| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2151 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இருந்தபடி இது வாகையால் ஒரு சக்தனைப் பற்ற வேண்டி இருந்தது இறே ஆன பின்பு ஜகத்தில் உள்ளார் அடங்கலும் அநந்ய பரராய்க் கொண்டு இவனை ஆஸ்ரயிங்கோள் – என்கிறார் – 70 | சொல்லுந் தனையும் தொழுமின் விழுமு டம்பு, சொல்லுந் தனையும் திருமாலை, – நல்லிதழ்த் தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால், நாமத்தால் ஏத்திதிரேல் நன்று. | திருமாலை, Thirumalai - பிராட்டியோடு கூடினபெருமானை நல் இதழ் தாமத்தால், Nal Idhal Thaamaththal - அழகிய மலர்களைக் கொண்டு தொடுத்த மாலைகளாலும் வேள்வியால், Velviyal - யாகம் முதலிய ஸத்கரு மங்களாலும் தந்திரத்தால், Thandhirathal - (மந்த்ரமில்லாத) வெறும் க்ரியைகளாலும் மந்திரத்தால், Mandhirathal - (க்ரியாகலாபமில்லாத) வெறும் மந்திரங்களாலும் விழும் உடம்பு செல்லும் தனையும், Vizhum Udambu Sellum Thanaiyum - அஸ்திரமான இந்த சரீரம் உள்ள வரையில் தொழுமின், Thozhumin - தொழுங்கள்; சொல்லும் தனையும், Sollum Thanaiyum - (இவற்றை செய்ய சக்தியில்லாவிட்டால்) (உங்களுக்குச்) சொல்லக்கூடிய சக்தியுள்ளவரையிலும் நாமத்தால், Namaththal - திருநாமங்களைக் கொண்டு ஏத்துதிர் ஏல், Aethuthir Ael - புகழ்ந்தீர்களாகில் நன்று, Nandru - அது மிகவும் நல்லது. |