| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2135 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அப் படுக்கையும் தள்ளிப் பொகட்டுத் தன் விபூதி அழியாத படிக்கு ஈடாக இங்கே வந்து சந்நிதி பண்ணி இவற்றை ரஷிக்கும் ஸ்வ பாவன் என்கிறார் – எம்பெருமான் சேஷித்வத்தைக் குறைத்து பரிமாறும்படி அவன் ஸ்வரூபம் – இது நிரைநிரை-என்று கொண்டு லஷணம் இருக்கிறபடி – நிரல் நிரை அணி சேர்ந்தது – 54 | அரவம் அடல்வேழம் ஆன்குருந்தம் புள்வாய் குரவை குடம்முலைமல் குன்றம், – கரவின்றி விட்டிறுத்து மேய்த்தொசித்துக் கீண்டுகோத் தாடி,உண் டட்டெடுத்த செங்கண் அவன். | செம் கண் அவன், Sem Kan Avan - செந்தாமரைக் கண்ணனாகிய அப்பெருமான் கரவு இன்றி, Karavu Inri - மறைவு இல்லாமல் [ஸர்வலோக ப்ரஸித்தமாம்படி] அரவம், Aravam - காளிய நாகத்தை விட்டு, Vittu - விட்டடித்தும் அடல் வேழம், Adal Vezham - பொருவதாக வந்த (குவலயாபீட மென்னும்) யானையை இறுத்து, Iruthu - (தந்தத்தை) முறித்து உயிர் தொலைத்தும் ஆன், Aan - பசுக்களை மேய்த்து, Meyththu - (வயிறு நிரம்ப) மேய்த்தும் குருந்தம், Kurundham - அஸுரா வேகமுடைய குருந்தமரத்தை ஒசித்து, Osiththu - ஒடித்துப் பொகட்டும் புள்வாய், Pulvai - பகாசுரனுடைய வாயை கீண்டு, Keendu - கிழித்தும் குரவை, Kuravai - ராஸக்ரீடையை கோத்து, Koththu - (இடைப்பெண்களோடு) கை கோத்து ஆடியும் குடம், Kudam - குடங்களைக்கொண்டு ஆடி, Aadi - கூத்தாடியும் முலை, Mulai - பூதனையின் முலையை உண்டு, Undu - (அவளுடைய உயிரோடு) உறிஞ்சி யுண்டும் மல், Mal - (கம்ஸனால் ஏவப்பட்ட) மல்லர்களை அட்டு, Attu - கொன்றும் குன்றம், Kundram - கோவர்த்தன மலையை எடுத்த, Edutha - (குடையாக) எடுத்துப் பிடித்த இச்செயல்கள் |