| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2165 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) உன்னுடைய ரஷகத்வத்தைச் சிலராலே பரிச்சேதிக்கலாய் இருந்ததோ – ரஷ்யத்தின் அளவேயோ ரஷகனான உன்னுடைய பாரிப்பு என்கிறார் – 84 | பிரான்உன் பெருமை பிறரா ரறிவார்?, உராஅ யுலகளந்த ஞான்று, – வராகத் தெயிற்றளவு போதாவா றென்கொலோ, எந்தை அடிக்களவு போந்த படி? | பிரான், Piraan - உபகாரகனே! உலகு, Ulaku - லோகத்தை உராய் அளந்த நான்று, Uraai Alandha Naandru - எங்கும் ஸஞ்சரித்து அளந்தகாலத்தில் எந்தை, Endhai - எனது ஸ்வமியான வுன்னுடைய அடிக்கு, Adikku - திருவடிகட்கு அளவு போந்த, Alavu Pontha - அளப்பதற்குப் போந்திருந்த படி, Padi - பூமியானது வராகத்து, Varagaththu - வராஹரூபியான உன்னுடைய எயிறு, Eiyiru - திருவெயிற்றின் அளவு, Alavu - ஏக தேசத்தளவும் போதா, Podhaa - போதாதாக இருந்த ஆறு, Aaru - விதம் என் கொல், En Kol - எங்ஙனேயோ? உன் பெருமை பிறர் ஆர் அறிவார், Un Perumai Pirar Aar Arivaar - உனது பெருமையையறிவார் யாருமில்லை |