| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2128 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) விஷயங்களில் இந்த்ரியங்கள் போகாதபடி நியமித்து சமயக் ஜ்ஞானத்தை யுடையராய்க் கொண்டு ஆஸ்ரயிப்பார்க்கு அல்லது அவன் திருவடிகளைக் கிட்டித்தாய் விட ஒண்ணாது என்கிறார் – 47 | வாரி சுருக்கி மதக்களி றைந்தினையும், சேரி திரியாமல் செந்நிறீஇ, – கூரிய மெய்ஞ்ஞானத் தாலுணர்வார் காண்பரே, மேலொருநாள் கைந்நாகம் காத்தான் கழல். | மதம் களிறு ஐந்தைனையும், Madhama Kaliru Aindhainaiyum - மதம்பிடித்த ஐந்து யானைகளை போன்ற பஞ்சேங்திரியங்களையும் வாரி சுருக்கி, Vaari Surukki - ஜலம் போன்ற சப்தாதி விஷயங்களில் நின்றும் இழுத்துப்பிடித்து. சேரி திரியாமல் செம் நிறீஇ, Seyri Thiriyamal Sem Nireei - கண்டவிடங்களிலும் திரியவொட்டாமல் செவ்வையாக நிலைநிறுத்தி கூரிய, Kooriya - மிகவும் ஸூக்ஷ்மமான மெய் ஞானத்தால், Mei Gnanaththal - உண்மையான பக்தி ரூபா பந்நஜ்ஞானத்தாலே உணர்வார், Unarvaar - (அவனை) உள்ளபடி உணர வல்லவர்கள் மேல் ஒரு நாள், Mel Oru Naal - முன்பொரு காலத்திலே கை நாகம் காத்தான், Kai Naagam Kaaththaan - கஜேந்திராழ்வானை ரக்ஷித்தவனான அப்பெருமானுடைய கழல், Kazhal - திருவடிகளை காண்பர், Kaanbar - கண்டு அநுபவிக்கப் பெறுவர்கள். |