீற்றிருந்த மாவலி பால், Periyan Aai Maatrathu Veetrirundha Maavali Paal - ‘நாமே பெரியோம்’ என்னுமஹங்காரத்தையுடையனாய் தானஞ் செய்வது தவறாதவனாய் இருந்த மஹாபலியிடத்தில்
வண்கை, Vankai - உதாரமான தனது திருக்கையாலே
நீர் ஏற்றானை, Neer Aetranai - உதகதாநம் வாங்கின பெருமானை
காண்பது, Kaanbathu - ஸேவிப்பது
எளிது, Elidhu - ஸுலபமாகும்.
2132முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) நெஞ்சே – அவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில் நமக்கு இனிதாக நாம் இவ்வாயாலே திரு நாமத்தைச் சொல்லவே ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் விரோதியைப் போக்கித் தன்னை அவனுக்குக் கொடுத்தாப் போலே நம் விரோதியையையும் போக்கி நமக்குத் தன்னைக் கொடு வந்து தரும் கிடாய் என்கிறார் – 51
எளிதி லிரண்டையும் காண்பதற்கு, என்னுள்ளம்
தெளியத் தெளிந்தொழியும் செவ்வே, – களியில்
பொருந்தா தவனைப் பொரலுற்று , அரியாய்
இருந்தான் திருநாமம் எண்.
என் உள்ளம், En Ullam - எனது நெஞ்சே!(நீ)
தெளிய, Theliya - கலக்கம் தீர்ந்து தெளிவுபெற்றால்
செவ்வே தெளிந்தொழியும், Sevve Thelinthozhiyum - (அந்த எம்பெருமானும்) மிகவும் நன்றாக ப்ரஸந்நனாவன்;
களியில், Kalil - (ஆகையினால்) அஹங்காரத்தாலே
பொருந்தாதவனை, Porundhaadhavanai - அடிபணியாதிருந்த ஹிரண்யாஸீரனோடு
பொரல் உற்று, Poral Utrru - போர்செய்யத் தொடங்கி
அரி ஆய் இருந்தான், Ari Aai Irundhaan - நரசிங்கமாக அவதரித்த பெருமானுடைய
திரு நாமம், Thiru Naamam - திருநாமங்களை,
இரண்டு அடியும் எளிதில் காண்பதற்கு, Irandu Adiyum Elidil Kaanbatharku - (அவனுடைய) உபய பாதங்களையும் சுலப மாகக் காணும் பொருட்டு
எண், Enn - சிந்திப்பாயாக.
2133முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஏன் தான் -இவன் பேர் சொல்லா விடில் ஜீவிக்கை யரிதோ-என்னில் நாட்டில் துர்மாநிகளாய் அதிகாரிகளாய்த் திரிகிறவர்கள் அடங்கலும் தம் தாமுடைய அதிகாரங்கள் நிர்வஹித்துக் கொள்ளுகிறது அவனை ஆஸ்ரயித்துக் காண் என்கிறார்  – 52
எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்,
வண்ண மலரேந்தி வைகலும், – நண்ணி
ஒருமாலை யால்பரவி ஓவாது,எப் போதும்
திருமாலைக் கைதொழுவர் சென்று.
எண்மர், Enmar - அஷ்ட வஸுக்களும்
பதினொருவர், Pathinoruvar - ஏகாதச ருத்ரர்களும்
ஈர் அறுவர், Eer Aruvar - த்வாத சாதித்யர்களும்
ஓர் இருவர், Oru Irugar - இரட்டையரான அச்விநீ தேவதைகளும்
வைகலும், Vaikalum - (ஆகிய முப்பத்து மூவரான தேவர்களும்) நாள்தோறும்
வண்ணம் மலர் ஏந்தி, Vannam Malar Aendhi - நாநாவர்ணங்களை யுடைய புஷ்பங்களை யெடுத்துக்கொண்டு
நண்ணி, Nanni - (எம்பெருமானைக்) கிட்டி
ஒரு மாலையால், Oru Maalaiyal - ஒப்பற்ற புருஷஸூக்தமாகிற சொல் மாலையைக் கொண்டு
ஓவாது, Ovaadhu - இடைவிடாமல்
எப்போதும், Eppodhum - எல்லா வேலைகளிலும்
பரவி, Paravi - துதிசெய்து
திருமாலை சென்று, Thirumalai Sendru - திருமகள் கொழுநனைக்கிட்டி
கைதொழுவர், Kaithozhuvar - வணங்குவர்கள்
2134முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) கார்ய காலத்திலே வந்து – பிரயோஜனங்களைக் கொண்டு போகை யன்றிக்கே – கைங்கர்யமே ஸ்வ பாவமாக உடையராய் இருக்குமவர்கள் அவன் பக்கல் பரிமாறும்படி சொல்லுகிறது – எல்லா நேர்த்தியும் நேர்ந்து – தங்களுக்கு உறுப்பாக ஆஸ்ரயிக்குமவர்களைச் சொல்லிற்று கீழ் இதில் தங்களை எல்லாம் அழிய மாறியும் அங்குத்தைக்கு உறுப்பாம் அவர்களைச் சொல்லுகிறது – 53
சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்,
நின்றால் மரவடியாம் நீள்கடலுள், – என்றும்
புணையாம் மணிவிளக் காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம், திருமாற் கரவு.
திரு மாற்கு, Thiru Maarku - பிராட்டியோடு (எப்போதும்) கூடியிருக்கிற பெருமானுக்கு
அரவு, Aravu - திருவனந்தாழ்வான்,
சென்றால் குடை ஆம், Sendraal Kudai Aam - (அப்பெருமான் )உலாவினால் (அப்போது மழை வெயில் படாதபடி) குடையாக உருவெடுப்பன்;
இருந்தால், Irundhaal - எழுந்தருளியிருந்தால்
சிங்காசனம் ஆம், Singaasanam Aam - (அப்போது) ஸிம்ஹாஸாமாயிருப்பன்;
நின்றால், Nindraal - நின்று கொண்டிருந்தால்
மரவடி ஆம், Maravadi Aam - (அப்போது) பாதுகையாவன்;
நீள் கடலுள், Neel Kadalul - பாம்பினையுடலிலே (சயனிக்கும்போது)
என்றும், Endrum - எப்போதும்
புணை ஆம், Punar Aam - திருப்பள்ளி மெத்தையாவன்;
அணி விளக்கு ஆம், Ani Vilakku Aam - மங்கள தீபமாவன்;
பும்பட்டு ஆம், Pumbattu Aam - அழகிய திருப்பரி வட்டமாவன்;
புல்கும் அணை ஆம், Pulgum Anai Aam - தழுவிக்கொள்வதற்கு உரிய அணையுமாவன்.
2135முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அப் படுக்கையும் தள்ளிப் பொகட்டுத் தன் விபூதி அழியாத படிக்கு ஈடாக இங்கே வந்து சந்நிதி பண்ணி இவற்றை ரஷிக்கும் ஸ்வ பாவன் என்கிறார் – எம்பெருமான் சேஷித்வத்தைக் குறைத்து   பரிமாறும்படி   அவன் ஸ்வரூபம் – இது நிரைநிரை-என்று கொண்டு லஷணம் இருக்கிறபடி – நிரல் நிரை அணி சேர்ந்தது – 54
அரவம் அடல்வேழம் ஆன்குருந்தம் புள்வாய்
குரவை குடம்முலைமல் குன்றம், – கரவின்றி
விட்டிறுத்து மேய்த்தொசித்துக் கீண்டுகோத் தாடி,உண்
டட்டெடுத்த செங்கண் அவன்.
செம் கண் அவன், Sem Kan Avan - செந்தாமரைக் கண்ணனாகிய அப்பெருமான்
கரவு இன்றி, Karavu Inri - மறைவு இல்லாமல் [ஸர்வலோக ப்ரஸித்தமாம்படி]
அரவம், Aravam - காளிய நாகத்தை
விட்டு, Vittu - விட்டடித்தும்
அடல் வேழம், Adal Vezham - பொருவதாக வந்த (குவலயாபீட மென்னும்) யானையை
இறுத்து, Iruthu - (தந்தத்தை) முறித்து உயிர் தொலைத்தும்
ஆன், Aan - பசுக்களை
மேய்த்து, Meyththu - (வயிறு நிரம்ப) மேய்த்தும்
குருந்தம், Kurundham - அஸுரா வேகமுடைய குருந்தமரத்தை
ஒசித்து, Osiththu - ஒடித்துப் பொகட்டும்
புள்வாய், Pulvai - பகாசுரனுடைய வாயை
கீண்டு, Keendu - கிழித்தும்
குரவை, Kuravai - ராஸக்ரீடையை
கோத்து, Koththu - (இடைப்பெண்களோடு) கை கோத்து ஆடியும்
குடம், Kudam - குடங்களைக்கொண்டு
ஆடி, Aadi - கூத்தாடியும்
முலை, Mulai - பூதனையின் முலையை
உண்டு, Undu - (அவளுடைய உயிரோடு) உறிஞ்சி யுண்டும்
மல், Mal - (கம்ஸனால் ஏவப்பட்ட) மல்லர்களை
அட்டு, Attu - கொன்றும்
குன்றம், Kundram - கோவர்த்தன மலையை
எடுத்த, Edutha - (குடையாக) எடுத்துப் பிடித்த இச்செயல்கள்
2136முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவன் இப்படிக் கண்ணிலே வெண்ணெய் இட்டுக் கொண்டு விரோதிகளைப் போக்கித் தன்னுடையாரை நோக்கா நிற்க ஆர் தான் இவர்களைக் கண்  கொண்டு சிவக்கப் பார்ப்பார் என்கிறார் – யம படர் ஆராய்கை யாவது என்-என்றபடி – 55
அவன் தமர் எவ்வினைய ராகிலும், எங்கோன்
அவன்தமரே யென்றொழிவ தல்லால், – நமன்தமரால்
ஆராயப் பட் டறியார் கண்டீர், அரவணைமேல்
பேராயற் காட்பட்டார் பேர்.
அரவு அணைமேல், Aravu Anaimel - (என்ன ஆச்சரியம்!..) சேஷசயனத்தின் மீது வாழ்கிற
பேர் ஆயற்கு, Per Aayarku - இடைத்தனத்தில் குறைவின்றிப் பூர்ணமாயிருக்கிற ஸ்ரீகிருஷ்ணனுக்கு
ஆட்பட்டார் பேர், Aadpattaar Per - அடிமைப்பட்டவர்களின் திருநாமத்தை வஹிக்குமவர்களும்
நமன் தமரால், Naman Thamaral - யமபடர்களாலே
“அவன் தமர் எவ்வினையர் ஆகிலும், Avan Thamar Evvinaiyar Aakilum - “ அந்த சர்வேச்வரனுடைய பக்தர்கள் எவ்வகையான செயலையுடையவராயிருந்தாலும்
எங்கோனவன் தமரே”-, Engonavan Thamare - எம்பெருமானுடைய பக்தர்களன்றோ”
என்று, Endru - என்று கொண்டாடிக் சொல்லி
ஒழிவது அல்லால், Ozhivathu Allal - (தாங்கள்) விலகிப்போவது தவிர,
ஆராயப்பட்டு அறியார், Aaraayappattu Ariyaar - ஆராயப்பட்டிருநக்க அறிய மாட்டார்கள்
2137முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) பேராயர்க்கு ஆட்படுகை யாவது அவன் விஷயீ கரிக்கப் புக்கால் தன் செல்லாமை தோற்ற நிற்கை யல்லது சர்வேஸ்வரன் உடைய பிரபாவம் ஒருவரால் பரிச்சேதிக்க ஒண்ணாது கிடீர் என்கிறார் – 56
பேரே வரப்பி தற்றல் அல்லாலெம் பெம்மானை,
ஆரே அறிவார்? அதுநிற்க, – நேரே
கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான், கண்ணன்
அடிக்கமலந் தன்னை அயன்.
பேரே, Perae - [நாம் வாயினால் ஏதெனுமொன்றைச் சொன்னாலும், அது] எம்பெம்மானது திருநாமமாகவே
வர, Var - வரும்படியாக
பிதற்றல் அல்லால், Pithatral Allal - பிதற்றுவதைத்தவிர
எம்பெம்மானை, Embemmanai - [அந்த] எம்பெருமானை
ஆரே, Aare - ஆர்தான்
அறிவார், Arivaar - (உள்ளபடி) அறிய வல்லவர்கள்?
அது நிற்க, Adhu Nirka - அந்த விஷயம் இருக்கட்டும்;
அயன், Ayan - பிரமனானவன் .
கடி, Kadi - பரிமளம் மிகுந்த
கமலத்துள், Kamalaththul - (அவ்வெம் பெருமானது, நாபிகமலத்திலே (பிறந்து)
நேரே இருந்தும், Nere Irundhum - (அங்கே) நிரந்தர வாஸம் பண்ணிக்கொண்டிருந்தும்
கண்ணன் அடி கமலம் தன்னை, Kannaan Adi Kamalam Thannai - அந்த ஸர்வேச்வரனுடைய திருவடிகளை
காண்கிலான், Kaankilaan - ஸேவிக்கப்பெற்றானில்லை.
2138முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ப்ரஹ்மா அறிய மாட்டான் ஆகில் நீர் பின்னை அறிந்த படி எங்கனே என்னில் திரு நாம த்வாரா அவனை ஆஸ்ரயித்து அவன் தானே தன்னைக் கொடு வந்து காட்டக் கண்டேன் என்கிறார் – சம்சாரம் பய ஸ்தானம் என்னும் இடமும் – உஜ்ஜீவிப்பது அவனைப் பற்றி என்னும் இடமும் – அறிந்தேன் என்கிறார்  – 57
அயல்நின்ற வல்வினையை அஞ்சினே னஞ்சி,
உயநின் திருவடியே சேர்வான், – நயநின்ற
நன்மாலை கொண்டு நமோநாரணா என்னும்,
சொன்மாலை கற்றேன் தொழுது.
