| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2160 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஆஸ்ரிதருக்காக தன்னை அழிய மாறி மேல் விழுந்து கார்யம் செய்யும் ஸ்வபாவன் என்று இறே சொல்லிற்றே நின்றது – அது பின்னை எங்கே கண்டோம் அவனுக்கு -என்னில் ஒருத்தனுக்காகத் தன்னை இரப்பாளன் ஆக்கிக் கார்யம் செய்திலனோ என்கிறார் – 79 | கொண்டானை யல்லால் கொடுத்தாரை யார்பழிப்பார், மண்தா எனவிரந்து மாவலியை, ஒண்தாரை நீரங்கை தோய நிமிர்ந்திலையே, நீள்விசும்பில் ஆரங்கை தோய அடுத்து? | மண்தா என மாவலியை இரந்து, Manthaa Ena Maavaliyai Irandhu - (‘மூவடி) நிலத்தை எனக்குத்தா’ என்று மாவலியிடத்தில் யாசித்து ஒண் தாரைநீர், On Thaarainir - (அவனும் மறுக்கமாட்டாமல் அப்படியே உனக்குத் தந்தேனென்று தாரை வார்க்க) அழகிய அந்த நீர்த்தாரை அம் கை, Am Kai - (தனது) அழகிய திருக்கையிலே தோய, Thoya - வந்து விழுந்ததும் நீள் விசும்பிலார், Neel Visumbilaar - பரம்பின மேலுலகத்தில் வாழ்கின்ற ப்ரஹ்மாதிகளுடைய அம் கை, Am Kai - அழகிய கைகள் தோய், Thoy - ஸ்பர்சித்துத் திருவடி விளக்கும்படி அடுத்து நிமிர்ந்திலையே, Aduthu Nimirthilaye - கடுக ஓங்கி வளரவில்லையோ? கொண்டானை, Kondaanai - (இப்படி தன்னதான வஸ்துவைக் கொள்வதற்கும் தன்னை அழிய மாறிவந்து) தன்னதாக்கிக் கொண்ட எம்பெருமானைப் அல்லால், Allaal - பழிக்கிறார்களேயன்றி கொடுத்தாரை யார் பழிப்பார், Koduththaarai Yaar Pazhippaar - (தன்னதல்லாத்தைத் தன்னதாக அபிமானித்துக்) கொடுத்த அந்த மாவலியைப் பழிப்பார்கள் யாருமில்லையே! (இஃது என்ன அநியாயம்!) |