திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2106 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவன் ஓவாதே அழுகிற படியைக் கண்டு இவரும் அவ்விருப்பிலே ஈடுபடுகிறார் ஓவாதே ஏத்தவும் தொடங்கினார் அவனுக்கு நினைவும் பேச்சும் வெண்ணெயிலே ஆனாப் போலே ஆழ்வார்க்கும் நினைவும் பேச்சும் இவன் பக்கலிலே யான படி 25 | உரை மேல் கொண்டு என்னுள்ளம் ஓவாது எப்போதும்
வரை மேல் மரகதமே போலே திரை மேல்
கிடந்தானைக் கீண்டானைக் கேழலாய்ப் பூமி
இடந்தானை யேத்தி எழும் | பதவுரை Show / Hideவரை மேல், வரை மேல் - ஒரு மலையின்மேலே மரகதமே போல, மரகதமே போல - மரகதப்பச்சை படிந்தாற்போல திரை மேல், திரை மேல் - திருப்பாற்கடலிலே கிடந்தானை, கிடந்தானை - சயனித்திருப்பவனும் கீண்டானை, கீண்டானை - இரணியனுடலைப் பிளந்தவனும் கேழல் ஆய், Kezhal Aay - வராஹமூர்த்தியாகி பூமி இடந்தானை, பூமி இடந்தானை - பூமியை உத்தரிப்பித்தவனுமான எம்பெருமானை. என் உள்ளம், என் உள்ளம் - எனது மனமானது உரை மேற்கொண்டு, உரை மேற்கொண்டு - உரைப்பதில் ஊற்றங்கொண்டு ஓவாது எப்போதும், ஓவாது எப்போதும் - இடைவிடாமல் எப்போதும் ஏத்தி, Aethi - அப்பெருமானது சரிதைகளைப் (புகழ்ந்து) எழும், எழும் - உஜ்ஜீவிக்கும். |