| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2124 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) பிராட்டிமார் சந்நிதி எப்போதும் உண்டாகையாலே இனி விரோதியைப் போக்குகை என்று ஒரு பணி இல்லை – தம் தாமுடைய ருசிக்கு அநு ரூபமான வ்ருத்தியிலே அன்வயிக்கவே – விரோதிகள் அடங்கலும் தன்னடையே விட்டோடிப் போம் என்கிறார் 43 | மனமாசு தீரு மறுவி னையும் சார, தனமாய தானேகை கூடும், – புனமேய பூந்துழா யானடிக்கே போதொடு நீரேந்தி, தாம்தொழா நிற்பார் தமர். | புனம் மேய பூ துழாயான் அடிக்கே, Punam Maeya Poo Thuzhaayaan Adikke - தன்னிலத்தி லிருப்பது போலவே செல்வி குன்றாதிருக்கிற திருத்துழையை அணிந்துள்ள எம்பெருமான் திருவடிகளில் போதொடு நீர் ஏந்தி, Pothodu Neer Aendhi - (திருவாராதநத்துக்கு உப கரணமான) புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் எடுத்துக்கொண்டு தொழா நிற்பார் தமர் தாம், Thozha Nirpaar Thamar Thaam - வணங்குமவர்களான பாகவதர்களுக்கு மனம் மாசு தீரும், Manam Maasu Theerum - மனக்குற்றங்கள் விட்டு நீங்கும் அருவினையும் சாரா, Aruvinaiyum Saaraa - (ஸ்வப்ரயத்நத்தால்) நீக்க முடியாத தீவினைகளும் அணுகமாட்டா: தனம் ஆய, Thanam Aaya - (பக்திமான்களுக்கு செல்வமாகிய பரமபக்தி முதலியவைகளும் தானே கைகூடும்), Thane Kaikoodum - தனக்குத்தானே வந்து கைபுகுரும் |