திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2137 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) பேராயர்க்கு ஆட்படுகை யாவது அவன் விஷயீ கரிக்கப் புக்கால் தன் செல்லாமை தோற்ற நிற்கை யல்லது சர்வேஸ்வரன் உடைய பிரபாவம் ஒருவரால் பரிச்சேதிக்க ஒண்ணாது கிடீர் என்கிறார் – 56 | பேரே வரப்பி தற்றல் அல்லாலெம் பெம்மானை,
ஆரே அறிவார்? அதுநிற்க, – நேரே
கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான், கண்ணன்
அடிக்கமலந் தன்னை அயன். | பதவுரை Show / Hideபேரே, Perae - [நாம் வாயினால் ஏதெனுமொன்றைச் சொன்னாலும், அது] எம்பெம்மானது திருநாமமாகவே வர, Var - வரும்படியாக பிதற்றல் அல்லால், Pithatral Allal - பிதற்றுவதைத்தவிர எம்பெம்மானை, Embemmanai - [அந்த] எம்பெருமானை ஆரே, Aare - ஆர்தான் அறிவார், Arivaar - (உள்ளபடி) அறிய வல்லவர்கள்? அது நிற்க, Adhu Nirka - அந்த விஷயம் இருக்கட்டும்; அயன், Ayan - பிரமனானவன் . கடி, Kadi - பரிமளம் மிகுந்த கமலத்துள், Kamalaththul - (அவ்வெம் பெருமானது, நாபிகமலத்திலே (பிறந்து) நேரே இருந்தும், Nere Irundhum - (அங்கே) நிரந்தர வாஸம் பண்ணிக்கொண்டிருந்தும் கண்ணன் அடி கமலம் தன்னை, Kannaan Adi Kamalam Thannai - அந்த ஸர்வேச்வரனுடைய திருவடிகளை காண்கிலான், Kaankilaan - ஸேவிக்கப்பெற்றானில்லை. |