| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2118 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஒரு நாள் தன்னை இரப்பாளனாக்கிக் கொடு வந்து போன வளவேயோ – என்றும் தன்னை இரப்பாளனாக்கி நித்ய சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு திரு மலையிலே வந்து சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் – நாம் அவதாரத்துக்குப் பிற்பட்டோம் தீர்த்தம் பிரசாதித்துப் போய்த்து இறே என்ன வேண்டாதபடி திருமலையிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார் – 37 | வகையறு நுண்கேள்வி வாய்வார்கள், நாளும் புகைவிளக்கும் பூம்புனலும் ஏந்தி, – திசைதிசையின் வேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே, வெண்சங்கம் ஊதியவாய் மாலுகந்த வூர். | வகை அறு, Vagai Aru - அற்ப பலன்களையும் பரம புருஷார்த்தத்தையும் உட்புகுந்து இன்னவகை இன்னவகை என்று அறுதியிடுவதற்குறுப்பான நுண் கேள்வி வாய்வார்கள், Nun Kaelvi Vaivargal - ஸூக்ஷ்மார்த்தச்ரவணமுடையவர்களான வேதியர்கள், Vedhiyargal - வைதிகர்கள் நாளும், Naalum - நித்தியமும் புகை விளக்கும், Pugai Vilakkum - தூபதீபங்களையும் பூ புனலும், Poo Punalum - புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் ஏந்தி, Aendi - தரித்துக்கொண்டு திசை திசையின், Thisai Thisaiyin - பலதிக்குக்களில் நின்றும் சென்று, Sendru - வந்து சேர்ந்து இறைஞ்சும், Iraichum - வணங்குமிடமான வேங்கடம், Vengadam - திருவேங்கடமலையானது, வெண்சங்கம் ஊதிய வாய் மால், Venchankam Oothiya Vaai Maal - வெளுத்த சங்கைத் திருப்பவளத்திலே வைத்து ஊதின எம்பெருமான் உகந்த, Ugantha - திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்கப்பெற்ற ஊர், Oor - திவ்யதேசமாம். |