| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2158 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) திருமலை ஒன்றுமே யல்ல கிடீர் உகந்து அருளின தேசங்களுக்கும் இப்படிக் கிடீர்-என்கிறார் அவன் நமக்காகப் பண்ணின வியாபாரங்களை அனுசந்திக்க நம்முடைய செயலால் வந்த துக்கங்கள் அடைய ஓடிப் போம் -என்கிறார் – நாம் நம்முடைய அனர்த்தத்துக்கு உறுப்பாக நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் செய்கிற செயலாலே பண்ணிக் கொண்டவை அவன் நம்முடைய ஹிதத்துக்கு உறுப்பாக நிற்பது இருப்பது கிடப்பதான வியாபாரங்களை அனுசந்திக்கத் தன்னடையே ஓடிப் போம் என்கிறார் – 77 | வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும், அஃகாத பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும், – நான்கிடத்தும் நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே, என்றால் கெடுமாம் இடர். | வேங்கடமும், Vengadhamum - திருமலையும் விண்ணகரும், Vinnagarum - வைகுந்தமாநகரும் வெஃகாவும், Veghavum - திருவெஃகாவும் அஃகாத பூ கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும், Aghadha Poo Kidangin Neel Koval Pon Nagarum - பூ மாறாத நீர் நிலைகளையுடைய சிறந்த திருக்கோவலூ ரென்கிற திவ்ய தேசமும் நான்கு இடத்தும், Naanthu Idaththum - (ஆகிய) நான்கு திருப்பதிகளிலும் நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் என்றால், Nindraan Irundhaan Kidandhaan Nadandhaan Endraal - (வரிசைக்கிரமமாக) (எம்பெருமான்) நிற்பதும் வீற்றிருப்பதும் பள்ளிகொண்டிருப்பதும் நடப்பதுமா யிருக்கிறா ரென்று அநுஸந்தித்தால் இடர், Idar - துக்கங்களெல்லாம் கெடும் ஆம், Kedum Aam - விட்டோடிப் போய்விடும் |