| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2163 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) கடல் கடைந்தவன் பேர் சொல்லும் போது அவனைக் கண்டு சொல்ல வேணுமே அவனை ஆஸ்ரயிக்கும் போது தேவர்கள் ஆஸ்ரயிக்க வேணுமே என்றவர்க்குக் குறை தீரும்படி சர்வ சமாஸ்ரணீயனாய்க் கொண்டு திருமலையிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார் – 82 | படையாரும் வாட்கண்ணார் பாரசிநாள், பைம்பூந் தொடையலோ டேந்திய தூபம், – இடையிடையின் மீன்மாய மாசூணும் வேங்கடமே, மேலொருநாள் மான்மாய எய்தான் வரை. | மேல் ஒருநாள், Mel Orunaal - முன்னொரு காலத்திலே [ஸ்ரீராமாவதாரத்திலே] மான், Maan - மாரீசனாகிற மாயமான் மாய, Maaya - இறந்துவிழும்படி எய்தான், Eydhaan - அம்பு தொடுத்து விட்ட இராமபிரான் (நித்திய வாஸஞ்செய்கின்ற) வரை, Varai - மலையாவது, படை ஆரும் வாள் கண்ணார், Padai Aarum Vaal Kannaal - வேலாயுதம் போன்று ஒலி பொருந்திய கண்களையுடைய பெண்கள் பாரசி நாள், Paarasi Naal - த்வாதசியன்று பை பூ தொடையலோடு, Pai Poo Thodaiyalodu - பசிய (வாடாத) மலர்களைத் கொண்டு தொடுத்த மாலையோடுகூட ஏந்திய, Aendhiya - திருவேங்கட முடையானுக்கு ஸமர்ப்பிக்கும்படி) ஏந்தியுள்ள தூபம், Thoopam - தூபமானது இடை இடையில் மீன், Idai Idaiyil Meen - (ஆகாசத்தில்) நடுவே நடுவெ தோன்றுகின்ற நக்ஷத்ரங்கள் மாய, Maaya - மறையும்படி மாசூணும், Maasoonum - மாசு ஏறும்படி பண்ணாநிற்கிற வேங்கடமே, Vengadame - திருமலையேயாகும். |