அயல் நின்ற, Ayal Nindra - (என்) அருகிலேயே இருந்துகொண்டு (என்னை) இடைவிடாமல் ஹிம்ஸித்துக்கொண்டேயிருக்கிற
வல் வினையை, Val Vinaiyai - மிகக் கடினமான பாவங்களைக் குறித்து
அஞ்சினேன், Anjineen - பயப்பட்டேன்;
அஞ்சி, Anji - (இப்படி) பயப்பட்டு
உய, Uya - (இந்தப் பாப ஸம்பந்தம் நீங்கி) உஜ்ஜீவிக்கும் பொருட்டு
நின், Nin - உன்னுடைய
திரு அடியே, Thiru Adiye - திருவடிகளில்தானே
சேர்வான், Searvaan - வந்து கிட்டுகைக்காக
நயம் நின்ற, Nayam Nindra - இன்பம் பொருந்திய
நல் மாலை கொண்டு, Nal Maalai Kondo - சிறந்த இந்தப் பிரபந்தத்தைக் கொண்டு
தொழுது, Thozhudhu - (உன்னை) ஆச்ரயித்து
நமோ நாரணா என்னும் சொல் மாலை, Namo Naaranaa Ennum Sol Maalai - திருமந்திரத்தின் பொருளை
கற்றேன், Kattren - அப்யஸித்தேன்.
2139முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஆன பின்பு -அவ்விஷயத்தை விட்டு நெஞ்சே நமக்கு ஒருக்காலும் ஆறி இருக்க விரகில்லை கிடாய் என்கிறார் – 58
தொழுது மலர்க்கொண்டு தூபம்கை யேந்தி,
எழுதும் எழுவாழி நெஞ்சே, – பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதொழுவான்,
அந்தரமொன் றில்லை அடை.
நெஞ்சே, Nenje - மனமே!
மலர் கொண்டு, Malar Kondo - புஷ்பங்களை சம்பாதித்துக் கொண்டும்
தூபம், Thoopam - தூபத்தை
கை ஏந்தி, Kai Aendhi - கையிலே ஏந்திக் கொண்டும்.
தொழுது, Thozhudhu - (எம்பெருமானை ) வணங்கி
எழுதும், Ezuthum - உஜ்ஜீவிப்போம்;
எழு, Ezu - நீ புறப்படு;
வாழி, Vaazhi - (உனக்கு இந்த ஸ்வபாவம்) நித்தியமாயிடுக:
மந்திரங்கள், Mandhirangal - [நான் இப்படிச் சொல்லவதற்குக் காரணமென்னவென்றால்] பகவந் மந்த்ரங்களை
பழுது இன்றி கற்பனவும், Pazhuthu Inri Karpanavum - முறைப்படியே நாம் அப்யஸிக்கின்றனவும்
மால் அடி கை தொழுவான் ஏ, Maal Adi Kai Thozhuvan Ae - ஸர்வேச்வரன் திருவடிகளைத் தொழுவதற்காகவேயாம்:
அந்தரம் ஒன்று இல்லை, Andharam Ondru Illai - [ஆனபின்பு] (நாம் ஆறியிருப்பதற்கு) அவகாசம் சிறிதுமில்லை;
அடை, Adai - (அப்பெருமானை) விரைவில் சென்றுகிட்டு.
2140முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) போகத்துக்கு வேணுமாகில் இத்தைச் செய் விரோதியைப் போக்குகைக்கு வேணுமாகில் தசரதாத் மஜனை சரணம் புகு என்கிறார் – 59
அடைந்த அருவினையோ டல்லல்நோய் பாவம்,
மிடைந்தவை மீண்டொழிய வேண்டில், – நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரணழிய, முன்னொருநாள்
தன்விலங்கை வைத்தான் சரண்.
அடைந்த, Adaindha - அடியே பிடித்துப் பற்றிக்கிடக்கிற
அரு, Aru - போக்குவதற்கு அருமையான
வினையோடு, Vinaiyodu - பழவினைகளும்
அல்லல், Allal - (அந்தப் பழவினையின் பயனாக வருகின்ற) மனத்துன்பங்களும்
நோய், Noy - சரீரவியாதிகளும்
பாவம், Paavam - இப்போது செய்கிற பாவங்களும்.
மிடந்தவை, Midanthavai - [இப்படிப் பலவகையாக] ஆத்மாவைத் தெரியாத படி] மூடிக் கிடக்கின்றவை
மீண்டு ஒழிய வேண்டில், Meendu Ozhiy Vendid - வாஸனையோடு விட்டு நீங்க வேணுமானால்
முன், Mun - முன்பொருகால்,
நுடங்கு இடையை, Nudangu Idaiya - மெல்லிய இடையையுடையளான பிராட்டியை
இலங்கை வைத்தான், Ilankai Vaiththan - லங்காபுரியில் சிறை வைத்தவனான இராவணனுடைய
முரண் அழிய, Muran Azhiya - மிடுக்கு அழியும்படி
முன் ஒரு நாள், Mun Oru Naal - ஸ்ரீராமனாய்ப்பிறந்தவொருகாலத்து
தன் வில், Than Vil - தன்னுடைய வில்லை
அம்கை, Amkai - அழகிய திருக்கையிலே
வைத்தான், Vaiththan - எடுத்துப் பிடித்தவனான பெருமானே
சரண், Saran - உபாயமாவான்.
2141முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஒருவன் பல போக்தாவாய் இருக்க ஒருவன் சாதனமாக வேண்டுகிற ஹேது என் என்னில் – அறியுமவன் செய்யும் அத்தனை போக்கி அறியாதவனால் செய்யலாவது உண்டோ என்கிறார் – சேதனர் கீழே போய்த்தும் தாங்கள் படுகிறதும் மேல் வரக் கடவதும் அறியார்கள் சர்வேஸ்வரன் பழகியான் தானே பணிமின் -நான் முகன் திரு -22-என்று இவர்கள் கீழ்ப் பட்டதும் இப்போது படுகிறதும் மேல் படக் கடவதும் எல்லாம் அறிந்து பரிஹரிக்க வல்ல ஜ்ஞான சக்திகளை உடையவன் ஆகையாலே அவனே உபாயமாம் இத்தனை இறே – 60
சரணா மறைபயந்த தாமரையா னோடு,
மரணாய மன்னுயிர்கட் கெல்லாம், – அரணாய
பேராழி கொண்ட பிரானன்றி மற்றறியாது,
ஓராழி சூழ்ந்த வுலகு.
சரண் ஆம் மறை, Saran Aam Marai - (எல்லார்க்கும்) ஹிதத்தை உரைக்குமதான வேதத்தை
பயந்த, Payandha - (எம்பெருமானிடத்தில் தானடைந்து நாட்டிலுள்ளவர்கட்காக) வெளிப்படுத்தின
தாமரையானோடு, Thamaraiyanodu - பிரமனோடுகூட
மரண் ஆய, Maran Aaya - மரணமடையுந் தன்மையுடைய
மன் உயிர்கட்கு எல்லாம், Man Uyirkadku Ellam - நித்யமான ஸ்வரூபத்தையுடைய ஆத்மாக்களெல்லாவற்றுக்கும்
அரண் ஆய, Aran Aaya - ரக்ஷகமான விதங்களை
பேர் ஆழி கொண்டபிராண் அன்றி, Per Aazhi Kondapiran Andri - பெரிய திருவாழியாழ்வானைக் கையிற்கொண்ட எம்பெருமான் அறிவனேயல்லது
மற்று, Mattru - அவனிலும் வேறான
ஓர் ஆழி சூழ்ந்த உலகு, Oru Aazhi Soozhntha Ulaku - கடல் சூழ்ந்த இவ்வுலகத்திலுள்ளார்.
அறியாது, Ariyadhu - அறிமாட்டார்கள்.
2142முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஆக இவனை ஒழிய இவை தம்தாமுக்கு ஹிதம் அறியா -என்றது கீழ் இதில் அவனே அறிந்து இவற்றை நோக்க  வேண்டுகிற ஹேது என் என்னில் பெற்றவனை ஒழிய வளர்ப்பார் உண்டோ என்கிறார் – ஹிதம் அறியாமையே அல்ல தம்தாமுடைய உத்பத்தியும் அறியார்கள் என்கிறது – 61
உலகும் உலகிறந்த வூழியும், ஒண்கேழ்
விலகு கருங்கடலும் வெற்பும், – உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும், திருமால்தன்
புந்தியி லாய புணர்ப்பு.
உலகும், Ulagum - பூமி முதலிய லோகங்களும்
உலகு இறந்த ஊழியும், Ulaku Irandha Oozhiyum - இவ்வுலகம் யாவும் அழிந்து கிடக்கிற பிரளய காலமும்
ஒண் கேழ் விலகு, On Kizh Vilagu - அழகிய நிறத்தோடு அலையெறிகிற
கரு கடலும், Karukadalum - கருநிறத்ததான ஸமுத்ரமும்
வெற்பும், Verpum - மலைகளும்.
உலகினில் செம் தீயும், Ulakinil Sem Theeyum - இவ்வுலகத்திலுள்ள செந்நிறமான் தேஜஸ் பதார்த்தங்களும்
மாருதமும், Maruthamum - காற்றும்
வானும், Vaanum - ஆகாயமும்
திருமால் தன், Thirumaal Than - (ஆகிய இவையாவும்) லக்ஷ்மீபதியான எம்பெருமானுடைய
புந்தியில், Pundhiyil - ஸங்கல்ப ஞானத்திலால்
ஆய, Aaya - படைக்கப்பட்ட
புணர்ப்பு, Punarppu - படைப்புக்களாம்.
2143முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இவற்றை உண்டாக்கி மேல் உள்ள கார்யங்கள் தாங்களே செய்து கொள்ளுகிறார்கள் என்று இருக்கை  அன்றிக்கே இவற்றுக்கு விரோதி யுண்டாமன்று களை பிடுங்குவானும் அவனே என்கிறார் – 62
புணர்மருதி னூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து,
மணமருவ மால் விடையேழ் செற்று, – கணம்வெருவ
ஏழுலகும் தாயினவும் எண்டிசையும் போயினவும்,
சூழரவப் பொங்கணையான் தோள்.
புணர் மருதின் ஊடு போய், Punar Maruthin Oodu Poi - ஒன்றோடொன்று இணைந்திருந்த (இரட்டை) மருதமரத்தின் நடுவே தவழ்ந்து சென்று
பூங்குருந்தம் சாய்த்து, Poongurundham Saayththu - [பின் பொருகாலத்தில்] (இலையும் கொம்புந் தெரியாதபடி) பூக்கள் நிரம்பியிருந்த குருந்த மரத்தை தள்ளிப் போட்டு
மணம் மருவ, Manam Maruva - (மற்றுமொரு காலத்தில்) (நப்பின்னைப் பிராட்டியோடு) விவாஹம் நிறைவேறுதற்காக
மால் விடை ஏழ் செற்று, Maal Vidai Ezh Settru - பெரிய வடிவையுடைய ஏழு ரிஷபங்களையும் முடித்து
கணம் வெருவ, Kanam Veruva - (இன்னமொரு காலத்தில்) எல்லாப் பிராணிகளும் நடுங்கும்படி
ஏழ் உலகும் தாயினவும், Ezh Ulakum Thaayinavum - மேலேழுலகங்களில் தாவிச் சென்றவையும்
எண் திசையும் போயினவும், En Thisaiyum Poiyinavum - எட்டுத்திக்குக்களிலும் போய்ப்பரவியவையும்.
சூழ் அரவம் பொங்கு அனையான் தோள், Sozh Aravam Pongu Anaiyaan Thol - [எவையென்றால்] (பரிமளம் குளிர்த்தி மென்மை என்னும் குணங்கள்) நிரம்பிய திருவனந்தாழ்வானை சிறந்த படுக்கையாகவுடையனான ஸர்வேச்வரனது திருத்தோள்களேயாம்.
2144முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படி இருக்கிற சௌகுமார்யம் பாராதே ஆஸ்ரித விஷயத்திலே தன்னை அழிய மாறியும் கார்யம் செய்யும்படியான அவன் பக்கலிலே என்னுடைய சகல இந்த்ரியங்களும் பிரவணம் ஆய்த்தின நானும் பிரவணன் ஆனேன் என்கிறார்- 63
தோளவனை யல்லால் தொழா, என் செவியிரண்டும்,
கேளவன தின்மொழியே கேட்டிருக்கும், – நாநாளும்
கோணா கணையான் கூரைகழலே கூறுவதே,
நாணாமை நள்ளேன் நயம்.
தோள், Thol - (எனது) கைகளானவை
அவனை அல்லால் தொழா, Avanai Allal Thozha - (வேறு சிலரைத் தொழு என்று நான் சொன்னாலும்) அப்பெருமானையல்லது வேறு எவரையும் வணங்கமாட்டா;
என்செவி இரண்டும், Enchevi Irandum - எனது காதுகளிரண்டும்
கேள் அவனது, Kel Avanathu - ஸகலவித பந்துவுமாகிய அப்பெருமான் விஷயமான
இன்மொழியே, Inmozhiye - இனிய பேச்சுக்களையே
கேட்டு இருக்கும், Kettu Irukkum - கேட்டுக்கொண்டு (அதனாலே) ஸத்தை பெற்றிருக்கும்;
என் நா, En Naa - என்னுடைய நாவானது
நாளும், Naalum - நாள்தோறும்
கோள் நாக அணையான், Kol Naaga Anaiyaan - மிடுக்கையுடையனான திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய அப்பெருமானது
குரை கழலே, Kurai Kazhale - ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்த திருவடிகளையே
கூறுவது, Koovudhuva - சொல்லா நிற்கிறது
நயம், Nayam - (இப்படியான பின்பு) சப்தாதி விஷயங்களை
நாணாமை நள்ளேன், Naanamaai Nalleen - வெட்கப்படாமல் விரும்பு வாரைப்போலே நான் விரும்பமாட்டேன்.
