| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2099 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) திருப் பாற் கடல் ஏறப் போக வேண்டுதல் – திரு வுலகு அளந்து அருளின இடத்து ஏறப் போதல் செய்து நான் இழந்தேனோ – அதுக்கும் இவ்வருகே போந்து கிருஷ்ணனாய் வந்து வவதரிக்கச் செய்தே கிடீர் நான் இழந்தது என்கிறார் – வரையாதே தீண்டிப் பரிமாறுகையும் அழகும் ஐஸ்வர்யமும் பஷபாதமும் உள்ளிட்டவை திரு உலகு அளந்து அருளின் இடத்துக்கும் கிருஷ்ணாவதாரத்துக்கும் ஒத்து இருக்கும் 18 | நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய் தோன்ற வுண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றிப் பொருதுடைவு கண்டானும் புள்ளின் வாய் கீண்டானும் மருதிடை போய் மண்ணளந்த மால் | நான்ற முலைத் தலை, நான்ற முலைத் தலை - (பேய்ச்சியான பூதனையினுடைய) சரிந்து தொங்குகின்ற முலையிலுள்ள நஞ்சு, Nanju - விஷத்தை உண்டி, உண்டி - (அவள் பிணமாய் விழும்படி) அமுது செய்து உறி, உறி - உறிகளிலே வைத்த வெண்ணெய், Vennai - வெண்ணெயை(க் களவு செய்து) தோன்ற, தோன்ற - இச்செயல் எங்கும் ப்ரஸித்தமாம்படி உண்டான், உண்டான் - அமுது செய்தவனாகி வென்றி, Vendri - ஜயத்தையுடைய சூழ், Sool - எதிர்ப்பவர்களைத் தப்பாமல் தன் கையில் அகப்படுத்திக்கொள்ளவல்ல களிற்றை, களிற்றை - (கம்ஸனுடைய) யானையை ஊன்றி பொருது, ஊன்றி பொருது - எதிர் நின்று யுத்தம் செய்து உடைவு கண்டாலும், உடைவு கண்டாலும் - அழித்தொழித்தவனும் புள் வாய் கீண்டானும், புள் வாய் கீண்டானும் - பகாசுரனுடய வாயைக் கிழித்து போகட்டவனும் ( யாவனெனில்?) மருது இடை போய், மருது இடை போய் - இரட்டை மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்றவனாய் மண் அளந்த, மண் அளந்த - உலகங்களை அளந்து கொண்டவனான மால், Maal - எம்பெருமானேயாவன். |