திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 80 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 6 | தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது
போருத்து வந்து புகுந்தவர் மண்ணாள
பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று
தேருய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பாணி–1-6-6 | பதவுரை Show / Hideதந்தை,Thandai - (எல்லார்க்கும்) பிதாவாகிய உனது சொல்,Sol - பேச்சை தாரித்து கொள்ளாது,Thariththu Kollaathu - (மனத்திற்) கொண்டு அங்கீகரியாமல் போர் உய்த்து வந்து,Poar Uyiththu Vandu - யுத்தத்தை நடத்துவதாக (க்கருவத்துடன்) வந்து புகுந்தவர்,Pugunthavar - (போர்க்களத்தில்) ப்ரவேசித்தவரும் மண்,Mann - ராஜ்யத்தை ஆள,Aala - (தாமே) அரசாளுவதற்கு பாரித்த,Paariththa - முயற்சி செய்த மன்னர்,Mannar - அரசர்களுமாகிய நூற்றுவர்,Noorruvar - நூற்றுக் கணக்காயிருந்த துரியோதநாதிகள் பட,Pada - மாண்டு போகும்படி அன்று,Andru - (பாரத யுத்தம் நிடந்த) அக் காலத்திலே பஞ்சவர்க்கு,Panjavarkku - பஞ்ச பாண்டவர்களுக்கு (வெற்றி உண்டாக) தேர் உய்த்த,Ther Uyiththa - (பார்த்தஸாரதியாய் நின்று) தேரை ஓட்டின கைகளால்,Kaigalal - திருக்கைகளாலே சப்பாணி-;,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும். தேவகி சிங்கமே,Devaki Singamae - தேவகியின் வயிற்றிற் பிறந்த சிங்கக்குட்டி போன்றவனே! சப்பாணி-.,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும். |
| 99 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 3 | பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து
நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனே அச்சோ வச்சோ ஆயர் பெருமானே அச்சோ வச்சோ–1-8-3 | பதவுரை Show / Hideபஞ்சவர்,Panjavar - பாண்டவர்களுக்காக தூதன் ஆய்,Thoodhan aay - (துர்யோதநாதிகளிடம்) தூதனாய்ப் போய் பாரதம்,Paaratham - (அந்த துர்யோதநாதிகள் தன் சொற்படி இசைந்து வராமையால்) பாரத யுத்தத்தை கை செய்து,Kai seythu - அணி வகுத்துச் செய்து நஞ்சு,Nanju - விஷத்தை உமிழ்,Umizh - கக்குகின்ற நாகம்,Naagam - (கானிய) ஸர்ப்பம் கிடந்த,Kidandha - இருந்த நல் பொய்கை,Nal poigai - கொடிய மடுவிலே புக்கு,Pukku - புகுந்து அஞ்சு,Anju - (ஆய்ச்சிகளும் ஆயரும்) பயப்படும்படி பணத்தின் மேல்,Panathin mel - (அப்பாம்பின்) படத்திலே பாய்ந்திட்டு,Paindhittu - குதித்து அருள்செய்த,Arulseytha - (நடமாடி அக்காளியனை இணைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க) (அப்பாம்பின் ப்ராணனைக்) கருணையால் விட்டிட்ட அஞ்சனம் வண்ணனே ! அச்சோ அச்சோ-;,Anjanam vannane Achcho achcho - அஞ்சனம் வண்ணனே ! அச்சோ அச்சோ-; ஆயர்,Aayar - இடையர்களுக்கு பெருமானே,Perumane - தலைவனானவனே! அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ |
| 101 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 5 | கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி
எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும்
சுழலைப் பெரிதுடைத் துச்சோதனனை
அழல விழித்தானே அச்சோ வச்சோ ஆழியங் கையனே அச்சோ வச்சோ–1-8-5 | பதவுரை Show / Hideகழல்,Kalal - வீரக் கழலை யணிந்த மன்னர்,Mannar - ராஜாக்கள் சூழ,Sool - தன்னைச் சுற்றியிருக்க (அவர்கள் நடுவில்) கதிர்போல்,Kathirpol - ஸூரியன்போல விளங்கி,Vilangi - ப்ரகாசமாயிருந்து (‘கண்ணனுக்கு எழுந்திருத்தல் குசல ப்ரச்நம் பண்ணுதல் முதலிய மர்யாதை எழல் உற்று,Ezhal utru - (ஒன்றும் செய்யக்கூடாது’ என்று கட்டளையிட்டிருந்த தானே தனக்கும் தெரியாமல்)(முதலில்) எழுந்திருந்து மீண்டு,Meendu - மறுபடியும் இருந்து,Irundhu - (தானெழுந்தது தெரியாதபடி) உட்கார்ந்து கொண்டு உன்னை,Unnai - உன்னை நோக்கும்,Nokkum - (பொய்யாஸநமிடுதல் முதலியவற்றால் கொல்வதாகப்) பார்த்த பெரிது கழலை உடை,Perithu kalalai udai - மிகவும் (வஞ்சனையான) ஆலோசனையை யுடைய துச்சோதனனை,Thuchchodhananai - துர்யோதநினை (திருவுள்ளத்திலுள்ள சீற்றமெல்லாம் பார்வையிலே தோன்றும்படி) அழல விழித்தானே,Azhal vizhiththane - உஷ்ணமாகப் பார்த்தவனே! அச்சோ அச்சோ-;,Achcho achcho - அச்சோ அச்சோ-; ஆழி,Aazhi - திருவாழி யாழ்வானை அம் கையனே,Am kaiyane - அழகிய கையிலேந்தியவனே! அச்சோ அச்சோ-.,Achcho achcho - அச்சோ அச்சோ-; |
| 102 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 6 | போரொக்கப் பண்ணி இப் பூமிப் பொறை தீர்ப்பான்
தேரொக்க வூர்ந்தாய் செழுந்தார் விசயற்காய்
காரொக்கும் மேனிக் கரும் பெருங் கண்ணனே
ஆரத் தழுவாவந்து அச்சோ வச்சோ ஆயர்கள் போரேறே அச்சோ வச்சோ–1-8-6 | பதவுரை Show / Hideஇ பூமி, E poomi - இந்தப் பூமியினுடைய பொறை,Porai - பாரத்தை தீர்ப்பான்,Theerppan - தீர்ப்பதற்காக போர்,Por - யுத்தத்தை ஒக்க,Okka - (துர்யோதநாதிகளோடு) ஸமமாக பண்ணி,Panni - செய்து செழு,Sezhu - செழுமைதாங்கிய தார்,Thar - மாலையை யுடைய விசயற்கு ஆய்,Vijayarku aay - அர்ஜுநனுக்காக தேர்,Ther - (அவனுடைய) தேரை ஒக்க,Okka - (எதிரிகள் தேர் பலவற்றிற்கும் இது ஒன்றுமே) ஸமமாம்படி ஊர்ந்தாய்,Oorndhai - பாகனாய்ச் செலுத்தினவனே! கார் ஒக்கும்,Kaar okkum - மேகத்தோடு ஒத்த மேனி,Meni - திருமேனியில் கரும்பெருங் கண்ணனே,Karumperum kannane - கரியவாகிப் புடைபரந்து கண்களையுடையவனே! வந்து,Vandhu - ஓடிவந்து ஆர,Aara - நின்றாக தழுவா,Thazhuvaa - தழுவிக்கொண்டு அச்சோ அச்சோ-;,Achcho achcho - அச்சோ அச்சோ-; ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு (அடங்கி நற்கின்ற) போர் ஏறே,Por ere - போர் செய்யுந் தன்மையுள்ள ரிஷபம் போன்றவனே! அச்சோ அச்சோ-.,Achcho achcho - அச்சோ அச்சோ-; |
| 111 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே) (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்) 4 | நாந்தக மேந்திய நம்பி சரணென்று
தாழ்ந்த தனஞ்சயற்காகி தரணியில்
வேந்தர்களுட்க விசயன் மணித் திண் தேர்
ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான் உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான்–1-9-4 | பதவுரை Show / Hideநாந்தகம்,Nanthagam - நந்தகம் என்னும் வாளை ஏந்திய,Aendhiya - கையிலணிந்துள்ள நம்பி,Nambi - பெரியோனே! சரண்,Saran - (நீ எனக்கு) ரக்ஷகன் என்று,Endru - என்று சொல்லி தாழ்ந்த,Thaazhntha - (தன்னை) வணங்கிய தனஞ்சயற்கு ஆகி,Thananjayarku aagi - அர்ஜுநனுக்குப் பக்ஷபாதி யாயிருந்து தரணியில்,Tharaniyil-ib bhoomiyile - இப் பூமியிலே வேந்தர்கள்,Vendarhal - (எதிரிகளான) ராஜாக்கள் உட்க,Utka - அஞ்சிக் கலங்கும்படி விசயன்,Vichayan-anda Arjunanathu - அந்த அர்ஜுநனது மணி திண் தேர்,Mani thin ther - அழகிய வலிய தேரை ஊர்ந்தவன்,Oornthavan - (ஸாரதியாயிருந்து) செலுத்தின இவன் என்னை புறம்புல்குவான்-;,Ennai purampulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான் உம்பர்,Umbar - நித்ய ஸூரிகளுக்கு கோன்,Kon - நிர்வாஹகனான இவன் என்னை புறம் புல்குவான்,Ennai puram pulkuvan - எம்பிரான் என்னை புறம் புல்குவான் |
| 118 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 1 | மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேயூதி
பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய்
பத்தூர் பெறாது அன்று பாரதம் கைசெய்த
அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-1 | பதவுரை Show / Hideமெச்ச,Mecha - (அனைவரும்) கொண்டாடும்படி ஊது,Oodu - ஊதுகின்ற சங்கம்,Sangam - பாஞ்சஜந்யத்தை மிடத்தான்,Midathaan - இடக்கையில் ஏந்தியுள்ளவனும் நல்வேய்,Nalvey - நல்ல வேய்ங்குழலை ஊதி,Oodi - ஊதுபவனும் பொய் சூதில்,Poi soodhil - க்ருத்ரிமமான சூதிலே தோற்ற,Thotra - (தம்முடைய சொத்துக்களை யெல்லாம்) இழந்தவர்களாய் பொறை உடை,Porai udai - பொறுமைசாலிகளான மன்னர்க்கு,Mannarkku - பாண்டவர்கட்கு ஆய்,Aay - (தான் எல்லாவகைத்) துணையுமாயிருந்து பத்து ஊர்,Pathu oor - (துர்யோதநாதிகளிடத்துத் தூது போய்க் கேட்டுப் பார்த்தும் அவர்களிடத்தினின்றும்) ஊரையும் பெறாது,Peraadhu - அடைய முடியாமல் அன்று,Andru - அக் காலத்திலே பாரதம்,Baaratham - பாரத யுத்தத்தை கை செய்த,Kai seitha - அணி வகுத்துச் செய்து அ தூதன்,A thoodhan - அந்தப் பாண்டவ தூதனான கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான்,Appoochi kaattuginraan - அப்படிப்பட்ட (மிகவும் பயங்கரமான) பூச்சி காட்டுகின்றான்; அம்மனே,Ammaney - அம்மா! அப்பூச்சி காட்டுகின்றான்-.,Appoochi kaattuginraan - அப்பூச்சி காட்டுகின்றான்-. |
| 119 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 2 | மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும்
பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன்
சிலை வளையத் திண் தேர் மேல் முன்னின்ற செங்கண்
அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-2 | பதவுரை Show / Hideமலை புரை,Malai purai - மலையை ஒத்த தோள்,Thol - தோள்களை யுடைய மன்னவர்,Mannavar - அரசர்களான மாரதரும்,Maaratharum - மஹா ரதரும் மற்றும் பலரும்,Matrum palarum - மற்றும் பலவகை அரசர்களும் குலைய,Kulaiya - அழியவும் நூற்றுவரும்,Noorruvarum - (துர்யோதநாதிகள்) நூறு பேரும் பட்டு,Pattu - மரணமடைந்து அழிய,Azhiya - உருவமழிந்து போகவும் பார்த்தன்,Paarthan - அர்ஜுனனுடைய சிலை,Silai - (காண்டீவமென்னும்) வில் வளைய,Valaiya - வளையவும் திண் தேர் மேல்,Thin ther mel - (அந்த அர்ஜுனனுடைய) வலிய தேரின் மேல் முன் நின்ற,Mun ninra - (ஸாரதியாய்) முன்புறத்தில் நின்ற செம் கண்,Sem kan - (வாத்ஸல்ய ஸூசகமாகச்) சிவந்த கண்களை யுடையனாய் அல வலை,Ala valai - (அர்ஜுநனுடைய வெற்றியைப்) புகழ்பவனான கண்ணன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.,Vandhu appoochi kaattuginraan - அப்பூச்சி காட்டுகின்றான்-. |
| 175 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 4 | ஒன்றே யுரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவன்
துன்று முடியான் துரியோதனன் பக்கல்
சென்று அங்குப் பாரதம் கை யெறிந்தானுக்கு
கன்றுகள் மேய்ப்பதோர் கோல் கொண்டு வா கடல் நிற வண்ணர்க்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-4 | பதவுரை Show / Hideஒன்றே,Ondre - (பாண்டவர்களுடன் சேர்ந்து வாழோம் என்ற) ஒரே விஷயத்தை உரைப்பான்,Uraippan - சொல்லுபவனும் ஒரு சொல்லே,Oru Sollae - (மத்யஸ்தர் எவ்வளவு சொன்னாலும் ஊசி குத்து நிலமும் பாண்டவர்களுக்குக் கொடேன்’ என்ற) ஒரு சொல்லையே சொல்லுவான்,Solluvaan - சொல்லுபவனும் துன்று முடியான்,Thunru Mudiyan - (நவரத்னங்களும்) நெருங்கப் பதித்த கிரீடத்தை அணிந்தவனுமான துரியோதநன் பக்கல்,Dhuriyodhanan Pakkal - துரியோதநனிடத்தில் சென்று,Sendru - தூது போய் அங்கு,Angu - அவ்விடத்தில் பாரதம்,Baaratham - பாரத யுத்தத்தை கையெறிந்தானுக்கு,Kaiyerindhaanukku - உறுதிப் படுத்திக் கொண்டு வந்த இவனுக்கு கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டு வா,Kanrughal Meippathu Or Kol Kondu Va - இளங்கன்றுகளை மேய்ப்பவனுமாகிய இவனுக்கு ஒரு கோலை கொண்டு வா கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா,Kadal Nira Vannarku Or Kol Kondu Va - கடல் நிற வண்ணற்கு ஒரு கோலை கொண்டு வா |
| 176 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 5 | சீரொன்று தூதாய்த் துரியோதனன் பக்கல்
ஊரொன்று வேண்டிப் பெறாத உரோடத்தால்
பாரொன்றிப் பாரதம் கை செய்து பார்த்தற்குத்
தேரொன்றை யூர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-5 | பதவுரை Show / Hideதுரியோதநன் பக்கல்,Dhuriyodhanan Pakkal - துரியோதநனிடத்தில் பாண்டவர்களுக்காக சீர் ஒன்று தூது ஆய்,Seer Ondru Thoodhu Aai - சிறப்பு பொருந்திய தூதனாகப் போய் ஊர் ஒன்று வேண்டி,Oor Ondru Vendi - (பாண்டவர்களுக்கு) ஒரு ஊராவது கொடு என்று யாசித்துக் கேட்டும் பெறாத,Peraadha - அந்த ஒரு ஊரையும் பெறாமையினாலுண்டான உரோடத்தால்,Urodathaal - சீற்றத்தாலே பார் ஒன்றி,Paar Ondri - பூமியில் பொருந்தி யிருந்து பாரதம் கை செய்து,Baaratham Kai Seidhu - பாரத யுத்தத்தில் அணி வகுத்து பார்த்தற்கு,Paartharkku - அர்ஜுநனுக்கு தேர் ஒன்றை ஊர்ந்தார்க்கு,Ther Ondrai Oornthaarkku - ஒப்பற்ற தேரை (ப்பாகனயிருந்து) நடத்தினவனுக்கு ஓர் கோல் கொண்டுவா—;,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா,Deva Piranukku Or Kol Kondu Va - தேவபிரானுக்கு ஒரு கோலை கொண்டு வா |
| 177 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 6 | ஆலத் திலையான் அரவினணை மேலான்
நீலக் கடலுள் நெடுங்காலம் கண் வளர்ந்தான்
பாலப் பிராயத்தே பார்த்தர்க்கு அருள் செய்த
கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா குடந்தைக் கிடந்தார்க்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-6 | பதவுரை Show / Hideஆலத்து இலையான்,Aalathu Ilaiyaan - (ப்ரளய காலத்தில் உலகமெல்லா முண்டு) ஆலிலையில் பள்ளி கொண்டிருப்பவனும் அரவின் அணை மேலான்,Aravin Anai Melan - (எப்போதும்) திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொள்பவனும் நிலம் கடலுள்,Nilam Kadalul - கரு நிறமான சமுத்திரத்தில் நெடுங்காலம்,Nedunkaalam - வெகு காலமாக கண் வளர்ந்தான்,Kann Valarnthaan - யோக நித்ரை செய்பவனும் பாலம் பிராயத்தே,Paalam Pirayathe - குழந்தைப் பருவமே தொடங்கி பார்த்தற்கு,Paartharkku - அர்ஜுநனுக்கு அருள் செய்த,Arul Seidha - க்ருபை செய்த கோலம்,Kolam - அழகிய வடிவத்தை யுடைய பிரானுக்கு,Piranukku - தலைவனுமான இவனுக்கு ஓர் கோல் கொண்டு வா;,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா குடந்தை கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.,Kudanthai Kidanthaarkku Or Kol Kondu Va - குடந்தை கிடந்தாற்கு ஒரு கோலை கொண்டு வா |
| 248 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 5 | பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போரேறே என்
சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா சிறுக் குட்டச் செங்கண் மாலே
சிற்றாடையும் சிறுப் பத்திரமும் இவை கட்டிலின் மேல் வைத்துப் போய்
கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்துக் கலந்துடன் வந்தாய் போலும்–3-3-5 | பதவுரை Show / Hideமுன்,Mun - (பாரதப் போர் செய்த) முற் காலத்தில் பற்றார்,Patraar - (உனது உயிர் போன்ற பாண்டவர்களுக்குப்) பகைவரான துரியோதனாதியர் நடுங்கும்,Nadungum - நடுங்கும்படி பாஞ்ச சன்னியத்தை,Paancha Sanniyaththai - சங்கத்தை போர் ஏறே,Por Eare - போர் செய்யலுற்ற காளை போன்ற கண்ணபிரானே!-எனக்கு விதேயனாய் சிறு ஆயர் சிங்கமே,Siru Aayar Singame - சிறிய இடைப் பிள்ளைகளுள் சிங்கக் குட்டி போன்றுள்ளவனே! சீதை,Seethai - ஸீதாப் பிராட்டிக்கு மணாளா,Manaalaa - வல்லபனானவனே! சிறு குட்டன்,Siru Kuttan - சிறு பிள்ளையாயிருப்பவனே! செம் கண் மாலே,Sem Kan Maale - (இப்படியிருக்கச் செய்தேயும்) செந்தாமரை மலர் போன்ற கண்களை யுடைய ஸர்வேச்வரனாக விளங்குமவனே! நீ;,Nee - நீ; சிறு ஆடையும்,Siru Aadaiyum - (உன் பருவத்துக்குத் தக்க) சிறிய திருப்பரிவட்டமும் சிறு பத்திரமும் இவை,Siru Paththiramum Ivai - குற்றுடை வாளுமாகிற இவற்றை கட்டிலின் மேல் வைத்து போய்,Kattilin Mel Vaithu Poi - (காட்டுக்குப் போகையிலுள்ள விரைவாலே) (கண் வளர்ந்தருளின) கட்டிலின் மேலே வைத்து மறந்து போய் கன்று ஆயரோடு,Kanru Aayarodhu - கன்று மேய்க்கிற இடைப் பிள்ளைகளுடனே கன்றுகள் மேய்த்து,Kanrugal Meithu - கன்றுகளை மேய்த்து விட்டு கலந்து உடன்,Kalandhu Udan - (மீண்டு மாலைப் பொழுதிலே) (அந்த தன்னேராயிரம் பிள்ளைகளோடே) கூடிக் கலந்து வந்தாய் போலும்,Vandhai Poolum - (வீட்டுக்கு) வந்தாயன்றோ?. |
| 311 | பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 5 | பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து
நஞ்சுமிழ் நாகம் கிடந் தநல் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனைப் பாடிப் பற அசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற–3-9-5 | பதவுரை Show / Hideபஞ்சவர்,Panchavar - பஞ்ச பாண்டவர்களுக்காக தூதன் ஆய்,Thoodhan Aay - (துரியோதநாதிகளிடம்) தூதனாய்ப் போய் பாரதம்,Bharatham - (அத்துரியோதனநாதிகள் தன்சொற்படி இசைந்துவாராமையால்) பாரத யுத்தத்தை கை செய்து,Kai Seithu - அணி வகுத்துச் செய்து, கஞ்சு உமிழ்,Kanju Umizh - விஷத்தைக் கக்குகின்ற நாகம் கிடந்த,Kaagam Kidandha - காளியன் கிடந்த நல் பொய்கை புக்கு,Nal Poigai Pukku - கொடிய மடுவிலே புகுந்து அஞ்ச பணத்தின் மேல் ,Anja Ak Kaaliyan Anjumbadi - (அக் காளியன்) அஞ்சும்படி (அவனது) படத்திலே பாய்ந்திட்டு,Paayndhittu - குதித்து நடமாடி அக்காளியனை இளைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க அருள் செய்த,Arul Seitha - அப் பாம்பின் பிராணனைக் கருணையால் விரட்டிட்ட அஞ்சனவண்ணனை பாடிப்பற;,Anjanavannanai Paadippara - அஞ்சனவண்ணனை பாடிப்பற; அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற.,Asothaithan Singaththaip Paadippara - அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற. |
| 334 | பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 7 | வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர்த் திருச் சக்கரம் ஏந்து கையன்
உள்ள விடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடுரைக்கேன்
வெள்ளைப் புரவிக் குரக்கு வெல் கொடித் தேர் மிசை முன்பு நின்று
கள்ளப் படைத் துணையாகிப் பாரதம் கை செய்யக் கண்டாருளர்–4-1-7 | பதவுரை Show / Hideவெள்ளை,Vellai - வெண்மை நிறமுடையதும் விளி,Vili - (அநுபவ கைங்கரியங்களில் ருசியுடையீர்! வாருங்கள் என்று, தன் த்வநியால்) அழைப்பது போன்றுள்ளதுமான சங்கு,Sangu - ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும் வெம் சுடர்,Vem Sudar - தீக்ஷ்ணமான ஜ்யோதிஸ்ஸை யுடைய திருச் சக்கரம்,Thiruch Chakkaram - திருவாழி யாழ்வாளையும் ஏந்து கையன்,Aendhu Kaiyan - தரியா நின்றுள்ள திருக்கைகளையுடைய எம்பெருமான் உள்ள இடம்,Ulla Idam - எழுத்தருளி யிருக்குமிடத்தை வினவில்,Vinavil - கேட்கிறீர்களாகில் உமக்கு,Umakku - (கேட்கிற) உங்களுக்கு இறை சுவடு உரைக்கேன்,Irai Suvadu Uraikkaen - சிறிது அடையாளம் சொல்லுகிறேன், வம்மின்,Vammin - வாருங்கள்; வெள்ளைப் புரவி,Vellaip Puravi - வெள்ளைக் குதிரகைள் பூண்டிருப்பதும் குரங்குகொடி,Kurangukodi - குரங்காகிற வெற்றிக் கொடியை உடையதுமான தேர்மிசை,Thermisai - (அர்ஜுனனுடைய) தேரின் மேலே முன்பு நின்று ,Munbu Nindru - (ஸாரதியாய்) முன்னே நின்று படை,Padai - ஸைந்யத்துக்கு கள்ளம் துணை ஆகி,Kallam Thunai Aagi - க்ருத்ரிமத் துணையாயிருந்து பாரதம்,Bhaaratham - பாரத யுத்தத்தை கை செய்ய கண்டார் உளர்,Kai Seiyya Kandaar Ular - அணி வகுத்து நடத்தும் போது கண்டார் உளர் |
| 335 | பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 8 | நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே
நாழிகை போகப் படை பொருதவன் தேவகி தன் சிறுவன்
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்பச் சயத்திரதன் தலையை
பாழி லுருளப் படை பொருதவன் பக்கமே கண்டாருளர்–4-1-8 | பதவுரை Show / Hideநாழிகை ,Naazhikai - (பகல் முப்பது) நாழிகைகளை கூறி விட்டு,Koouri Vittu - பங்கிட்டுக்கொண்டு காத்து நின்ற,Kaaththu Nindra - (ஜயத்ரதனைக்) காத்துக் கொண்டிருந்த அரசர்கள் நம் முகப்பே,Arasargal Nam Mugappae - ராஜாக்கள் முன்னிலையில் நாழிகை போக,Naazhikai Poga - (பகல் முப்பது) நாழிகையும் போயிற்றென்று தோற்றும்படியாக படை,Padai - (தன்) ஆயுதமாகிய திருவாழியாழ்வானைக் கொண்டு பொருதவன்,Porudhavan - (ஸூர்யனை) மறைத்தவனும் தேவகி தன் சிறுவன்,Devagi Than Siruvan - தேவகிப்பிராட்டியின் பிள்ளையுமான கண்ணபிரான் உள்ள இடம் கேட்கிறீர்களாகிய சொலலுகின்றேன்; (உள்ள இடம்),Ulla Idam - எழுந்தருளியிருக்குமிடத்தை ஆழி கொண்டு,Aazhi Kondu - திருவாழியினால் இரவி,Iravi - ஸூர்யனை மறைப்ப,Maraippa - (தான்) மறைக்க, சயத்திரதன்,Sayaththiradhan - (அதனால் பகல் கழிந்த்தாகத் தோற்றி வெளிப்பட) ஜயத்ரனுடைய தலை,Thalai - தலையானது. பாழில் உருள,Paazhil Urula - பாழியிலே கிடந்துருளும்படி படை பொறாதவன் பக்கமே,Padai Poraadhavan Pakkamae - அம்பைச் செலுத்தின அர்ஜுநனருகில் கண்டார் உளர்,Kandaar Ular - (அவ் வெம்பெருமானைக்) கண்டாருண்டு. |