2145முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) நயவேன் நள்ளேன் என்று இங்கனே துணியலாமோ எல்லாம் செய்தாலும் அவை வந்து மேலிடில் செய்வது என் என்னில் நான் நின்ற நிலை இதுவான பின்பு எங்கனே அவை வந்து என்னை மேலிடும்படி என்கிறார் – 1-ஈஸ்வர சேஷமான ஆத்ம வஸ்துவை என்னது என்று இருக்கையும் 2-அபாகவத ஜனங்களோட்டை சஹ வாசம் பண்ணுகையும் 3-பாகவதர்களோடு சஹ வாசம் அற்று இருக்கையும் 4-ஈஸ்வரன் பக்கல் பிரதிபத்தியில் குறைந்து இருக்கையும் 5-புருஷகாரத்தில் அத்யவசாயக்  குறை யுண்டாகையும் இவை இறே தான் வினை வருகைக்கு அடி அவை பின்னை எனக்கு உண்டோ – என்கிறார்  – 64
நயவேன் பிறர்ப்பொருளை நள்ளேன்கீ ழாரோடு,
உயவேன் உயர்ந்தவரோ டல்லால், – வியவேன்
திருமாலை யல்லது தெய்வமென் றேத்தேன்,
வருமாறென் நம்மேல் வினை?
பிறர் பொருளை, Piraar Porulai - பரமபுருஷனுடைய பொருளான ஆத்ம வஸ்துவை
நயவேன், Nayaveen - (என்னுடையதென்று) விரும்பமாட்டேன்;
கீழாரோடு, Keelaarodu - ஸம்ஸாரிகளோடு
நள்ளேன், Nalleen - ஸ்நேஹம் கொள்ள மாட்டேன்;
உயர்ந்தவரோடு அல்லால், Uyarnthavarodu Allal - சிறந்த ஸ்ரீவைஷ்ணவர்களோடு தவிர (மற்றவர்களோடு)
உயவேன், Uyaveen - காலக்ஷேபம் பண்ணமாட்டேன்.
திருமாலை அல்லது, Thirumalai Alladhu - எம்பெருமானையன்றி (தேவதாந்தரங்களை)
தெய்வம் என்று ஏத்தேன், Deivam Endru Aeththen - தெய்வமாகக் கொண்டு துதிக்கமாட்டேன்;
வியவேன், Viyaveen - (இப்படியிருப்பதற்கு ஹேதுவான ஸத்வகுணம் எனக்குத் தானுள்ளதென்று அஹங்கரித்து என்னைப் பற்றி நானே) ஆச்சரியப்படவும் மாட்டேன்;
என் மேல், En Mel - (இப்படியான அறிமாட்டார்கள். பின்பு) எம்பெருமானுடைய அநுக்ரஹத்திற்கு இலக்கான என்மேலே
வினை, Vinai - அவனது நிக்ரஹ ரூபமான ) பாபம்
வரும் ஆறு என், Varum Aaru En - வரும்விதம் ஏது? [வரமாட்டாது]
2146முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இது எனக்கு ஒருவனுக்குமே யன்று – அவனை ஆஸ்ரயித்தார் எல்லார்க்கும் கிடீர் என்கிறார்  – 65
வினையா லடர்ப்படார் வெந்நரகில் சேரார்,
தினையேனும் தீக்கதிக்கட் செல்லார், – நினைதற்
கரியானைச் சேயானை, ஆயிரம்பேர்ச் செங்கட்
கரியானைக் கைதொழுதக் கால்.
நினைதற்கு அரியானை, Ninaitharku Ariyanai - (ஸ்வப்ரயத்நத்தாலே) நினைப்பதற்குக் கூடாதவனும்
சேயானை, Seyaanai - (நெஞ்சுக்கு விஷயமாகாதபடி) மிக்க தூரத்திலிருப்பவனும்
ஆயிரம் பேர், Aayiram Per - ஆயிரம் திருநாமங்களையுடையவனும்
செம் கண் கரியானை, Sem Kan Kariyanai - சிவந்த திருக்கண்களையும் கறுத்த வடிவையுமுடையனுமான பெருமானைக் குறித்து
கை தொழுதக்கால், Kai Thozhudakkal - அஞ்சலி பண்ணினால்
வினையால், Vinaiyal - (அப்படி அஞ்சலி பண்ணினவர்கள்) நல்வினை தீவினைகளால்
அடர்ப்படார், Adarppadar - நெருக்குபடமாட்டார்கள்;
வெம் நரகில், Vem Narakil - கொடிய சம்ஸாரமாகிற நரகத்தில்
சேரார், Searar - (மீண்டும்) சென்று கிட்டமாட்டார்கள்;
தினையேனும், Dinaeyenum - சிறிதளவும்
தீ கதிக்கண், Thee Kathikkan - கெட்டவழிகளில்
செல்லார், Sellar - போகமாட்டார்கள்.
2147முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அறிவுடையராய் இருப்பார்கள் ஆகில் பஜநீயன் அவனே கிடீர் என்கிறார் – 66
காலை யெழுந்துலகம் கற்பனவும், கற்றுணர்ந்த
மேலைத் தலைமறையோர் வேட்பனவும், – வேலைக்கண்
ஓராழி யானடியே ஓதுவதும் ஓர்ப்பனவும்,
பேராழி கொண்டான் பெயர்.
உலகம், Ulagam - உயர்ந்தவர்களான முமுக்ஷுக்கள்
காலை எழுந்து, Kaalaik Ezhunthu - (ஸத்வகுணம் வளரக் கூடிய ) விடியற்காலையில் துயில் விட்டெழிந்து
கற்பனவும், Karppanavum - அப்யஸிப்பனவும்,
கற்று உணர்ந்த மேலை தலைமறையோர், Kattru Unarntha Melai Thalaimaraivor - படித்து அறிவு நிரம்பிய வைதி கோத்தமர்கள்
வேட்பனவும், Vedpanavum - ஸாக்ஷாத்கரிக்க ஆசைப்படுவனவும்.
வேலைக்கண் ஓர் ஆழியான், Velaikkan Oru Azhiyan - (எவையென்றால்) திருப்பாற்கடலில் ஒப்பற்ற திருவாழியையுடையனாய்ப் பள்ளி கொண்டிருக்கும் பெருமானுடைய
அடியே, Adiye - திருவடிகளேயாம்;
ஓதுவதும், Othuvathum - மஹான்களால் ச்ரவணம் பண்ணப் பெறுவனவும்
ஓர்ப்பனவும், Orppanavum - மநநம் பண்ணப் பெறுவனவும்
பேர் ஆழி கொண்டான், Per Aazhi Kondaaan - பெரிய கடல்போன்ற திருமேனியைக் கொண்ட அப்பெருமானுடைய
பெயர், Peyar - திருநாமங்களேயாம்.
2148முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) மோஷ இச்சை யுடையவர்களும் அறிவு தலை நின்றவர்களும் அவனுடைய திருவடிகளையே ஏத்துவது திரு நாமங்களை ஓதுவது என்று சொல்லிற்று -கீழே – இந்த நிர்பந்தம் வேண்டுவான் என் என்னில் நாம் தான் அறிவுடையாரை இ றே சொல்லிற்று அந்த அறிவுக்கு கந்தவ்ய பூமி ஸ்ரீயபதி யல்லது இல்லாமையாலே என்கிறார் – 67
பெயரும் கருங் கடலே நோக்குமாறு, ஒண்பூ
உயரும் கதிரவனே நோக்கும், -உயிரும்
தருமனையே நோக்குமொண் டாமரையாள் கேள்வன்,
ஒருவனையே நோக்கும் உணர்வு.
ஆறு, Aaru - ஆறுகளானவை
பெயரும் கரு கடலே நோக்கும், Peyarum Karu Kadalai Nokkum - பொங்கி கிளர்கின்ற மஹாஸமுத்ரத்தையே நோக்கிச் செல்லும்;
ஒண் பூ, On Poo - அழகிய தாமரைப் பூவானது
உயரும், Uyirum - உந்ததஸ்தநத்திலே [ஆகாசத்திலே] இருக்கிற
கதிரவனே, Kadhiravane - ஸூர்யனையே
நோக்கும், Nokkum - கண்டுமலரும்;
உயிரும், Uyirum - பிராணனும்
தருமனையே நோக்கும், Tharumanaiye Nokkum - யமதர்மராஜனையே சென்று சேரும்;
உணர்வு, Unarvu - [இவை போலவே] ஞானமானது
ஒண் தாமரையாள், On Thamaraiyaal - அழகிய தாமரைப் பூவிற்
கேள்வன், Kelvan - பிறந்த பிராட்டிக்கு
ஒருவனையே, Oruvanaiye - வல்லபனான பெருமானொருவனையே
நோக்கும், Nokkum - சென்று பற்றும்
2149முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அறிவுக்கு பர்யவசாந பூமி அவன் அல்லது இல்லை – இங்கனே இருக்கச் செய்தே அவன் தன்னை அறிவார் தான் இல்லை என்கிறார் – 68
உணர்வாரா ருன்பெருமை? யூழிதோ றூழி,
உணர்வாரா ருன்னுருவந் தன்னை?, உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்வேதப்
பண்ணகத்தாய் நீகிடந்த பால்?
விண்ணகத்தாய், Vinnagaththai - பரமபதத்திலெழுந்தருளியிருப்பவனே!
மண்ணகத்தாய், Mannagaththai - இந்த மண்ணுலகில் திருவ்வதரிப்பவனே!
வேங்கடத்தாய், Vengadaththai - திருமலையில் நின்றருள் பவனே!
பண் நால் வேதம் அகத்தாய், Pan Naal Vedham Agaththai - ஸ்வரப்ரதானமான நான்கு வேதங்களாலும் அறியப்படுபவனே!
உன் பெருமை, Un Perumai - (இப்படிப்பட்ட) உன்னுடைய பெருமையை
ஊழி தோறு ஊழி, Oozhi Thoru Oozhi - காலமுள்ளதனையும்
உணர்வார் ஆர், Unarvaar Aar - (இருந்து ஆராய்ந்தாலும்) அறியக்கூடியவர் யாவர்?
உன் உருவம் தன்னை, Un Uruvam Thannai - உனது திவ்யாத்மஸ்வரூபத்தைத்தான்
உணர்வார் ஆர், Unarvaar Aar - அறியக்கூடியவர் யாவர்?
நீ கிடந்த பால், Nee Kidandha Paal - (ஆர்த்தரக்ஷணத்துக்காக ) நீ பள்ளி கொண்டிருக்கப் பெற்ற திருப்பாற்கடலைத்தான்
உணர்வார் ஆர், Unarvaar Aar - அறிய வல்லாரார்? [எவருமில்லை.]
2150முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) உணர்வார் ஆர் என்று பிறர் விஷயமாகச் சொல்லிற்று அது கிடக்க உன்னாலே தான் உன்னை அறியப் போமோ என்கிறார் – 69
பாலன் றனதுருவாய் ஏழுலகுண்டு, ஆலிலையின்
மேலன்று நீவளர்ந்த மெய்யென்பர், – ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ?
சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்லு.
சோலை சூழ் குன்று எடுத்தாய், Solai Soozh Kuntru Eduththai - சோலைகளால் சூழப்பட்ட கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்துப் பிடித்தவனே!
நீ பாலன் தனது உருஆய், Nee Palaan Thanathu Uruvaai - நீ சிறுகுழந்தை வடிவு கொண்டு
ஏழ் உலகு, Ezhu Ulagu - எல்லா வுலகங்களையும்
உண்டு, Undu - திருவயிற்றிலே வைத்து
ஆல் இலையின் மேல், Aal Ilaiyin Mel - ஓர் ஆலந்தலிரின் மேல்
அன்று, Andru - பிரளயகாலத்தில்
வளர்ந்த, Valarntha - கண்வளர்ந்த செயலை
மெய் என்பர், Mei Enbar - (வைதிகர்கள் யாவரும்) ஸத்யமென்கிறார்கள்.
அன்று, Andru - (எல்லாம் அழிந்து கிடந்த) அக்காலத்தில்
ஆல், Aal - அந்த ஆலானது
வேலை நீர் உள்ளதோ, Velaai Neer Ullathoo - வெள்ளங் கோத்துக்கிடக்கிற பிரளய ஸமுத்திரத்தின் ஜலத்திலுள்ளதோ?
விண்ணதோ, Vinnathoo - (அல்லது) (நிராலம்பமான) ஆகாசதில்லுள்ளதோ?
மண்ணதோ, Mannathoo - (பிரளய ஜலத்திலேகரைந்துபோன) பூமியிலுள்ளதோ?
சொல்லு, Sollu - இவ்வாச்சரியத்தை நீயே சொல்லவேணும்.
2151முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இருந்தபடி இது வாகையால் ஒரு சக்தனைப் பற்ற வேண்டி இருந்தது இறே ஆன பின்பு ஜகத்தில் உள்ளார் அடங்கலும் அநந்ய பரராய்க் கொண்டு இவனை ஆஸ்ரயிங்கோள்   – என்கிறார் – 70
சொல்லுந் தனையும் தொழுமின் விழுமு டம்பு,
சொல்லுந் தனையும் திருமாலை, – நல்லிதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்,
நாமத்தால் ஏத்திதிரேல் நன்று.
