| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2168 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) சர்வேஸ்வரன் வந்து இப்படி வந்து சந்நிஹிதன் ஆனபின்பு இனி நரகத்துக்கு ஆள் கிடையாது அவ்வோ விடங்களுக்குக் கடவார் வாசல்களை யடித்து ஓடிப் போக வமையும் என்கிறார் – நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை -திருவாய் மொழி-5-2-1-என்னுமா போலே – 87 | இனியார் புகுவா ரெழுநரக வாசல்? முனியாது மூரித்தாள் கோமின், – கனிசாயக் கன்றெறிந்த தோளான் கனைகழலே காண்பதற்கு, நன்கறிந்த நாவலம்சூழ் நாடு. | கனி சாய, Kani Saaya - விளாம்பழம் உதிர்ந்து விழும்படி கன்று, Kandru - வத்ஸாஸுரனை எறிந்த, Erintha - எறிதடியாக எடுதெறிந்து இரண்டசுரரையும் முடித்த தோளான், Tholaaan - திருத்தோள்களையுடையவனான ஸர்வேச்வரனுடைய கனை கழலே, Kanai Kazhale - ஆபரணத்வநியையுடைய திருவடிகளை கண்பதற்கு, Kanpatharku - ஸேவிப்பதற்கு ஸாதநம் (அவன் உகந்து வாழ்கிற திருக்கோவலூர்க்கு ஸமீபமான இடத்தில் வஸிப்பதுதானென்று) நன்கு, Nanbu - நன்றாக அம் நாவல் சூல் நாடு, Am Naaval Soor Naadu - அழகிய ‘ஜம்பூ’ என்று பேர்படைத்த பரந்த த்வீ பத்திலுள்ள பிராணிகள் அறிந்த, Arindha - அறிந்துவிட்டன; எழு நரகம் வாசல், Ezhu Naragam Vaasal - (இப்படியானபின்) ஏழுவகைப்பட்ட நரகங்களின் வாசல்களிலே இனி, Ini - இனிமேல் புகுவார் ஆர், Puguvaar Aar - பிரவேசிப்பவர் யாவர்? முனியாது, Muniyadhu - (ஒருவருமில்லை) (ஓ யமகிங்கரர்களே!) (உங்கள் ஸ்தானத்துக்கு அழிவுண்டாவதாகச் சொல்லுகிற என்மேல்) கோபங்கொள்ளமல் மூரி தான் கோமின், Moori Thaan Koamin - (இனி ஒருகாலும் திறக்கமுடியாதபடி) பெரிய தாழ்ப்பாளைப்போட்டுப் பூட்டுங்கோள். |