| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2101 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) கடல் அவனைப் பெற்று களித்த படி சொல்லிற்று கீழ் அவன் படுக்கையை விட்டுப் போந்த இடத்திலும் சில பாக்யாதிகர் கிட்டி அனுபவிக்கப் பெற்றார்கள் கிடீர் -என்கிறார் 20 | பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச் செற்றார் படி கடந்த செங்கண் மால் நற்றா மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று | பெற்றார், பெற்றார் - மாதா பிதாக்களான வஸுதேவ தேவகிகளுடைய தளை கழல, தளை கழல - கால் விலங்கு அற்றுப் போம்படியாக பேர்ந்து, Perndhu - (திருப்பாற்கடலில் நின்றும்) பெயர்ந்து (க்ருஷ்ணனாக வந்து பிறந்தவனும்) ஓர் குறள் உரு ஆய், ஓர் குறள் உரு ஆய் - விலக்ஷண வாமந வேஷத்தையுடையனாய் செற்றார் படி, செற்றார் படி - ஆச்ரித விரோதியான மாவலி தன்னதென்று நினைத்திருந்த பூமியை கடந்த, கடந்த - அளந்து தன்னுடைய தாக்கிக்கொண்ட செம் கண் மால், செம் கண் மால் - புண்டரீகாக்ஷனுடைய நல் தாமரை மலர் சே அடியை, நல் தாமரை மலர் சே அடியை - அழகிய தாமரைபோற் சிவந்த திருவடிகளை வானவர், வானவர் - இந்திராதி தேவர்கள் கைகூப்பி, கைகூப்பி - அஞ்ஜலி செய்துகொண்டு நிரை மலர் கொண்டு நின்று, நிரை மலர் கொண்டு நின்று - தொடைவாய்த்திருந்துள்ள பூக்களை ஸமர்ப்பித்துக்கொண்டு பணிந்து ஏத்துவர், ஏத்துவர் - துதிப்பர்கள்; ஆல், Aal - ஐயோ! (அப்போது அவர்களைப்போலே தாமும் துதிக்கப்பெறவில்லையே யென்கிற துக்கத்தைச் காட்டுகிறது.) |