திருமாலை, Thirumalai - பிராட்டியோடு கூடினபெருமானை
நல் இதழ் தாமத்தால், Nal Idhal Thaamaththal - அழகிய மலர்களைக் கொண்டு தொடுத்த மாலைகளாலும்
வேள்வியால், Velviyal - யாகம் முதலிய ஸத்கரு மங்களாலும்
தந்திரத்தால், Thandhirathal - (மந்த்ரமில்லாத) வெறும் க்ரியைகளாலும்
மந்திரத்தால், Mandhirathal - (க்ரியாகலாபமில்லாத) வெறும் மந்திரங்களாலும்
விழும் உடம்பு செல்லும் தனையும், Vizhum Udambu Sellum Thanaiyum - அஸ்திரமான இந்த சரீரம் உள்ள வரையில்
தொழுமின், Thozhumin - தொழுங்கள்;
சொல்லும் தனையும், Sollum Thanaiyum - (இவற்றை செய்ய சக்தியில்லாவிட்டால்) (உங்களுக்குச்) சொல்லக்கூடிய சக்தியுள்ளவரையிலும்
நாமத்தால், Namaththal - திருநாமங்களைக் கொண்டு
ஏத்துதிர் ஏல், Aethuthir Ael - புகழ்ந்தீர்களாகில்
நன்று, Nandru - அது மிகவும் நல்லது.
2152முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) நாட்டார் செய்த படி செய்கிறார்கள் நெஞ்சே நீ இவ் விஷயத்தை விடாதே கிடாய் என்கிறார் வியன் மூ வுலகு பெறினும் போய்த் தானே தானே யானாலும் புயல் மேகம் போல் திரு மேனி யம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ் சயமே யடிமை தலை நின்றார் திருத் தாள் வணங்கி இம்மையே பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே ? –திருவாய் மொழி -8-10-2-இத்யாதிப் படியே ஐஸ்வர்ய கைவல்யங்களில்  புகாதே அவன் தன்னையே பற்று என்கிறார் – 71
நன்றுபி ணிமூப்புக் கையகற்றி நான்கூழி,
நின்று நிலமுழுதும் ஆண்டாலும்,– என்றும்
விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்,
அடலாழி கொண்டான்மாட் டன்பு.
ஆழி நெஞ்சமே, Aazhi Nenjamai - (எம்பெருமானிடத்தில்) ஆழ்ந்திருக்கிற நெஞ்சே!
பிணி, Pini - வியாதியையும்
மூப்பு, Mooppu - கிழத்தனத்தையும்
நன்று கை அகற்றி, Nandru Kai Akattri - நன்றாக [ அடியோடு தொலைந்தொழியும்படி] விட்டும் [கைவல்ய மோஷத்தைப்பெற்றாலும்]
நான்கு ஊழி, Nangku Oozhi - நான்கு யுகங்களிலும் [காலமுள்ள வரையுலும்]
மின்று, Minru - ஸ்திரமாக இருந்து
நிலம் முழுதும் ஆண்டாலும், Nilam Muzhudhum Aandalum - பூமி தொடங்கிப்பிரமலோகம் வரையுள்ள இந்த அண்டைச்வரியங்கள் முழுவதையும் ஸ்வாதீனமாய் நிவகிக்கப் பெற்றாலும்
அடல் ஆழிகொண்டான் மாட்டு அன்பு, Adal Aazhikondan Maatu Anbu - தீக்ஷ்ணமான திருவாழியைக் கையிலேந்திய பெருமானிடத்தில் ப்ரீதீயை
விடல், Vidal - விடாமலிரு;
வேண்டினேன், Vendinain - உன்னைப் பிரார்த்திக்கின்றேன் காண்.
2153முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இவருடைய கரணங்கள் ஆனவை இவருக்கு முன்னே அங்கே  ப்ரவணமாய்- ஆழ்வீர்-இவ்விஷயத்தை விடாதே கிடீர் -என்று உபதேசிக்கப் புக்கன குரு சிஷ்ய க்ரமம் மாறி நின்றபடி – 72
அன்பாழி யானை யணுகென்னும், நாஅவன்றன்
பண்பாழித் தோள்பரவி யேத்தென்னும், – முன்பூழி
காணானைக் காணென்னும் கண்செவி கேளென்னும்
பூணாரம் பூண்டான் புகழ்.
அன்பு, Anbu - பகவத்பக்தியே வடிவெடுத்தது போன்றிருக்கிற எனது நெஞ்சானது
ஆழியானை, Azhiyinai - ஸர்வேச்வரனை
அணுகு என்னும், Anugu Ennum - கிட்டி அனுபவி’ என்று எனக்கு உபதேசிக்கின்றது
நா, Naa - வாக்கானது
அவன் தன் பண்பு ஆழி தோள் பரவி ஏத்து என்னும், Avan Than Panbu Aazhi Thol Paravi Aethu Ennum - அப்பெருமானது ஸெளந்தர்ய ஸாகரமான திருத்தோள்களைப் பேசித்துதி என்று உபதேசிக்கின்றது;
கண், Kan - கண்களானவை;
முன்பு ஊழிகாணானை காண் என்னும், Munbu Ozhikaananai Kaan Ennum - நாம் தன்னை வந்து ஆச்ரயிப்பதற்கு முன்பிருந்த காலத்திலுள்ள விபரீத நிலைமையை நெஞ்சாலுமெண்ணாத பெருமானைஸேவி என்று உபதேசிக்கின்றன;
செவி, Sevi - காதுகள்
பூண் ஆரம் பூண்டான் புகழ் கேள் என்னும், Poon Aaram Poondaan Pugazh Keel Ennum - ‘ ஆபரணமான ஹாரம் முதலியவற்றை அணிந்து கொண்டிருக்கிற அப்பெருமானுயைய திருக்குணங்களைக்கேள்’ என்று தூண்டுகின்றன.
2154முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவை மத்யஸ்தமாம் படி தாம் அவ் விஷயத்திலே ப்ரவணரான படி சொல்லுகிறது – 73
புகழ்வாய் பழிப்பாய்நீ பூந்துழா யானை,
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே, – திகழ்நீர்க்
கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்,
உடலும் உயிருமேற்றான்.
நெஞ்சே, Nenje - (நல்லது கெட்டதுகளை ஆராயக்கூடிய ) மனமே!
நீ, Nee - நீ
பூந்துழாயானை, Poondhuzhayaanai - அழகிய திருத்துழாய் மாலையணிந்தபெருமானை
புகழ்வாய், Pugazhvaai - ஸ்தோத்ரம் பண்ணினாலும் பண்ணு;
பழிப்பாய், Pazhippaai - (அன்றியே) நிந்திப்பதானாலும் நிந்தி;
இகழ்வாய், Ikazhvaai - (அன்றியே) அநாதரித்தாலும் அநாதரி;
கருதுவாய், Karuduvaai - (அன்றியே) ஆதரித்தாலும் ஆதரி; (நீ உனக்கு இஷ்டமானபடி செய்;)
திகழ் நீர் கடலும், Thigal Nee Kadhalum - விளங்குகின்ற ஜலபூர்த்தியையுடைய ஸமுத்ரமும்,
மலையும், Malaiyum - பர்வதங்களும்
இரு விசும்பும், Iru Visumbum - பரம்பிய ஆகாசமும்
காற்றும், Kaatrum - வாயுவும்
உடலும், Udalum - (தேவாதி) சரீரங்களும்
உயிரும், Uyirum - (அந்தந்த சரீரங்களிலுள்ள) (பிராணிகளும் ஆகிய இவற்றையெல்லாம் )
ஏற்றான், Aetraan - தரித்துக் கொண்டிருப்பவன் அவ்வெம்பெருமானே காண்.
2155முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவனை ஒழிய வேறு ஆஸ்ரயணீயர் இல்லை என்னா நின்றீர் என் தான் – ருத்ரன் ஆஸ்ரயணீயன் அன்றோ -என்னில் அவனும் இவனுக்கு சரீர பூதன் ஆகையால் இவனே ரஷகன் என்கிறார் – உடலும் உயிரும் என்றத்தோடு -இவனோடு வாசி இல்லை -அவனுக்கு அவனுடைய பிரகாரங்களைப் பார்த்தால் ரஷ்யமாய்த் தோற்றும் இவனுடைய பிரகாரங்களைப் பார்த்தால் ரஷகனாய் இருக்கும் -என்கிறார் – 74
ஏற்றான் புள்ளூர்த்தான் எயிலெரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல்மணி வண்ணத்தான், – கூற்றொருபால்
மங்கையான் பூமகளான் வார்சடையான், நீண்முடியான்
கங்கையான் நீள்கழலான் காப்பு.
ஏற்றான், Aetraan - ரிஷபத்தை வாஹனமாகவுடையவனும்
எயில் எரித்தான், Eiyil Eriththaan - த்ரிபுரஸம்ஹாரம் பண்ணினவனும்
நீற்றான், Neetraan - சாம்பலைப் பூசிகொண்டிருப்பவனும்
கூறு ஒருபால் மங்கையான், Koora Orupaal Mangaiyaan - தனது உடம்பின் ஒரு பக்கத்திலே பார்வதியைத் தரித்துகொண்டிருப்பவனும்
வார் சடையான், Vaar Sadayaan - நீண்ட ஜடையைத்தரித்துள்ளவனும்.
கங்கையான், Gangaiyaan - (அச்சடைமுடியில்) கங்கையைத் தாங்கிக்கொண்டிருப்பவனுமான ருத்ரன்.
புள் ஊர்ந்தான், Pul Oornthaan - கருடனை வாஹநமாகவுடையவனும்
மார்வு இடந்தான், Maarvu Idandhaan - இரணியனது மார்வைப்பிளந்தொழித்தவனும்
நிழல் மணி வண்ணத்தான், Nizhal Mani Vannaththaan - நீலரத்நம்போலே குளிர்ந்தவடிவையுடையவனும்
பூ மகளான், Poo Magalhaan - பெரிய பிராட்டியைத்திவ்ய மஹிஷியாகவுடையவனும்
நீள் முடியான், Neel Mudhiyaan - நீண்ட கிரீடத்தை அணிந்துள்ளவனும்
நீள் கழலான், Neel Kazhalhaan - நீண்ட திருவடிகளையுடையவனுமான சர்வேச்வரனுடைய
காப்பு, Kaappu - ரக்ஷணத்தில் அடங்கினவன்.
2156முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படி ருத்ரனுக்கும் கூட ரஷகனான உன்னை ஆஸ்ரயிக்கப் பெற்றவர்கள் இறே விரோதிகளைப் போக்கப் பெற்று நல் வழி போனார் ஆகிறார் என்கிறார் – 75
காப்புன்னை யுன்னக் கழியும் அருவினைகள்,
ஆப்புன்னை யுன்ன அவிழ்ந்தொழியும் – மூப்புன்னைச்
சிந்திப்பார்க் கில்லை திருமாலே, நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி.
திருமாலே, Thirumaalee - லக்ஷ்மீநாதனே!
உன்னை, Unnai - (பரமபுருஷனான) உன்னை
உன்ன, Unna - ரக்ஷகனாக ஆநுஸந்திக்கு மளவில்
காப்பு, Kaappu - பிரதிபந்தகங்கள்
கழியும், Kazhiyum - விட்டு நீங்கும்;
உன்னை உன்ன, Unnai Unna - உன்னை நினைக்கு மளவில்,
அருவினைகள் ஆப்பு, Aruvinaihal Aappu - போக்கமுடியாத கருமங்களின் பந்தமும்
அவிழ்ந்து ஒழியும், Avizhnthu Ozhiyum - அவிழ்ந்துபோம்;
உன்னை சிந்திப்பார்க்கு, Unnai Sindhippaarakku - உன்னை த்யானிப்பவர்களுக்கு
மூப்பு இல்லை, Mooppu Illai - கிழத்தனம் முதலிய ஷட்பாவ விகாரங்களும் இல்லையாம்;
நின் அடியை வந்திப் பார், Nin Adiyai Vandhi Paar - உன் திருவடிகளை ஆச்ரயிக்கு மவர்கள்
வழி, Vazhi - அர்ச்சிராதி மார்க்கத்தை
காண்பர்-, Kaanbar - கண்டு அனுபவிக்கப்பெறுவர்கள்.
2157முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) உன்னைத் தொழுவார் பிழைப்பார் என்று சொல்ல வேணுமோ உன்னோடு சம்பந்தித்த திருமலை யாழ்வார் தம்மை ஆஸ்ரயித்தார்க்குத் தப்பாமல் ப்ராப்யத்தைக் கொடா நின்ற பின்பு -என்கிறார் – பகவத் பிராப்த்திக்கு கண் அழிவு அற்ற சாதனம் திருமலை என்று இப்பாட்டை ஸ்ரீ எம்பார் எப்போதும் அனுசந்தித்து இருப்பர்- 76
வழிநின்று நின்னைத் தொழுவார், வழுவா
மொழிநின்ற மூர்த்தியரே யாவர், – பழுதொன்றும்
வாராத வண்ணமே விண்கொடுக்கும், மண்ணளந்த
சீரான் திருவேங் கடம்.
வழி நின்று, Vazhi Nindru - பக்திமார்க்கத்திலே நிலைத்து நின்று
நின்னை தொழுவார், Ninnai Thozhuvaar - உன்னை ஆச்ரயிக்கு மவர்கள்
வழுவாமொழி நின்ற மூர்த்தியரே ஆவர், Vazhuvamozhi Nindra Moorththiyare Aavar - உபநிஷத்துக்களில் சொல்லப் பட்டிருக்கிற ஸ்வரூப, ஆலிர்ப்பாவத்தை உடையவராகவே ஆவார்கள்; (இதைப்பற்றிச் சொல்லவேணுமோ?)