| 354 | பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 6 | பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கமெல்லாம்
ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை
பாண்டகு வண்டினங்கள் பண்கள் பாடி மதுப் பருக
தோண்ட லுடைய மலை தொல்லை மாலிருஞ் சோலையதே–4-3-6 | பதவுரை Show / Hideபாண்டவர் தம்முடைய,Paandavar Thammudaiya - பஞ்சபாண்டவர்களுடைய (மனைவியாகிய) பாஞ்சாலி,Paanchaali - த்ரௌபதியினுடைய மறுக்கமெல்லாம்,Marukkam Ellam - மனக் குழப்பத்தை யெல்லாம் ஆண்டு,Aandu - (தன்) திருவுள்ளத்திற்கொண்டு, அங்கு,Angu - (அவள் பரிபவப்பட்ட) அப்போது (அத் துன்பங்களை யெல்லாம்) நூற்றுவர் தம்,Nootruvar Tham - (துரியோதநாதிகள்) தூற்றுவருடைய பெண்டிர் மேல்,Pendir Mel - மனைவியர்களின் மேல் வைத்த,Vaitha - சுமத்தின அப்பன்,Appan - ஸ்வாமியான கண்ண பிரான் (எழுந்தருளி யிருக்கிற) மலை,Malai - மலையானது : பாண் தரு,Paan Tharu - பாட்டுக்குத் தகுதியான (ஜன்மத்தை யுடைய) வண்டு இனங்கள்,Vandu Inangal - வண்டு திரளானவை பண்கள்,Pangal - ராகங்களை பாடி,Paadi - பாடிக் கொண்டு மது,Madu - தேனை பருக,Paruga - குடிப்பதற்குப் பாங்காக (ச் சோலைகள் வாடாமல் வளர) தோண்டல்,Thondal - ஊற்றுக்களை யுடைய மலையாகிய தொல்லை மாலிருஞ் சோலை அதே,Thollai Maaliruncholai Adhe - அநாதியான அந்த மாலிருஞ் சோலையேயாம். |
| 398 | பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 8 | திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய்
அரசினை யவிய அரசினை யருளும் அரி புருடோத்தம னமர்வு
நிரை நிரை யாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு விட்டு இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்ட மென்னும் கடி நகரே–4-7-8 | பதவுரை Show / Hideநெடியன,Nediyana - நீண்டவையா யிரா நின்றுள்ள யூபம்,Yoopam - (பசுக்கள் கட்டுகிற) யூப ஸ்தம்பங்களானவை நிரை நிரை ஆக,Nirai Nirai Aaga - திரள் திரளாக நிரந்தரம்,Nirandharam - இடை விடாமல் ஒழுங்கு விட்டு,Ozhungu Vittu - நெடுக ஓடா நிற்பதும் இரண்டு கரை புரை ,Erandu Karai Purai - இரு பக்கத்துக் கரைகளும் தம்மிலே ஒத்து வேள்வி புகை கமழ்,Velvi Pugai Kamazha - யாக குண்டத்திலுண்டாகும் புகைகளால் பரிமளியா நிற்பதுமான கங்கை,Gangai - கங்கைக் கரையில் கண்டம் என்னும் கடி நகர்;,Kandam Ennum Kadi Nagar - ‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய சிறந்த நகரமானது திரை பொரு,Thirai Poru - அலை யெறியா நின்றுள்ள கடல் சூழ்,Kadal Soozh - கடலால் சூழப் பெற்ற திண் மதிள்,Thin Mathil - திண்மையான மதிள்களை யுடைய துவரை,Thuvaarai - த்வாரகைக்கு வேந்து,Vendhu - தலைவனும் தன்,Than - தன்னுடைய மைத்துனன் மார்க்கு,Maiththunan Maarkku - மைத்துனன் மார்களான பாண்டவர்களுக்கு ஆய்,Aay - பக்ஷபாதியாய் நின்று அரசனை அவிய,Arasanai Aviya - துரியோதநாதி ராஜாக்களை அழியச் செய்து அரசினை,Arasinai - ராஜ்யத்தை அருளும்,Arulum - (அப்பாண்டவர்கட்குக்) கொடுத்தருளினவனும் அரி,Ari - (ஸகல பாபங்களையும்) போக்குமவனுமான புருடோத்தமன்,Purudhoaththaman - புருஷோத்தமப் பெருமாள் அமர்வு,Amarvu - பொருந்தி யெழுந்தருளி யிருக்குமிடம் |
| 417 | பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (ஆறாம் பாட்டு திரௌபதியை குழல் முடிப்பித்து –பாண்டவர்களை ராஜாக்கள் ஆக்கி -உத்தரா தநயனையும் உஜ்ஜீவிப்பித்தவன்- நித்ய வாசம் பண்ணுகிற தேசம் இது என்கிறார்.) 6 | மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி
உத்தரை தன் சிறுவனையும் உய்யக் கொண்ட உயிர் ஆளன் உறையும் கோயில்
பத்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுது இறைஞ்சி திசை விளக்காய் நின்ற திருவரங்கமே –4-9-6 | பதவுரை Show / Hideமைத்துனன் மாரி,Maiththunan Maari - (தனது) மைத்துனன்மாரான பாண்டவர்களுடைய காதலியை,Kaathaliyai - பத்தினியாகிய த்ரௌபதியை மயிர் முடிப்பித்து,Mayir Mudippiththu - விரிந்த கூந்தலை முடியும் படி செய்தருளி அவர்களைளேயே,Avargalaiyeye - அப்பாண்டவர்களையே மன்னர் ஆக்கி,Mannar Aakki - அரசான்வித்தளியவனும் உத்தரை தன்,Uththarai Than - (அபிமந்யுவின் மனைவியான) உத்தரை என்பவளுடைய சிறுவனை,Siruvanai - மகனான (கருவிற் கரிக்கட்டையாயொழிந்த) பரிக்ஷித்தை உய்யக் கொண்ட,Uyyak Konda - உயிர்பெற்றெழுந்திருக்கும் படி செய்தருளியவனும் உயிர் ஆளன்,Uyir Aalan - எல்லா உயிர்கட்கும் தலைவனுமான எம்பெருமான் உறையும்,Urayum - எழுந்தருளயிருக்கிற கோயில்,Koyil - கோயிலாவது; பத்தர்களும்,Paththargalum - பக்தர்களும் பழ மொழி வாய் முனிவர்களும்,Pazha Mozhi Vaai Munivargalum - அநாதிவாக்காகிய வேதத்தை வாயிற்கொண்டுள்ள ரிஷிகளும் பரந்த நாடும்,Parantha Naadum - விசாலமான நாட்டிலுள்ள மற்றும் பலரும் சித்தர்களும்,Siththargalum - நித்திய முக்தர்களும் தொழுது இறைஞ்ச,Thozhuthu Irainja - அஞ்சாலி பண்ணி வணங்கும்படி திசை விளக்கு ஆய்நிற்கின்ற,Thisai Vilakku Aaynirkkinra - எல்லாத் திக்குகளுக்கும் விளக்காயிருக்கிற திருவரங்க நகராம் |
| 456 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 4 | காதம் பலவும் திரிந்துழன்றேற்கு அங்கோர் நிழலில்லை நீருமில்லை உன்
பாத நிழலல்லால் மற்றோரு யிர்ப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன்
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கோர் பொய் சுற்றம் பேசிச் சென்று
பேதஞ்செய்து எங்கும் பிணம் படுத்தாய் திருமாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-4 | பதவுரை Show / Hideகுரு,Guru - குருவம்சத்திற் பிறந்த பாண்டவர்க்காய்,Paandavarkkaai - பாண்டவர்களுக்காக ஓர் பொய் சுற்றம் பேசி சென்று,Or Poi Sutrram Paesi Sendru - ஒரு பொய் யுறவைப் பாராட்டிக் கொண்டு அங்கு,Angu - துரியோதனாதியரிடத்து தூது சென்றாய்,Thoodhu Sendraai - தூது போய் பேதம் செய்து,Paedham Seidhu - இரண்டு வகுப்பினர்க்கும் கலஹத்தை மூட்டி இல்லை,Ellai - (பின்பு பாரத யுத்தங் கோடித்து அந்த யுத்தத்தில்) கண்டதில்லை உன் பாதம் நிழல் அல்லால்,Un Paadham Nizhal Allaalaal - உனது திருவடி நிழலொழிய எங்கும்,Enggum - துரியோதனாதியரில் ஒருவர் தப்பாமல் பிணம் படுத்தாய்,Pinam Paduththaai - பிணமாக்கி யொழித் தருளினவனே! திருமாலிருஞ்சோலை எந்தாய்!,Thirumaalirunjcholai Endhaai - திருமாலிருஞ் சோலை மலையில் (எழுந்தருளி யிருக்கிற) எம்பெருமானே! காதம் பலவும்,Kaadham Palavum - பலகாத தூரமளவும் திரிந்து உழன்றேற்கு,Thirindhu Uzhandraerku - திரிந்து அலைந்த எனக்கு அங்கு,Angu - அவ் விடங்களில் ஓர் நிழல் இல்லை,Or Nizhal Illai - (ஒதுங்குகைக்கு) ஒரு நிழலுங் கண்டதில்லை; நீர்,Neer - (அன்றியும்) (காபமாற்றக் கடவதான) தண்ணீரும் மற்று ஓர்,Matru Or - மற்றொரு இல்லை,Ellai - கண்டதில்லை ஆராய்ந்து பார்த்தவிடத்தில் உன் பாதம் நிழல் அல்லால்,Un Paadham Nizhal Allaalaal - உனது திருவடி நிழலொழிய உயிர்ப்புஇடம்,Uyirppidam - ஆச்வாஸ ஹேதுவான இடத்தை நான் எங்கும் காண்கின்றிலேன்,Naan Enggum Kaankindrilaen - நான் ஓரிடத்தும் காண்கிறேனில்லை. |
| 653 | பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 7 | மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி
ஐம்புலன்கள் அடக்கி இடர் பார துன்பம்
துறந்து இரு முப் பொழுது ஏத்தி எல்லை இல்லா
தொன் நெறி கண் நிலை நின்ற தொண்டரான
அறம் திகழும் மனத்தவர் தம் கதியை பொன்னி
அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்
நீர் மல்க என்று கொலோ நிற்கும் நாளே ? | பதவுரை Show / Hideமறம் நிகழும் மனம் ஒழித்து, Maram Nigazhum Manam Ozhithu - கொடுமையால் விளங்கா நின்றுள்ள மனத்தை ஒழித்து வஞ்சம் மாற்றி, Vanjam Maatri - வஞ்சனைகளைப் போக்கி வல் புலன்கள் அடக்கி, Val Pulankal Adakki - கொடிய இந்திரியங்களை அடக்கி இடர் பாரம் துன்பம் துறந்து, Idar Paaram Thunbam Thurandu - (மேன் மேலும்) துக்கத்தை விளைப்பனவாய்ப் இரு முப்பொழுது ஏத்தி, Iru Muppozhudhu Aethi - பஞ்ச காலங்களிலும் துதித்து எல்லை இல்லா தொல் நெறிக் கண் நிலை நின்ற, Ellai Illaa Thol Nerik Kan Nilai Nindra - அளவிறந்த பழைய மர்யாதையிலே நிலை நின்ற தொண்டர் ஆன, Thondar Aana - தாஸ பூதர்களான அறம் திகழும் மனத்தவர் தம், Aram Thigazhum Manaththavar Tham - தர்ம சிந்தையே விளங்கும் மனமுடையரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு கதியை, Kathiyai - பரம ப்ராப்யனாய் பொன்னி அணி அரங்கத்து, Ponni Ani Arangathu - காவிரியால் அழகு பெற்ற கோயிலிலே நிறம் திகழும், Niram Thigazhum - அழகு விளங்கா நின்றுள்ள மாயோனை, Maayoni - ஆச்சரியனான எம்பெருமானை என் கண்கள், En Kangal - எனது கண்களானவை கண்டு, Kandu - ஸேவிக்கப் பெற்று நீர் மல்க நிற்கும் நாள் என்று கொல், Neer Malku Nirkum Naal Endru Kol - ஆநந்தக் கண்ணீர் ததும்பும்படி நிற்பது என்றைக்கோ? மறம், Maram - கொலை, கோபம், கொடுமை. இடர்ப் பாரத் துன்பம் துறந்து, Idarp Paarath Thunbam Thurandu - “பாரமாய பழவினை பற்றறுத்து” என்கை. |
| 723 | பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 5 | பாராளும் படர் செல்வம் பாரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பில் இளையவனோடு அரும் கானம் அடைந்தவனே
சீராளும் வரை மார்பா ! திரு கண்ண புரத்தரசே !
தாராளும் நீண் முடி என் தாசரதீ ! தாலேலோ | பதவுரை Show / Hideபார் ஆளும் படர் செல்வம், Paar Aalum Padar Selvam - பூமி முழுவதையும் ஆட்சி புரிகையாகிற பெரிய ராஜ்ய ஸம்பத்தை பரதன் நம்பிக்கே, Barathan Nambikke - ஸ்ரீ பரதாழ்வானுக்கே அருளி, Aruli - நியமித்து விட்டு ஆரா அன்பு இளையவனோடு, Aaraa Anbu Ilaiyavanodu - பரிபூர்ணமான பக்திப் பெருங்காதலை யுடைய இளைய பெருமாளுடன் கூட அரு கானம் அடைந்தவனே, Aru Kaanam Adaindavaney - (புகுவதற்கு) அருமையான காட்டைக் குறித்து எழுந்தருளினவனே! சீர் ஆளும் வரை மார்பா, Seer Aalum Varai Maarbaa - வீர லெக்ஷ்மிக்கு இருப்பிடமாய் மலை போன்ற திரு மார்பை யுடையவனே! தார் ஆளும் நீள் முடி, Thaar Aalum Neel Mudi - மாலையோடு கூடின சிறந்த திரு முடியை யுடையவனே! |
| 777 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 26 | ஆணினோடு பெண்ணுமாகி அல்லவோடு நல்லவாய்
ஊணோடு ஓசை யூறுமாகி யொன்றலாத மாயையாய்ப்
பூணு பேணு மாயனாகிப் பொய்யினோடு மெய்யுமாய்க்
காணி பேணு மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே | பதவுரை Show / Hideஆணினோடு பெண்ணும் ஆகி, Aaninodu Pennum Aagi - புருஷஜாதி, ஸ்த்ரீஜாதி என்ற இரண்டு சாதிக்கும் ப்ரவர்த்தகனாய் அல்லவோடு நல்ல ஆய், Allavodu Nalla Aay - மேற்சொன்ன இரண்டு ஜாதியிலும் சேராத நபும்ஸக பதார்த்தங்களென்ன இம்மூன்று வகுபபிலும் சிறந்தவையென்ன இவற்றுக்கெல்லாம் நிர்வாஹகனாய் ஊணொடு ஓசை கூறும் ஆகி, Oonodu Osai Koorum Aagi - ரஸம், சப்தம், ஸ்பர்சம் முதலிய விஷயங்களுக்கு நியாமகனாய் என்று அலாத மாயை ஆய், Endru Aladha Maayai Aay - உலகிலுள்ள எல்லாப் பொருளாகவும் பரிணமிக்கின்ற ப்ரக்ருதிக்கு நிர்வாஹகனாய் பூணி பேணும், Pooni Paenum - பசுக்களை மேய்கிக்கிற ஆயன் ஆகி, Aayan Aagi - இடையனாய் பொய்யினோடு மெய்யும் ஆய், Poyyinodu Meyyum Aay - பொய்யரான துர்யோதநரதிகன் பக்கலிலே பொய்யனாய் மெய்யரான பாண்டவர் பக்கலிலே மெய்யனாய் காணிப்பேணும் மாணி ஆய், Kaanippeanum Maani Aay - (மூவடி) நிலத்தை ஆசைப்பட்ட பிரமசாரியாகி கரந்து சென்ற கள்வனே!, Karandhu Senra Kalvane - (மஹாபலியின் யாக பூமியிலே) க்ருத்ரிமமாக எழுந்தருளின் மாயனே! உன்னை யார் மதிக்கவல்லர்!, Unnai Yaar Mathikkavallar - உன்னை அளவிடக்கூடியவர்கள் யார்? |
| 804 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 53 | மோடியோட இலச்சையாய சாபம் எய்தி முக்கண்ணான்
கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து
ஓட வாணன் ஆயிரம் கரம் கழித்த வாதிமால்
பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்ற பேரதே | பதவுரை Show / Hideமோடியோடு, Modiyodu - காளியும் இலச்சை ஆய சாபம் எய்தி முக்கணான், Ilachchai Aaya Saapam Eydhi Mukkanan - வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் மக்களோடு, Makkalodu - ஸ்வஜனங்களோடு கூடு, Koodu - திரண்ட சேனை, Senai - ஸேனையை கொண்டு, Kondhu - அழைத்துக்கொண்டு வெம் சமத்து, Vem Samathu - பயங்கரமான போர்க்களத்திலிருந்து மண்டி ஓட, Mandi Oda - வேகமாக ஓடிப்போன வளவிலே வாணன், Vaanan - பாணாஸுரனது ஆயிரம் கரம், Aayiram Karam - ஆயிரம் கைகளை கழித்த, Kazhitha - அறித்தொழித்த ஆதி மால், Aadhi Maal - பரமபுருஷனுடைய பீடுகோயில், Peedukoyil - பெருமைதங்கிய கோயில் நீர் கூடு, Neer Koodu - காவேரியோடு கூடின அரங்கம் என்றபோது, Arangam Endra Podhu - திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம் |
| 840 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 89 | பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன்
தேர் மிகுத்து மாயமாக்கி நின்று கொன்று வென்றி சேர்
மாரதர்க்கு வான் கொடுத்து வையம் ஐவர் பாலதாம்
சீர் மிகுத்த நின் அலால் ஓர் தெய்வம் நான் மதிப்பனே | பதவுரை Show / Hideமுன், Mun - முற்காலத்தில் பார் மிகுந்த பரம், Paar Mikuntha Param - பூமியிலே அதிமாகவுண்டான சுமையாகிய துஷ்டவர்க்கத்தை ஒழிச்சுவான், Ozhichchuvaan - ஒழிப்பதற்காக அருச்சுனன் தேர் மிகுத்து, Aruchchunan Ther Mikuththu - அர்ஜுனனுடைய தேரை நன்றாக நடத்தி மாயம், Maayam - (பகலை இரவாக்குகை முதலான) ஆச்சரியச் செயல்களை ஆக்கி நின்று, Aakki Nindru - உண்டாக்கி கொன்று, Konru - (எதிரிகளைக்) கொன்று வெள்ளிசேர் மாரதர்க்கு, Velliseer Maaratharkku - ஐயம்பெறுவதாக நினைத்திருந்த மஹாரதர்களான துர்யோதநாதிகளுக்கு வான் கொடுத்து, Vaan Koduthu - வீரஸ்வர்க்கத்தைக் கொடுத்து வையம், Vaiyam - பூமண்டலத்தை ஐவர் பாலது ஆம், Aivar Paalathu Aam - பஞ்சபாண்டவர்களுடையதாக அக்குவித்த சீர் மிகுந்த, Seer Mikuntha - புகழ் மிகுந்த நின் அலால், Nin Alaal - உன்னைத்தவிர ஓர் தெய்வம், Or Deivam - மற்றொரு தெய்வத்தை நான் மதிப்பனே, Naan Mathippane - நான் ஆதரிப்பேனோ! |
| 988 | பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கலையுங்கரியும்.) நெஞ்சே! நீ ஸ்ரீஸாளக்ராமமென்னும் திவ்ய தேசத்தை அடைந்திடு. 1 | அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் –1-5-1 | பதவுரை Show / Hideகலையும் கரியும் பரிமாவும், Kalaiyum Kariyum Parimavum - மான்களும் யானைகளும் குதிரைகளுமாகிய மிருகங்கள் திரியும் கானம் கடந்துபோய், Thiriyum Kaanam Kadandupoy - திரியுமிடமான காட்டைத் தாண்டிச்சென்று சிலையும் கணையும் துணை ஆக, Silaiyum Kanaiyum Thunai Aaga - வில்லும் அம்பும் துணையாகக்கொண்டு வென்றி செருகளத்து சென்றான், Vendri Serugalathu Senraan - (தனக்கு) வெற்றியை விளைக்கவல்ல போர்க்களத்திலே எழுந்தருளினவனும், அலை நீர், Alai Neer - அலைக்கின்ற நீரையுடைய கடலிலே மலை கொண்டு, Malai Kondu - மலைகளாலே அணை கட்டி, Anai Katti - ஸேது கட்டி மதிள் நீர் இலங்கை, Mathil Neer Ilangai - மதிலையும் ஸமுத்ரத்தையும் காப்பாக உடைத்தான இலங்கையிலுள்ள வாள் அரக்கர் தலைவன், Vaal Arakkar Thalaivan - வாளை ஆயதமாகக் கொண்ட இராவணனுடைய பத்து தலை, Paththu Thalai - பத்துத்தலைகளையும் அறுத்து உகந்தான், Aruththu Ugandhaan - அறுத்துத்தள்ளி (ஆச்ரித விரோதி தொலைந்தானென்று) திருவுள்ள முகந்தவனுமான எம்பெருமானுடைய திவ்ய தேசமாகிய சாளக்கிராமம், Saalakkiraamam - ஸ்ரீஸாளக்ராமத்தை நெஞ்சே அடை, Nenjee Adai - மனமே!, சென்று சேர். |
| 994 | பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஏனோரஞ்ச வெஞ்சமத்துள்.) கீழ்ப்பாட்டில் ”உலகேழும் தாயான் என்று ஸர்வலோக வ்யாபகத்வம் சொன்னவுடனே, முன்பு ப்ரஹ்லாதன் எம்பெருமான் ஸர்வ வ்யாபகன் என்று சொன்னதும் இரணியன் அதை மறுத்துச் சொன்னதும் முதலிய கதைகள் நினைவுக்கு வந்து ஹிரண்ய வத வ்ருத்தாந்தத்தை அருளிச் செய்கிறாரிதில். 7 | ஏனோர் அஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப் பாரிய விரணியனை
ஊனார கலம் பிளவெடுத்த ஒருவன் தானே யிரு சுடராய்
வானாய்த் தீயாய் மாருதமாய் மலையாய் அலை நீர் உலகனைத்தும்
தானாய் தானுமானான் தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-7 | பதவுரை Show / Hideஏனோர் அஞ்ச, Eynoor Anja - சத்துருக்களான அசுரர்கள் பயப்படும்படியாக அரி ஆய், Ari Aay - நரசிங்கமூர்த்தியாகி பரிய இரணியனை, Pariya Iraniyanai - தடித்த சரீரத்தை யுடையனான ஹிரண்யனை வெம் சமத்துள், Vem Samaththul - கடுமையான போர்க்களத்திலே ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்தஒருவன், Oon Aar Akalam Pilavu Eduththoruvan - மாம்ஸம் நிறைந்த மார்பு கிழியும்படி செய்த வொருவனும், தானே, Thaaney - இப்படி செய்தருளினவன் தானே இரு சுடர்ஆய், Iru Sudar Aay - சந்த்ர ஸூர்யர்களாயும் வான் ஆய், Vaan Aay - ஆகாசமாயும் தீ ஆய், Thee Aay - அக்நியாயும் மாருதம் ஆய், Maarudham Aay - காற்றாயும் மலை ஆய், Malai Aay - மலைகளாயும் அலை நீர் உலகு அனைத்தும் தான் ஆய், Alai Neer Ulagu Anaiththum Thaan Aay - கடல் ஆழ்ந்த உலகங்கள் யாவுமாய் இருப்பவனும் தானும் ஆனான் தன் சாளக்கிராமம், Thaanum Aanaan Than Chaalakkiraamam - அஸாதாரணமான திவ்யமங்கள விக்ரஹத்தையுடையனுமான எம்பெருமானுடைய ஸாளக்ராமத்தை |
| 1021 | பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாண்டவர்களுக்காகப் பாரதயுத்தம் நடத்தி வெற்றி பெற்றவனும், இப்படி ஆச்ரிதர்களுக்காகக் காரியஞ் செய்யப்பெற்றதனால் திருமேனி மிக விளங்கப் பெற்றவனும், இடைச்சிகளோடு ராஸக்ரீடை யென்கிற குரவைக்கூத்து ஆடினவனும், தன்னைத் துதிப்பவர்களின் நெஞ்சை விட்டுப் பிரியாதே யிருப்பவனும், இடவெந்தை யென்கிற திவ்யதேசத்திலே இனிதாக எழுந்தருளி யிருப்பவனுமான எம்பெருமானுடைய தாய், பலபல புண்ய தீர்த்தங்களாலும் பெரிய பூஞ்சோலைகளாலும் சூழப்பட்டதான திரு வேங்கட மலையைச் சென்று சேர் மனமே!) 4 | பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர்
கோத்தங்காயர் தம் பாடியில் குரவை பிணைந்த வெம் கோவலன்
ஏத்துவார் தம் மனத்துள்ளான் இட வெந்தை மேவிய வெம்பிரான்
தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-4 | பதவுரை Show / Hideஅன்று, Andru - முற்காலத்தில் பார்த்தற்கு ஆய், Paarttharkku Aay - அர்ஜூநனுக்காக பாரதம், Bharatham - பாரத யுத்தத்திலே கை செய்திட்டு, Kai Seidittu - கையும் அணியும் வகுத்து வென்ற, Vendra - வெற்றிபெற்ற பரம் சுடர், Param Sudar - பரஞ்சோதியானவனும், அங்கு ஆயர்தம் பாடியில், Angu Aayartham Paadiyil - அங்கே திருவாய்ப் பாடியிலே குரவை கோத்து பிணைந்த, Kuravai Koththu Pinaindha - ராஸக்ரீடை செய்தருளின எம் கோவலன், Em Kovalann - நமது கோபாலனும், ஏத்துவார்தம், Aethuvaartham - தன்னைத் துதிப்பவர்களுடைய மனத்து, Manaththu - நெஞ்சிலே உள்ளான், Ullaan - வஸிப்பவனும் இடவெந்தை, Idaventhai - திருவிடவெந்தையிலே மேவிய, Meviya - பொருந்திய எம்பிரான், Embiran - அஸ்மத் ஸ்வாமியுமானவன் எழுந்தருளியிருக்கப்பெற்றதும் தீர்த்தம் நீர் தட சோலை சூழ், Theertham Neer Thada Solai Soozh - புண்ய தீர்த்தங்களாலும் பெரிய சோலைகளாலும் சூழப்பெற்றதுமான |
| 1060 | பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஏச நின்ற -என்றது அனுவர்த்திக்கிறது-உதித அநுதித ஹோம நிந்தை போலே இருப்பது ஓன்று இறே – இது புக்க புக்க துறை தோறும் பகவத் விஷயத்தில் கால் தாழ வல்லர் -ஆயிற்று- பூமியிலே ஏவிக் கார்யம் கொள்ளுவாரைப் பெற்றது-இனி இவ்விடம் விட்டுப் போவோம் அல்லோம் என்று சாய்ந்தான் ஆயிற்று –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3 | முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து,அரக்கன்
மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின்னோர் தூத னாதிமன்னர்க் காகிப் பெருநிலத்தார்,
இன்னார் தூத னெனநின்றா னெவ்வுள் கிடந்தானே. –2-2-3 | பதவுரை Show / Hideமுன், Mun - ஸ்ரீராமாவதாரத்திலே (- (எவ்வுள் கிடந்தான்-.)) வானரத்தின் வாயில், Vaanaraththin Vaayil - சிறிய திருவடி மூலமாக ஓர் தூது மொழிந்து, Oru Thoodhu Mozhinthu - (பிராட்டிக்குத்) தூது சொல்லியனுப்பி (பிறகு) அரக்கன், Arakkan - இராவணனுடைய மன் ஊர்தன்னை, Man Oorthannai - சிறந்த லங்காபுரியை வாளியினால், Vaalaiyin Aal - ஓர் அம்பினாலே மாள முனிந்து, Maala Muninthu - மாண்டுபோகும்படி சீறிமுடித்து, பின், Pin - பின் பொருகாலத்தில் ஆதி மன்னர்க்கு, Aadhi Mannarkku - ராஜாதிராஜர்களான பாண்டவர்களுக்கு ஓர் தூது ஆகி, Oru Thoodhu Aagi - விலக்ஷணனான தூதனாய், பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றானவனே, Peru Nilaththaar Innar Thoodhan En Nindraanavaney - பெரிய இப்பூமியிலுள்ளாரெல்லாரும் இவன் இன்னாருடைய தூதன் என்று சொல்ல அதனால் நிலைபெற்று நின்ற அப்பெருமான் |
| 1068 | பெரிய திருமொழி || (2-3–விற்பெருவிழவும்) (திருவல்லிக்கேணி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விரோதி வர்க்கத்தை கிழங்கு எடுக்குமவனாய் –ஈஸ்வர அபிமாநிகளுக்கு இடர் வந்தால் -போக்குமவனாய் – தனக்கு ஸ்நேஹிதர் ஆனார்க்காகத் தன்னை அழிய மாறுமவனாய் – போலியான ஸ்நேஹிகளுக்கும் ஏவிற்றுச் -செய்யுமவனானவனை –திரு வல்லிக்கேணியிலே காணப் பெற்றேன் என்கிறார் முதல் பாசுரத்தில்) 1 | விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ,
செற்றவன் றன்னை, புரமெரி செய்த சிவனுறு துயர்களை தேவை,
பற்றலர் வீயக் கோல்கையில் கொண்டு பார்த்தன்றன் தேர்முன்நின் றானை,
சிற்றவை பணியால் முடிதுறந் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. –2-3-1 | பதவுரை Show / Hideபெரு வில் விழவும், Peru Vil Vizhavum - சிறந்ததான தநுர்யாகமென்கிற உத்ஸவமும் கஞ்சனும், Kanjanum - (அந்த உத்ஸவத்தை நடத்தின) கம்ஸனும் மல்லும், Mallum - (அந்த கம்ஸனாலே ஏவி நிறுத்தப்பட்ட) மல்லர்களும் வேழமும்பாகனும், Vezhamumpaganum - (குவலயாபீடமென்கிற) யானையும் அதன் பாகனும் (ஆகிய எல்லாம்) வீழ செற்றவன் தன்னை, Veela Settravan Thannai - பங்கமடையும்படி த்வம்ஸம் பண்ணினவனும், புரம் எரி செய்த சிவன் உறு துயர், Puram Eri Seitha Sivan Uruthu Thuyar - திரிபுரமெரித்த சிவபெருமானடைந்த ப்ரஹ்மஹத்தி சாபத்தை களை, Kalai - களைந்தொழிந்த தேவை, Thevai - தேவனும், பற்றலர் வீய, Patralar Veeya - சத்துருக்கள் மாளும்படியாக கோல் கையில் கொண்டு, Kol Kaiyil Kondu - சாட்டையைத் திருக்கையிலே பற்றிக்கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை, Parthan Than Ther Mun Nindraanai - பார்த்தசாரதியாய் நின்றவனும் சிறு அவை பணியால், Siru Avai Paniyala - சிறிய தாயாகிய கைகேயியினுடைய சொல்லாலே முடி துறந்தானை, Mudi Thurandhaanai - உபேக்ஷித்தவனுமான பெருமானை திருவல்லிக்கேணி, Thiruvallikeni - திருவல்லிக்கேணி யென்னும் க்ஷேத்ரத்திலே கண்டேன், Kandein - ஸேவிக்கப்பெற்றேன். |
| 1072 | பெரிய திருமொழி || (2-3–விற்பெருவிழவும்) (திருவல்லிக்கேணி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ யபதியாய் இருக்கையாலே அல்லாதார் எல்லார்க்கும் வலிய துணை யானவன் – ஆஸ்ரித விஷயத்தில் தாழ நின்ற நிலையாலே தானே துணை என்னும் இடத்தை எனக்கு அறிவித்தவன் – எனக்கு ஸ்வாமியாய் –என் குலத்துக்கு நாதன் ஆனவன் -திருவல்லிக்கேணிக் கண்டேனே-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5 | இந்துணைப் பதுமத் தலர்மகள் தனக்கும் இன்பன்நற் புவிதனக் கிறைவன்,
தந்துணை யாயர் பாவைநப் பின்னை தனக்கிறை மற்றையோர்க் கெல்லாம்
வன்துணை, பஞ்ச பாண்டவர்க் காகி வாயுரை தூதுசென் றியங்கும் என்துணை,
எந்தை தந்தைதம் மானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. –2-3-5 | பதவுரை Show / Hideஇன் துணை, In Thunai - தனக்கினிய துணையான (- (திருவல்லிக்கேணி கண்டேன்-.)) பதுமத்து அலர் மகள் தனக்கும் இன்பன், Pathumathu Alar Magal Thanakku Inban - தாமரைப்பூவிற் பிறந்த பிராட்டிக்கு இன்பனும் நல் புவி தனக்கு இறைவன், Nal Puvai Thanakku Iraivan - ஸ்ரீபூமிப் பிராட்டிக்கு நாதனும் தன் துணை, Than Thunai - தன்னையே துணையாகவுடையளான ஆயர்பாவை நப்பின்னை தனக்கு இறை, Aayarpaavai Nappinnai Thanakku Irai - ஆயர்மகளான நப்பின்னைப் பிராட்டிக்கு நாயகனும் மற்றையோர்க்கு எல்லாம், Mattraiyorkku Ellam - மற்றுமுள்ள எல்லார் தமக்கும் வன் துணை, Van Thunai - ஒருகாலும் விட்டு நீங்காத துணையாயிருப்பவனும் பஞ்ச பாண்டவர்க்கு ஆகி, Pancha Pandavarkku Aagi - பஞ்ச பாண்டவர்களுக்காய் தூது சென்று, Thoodhu Sendru - தூதனாக எழுந்தருளி வாய் உரை இயங்கும், Vaai Urai Iyankum - வாய் வார்த்தைகளைச் சொன்னவனும் என் துணை, En Thunai - எனக்குத் துணையானவனும் எந்தை தந்தை தம்மானை, Endai Thandai Thammaanai - எம் குலநாதனுமான பெருமானை |
| 1073 | பெரிய திருமொழி || (2-3–விற்பெருவிழவும்) (திருவல்லிக்கேணி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வலியார் சிலரை அபாஸ்ரயமாக பற்றினாலும் தானே தாழ நின்று ரஷகனாக வல்லன் என்னும் இடத்தை சொல்லுகிறது- த்ரௌபதிக்கு பர்த்தாகள் உதவிற்று இலர்-அர்ஜுனனுக்கு இந்த்ரன் உதவிற்று இலன் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்) 6 | அந்தகன் சிறுவ னரசர்த்த மரசற் கிளையவ னணியிழை யைச்சென்று,
எந்தமக் குரிமை செய் எனத் தரியாது எம்பெரு மானருள் என்ன,
சந்தமல் குழலாள் அலக்கண்நூற் றுவர்த்தம் பெண்டிரு மெய்திநூ லிழப்ப,
இந்திரன் சிறுவன் தேர்முன்நின் றானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. –2-3-6 | பதவுரை Show / Hideஅந்தகன் சிறுவன், Andhagan Siruvan - குருடனான த்ருதராஷ்ட்ரனுடைய பிள்ளையாய் (- (திருவல்லிக்கேணி கண்டேன்-.)) அரசர் தம் அரசற்கு, Arasar Tham Arasarkku - ராஜாதி ராஜனென்று தன்னை மதித்திருந்த துரியோதனனுடைய இளையவன், Ilaiyavan - தம்பியான துச்சாஸநன் அணி இழையை சென்று, Ani Izhaiyai Sendru - அழகிய ஆபரணங்களையுடையளான த்ரௌபதியிடம் வந்து எம்தமக்கு உரிமை செய் என, Emthamakku Urimai Sei Ena - “நீ எங்களுக்கு அடிமை செய்யக்கடவை” என்று சொல்ல, தரியாது, Thariyadhu - (அவள்) பொறுக்க மாட்டாமல் எம்பெருமான்!, Emperumaan - “ஸ்வாமியான கண்ணபிரானே! அருள் என்ன, Arul Enna - கிருபை பண்ணவேணும்” என்று ப்ரார்த்திக்க, சந்தம் அல் குழலாள் அலக்கண், Sandham Al Kuzhalal Alakkan - அழகிய இருண்ட கூந்தலையுடையான அந்த த்ரௌபதியின் மனவருத்தத்தை நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி, Noorruvar Tham Pendirum Eydhi - துரியோதநாதியர்நூறு பேர்களுடைய மனைவிகளும் அடைந்து நூல் இழப்ப, Nool Izhappa - தாலியை இழக்கும்படியாக இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை, Indiran Siruvan Ther Mun Nindraanai - இந்திர புத்திரனான அர்ஜூநனுடைய தேரின் முன்னே ஸாரதியாய் நின்ற பெருமானை |
| 1081 | பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தான் ஸ்வாமியான முறை தோற்ற இருக்குமாகில் அவர்களோடும் பொருந்த ஒண்ணாது இறே- அதுக்காக தன்னைத் தாழ விட்டு அவர்களோடு உறவு பண்ணி கலந்து –த்ரௌபதி உடைய ஸ்த்ரீத்வத்தை பரிஹரித்தவனுக்கு வாஸ ஸ்தானம்–என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4 | தாங்காததோ ராளரி யாயவுணன் – றனைவீட முனிந்தவ னாலமரும்,
பூங்கோதையர் பொங்கெரி மூழ்கவிளைத் ததுவன்றியும் வென்றிகொள் வாளமரில்,
பாங்காகமுன் ஐவரொ டன்பளவிப் பதிற்றைந்திரட் டிப்படை வேந்தர்பட,
நீங்காச்செரு வில்நிறை காத்தவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-4 | பதவுரை Show / Hideதாங்காதது, Thangadhadhu - எதிரிகளுக்கு ஸஹிக்கமுடியாத ஓர் ஆளி அரி ஆய், Oru Aali Ari Aay - ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி அவுணன் தனை, Avunan Thanai - (ஹிரண்யனென்னும்) அஸூரனை வீட முனிந்து, Veeda Muninthu - முடியுமாறு சீறி, அவனால் அமரும், Avanal Amarum - அவ்விரணியனால் நிலைபெற்றிருந்த பூங்கோதையர், Poongothaiyar - பெண்டுகள் பொங்கு எரி மூழ்க, Pongu Eri Moongka - எரிகிற நெருப்பிலே புகும்படி விளைத்து, Vilaitthu - செய்தவனாயும் அது அன்றியும், Adhu Andriyum - அதுவுமல்லாமல், முன், Mun - முன்னே வென்றி கொள் வாள் அமரில், Vendri Kol Vaal Amiril - வெற்றியையுடைய பெரிய போர்க்களத்திலே ஐவரொடு, Aivarodu - பஞ்சபாண்டவர்களோடே பாங்கு ஆக அன்பு அளவி, Paangu Aaga Anbu Alavi - அவர்களுக்குத் தக்கபடி உறவு பண்ணிக் கலந்து, படை, Padai - ஆயுதங்களை யுடையவர்களான பதிற்றைந் திரட்டி வேந்தர் பட, Pathirrain Thiratti Vendar Pada - நூற்றுவரான துரியோதனாதிகள் முடிந்துபோம்படி செய்தவனாயும் நீங்கா செருவில், Neenga Seruvil - மாளாத அப்பெரும் பூசலினாலே நிறை, Nirai - (த்ரௌபதியின்) நலத்தை காத்தவனுக்கு, Kaathavanukku - ரக்ஷித்தவனாயுமுள்ள ஸர்வேச்வரனுக்கு |
| 1082 | பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவண வதம் பண்ணின அநந்தரம் திருமேனியில் பிறந்த பௌஷ் கல்யம் இருக்கிறபடி – நீலமானது அமர்ந்து இருக்கிற முகில் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவன் – அவ் வடிவு அழகாலே என்னை அனன்யார்ஹன் ஆக்கினவனுக்கு –மா மலையாவது நீர் மலையே – என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5 | மாலுங்கட லாரம லைக்குவடிட் அணைகட்டி வரம்புருவமதிசேர்
கோலமதி ளாயவி லங்கைகெடப் படைதொட்டொரு காலம ரிலதிர,
காலமிது வென்றயன் வாளியினால் கதிர்நீண்முடிபத்து மறுத்தமரும்,
நீலமுகில் வண்ணனெ மக்கிறைவற் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-5 | பதவுரை Show / Hideஒரு கால், Oru Kaal - முன்னொருகாலத்திலே (- (அவ்வளவிலும் இராவணன் சளைக்காமல்) (இடம் மாமலை ஆவது நீர்மலையே-)) மாலும் கடல் ஆர, Maalum Kadal Aara - பெரிய கடல் நிறையும்படி மலை குவடு இட்டு, Malai Kuvalu Ittu - மலைக் கொடுமுடிகளைக் கொண்டு போட்டு வரம்பு உருவ, Varambu Uruva - அக்கரையிலே சென்று சேரும்படி அணை கட்டி, Anai Katti - ஸேது கட்டி, மதி சேர், Madi Ser - சந்திரன் வரையில் ஓங்கியிருக்கிற கோலம் மதிளாய, Kolam Madilay - அழகிய மதில்களையுடைத்தான இலங்கை, Ilankai - லங்காபுரியானது கெட, Keda - அழியும்படியாக படை தொட்டு, Padai Thottu - ஆயதங்களைச் செலுத்தி அமரில் அதிர, Amaril Athira - போர்க்களத்தில் நின்று குமுறின வளவிலே இதுகாலம் என்று, Idhukalam Endru - இவனை முடிப்பதற்கு இதுவே தக்க ஸமயமென்று கொண்டு அயன் வாளியினால், Ayan Valiyinal - ப்ரஹ்மாஸ்த்ரத்தாலே கதிர் நீள் முடி பத்தும் அறுத்து, Kathir Neel Mudi Pathum Aruthu - (கிரீடங்களால்) ஒளிபெற்ற நீண்ட பத்துத் தலைகளையும் அறுத்து அமரும், Amarum - அயோத்திமாநகரில் பிராட்டியும் தானுமாக வந்து சேர்ந்த நீலம் முகில் வண்ணன், Neelam Mukil Vannan - காளமேக நிறத்தனான எமக்கு இறைவற்கு, Emakku Iraivarku - எம்பெருமானுக்கு |
| 1087 | பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரயண காலத்திலேயே கர்மங்கள் அடைய விட்டோடிப் போம் – அதுக்கு மேலே பிராப்தியும் வேண்டி இருக்கில் அதுவும் அவர்க்கு சுலபமாம் – அன்றிக்கே-பூமிக்கு எல்லாம் தாங்களே நிர்வாஹகராய் ஐஸ்வர்யத்தை அனுபவித்து பின்னையும் திருவடிகளிலே கூடப் பெறுவர்–என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10 | நெடுமாலவன் மேவிய நீர்மலைமேல் நிலவும்புகழ் மங்கையர் கோன்,அமரில்
கடமாகளி யானைவல்லான் கலியன் ஒலிசெய்தமிழ் மாலைவல் லார்க்கு,
உடனே விடுமால்வினை வேண்டிடில் மேலுலகும் எளிதாயிடு மன்றியி லங்கொலிசேர்,
கொடுமாகடல் வையக மாண்டுமதிக் குடைமன்னவ ராயடி கூடுவரே. –2-4-10 | பதவுரை Show / Hideநெடு மால் அவன் மேவிய, Nedu Maal Aavan Meviyai - ஸர்வேச்வரன் நித்யவாஸம் செய்தருளப்பெற்ற (- (ஆல்-அசை.) (பின்பு)) நீர்மலை மேல், Neermalai Mel - திருநீர்மலை விஷயமாக, நிலவும் புகழ், Nilavum Pugazh - நித்யமான புகழையடையரும் மங்கையர்கோன், Mangaiyarkon - திருமங்கைநாட்டி லுள்ளார்க்குத் தலைவரும் அமரில், Amaril - போர்க்களத்திலே கடம் மா களி யானை வல்லான், Kadham Maa Kali Yaanai Vallaaan - மதத்தாலே மிகவும் களித்த யானையை நடத்தவல்லவருமான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் ஒலிசெய், Olisei - அருளிச்செய்த தமிழ் மாலை, Tamizh Maalai - இத்தமிழ்த்தொடையை வல்லார்க்கு, Vallarkku - ஓதவல்லவர்களுக்கு வினை, Vinai - (உள்ள) பாவங்கள் உடனே, Udane - அப்போதே விடும், Vidum - அகன்றொழியும்; வேண்டிடில், Vendidil - அபேக்ஷை யுண்டாகில் மேல் உலகும், Mel Ulakum - சுவர்க்கம் முதலிய மேலுலகங்களின் அநுபவமும் எளிது ஆயிடும், Ezhithu Aayidum - ஸூலபமாகும்; அன்றி, Andri - அதுவுமல்லாமல், இலங்கு ஒலி சேர் கொடு மா கடல் வையகம், Ilangu Oli Ser Kodu Maa Kadal Vaiyagam - விளங்காநின்ற கோஷத்தையுடைய வளைந்த பெரிய கடலால் சூழப்பட்ட பூமியை மதி குடை மன்னவர் ஆய் ஆண்டு, Mathi Kudai Mannavar Aay Aandu - சந்திரனை யொத்த வெண் கொற்றக்குடையை யுடைய ராஜாக்களாய் அரசாண்டு அடி கூடுவர், Adi Kooduvar - அவனது திருவடிகளைக் கிட்டப் பெறுவர்கள். |
| 1092 | பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிலவறையிலே பிரவேசிப்பித்து நலிய வேணும் என்று –பதிபடை கிடந்த மல்லர் முடிந்து போம் படி சீறினவனை- அந்த க்ருத்ரிமத்தைத் தப்பி என்னை எழுதிக் கொண்டவனை காணப் பெற்றேன் என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5 | பாய்ந்தானைத் திரிசகடம் பாறிவீழப் பாலகனா யாலிலையில் பள்ளியின்பம்
ஏய்ந்தானை, இலங்கொளிசேர் மணிக்குன்றன்ன ஈரிரண்டு மால்வரைத்தோ ளெம்மான்றன்னை,
தோய்ந்தானை நிலமகள்தோள் தூதிற்சென்றப் பொய்யறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக்
காய்த்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. –2-5-5 | பதவுரை Show / Hideதிரி சகடம், Thiri Sakadam - உருளுகிற சகடமானது (- (கடிபொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே கண்டுகொண்டேன்-.)) பாறி, Paari - சின்னபின்னமாகச் சிதறி வீழ, Veela - விழும்படி பாய்ந்தானை, Paayndhaanai - திருவடியாலுதைத்தவனும் பாலகன் ஆய், Paalagan Aay - சிறுபிள்ளையாய் ஆல் இலையில், Aal Ilaiyil - ஆலந்தளிரிலே பள்ளி இன்பம் ஏய்ந்தானை, Palli Inbam Aeyndhaanai - திருக்கண்வளர்தலாகிற ஸுகத்தை அநுபவித்தவனும் இலங்கு ஒளி சேர், Ilangu Oli Seer - மிக்க ஒளியை யுடைத்தான மணி குன்று அன்ன, Mani Kunru Anna - ரத்னமயமான பர்வதம் போன்றவனும் மால் வரை, Maal Varai - பெரிய மலைபோன்ற ஈர் இரண்டு தோள் எம்மான் தன்னை, Eer Irandu Thol Emmaan Thannai - நான்கு திருத்தோள்களையுடைய ஸ்வாமியானவனும் நிலம் மகள் தோள் தோய்ந்தானை, Nilam Magal Thol Thoyndhaanai - பூமிப்பிராட்டியின் தோளோடே அணைந்தவனும் தூதின் சென்று, Thoodhin Sendru - (பாண்டவர்களுக்குத்) தூது செய்யுந் தொழிலுடனே (துரியோதனனிடம்) எழுந்தருளி பொய் அவ் அறை வாய்புக பெய்த, Poi Av Arrai Vaaypuka Peytha - (அத்துரியோதனன்) க்ருத்ரிமமாகச் செய்துவைத்த அந்த நிலவறையி னுள்ளே நிறுத்தப்பட்டிருந்த மல்லர், Mallaar - மல்லர்கள் மங்க, Manga - முடியும்படி காய்ந்தானை, Kaayndhaanai - சீற்றங்காண்டவனுமான எம்மானை, Emmaanai - எம்பெருமானை |
| 1101 | பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் பிரதி பஷ நிரசன சமர்த்தனாய் இருக்கச் செய்தே ஆநு கூல்யத்தாலே கார்யம் கொள்வானாக நினைத்து வந்து கிடக்கிறபடியை அனுசந்தித்து ஈடுபடுமவர்கள் என் ஒருவன் அளவன்றிக்கே என் குலத்துக்காக நாதர் ஆவார்கள் என்கிறார்- இவர் என்ன அபேஷையாலே வந்து கிடக்கிறார் நமக்காக விறே -என்று நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே -என்று இதிலே ஈடுபடுமவர்கள் – எங்கள் குல தெய்வமே- குல தைவதம் தத் பாதாராவிந்தம் –என்னும் அளவல்ல எங்களது-என்கிறார் நான்காம் பாசுரத்தில்) 4 | விண்டாரை வென்றாவி விலங்குண்ண, மெல்லியலார்
கொண்டாடும் மல்லகலம் அழலேற வெஞ்சமத்துக்
கண்டாரை, கடல்மல்லைத் தலசயனத் துறைவாரை,
கொண்டாடும் நெஞ்சுடையா ரவரெங்கள் குலதெய்வமே. –2-6-4 | பதவுரை Show / Hideவிண்டாரை, Vindaarai - சத்துருக்களை ராவணாதி ராக்ஷஸர்களை (- (கடல்மல்லைத் தலசயனத்து உறைவாரை-;)) வென்று, Vendru - தோற்கடித்து ஆவி விலங்கு உண்ண, Aavi Vilangu Unna - (அவர்களுடைய) உயிரை (நாய் நரி முதலிய) மிருகங்கள் மேல்விழுந்து முடிக்கும் படியாகவும், மெல் இயலார் கொண்டாடும் மல் அகலம், Mel Iyalar Kondadum Mal Akalam - மாதர்கள் கொண்டாடப் பெற்றதும் மிடுக்கையுடையதுமான (அவர்களது) மார்வை அழல் ஏற, Azhala Eera - அக்நி ஆக்ரமித்து புஜிக்கும் படியாகவும் வெம் சமத்து, Vem Samathu - பயங்கரமான போர்க்களத்திலே கண்டாரை, Kandaarai - பார்த்துக்கொண்டிருந்த கொண்டாடும் நெஞ்சுஉடையாரவர், Kondadum Nenjuudaiyaaravar - புகழ்ந்து பேசும்படியான நெஞ்சுபடைத்த பாகவதர்கள் எங்கள் குலம் தெய்வம், Engal Kulam Deivam - எங்கள் குலத்துக்குத் தெய்வங்களாவர். |
| 1113 | பெரிய திருமொழி || (2-7–திவளும்) (திருவிடவெந்தை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உதவாதவன் உதவாது ஒழிகை அன்றிக்கே உதவும் ஸ்வ பாவனாய் இருந்து வைத்து நம் தசை இதுவாய் இருக்க உதவாது ஒழிவதே –என்று மோஹிக்கும்- நம் தசையை உடையாள் ஒருத்திக்கு உதவினவன் அன்றோ என்று அந்த அண்ணிமையை அனுசந்தித்து இனியளாய்- அணித்தாக உதவினவன் நமக்கு வாராது ஒழிவதே -என்று மயங்கும் இவளுடைய-வை வர்ண்யமும்-அத்யாவச்யமும்-செல்லாமையும்-வடிவு அழகும் பிறப்பும் இருந்தபடியாலும் உமக்கு உதவாது ஒழியப் போமோ- இவளைக் காட்டில் உமக்கு உண்டான வைவர்ண்ய உத்யோதகம் இறே ஸ்ரீ திருவிடவெந்தையில் இருப்பு – உடம்பு வெளுப்பு அன்றாகில் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்க அமையும் இறே – உம்முடைய வைவர்ண்யம் தோற்ற ஸ்ரீ திருவிடவெந்தையில் எழுந்து அருளி இருக்கிற நீர் இவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்) 6 | தன்குடிக் கேதும் தக்கவா நினையாள் தடங்கடல் நுடங்கெயி லிலங்கை,
வன்குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தைகேட் டின்புறும் மயங்கும்,
மின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி மென்முலை பொன்பயந் திருந்த,
என்கொடி யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. –2-7-6 | பதவுரை Show / Hideதன் குடிக்கு தக்க ஆ, Than Kudikku Thakka Aa - தனது குலமரியாதைக்குத் தகுந்தபடியை (- (இடவெந்தை எந்தை பிரானே!;) (இப்பெண்பிள்ளையானவள்)) ஏதும் நினையாள், Edhum Ninaial - சிறிதும் ஆராய்கின்றிலள்; தட கடல், Thada Kadal - பெரிய கடலோடும் நுடங்கு எயில், Nudangu Eiyil - வளைந்த மதிளோடும் கூடின இலங்கை, Ilankai - இலங்கையிலிருந்த வல்குடி, Valkudi - வலிய ராக்ஷஸகுலமானது. மடங்க, Madanga - அழியும்படி வாள் அமர்தொலைத்த வார்த்தை கேட்டு, Vaal Amartholaittha Vaarthai Kettu - கொடிய போர்க்களத்திலே ஒழித்த செய்தியைக் கேட்டு இன்புறும், Inpurom - (ஒரு பிராட்டிக்காக இவ்வளவு காரியம் செய்வதே! என்று) ஈடுபடாநின்றாள்; மயங்கும், Mayangum - (அப்பிராட்டிக்குப்போல நமக்கும் ஒரு காரியம் செய்வதில்லையே! என்று வருந்தி) மூர்ச்சிக்கின்றாள்; மின்கொடி மருங்குல் சுருங்க, Minkodi Marungul Surunga - மின்னலும் வஞ்சிக்கொடியும் போன்ற இடையானது நுடங்கும்படி மென் முலை, Men Mulai - மெல்லிய முலைகளானவை மேல் நெருங்கி, Mel Nerungi - மார்பின்மேலே (ஒன்றோடொன்று ) நெருக்கமுற்று பொன் பயந்திருந்த, Pon Payandhirundha - பசலை நிறமுடைத்தாம்படியிருக்கின்ற என் கொடி இவளுக்கு, En Kodi Ivalukku - எனது இப்பெண்பிள்ளை திறத்திலே என் நினைந்திருந்தாய், En Ninaindhirundhai - என்ன செய்வதாகத் திருவுள்ளம்? |
