Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2097 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2097முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) நான் இவ் விஷயத்தை நெடுங்காலம் உபாயாந்தரங்களிலும் தேவதாந்த்ரங்களிலும் பிரவணனாய் இழந்தேன் கிடீர் என்று சோகிக்கிறார் 16
பழுதே பலபகலும் போயின வென்று அஞ்சி
அழுதேன் அரவணை மேல் கண்டு தொழுதேன்
கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண்
அடலோத வண்ணரடி
கடல் ஓதம், கடல் ஓதம் - கடலலையானது
கால், கால் - தன்திருவடி வாரத்திலே
அலைப்ப, அலைப்ப - (துடைதட்டி உறங்கச் செய்வதுபோல) வீச
கண்வளரும், கண்வளரும் - யோகநித்திரை செய்கின்ற
செம்கண், செம்கண் - செந்தாமரை போன்ற திருக்கண்களையுடையவரும்
அடல் ஓதம் வண்ணர், அடல் ஓதம் வண்ணர் - அநுபவிக்க இழிந்தவர்களை அநுபவிக்கவொட்டாமல் அடர்கின்ற செளந்தரியமாகிற அலைகளோடு கூடிய வடிவையுடையவருமான பெருமாளுடைய
அடி, Adi - திருவடிகளை
அரவு அணை மேல், Aravu Anai Mel - சேஷசயனத்தின் மீது
கண்டு தொழுதேன், கண்டு தொழுதேன் - கண்ணாரக்கண்டு (இன்று) ஸேவிக்கப்பெற்ற அடியேன்
பல பகலும், பல பகலும் - “கீழ்க்கழிந்த கால மெல்லாம்
பழுதே போயின என்று, பழுதே போயின என்று - (இவ்விதமாகக் கழியாமல்) வீணாகக் கழிந்தனவே!” என்று
அஞ்சி அழுதேன், அஞ்சி அழுதேன் - மிகவும் சோகமுற்றுக் கிடக்கின்றேன்.