மண் அளந்த சீரான் திருவேங்கடம், Man Alandha Seeraan Thiruveengadam - உலகளந்த மஹாநுபாவன் எழுந்தருளியிருக்கிற திருமலையே
பழுது ஒன்றும் வாராத வண்ணமே, Pazhuthu Ondrum Vaaradha Vanname - ஒரு குறையு மில்லாதபடி
விண் கொடுக்கும், Vin Kodukkum - (ஆச்ரிதர்களுக்கு) மோக்ஷமளிக்கக் காண்கிறோமன்றோ.
2158முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) திருமலை ஒன்றுமே யல்ல கிடீர் உகந்து அருளின தேசங்களுக்கும் இப்படிக் கிடீர்-என்கிறார் அவன் நமக்காகப் பண்ணின வியாபாரங்களை அனுசந்திக்க நம்முடைய செயலால் வந்த துக்கங்கள் அடைய ஓடிப் போம் -என்கிறார் – நாம் நம்முடைய அனர்த்தத்துக்கு உறுப்பாக நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் செய்கிற செயலாலே பண்ணிக் கொண்டவை அவன் நம்முடைய ஹிதத்துக்கு உறுப்பாக நிற்பது இருப்பது கிடப்பதான வியாபாரங்களை அனுசந்திக்கத் தன்னடையே ஓடிப் போம் என்கிறார் – 77
வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும், அஃகாத
பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும், – நான்கிடத்தும்
நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே,
என்றால் கெடுமாம் இடர்.
வேங்கடமும், Vengadhamum - திருமலையும்
விண்ணகரும், Vinnagarum - வைகுந்தமாநகரும்
வெஃகாவும், Veghavum - திருவெஃகாவும்
அஃகாத பூ கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும், Aghadha Poo Kidangin Neel Koval Pon Nagarum - பூ மாறாத நீர் நிலைகளையுடைய சிறந்த திருக்கோவலூ ரென்கிற திவ்ய தேசமும்
நான்கு இடத்தும், Naanthu Idaththum - (ஆகிய) நான்கு திருப்பதிகளிலும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் என்றால், Nindraan Irundhaan Kidandhaan Nadandhaan Endraal - (வரிசைக்கிரமமாக) (எம்பெருமான்) நிற்பதும் வீற்றிருப்பதும் பள்ளிகொண்டிருப்பதும் நடப்பதுமா யிருக்கிறா ரென்று அநுஸந்தித்தால்
இடர், Idar - துக்கங்களெல்லாம்
கெடும் ஆம், Kedum Aam - விட்டோடிப் போய்விடும்
2159முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவன் நமக்காகப் பண்ணின வியாபாரங்களை அனுசந்தித்தால் நமக்கு அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்கிற அடிமையில் புக்கு அல்லது நிற்க ஒண்ணாது கிடீர் என்கிறார் – 78
இடரார் படுவார்? எழுநெஞ்சே, வேழம்
தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த, – படமுடை
பைந்நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும்,
கொய்ந்நாகப் பூம்போது கொண்டு.
நெஞ்சே, Nenje - மனமே!
வேழம் தொடர், Vezham Thodar - கஜேந்திராழ்வானை (விழுங்குவதாகத்) தொடர்ந்துவந்த
வான், Vaan - பெரிய
கொடு, Kodu - (நெஞ்சில் இரக்கமின்றியே) கொடுமை பூண்ட
முதலை, Muthalai - முதலையை
சூழ்ந்த, Soolntha - (தப்பிப்போகாதபடி) எண்ணிகொன்றவனும்
படம் உடைய பைநாகம் பள்ளியான், Padam Udaiya Painagam Palliyaan - படத்தையும் பசுமைநிறத்தையுமுடைய திருவனந்தாழ்வானைத்திருப்பள்ளி மெத்தையாகவுடையனுமான எம்பெருமானது
பாதம், Paatham - திருவடிகளை
கொய் நாகம் பூ போது கொண்டு, Koyi Naagam Poo Podhu Kondo - கொய்யப்பட்ட புன்னையின் அழகிய மலர்களைக்கொண்டு
கைதொழுதும், Kaithozhudum - தொழுவோம்;
எழு, Ezu - எழுந்திரு;
இடர், Idar - (அவனுக்கு இவ்வாறு அடிமை செய்யாமல்) துக்கத்தை
படுவார் ஆர், Paduvaar Aar - அநுபவிக்க யாரால் முடியும்? (என்னால் முடியாது.)
2160முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஆஸ்ரிதருக்காக   தன்னை அழிய மாறி மேல் விழுந்து கார்யம் செய்யும் ஸ்வபாவன் என்று  இறே சொல்லிற்றே நின்றது – அது பின்னை எங்கே கண்டோம் அவனுக்கு -என்னில் ஒருத்தனுக்காகத் தன்னை இரப்பாளன் ஆக்கிக் கார்யம் செய்திலனோ என்கிறார் – 79
கொண்டானை யல்லால் கொடுத்தாரை யார்பழிப்பார்,
மண்தா எனவிரந்து மாவலியை, ஒண்தாரை
நீரங்கை தோய நிமிர்ந்திலையே, நீள்விசும்பில்
ஆரங்கை தோய அடுத்து?
மண்தா என மாவலியை இரந்து, Manthaa Ena Maavaliyai Irandhu - (‘மூவடி) நிலத்தை எனக்குத்தா’ என்று மாவலியிடத்தில் யாசித்து
ஒண் தாரைநீர், On Thaarainir - (அவனும் மறுக்கமாட்டாமல் அப்படியே உனக்குத் தந்தேனென்று தாரை வார்க்க) அழகிய அந்த நீர்த்தாரை
அம் கை, Am Kai - (தனது) அழகிய திருக்கையிலே
தோய, Thoya - வந்து விழுந்ததும்
நீள் விசும்பிலார், Neel Visumbilaar - பரம்பின மேலுலகத்தில் வாழ்கின்ற ப்ரஹ்மாதிகளுடைய
அம் கை, Am Kai - அழகிய கைகள்
தோய், Thoy - ஸ்பர்சித்துத் திருவடி விளக்கும்படி
அடுத்து நிமிர்ந்திலையே, Aduthu Nimirthilaye - கடுக ஓங்கி வளரவில்லையோ?
கொண்டானை, Kondaanai - (இப்படி தன்னதான வஸ்துவைக் கொள்வதற்கும் தன்னை அழிய மாறிவந்து) தன்னதாக்கிக் கொண்ட எம்பெருமானைப்
அல்லால், Allaal - பழிக்கிறார்களேயன்றி
கொடுத்தாரை யார் பழிப்பார், Koduththaarai Yaar Pazhippaar - (தன்னதல்லாத்தைத் தன்னதாக அபிமானித்துக்) கொடுத்த அந்த மாவலியைப் பழிப்பார்கள் யாருமில்லையே! (இஃது என்ன அநியாயம்!)
2161முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) மகா பலி பக்கல் நின்றும் விபூதியை மீட்டுக் கொண்டு நோக்கின் அவ்வளவே அன்றிக்கே ஒருவன் சரணம் புகுந்தால் அவனுக்கு அசாதாரண பரிகரத்தோடே விரோதம் உண்டே யாகிலும் ந ஷமாமி -என்கிறத்தைப்  பாராதே அவனோடு பொருந்த விட்டு அவனை இட்டு வைத்தே நோக்குவிப்பான் ஒருவன் – என்கிறது – அதாகிறது பாதாளத்திலே ஸூமுகன் என்றொரு சர்ப்பமாய் அவனைப் பெரிய திருவடி ஆமிஷமாகக் கணிசித்து இருக்க அத்தைக் கேட்டு அஞ்சி சர்வேஸ்வரன் இந்திர லோகத்திலே உபேந்திர மூர்த்தியாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்க அங்கே சென்று அவன் எழுந்து அருளி இருந்த சிம்ஹாசனத்திலே சுற்றிக் கொண்டு கிடந்தான் ஆய்த்து – சரணம் புகுவார்க்கு லஷணம் பவத் விஷய வாசின -ஆரண்ய -1-20-என்னும் இவ்வளவே இறே பெரிய திருவடி அங்கே சென்று காணாமே பெரிய வேகத்தோடு இங்கே இவன் இருந்த படியைக் கண்டு அந்தரங்கராய் வஹிக்குமவர்கள் பொதுவாகச் சில சொல்லுமா போலே சொல்ல சர்வேஸ்வரனும் அத்தைக் கேட்டுப் பின்னையும் அவனை விட்டே சமாதனத்தைப் பண்ணி அவன் கையிலே காட்டிக் கொடுக்க அவனும் அத்தை ஆபரணமாக உடம்பிலே ஏறிட்டுக் கொண்டு நோக்கிக் கொடுத்த படி சொல்லுகிறது – 80
அடுத்த கடும்பகைஞர்க் காற்றேனென் றோடி,
படுத்த பொரும்பாழி சூழ்ந்த – விடத்தரவை,
வல்லாளன் கைக்கொடுத்த மாமேனி மாயவனுக்கு,
அல்லாதும் ஆவரோ ஆள்?
அடுத்த கடும்பகைஞற்கு, Adutha Kadumbakaiyarnku - நெருங்கிய கொடிய சத்துருவான கருடனுக்கு
ஆற்றேன் என்று, Aatren Endru - (நேரே நின்று பிழைத்திருக்கத்தக்க) வல்லமையுடையேனல்லேன்’ என்று சொல்லிக்கொண்டு
ஓடி, Odi - விரைந்து ஓடிப்போய்,
படுத்த பெரு பாழி, Padutha Peru Pazhi - (எம்பெருமான் பள்ளி கொள்ளுமாறு) விரித்த பெருமைபெற்ற படுக்கையாகிய சேஷனை
சூழ்ந்த, Soolntha - சுற்றிக்கொண்ட
விடத்து அரவை, Vidathu Aravai - விஷத்தையுடைய ஸுமுகனென்கிற ஸர்ப்பத்தை
வல்லாளன் கை கொடுத்த, Vallalan Kai Kodutha - வலிமையுடைய கருடனது கையிலே (அடைக்கலப் பொருளாகத்) தந்து ரக்ஷித்த
மா மேனி மாயவனுக்கு அல்லாதும், Maa Meeni Maayavanukku Alladum - சிறந்த திருமேனியையுடைய எம்பெருமானுக்குத் தவிர
ஆள் ஆவரோ, Aal Aavaro - (மற்ற தேவதாந்தரங்கட்கு) அடிமையாவர்களோ.
2162முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) சம்சாரிகள் தம்தாமுக்குத் தாம்தாம் பண்ணிக் கொள்ளும் ஹிதம் சம்சாரத்தைக் கடத்துகை என்றொரு பேர் உண்டோ – அவன் திரு நாமத்தைச் சொல்லிப் பிழைத்துப் போம் இத்தனை போக்கி -என்கிறார் – ப்ரயோஜ நாந்தர பரர்க்கு உடம்பு நோவக் கடல் கடைந்து சாவாமல் காக்கும் அவன் திரு நாமம் போக்கி இல்லை -என்கிறார் – 81
ஆளமர் வென்றி யடுகளத்துள் அஞ்ஞான்று,
வாளமர் வேண்டி வரைநட்டு, – நீளரவைச்
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே, தொன்னரகைப்
பற்றிக் கடத்தும் படை?
ஆள் அமர், Aal Amar - யுத்தவீரர்கள் நெருங்கியிருக்கப்பெற்றதும்
வென்றி, Vendri - ஜெயத்தையுடையதுமான
அடுகளத்துள், Adugalaththul - (எதிர்த்தவரைக்) கொல்லுகின்ற யுத்தகளத்திலே
அஞ்ஞான்று, Ajnjantru - (அசுரர்களைத் தேவர்கள் மேல்விழுந்து நலிந்த) அக்காலத்திலே
வாள் அமர் வேண்டி, Vaal Amar Vendi - (அநுகூலரான தேவர்கட்கு வெற்றி யுண்டாகும்படி) மதிப்புடைய யுத்தத்தை விரும்பி.
வரை நட்டு, Varai Nattu - (அதற்கு ஏற்ப) (தண்ணீரில் அமிழக்கூடிய, மந்த்ர) பர்வதத்தை மத்தாகநாட்டி.
நீள் அரவை சுற்றி, Neel Aravai Sutti - உடல் நீண்ட வாசுகி நாகத்தைக் கடைகயிறாகச் சுற்றி
கடைந்தான், Kadaindhaan - அமுத முண்டாகும்படி திருப்பாற் கடலைக்கடைந்தவனுடைய
பெயர், Peyar - திருநாமம் (எப்படிப்பட்ட தென்றால்)
பற்றி, Patri - (ஸம்ஸாரிகளை) வாரிப்பிடியாகப் பிடித்துக் கொண்டுபோய்
தொல் நரகை, Thol Narakai - பழமையாயிருக்கிற (ஸம்ஸாரமென்னும்) நரகத்தை
கடத்தும், Kadaththum - தாண்டுவிக்கின்ற
படை, Padai - ஸாதனம்.
2163முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) கடல் கடைந்தவன் பேர் சொல்லும் போது அவனைக் கண்டு சொல்ல வேணுமே அவனை ஆஸ்ரயிக்கும் போது தேவர்கள் ஆஸ்ரயிக்க வேணுமே என்றவர்க்குக் குறை தீரும்படி சர்வ சமாஸ்ரணீயனாய்க் கொண்டு திருமலையிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார் – 82
படையாரும் வாட்கண்ணார் பாரசிநாள், பைம்பூந்
தொடையலோ டேந்திய தூபம், – இடையிடையின்
மீன்மாய மாசூணும் வேங்கடமே, மேலொருநாள்
மான்மாய எய்தான் வரை.
