| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2108 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஆக திருமலையிலே வந்து நிற்கிற படியை அனுசந்தித்தார் அந்த நிலை தன்னையே கொண்டு இவனுடைய கைகள் ஆனவை உகவாதார் மண் உண்ணும்படி வளர்ந்தவை என்று கொண்டு நிச்சயிக்கலாம் படி நின்றது என்கிறார் 27 | மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து சிலையால் மராமரம் ஏழ் செற்று கொலையானைப் போர்க்கோடு ஒசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும் கார்க்கோடு பற்றியான் கை | மலையால், மலையால் - கோவர்த்தன கிரியைக்கொண்டு குடை கவித்து, குடை கவித்து - குடையாகப் பிடித்தும், மா வாய் பிளந்து, மா வாய் பிளந்து - குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியென்னும் அஸுரனுடைய வாயைப்பிளந்தும், சிலையால், சிலையால் - வில்லைக்கொண்டு மராமரம் ஏழ் செற்று, மராமரம் ஏழ் செற்று - ஸப்த ஸாலவிருக்ஷங்களை அழித்தும், கொலை யானை, கொலை யானை - (இச்செயல்களோடு நிற்காமல்) கொலைசெய்வதாக வந்த குவலயா பீடமென்னும் யானையினுடைய போர் கோடு, போர் கோடு - சண்டைசெய்ய உதவியாயிருந்த தந்தங்களை ஒசித்தனவும், ஒசித்தனவும் - பிடுங்கினவையும். பூ குருந்தம், பூ குருந்தம் - பூ வோடுகூடிய குருந்த மரத்தை சாய்த்தனவும், சாய்த்தனவும் - வேரோடே பறித்துத் தள்ளினவையும் (எவையென்றால்) கார், கார் - (கம்பீரமாக முழங்குவதில்) மேகத்தையொத்த கோடு, Kodu - சங்கை பற்றியான், பற்றியான் - ஏந்தியிருக்கின்ற பெருமானுடைய கை, Kai - திருக்கைகளேயாகும். |