| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2133 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஏன் தான் -இவன் பேர் சொல்லா விடில் ஜீவிக்கை யரிதோ-என்னில் நாட்டில் துர்மாநிகளாய் அதிகாரிகளாய்த் திரிகிறவர்கள் அடங்கலும் தம் தாமுடைய அதிகாரங்கள் நிர்வஹித்துக் கொள்ளுகிறது அவனை ஆஸ்ரயித்துக் காண் என்கிறார் – 52 | எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர், வண்ண மலரேந்தி வைகலும், – நண்ணி ஒருமாலை யால்பரவி ஓவாது,எப் போதும் திருமாலைக் கைதொழுவர் சென்று. | எண்மர், Enmar - அஷ்ட வஸுக்களும் பதினொருவர், Pathinoruvar - ஏகாதச ருத்ரர்களும் ஈர் அறுவர், Eer Aruvar - த்வாத சாதித்யர்களும் ஓர் இருவர், Oru Irugar - இரட்டையரான அச்விநீ தேவதைகளும் வைகலும், Vaikalum - (ஆகிய முப்பத்து மூவரான தேவர்களும்) நாள்தோறும் வண்ணம் மலர் ஏந்தி, Vannam Malar Aendhi - நாநாவர்ணங்களை யுடைய புஷ்பங்களை யெடுத்துக்கொண்டு நண்ணி, Nanni - (எம்பெருமானைக்) கிட்டி ஒரு மாலையால், Oru Maalaiyal - ஒப்பற்ற புருஷஸூக்தமாகிற சொல் மாலையைக் கொண்டு ஓவாது, Ovaadhu - இடைவிடாமல் எப்போதும், Eppodhum - எல்லா வேலைகளிலும் பரவி, Paravi - துதிசெய்து திருமாலை சென்று, Thirumalai Sendru - திருமகள் கொழுநனைக்கிட்டி கைதொழுவர், Kaithozhuvar - வணங்குவர்கள் |