Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2164 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2164முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவன் ஆஸ்ரித பரதந்த்ரன் அவர்களது அபேஷிதம் செய்யும் ஸ்வ பாவன் என்று நீர் எங்கனே அறிந்தீர் -என்ன மது கைடபர்களை நிரசிக்க வல்ல பரிகரம் உடையவன் நீ- அது கொண்டு கார்யம் கொள்ளாதே மலையை எடுப்பது ருஷபங்களை அடர்ப்பது ஆயத்து வெருமனேயோ என்கிறார் – 83
வரைகுடைதோல் காம்பாக ஆநிரைகாத்து, ஆயர்
நிரைவிடையேழ் செற்றவா றென்னே, – உரவுடைய
நீராழி யுள்கிடந்து நேரா நிசாசரர்மேல்,
பேராழி கொண்ட பிரான்?
உரவு உடைய, Uravu Udaiya - மிடுக்கை யுடைத்தான
நீராழியுள், Neeraazhiyl - நீரையுடைய திருப்பாற்கடலிலே
கிடந்து, Kidandhu - திருக்கண்வளர்ந்து,
நேர் ஆ(ன), Ner Aan - எதிரியாகவந்த
நிசாசரர் மேல், Nisaacharar Mel - மதுகைடபர் முதலிய ராக்ஷஸர்களின்மீது
பேர் ஆழி, Peer Aazhi - (அவர்கள் நீறாகும்படி) பெரிய சக்ராயுதத்தை
கொண்ட, Konda - கையிற் கொண்டிருக்கிற
பிரான், Piraan - உபகாரகனே!
வரை குடை ஆக, Varai Kudai Aaga - (இப்படி கருதுமிடஞ் சென்று பொருது கைநிற்க வல்ல திருவாழியாழ்வானிருக்கவும் அவனைக்கொண்டு காரியங்கொள்ளாமல்) (ஒருவராலும் அசைக்கவும் முடியாத கோவர்த்தன) மலையே குடையாகவும்.
தோள் காம்பு ஆக, Thol Kaambu Aaga - தனது திருத்தோளே அந்தக்குடைக்குக் காம்பாகவும் ஆக்கி
ஆ நிரை காத்து, Aa Nirai Kaathu - பசுக்களின் கூட்டங்களைப் பாதுகாத்து,
ஆயர் நிரை விடை ஏழ், Aayar Nirai Vidai Ezh - (நப்பின்னைப் பிராட்டிக்காக) இடையர்கள் வைத்திருந்த திரண்ட ரிஷபங்கலேழையும்
செற்ற ஆரு, Settra Aaru - முடித்த விதம்
என்னே, Ennae - எங்ஙனே?