மேல் ஒருநாள், Mel Orunaal - முன்னொரு காலத்திலே [ஸ்ரீராமாவதாரத்திலே]
மான், Maan - மாரீசனாகிற மாயமான்
மாய, Maaya - இறந்துவிழும்படி
எய்தான், Eydhaan - அம்பு தொடுத்து விட்ட இராமபிரான் (நித்திய வாஸஞ்செய்கின்ற)
வரை, Varai - மலையாவது,
படை ஆரும் வாள் கண்ணார், Padai Aarum Vaal Kannaal - வேலாயுதம் போன்று ஒலி பொருந்திய கண்களையுடைய பெண்கள்
பாரசி நாள், Paarasi Naal - த்வாதசியன்று
பை பூ தொடையலோடு, Pai Poo Thodaiyalodu - பசிய (வாடாத) மலர்களைத் கொண்டு தொடுத்த மாலையோடுகூட
ஏந்திய, Aendhiya - திருவேங்கட முடையானுக்கு ஸமர்ப்பிக்கும்படி) ஏந்தியுள்ள
தூபம், Thoopam - தூபமானது
இடை இடையில் மீன், Idai Idaiyil Meen - (ஆகாசத்தில்) நடுவே நடுவெ தோன்றுகின்ற நக்ஷத்ரங்கள்
மாய, Maaya - மறையும்படி
மாசூணும், Maasoonum - மாசு ஏறும்படி பண்ணாநிற்கிற
வேங்கடமே, Vengadame - திருமலையேயாகும்.
2164முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவன் ஆஸ்ரித பரதந்த்ரன் அவர்களது அபேஷிதம் செய்யும் ஸ்வ பாவன் என்று நீர் எங்கனே அறிந்தீர் -என்ன மது கைடபர்களை நிரசிக்க வல்ல பரிகரம் உடையவன் நீ- அது கொண்டு கார்யம் கொள்ளாதே மலையை எடுப்பது ருஷபங்களை அடர்ப்பது ஆயத்து வெருமனேயோ என்கிறார் – 83
வரைகுடைதோல் காம்பாக ஆநிரைகாத்து, ஆயர்
நிரைவிடையேழ் செற்றவா றென்னே, – உரவுடைய
நீராழி யுள்கிடந்து நேரா நிசாசரர்மேல்,
பேராழி கொண்ட பிரான்?
உரவு உடைய, Uravu Udaiya - மிடுக்கை யுடைத்தான
நீராழியுள், Neeraazhiyl - நீரையுடைய திருப்பாற்கடலிலே
கிடந்து, Kidandhu - திருக்கண்வளர்ந்து,
நேர் ஆ(ன), Ner Aan - எதிரியாகவந்த
நிசாசரர் மேல், Nisaacharar Mel - மதுகைடபர் முதலிய ராக்ஷஸர்களின்மீது
பேர் ஆழி, Peer Aazhi - (அவர்கள் நீறாகும்படி) பெரிய சக்ராயுதத்தை
கொண்ட, Konda - கையிற் கொண்டிருக்கிற
பிரான், Piraan - உபகாரகனே!
வரை குடை ஆக, Varai Kudai Aaga - (இப்படி கருதுமிடஞ் சென்று பொருது கைநிற்க வல்ல திருவாழியாழ்வானிருக்கவும் அவனைக்கொண்டு காரியங்கொள்ளாமல்) (ஒருவராலும் அசைக்கவும் முடியாத கோவர்த்தன) மலையே குடையாகவும்.
தோள் காம்பு ஆக, Thol Kaambu Aaga - தனது திருத்தோளே அந்தக்குடைக்குக் காம்பாகவும் ஆக்கி
ஆ நிரை காத்து, Aa Nirai Kaathu - பசுக்களின் கூட்டங்களைப் பாதுகாத்து,
ஆயர் நிரை விடை ஏழ், Aayar Nirai Vidai Ezh - (நப்பின்னைப் பிராட்டிக்காக) இடையர்கள் வைத்திருந்த திரண்ட ரிஷபங்கலேழையும்
செற்ற ஆரு, Settra Aaru - முடித்த விதம்
என்னே, Ennae - எங்ஙனே?
2165முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) உன்னுடைய ரஷகத்வத்தைச் சிலராலே பரிச்சேதிக்கலாய் இருந்ததோ – ரஷ்யத்தின் அளவேயோ ரஷகனான உன்னுடைய பாரிப்பு என்கிறார் – 84
பிரான்உன் பெருமை பிறரா ரறிவார்?,
உராஅ யுலகளந்த ஞான்று, – வராகத்
தெயிற்றளவு போதாவா றென்கொலோ, எந்தை
அடிக்களவு போந்த படி?
பிரான், Piraan - உபகாரகனே!
உலகு, Ulaku - லோகத்தை
உராய் அளந்த நான்று, Uraai Alandha Naandru - எங்கும் ஸஞ்சரித்து அளந்தகாலத்தில்
எந்தை, Endhai - எனது ஸ்வமியான வுன்னுடைய
அடிக்கு, Adikku - திருவடிகட்கு
அளவு போந்த, Alavu Pontha - அளப்பதற்குப் போந்திருந்த
படி, Padi - பூமியானது
வராகத்து, Varagaththu - வராஹரூபியான உன்னுடைய
எயிறு, Eiyiru - திருவெயிற்றின்
அளவு, Alavu - ஏக தேசத்தளவும்
போதா, Podhaa - போதாதாக இருந்த
ஆறு, Aaru - விதம்
என் கொல், En Kol - எங்ஙனேயோ?
உன் பெருமை பிறர் ஆர் அறிவார், Un Perumai Pirar Aar Arivaar - உனது பெருமையையறிவார் யாருமில்லை
2166முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படிப் பட்ட அபரிச்சின்ன விஷயமான வைபவத்தை எல்லாம் கண்டு அனுபவித்தாயாய் ஏறிமறிந்து இருக்கிற நீ இன்னும் பேராது கண்டு அனுபவியாய் -என்ன என் செய நாம் எல்லாம் செய்தோமாய் அன்றோ இருக்கிறது என்ன இந்த்ரிய ஜெயம் பண்ணி ஆஸ்ரயணத்திலே  இழிந்த வித்தனை யல்லது நீ அவன் படிகளிலே என் கண்டாய் என்கிறார் – 85
படிகண் டறிதியே பாம்பணையி னான்,புட்
கொடிகண் டறிதியே? கூறாய், – வடிவில்
பொறியைந்து முள்ளடக்கிப் போதொடுநீ ரேந்தி,
நெறிநின்ற நெஞ்சமே நீ.
பொறி ஐந்தும், Porii Aindhum - பஞ்சேந்திரியங்களையும்
வடிவில் உள் அடக்கி, Vadivil Ula Adakki - (வெளியில் மேயவொட்டாதபடி) சரீரத்திற்குள்ளே அடங்கியிருக்கச்செய்து
போதொடு நீர் ஏந்தி, Pothodu Neer Aendhi - (திருவாராதன ஸாமக்ரியான) புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் தரித்துக்கொண்டு
நெறி, Neri - ஆச்ரயிக்கும் மார்க்கத்திலே
நின்ற, Nindra - நிலைத்து நின்ற
நெஞ்சமே, Nenjamai - மனமே!
நீ, Nee - நீ
பாம்பு அணையினான், Paambu Anaiyinan - சேஷ்ஷாயியான பெருமானுடைய
புள் கோடி, Pul Kodi - கருடப்பறவையாகிற த்வஜத்தை
கண்டு, Kandu - ஸேவித்து
அறிதியே, Aridhiyey - அநுபவித்து அறிந்திருக்கிறாயோ? (அன்றி)
படி, Padi - அவனது திருமேனியை
கண்டு அறிதியே, Kandu Aridhiyey - ஸேவித்து அநுபவித்து அறிந்திருக்கிறாயோ?
கூறாய், Kooraai - சொல்லு
2167முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இவருக்கு இப்படி நம்மால் அபேஷிதம் ஏது என்று பார்த்து அபேஷிதமான அவாவைத் தன் தலையிலே ஏறிட்டுக் கொண்டு இவர் இருந்த இடத்திலே பிராட்டியும் தானுமாக நெருக்கப் புக்கார்கள் – இவர் தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து சாஷாத்கரித்ததது இல்லை இறே என்ன தரியான் இறே அவன்   – 86
நீயும் திருமகளும் நின்றாயால், குன்றெடுத்துப்
பாயும் பனிமறைத்த பண்பாளா, – வாயில்
கடைகழியா வுள்புகாக் காமர்பூங் கோவல்
இடைகழியே பற்றி யினி .
குன்று, Kunru - கோவர்த்தன மலையை
எடுத்து, Eduthu - வேரோடு பிடுங்கி யெடுத்து
பாயும் பனி மறுத்த, Paayum Pani Maruttha - மேலேவந்து சொரிகிற மழையை மேலேவிழாமல் தடுத்த
பண்பாளா, Panpaalaa - குணசாலியே!
காமர் பூ கோவல், Kaamar Poo Koval - விரும்பத்தக்க அழகிய திருக்கோவலூரில்,
வாசல் கடை, Vaasal Kadai - திருவாசலுக்கு வெளியே.
கழியா, Kazhiya - வெளிப்பட்டுப் போகாமலும்
உள் புகா, Ul Pugaa - உள்ளே புகாமலும்
இடைகழியே, Idaikazhiyey - நடுக்கட்டான இடை கழியிடத்தையே
பற்றி, Patri - (பொய்கை பூதம் பேய் என்ற நாங்கள் மூவரும் தங்கியிருந்ததனால்) விரும்பிய இடமாகக் கொண்டு
நீயும் திருமகளும், Neeyum Thirumagalum - நீயும் பிராட்டியுமாக
இனி, Ini - இப்போது
நின்றாய், Nindraai - நின்றருளினாய்;
ஆல், Aal - ஆச்சரியம்!
2168முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) சர்வேஸ்வரன் வந்து இப்படி வந்து சந்நிஹிதன் ஆனபின்பு இனி நரகத்துக்கு ஆள் கிடையாது அவ்வோ விடங்களுக்குக் கடவார் வாசல்களை யடித்து ஓடிப் போக வமையும் என்கிறார் – நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றும்  இல்லை -திருவாய் மொழி-5-2-1-என்னுமா போலே – 87
இனியார் புகுவா ரெழுநரக வாசல்?
முனியாது மூரித்தாள் கோமின், – கனிசாயக்
கன்றெறிந்த தோளான் கனைகழலே காண்பதற்கு,
நன்கறிந்த நாவலம்சூழ் நாடு.
கனி சாய, Kani Saaya - விளாம்பழம் உதிர்ந்து விழும்படி
கன்று, Kandru - வத்ஸாஸுரனை
எறிந்த, Erintha - எறிதடியாக எடுதெறிந்து இரண்டசுரரையும் முடித்த
தோளான், Tholaaan - திருத்தோள்களையுடையவனான ஸர்வேச்வரனுடைய
கனை கழலே, Kanai Kazhale - ஆபரணத்வநியையுடைய திருவடிகளை
கண்பதற்கு, Kanpatharku - ஸேவிப்பதற்கு ஸாதநம் (அவன் உகந்து வாழ்கிற திருக்கோவலூர்க்கு ஸமீபமான இடத்தில் வஸிப்பதுதானென்று)
நன்கு, Nanbu - நன்றாக
அம் நாவல் சூல் நாடு, Am Naaval Soor Naadu - அழகிய ‘ஜம்பூ’ என்று பேர்படைத்த பரந்த த்வீ பத்திலுள்ள பிராணிகள்
அறிந்த, Arindha - அறிந்துவிட்டன;
எழு நரகம் வாசல், Ezhu Naragam Vaasal - (இப்படியானபின்) ஏழுவகைப்பட்ட நரகங்களின் வாசல்களிலே
இனி, Ini - இனிமேல்
புகுவார் ஆர், Puguvaar Aar - பிரவேசிப்பவர் யாவர்?
முனியாது, Muniyadhu - (ஒருவருமில்லை) (ஓ யமகிங்கரர்களே!) (உங்கள் ஸ்தானத்துக்கு அழிவுண்டாவதாகச் சொல்லுகிற என்மேல்) கோபங்கொள்ளமல்
மூரி தான் கோமின், Moori Thaan Koamin - (இனி ஒருகாலும் திறக்கமுடியாதபடி) பெரிய தாழ்ப்பாளைப்போட்டுப் பூட்டுங்கோள்.
2169முதல் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) - வழி பறிக்கும் நிலத்திலே -தம் தாம் கையிலே தனம் கொண்டு தப்புவாரைப் போலே என்னுடைய மநோ வாக் காயங்கள் மூன்றுக்கும் விஷயம் இங்கே யாகப் பெற்றேனே என்கிறார் 88
நாடிலும் நின்னடியே நாடுவன், நாடோறும்
பாடிலும் நின்புகழே பாடுவன், சூடிலும்
பொன்னாழி யேந்தினான் பொன்னடியே சூடுவேற்கு,
என்னாகி லென்னே எனக்கு?
