| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2100 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அவன் ஒரு நாள் வந்து கிட்டுன விடத்திலும் நான் அவனைப் பெற்றிலேன் அவன் தானே வந்து சாய என்றும் அனுபவிக்கப் பெற்ற நீ என்ன பாக்யத்தைப் பண்ணினாயோ -என்கிறார் – பூமியைப் போலே ஒருகால் அன்றியிலே நித்ய சம்ச்லேஷம் பண்ணப் பெறுவதே கடல் என்று கொண்டாடுகிறார் 19 | மாலும் கருங்கடலே என் நோற்றாய் வையகமுண் டாலி னிலைத் துயின்ற வாழியான் கோலக் கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும் திருமேனி நீ தீண்டப் பெற்று | வையகம், வையகம் - இவ்வுலகத்தை யெல்லாம் உண்டு, Undu - (பிரளயம் கொள்ளாதபடி) திருவயிற்றினுள்ளே வைத்து ஆலின் இலை, ஆலின் இலை - ஆலந்தளிரிலே துயின்ற, துயின்ற - சயனித்துக் கொண்டவனும் ஆழியான், ஆழியான் - திருவாழியை யுடையவனும் கோலம் கரு மேனி, கோலம் கரு மேனி - அழகிய கறுத்த திருமேனியையுடையவனும் செம் கண், Sem Kan - செந்தாமரைக் கண்ணனுமான மால், Maal - எம்பெருமான் கண்படையுள், கண்படையுள் - உறங்குகையில் என்றும், Endrum - எப்போதும் திருமேனி, Thirumeeni - அவனுடைய திருமேனியை தீண்ட பெற்று, தீண்ட பெற்று - ஸ்பர்சிக்கப்பெற்று மாலும், மாலும் - (அந்த ஸ்பர்ச ஸுகத்தினால்) மயங்கிக்கிடக்கிற கரு கடலே, கரு கடலே - கரிய ஸமுத்ரமே! நீ என் நோற்றாய், நீ என் நோற்றாய் - (இந்தப் பாக்கியம் உனக்குக் கிடைக்குமாறு) நீ என்ன நோன்பு நோற்றாயோ? |