திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2171 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) போலியைக் காட்டித் தம்மைத் தரிப்பித்த பிரசங்கத்தைக் கொண்டு அநு கூலனான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு அவ்வடிவைக் கொண்டு முன்னே நின்று அவன் விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுத்த படி சொல்லுகிறார் – நரசிம்ஹ ரூபியான ஈஸ்வரன் உடைய ஆஸ்ரித விரோதி நிரசன சீலத்தையும் வாத்சல்யத்தையும் அனுசந்திக்கிறார் – 90 | வரத்தால் வலிநினைந்து மாதவநின் பாதம்,
சிரத்தால் வணங்கானா மென்றே, – உரத்தினால்
ஈரரியாய் நேர்வலியோ னாய இரணியனை,
ஓரரியாய் நீயிடந்த தூன்? | பதவுரை Show / Hideமாதவ, Maadhava - திருமாலே! ஈர் அரி ஆய், Eer Ari Aayi - (இரண்டு கூறாகக்) கிழித்துப் போடவேண்டிய சத்துருவாகி நேர் வலியோன் ஆய், Ner Valiyon Aayi - எதிர்த்து நின்று போர் செய்யும் வலிவையுடையனாகிய இரணியனை, Iraniyanai - ஹிரண்யாஸுரனது ஊன், Oon - சரீரத்தை , ஓர் அரிஆய், Oor Ariyaayi - ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாகி உரத்தினால், Uraththinaal - உனது மிடுக்கினாலே நீ இடந்தது, Nee Idandhadhu - நீ உன் நகங்களினால் குத்திக் கீண்டதானது, வரத்தால், Varaththaal - (பிரமன் முதலானவர்கள் கொடுத்த) வரத்தினால் (தனக்கு உண்டான) வலி, Vali - பலத்தை நினைந்து, Ninaindhu - பெரிதாக மதித்து நின் பாதம், Nin Paatham - உனது திருவடிகளை சிரத்தால், Siraththaal - தனது தலையினால் வணங்கானாம் என்றே, Vanangaanam Endrae - வணங்காமலிருந்தானென்ற காரணத்தினாலோ? (அன்று; பக்தனான ப்ரஹ்லாதனை நலிந்தானென்ற காரணத்தினாலே.) |