நாடிலும், Naadilaam - (மனத்தினால்) தேடும் போது
நின் அடியே, Nin Adiye - உனது திருவடிகளையே
நாடுவன், Naaduvan - தேடுவேன்;
நாள் தோறும், Naal Thoram - எப்போதும்
பாடிலும், Paadilaam - வாய்விட்டு ஏதாவது சொல்லும்போதும்
நின் புகழே, Nin Pugazhe - உனது புகழ்களையே
பாடுவன், Paaduvan - பாடுவேன்;
சூடிலும், Soodilaam - ஏதாவதுதொன்றைத் தலையில் அணிவதாயிருந்தாலும்
பொன் ஆழி ஏந்தினான், Pon Aazhi Aendhinaan - அழகிய திருவாழியைத்தரித்து கொண்டிருக்கின்ற உன்னுடைய
பொன் அடியே, Pon Adiye - அழகிய திருவடிகளையே
சூடுவேற்கு எனக்கு, Sooduveerkku Enakku - சிரோபூஷணமாகக் கொள்பவனான எனக்கு
என் ஆகில் என், En Aakil En - எது எப்படியானாலென்ன?
2170முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) கீழ்ப் பிறந்த லாபமானது திரியட்டும் பின்னாட்டும்படி சொல்லுகிறார் – நாட்டார்க்கு நினைக்கையில் உள்ள அருமை போரும் இவர்க்கு இவ்விஷயத்தை மறைக்கைக்கு – 89
எனக்கா வாரா ரொருவரே, எம்பெருமான்
தனக்காவான் தானேமற் றல்லால், – புனக்காயாம்
பூமேனி காணப் பொதியவிழும் பூவைப்பூ,
மாமேனி காட்டும் வரம்.
எனக்கு, Enakku - (எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்திற்குப் பாத்திரபூதனான எனக்கு
ஆவார் ஆர் ஒருவரே, Aavar Aar Oruvare - ஒப்பாகுபவர் எவரொருவரிருக்கின்றனர்? [எவருமில்லை;]
எம்பெருமான், Emperumaan - அந்த ஸர்வேச்வரனும்
தானே தனக்கு ஆவான் அல்லால், Thane Thanakku Aavaan Allaal - தானே தனக்கு ஒப்பாவானே யல்லாமல்
மற்று, Mattru - அவன்தானும் எனக்கு ஒப்பாகவல்லனோ?
புனம் காயா பூமேனி, Punam Kaayaa Poomeeni - (இப்படி நீர் சொல்லும்படி உமக்கு வந்த ஏற்ற மென்ன? என்னில்) தனக்கு உரிய நிலத்தில் தோன்றிய காயாம்பூவின் நிறமும்
காண பொதி அவிழும் பூவைப்பூ, Kaan Pothi Avizhum Poovaippoo - காணக்காணக் கட்டவிழா நிற்கும் பூவைப்பூவின் நிறமும்
வரம், Varam - சிறந்ததான
மா மேனி, Maa Meeni - (அவனது) கரிய திருமேனியை
காட்டும், Kaattum - எனக்குக் காட்டா நிற்கும்.[ஆகையாலே, போலியான பொருள்களைக் கண்டும் அவனைக் கண்டதாகவே நினைந்து மகிழ்கிற எனக்கு ஒருவரும் ஒப்பாகார் என்றது.]
2171முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) போலியைக் காட்டித் தம்மைத் தரிப்பித்த பிரசங்கத்தைக் கொண்டு அநு கூலனான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு அவ்வடிவைக் கொண்டு முன்னே நின்று அவன் விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுத்த படி சொல்லுகிறார் – நரசிம்ஹ ரூபியான ஈஸ்வரன் உடைய ஆஸ்ரித விரோதி நிரசன சீலத்தையும் வாத்சல்யத்தையும் அனுசந்திக்கிறார் – 90
வரத்தால் வலிநினைந்து மாதவநின் பாதம்,
சிரத்தால் வணங்கானா மென்றே, – உரத்தினால்
ஈரரியாய் நேர்வலியோ னாய இரணியனை,
ஓரரியாய் நீயிடந்த தூன்?
மாதவ, Maadhava - திருமாலே!
ஈர் அரி ஆய், Eer Ari Aayi - (இரண்டு கூறாகக்) கிழித்துப் போடவேண்டிய சத்துருவாகி
நேர் வலியோன் ஆய், Ner Valiyon Aayi - எதிர்த்து நின்று போர் செய்யும் வலிவையுடையனாகிய
இரணியனை, Iraniyanai - ஹிரண்யாஸுரனது
ஊன், Oon - சரீரத்தை ,
ஓர் அரிஆய், Oor Ariyaayi - ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாகி
உரத்தினால், Uraththinaal - உனது மிடுக்கினாலே
நீ இடந்தது, Nee Idandhadhu - நீ உன் நகங்களினால் குத்திக் கீண்டதானது,
வரத்தால், Varaththaal - (பிரமன் முதலானவர்கள் கொடுத்த) வரத்தினால் (தனக்கு உண்டான)
வலி, Vali - பலத்தை
நினைந்து, Ninaindhu - பெரிதாக மதித்து
நின் பாதம், Nin Paatham - உனது திருவடிகளை
சிரத்தால், Siraththaal - தனது தலையினால்
வணங்கானாம் என்றே, Vanangaanam Endrae - வணங்காமலிருந்தானென்ற காரணத்தினாலோ? (அன்று; பக்தனான ப்ரஹ்லாதனை நலிந்தானென்ற காரணத்தினாலே.)
2172முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) சர்வேஸ்வரன் சர்வ அபேஷித ப்ரதனாய் இருந்தானே யாகிலும் இதர விஷயங்களிலே ருசி யற்று அவன் திருவடிகளிலே ஆஸ்ரயிப்பார்க்கு அல்லது நித்ய விபூதியைக் கிட்டுகை அரிது – என்கிறார் – ஹேயத்திலே ஹேயதா புத்தியும் உபாதேயத்திலே உபாதேயதா புத்தியும் வேண்டாவோ -பேற்றுக்கும் கீழில் பாட்டில் ருசி யுடையவனுக்கு உதவின படி சொல்லிற்று – இதில் – ருசி தான் வேண்டுவது – என்கிறது – 91
ஊனக் குரம்பையி னுள்புக் கிருள்நீக்கி,
ஞானச் சுடர்கொளீஇ நாடோறும், – ஏனத்
துருவா யுலகிடந்த வூழியான் பாதம்,
மருவாதார்க் குண்டாமோ வான்.
ஊனக் குரம்பையின், Oonak Kurampaiyin - மரம்ஸத்தினாலாகிய (சரீரமாகிற) குடிசையிலே
உள் புக்கு, Ul Pukku - உள்ளே பிரவேசித்து [அதாவது- சரீரத்தின் தோஷமெல்லாம் மனத்திற் படியும்படி அதை நன்றாக ஆராய்ந்து]
இருள் நீக்கி, Irul Neekki - (நினைக்கிற அஜ்ஞாநமாகிர) இருட்டைப் போக்கி
ஞானம், Gyaanam - தத்வஜ்ஞாநமாகிற
சுdடர், Sudhar - விளக்கை
கொளீஇ, Kolii - ஏற்றி
ஏனத்து உரு ஆய், Eanathu Uru Aay - வராஹரூபியாகி
உலகு இடந்த, Ulaku Idantha - (பிரளயங்கொண்ட) பூமியைக்குத்தி யெடுத்துக் கொணர்ந்த ஊழியான் -எம்பெருமானுடைய
பாதம், Paatham - திருவடிகளை
நாள்தோறும், Naalthoorum - எப்போதும்
மருவாதார்க்கு, Maruvaathaarikku - ஸேவியாதவர்களுக்கு
வான் உண்டாமோ, Vaan Undaamo - பரமபதம் கிடைக்குமோ?[கிடைக்கமாட்டாது.]
2173முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) கீழே ஆஸ்ரிதரை ரஷிக்கும் படி சொல்லிற்று இங்கு அவாப்த சமஸ்த காமனாய் இருந்தானே யாகிலும் ஆஸ்ரிதர் உடைய த்ரவ்யமே தனக்கு தாரகமாக நினைத்து இருக்கும் ஸ்வ பாவன் என்கிறது – அவ்வோ ஜன்மங்களில் அவதரித்து அதில் உள்ளார் உடைய தாரகமே தனக்கு தாரகமாய் இருக்கிறபடி – ஸ்ரீ வராஹமானான் ஆகில் கோரைக் கிழங்கு தாரகமாம் இடையனாகில் வெண்ணெய் தாரகமாம் – 92
வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே, – ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே, முன்னொருநாள்
மண்ணை உமிழ்ந்த வயிறு.
வான் ஆகி, Vaan Aagi - ஆகாசமாகியும்
தீ ஆய், Thee Aay - அக்நியாகியும்
மறி கடல் ஆய், Mari Kadal Aay - அலையெறிகிற கடலாகியும்
மாருதம் ஆய், Maarudham Aay - காற்றாகியும்
தேன் ஆகி, Then Aagi - தேன்போன்றும்
பால் ஆம், Paal Aam - பால்போன்றும் பரம போக்யனான
திருமாலே, Thirumaalee - எம்பெருமானே!
முன் ஒருநாள், Mun Orunaal - பிரளயம் நீங்கின காலத்திலே
மண்ணை, Mannai - (பிரளயகாலத்தில் உட்கொண்டிருந்த) இவ்வண்டத்தை
உமிழ்ந்த-, Umizhndha - (உள்ளேயே கிடந்து தளர்ந்து போகாதபடி) வெளிவிட்ட
வயிறு, Vayiru - உன் வயிறானது
ஆன் ஆய்ச்சி வெண்ணெய், Aan Aaychchi Vennyei - இடைக் குலத்திற் பிறந்தவளான யசோதையென்னும் இடைச்சி கடைந்துவைத்த வெண்ணெயை
விழுங்க, Vizhunga - அள்ளி அமுது செய்ததினால்
நிறையுமே, Niraiyumee - நிறைந்துவிடுமோ? [நிறைய மாட்டாது]
2174முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) கீழே ஆஸ்ரித விஷயத்திலே ஒரு பஷ பாதம் சொல்லிற்றே நின்றது நீர் சொல்லுகிற பஷ பாதம் நாம் அறிகிறிலோமீ -என்ன இல்லையாகில் நீ வெருமனேயோ ஹிரண்யன்  மேலே சீறினாயோ அவனுக்கு எதிரியாகப் போரும்படியாய்ச் சீறினாயோ-என்கிறார்- கீழில் பாட்டில்-வாத்சல்யமாய் வாத்சல்ய கார்யமான சீற்றத்தை அனுபவிக்கிறார்  – 93
வயிறழல வாளுருவி வந்தானை யஞ்ச
எயிறிலக வாய்மடுத்த தென்நீ, – பொறியுகிரால்
பூவடியை யீடழித்த பொன்னாழிக் கையா,நின்
சேவடிமே லீடழியச் செற்று.
பூ வடிவை ஈடு அழித்த, Poo Vadivai Eedu Azhitha - புஷ்பத்தின் ஸுகுமாரத் தன்மையை அடியோடு போக்கிய [ மிகவும் ஸுகுமாரமான]
பொன் ஆழி கையா, Pon Aazhi Kaiyaa - அழகிய திருவாழியைக்கொண்ட திருக்கையையுடையவனே!
வயிறு அழல, Vayiru Azhala - (என்ன தீங்கு நேருமோவென்று அநுகூலர்) வயிறெரியும்படி
வாள் உருவி வந்தானை, Vaal Uruvi Vandhaanai - வாளை உருவிக்கொண்டு வந்தவனான ஹிரண்யனை
அஞ்ச, Anja - (அவன் உன் வடிவத்தைக்கண்டு) நடுங்கும்படி
நின் சேவடி மேல், Nin Saevadi Mael - உனது திருவடிகளின்மேலே (போட்டுக்கொண்டு)
பொறி உகிரால், Pori Ukiraal - நாநாவர்ணமான நகங்களினால்
ஈரு அழிய செற்று, Eeru Azhiy Settru - கட்டுக்குலைந்து போம்படி கொன்று
எயிறு இலக, Eiyiru Ilaka - (பின்னையும் சீற்றம் மாறாமையால்) பற்கள் வெளித்தெரியும்படி
நீ வாய் மடித்தது, Nee Vaai Madiththathu - நீ வாயை மடித்துக் கொண்டிருந்தது
என், En - ஏதுக்காக?.
2175முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஒரு வயிறு எரித்தலை அனுசந்தியா அவ் வழியே துர்யோதன கோஷ்டியாலே பிறந்த அபாயத்தை அனுசந்திக்கிறார் – அதாவது பாரத சமரத்திலே பீஷ்மாதிகளுக்கு வைஸ்ரூபயம் காட்டின படி யாதல் அன்றிக்கே பிரளய காலத்தில் ஸ்ரீ மார்கண்டேய பகவானுக்கு திரு வயிற்றிலே புக்கவற்றைக் காட்டின படியாததால் செற்று எழுந்து தீ விழித்து-என்கிற வித்தனையும் கீழில் பாட்டுக்கு சேஷமாக்கி நிர்வஹித்தல் அன்றிக்கே இப்பாட்டு தனக்கு உடலாக்குதல்    – 94
செற்றெழுந்து தீவிழித்துச் சென்றவிந்த ஏழுலகும்,
மற்றிவையா வென்றுவா யங்காந்து, முற்றும்
மறையவற்குக் காட்டிய மாயவனை யல்லால்,
இறையேனும் ஏத்தாதென் நா.
