திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2104 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) நாம் அஞ்சுகையாவது என் நான் சிலருக்குக் கட்டுண்கை யாவது என் அது பின் நாட்டார் அறிகை யாவது என் என்று அத்தை மறைக்கப் புக்கான் ஒரு தழும்பு ஆகில் அன்றோ உன்னால் மறைக்கலாவது உன் உடம்பு அடங்கலும் ஆஸ்ரிதர்க்காகக் காரியம் செய்து அத்தால் வந்த தழும்பு அன்றோ என்கிறார் 23 | தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்தவா மங்கை
தழும்பிருந்த தாள் சகடம் சாடி தழும்பிருந்த
பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரால் மார்பிடந்த
வீங்கோத வண்ணர் விரல் | பதவுரை Show / Hideவீங்கு ஓதம் வண்ணர், வீங்கு ஓதம் வண்ணர் - பொங்கி அலை யெறியுங் கடல் போன்ற வடிவையுடைய எம்பெருமானது அம் கை, Am Kai - அழகிய திருக்கைகளில் சார்ங்கம், Saarnggam - சார்ங்க வில்லினுடைய நாண், நாண் - நாணி தோய்ந்த, தோய்ந்த - உராய்ந்த்தனா லுண்டான தழும்பு, தழும்பு - காய்ப்பானது இருந்த ஆம், இருந்த ஆம் - இருக்கின்றதுகாண்; தாள், தாள் - திருவடிகளிலே சகடம் சாடி, சகடம் சாடி - சகடத்தை யுதைத்து (அதனாலுண்டான) தழும்பு இருந்த, தழும்பு இருந்த - காய்ப்பு இருக்கின்றது; பூங் கோதையாள், பூங் கோதையாள் - அழகிய மயிர் முடியையுடைய பிராட்டி வெருவ, வெருவ - (என்ன நேரிடுமோ என்று) அஞ்சும்படியாக மிக்க சீற்றத்துடனே பொன் பெயரோன், பொன் பெயரோன் - இரணியாசுரனுடைய மார்பு இடந்த தழும்பு, மார்பு இடந்த தழும்பு - மார்பைக் கிழித்தெறிந்த தனாலுண்டான காய்ப்பு விரல், விரல் - விரல்களிலே இருந்த, இருந்த - இருக்கின்றது. |