| 1129 | பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் ராவண வதம் பண்ணினதோடு-இவன் சத்ரு வதம் பண்ணினதோடு வாசி அற்று இருக்கிறது ஆயிற்று இவருடைய ஆதரம்- தான் இல்லை யானாலும் தன்னுடைய வீர ஸ்ரீ நிற்கும்படி வாழ்ந்த பல்லவன் -என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்) 2 | கார்மன்னு நீள்விசும் பும்கட லும்சுடரும் நில னும்மலை யும்,தன்னுந்தித்
தார்மன்னு தாமரைக் கண்ணனிடம் தட மாமதிள் சூழ்ந்தழ காயகச்சி,
தேர்மன்னு தென்னவ னைமுனையில் செரு வில்திறல் வாட்டிய திண்சிலையோன்,
பார்மன்னு பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-2 | பதவுரை Show / Hideகார்மன்னு நீள் விசும்பும், Karmannu Neel Vichumbum - மேகங்கள் பொருந்திய பெரிய ஆகாசமென்ன (- (ஆகிய இவையெல்லாம்) (பரமேச்சுர விண்ணகரம் அதுவே-.)) கடலும், Kadalum - ஸமுத்திரங்களென்ன சுடரும், Sudarum - சந்திரன் சூரியன் முதலிய சுடர்ப்பொருள்களென்ன நிலனும், Nilanum - பூமியென்ன மலையும், Malaiyum - குலபர்வதங்களென்ன தன் உந்தி தார்மன்னு, Than Undhi Tharmannu - தனது திருநாபிக் கமலத்தில் நின்றும் உண்டாகப்பெற்ற தாமரை கண்ணன், Thamarai Kannan - புண்டரிகாக்ஷனுக்கு இடம், Idam - இருப்பிடமாவது தடம் மா மதிள் சூழ்ந்து, Thadam Maa Mathil Soozhndhu - தடாகங்களாலும் பெரிய மதிள்களாலும் சூழப்பட்டு அழகாக கச்சி, Azhagaga Kachchi - அழகான காஞ்சீபுரியிலே, முனையில், Munaivil - போர்க்களத்திலே தேர்மன்னு தென்னவனை, Thermannu Thennavanai - மஹாரதனான பாண்டிய ராஜனுடைய செரு வில் திறல் வாட்டிய, Seru Vil Thiral Vaattiya - சண்டை செய்யும் வில்லின் வலியைப் பங்கப்படுத்தின திண் சிலையோன், Thin Silaiyon - வலிய வில்லையுடையனாய் பார்மன்னு, Paarmannu - இப்புமியில் நெடுங்காலம் வாழ்ந்திருந்த பல்லவர்கோன், Pallavarkon - பல்லவராஜன் பணிந்த, Panintha - கைங்கரியம் செய்யப்பெற்ற |
| 1130 | பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் மதிக்கும் படியான ஆண் பிள்ளைத்தனம் இறே அவரதும் – கட மா களி யானை வல்லான் -என்றும் ஆடல் மா வலவன் -என்றும் மருவலர் தம்முடல் துணிய வாள் வீசும் பரகாலன் -என்றும் துறை தோறும் தலையாய் இருக்கிற ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் இறே மதிக்கிறார் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3 | உரந்தரு மெல்லணைப் பள்ளி கொண்டான் ஒருகால் முன்னம் மாவுரு வாய்க்கடலுள்,
வரந்தரும் மாமணி வண்ணனிடம் மணிமா டங்கள் சூழ்ந்தழ காயகச்சி,
நிரந்தவர் மண்ணையில் புண்ணுகர் வேல்நெடு வாயி லுகச்செரு வில்முனநாள்,
பரந்தவன் பல்லவர் கோன்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-3 | பதவுரை Show / Hideமுனம் ஒருகால், Munaam Orukaal - முன்பொருகால் (- (பரமேச்சுர விண்ணகரம் அதுவே-.)) மா உரு ஆய், Maa Uru Aay - விலக்ஷணமான வடிவுடையனாய் கடலுள், Kadalul - திருப்பாற்கடலிலே உரம் தரு மெல் அணை, Uram Tharu Mel Anai - வலிமிக்க மிருதுவான சேஷசயனத்திலே பள்ளி கொண்டான், Palli Kondaaan - திருக்கண்வளர்ந்தவனும் வரம் தரும், Varam Tharum - வரதனென்று திருநாமமுடையவனும் மா மணிவண்ணன், Maa Manivannan - நீலமணிபோன்ற நிறத்தனுமான பெருமானுக்கு இடம், Idam - இடமாவது, மணி மாடங்கள் சூழ்ந்து, Mani Maatangal Soozhndu - ரத்நமயமான மாடங்களாலே சூழப்பட்டு அழகு பொலிந்த அழகாய கச்சி, Azhagaaya Katchi - கச்சிப்பதியிலே, முனநாள், Munanaal - முற்காலத்தில், மண்ணையில் நிரந்தவர், Mannaivil Niranthavar - மண்ணையென்னும் நகரத்திலுள்ள சத்ரு ராஜாக்களானவாகள் புண் நுகரி வேல் நெடு, Pun Nukhari Veel Nedu - மாம்ஸங்களைக் கவர்கின்ற வேலாயுதத்தின் கொடிய வாயிலே வாயில் உக, Vaayil Uga - பட்டு முடியும்படியாக செருவில், Seruvil - போர்க்களத்திலே பரந்தவன், Parandhavan - வியாபித்தவனான பல்லவர்கோன் பணிந்த, Pallavarkon Panintha - பல்லவராஜன் பணிவிடை செய்யப்பெற்ற |
| 1131 | பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சத்ருக்களின் உடைய செறிந்த குழாமானது சிதறி ஓட-முனிந்து சீறி முன்பு ஒருகால் கையிலே வில் வளைத்தவன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4 | அண்டமு மெண்டிசை யும்நிலனும் அலைநீரொடு வானெரி கால்முதலா
உண்டவன், எந்தைபி ரானதி டமொளி மாடங்கள் சூந்தழ காயகச்சி,
விண்டவ ரிண்டைக்கு ழாமுடனே விரைந் தாரிரி யச்செரு வில்முனைந்து,
பண்டொரு கால்வளைத் தான்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-4 | பதவுரை Show / Hideஅண்டமும், Andamum - அண்டங்களையும் (- (ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய உச்சி-.) (பரமேச்சுரவிண்ணகரம் அதுவே–.)) எண் திசையும், En Thisayum - எட்டுத்திசைகளையும் நிலனும், Nilanum - பூமியையும் அலை நீரொடு, Alai Neerodu - கடல்களையும் வான், Vaan - ஆகாசத்தையும் எரி, Eri - அக்நியையும் கால், Kaal - காற்றையும் முதலா, Muthala - இவை முதலான மற்றும் பல பொருள்களையும் உண்டவன், Undavan - (பிரளயம் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்து நோக்கின எந்தைபிரானது, Endhaipiraanathu - எம்பெருமானுக்கு இடம், Idam - இடமாவது, பண்டு ஒருகால், Pandhu Orukaal - முன்னொரு காலத்தில் செருவில், Seruvil - போர்க்களத்திலே விரைந்தார், Viraindhaar - சண்டை செய்ய விரைந்து வந்தவர்களான விண்டவர், Vintavar - பகைவர்கள் இண்டை, Intai - நெருங்கின (தங்களது) குழாமுடனே, Kuzhamudane - கூட்டங்களோடே இரிய, Iriya - சிதறியோடும்படி முனிந்து, Muninthu - சீறி வளைத்தான், Valaiththan - வில்லைவளைத்தவனான பல்லவராஜன் பணிந்த, Panintha - கைங்கரியம் செய்யப்பெற்ற |
| 1132 | பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாக லோகத்தை வென்று சர்ப்பத்தை த்வஜமாக எடுத்தானாக சொல்லக் கடவது – பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5 | தூம்புடைத் திண்கைவன் தாள்களிற்றின் துயர் தீர்த்தர வம்வெருவ,முனநாள்
பூம்புனல் பொய்கைபுக் கானவ னுக்கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
தேம்பொழில் குன்றெயில் தென்னவனைத் திசைப் பச்செரு மேல்வியந் தன்றுசென்ற,
பாம்புடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-5 | பதவுரை Show / Hideமுன நாள், Muna Naal - முன்னொரு காலத்தில் (- (தடம் சூழ்ந்து அழகாய கச்சி.) (பரமேச்சுரவிண்ணகரம் அதுவே–.)) தாம்பு உடை திண்கை வன் தாள், Thambu Udai Thin Kai Van Thaal - துளையையுடைய துதிக்கையையும் வலியுள்ள காலையுமுடைய களிற்றின், Kalittrin - கஜேந்திராழ்வானது துயர், Thuyar - துன்பத்தை தீர்த்து, Theerthu - போக்கினவனாயும், பும் புனல் பொய்கை, Pum Punal Poigai - அழகிய நீரையுடைய பொய்கையிலே அரவம், Aravam - காளிய நாகம் வெருவ, Veruva - அஞ்சும்படியாக புக்கான் அவனுக்கு, Pukkan Avanukku - பாய்ந்தவனாயுமிருக்கிற எம்பெருமானுக்கு இடம், Idam - இருப்பிடமாவது, தேம் பொழில் குன்று எயில் தென்னவனை, Them Pozhil Kunru Eyl Thennavanai - தேன் நிறைந்த சோலைகளையும் மலைபோன்ற மதிள்களையுடைய பாண்டிய நாட்டின் அரசன் திசைப்ப, Thisaippa - அறிவு கலங்கும்படி அன்று, Andru - முன்பு செரு மேல், Seru Mel - போர்க்களத்திலே வியந்து சென்ற, Viyandhu Senra - விருப்பத்துடனே போய்ச் சேர்ந்தவனும் பாம்பு உடை, Paambu Udai - நாகத்தைக் கொடியாகவுடையவனுமான பல்லவர் கோன், Pallavar Kon - பல்லவராஜன் பணிந்த, Panintha - கிஞ்சித்கரிக்கப்பெற்ற |
| 1133 | பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஹிரண்யன் உடலுக்கு வளையாத திரு உகிரை ஆயுதமாக உடைய நரசிம்ஹமாய் – பெரு மிடுக்கனான ஹிரண்யன் உடைய மார்வை யுத்தத்திலே புண் படும்படி -போழ்ந்த புனிதன் இடம் – பண்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுவர விண்ணகரம் அதுவே என்கிறார் ஆறாம் பாசுரத்தில்) 6 | திண்படைக் கோளரி யினுரு வாய்த் திறலோனக லம்செரு வில்முனநாள்,
புண்படப் போழ்ந்த பிரானதிடம் பொரு மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி,
வெண்குடை நீழல்செங் கோல்நடப் பவிடை வெல்கொடி வேற்படை முன்னுயர்த்த,
பண்புடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-6 | பதவுரை Show / Hideமுனநாள், Munanaal - முன்னொரு காலத்திலே (- (பல்லவர் கோன்–:) (பணிந்த-:) (பரமேச்சுரவிண்ணகரம் அதுவே–.)) திண் படை, Thin Padai - கூர்மையான (நகங்களாகிற) ஆயதங்களையுடைய கோள் அரியின் உரு ஆய், Kol Ariyin Uru Aai - வலிமிக்க நரஸிம்ஹ மூர்த்தியாய்த் தோன்றி செருவில், Seruvil - போர்க்களத்தில் திறலோன் அகலம், Thiralon Akalam - மஹாபலசாலியான இரணியனது மார்வை புண் பட போழ்ந்த, Pun Pada Pozhntha - புண்படும்படி கிழித்தெறிந்த பிரானது, Piranathu - எம்பெருமானுக்கு இடம், Idam - இருப்பிடமாவது, பொரு மாடங்கள் சூழ்ந்து, Poru Madangal Soozhndhu - ஒன்றோடொன்று சேர்ந்திருக்கிற மாடங்கள் நிறைந்திருப்பதனால் அழகாய, Azhagaya - அழகுபொலிந்திருக்கிற கச்சி, Kacchi - கச்சிப்பதியிலே, வெண் குடை நீழல், Ven Kudai Neezhal - வெண் கொற்றக்குடையின் நிழலில் (வீற்றிருந்துகொண்டு) செங்கோல் நடப்ப, Sengol Nadappa - தனது கட்டளை விலைச்செல்லும்;படி (அரசாண்டவனும்) விடம் வெல் கொடி, Vidam Vel Kodi - பாம்பாகிற வெற்றிக்கொடியையும் வேல் படை, Vel Padai - வேல் என்னு மாயுதத்தையும் முன் உயர்த்த, Mun Uyarndha - சேனைகளின்முன்னே உயர எடுத்தவனும் பண்பு உடை, Panbu Udai - நீதி தவறாதவனுமான |
| 1136 | பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நப்பின்னைப் பிராட்டிக்காக முன்பு ஒருநாள் யுத்தத்திலே உருமு போலேயாய் உருமும் இடி . நெஞ்சிலே க்ரித்ரிமத்தை உடைத்தான –பெரிய ருஷபங்களை அடர்த்தவனுக்கு இடம் பரமேச்சுர விண்ணகரம் கடிய வாயை உடைய-கன்றப் பறை கறக்க -என்று திருவரையிலே கோத்துக் கட்டின பறையோபாதியாக தோற்றுகிறதாயிற்று இவர்க்கு-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9 | பிறையுடை வாணுதல் பின்னை திறத்து முன்னொரு கால்செரு வில்லுருமின்,
மறையுடை மால்விடை யேழடர்த்தாற் கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
கறையுடை வாள்மற மன்னர்க்கெடக் கடல் போல முழங்கும் குரல்கடுவாய்,
பறையுடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-9 | பதவுரை Show / Hideமுன்னே ஒருகால், Munnai Orukaal - முன்னொருகால் (- (தடம் சூழ்ந்து அழகாய கச்சி) (பல்லவர் கோன்–;) (பணிந்த–;) (பரமேச்சுர விண்ணகரம் அதுவே–.)) பிறைவாள் உடை நுதல் பின்னைதிறத்து, Piravaal Udai Nuthal Pinnai Thiraththu - சந்திர கலைபோன்று ஒளியையுடைத்தான நெற்றியையுடையளான நப்பின்னைக்காக உருமின், Urumin - இடிபோன்ற கரிஜனையையுடையவைகளாய் மறை உடை, Marai Udai - எதிர்த்து வருகையை யுடையவைகளான மால் விடை ஏழ், Maal Vidai Ezh - பெரிய ஏழு ரிஷபங்களை செருவில், Seruvil - போர்க்களத்தில் அடர்த்தாற்கு, Adarthaarku - வலியடக்கின பெருமானுக்கு இடம், Idam - இருப்பிடமாவது கறை உடை வாள், Karai Udai Vaal - ரத்தக்கறை மாறாத வாளை யுடையவர்களும் மறம், Maram - த்வேஷமுடையவர்களுமான மன்னர், Mannar - எதிரரசர்க்ள கெட, Keda - முடிந்துபோம்படியக கடல்போல் முழங்கும் குரல், Kadalpol Muzhangum Kural - கடல்போலே கோஷம் செய்கிற குரலையுடைய கடுவாய்ப் பறை உடை, Kadavaip Parai Udai - கடுவாய்ப்பறையை உடையவனான |
| 1141 | பெரிய திருமொழி || (2-10–மஞ்சாடு) (திருக்கோவலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ விஷயத்தில் பிரேமத்தால் கண்ண நீர் அரும்பி -அது தான் கண்ணை விட்டு சோர -பிரேம பரவசராய் இருக்கும் சேஷ பூதருக்கு நிரதிசய போக்யனானவனை–முதல் ஆழ்வார் விஷயம் ஆயனே கரும்பு-மதுபான மத்தமாக பாடும் பாட்டைக் கேட்டு -அத்தாலே –நீர் பாய்ந்தாப் போலே இருக்கிற இனிய கரும்பானது ஒரு கண் தேறி வளரா நிற்கும் ஆயிற்று-என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4 | தாங்கரும்போர் மாலிபடப் பறவை யூர்ந்து தராதலத்தோர் குறைமுடித்த தன்மையானை,
ஆங்கரும்பிக் கண்ணீர்சோர்ந் தன்பு கூரும் அடியவர்கட் காரமுத மானான் றன்னை,
கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலைக் குழாவரிவண் டிசைபாடும் பாடல் கேட்டு
தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. –2-10-4 | பதவுரை Show / Hideதாங்க அரு போர், Thaanga Aru Por - ஒருவராலும் தாங்க முடியாத (கொடிய) யுத்தம் நடந்தவல்ல (- (அத்தாலே நீர்பாய்ந்தாற் போலேயாம்) (திருக்கோவலூரதனுள், நான் கண்டேன்–.)) மாலி, Maali - மாலியென்னுமரக்கன் பட, Pada - முடியும்படி பறவை, Paravai - கருடனை ஊர்ந்து, Oorndhu - (போர்க்களத்தில்) நடத்தி (மாலியைக் கொன்றொழித்து) தராதலத்தோர்குறை முடித்த, Tharaathalathorkurai Muditha - புமியிலுள்ள ஸத்துக்களுடைய குறைகளைத் தீர்த்த தன்மையானை, Thanmaiyanaai - பெருமையுடையவனும், கண் நீர்அரும்பி சோர்ந்து, Kan Neerarumbi Soorndhu - கண்ணீர்அரும்பரும்பாகப் பெருகி (ஆநந்த பாஷ்பங்கொண்டு) அன்பு கூரும், Anbu Koorum - பக்தி பண்ணுகிற அடியவர்கட்கு, Adiyavarkadku - பக்தர்களுக்கு (முதலாழ்வார்கட்கு) ஆங்கு, Aangu - அப்போதே ஆர்அமுதம் ஆனான் தன்னை, Aar Amudham Aanaan Thannai - அருமையான அமுதம் போன்றிருந்தவனுமான பெருமானை கோங்கு அரும்பு, Kongu Arumbu - கோங்கின் புக்களும் சுரபுன்னை, Surapunnai - சுரபுன்னைகளும் குரவு, Kuravu - குரவுகளும் ஆர், Aar - செறிந்திருக்கிற சோலை, Solai - சோலைகளிலே குழாம் வரி வண்டு, Kuzham Vari Vandu - கூட்டங் கூட்டமாகக் கூடிய அழகிய வண்டுகள் இசை பாடும் பாடல் கேட்டு, Isai Paadum Paadal Kettu - (மதுபான மயக்கத்தாலே) இசை பாடுகிற பாடல்களைச் கேட்டு தீம் கரும்பு, Theem Karumbu - இனிய கரும்புகளானவை கண் வளரும், Kan Valarum - ஒரு கண் ஏறி வளரப்பெற்ற கழனி, Kazhani - கழனிகளினால் சூழ்ந்த, Sozhndha - சூழப்பட்ட |
| 1145 | பெரிய திருமொழி || (2-10–மஞ்சாடு) (திருக்கோவலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவனைத் தோழன் ஆகவும் மைத்துனன் ஆகவும்-தூதனாகவும் சாரதியாகவும் உடைய அர்ஜுனன் உடைய தேர்- ரதியான் ஆகில் வெற்றி தன் தலையிலே கிடக்குமே-அதுக்காக தான் சாரதியாய் வெற்றியும் அவன் தலையிலே கிடக்கும்படி பண்ணினான் ஆயிற்று-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8 | பாரேறு பெரும்பாரந் தீரப் பண்டு பாரதத்துத் தூதியங்கி, பார்த்தன் செல்வத்
தேரேறு சாரதியா யெதிர்ந்தார் சேனை செருக்களத்துத் திறலழியச் செற்றான்றன்னை,
போரேறொன் றுடையானு மளகைக் கோனும் புரந்தரனும் நான்முகனும் பொருந்து மூர்ப்போல்,
சீரேறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. –2-10-8 | பதவுரை Show / Hideபார்ஏறு பெரு பாரம் தீர, Paar Eru Peru Paaram Theera - பூமியின் மேலேறிக் கிடந்த பாரங்கள் தொலைவதற்காக (- (திருக்கோவலூரதனுள், நான் கண்டேன்–.)) பண்டு, Pandhu - முற்காலத்தில் பாரதத்து தூது இயங்கி, Bharathaththu Thoodhu Iyangi - பாரத யுத்தம் ஸமீபித்தபோது தாதுசென்றவனும் பார்த்தன், Paarththan - அர்ஜுநனுடைய செல்வம் தேர்ஏறு சாரதி ஆய், Selvam Ther Eru Saarathi Aayi - அழகிய தேரையேறி நடத்தின பாகனாகி எதிர்ந்தார்சேனை, Edhirndhaar Senai - எதிரிகளின் சேனையை செரு களத்து, Seru Kalathu - போர்க்களத்திலே திறல் அழிய, Thiral Azhiya - வலிமாளும்படி செய்து செற்றான் தன்னை, Settran Thannai - ஒழித்தவனுமான பெருமானை போர்ஏறு ஒன்று உடையானும், Por Aeru Ondru Udaiyanum - (செருக்காலே) கரைபொருகிற ஒரு எருதை வாஹநமாக வுடைய சிவனும் அனகை கோனும், Anakai Konum - குபேரனும் புரந்தரனும், Purandharanum - தேவேந்திரனும் நான்முகனும், Nanmuganum - பிரமனும் பொருந்தும், Porundum - நித்யவாஸம் செய்யப்பெற்ற ஊர்போல், Oorpol - வானுலகத்துஸ்தானங்களைப் போன்று சீர்ஏறு மறையாளர் நிறைந்த செல்வம், Seer Aeru Maraiyalar Niraintha Selvam - சிறந்த வைதிகரிகள் நிறைந்திருக்கையாகிய செல்வம் பொருந்திய |
| 1156 | பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அர்ஜுனனுக்காக தன்னை அழிவுக்கு இட்டு –ரதியைச் சீறினவன் சாரதியை இறே அழியச் செய்வது – உடம்புக்கு ஈடு இடாதே தன்னை அழிவுக்கு இட்டு நின்றான் ஆயிற்று – தான் கொண்ட விஜயமும் அர்ஜுனன் தலையிலே கிடக்கும்படி –தன்னைத் தாழ விட்டு வைத்தான் ஆயிற்று – ஸ்லாக்கியமான தேரிலே கையிலே உழவு கோலைக் கொண்டு நின்ற என் குல நாதன் உடைய ஸ்ரீ ஸ்தானம் – ஆக தாரகம் தார்யத்துக்கு உள்ளே மறைந்து இருக்கும் தேசம் ஆயிற்று – தான் வெல்லச் செய்தேயும் -அர்ஜுனன் வென்றான் என்று சொல்லலாம்படி ஸ்ரீ கிருஷ்ணன் அவனுக்கு பரிகரமாய் அந்தர்பவித்து நிற்குமா போலே தான் விளைவிக்கச் செய்தே -வயல் விளைந்தது -என்று சொல்லலாம்படி யாயிற்று இருப்பது) 9 | வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில் விசயனுக்காய் மணித்தேர்
கோல் கொள் கைத்தலத்து எந்தை பெம்மான் இடம் குலவு தண் வரைச் சாரல்
கால் கொள் கண் கொடிக் கை எழக் கமுகு இளம் பாளைகள் கமழ சாரல்
சேலைகள் பாய் தரு செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே –3-1-9 | பதவுரை Show / Hideகைத்தலத்து வேல் கொள் அரசர் வெம் போரினில், Kaithalathu Vel Kol Arasar Vem Porinil - கையிலே வேலாயுதத்தை யுடையவராக (துரியோதனன் முதலிய) அரசர்களையுடைய கடூரமான பாரத யுத்தத்தில் (- (திரு அயிந்திரபுரமே-.)) விசயனுக்கு ஆய், Visayanukku Aayi - அர்ஜூனனுக்குத் துணையாகி மணி தேர்தலத்து கோல் கொள் எந்தைபெம்மான் இடம், Mani Therthalathu Kol Kol Endhaipemman Idam - (அவனுடைய) அழகிய தேரிலே கையில் கோல்பிடித்து நின்ற எம்பெருமானுக்கு இடமாவது: குலவு தண் வரை சாரல், Kulavu Than Varai Charal - கொண்டாடத்தக்க குளிர்ந்த மலைச்சாரலில் கால் கண் கொள் கொடி கையெழ, Kaal Kan Kol Kodi Kaiyezha - வெற்றிலைக் கால்கள் கணுக்கள் தோறும் கிளைக்கின்ற (வெற்றிலைக்) கொடிகள் மிகுதியாக வளரப் பெற்றதும் கமுகு இளம் பாளைகள் கமழ் சாரல், Kamuku Ilam Paalaigal Kamazh Charal - பாக்கு மரங்களின் இளங்குருத்துகள் வாஸனை வீசப்பெற்ற சுற்றுப் பிரதேசங்களையுடையதும் சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு, Selgal Paaytharu Sezhu Nathi Vayal Pugu - மீன்கள் துள்ளி விளையாடுகிற அழகிய ஆறானது கழனிகளிலே பெருகப் பெற்றதுமான |
| 1162 | பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் நித்யவாசம் பண்ணி புகழ் மங்கை எங்கும் உஜ்ஜ்வலமாய் வர்த்திப்பதும் செய்து புகழையும் காப்பையும் உடைய பொழில் சூழ்ந்த ஸ்ரீ தில்லை) 5 | கோ மங்க வங்கக் கடல் வையம் உய்யக் குல மன்னரங்கம் மழுவில் துணிய
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித் தவ மா முனியைத் தமக்காக கிற்பீர்
பூ மங்கை தங்கிப் புல மங்கை மன்னிப் புகழ் மங்கை எங்கும் திகழ புகழ் சேர்
சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே –3-2-5 | பதவுரை Show / Hideகோ மங்க, Ko Manga - க்ஷத்ரியர்கள் அழியவும் (- (தில்லை…சேர்மின்கள்-.)) வங்கம் கடல் வையம் உய்ய, Vankam Katal Vaiyam Uyya - மரக்கலங்கள் நிறைந்த கடலால் சூழப்பட்ட பூமியிலுள்ளார் உஜ்ஜூவிக்கவும் குலமன்னர் அங்கம் மழுவில் துணிய, Kulamannar Angam Maluvil Thuniya - ராஜாக்களுடைய சரீரம் மழுவாலே துணிபடவும் தாம், Tham - தாமே அங்கு அமருள், Anku Amarul - அப்போதுண்டான போர்க்களத்திலே (புகுந்து) படை தொட்ட, Padai Thotta - ஆயுதத் தொழில் புரிந்த வென்றி தவம் மா முனியை, Vendri Thavam Maa Muniyai - ஜயசீலனாய்த தபஸ்வியான பரசுராமனாக அவதாரம் பண்ணின பெருமானை தமக்கு ஆக்க கிற்பீர், Thamakku Aakka Kirbeer - ஸ்வாதீனப்படுத்திக்கொள்ள நினைக்கு மன்பர்களே!, பூ மங்கை தங்கி புலம் மங்கை மன்னி, Poo Mangai Thangi Pulam Mangai Manni - பெரிய பிராட்டியர்(வலவருகே) தங்கியும் பூமிப் பிராட்டியர் (இடவருகே) பொருந்தியும் புகழ் மங்கை எங்கும் திகழ, Pugazh Mangai Engum Thigazha - கீர்த்தியாகிற மங்கை எல்லாவிடங்களிலும் வியாபித்து விளங்கவும் பெற்று புகழ் சேர் சேமம் கொள், Pugazh Ser Semam Kol - புகழோடு கூடிய க்ஷேமத்தையுடைத்தாய் பை பூ பொழில் சூழ்ந்த, Pai Poo Pozhil Soozhntha - பரந்து பூத்த சோலைகளால் சூழப்பட்ட |
