| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2155 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவனை ஒழிய வேறு ஆஸ்ரயணீயர் இல்லை என்னா நின்றீர் என் தான் – ருத்ரன் ஆஸ்ரயணீயன் அன்றோ -என்னில் அவனும் இவனுக்கு சரீர பூதன் ஆகையால் இவனே ரஷகன் என்கிறார் – உடலும் உயிரும் என்றத்தோடு -இவனோடு வாசி இல்லை -அவனுக்கு அவனுடைய பிரகாரங்களைப் பார்த்தால் ரஷ்யமாய்த் தோற்றும் இவனுடைய பிரகாரங்களைப் பார்த்தால் ரஷகனாய் இருக்கும் -என்கிறார் – 74 | ஏற்றான் புள்ளூர்த்தான் எயிலெரித்தான் மார்விடந்தான் நீற்றான் நிழல்மணி வண்ணத்தான், – கூற்றொருபால் மங்கையான் பூமகளான் வார்சடையான், நீண்முடியான் கங்கையான் நீள்கழலான் காப்பு. | ஏற்றான், Aetraan - ரிஷபத்தை வாஹனமாகவுடையவனும் எயில் எரித்தான், Eiyil Eriththaan - த்ரிபுரஸம்ஹாரம் பண்ணினவனும் நீற்றான், Neetraan - சாம்பலைப் பூசிகொண்டிருப்பவனும் கூறு ஒருபால் மங்கையான், Koora Orupaal Mangaiyaan - தனது உடம்பின் ஒரு பக்கத்திலே பார்வதியைத் தரித்துகொண்டிருப்பவனும் வார் சடையான், Vaar Sadayaan - நீண்ட ஜடையைத்தரித்துள்ளவனும். கங்கையான், Gangaiyaan - (அச்சடைமுடியில்) கங்கையைத் தாங்கிக்கொண்டிருப்பவனுமான ருத்ரன். புள் ஊர்ந்தான், Pul Oornthaan - கருடனை வாஹநமாகவுடையவனும் மார்வு இடந்தான், Maarvu Idandhaan - இரணியனது மார்வைப்பிளந்தொழித்தவனும் நிழல் மணி வண்ணத்தான், Nizhal Mani Vannaththaan - நீலரத்நம்போலே குளிர்ந்தவடிவையுடையவனும் பூ மகளான், Poo Magalhaan - பெரிய பிராட்டியைத்திவ்ய மஹிஷியாகவுடையவனும் நீள் முடியான், Neel Mudhiyaan - நீண்ட கிரீடத்தை அணிந்துள்ளவனும் நீள் கழலான், Neel Kazhalhaan - நீண்ட திருவடிகளையுடையவனுமான சர்வேச்வரனுடைய காப்பு, Kaappu - ரக்ஷணத்தில் அடங்கினவன். |