எழுந்து, Ezhundhu - (அநியாயம் மேலிட்டபடியால் லெளகிக பதார்த்தங்களை யெல்லாம் அடியோடு அழிக்கப் பெருமுயற்சியோடு) கிளம்பி
தீ விழித்து, Thee Vizhiththu - (உள்ளே கொண்ட கோபம் வெளிக்குத் தெரியும்படி) நெருப்பெழ விழித்துப் பார்த்து
இந்த ஏழ் உலகும், Indha Aezh Ulakum - இவ்வுலகங்களை யெல்லாம்
செற்று, Settru - அழித்து
மற்று, Mattru - பின்பு
இவை, Ivai - “பிரளயத்தில் அழித்த இப்பதார்த்தங்கள்
சென்ற, Sendra - (என்னிடத்து) அடங்கிக்கிடக்கின்றன “ (என்று சொல்லி)
ஆ என்று வாய் அங்காந்து, Aa Endru Vaai Angaanthu - ஆ வென்று வாயைத்திறந்து
முற்றும், Mutrum - ஸகல ஜகத்தையும்
மறையவற்கு, Maraiyavarku - வைதிகனான மார்க்கண்டேய மஹர்ஷிக்கு
காட்டிய, Kaattiya - (முன்போலவே யிருப்பதைக்) காட்டியருளிய
மாயவனை அல்லால், Maayavanai Allaal - ஆச்சர்ய சக்தியுக்தனான எம்பெருமானைத் தவிர்த்து
என் நா, En Naa - (வேறொருவனை) எனது நாவானது
இறையேனும், Irayeenum - சிறிது
ஏத்தாது, Aethaadhu - துதிக்கமாட்டாது
2176முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) என் நா அவனை ஒழிய ஷண காலமும் ஏத்தாது என்றாரே பாவியேன் இப்படிப் பட்ட கரணங்களைக் கொண்டு சேதனர் சம்சாரத்துக்குப் பரிகரம் ஆக்கிக் கொண்டபடி என் என்று விஸ்மிதர் ஆகிறார் – 95
நாவாயி லுண்டே நமோநார ணா என்று,
ஓவா துரைக்கு முரையுண்டே, – மூவாத
மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே, என்னொருவர்
தீக்கதிக்கட் செல்லும் திறம்.
நா, Naa - (ஸ்தோத்ரம் பண்ணுவதற்குக் கருவியான) நாக்கானது
வாயில் உண்டே, Vaayil Undae - (ச்ரமப்பட்டுத் தேடவேண்டாதபடி ) ஒவ்வொருவருடைய வாயிலும் படைக்கப்பட்டிருக்கின்றதே;
ஓவாது, Ovaadhu - (ஸஹஸ்ராக்ஷரீமாலா மந்த்ரம்போலே இடையிடையே) விட்டு விட்டுச் சொல்லாமல்
உரைக்கும், Uraikkum - (எளிதாக ஒரு மூச்சிலே) சொல்லக்கூடிய
நமோ நாரணாய என்று உரை, Namo Naaraanaaya Endru Urai - திருவஷ்டாக்ஷர மந்த்ரம்
உண்டே, Undae - ஸித்தமாயிருக்கின்றதே;
மூவாத, Moovaadha - கிழத்தன்மையற்ற [திரும்பிவருதலில்லாத]
மா கதிக்கண், Maa Kathikkan - பரமப்ராப்யமான மோக்ஷத்திலே
செல்லும் வகையுண்டே, Sellum Vagaiyundae - சென்று சேர்வதற்கேற்ற உபாயம் உண்டே;
தீக்கதிக்கண், Theekathikkan - (இப்படியிருக்கவும் உஜ்ஜீவிக்காமல்) விநாசத்துக்குக் காரணமான கெட்ட வழிகளிலே சிலர்
செல்லும் திறம் என், Sellum Thiram En - போய் விழுகிறபடி என்னோ!.
2177முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) சேதனர் செய்தபடி செய்ய நெஞ்சே நீ முன்பு நான் சொல்லுகிற இத்தை அழகிதாக புத்தி பண்ணு என்கிறார் – 96
திறம்பாதென் னெஞ்சமே. செங்கண்மால் கண்டாய்,
அறம்பாவ மென்றிரண்டு மாவான், – புறந்தானிம்
மண்தான் மறிகடல்தான் மாருதந்தான், வான்தானே,
கண்டாய் கடைக்கட் பிடி.
என் நெஞ்சமே, En Nenjamai - எனது மனமே!
அறம் பாவம் என்ற இரண்டும் ஆவான், Aram Paavam Endra Irandum Aavaan - புண்யம் பாபம் எனப்படுகின்ற இருவகைக் கருமங்களுக்கும் நிர்வாஹகன்
செம் கண் மால் கண்டாய், Sem Kan Maal Kandaai - புண்டரீகாக்ஷனான எம்பெருமானே யாவன்;
இம்மண் தான், Imman Thaan - இந்தப்பூமியும்
மரி கடல் தான், Mari Kadal Thaan - அலையெறிகிற கடலும்
மாருதம் தான், Maarudham Thaan - வாயுவும்
வான், Vaan - ஆகாசமும்
புறம் தான், Puram Thaan - இவை தவிரவுள்ள மஹாந் முதலிய தத்துவங்களும்
தானே கண்டாய், Thane Kandaai - (ஆகிய எல்லாவற்றுக்கும் நிர்வாஹகன்) அந்தத் திருமாலேயாவன்;
கடைக்கண், Kadaikkan - முடிவாக ஆராய்ந்து பார்க்குமளவில்
திறம்பாது, Thirampadhu - (இதுவே உண்மையென்பதை) தவறாமல்
பிடி, Pidi - உறுதியாகக்கொள்.
2178முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் என்று அவனையே பாவனத்வமாகச் சொன்னீர் புறம்பேயும் கங்கை உள்ளிட்டவை பாவனம் அன்றோ என்னில் அதினுடைய பாவனத்வம் தத் சம்பந் தாயத்தம் என்கிறார் – பிடிசேர் கீழில் பாட்டின் உடைய வியாக்யானம் இப்பாட்டு  – 97
பிடிசேர் களிறளித்த பேராளா, உன்றன்
அடிசேர்ந் தருள்பெற்றாள் அன்றே, – பொடிசேர்
அனல்கங்கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த,
புனல்கங்கை யென்னும்பேர்ப் பொன்.
பிடிசேர் களிறு, Pidisear Kaliru - பேடையோடு சேர்ந்து விஷயபோகபரனான (கஜேந்த்ராழ்வானாகிற) ஆண் யானையை
அளித்த, Alitha - காத்தருளின
பேராளா, Perala - மஹாநுபாவனே!
பொடிசேர், Podisear - (தான் பண்னின பாபத்துக்கு ப்ராயச்சித்தமாக) பஸ்மத்திலே சாயுமவனாகி
அனற்கு அம் கை ஏற்றான், Anarku Am Kai Aetran - அக்நிக்கு(த் தனது) அழகிய கையை ஏற்ற பாதகியான ருத்ரனுடைய
அவிர் சடைமேல், Avir Sadaimeel - ஒளிபொருந்திய ஜடையின் மேலே
பாய்ந்த, Paayndha - (அவனுடைய சுத்தியின் பொருட்டு) வந்து குதித்த
புனல், Punal - ஜலமயமான
கங்கை என்னும் பேர், Gangai Ennum Per - கங்கையென்னும் பெயர் பூண்டுள்ள
பொன், Pon - சிறந்த பெண்
உன்தன் அடிசேர்ந்து, Unthan Adichernthu - உன்னுடைய திருவடிகளைக்கிட்டி
அருள் பெற்றாள் அன்றே, Arul Pettraal Andrae - (பாபிகளைப் பரிசுத்தமாக்கும் படி) உனது திருவருளைப் பெற்றாளன்றோ
2179முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவிர் சடை மேல் பாய்ந்த -என்று கொண்டு அவன் திருவடிகளிலே ஒரு சம்பந்தம் உடைய கங்கையை இவன் ஜடையிலே தரித்தான் என்று இவனைக் குறையச் சொல்லுகிறது என்- அவனைத் தனியே ஈஸ்வரனாகவும் அவன் ஒரு கார்யத்துக்குக் கடவனாகவும் அன்றோ சொல்லுகிறது என்னில் அவனுக்கு ஈஸ்வரத்வம் இவனுக்கு சரீர பூதனாகையாலே  வந்தது அத்தனை போக–ஸ்வத இல்லை -என்கிறார் – 98
பொன்திகழ மேனிப் புரிசடையம் புண்ணியனும்,
நின்றுலகம் தாய நெடுமாலும், – என்றும்
இருவரங்கத் தால்திரிவ ரேலும், ஒருவன்
ஒருவனங்கத் தென்று முளன்.
பொன் திகழும் மேனி, Pon Thigazhum Meeni - பொன்போல விளங்குகின்ற உடலையும்
புரி சடை, Puri Sadai - பினின சடைமுடியையுமுடையவனாய்
அம், Am - அழகிய,
புண்ணியனும், Punniyanum - (ஸாதநாநுஷ்டானமாகிற ) புண்ணியத்தையடையனான ருத்ரனும்
நின்று உலகம் தாய நெடு மாலும், Ninru Ulagam Thaaya Nedumaalum - நின்று உலகங்களையெல்லாம் அளந்துகொண்ட ஸர்வேச்வரனும்
என்றும், Endrum - எக்காலத்திலும்
இருவர் அங்கத்தால் திரிவர் ஏலும், Irivar Angathaal Thirivar Aelum - இருவராகி வெவ்வெறு வடிவத்தைக்கொண்டு இருந்தார்களேயானாலும்
ஒருவன், Oruvan - சடைபுனைந்து ஸாதநாநுஷ்டானம் பண்ணு மொருவனாகிய சிவன்
ஒருவன் அங்கத்து, Oruvan Angathu - நெடுமாலான மற்றொருவனுடைய சரீரத்திலே
என்றும், Endrum - எப்போதும்
உளன், Ulan - ஸத்தை பெற்றிருப்பன்.
2180முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படி சர்வ ரஷகனான சர்வேஸ்வரன் திருப்பாற் கடல் தொடக்க மானவற்றிலே வந்து சந்நிஹிதானாய்த்துத் தான் ஏது என்னில் விலக்காதார் நெஞ்சு பெருந்தனையும் கிடாய் – ஆன பின்பு  -நெஞ்சே நீ இத்தை புத்தி பண்ணு -என்கிறார் – நாட்டில் பெரியராய் இருக்கிறவர்களும் தங்களுக்கேற ஷேத்ரஞ்ஞர்கள் ஆனவர் இருக்கச் செய்தே ஈஸ்வர்களாக பிரமித்து இருக்கிற படியைக் கண்டு திரு உள்ளம் பயப்பட நாம் கழுத்திலே கயிற்றை இட்டுக் கொண்டால் அறுத்து விழ விடுகைக்கு ஒருத்தன் உண்டு காண் – என்கிறார் – 99
உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன் என்றும்
உளன்கண்டாய், உள்ளூவா ருள்ளத் – துளன்கண்டாய்,
வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும்,
உள்ளத்தி னுள்ளனென் றோர்.
நல் நெஞ்சே, Nal Nenjee - எனக்குப் பாங்கான மனமே!
உத்தமன், Uthaman - புருஷோத்தமனான எம்பெருமான்
உளன்கண்டாய், Ulan Kandai - (நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்;
என்றும் உளன் கண்டாய், Endrum Ulan Kandai - எக்காலத்திலும் ( நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷைகொண்டு) இருக்கிறான் காண்;
உள்ளுவார் உள்ளத்து, Ulluvaar Ullaththu - ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன், Ulan - நித்யவாளம்
கண்டாய், Kandai - பண்ணுமவன் காண்;
வெள்ளத்தின் உள்ளானும், Vellaththin Ullaanum - திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருள்பவனும்
வேங்கடத்து மேயானும், Vengadathu Meyaanum - திருமலையிலே நிற்பவனும்
உள்ளத்தின் உள்ளான் என்று, Ullaththin Ullaan Endru - இப்போது நம்முடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து நித்யவாஸம் பண்ணுகிறானென்று
ஓர், Oru - தெரிந்துகொள்.
2181முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஆக – இப்படிப் பட்டவனைப் பெறுகைக்கு நமக்குச் செய்ய வேண்டுவது -என் என்னில் பெறுவதும் அவனையே பெறுகைக்கு சாதனமும் அவனே என்று – அத்யவசித்துப்   போவாய் – என்கிறார் – 100
ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும்,
ஈரடியும் காணலா மென்னெஞ்சே. – ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண்டுழாய் மாலைசேர்,
மாயவனை யேமனத்து வை.
என் நெஞ்சே, En Nenje - எனது மனமே!
ஓர் அடியின், Oru Adiyin - (தனது) ஒப்பற்ற அடிவைப்பினாலே
தாயவனை, Thaayavani - லோகங்களையெல்லாம் அளந்து கொண்டவனும்
கேசவனை, Keesavani - கேசியென்னும் அஸுரனைக் கொன்றவனும்
தண் துழாய்மாலை சேர், Than Thuzhaimalaik Seer - குளிர்ந்த திருத்துழாய் மலையோடு சேர்ந்தவனுமான
மாயவனையே, Maayavanaiye - எம்பெருமானையே
மனத்து வை, Manaththu Vai - மனத்தில் உறுதியாக்க் கொள்வாயாக (இப்படி அவனே உபாயமென்று உறுதிகொண்டால்)
ஓர் அடியும், Oor Adiyum - உலகங்களையெல்லாம் அளந்துகொண்ட ஒரு திருவடியும்
சாடு உதைத்த ஒண்மலர் சேஅடியும், Saadu Uthaitha Onmalai Seadiyum - சகடம் முறிந்து விழும்படி உதைத்த அழகிய பூப்போன்ற திருவடியும் ஆகிய
ஈர் அடியும் காணலாம், Eer Adiyum Kaanalam - இரண்டு திருவடிகளையும் ஸேவிக்கப்பெறலாங்கான்