| 1175 | பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பண்டு ஒருகால் ஹிரண்யனை வெருவும்படி சீறி அவ்விடத்திலேயே அவனுடைய உடம்பை அளைந்து ஆயிரம் தோள் தோற்ற வ்யாபாரித்த உசிதமாக எரி கான்ற பசுமையை உடைய கண்ணும் நீண்ட எயிறும் பெரிய வாயும் ஆன ஸ்ரீ சிம்ஹ ரூபத்தை உடையவனாய் வருமவன்) 8 | பொங்கி அமரில் ஒருகால் பொன் பெயரோனை வெருவ
அங்கு அவனாகம் அளைந்திட்டு ஆயிரம் தோள் எழுந்தாட
பைம் கண் இரண்டு எரி கான்ற நீண்ட எயிற்றோடு பேழ் வாய்
சிங்க வுருவின் வருவான் சித்திர கூடத்துள்ளானே –3-3-8 | பதவுரை Show / Hideஒருகால் அமரில் பொன் பெயரோன் வெருவ பொங்கி, Orukal Amarl Pon Peyron Veruva Pongi - முன்பொரு காலத்தில் போர்க்களத்தில் ஹிரண்யா ஸூரன் பயப்படும்படியாகக் கிளர்ந்து அங்கு அவன் ஆகம் அளைத்திட்டு, Angu Avan Aagam Alaitthittu - அவ்விடத்திலே அவ்விரணியனது உடம்பிலே கை வைத்து ஆயிரம் தோள் எழுந்தாட, Aayiram Thol Ezhundhaada - (அவனைச் சித்திரவதம் பண்ண வேணுமென்கிற பதற்றத்தாலே ) கைகள் பலமுகமாகப் பெருக்கமடைய. எரிகான்ற இரண்டு பைங்கண், Erikaanra Irandu Paingkan - நெருப்பை உமிழ்கின்ற பசுத்த இரண்டு திருக்கண்களையும் நீண்ட எயிற்றொடு பேழ்வாய் சிங்கம் உருவில் வருவான், Neenda Eiyirrodhu Pezhvai Singam Uruvil Varuvaan - நீண்ட கோரப் பற்களையும் பெரிய வாயையுமுடைய நரஸிம்ஹ ரூபியாய்க் காட்சி தந்த பெருமான் வருவான் |
| 1211 | பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஷத்ரிய ஜன்மத்திலே பிறந்தார் என்று ஆசைப்படுவார்-இடையனை பிறந்தான் என்று ஆசைப் படுவாராய் ஆசைப்படா நின்றீர் கோள்-எனக்கு இரண்டும் தோற்றுகிறது இல்லை – மாதவன் தன் துணையா நடந்தாள்-ஆழம் காலை மிதப் பெற்று புத்தி பண்ணினாள் அளவுடையவர்கள் அகப்பட்ட விஷயம் என்றால்-தனக்கு நிலம் அன்று என்று மீள அறியாதே போனாள்) 4 | ஏது அவன் தொல் பிறப்பு ? இளையவன் வளை யூதி மன்னர்
தூதுவனாயவனூர் சொல்லுவீர்காள் ! சொலீர் அறியேன்
மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில்
போது வண்டாடு செம்மல் புனலாளி புகுவர் கொலோ ? –3-7-4 | பதவுரை Show / Hideஅவன், Avan - (என்மகளைக் கொண்டு போன) அவனுடைய (- (என்மகளோ வென்னில்) (சென்ற இருவரும்)) தொல் பிறப்பு, Thol Pirappu - பழைய ஜன்மம் ஏது, Aethu - க்ஷத்ரிய ஜன்மமோ? இடைச்சன்மமோ? யாது கொல்? அறியேன், Ariyen - நானறிகின்றிலேன்; இளையவன், Ilaiyavan - குமரனாயும் வளை ஊதி, Valai Oothi - சங்கை ஊதுமவனாயும் மன்னர் தாதுவனாயவன், Mannar Thadhuvanayavan - பாண்டவர்களுக்காகத் தாதுசென்றவனாயுள்ள அவனுடைய ஊர், Oor - ஊரையும் அறியேன், Ariyen - அறிகின்றிலேன்; சொல்லுவீர், Solluveer - சொல்லத் தெரிந்தவர்களே! சொல்லீர், Sollir - சொல்லுங்கள்; மாதவன் தன் துணை ஆ, Madhavan Than Thunai Aa - திருமால் தனக்குத் துணையாகப் பெற்று நடந்தாள், Nadandhaal - (அவனோடு கூடச்) சென்றாள்; தடம் சூழ் புறவின், Thadam Soozh Puravin - தடாகங்கள் சூழ்ந்த சோலைகளை யுடையதும் போது, Podhu - பூக்களிலே வண்டு ஆடு, Vandu Aadu - வண்டுகள் களித்துக் கூத்தாடப் பெற்ற செம்மல், Semmal - பெருமைதங்கிய புனல், Punal - தீர்த்தங்களையுடையதுமான ஆலி, Aali - திருவாலியிலே புகுவர் கொலோ, Pughuvar Koloo - சென்று சேருவர்களோ? |
| 1303 | பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவருடைய உபாயம் ஸூ ரஷிதமாக பெற்றது ஆய்த்து ஸூ ரஷிதமான உபாயத்தை விட்டு வேறு ஒன்றைத் தேடித் போகவோ) 6 | மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைந்து கொன்று
பல்லரசவிந்து வீழப் பாரதப் போர் முடித்தாய்
நல்லரண் காவின் நீழல் நறை கமழ் நாங்கை மேய
கல்லரண் காவளந்தண் பாடியே களை கண் நீயே –4-6-6 | பதவுரை Show / Hideமல்லரை மாள அட்டு, Mallarai Maala Attu - மல்லர்களை மாளும்படி பொசித்து (- (காவளந்தண்பாடியாய்!,) (நீயே களைகண்)) கஞ்சனை மலைந்து கொன்று, Kanjanai Malaindhu Konru - கம்ஸனை எதிரிட்டுச் சென்று கொன்றொழித்து, பல் அரசு அவிந்து வீழ பாரதம் போர் முடித்தாய், Pal Arasu Avinthu Veel Bharatham Por Mudiththai - பல்லாயிரம் ராஜாக்கள் நாசமடையும்படி பாரதயுத்தத்தை நிறைவேற்றினவனே!, நல் அரண் காவின் நீழல் நறை கமழ் நாங்கை மேய, Nal Aran Kaavin Neezhal Narai Kamazh Naangkai Maeya - நல்ல அரணாகப் போரும்படியான சோலைகளினுடைய நிழலிலே பரிமளம் வீசப்பெற்ற திருநாங்கூரில் பொருந்தி வாழ்கிற கல் அரண், Kal Aran - கல்மதிளை யுடைத்தான |
| 1304 | பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஏதத் விரதம் மம -என்கிறபடியே இத்தை அடைய ரஷிக்கைக்காக காவல் பூண்டு இருக்கிறவனே ரஷிக்கக் கடவதாக ஏறிட்டுக் கொண்டு அசந்நிஹிதனாய் இருக்கை அன்றிக்கே ஸ்ரீ திருக் காவளம் பாடியிலே சந்நிஹிதனான நீயே எனக்கு ரஷகனாக வேணும்) 7 | மூத்தவருக்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்து அருளி
மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பு ஒசித்தாய்
பூத்தமர் சோலை யோங்கிப் புனல் பரந்து ஒழுகு நாங்கைக்
காத்தேன் காவளந்தண் பாடியாய் களை கண்நீயே –4-6-7 | பதவுரை Show / Hideமுன்பு, Munbu - முன்பொருகால் (- (நாங்கை, காவளந்தண்பாடியாய்;) (நீயே களைகண்)) மூத்தவற்கு அரசு வேண்டி தூது எழுந்தருளி, Moothavarkku Arasu Vendi Thoodhu Ezhundharuli - பாண்டவர்களில் தலைவனான தருமபுத்திரனுக்கு ராஜ்யமளிக்க விரும்பித் தூது சென்றவனாய், மாத்து அமர் பாகன் வீழ மத கரி மருப்பு ஒசித்தாய், Maathu Amar Paagan Veez Madha Kari Maruppu Osiththai - மத்தகத்தின் மீது பொருந்தியிருந்த பாகனானவன் விழுந்து முடியும்படி (குவலயா பீடமென்னும்) மத யானையினுடைய தந்தங்களை முறித் (து அந்த யானையை ஒழித்)தவனே! பூத்து அமர் சோலை ஓங்கி, Poothu Amar Solai Ongi - புஷ்பித்து (வரிசையாகப்) பொருந்தியிருக்கிற சோலைகளானவை உயர்ந்து வளர்ந்திருக்கப் பெற்றதும் புனல் பறந்து ஒழுகும், Punal Parandhu Ozhugum - ஜலமானது (அச்சோலைகளைச் சுற்றி) வியாபித்து பாயா நிற்கப்பெற்றதுமான காத்தனே, Kaaththanae - ரக்ஷகனே!, |
| 1323 | பெரிய திருமொழி || (4-8–கவளயானை) (திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருமாலிடத்து ஈடுபட்ட தலைமகளது செயல்கண்டு நற்றாய் இரங்கிக் கூறுதல் திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கு-அடியேன் இடரைக் களையாய் -என்று தேவரோட்டை அனுபவத்துக்கு விரோதியைப் போக்கித் தர வேணும் என்று அபேஷித்தார் அவனும் அப்படியே செய்வானாக ஒருப்பட-அது பற்றாமல்-ப்ராப்தியால் உண்டான த்வரையாலே தாமான தன்மை போய்-பிரிந்து-பிரிவாற்றாமையாலே நோவு பட்டு) 6 | ஞாலம் உற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும் நானிலம் சூழ்
வேலை யன்ன கோல மேனி வண்ணன் என்றும் மேல் எழுந்து
சேல் உகளும் வயல் கொள் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி
பாலின் நல்ல மென் மொழியாள் பார்த்தான் பள்ளி பாடுவாளே –4-8-6 | பதவுரை Show / Hideதாது ஆடு வனமாலை தாரானோ என்று என்று தளர்ந்தாள், Thadu Aadu Vanamalai Thaarano Endru Endru Thalarndhaal - ‘தாதுக்கள் நிரம்பிய வனமாலையை எனக்குத் தந்தருளமாட்டானோ?’ என்று பலகால் சொல்லி சோர்வடைந்தாள்; (- (என் மகளை செய்தனகள் நான் எங்ஙனம் சொல்லுகேன்?)) யாதாலும் ஒன்று உரைக்கில், Yaathaalum Onru Uraikkil - (அவளுக்கு அடக்கமுண்டாகும்படி நாம்) ஏதாவதொரு வார்த்தை சொன்னால் (அதற்கு மறுமொழியாக) எம்பெருமான் திரு அரங்கம் என்னும், Emperumaan Thiru Arangam Ennum - ‘எம்பெருமான் திருவரங்கம்’ என்கிற வார்த்தையொன்றே சொல்லுகின்றாள்; பூ மேல் மாது ஆளன், Poo Mel Maathu Aalan - பூவிற்பிறந்த பிராட்டிக்கு வல்லபனும் குடம் ஆடி, Kudam Aadi - குடக்கூத்தாடினவனும் மதுசூதன், Madhusoodhan - மதுவென்னமசுரனைக் கொன்றவனும் முன்னம் மன்னர்க்கு ஆய் தூது சென்ற ஆளன், Munnam Mannarkku Aay Thoodhu Senra Aalan - முன்பொருகால் பஞ்சபாண்டவர்களுக்காக தூது நடந்தவனுமான ஸ்வாமி |
| 1324 | பெரிய திருமொழி || (4-8–கவளயானை) (திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காலும் பாடகமும் பொருந்தின படியை அவன் பாடா இருக்குமவள் அவனூரைப் பாடா நின்றாள்) 7 | நாடி என்தன் உள்ளம் கொண்ட நாதன் என்றும் நான் மறைகள்
தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும் சிறை கொள் வண்டு
சேடுலவு பொழில் கொள் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப்
பாடகம் சேர் மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-7 | பதவுரை Show / Hideவார்ஆளும் இள கொங்கை, Vaar Aalum Ila Kogai - கச்சையிட்டுக் கட்டி ஆளக்கடவதான (தனது) இள முலைகள் (- (என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் செப்புகேன்)) வண்ணம் வேறு ஆயின ஆறு எண்ணாள்;, Vannam Veeru Aayin Aaru Ennaal - நிறம் வேறுபட்ட விதத்தை நினைக்கின்றாளில்லை எண்ணில், Ennil - ஏதேனுமொன்றை எண்ணப்புகுந்தால் பேராளன் பேர் அல்லால் பேசாள், Peraalan Per Allal Pesal - ஸர்வேச்வரனது திருநாமங்களைத் தவிர வேறொன்றையும் பேசுகிறாளில்லை; இ பெண் பெற்றேன் நான், I Pen Petraen Naan - இப்படிப்பட்ட பெண்ணைப் பெற்றேன் நான் என் செய்கேன், En Seykain - என்ன பண்ணுவேன்?; தார் ஆளன், Thaar Aalan - திருமாலை சாத்திக்கொண்டிருப்பவனும் தண் குடந்தை நகர் ஆளன், Than Kudanthai Nagar Aalan - குளிர்ந்த திருக்குடந்தை நகரை ஆள்பவனும் ஐவர்க்கு ஆய், Aivarkku Aay - பஞ்சபாண்டவர்களுக்காக அமரில், Amaril - (பாரதப்) போரில் உய்த்த தேராளன், Uytta Theralan - நடத்தப்பட்ட தேரையுடையனுமான பெருமான் |
| 1337 | பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவற்றை அப்யசித்து-அந்த கர்வத்தாலே யமாதிகள் தலைமேலே அடி இட்டுத் திரியுமவர்கள் இவற்றை அப்யசிக்கும் அத்தனையே வேண்டுவது அவர்களுக்கு ஜன்ம வ்ருத்தாதிகள் ஏதேனும் ஆகவுமாம்- அந்த ஜன்மத்திலே-அந்த வ்ருத்தத்திலே-அந்த ஞானத்திலே அந்த ஜன்மாதிகளால் வரும் உத்கர்ஷம் வேண்டாதே ஸ்வத உத்கர்ஷத்தை உடையரான நித்ய சூரிககளால் சிரஸா வஹிக்கப் பெறுவர்) 10 | ஏரார் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானைக்
காரார் புறவில் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த
சீரார் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்து
ஆராரவரே யமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே –4-9-10 | பதவுரை Show / Hideஏர் ஆர் பொழில் சூழ் இந்தளூரில், Aer Ar Pozhil Soozh Indhalooril - அழகிய சோலைகளாலே சூழப்பட்ட எந்தை பெருமனை, Endhai Perumanai - எம்பெருமான் விஷயமாக கார் ஆர் புறவின் மங்கை வேந்தன், Kaar Ar Puravin Mangai Vendan - மேகங்கள்படித்த தோப்புகளையுடைய திருமங்கை நகர்க்குத் தலைவரான கலியன், Kaliyan - ஆழ்வார் ஒலி செய்த, Oli Seitha - அருளிச்செய்த சீர் ஆர் இன் சொல் மாலை, Seer Ar In Sol Maalai - சிறந்த மதுரமான இச்சொல் மாலையை கற்று, Kattru - ஓதி திரிவார், Thirivaar - திரிகின்றவர்கள் உலகத்து ஆர் ஆர், Ulagaththu Ar Ar - இவ்வுலகத்தில் எவரெவருண்டோ, அவரே, Avarae - அவர்களே என்றும், Endrum - எக்காலத்திலும் அமரர்க்கு, Amararukku - நித்யஸூரிகளுக்கும் அமரர் ஆவார், Amarar Aavaar - கௌரவிக்கத்தக்கவராவர் |
| 1342 | பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு கால் ஆஸ்ரிதன் பக்கல் வாத்சல்யத்தாலே சாரத்தியம் பண்ணி அதி ரத மகா ரதரான பீஷ்மாதிகள் தேரை விட்டு ஒடும்படியாக துடர்ந்த –செங்கண் மால் ஆஸ்ரித வாத்சல்யம் அடங்கலும் கண்ணிலே தோற்றும்படி இருப்பானாய்ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆனவன் வந்து வர்த்திக்கிற தேசம்) 5 | பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கை எறிந்து ஒரு கால்
தேரினை யூர்ந்து தேரினைத் துரந்த செங்கண் மால் சென்றுறை கோயில்
ஏர் நிறை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணிச்
சீர்மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி யதுவே –4-10-5 | பதவுரை Show / Hideஒரு கால், Oru Kaal - ஒரு சமயத்தில் (- (மற்றொரு சமயத்தில்) (திருவெள்ளியங்குடி அதுவே)) பாரினை உண்டு, Paarinai Undu - உலகங்களை வயிற்றினுள்ளே அடக்கிவைத்தவனாயும் பாரினை உமிழ்ந்து, Paarinai Umizhndu - அவ்வுலகங்களை வெளிப்படுத்தினவனாயும் பாரதம் கையெறிந்து, Bharatham Kaiyerinthu - பாரதயுத்தத்தில் கையுமணியும் வகுத்தவனாயும் தோரினை ஊர்ந்து, Thoorinai Oorndhu - (அர்ஜுநனுடைய) தேரை நடத்தி தோரினை துரந்த, Thoorinai Thurandha - (எதிரிகளினுடைய) தேர்களைப் பங்கப்படுத்தினவனாயுமுள்ள செம் கண் மால், Sem Kan Maal - புண்டரி காக்ஷன் சென்று உறை கோயில், Sendru Urai Koyil - வந்து நித்யவாஸம் பண்ணுகிற ஸந்நிதி (எதுவென்றால்) ஏர் நிரை, Aer Nirai - உழுகிற ஏர்களின் வரிசையையுடைய வயலுள், Vayalul - கழனிகளிலுள்ள வாளைகள், Vaalaihal - வாளை மீன்கள் மறுகி, Marugi - அஞ்சி இது எமக்கு இடம் அன்று என்று எண்ணி, Idhu Emakku Idam Andru Enni - ‘இந்த வயலானது நாம் வஸிக்கத் தக்கதன்று’ என்று நினைத்து சீர் மலி பொய்கை, Seer Mali Poigai - அழகுமிக்க தடாகங்களிலே சென்று அணைகின்ற, Sendru Anaikindra - சென்று சேரப்பெற்ற |
| 1355 | பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராஜாக்கள் அடைய முடியும்படி – அர்ஜுனனுக்கு சாரத்தியம் பண்ணி-ஈஸ்வர அபிமானியான ருத்ரன் கையில் ப்ரஹ்மா வினுடைய சாபத்தாலே ஒரு காலும் நிறையாது இருக்கிற தலை யோட்டையைத் தன் திரு மேனியில் ஜல பிந்துவாலே நிறைத்த என் ஸ்ரீ ஸ்வாமி வர்த்திக்கிற தேசம்) 8 | கறையார் நெடுவேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி
இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைந்த வெந்தை விடம்
மறையால் முத்தீயை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால்
பொறையால் மிக்க வந்தணர் வாழ் புள்ளம் பூதங்குடி தானே –5-1-8 | பதவுரை Show / Hideகரை ஆர் நெடு வேல் மறம் மன்னர் வீய, Karai Ar Nedu Vel Maram Mannar Veeya - ரத்தக்கறை மாறதே பொருந்தியிருக்கிற நீண்ட வேற்படையை யுடையவர்களான (துரியோதனாதி) பகை மன்னவர்கள் ஒழியும்படி (- (புள்ளம் பூதங்குடி,)) விசயன் தேர் கடவி, Vichayan Ther Kadavi - அர்ஜுநனுடைய தேரை நடத்தினவனும், இறையான் கையில் நிறையாத முண்டம், Iraiyaan Kaiyil Niraiyaadha Mundam - ருத்ரனுடைய கையில் ஒட்டிக்கொண்டதாய் ஒன்றாலும் நிரம்பாதிருந்த கபாலத்தை நிறைத்த, Niraiththa - (பிச்சையிட்டு) நிறைத்தவனுமான எந்தை, Endhai - எம்பெருமானுடைய இடம், Idam - இருப்பிடமாவது மறையால், Maraiyaal - வேதங்களாலும் முத்தீ அவை வளர்க்கும் மன்னு புகழால், Muththi Avai Valarkkum Mannu Pugazhaal - நித்யாக்நிஹோத்ரம் செய்வதனாலுண்டான நிலைநின்ற கீர்த்தியினாலும் வண்மையால், Vanmaiyaal - ஔதார்யத்தினாலும் பொறையால், Poraiyaal - பொறுமையினாலும் மிக்க, Mikka - மேன்மை பெற்ற அந்தணர், Andhanar - பிராமணர்கள் வாழ், Vaazh - வாழப்பெற்ற |
| 1358 | பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரிதராய் இருப்பவர் தம்மை அனுபவித்து ஆஸ்ரிதர்க்காக தாழ நிற்கும் இதுவும் ஒரு நீர்மையே என்று ஆழங்கால் படுமது ஒழிய தம்மால் அறியப் போகாது –இவன் இப்படியே தன்னை தாழ விட்டாலும் இவனைத் தாழ நினைத்து இருப்பாரைக் கிடையாதே-ராஜாதி ராஜன் என்கிற பெருமையாலும் மிக்குத் தோன்றுகிறது – சர்வ கந்த என்கிற வஸ்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசமாய் இருக்கச் செய்தேயும் அத்தை யமுக்கி இவர்கள் உடைய குழலில் பரிமளமே விஞ்சி வாரா நிற்கும் யாய்த்து) 1 | தாந்தம் பெருமை அறியார் தூது
வேந்தர்க்காய வேந்தரூர் போல்
காந்தள் விரல மென்கலை நன் மடவார்
கூந்தல் கமழும் கூடலூரே –5-2-1 | பதவுரை Show / Hideதம் பெருமை தாம் அறியார், Tham Perumai Thaam Ariyaar - தமது பெருமேன்மையைத் தாமும் அறியாதவரும் வேந்தர்க்கு தூது ஆய வேந்தர், Vendarukku Thoodu Aaya Vendar - (பாண்டவ) மன்னர்கட்கு தூதனாய்ச் சென்றவருமான தேவாதி தேவருடைய ஊர், Oor - திவ்யதேசம் (எதுவென்றால்) காந்தன் விரல் மென் கலை நல் மடவார், Kanthan Viral Men Kalai Nal Madavaar - செங்காந்தன் மலர்போன்ற விரல்களையுடையவரும் அழகிய ஆடையணிந்தவர்களுமான நல்ல பெண்டுகளினுடைய கூந்தல் கமழும், Koondhal Kamazhum - கூந்தல்களானவை பரிமளம் வீசப்பெற்ற கூடலூர் –, Koodalur - திருக்கூடலூராகும். |
| 1371 | பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேவர் திருவடிகளில் உண்டான கைங்கர்யத்துக்கு பூர்வ ஷண வர்த்தியான பரம பக்தியை எனக்கு பண்ணி அருள வேணும்) 4 | வாம்பரி யுக மன்னர் தம் உயிர் செக ஐவர் கட்கு அரசளித்த
காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப நின் காதலை யருள் எனக்கு
மாம் பொழில் தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பு எய்த
தீம் பலங்கனி தேனது நுகர் திரு வெள்ளறை நின்றானே –5-3-4 | பதவுரை Show / Hideமாம்பொழில் தளிர் கோதிய மட குயில், Maampozhil Thalir Kothiya Mada Kuyil - மாந்தோப்புகளிலே அவற்றின் தளிர்களை கொத்தி உண்ட அழகிய குயில்கள் (- (திருவெள்ளறையில் நின்றானே!;)) வாய் அது துவர்ப்பு எய்த, Vaai Adhu Thuvarppu Eytha - தமது வாய் துவர்த்துப்போக (அந்த ரஸத்தை மாற்றுகைக்காக) தீம் பலங்கனி தேன் அது நுகர், Theem Palangani Then Adhu Nukar - இனிமையான பலாப் பழங்களிலுள்ள மதுவைப் பானம் பண்ணப் பெற்ற வாம் பரி, Vaam Pari - (பாரதப்போர்ச் சேனைகளிலே) மேல்விழுந்து வருகிற குதிரைகள் உக மன்னர்தம் உயிர் செக, Uga Mannartham Uyir Sek - மாளும்படியாகவும் (எதிரிகளான) அரசர்களினுடைய பிராணன் அழியும்படியாகவும் செய்து ஐவர்கட்கு அரசு அளித்த, Aivar Kadhku Arasu Alitha - பஞ்சபாண்டவர்களுக்கு ராஜ்யத்தை உபகரித்தருளிவனும், காம்பின் ஆர் திருவேங்கடம் பொருப்ப, Kaampin Ar Thiruvaengadam Poruppa - மூங்கில்களாலே நிறைந்த திருவேங்கடமலையில் உள்ளவனமான பெருமானே! நின் காதலை எனக்கு அருள், Nin Kaadhalai Enakku Arul - உன் விஷயமான பரம பக்தியை அடியேனுக்குப் பிறப்பித் தருளவேணும். |
| 1393 | பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தனை அதி மாத்ர ப்ராவண்யம் ஆகாது காண்-இது குடிப் பிறப்புக்கு போராது காண் இது தர்மி லோபத்தைப் பலிப்பிக்கும் காண் அவன் ஸ்த்ரரைணன் காண் -என்று ஒரு ஹித வசனம் பண்ணினால் அதுக்கு உத்தரமாக என்னை அனந்யார்ஹை ஆக்கினவன் வர்த்திக்கிற தேசம் என்னா நின்றாள்) 6 | தாதாடு வனமாலை தாரானோ என்று என்று தளர்ந்தாள் காண்மின்
யாதானும் ஓன்று உரைக்கில் எம்பெருமான் திருவரங்கம் என்னும் பூ மேல்
மாதாளன் குடமாடி மது சூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற
தூதாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சொல்லுகேனே –5-5-6 | பதவுரை Show / Hideதாது ஆடு வனமாலை தாரானோ என்று என்று தளர்ந்தாள், Thaadhu Aadu Vanamaalai Thaarano Enru Enru Thalarndhaal - ‘தாதுக்கள் நிரம்பிய வனமாலையை எனக்குத் தந்தருளமாட்டானோ?’ என்று பலகால் சொல்லி சோர்வடைந்தாள்; (- (என் மகளை செய்தனகள் நான் எங்ஙனம் சொல்லுகேன்?)) யாதாலும் ஒன்று உரைக்கில், Yaadhalum Ondru Uraikkil - (அவளுக்கு அடக்கமுண்டாகும்படி நாம்) ஏதாவதொரு வார்த்தை சொன்னால் (அதற்கு மறுமொழியாக) எம்பெருமான் திரு அரங்கம் என்னும், Emperumaan Thiru Arangam Ennum - ‘எம்பெருமான் திருவரங்கம்’ என்கிற வார்த்தையொன்றே சொல்லுகின்றாள்; பூ மேல் மாது ஆளன், Poo Mael Maathu Aalan - பூவிற்பிறந்த பிராட்டிக்கு வல்லபனும் குடம் ஆடி, Kudam Aadi - குடக்கூத்தாடினவனும் மதுசூதன், Madhusoodhan - மதுவென்னமசுரனைக் கொன்றவனும் முன்னம் மன்னர்க்கு ஆய் தூது சென்ற ஆளன், Munnam Mannarkku Aay Thoodhu Sentra Aalan - முன்பொருகால் பஞ்சபாண்டவர்களுக்காக தூது நடந்தவனுமான ஸ்வாமி |
| 1394 | பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ விஷயத்திலும் இதர விஷயத்திலும் விரக்தியும் பகவத் விஷயத்தில் ப்ரீதியும் மாறாதே செல்லும்படியாய் இருப்பாள் ஒரு பெண் பிள்ளையை என்னைப் போலே புறம்பு பெற்றார் உண்டோ – அப்போது பீஷ்மாதிகள் அம்புக்கு தன்னை இலக்கு ஆக்கினால் போலே இப்போது தனக்காக இவளை காம ரசத்துக்கு இலக்கு ஆக்குகிறான் இப்போது இவளை அழிவுக்கு இட்ட படி என்னாலே பேசப் போமோ -என்கிறாள்) 7 | வாராளும் இளம் கொங்கை வண்ணம் வேறாயின வாறு எண்ணாள் எண்ணில்
