| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2173 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) கீழே ஆஸ்ரிதரை ரஷிக்கும் படி சொல்லிற்று இங்கு அவாப்த சமஸ்த காமனாய் இருந்தானே யாகிலும் ஆஸ்ரிதர் உடைய த்ரவ்யமே தனக்கு தாரகமாக நினைத்து இருக்கும் ஸ்வ பாவன் என்கிறது – அவ்வோ ஜன்மங்களில் அவதரித்து அதில் உள்ளார் உடைய தாரகமே தனக்கு தாரகமாய் இருக்கிறபடி – ஸ்ரீ வராஹமானான் ஆகில் கோரைக் கிழங்கு தாரகமாம் இடையனாகில் வெண்ணெய் தாரகமாம் – 92 | வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய் தேனாகிப் பாலாம் திருமாலே, – ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே, முன்னொருநாள் மண்ணை உமிழ்ந்த வயிறு. | வான் ஆகி, Vaan Aagi - ஆகாசமாகியும் தீ ஆய், Thee Aay - அக்நியாகியும் மறி கடல் ஆய், Mari Kadal Aay - அலையெறிகிற கடலாகியும் மாருதம் ஆய், Maarudham Aay - காற்றாகியும் தேன் ஆகி, Then Aagi - தேன்போன்றும் பால் ஆம், Paal Aam - பால்போன்றும் பரம போக்யனான திருமாலே, Thirumaalee - எம்பெருமானே! முன் ஒருநாள், Mun Orunaal - பிரளயம் நீங்கின காலத்திலே மண்ணை, Mannai - (பிரளயகாலத்தில் உட்கொண்டிருந்த) இவ்வண்டத்தை உமிழ்ந்த-, Umizhndha - (உள்ளேயே கிடந்து தளர்ந்து போகாதபடி) வெளிவிட்ட வயிறு, Vayiru - உன் வயிறானது ஆன் ஆய்ச்சி வெண்ணெய், Aan Aaychchi Vennyei - இடைக் குலத்திற் பிறந்தவளான யசோதையென்னும் இடைச்சி கடைந்துவைத்த வெண்ணெயை விழுங்க, Vizhunga - அள்ளி அமுது செய்ததினால் நிறையுமே, Niraiyumee - நிறைந்துவிடுமோ? [நிறைய மாட்டாது] |