பேராளன் பேரல்லால் பேசாளிப் பெண் பெற்றேன் என் செய்கேன் நான்
தாராளன் தண் குடந்தை நகராளன் ஐவர்க்காய் அமரில் தேர் உய்த்த
தேராளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் செப்புகேனே –5-5-7 | பதவுரை Show / Hideவார்ஆளும் இள கொங்கை, Vaar Aalam Il Kogai - கச்சையிட்டுக் கட்டி ஆளக்கடவதான (தனது) இள முலைகள் (- (என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் செப்புகேன்)) வண்ணம் வேறு ஆயின ஆறு எண்ணாள்;, Vannam Veeru Aayin Aaru Ennaal - நிறம் வேறுபட்ட விதத்தை நினைக்கின்றாளில்லை எண்ணில், Ennil - ஏதேனுமொன்றை எண்ணப்புகுந்தால் பேராளன் பேர் அல்லால் பேசாள், Peraalan Per Allaal Pesaal - ஸர்வேச்வரனது திருநாமங்களைத் தவிர வேறொன்றையும் பேசுகிறாளில்லை; இ பெண் பெற்றேன் நான், I Pen Petraen Naan - இப்படிப்பட்ட பெண்ணைப் பெற்றேன் நான் என் செய்கேன், En Seigken - என்ன பண்ணுவேன்?; தார் ஆளன், Thaar Aalan - திருமாலை சாத்திக்கொண்டிருப்பவனும் தண் குடந்தை நகர் ஆளன், Than Kudandhai Nagar Aalan - குளிர்ந்த திருக்குடந்தை நகரை ஆள்பவனும் ஐவர்க்கு ஆய், Aivarkku Aay - பஞ்சபாண்டவர்களுக்காக அமரில், Amaril - (பாரதப்) போரில் உய்த்த தேராளன், Uytta Theraalan - நடத்தப்பட்ட தேரையுடையனுமான பெருமான் |
| 1466 | பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பிராட்டிமாரும் ஸ்ரீ நித்ய சூரிகளும் புருஷகாரமாக சரணம் புகுகிறார்) 9 | போதார் தாமரையாள் புலவிக் குல வானவர்தம்
கோதா கோதில் செங்கோல் குடை மன்னரிடை நடந்த
தூதா தூ மொழியாய் சுடர் போல் என் மனத்து இருந்த
வேதா நின்னடைந்தேன் திரு விண்ணகரம் மேயவனே –6-2-9 | பதவுரை Show / Hideபோது ஆர் தாமரையாள், Pothu Aa Thamaraiyaal - நல்லபோதிலே அலர்ந்த தாமரைப்பூவை இருப்பிடமாகவுடையளான பிராட்டிக்கும் (- (திரு விண்ணகர் மேயவனே!- ;) (நின் அடைந்தேன்)) புலவி, Pulavi - பூமிப்பிராட்டிக்கும் குலம் வானவர்தம், Kulam Vaanavartham - சிறந்த நித்யஸூரிகளுக்கும் கோதா, Kodha - விரும்பத்தகுந்தவனே! கோது இல் செங்கோல், Kothu Il Chengol - தடையின்றிச் செங்கோல் செலுத்துமவராய் குடை, Kudai - கொற்றக்குடையை யுடையரான மன்னர் இடை, Mannar Idai - (துரியோதநாதி) ராஜாக்களிடத்தில் நடந்த தூதா, Nadanda Thutha - தூது நடந்தவனே!, தூ மொழியாய், Thoo Mozhiyai - இன்சொற்களை யுடையவனே! சுடர்போல், Sudharpol - விளக்கொளிபோலே (ஜ்வலித்துக்கொண்டு) என் மனத்து இருந்த, En Manathu Irundha - என்னுள்ளத்தில் உறைகின்ற வேதா, Veda - வேத வேத்யனே!- ; |
| 1505 | பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ கிருஷ்ணன் இடைப் பெண்கள் உடைய துகில்களையும் வளைகளையும் வாரிக் கொடு வருகிற வரவோடு வாசி அற –உத்தேச்யமாய் இருக்கிற படியை சொல்லிற்று -கீழ்ப் பாட்டில் – இப்பாட்டில் –ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனாய் இருக்கும் இருப்போடு ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்த செயலோடு வாசி அற உத்தேச்யமாய் இருக்கிற படி சொல்லுகிறது) 8 | முருக்கிலங்கு கனித்துவர்வாய் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச் சென்று வென்றிச்
செருக்களத்து திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்
இருக்கிலங்கு திரு மொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட
திருக்குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-8 | பதவுரை Show / Hideமுருக்கு, Murukku - முருக்கம்பூப்போலவும் (- (சோழன், சேர்ந்த கோயில் திருநறையூர்) (மணிமாடம் சேர்மின்கள்-.)) இலங்கு கனி, Ilangu Kani - விளங்குகின்ற (கோலைப்) பழம்போலவும் துவர், Thuvar - சிவந்திருக்கிற வாய், Vaai - அதரத்தையுடையளான பின்னை, Pinnai - நப்பின்னைப்பிராட்டிக்கு கேள்வன், Kelvan - நாயகனும், முன், Mun - முன்பொருகாலத்தில் மன் எல்லாம், Man Ellam - க்ஷத்ரியர்களெல்லாரும் அவிய, Aviy - ஒழியும்படியாக வென்றி செரு களத்து, Vendri Seru Kalathu - வெற்றி தரவல்ல போர்க்களத்திலே சென்று, Sendru - போய் செற்றம் வேந்தன், Settram Vendan - மாற்றரசனான கார்த் வீரியார்ஜுனனுடைய திறல் அழிய, Thiral Azhiya - மிடுக்கு அழியும்படியாக சிரம் துணித்தான், Siram Thuniththan - (அவனது) தலையைத் துணித்தவனுமான ஸர்வேச்வரனுடைய திரு அடி, Thiru Adi - திருவடிகளை நும் சென்னி வைப்பீர், Num Senni Vaippir - உங்கள் தலைகளிலே அணிந்துகொள்ள விருப்பமுடையவர்களே! இருக்கு, Irukku - வேதத்தில் இலங்கு திருமொழி, Ilangu Thirumozhi - சிறந்தவையான புருஷஸூக்தம் முதலிய பாகங்களை வாய், Vaai - வாயிலே உடையவனாய் ஏண் தோள், Aen Thol - எட்டு புஜங்களையுடையனான ஈசற்கு, Eesarku - சிவபிரானுக்கு எழில், Ezhil - அழகிய எழுபது மாடம், Ezhupathu Maadam - எழுபது ஆலயங்களை செய்து, Seithu - நிருமணம் செய்வித்து உலகம் ஆண்ட, Ulagam Aanda - உலகத்தைப் பரிபாலனம் பண்ணின திரு குலத்து, Thiru Kulathu - உயர்ந்த குலத்திற் பிறந்தவனாய் வளம், Valam - செல்வம் மிக்கவனான |
| 1514 | பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவையே யாத்ரை யாம்படி கை வந்து இருக்கிற பிராமணர் வர்த்திக்கிற தேசம் தங்களை நோக்குகைக்காக தங்கள் உடைய வித்யா வ்ருத்தங்களால் அவன் தன்னையும் நோக்க வல்லார்கள் ஆயத்து) 7 | மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவிக்
குடையா வரை யொன்று எடுத்த ஆயர்கோவாய் நின்றான் கூர் ஆழிப்
படையான் வேத நான்கு ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ்
நடையா வல்ல அந்தணர் வாழ நறையூர் நின்ற நம்பியே –6-7-7 | பதவுரை Show / Hideமிடையா வந்த, Midayaa Vantha - நெருங்கி (கூட்டங்கூட்டமாக) (போர்க்களததில்) வந்து நின்ற (- (நறையூர், நின்ற நம்பி -.)) வேல் மன்னர், Vel Mannar - வேற்படைக்கையரான வீய, Veeya - தொலையும்படி விசயன் தேர் கடவி, Visayan Ther Kadavi - அர்ஜுனனுடைய தேரை நடத்தினவனும் ஒன்று வரை, Ondru Varai - கோவர்த்தனமென்கிற ஒரு மலையை குடையா எடுத்து, Kudaiya Eduthu - குடையாகத் தூக்கிப் பிடித்து ஆயர் கோ ஆய் நின்றான், Aayar Ko Aayi Nindraan - இடையர்களுக்கு ரக்ஷகனாய் நின்றவனும் கூர் ஆழி படையான், Koora Aazhi Padaiyaan - கூர்மைபொருந்திய திருவாழியை ஆயுதமான வுடையவனுமான எம்பெருமான்,- வேதம் நான்கு, Vedham Naanku - நான்கு வேதங்களையும் ஐந்து வேள்வி, Aindhu Velvi - பஞ்ச மஹாயஜ்ஞங்களையும் ஆறு அங்கம், Aaru Angam - ஆறு வேதாங்கங்களையும் ஏழ் இசை, Ezhu Isai - ஸப்த ஸ்வரங்களையும் நடை ஆ வல்ல, Nadai Aa Valla - எப்போதும் போது போக்காகக்கொண்ட அந்தணர், Andhanar - பிராமணர் வாழ், Vaazh - வாழுமிடமான |
| 1515 | பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வீரக் கழலை உடைய ராஜாக்கள் முழுக்காயாக அவியும்படி ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வாயிலே வைத்தான் ஆய்த்து) 8 | பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக்
கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான்
செந்தாமரை மேல் அயனோடு சிவனும் அனைய பெருமையோர்
நந்தா வண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே –6-7-8 | பதவுரை Show / Hideபந்து ஆர் விரலாள், Pandhu Aar Viralal - பந்து பிடித்து விளையாடும் விரலையுடையளான (- (நறையூர். நின்ற நம்பி-.)) பாஞ்சாலி, Panchali - த்ரௌபதியானவள் கூந்தல் முடிக்க, Koondhal Mudikka - குழல் முடித்துக் கொள்வதற்காக, பாரதத்து, Bharathaththu - பாரதப்போரில் கந்து ஆர் களிறு, Kandhu Aar Kaliru - (மதஜலத்தின்) மணம் பொருந்திய யானைகளின் மேலேறியிருப்பவர்களும் கழல், Kazhal - வீரக்கழலை யணிந்தவருமான மன்னர், Mannar - அரசர்கள் (துரியோதனாதியர்) கலங்க, Kalanga - மதிகலங்குமாறு சங்கம், Sangam - தனது ஸ்ரீபாஞ்சஜன்யத்தை வாய் வைத்தான், Vaai Vaiththaan - திருப்பவளத்தில் வைத்து ஊதின பெருமான்,- செம் தாமரை மேல் அயனோடு சிவனும் அனைய, Sem Thaamarai Mel Ayanodu Sivanum Anaiya - கமலாஸநனான பெருமானோடும் ருத்ரனோடும் ஒத்த பெருமையோர், Perumaiyor - பெருமைவாய்ந்தவர்களும் நந்தா வண் கை, Nandha Van Kai - ஒரு காலும் குறைபடாத ஔதார்யத்தை யுடையவர்களுமான மறையோர், Maraiyor - பிராமணர்கள் வாழ், Vaazh - வாழப்பெற்ற |
| 1525 | பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ அர்ஜுனன் உடைய தேரை நடத்தினவனை – ஆசை உடையேனாய்க் கிட்டி – அவ்வாசைக்கு அனுரூபமாக ஸ்ரீ திரு நறையூரிலே காணப் பெற்றேன்) 8 | மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர்
பண்ணின் மேல் வந்த படை எல்லாம் பாரதத்து
விண்ணின் மீதேற விசயன் தேரூர்ந்தானை
நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே –6-8-8 | பதவுரை Show / Hideமண்ணின் மீ பாரம், Mannin Mee Paaram - பூமியின் மீது உண்டான சுமைகளை (- (நறையூரில், கண்டேன்-.)) கெடுப்பான், Keduppaan - தொலைப்பதற்காகவும் மறம் மன்னர், Maram Mannar - மாற்றரசர்களது பண்ணின் மேல் வந்த படை எல்லாம், Pannin Mel Vandha Padai Ellam - ஒழுங்காக எதிர்த்து வந்த எல்லாச் சேனைகளும் விண்ணின் மீது ஏற ஸ்ரீ, Vinnin Meedhu Aera Sri - வீரஸ்வர்க்கம் போய்ச் சேரும்படியாகவும் பாரத்ந்து, Bharathndhu - பாரதப்போரில் விசயன் தேர் ஊர்ந்தானை, Visayan Ther Oornthaanai - அர்ஜுனனுடைய தேரை நடத்தினவனை நான் நண்ணிநாடி, Naan Nanninaadi - நான் ஆசைப்பட்டுத்தேடி |
| 1571 | பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரிதர்க்காக சாரத்தியம் பண்ணியும் மார்விலே அம்பு ஏற்றும் உபகரிக்கும் அவனுக்கு அல்லது வேறு சிலர் விஷயமாக என்னுடைய ஹிருதயத்தில் தாழ்ச்சி பிறவாது) 4 | உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவர்க்காய்ச் சென்று
இரங்கி யூர்ந்தவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை வம்பார் புனல் காவிரி
அரங்கமாளி என்னாளி விண்ணாளி ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே –7-3-4 | பதவுரை Show / Hideஉரங்களால் இயன்ற மன்னர் மாள, Urangalal Iyanra Mannar Maala - மிடுக்கினால் மிகக் துரியோதனாதியரசாகள் தொலையும்படி பாரதத்து, Bharathaththu - பாரதயுத்தத்திலே ஐவர்க்கு ஆய் சென்று, Aivarkku Aay Sendru - பஞ்சபாண்டவர்க்குத் துணையாயெழுந்தருளி இரங்கி, Irangi - (அவர்கள் விஷயத்தில்) மனமிரங்கி ஒரு தேர் ஊர்ந்து, Oru Ther Oornthu - (அவர்களுடையதான) ஒரு தேரை ஸாரதியாயிருந்து நடத்தி அவர்க்கு, Avarkku - அப்பாண்டவர்க்கு இன் அருள் செய்யும் எம்பிரானை, In Arul Seyyum Empranai - பரம கிருபையைச் செய்தருளின ஸ்வாமியும் வம்பு ஆர் புனல் காவிரி, Vambu Aar Punal Kaviri - புதுமைமிக்க தீர்த்தத்தை யுடைய திருக்காவேரியால் சூழப்பட்ட அரங்கம், Arangam - திருவரங்கம் பெரியகோயிலை ஆளி, Aali - ஆள்பவனும் என் ஆளி, En Aali - என்னையாள்பவனும் விண் ஆளி, Vin Aali - பரமபதத்துக்குத்தலைவனும், ஆழி சூழ், Aazhi Soozh - கடல் சூழ்ந்த இலங்கை, Ilankai - லங்காபுரியானது மலங்க, Malanga - வியாகுலமாகும்படி சென்று, Sendru - அங்கெழுந்தருளி சரங்கள் ஆண்ட, Sarangkal Aanda - அம்புகளை நடத்தின தண் தாமரை கண்ணனுக்கு அன்றி, Than Thamarai Kannankku Andri - குளிர்ந்த தாமரைப் பூப்போன்ற திருக்கண்களையுடையனுமான திருநறையூர் நம்பிக்கல்லது (மற்றொருவர்க்கு) என் மனம், En Manam - என் மனமானது தாழ்ந்து நில்லாது, Thazhndhu Nilladhu - நைச்சியம் வஹித்திருக்க மாட்டாது. |
| 1581 | பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வாயாலே திரு நாமம் சொல்லா விடில் தரியாத ஸ்வபாவத்தை உடையராயக் கொண்டு சங்கீர்த்தனம் பண்ணுகிற பெரியோர் உண்டு – அவன் தானும் அகப்பட -மகாத்மான -என்னும்படி இருக்கிற மகா பிரபாவர்களை –ஷண காலமும் பிரிய-காலம் எல்லாம் இடை விடாமல் அனுபவிக்கலாம் என்னிலும் பிரிய ஷமன் அல்லேன்) 4 | தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே –7-4-4 | பதவுரை Show / Hideதேர் ஆளும், Ther Aalum - தேர்களை நடத்தவல்லவனாய் வாள், Vaal - வாட்படையையுடையனான அரக்கன், Arakkan - இராவணனுடைய தென் இலங்கை, Then Ilangai - அழகிய லங்காபுரியை வெம் சமத்து, Vem Samathu - கொடிய போர்க்களத்தில் பொன்றி வீழ, Pondri Veela - சிதறியழிந்துபோம்படி போர் ஆளும் சிலை அதனால், Por Aalum Silai Adhanal - போரை நடத்தவல்ல வில்லினால் பொரு கணைகள், Poru Kanigal - கொடிய அம்புகளை போக்குவித்தாய், Pokkuviththai - பிரயோகித்தவனே! என்று, Endru - என்று சொல்லி, நாளும், Naalum - நாள்தோறும் தார் ஆளும் வரை மார்பன், Thar Aalum Varai Marban - மாலையை அணிந்தள்ள மலை போன்ற திருமார்பையுடையவனும் உம்பர் ஆளும், Umbar Aalum - மேலுலகங்களை ஆள்பவனும் பேராளன், Peraalan - பெருமை பொருந்தினவனுமான தண் சேறை எம்பெருமான், Than Serai Emperumaan - திருச்சேறைப் பெருமானுடைய பேர், Per - திருநாமங்களை ஓதும், Oodhum - ஓதுகின்ற பெரியோரை, Periyoorai - மஹாத்மாக்களை ஒருகாலும், Orukaalum - ஒருபோதும் பிரிகிலேன், Prikileen - பிரியமாட்டேன். |
| 1589 | பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாரத சமரத்திலே பீஷ்மாதிகள் -அதி ரதர் மகா ரதர் -என்று இங்கனே ஆண் பிள்ளைகளாகப் பேர் பெற்று ஜீவித்து இருந்தோம் இப்போதாக பூசல் கோழைகளாக ஒண்ணாது -என்று சாரதி பக்கலிலே வந்து கிட்டுவது தேர் காலில் உழக்குண்டு போக ஒண்ணாது -என்று அகலுவதாய்க் கொண்டு அவர்கள் படுவுற்றை படா நின்றன வாய்த்துக் குருகு இனங்களும்) 2 | பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாளப் பாரதத்துத்
தேரில் பாகனாயூர்ந்த தேவ தேவனூர் போலும்
நீரில் பணைத்த நெடு வாளைக்கு அஞ்சிப் போன குருகினங்கள்
ஆரல் கவுளோடு அருகு அணையும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-2 | பதவுரை Show / Hideநீரில் பனைத்த, Neeril Panaitta - தண்ணீரில் செழித்து வளர்ந்த நெடு வாளைக்கு, Nedu Valaikku - பெரிய மீன்களுக்கு அஞ்சி போன, Anji Pona - பயப்பட்டு ஓடிப்போன குருகு இனங்கள், Kurugu Inangal - குருகு என்னும் பறவைக் கணங்கள் ஆரல், Aaral - ஆரல் என்னஞ் சிறுமீனை கவுளோடு, Kavulodu - கதுப்பிலேகொண்டு அருகு அணையும், Arugu Anaiyum - பின்னையும் அணுகி வந்து சேரப்பெற்ற அணி ஆர் வயல் சூழ் அழுந்தூர், Ani Aar Vayal Soozh Azhundoor - அழகுமிக்க கழனிகளால் சூழப்பட்ட திருவழுந்தூரானது,- பாரித்து எழுந்த, Pariththu Ezhundha - (வெற்றி பெறவேணுமென்று) ஊக்கங்கொண்டு கிளர்ந்த படை மன்னர் தம்மை மாள, Padai Mannar Thammai Maala - ஆயுதபாணிகளான அரசர்கள் முடியும்படி பாரதத்து, Bharathaththu - பாரதப் போரில் தேரில், Theril - (அர்ஜுநனுடைய) தேரிலே பாகன் ஆய் ஊர்ந்து, Bhagan Aayi Oorndhu - ஸாரதியாயிருந்து கொண்டு நடத்தின தேவ தேவன், Deva Devan - வோதிதேவனுடைய ஊர் போலும், Oor Polum - திவ்யதேசமாகும். |
| 1612 | பெரிய திருமொழி || (7-7–திருவுக்கும்) (திருவழுந்தூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இக் கலியுகத்தின் யுடைய ஸ்வ பாவத்தை நான் அழகியதாகக் கண்டேன் – உன் பக்கலிலே வைமுக்யத்தை யுண்டாக்கி -பின்பு விஷய ப்ராவண்யத்தையும் பிறப்பித்து முடிக்கும் சம்சார ஸ்வ பாவத்தை நான் அழகிதாக அறிந்தேன் – எனக்கு ஹிதமாவதும் உன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமதுவே என்று அறிந்தேன்) 5 | விண்டான் விண் புக வெஞ்சமத்து அரியாய் பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து
பண்டானுய்ய வோர் மால்வரை ஏந்தும் பண்பாளா பரனே பவித்திரனே
கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மைக் கருமமாவதும் என்தனக்கு அறிந்தேன்
அண்டா நின்னடியன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –7-7-5 | பதவுரை Show / Hideவிண்டான், Vindaan - பகைவனான இரணியன் (- (அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!- ;) (நின் அடி அன்றி மற்று அறியேன்-.)) விண் புக, Vin Puga - வீரஸ்வர்க்கம் சென்று சேரும்படி வெம் சமத்து, Vem Samathu - வெவ்விய போர்க்களத்திலே அரி ஆய், Ari Aay - நரசிங்கமாய்த் தோன்றி பரியோன், Pariyon - பருத்தவடிவையுடையனான அவ்விரணியனுடைய மார்வகம், Marvagam - மார்பை பற்றி பிளந்து, Patri Pilandhu - பிடித்துக் கிழித்தவனாயும், பண்டு, Pandu - முன்பு (க்ருஷ்ணாவதாரத்தில்) ஆன் உய்ய, Aan Uyy - பசுக்கள் ஜீவிக்கும்படி ஓர் மால் வரை – ஓர் மால் வரை, Or Maal Varai Or Maal Varai - ஒரு பெரிய மலையை ஏந்தும், Aendhum - எடுத்துப்பிடித்த பண்பாளா, Panpaala - நீர்மையுடையவனே! பரனே, Parane - சிறந்தவனே! பவித்திரனே, Paviththiraney - பரிசுத்தனே! அண்டா, Andaa - அண்டங்கட்கு இறைவனே! கலியுகத்த தன் தன்மை, Kaliyugath Than Thanmai - இக்கலியுகத்தின் ஸ்வபாவத்தை நான் கண்டேன், Naan Kandein - நான் தெரிந்து கொண்டேன்; என் தனக்கு, En Thanakku - எனக்கு கருமம் ஆவதும், Karumam Aavadhum - செய்யத்க்கதையும்; அறிந்தேன், Arindhen - அறிந்து கொண்டேன்; |
| 1666 | பெரிய திருமொழி || (8-2–தெள்ளியீர்) (திரு கண்ணபுரம் 2) - (தலைவியின் நிலை கண்ட தாய் தலைமகளை இயற்பழித்தும் தலைமகளது இளமைக்கு இறங்கியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ்ப் பாட்டிலே -என் பேதை மணி நிறம் கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே -என்று நிவாரகர் இல்லாத தேசத்திலே வழி யடிப்பாரைப் போலே முக்த்தையான இவள் நிறத்தை கொள்ள வேணுமோ என்று இவள் சொன்ன வார்த்தையைக் கேட்ட ஸ்ரீ சௌரிப் பெருமாள் – நீர் நம்மை நியமிக்கக் கடவையோ – சர்வச்ய வஸி சர்வச்ய ஈசானா -என்று சர்வர்க்கும் நியாமகராய் நம்மை நியமிக்கக் கடவையோ மடவரல் மாதர் என் பேதை -என்று-உன் மகள் என்றும்-உனக்கு பவ்யை என்றும் -சொன்னாய் அவளை நியமித்துக் கொள்ள மாட்டாயோ – நீ நம்மை நியமிக்க போராய் காண் -என்ன இவள் பருவம் இது-பாவம் இது-ஆனபின்பு என்னால் நியமிக்கலாயோ இருப்பது -என்கிறாள் – இவள் அளவு இதுவாய் இருக்க இவளைப் போலே அவஹாகித்தாள் ஒரு பெண் பிள்ளை வார்த்தையாலே சொன்னாள் இறே அவள் உடைய திருத் தாயார் – முலையோ -இத்யாதி – இவள் அளவு இதுவாய் இருக்க -அவகாஹனம் இருந்த படி என் –அளவன்றி இருந்ததீ-என்றாள் இறே – முலையோ முழு முற்றும் போந்தில – முலை புரைகிற வித்தனை –வளரும் அளவும் செல்ல வரையிட்டதில்லை – இது பருவம் இருந்தபடி – ஸ்ரீ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே – ஸ்ரீ திருமலையை விடாமல் சொல்லா நின்றாள் இது அவகாஹனம் இருந்த படி – இவள் பரமே – இவள் அளவன்றிக்கே இருந்ததீ-என்றாள் இறே – அவளுடைய பருவம் இல்லையே இவளுக்கு அவகாஹனத்திலும் வாசிக மாத்ரமே இறே அவளுக்கு உள்ளது – காயிகத்தால் வந்த அவகாஹனம் உண்டே இவளுக்கு – பங்குக்களாய் இருப்பார்க்கும் அந்தரராய் இருப்பார்க்கும் போக ஒண்ணாதபடி ஸ்ரீ பரமபதத்துக்கு அடுத்து அணித்தாய் அர்ச்சிராதி போலே பெரிய ஏற்றம் ஏற வேண்டி இறே ஸ்ரீ திருமலை இருப்பது அத்தனை துஷ்ப்ராப்யமாய் அன்றே ஸ்ரீ திருக் கண்ண புரம் இருப்பது இருந்தபடியே எல்லார்க்கும் புக்கு அனுபவிக்கலாம் படி இறே ஸ்ரீ திருக் கண்ண புரம் இருக்கிற படி – ஆகையால் இவள் அளவு இதுவாய் இருந்தது – அவகாஹநத்தில் எல்லை இதுவாய் இருந்தது ஆன பின்பு இவளை நியமிப்பார் உண்டோ என்று பொதுவிலே சொல்லுகிறாள் – பெறுவேனோ என்னாதே பெறுவரே -பொதுவிலே மமமத்பக்த பக்தேஷூ ப்ரீதிரப்யதி காபவேத் -என்ற உன்னாலும் இவ்வளவு அவகாஹிக்கப் போமோ) 9 | முள் எயிற்று ஏய்ந்திலக் கூழை முடி கொடா
தெள்ளியள் என்பதோர் தேசிலள் என் செய்கேன்
கள்ளவிழ் சோலைக் கணபுரம் கை தொழும்
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே –8-2-9 | பதவுரை Show / Hideமுள் எயிறு ஏய்ந்தில, Mul Eiyiru Eiyndhila - முளைக்கின்ற பற்களும் நிரம்பவில்லை; கூழை முடி கொடா, Koozhai Mudi Koda - கூந்தலும் எடுத்து முடிக்கப்போரும்படி வளர்ந்தனவில்லை; தெள்ளியள் என்பது ஓர் தேசு இலள், Thelliyal Enbathu Oor Desu Ilal - விவேகமுடையவள் என்று சொல்லும்படியான தேஜஸ்ஸை உடையவளல்லள் என் செய்கேன், En Seigain - (இப்படிப்பட்ட இவள் விஷயத்தில்) நான் என்ன செய்வேன்! கள் அவிழ்சோலை, Kal Avizhsolai - மது பெருகுகின்ற சோலைகளையுடைய கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரத்தை கை தொழும், Kai Thozhum - கையெடுத்து வணங்குகிற பிள்ளையை, Pillaiyai - பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே, Pillai Endru Ennap Peruvare - பிள்ளையென்று நினைக்கலாகுமோ? (கௌரவிக்கப்ராதி யுண்டிறே.) |
| 1691 | பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷகன் ஆனவன் இவ்வளவில் வந்து உதவிற்றிலன் பாதக பதார்த்தம் தானே இனிக் கிருபை பண்ணி மீளில் நான் எனக்கு உரியேனாய் இருக்கலாம்) 4 | கயம் கொள் புண் தலை களிறு உந்து வெந்திறல் கழல் மன்னர் பெறும் போரில்
மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் மறி கடல் நீர்
தயங்கு வெண் திரைத் திவலை நுண் பனி எனும் தழல் முகந்து இள முலை மேல்
இயங்கு மாருதம் விலங்கில் என்னாவியை எனக்கெனப் பெறலாமே –8-5-4 | பதவுரை Show / Hideகயம் கொள் புண் தலை, Kayam Kol Pun Thalai - (சீயும் ரத்தமும்) தடாகம் போலே வற்றாதிருக்கிற புண்கள் நிரம்பிய தலையையுடைய களிறு, Kaliru - யானைகளை உந்து, Undhu - தள்ளி நடத்தவல்ல வெம் திறல், Vem Thiral - வெவ்விய வலிமையை யுடையவரும் கழல், Kazhal - வீரக்கழலையுடையருமான மன்னர், Mannar - அரசர்களினுடைய பெரும் போரில், Perum Poril - பெரிய பாரத யுத்தத்தில் மயங்க, Mayangka - அறிவுகலங்கும்படி வெண் சங்கம், Ven Sangam - வெளாதத பாஞ்சஜந்யத்தை வாய் வைத்த, Vaai Vaiththa - திருப்பவளத்தில் வைத்து ஊதின மைந்தனும், Mainthanum - மஹா புருஷனும் வந்திலன், Vandhilan - (என்னிடம்) வந்து சேர்ந்தானில்லை; மறிகடல், Marikadal - அலைமடிகின்ற கடலினுடைய நீர், Neer - ஜலத்ததில் தயங்கு, Thayangku - அசைந்து வருகின்ற வெண் திரை, Ven Thirai - வெண்மையான அலைகளாலுண்டான திவலை, Thivalai - திவலைகளாகிற நுண் பனி எனும், Nun Pani Enum - நுட்பமான பனியென்று சொல்லப்படுகிற தழல், Thazhal - நெருப்பை முகந்து, Mugandhu - வாரிக்கொண்டுவந்து இள முலை மேல், Ila Mulai Mel - (எனது) இளமைதங்கிய முலைகளின் மீது இயங்கு, Iyangu - வீசுகின்ற மாருதம், Marudham - காற்றானது விலங்கில், Vilankil - தணியப்பெற்றால் என் ஆவியை, En Aaviyai - எனது உயிரை எனக்கு என பெறலாம், Enakku En Peralaam - எனக்கு உரித்தாக அடையலாகும். |
| 1694 | பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான் முடியவே அவனைக் கிடையாது – அவன் போகவே அவனால் நோக்கப் படும் விபூதி த்வயமும் இல்லையாம் ஆனபின்பு இது எவ்வளவாய் தலைக் கட்டும் என்று அறியேன்) 7 | கலங்க மாக்கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரையாகம்
மலங்க வெஞ்சமத்து அடுசரம் துரந்த எம்மடிகளும் வாரானால்
இலங்கு வெங்கதிர் இள மதி யதனொடும் விடை மணி யடு மாயன்
விலங்கல் வேயின தோசையுமாயினி விளைவது ஓன்று அறியேனே –8-5-7 | பதவுரை Show / Hideமா கடல், Maa Kadal - பெரிய கடலானது கலங்க, Kalanga - கலங்கும்படியாக கடைந்து, Kadaindhu - (அதனைக்) கடைந்தவனும் அடைந்து, Adaindhu - (அக்கடலில்) அணை கட்டினவனும் இலங்கையர் கோனது, Ilankaiyar Konathu - இலங்கையிலுள்ளார்க்கு அரசனான இராவணனுடைய வரை ஆகம், Varai Aagam - மலைபோன்ற மார்பானது மலங்க, Malanga - வியாகுலப்படும்படி வெம் சமத்து, Vem Samathu - கொடியபோரில் அடு சரம், Adu Saram - கொலையம்புகளை துரந்த, Thurandha - பிரயோகித்தவனுமான எம் அடிகளும், Em Adigalum - எமது ஸ்வாமியும் வாரான், Varaan - வரவில்லை; ஆல், Aal - அந்தோ! ; இலங்கு, Ilangu - விளங்காநின்ற வெம் கதிர், Vem Kathir - கடூரமான கிரணங்களையுடைய இள மதி அதனொடும், Ila Mathi Adhanodum - இளம் சந்திரனோடு கூட விடை, Vidai - எருதினுடைய மணி, Mani - (கழுத்தில் கட்டின மணியின்) ஓசையும் அடும், Adum - (என்னைக்) கொலை செய்கின்றது; ஆயன், Aayan - இடையனான கண்ணபிரானிடத்துள்ள விலங்கல் வேயினது, Vilangal Veiyinathu - மலை மூங்கிற்குழலினுடைய ஓசையும், Osaiyum - த்வநியும் ஆய், Aai - உண்டாக, இனி விளைவது ஒன்று அறியேன், Ini Vilaiyvadhu Ondru Ariyeen - இனி உண்டாகப்போகும் ஆபத்தை ஒன்று மறிகின்றிலேன். |
| 1699 | பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அது ஸ்ரீ பிராட்டி பக்கல் ஓரத்தால் செய்த செய்யல் அன்றோ – நாம் அதற்க்கு பிற்பாடர் ஆனோமே -என்ன அது வேண்டா -அவன் விரோதி நிரசன சீலன் -என்கிறார்) 2 | பொருந்தா வரக்கர் வெஞ்சமத்துப் போன்ற வன்று புள்ளூர்ந்து
பெரும் தோள் மாலி தலை புரளப் பேர்ந்த வரக்கர் தென்னிலங்கை
இருந்தார் தம்மை உடன் கொண்டு அங்கு எழிலார் பிலத்துப் புக்கு ஒழிப்பக்
கருந்தாட் சிலை கைக் கொண்டானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-2 | பதவுரை Show / Hideஅன்று, Andru - முன்பொருகாலத்தில், (- (கண்ணபுரம், நாம் தொழுதும்-.)) வெம் சமத்து, Vem Samathu - கொடிய போர்க்களத்திலே பொருத்தா அரக்கர், Poruththa Arakkar - சத்ருக்களான ராக்ஷஸர்கள் பொன்ற, Pondra - முடியும்படியாக புள் ஊர்ந்து, Pul Oornthu - கருடப் பறவையை ஏறி நடத்திக் கொண்டெழுந்தருளி பெரு தோள் மாலி, Peru Thol Maali - வலிய தோள்களையுடையனான மாலியினுடைய தலை, Thalai - தலையானது புரள, Purala - (அற்று விழுந்து நிலத்தில்) புரளும் படியாகவும் பேர்ந்த அரக்கர், Perntha Arakkar - அவனைத் தவிர மற்ற ராக்ஷஸர்கள் தென் இலங்கை இருந்தார் தம்மை உடன் கொண்டு, Then Ilangai Irundhaar Thammai Udhan Kondo - தென்னிலங்கையிலிருந்து மற்றுமுள்ள ராக்ஷஸர்களையுங் கூட்டிக்கொண்டு அங்கு, Angu - அவ்விடத்திலிருந்து எழில் ஆர்பிலத்து, Ezhil Aarbilathu - அழகிய பாதாளத்திலே புக்கு ஒளிப்ப, Pukku Olippa - புகுந்து மறையும்படியாகவும் கருந் தாள் சிலை, Karun Thaal Silai - வயிரம்பற்றித் திண்ணிதான வில்லை கை கொண்டான், Kai Kondaaan - திருக்கையிலே தரித்தவனான எம்பெருமானுடைய ஊர், Oor - இருப்பிடமான |
| 1700 | பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஸ்துதமான ஸ்ரீ ராமாவதாரம் பின்னாட்டின படி சொல்லுகிறது) 3 | வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை
அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த வாற்றலான்
வல்லாளரக்கர் குலப்பாவை வாட முனி தன் வேள்வியைக்
கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-3 | பதவுரை Show / Hideவல்லி இடையாள் பொருட்டாக, Valli Idaiyaal Porutthaga - கொடிபோல் மெல்லிய இடையை யுடையளான ஸீதைக்காக, (- (ஊர், கண்ணபுரம், நாம் தொழுதும்-.)) நீர், Neer - கடலை அகழாகவுடையதாய் மதிள், Mathil - மதிள்களையுமுடைத்தான இலங்கையர், Ilangaiyar - லங்காபுரியிலுள்ள அரக்கர்களுக்கு கோவை, Kovai - தலைவனான இராவணனை அல்லல் செய்து, Allal Seidhu - துன்பப்படுத்தி வெம் சமத்துள், Vem Samaththul - வெவ்விய போர்க்களத்திலே ஆற்றல் மிகுந்த, Aatral Mikuntha - தன்னுடைய மிடுக்கை மிகவும் விளங்கக்காட்டின ஆற்றலான், Aatralan - மஹா வீரனும் வல் ஆள் அரக்கர், Val Aal Arakkar - வலிய ஆண்மைத்தனமுடைய ராக்ஷஸர்களின் குலம், Kulam - குலத்தில் தோன்றிய பாவை, Pavai - தாடகை யென்னும் அரக்கியை வாட, Vaada - முடிய (ச் செய்து) முனி தன், Muni Than - விச்வாமித்ர முனியினுடைய வேள்வியை, Velviyai - யாகத்தை கல்வி சிலையால், Kalvi Silaiyaal - தான் கற்றுப் பயின்ற வில்லைக் கொண்டு காத்தான், Kaaththaan - காத்தருளினவனுமான பெருமானுடைய |
| 1706 | பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மலையை எடுத்து இந்த்ரன் வியாபாரம் வ்யர்த்தமாம் படி பண்ணி கொடி போலே அழகிய இடையை உடைய ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக வலிய தாளை உடைய ருஷபங்கள் ஏழையும் அழியச் செய்த – ஸ்ரீ கண்ண புரம் நாம் தொழுதுமே) 9 | குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்
சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகால் சகடம் சினம் அழித்துக்
கன்றால் விளங்காய் எறிந்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-9 | பதவுரை Show / Hideகுன்றால், Kundraal - கோவர்த்தன மலையினால் (- (ஊர், கண்ணபுரம் நாம் தொழுதும்-.)) மாரி, Maari - பெருமழையை பழுது ஆக்கி, Pazhuthu Aakki - பயனற்றதாம்படி செய்தவனும் அன்று, Andru - முன்பொருகால், கொடி ஏர் இடையாள் பொருட்டாக, Kodi Aer Idaiyaal Porutthaga - கொடிபோன்று அழகிய இடையை யுடையளான நப்பின்னைப் பிராட்டிக்காக வல் தாள் ஏழ் விடை, Val Thaal Ezh Vidai - வலிய கால்களையுடைய ஏழு ரிஷபங்களை அடர்த்த, Adarttha - வலியடக்கினவனும் வானோர் பெருமான், Vaanor Perumaan - நித்யஸூரிகளுக்குத் தலைவனும் மா மாயன், Maa Maayan - ஆச்சரிய சேஷ்டிதங்களையுடையவனும் பஞ்சவர்க்கு ஆய், Panchavarkku Aay - பஞ்சபாண்டவர்களுக்காக தூது சென்றான், Thoodhu Senraan - (துரியோதனன் பக்கல்) தூது சென்றவனும் திரி கால் சகடம், Thiri Kaal Sakadham - ஊர்ந்து செல்லுங்காலையுடைய சகடத்தின் சினம், Sinam - பகையை அழித்து, Azhiththu - அழித்தவனும் கன்றால், Kanraal - வத்ஸாஸுரனைக் கொண்டு விளங்காய் எறிந்தான், Vilangaai Erindhaan - கபித்தாஸுரன்மேல் வீசியெறிந்து இருவரையும் முடித்தவனுமான பெருமானுடைய |
| 1721 | பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சத்ரு பஷமானது குலைந்து ஓடும்படி இருக்கிற சிம்ஹமும்-உளை மயிருமாய் மனுஷ்ய வேஷமும் சேராத வடிவு இரண்டும் சேர்ந்து தோன்ற –சத்ருவான ஹிரண்யனுடைய மார்வை யுத்தத்திலே பிளந்து வளைந்த திரு வுகிரை உடையவனை) 4 | உளைந்த வரியும் மானிடமும் உடனேத் தோற்ற ஒன்றுவித்து
விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றொன் அகலம் வெஞ்சமத்து
பிளந்து வளைந்த வுகிரானைப் பெரும் தண் செந்நெல் குலை தடிந்து
களம் செய் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-4 | பதவுரை Show / Hideஉளைந்த, Ulaindha - கண்டபோதே அஞ்சி நடுங்க வேண்டும்படியான (- (அடியேன் கண்டுகொண்டேன்-.)) அரியும், Ariyum - சிங்கவுருவத்தையும் மானிடமும், Maanidamum - மனிதவுருவத்தையும் உடனாய் ஒன்றுவித்து, Udanai Onruvithu - ஒருசேரப் பொருந்தச் செய்து தோன்ற, Thondra - (நரஸிம்ஹரூபியாய்த்)தோன்ற (அப்போது) விளைந்த, Vilaintha - உண்டான சீற்றம், Seetrum - கோபத்தைக் கண்டு விண் வெதும்ப, Vin Vethumba - விண்ணுலகத்தவர்களும் அஞ்சி நடுங்க வேற்றோன், Vetroron - பகைவனான இரணியனுடைய அகலம், Agalam - மார்பை வெம் சமத்து, Vem Samathu - வெவ்விய போர்க்களத்திலே பிளந்து, Pilandhu - இருபிளவாக்கி வளைந்த உகிரானை, Valaindha Ukiraanai - வளைந்த நகங்களையுடைய பெருமானை, பெரு, Peru - பெருத்த தண், Than - அழகிய செந்நெல் குலை, Sennel Kulai - செந்நெற்கதிர்கள் தடிந்து, Thadinthu - வயிரம்பற்றி களம் செய், Kalam Sei - இருள் மூடியிருக்கப்பெற்ற புறவில், Puravil - சுற்றுப்பிரதேசங்களை யுடைத்தான கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே |
| 1724 | பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வெவ்விய சீற்றத்தை உடைய கடியிலங்கை குடி கொண்டோட யுத்தத்திலே வெவ்விய போரை பண்ணின நம்முடைய ஸ்ரீ ஸ்வாமியை) 7 | வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி
வெய்ய சீற்றக் கடியிலங்கை குடி கொண்டோட வெஞ்சமத்து
செய்த வெம்போர் நம்பரனைச் செழும் தண் கானல் மண நாறும்
கைதை வேலிக் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-7 | பதவுரை Show / Hideவையம் எல்லாம், Vaiyam Ellam - உலகமெல்லாம் (- (அடியேன் கண்டுகொண்டேன்-.-)) உடன் வணங்க, Udan Vananga - ஒருமைப்பட்டு திருவடிகளில் விழுந்துவணங்க வணங்கா, Vanangaa - தான் ஒருவரையும் வணங்க வேண்டும்படியிராத மன்னன் ஆய், Mannan Aay - ராஜாதிராஜனாய் (இராமபிரானாய்) தோன்றி, Thonri - திருவவதரித்து வெய்ய சீற்றம், Veyya Seetrum - கடுமையான சீற்றத்தையுடையதும் கடி, Kadi - அரண்களையுடையதுமான இலங்கை, Ilankai - இலங்காபுரியிலுள்ளவர்கள் குடி கொண்டு ஓட, Kudi Kondu Oda - குடும்பத்தோடும் (யமலோகத்திற்கு) ஓடிச் செல்லும்படியாக வெம் சமத்து, Vem Samathu - வெவ்விய போர்க்களத்தில் வெம் போர் செய்த, Vem Por Seitha - கடுமையான யுத்தத்தை நடத்தின நம் பரனை, Nam Paranai - எம்பெருமானை,- செழு, Sezhu - அழகிய தண், Than - குளிர்ந்த கானல், Kaanal - நெய்தல் நிலத்தையுடையதும் மணம் நாறும் கைதை, Manam Naarum Kaithai - பரிமளம்மிக்க தாழைகளை வேலி, Veli - வேலியாகவுடையதுமான கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே |
| 1725 | பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வெற்றியே தொழிலாக உடைய வேலை உடைய ராஜாக்கள் விண்ணிலே செல்ல யுத்தத்திலே செற்ற வெற்றியை தொழிலாக உடையவனை) 8 | ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒரு பால் தோன்றத் தான் தோன்றி
வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண் பால் செல்ல வெஞ்சமத்து
செற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் இல்லிருப்ப
கற்ற மறையோர் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-8 | பதவுரை Show / Hideஒற்றை குழையும், Otrai Kuzhaiyum - ஒரு காதில் தொங்குகிற திருக்குண்டலமும் (- (அடியேன் கண்டுகொண்டேன்-.)) ஒருபால், Orupaal - ஒரு பக்கத்தில் நாஞ்சிலும், Naanjilum - கலப்பையும் தோன்ற, Thondra - விளங்க தான் தோன்றி, Thaan Thondri - (பலராமனாய்த்) திருவவதரித்து, வெற்றி தொழிலார், Vettri Thozhilar - ஜயம்பெறுவதையே இயல்வாக வுடையரும் வேல், Vel - வேற்படையையுடையருமான வேந்தர், Vendar - அரசர்கள் விண் பால் செல்ல, Vin Paal Chella - வீரதஸ்வர்க்கத்திற்குச் சென்று சேரும்படி வெம் சமத்து, Vem Samathu - வெவ்விய போர்க்களத்தில் செற்ற, Settra - (அவ்வரசர்களை) அழியச் செய்ததனாலுண்டான கொற்றம், Kotrham - வெற்றியை தொழிலானை, Thozhilaanaik - தொழிலாகவுடைய பெருமானை,- செம் தீ மூன்றும், Sem Thee Moondrum - த்ரேதாக்நிகளெனப்படுகிற மூன்று அக்நிகளும் இல், Il - திருமாளிகை தோறும் இருப்ப, Iruppa - ஜ்வலித்துக் கொண்டிருக்கப்பெற்றதும் கற்ற மறையோர், Katra Maraiyor - கலைகளைக் கற்ற வைதிகர்களுடையதுமான கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தில் “ஒற்றைக்குழையும், Otrai Kuzhaiyum - ஒருகாதுக்குழையும்” என்பது பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானம். இதற்கு அரும்பதவுரைகாரர் |
| 1726 | பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அபர பஷத்திலே அஷ்டமியிலே நள் இருளிலே பிறந்தவனை) 9 | துவரிக் கனிவாய் நிலமங்கை துயர் தீர்ந்து உய்யப் பாரதத்துள்
இவரித் தரசர் தடுமாற இருள் நாள் பிறந்த வம்மானை
உவரியோதம் முத்துந்த ஒரு பால் ஒரு பால் ஒண் செந்நெல்
கவரி வீசும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-9 | பதவுரை Show / Hideதுவரி கனி வாய், Thavari Kani Vaai - இலவம் பூப்போலவும் கொவ்வைக்கனி போலவும் சிவந்த அதரத்தையுடையளான (- (அடியேன் கண்டுகொண்டேன்-.)) நிலம் மங்கை, Nilam Mangai - பூமிப்பிராட்டியானவள் துயர் தீர்ந்து, Thuyar Theerndhu - (பாவிகளைச் சுமப்பதனாலுண்டான) துக்கம் தொலைந்து உய்ய, Uyya - சுகப்படும்படியும், பாரதத்துள், Bharathaththul - பாரதப் போரில் இவரித்த, Ivariththa - எதிரிட்ட அரசர், Arasar - ராஜாக்கள் தடுமாற, Thadumara - நிலைகுழம்பும்படியாகவும் இருள் நாள், Irul Naal - இராப்பொழுதில் பிறந்த, Pirandha - திருவவதரித்த அம்மானை, Ammaanai - ஸ்வாமியை,- ஒரு பால், Oru Paal - ஒரு புறத்தில் உவரி ஓதம், Uvari Otham - கடலலைகள் முத்து, Muthu - முத்துக்களை உந்த, Unda - ஒதுக்கித்தள்ளவும் ஒரு பால், Oru Paal - இன்னொருபுறத்தில் ஒண், On - அழகிய செந்நெல், Sennel - செந்நெற்பயிர்கள் கவரி வீசும், Kavari Veesum - சாமரம் போல் வளைந்து வீசவும் பெற்ற கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே |
| 1751 | பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ வராஹமாய் பூமியை பிரளயம் கொண்டது என்று அத்தை எடுத்து ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வந்த வை வர்ண்யத்தைப் போக்கினவன் – பாண்டவர்களுக்கு சாரதி யானவன்) 4 | வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரித் தறு கண்
பன்றியாய் அன்று பார்மகள் பயலைத் தீர்த்தவன் பஞ்சவர் பாகன்
ஒன்றலா வுருவத் துலபபில் பல்காலத் துயர் கொடி யொளிவளர் மதியம்
சென்று சேர் சென்னிச் சிகர நன்மாடத் திருக் கண்ணங்குடியுள் நின்றானே –9-1-4 | பதவுரை Show / Hideஅன்று, Andru - முன்பொருகால், (- (திருக்கண்ணங்குடியுள், நின்றான்-.)) வென்றி சேர், Vendri Ser - வெற்றிபெறுந்தன்மையுடையதும் திண்மை, Thinmai - வலிமையுடையதும் விலங்கல் மா மேனி, Vilangkal Maa Meni - மலைபோன்ற பெரிய வடிவுடையதும் வெள்எயிறு, Velaiyiru - வெறுத்தகோரப்பற்களையும் ஒள் எரி, Ol Eri - ஜ்வலிக்கின்ற அக்நியோடொத்த தறு கண், Tharu Kan - வட்டணித்த கண்களையும் உடையதுமான பன்றி ஆய், Pandri Aayi - வராஹரூபியாய்த் திருவவதரித்து பார் மகள், Paar Magal - பூமிப்பிராட்டியினுடைய பயலை, Payalai - விரஹவேதனையை தீர்த்தவன், Theerthavan - போக்கினவனும் பஞ்சவர் பாகன், Panjavar Bhagan - பாண்டவர்களுக்கு ஸாரதியுமான எம்பெருமான்,- ஒன்று அலா உருவத்து, Onru Ala Uruvaththu - பலவகைப்பட்ட உருவங்களையுடையவையாய் உலப்பு இல், Ulappu Il - முடிவில்லாமல் பல் காலத்து, Pal Kaalaththu - நீண்டகாலமுள்ளவையாய் உயர் கொடி ஒளி வளர் மதியம் சென்று சேர் சென்னி சிகரம், Uyar Kodi Olli Valar Madhiyam Sendru Ser Chennni Sikaram - உயர்ந்தகொடிகளானவை ஒளிமிக்க சந்திர மண்டலத்தளவும் சென்று சேரும்படியாக ஓங்கின சிகரங்களை யடையவையான நல் மாடம், Nal Maadam - அழகிய மாடமாளிகைகளை யுடைத்தான |
| 1756 | பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விஞ்சின பாரமானது ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வாராத படி ஸ்ரீ மகா பாரதத்திலே ராஜாக்கள் ஆனவர்கள் மடியும் படியாக ஸ்ரீ அர்ஜுனன் முன்னே நின்று தேரை நடத்தினவன் – ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவன்) 9 | பன்னிய பாரம் பார் மகட்கு ஒழிய பாரத மா பெரும் போரிலே
மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர் மைத்துனர்க்கு உய்த்த மா மாயன்
துன்னு மாதவியும் சுர புனைப் பொழிலும் சூழ்ந்தெழு செண்பக மலர்வாய்
தென்ன வென்றளிகள் முரன்றிசை பாடும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே –9-1-9 | பதவுரை Show / Hideபார்மகட்கு, Paarmakadku - பூமிப்பிராட்டிக்கு இருந்த (- (திருக்கண்ணங்குடியுள், நின்றான்-.)) பன்னிய பாரம், Panniya Paaram - விஞ்சின பாரமானது ஒழிய, Ozhiy - விட்டுநீங்கும்படி பாரதம் மா பெரு போரில், Bharatham Maa Peru Poaril - மிகப் பெரிய பாரதயுத்தத்தில் மன்னர்கள், Mannargal - அரசர்கள் மடிய, Madiy - தொலையும்படி மைத்துனற்கு, Maiththunarukku - அர்ஜுநனுக்கு மணி நெடு திண் தேர் உய்த்த, Mani Neduthin Ther Uyththa - மணிகளுடையதாய்ப் பெரிதாய்த் திடமாயிருந்த தேரை நடத்தின மா மாயன், Maa Maayan - ஆச்சரிய சக்தியுக்தனான பெருமான்,- துன்னு மாதவியும், Thunnu Maadhaviyum - நெருங்கின குருக்கத்தியும் சுரபுனை பொழிலும், Surapunai Pozhilum - சுரபுன்னைச் சோலைகளும் சூழ்ந்து எழு செண்பகம், Soozhndhu Ezhuthu Senbagam - சுற்றிலுமுண்டான செண்பகங்களும் ஆகிய இவற்றினுடைய மலர்வாய், Malarvaai - பூக்களிலே அளிகள், Azhigal - வண்டுகள் தென்ன என்று, Thenna Endru - தென்ன தென்ன வென்று முரன்று, Murandru - ஆலாபித்து இசை பாடும், Isai Paadum - இசைபாடப்பெற்ற |
| 1802 | பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாண்டவர்களுக்காக யுத்தத்தில் நடத்தினவன் வர்த்திக்கிற ஊர் போலும் – முடி சூடுவார் யாரோ என்று இருக்குமாயிற்று தாழ்வு செய்து திரிகைக்கு) 5 | கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலி மாந்தேர்
ஐவர்க்காய் அன்று அமரில் உய்த்தானூர் போலும்
மைவைத்திலங்கு கண்ணார் தங்கள் மொழி யொப்பார்
கொவ்வைக் கனிவாய்க் கிள்ளை பேசும் குறுங்குடியே –9-6-5 | பதவுரை Show / Hideகொவ்வைக் கனிவாய், Kovvaik Kanivai - கோவைப்பழம்போற் சிவந்த வாயையுடைய கிள்ளை, Killa - கிளிகளானவை மை வைத்து இலங்கு கண்ணார் தங்கள் மொழி ஒப்பான், Mai Vaiththu Ilangu Kannaar Thangal Mozhi Oppaan - மையிட்டு விளங்குகின்ற கண்களையுடைய பெண்களில் பேச்சுப்போல பேசும், Pesum - பேசுமிடமான குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியானது அன்று, Andru - முன்பொருகால் அமரில், Amaril - பாரதயுத்தத்தில் கவ்வை களிறு மன்னர், Kavvai Kaliru Mannar - பேரொலிகொண்ட யானைகளை யுடையவரான அரசர்கள் மாள, Maala - மாண்டுபோம்படியாக ஐவர்க்கு ஆய், Aivarkku Aay - பஞ்சபாண்டவர்களுக்காக கலி மா தேர், Kali Maa Ther - திண்ணிய பெரியதேரை உய்த்தான், Uyiththaan - நடத்தின பெருமானுடைய ஊர்போலும், Oorpolum - திவ்யதேசமாகும் |
| 1809 | பெரிய திருமொழி || (9-7–தந்தை தாய்) (திரு வல்லவாழ்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாண்டவர்களுக்காக பண்டு தன்னை தாழ விட்டு தூது போன மேன்மையை உடையவர் – நம்மை யாரோ ஏவிக் கார்யம் கொள்வார் என்று வந்து நிற்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை —) 2 | மின்னு மா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண்ணிடை நுடங்கும்
அன்ன மென்னடையினார் கலவியை அருவருத்து அஞ்சினாயேல்
துன்னு மா மணி முடிப் பஞ்சவர்க்காகி முன் தூது சென்ற
மன்னனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-2 | பதவுரை Show / Hideமின்னும், Minnum - மின்னலையும் (- (நெஞ்சே) (மன்னால் வல்லவாழ் மருவு-)) மா வல்லியும், Maa Valliyum - அழகிய கொடியையும் வஞ்சியும், Vanjiyum - வஞ்சிக் கொம்பையும் வென்ற, Vendra - தோற்பித்த நுண் இடை, Nun Idai - நுட்பமான இடுப்பு நுடங்கும், Nudangum - துவளும்படியிருப்பவர்களாய் அன்னம் மென் நடையினார், Annam Men Nadaininar - அன்னம்போல் மெதுவான நடையையுடையரான மாதருடைய கல்வியை, Kalviyai - புணர்ச்சியை அருவருத்து, Aruvaruthu - வெறுத்து அஞ்சினாய்ஏல், Anjinayel - அச்சமுறுவாயாகில், முன், Mun - முன்பொரு கால் துன்னு மாமணி முடி பஞ்சவர்க்கு ஆகி, Thunnu Mamanikudi Panjavarkku Aagi - நெருங்கின சிறந்த ரத்னங்களிழைத்த கிரீடமணியத் தக்க பஞ்சபாண்டவர்களுக்காக தூது சென்ற, Thoodu Sentra - தூது நடந்த |
| 1822 | பெரிய திருமொழி || (9-8–முந்துற) (திரு மாலிருஞ்சோலை 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சங்கல்ப்பத்தாலே அன்றிக்கே பத்தும் பத்தாக வீர வாசி தோற்ற பூசலிலே பொறுத்த ஸ்ரீ ஸ்வாமிகள் வர்த்திக்கிற தேசம்) 5 | வணங்க லிலரக்கன் செருக்களத் தவிய மணி முடி யொருபதும் புரள
அணங்கு எழுந்தவன் தன் கவந்தம் நின்றாட அமர் செய்த வடிகள் தம் கோயில்
பிணங்கலில் நெடு வேய் நுதி முகம் கிழிப்பப் பிரசம் வந்து இழிதரப் பெருந்தேன்
மணம் கமழ் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-5 | பதவுரை Show / Hideவணங்கல் இல் அரக்கன், Vanangal Il Arakkan - வணக்கமற்ற இராவணன் (- (மட நெஞ்சே!-) (அடிகள் தம் கோயில்) (மாலிருஞ்சோலை, வணங்குதும் வா-.)) செரு களத்து, Seru Kalathu - போர்க்களத்தில் அவிய, Aviyam - முடியும்படியாகவும் மணி முடி ஒருபதும் புளர, Mani Mudi Orupadhum Pulara - (அவனது) மணியணிந்த முடிகள் பத்தும் தரையில் புரளும்படியாகவும் அவன்தன் கவந்தம், Avanthan Kavantham - அவனுடைய கபந்தம் அணங்கு எழுந்து, Anangu Ezhundhu - தெய்வாவேசங் கொண்டது பொல நின்று ஆட, Ninru Aada - நின்று ஆடும்படியாகவும் அமர் செய்த, Amar Seitha - யுத்தம் பண்ணின பிணங்களில், Pinangalil - ஒன்றுக்கொன்று பிணங்கியிருப்பதோடு கூடின நெடு வேய் நுதி, Nedu Vei Nuthi - ஓங்கின மூங்கிலின் நுனி முகம் கிழிப்ப, Mugam Kizhippa - (மலையுச்சியிலுள்ள தேன் கூட்டின்) வாயைக்கிழிக்க பிரசம் வந்து இழிதா, Piracham Vandu Izhidha - (அதிலுள்ள) தேனீக்கள் சிதற பெரு தேன், Peru Then - அதிகமான தேனினுடைய மணம், Manam - பரிமளம் கமழ், Kamazh - வீசப்பெற்ற சாரல், Saaral - பக்கங்களையுடைத்தான |
| 1835 | பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நித்ய சூரிகள் அனுபவித்த வடிவு அழகை இங்கு உள்ளார் இழவாத படி தனக்கு வாசஸ் ஸ்தானமாகப் போரும்படி தர்ச நீயமான பொழி லாலே சூழப் பட்ட ஸ்ரீ திருமலையிலே நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை – தன் மயிர் முடியாலே இவனைத் துவக்க வல்ல இவள் அவனைத் தொழுதாளாய்த் தலைக் கட்ட வல்லளேயோ) 8 | பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்தொரு தேர் முன்னின்று
காத்தவன் தன்னை விண்ணோர் கரு மாணிக்க மா மலையை
தீர்த்தனைப் பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற
மூர்த்தியைக் கை தொழவும் முடியும் கொலோ என் மொய் குழற்கே –9-9-8 | பதவுரை Show / Hideஅன்று, Andru - முன்பொருகாலத்தில் பார்த்தனுக்கு, Paarththanu Kku - அர்ஜுநன்பக்கலிலே அருளி, Aruli - அருள்கூர்ந்து பாரத்தது, Paaraththathu - பாரதயுத்தத்திலே ஒரு தேர் முன் நின்று, Oru Ther Mun Nindru - ஸாரதியாயிருந்து காத்தவன் தன்னை, Kaaththavan Thannai - ரக்ஷித்தருளினவனும், விண்ணோர், Vinnor - நித்யஸூரிகள் அநுபவிக்கவுரிய கரு மாணிக்கம் மா மலையை, Karum Manikkam Maa Malaiyai - கரிய பெரிய மாணிக்கமலை போன்றவடிவு படைத்தவனும் தீர்த்தனை, Theerththanai - பரமபவித்திரனும் பூம்பொழில் சூழ், Poombozhil Soozh - திருமாலிருஞ்சோலையில் நின்ற, Nindra - நிற்பவனுமான மூர்த்தியை, Moorththiyai - ஸ்வாமியை கை தொழவும் என் மொய் குழற்கு முடியும் சொல், Kai Thozhavu En Moy Kuzharkku Mudiyum Sol - ஸேவிப்பதற்கு அடர்ந்தகூந்தலை யுடையளான் என் மக்களுக்கு வாய்க்குமோ? |
| 1869 | பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எங்களுக்கு வேறு சிலர் ரஷகர் உண்டு என்று நினைத்து நலிய வேண்டியது இல்லை) 2 | எம்பிரானே என்னை ஆள்வா என்று என்று அலற்றாதே
அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்த்ரஜித் அழிந்தான்
நம்பி அனுமா சுக்ரீவா வங்கதனே நளனே
கும்பகர்ணன் பட்டுப் போனான் குழமணி தூரமே –10-3-2 | பதவுரை Show / Hideஇந்திரசித்து, Indirachithu - இந்த்ரஜித்தானவன் (- (குழமணிதூரம் ஆடுகின்றோம்.)) எம்பிரானே என்னை ஆள்வாய் என்று என்று அரற்றாதே, Embirane Ennai Aalvaai Endru Endru Aratradhe - பகவந் நாமங்களையே சொல்லிக்கோஷம் போடாமல் அம்பின் வாய் பட்டு, Ambin Vaai Pattu - பாணங்களுக்கு இரையாகி ஆற்ற கில்லாது, Aattra Killaadhu - தரித்திருக்க மாட்டாமல் அழிந்தான், Azhindhaan - மாண்டுபோனான் நம்பி அனுமா!, Nambi Anumaa - சுக்கிரீவா! அங்கதனே! நளனே! கும்பகரணன், Kumbakaranan - கும்பகர்ணனானவன் பட்டுப் போனான், Pattup Ponaan - முடிந்துபோனான் |
| 1877 | பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ மகா ராஜரை நோக்கிச் சொன்ன ஒன்றும் ஒன்றும் -இரண்டு பாசுரங்கள் வானர முதலிளைக் குறித்து சொன்ன ஐந்து பாசுரங்கள் பரோபதேச ரூபமான மூன்று பாசுரங்கள் – இப்பத்தையும் பாடிக் கொண்டாட-உங்களுக்கு இனி வரக் கடவதொரு பயம் இல்லை – நாவலிட்டு உழி தருகின்றோம் -என்று வேண்டின படி ஆடித் திரியுங்கோள்) 10 | வென்ற தொல் சீர் தென்னிலங்கை வெஞ்சமத்து அன்று அரக்கர்
குன்றமன்னார் ஆடியுய்ந்த குழ மணி தூரத்தைக்
கன்றி நெய்நீர் நின்ற வேற்கைக் கலியன் ஒலி மாலை
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் பாடி நின்றாடுமினே –10-3-10 | பதவுரை Show / Hideதொல், Thol - நெடுநாளாக வென்றி சீர், Vendri Seer - வெற்றியையே இயல்பாக வுடைத்தாயிருந்த தென் இலங்கை, Then Ilangai - தென்னிலங்கையில் வெம் சமத்து, Vem Samathu - வெவ்வியபோர்க்களத்திலே அன்று, Anru - அப்போது அரக்கர், Arakkar - ராக்ஷஸர்கள் குன்றம் அன்னார், Kundram Annar - மலைபோன்றவர்களாக ஆடி உய்ந்த குழமணி தூரத்தை, Aadi Uyndha Kuzhamani Thoorathai - குழமணிதூரக்கூத்தாடி உயிர் தப்பினபடியைக் குறித்து, கன்றி நெய் நீர் நின்ற வேல் கை, Kandri Ney Neer Nindra Vel Kai - சினக்குறிப்புடன் கூடிய தாய் நெய்யிட்டிருப்பதை நீர்மையாகவுடைத்தாய் நின்ற வேற்படையைக் கையிலுடையரான கலியன், Kalyan - திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச்செய்த மாலை ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும், Maalaik Ondrum Ondrum Aindhum Moondrum - சொல்மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையும் பாடி நின்று, Paadi Nindru - பாடிக்கொண்டு ஆடுமின், Aadumin - (ஆநந்தத்துக்குப் போக்கு வீடாகக்) கூத்தாடுங்கோள் |
| 1936 | பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மதுரா மதுராலாபா -என்னும்படியான பேச்சை உடையவளை – செவ்வி மாறாத மாலையையும் உடையவளை – இவள் வாசி ஒன்றையும் புத்தி பண்ணிற்று இல்லை –இதுக்கு நான் எத்தைச் செய்வேன் – பெரு வழிக் கரையிலே-நாவலில் விழுந்த பழமானது-குனிந்து எடுக்க்கவுமாய் தவிரவுமாய் இருக்கும் இறே அவ்வோபாதியும் நினைத்து இறுக்கிறலை யாயிற்று இவளையும்) 5 | செரு வழியாத மன்னர்கள் மாளத் தேர் வலம் கொண்டவர் செல்லும்
அரு வழி வான மதர் படக் கண்ட ஆண்மை கொலோ வறியேன் நான்
திரு மொழி எங்கள் தே மலர்க் கோதை சீர்மையை நினைந்திலை யந்தோ
பெரு வழி நாவல் கனியினும் எளியள் இவள் எனப் பேசுகின்றாயே –10-9-5 | பதவுரை Show / Hideஎங்கள், Engal - எங்களுடையவளாய் திருமொழி, Thirumozhi - சிறந்த (மதுரமான) பேச்சையுடையவளாய் தேன் மலர் கோதை, Then Malar Kothai - தேனொழுகும் மலர்களணிந்த மயிர் முடியையுடையளான இப்பெண்பிள்ளையினுடைய சீர்மையை, Seermaiyai - சிறப்பை நினைத்திலை, Ninaithilai - அறிகின்றிலை அந்தோ, Andho - ஐயோ! இவள் பெரு வழி நாவல் கனியினும் எளியள் என பேசுகின்றாய், Ival Peru Vazhi Naaval Kaniyinum Ezhiyal En Pesugindraai - பெரிய வழியில் விழுந்து கிடக்கிற நாவற் பழத்தைக்காட்டிலும் இவள் எளியவள் என்று நினைத்திருக்கிறாயே1, செரு, Seru - போர்க்களத்திலே அழியாத, Azhiyaadha - ஒருநாளும் தோற்றறியாத மன்னர்கள், Mannargal - அரசர்கள் மாள, Maala - மாண்டுபோகும்படியாக தேர் வலம் கொண்டு, Ther Valam Kondu - தேரின் வலிமையையே கொண்டு அவர் செல்லும், Avar Sellum - அவ்வரசர்கள் போகக்கூடிய அரு வழி வானம், Aru Vazhi Vaanam - அருமையான வழியையுடைய வீரஸ்வர்க்கத்தை அதர்பட கண்ட, Adharpada Kanda - பெருவழியாக்கின ஆண்மை கொலோ, Aanmmai Koloo - ஆண்பிள்ளைத்தனத்தை நினைத்தோ? நான் அறியேன், Naan Ariyeen - எனக்குத் தெரியவில்லை |
| 1961 | பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இத்தை அப்யசிக்க வல்லார்களுக்கு பாதக பதார்த்தங்களால் நோவு பட வேண்டாதே நித்ய சம்ஸ்லேஷத்தோடே காலம் செல்லப் பெறுவர்–அல்லல் ஆகிறது இத் திரு மொழியில் பட்ட கிலேசம்) 10 | அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச்
சென்ற மாயனைச் செங்கண் மாலினை
மன்றிலார் புகழ் மங்கை வாள் கலி
கன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே –11-1-10 | பதவுரை Show / Hideஅன்று, Anru - முன்பொருகால் பாரதத்து, Bharathaththu - பாரத யுத்தத்திற்குப் பூர்வாங்கமாக ஐவர் தூதன் ஆய், Aivar Thoodhan Aay - பஞ்சபாண்டவர்கட்குத் தூதுவனாய் சென்று, Sendru - எழுந்தருளின மாயனை, Maayanai - ஆச்சரிய சக்தியுத்தனும் செம் கண் மாலினை, Sem Kan Malinai - செந்தமாரைக் கண்ணனுமான ஸர்வேச்வரன் விஷயகமாக மன்றில் ஆர் புகழ், Manril Aar Pugazh - நூறத்திகள் தோறும் நிறைந்த மங்கை, Mangai - திருமங்கை நாட்டையுடையவரும் வாள், Vaal - வாட்படை கொண்டவருமான கலிகன்றி, Kalikanri - ஆழ்வார்(அருளிச்செய்த) சொல், Sol - இந்த ஸ்ரீ ஸூக்திகளை வல்லார்க்கு, Vallarkku - ஓதவல்லவாக்ளுக்கு அல்லல் இல்லை, Allal Illai - ஒரு துன்பமும் உண்டாக மாட்டாது. |
| 1972 | பெரிய திருமொழி || (11-3–மின்னிலங்கு) - (தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான் வந்தேறியாயும் ஸ்வா பாவிகமாயும் உண்டான என்னுடைய ஆபரணங்களை இழந்து இருக்கிற இப்போது கிடிகோள்- அவர் ஆஸ்ரித அர்த்தமாக தம்மைத் தாழ விட்டு சாரத்தியம் பண்ணியும் -இரப்பாளனாகவும் – தம்மைப் பேணாதே அம்பு ஏற்றும் பண்ணும் வியாபாரங்கள் அடைய நமக்குப் பலித்த படி இது கிடிகோள்) 1 | மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து மா வலியைப்
பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்துப் பொரு கடல் சூழ்
தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கிது காணீர்
என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே –11-3-1 | பதவுரை Show / Hideமன் இலங்கு, Man Ilangu - (பல) அரசாகள் விளங்கா நின்ற பாரதத்து, Bharathaththu - பாரதயுத்தத்திலே தேர் ஊர்ந்து, Ther Oorndhu - (சாரதியாய் நின்று) தேரை நடத்தினவனாயும் மாவலியை, Mavalaiya - மஹாபலியை பொன் இலங்கு திண் விலங்கில் வைத்து, Pon Ilangu Thin Vilangkil Vaiththu - பொன்மயமாக விளங்குகின்ற திடமான விலங்கிலே பிணைத்தவனாயும் பொரு கடல் சூழ், Poru Kadal Soozh - அலையெறிகின்ற கடலால் சூழப்பட்ட தென்இலங்கை, Thenilankai - தென்னிலங்கையினுடைய ஈடு, Eedu - மதிப்பை அழித்த, Azhiththa - அழித்தவனாயுமிருக்கிற தேவற்கு, Thevarku - எம்பெருமானுக்கு என் இலங்கு சங்கோடு, En Ilangu Sangodu - எனது ஒளிமிக்கவைகளைகளையும் எழில், Ezil - அழகையும் தோற்றிருந்தேன், Thotrirundhen - இழந்திரா நின்றேன் இது காணீர், Idhu Kanneer - இவ்விருப்பைக் காணுங்கோள் |
| 1988 | பெரிய திருமொழி || (11-4–நிலை) - (திருமாலின் திரு அவதாரங்களில் ஈடுபடுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆயிரம் இரண்டாயிரமுமாக ஒரு தொடையிலே தொடை யுண்ணும் செவ்விய அம்புகளை நடத்தின – இதடையச் செய்தது -ஸ்ரீ பிராட்டி பக்கல் பிச்சாலே இறே இப்படி தம் மார்பிலே அம்பை ஏற்று ரஷிக்குமவர் நமக்கு ரஷகர்-நமக்கு மேல் ஒரு குறை உண்டோ) 7 | இலை மலி பள்ளி யெய்தி யிது மாயம் யென்ன இன மாய மான் பின் எழில் சேர்
அலை மலி வேற் கணாளை அகல்விப்பதற்கு ஓருருவாய மானை யமையா
கொலை மலி வெய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்
சிலை மலி செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமால் நமக்கோர் அரணே –11-4-7 | பதவுரை Show / Hideஇலைமலி பள்ளி எய்தி, Ilaimali Palli Eydhi - பர்ணசாலையினருகே வந்து எழில் சேர், Ezhil Ser - மிக்க அழகையுடையளாய் ஆலை மலி வேல் கணாளை, Aalai Mali Vel Kanaalai - துன்பப்படுத்துமியல்வு பொருந்திய வேல் போன்ற திருக்கண்களை யுடையளான பிராட்டியை அகல்விப்ப தற்கு, Agalvippa Tharku - பிரிப்பதற்காக இனம் ஆய மான் பின், Inam Aaya Maan Pin - ஸஜாதியமான மான்களின்பின்னே இதுமாயம் என்ன, Idhumayam Enna - இது ஆச்சரியமான மான் என்று சொல்லும்படியாக ஓர்உரு ஆய, Oru Uru Aaya - விலக்ஷணமான ரூபத்தை யேறிட்டுக்கொண்டு வந்த மானை, Maanai - (மாரீசனாகிற) மாயமானை அமையா, Amayaa - நிரஸித்து கொலைமலிவு எய்துவித்த கொடியோன், Kolaimalivu Eythuvitha Kodiyon - பரஹிம்ஸையையே தன்னிடத்துப் பூர்த்தியாகக் கொண்டிருந்தகொடியவனான இராவணனுடைய இலங்கை, Ilankai - லங்காபுரியானது பொடி ஆக, Podi Aaga - பொடிபடும்படி வென்றி அமருள், Vendri Amarul - வெற்றிப்போர்க்களத்திலே சிலை மலி செம் சரங்கள், Silai Mali Sem Sarangal - வில்லிலே நிறைந்த செவ்வியஅம்புகளை செல உய்த்த, Sela Uytha - பிரயோகித்த நங்கள் திருமால், Nangal Thirumaal - எம்பெருமான் நமக்கு ஓர் அரண், Namakku Oor Aran - நமக்கு ஒப்பற்ற சரண்யன் |
| 1998 | பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (துர் உக்தி பண்ணுவதற்கு ஒருவரும் இல்லாத சமயத்தில் துர்யோதனில் குறைந்தார் இல்லாத இஜ் ஜகத்தை வயிற்றிலே வைத்து ரஷிததான் காண்) 7 | கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் வாகிலும்
ஓத நீர் வையகம் முன் உண்டு உமிந்தான் சாழலே –11-5-7 | பதவுரை Show / Hideஏடீ, Eadi - தோழீ! (- (தூதன் ஆய் மன்னவனால் கொல்லுண்டான் ஆகிலும்)) கோதை வேல் ஐவர்க்கு ஆய், Kothai Vel Aivarkku Aay - (அரசர்க்குரிய) பூமாலையையும் வேற்படையையும் உடையவரான பஞ்சுபாண்டவர்களுக்கு விதேயனாய் மண் அகலம் கூறு இடுவான், Man Akalam Kooru Idhuvan - குரு பாண்டவாகட்குப் பூமியைப் பங்கிட்டுக் கொடுத்து சந்தி செய்வதற்காக தூதன் ஆய், Thoodhan Aay - தூதுசென்றவனாய் மன்னவனால், Mannavanaiyil - துரியோதனனென்னும் அரசனாயல் சொல் உண்டான் காண், Sol Undaan Kaan - இழிவான சொற்களைச்சொல்லப் பெற்றானன்றோ? சாழலே, Saalale - தோழீ! முன், Mun - முன்பொருகால் ஓதம் நீர் வையகம், Otham Neer Vayagam - கடல் சூழ்ந்த உலகத்தையெல்லாம் உண்டு உமிழ்ந்தான், Undu Umizhndhaan - (பிரளயங்கொள்ளாதபடி) வயிற்றிலே வைத்து நோக்கி வெளிப்படுத்தினான்காண்க. |
| 1999 | பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்படி தாழ்வு செய்தவன் லோகத்தில் ராஜாக்கள் ஆனார் முடி மேல் மாலையிலே காண் திருவடிகளை வைத்துக் கொண்டு இருப்பது – ராஜாதி ராஜ சர்வேஷாம் -இத்யாதி) 8 | பார் மன்னர் மங்கப் படை தொட்டு வெஞ்சமத்துத்
தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் காணேடீ
தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான்ஆகிலும்
தார் மன்னர் தங்கள் தலை மேலான் சாழலே –11-5-8 | பதவுரை Show / Hideஏடீ, Eadi - தோழீ! (- (தேர் மன்னற்கு ஆய் அன்று தேர் ஊர்ந்தான்)) அன்று, Anru - பாரதப்போர்நிகழ்ந்த அக்காலத்தில் பார், Paar - பூமியிலுள்ள மன்னர், Mannar - அரசாகள் யாவரும் மங்க, Manga - மாளும்படியாக வெம் சமத்து, Vem Samathu - வெவ்விய போர்க்களத்திலே படைதொட்டு, Padaithottu - (பிரதிஜ்ஞைக்குமாறாக)ஆயுதமெடுத்து தேர்மன்னற்கு, Thermannarku - தேர்வீரனான அரிஜுனனுக்கு ஆய், Aai - துணையாய்(ஸராதியாகி) தேர் ஊர்ந்தான் காண், Ther Oornthaan Kaan - தேரைநடத்தினான் காண். சாழலே, Saalale - தோழீ! தார் மன்னர் தங்கள், Thaar Mannar Thangal - வெற்றி மாலைபுனையும் அரசர்களுக்கெல்லாம் தலை மேலான், Thalai Melan - தலைமேல் வீற்றிருப்பவன் காண். |
| 2079 | திரு நெடும் தாண்டகம் || இப்பாட்டில் எல்லை கடந்த ப்ரணய ரோஷத்தை வெளியிடும் முகத்தால் தன்னுடைய ஆற்றாமையின் கனத்தை வெளியிட்டவாறு. இனிப் பெற்றல்லது தரிக்க வொண்ணாத படியான ‘முடிந்தவவா‘ என்கிற பரமபக்தி முதிர்ந்தமை சொன்னபடி. 28 | தென்னிலங்கை யரண் சிதறி அவுணன் மாளச் சென்றுலக மூன்றினையும் திரிந்தோர் தேரால்,
மன்னிலங்கு பாரதத்தை மாள வூர்ந்த வரையுருவின் மாகளிற்றைத் தோழீ, என்றன்
பொன்னிலங்கு முலைக்குவட்டில் பூட்டிக் கொண்டு போகாமை வல்லேனாய்ப் புலவி யெய்தி,
என்னிலங்க மெல்லாம்வந் தின்ப மெய்த எப்பொழுதும் நினைந்துருகி யிருப்பன் நானே.
- 28 | பதவுரை Show / Hideபாரதத்தை மாள,Bharathaththai Maala - பாரதயுத்தம் முடியும்படியாக ஓர் தேரால் ஊர்ந்த,Or Thaeraal Oorntha - ஒரு தேரைக் கொண்டு நடத்தின |
| 2089 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) ஆக இப்படி மதி மயங்கி எல்லாரும் தன்னை அறியாதே போம் இத்தனையோ -என்னில் அது செய்வது சாதாரண விஷயத்தில் ஆஸ்ரித விஷயத்தில் அசத்திய பிரதிஜ்ஞ்ஞனாய்க் கொண்டு அவர்கள் பக்கல் தன் பஷ பாதம் தோற்றக் கார்யம் செய்யும் என்கிறார் 8 | மயங்க வலம் புரி வாய் வைத்து வானத்
தியங்கு மெரி கதிரோன் தன்னை முயங்க மருள்
தோராழி யால் மறைத்த தென் நீ திரு மாலே
போராழிக் கையால் பொருது | பதவுரை Show / Hideதிருமாலே நீ,Thirumaale Nee - லஷ்மீநாதனே!, நீ முயங்கு அமருள்,Muyangu Amarul - (எண்ணிறந்த மன்னர்கள்) நெருங்கிக் கிடந்த பாரதப் போர்க்க்களத்திலே மயங்க,Mayanga - எதிரிகள் அஞ்சி அறிவு கலங்கும்படியாக் வலம்புரி,Valampuri - ஸ்ரீபாஞ்சஜந்ய மென்னும் திருச்சங்கை வாய் வைத்து,Vaai Vaiththu - தனது திருப்பவளத்திலே வைத்து ஊதி போர் ஆழிகையால்,Por Azhikayal - போர்செய்வதற்கு உபகரணமான திருவாழியை ஏந்தின கையாலே பொருது,Poruthu - (பீஷ்மர் முதலானவர்களைத் துரத்தி) யுத்தம் செய்து வானத்து இயங்கும் எறி கதிரோனை,Vaanaththu Iyanguum Eri Kathironae - ஆகாயத்தில் ஸஞ்சரித்துக் கொண்டேயிருக்கிற ஸூர்யனை தேர் ஆழியால்,Thaer Aazhiyaal - சக்கராயுதத்தினால் மறைத்தது என்,Maraiththathu En - மறைத்தது எதுக்காக? |
| 2196 | இரண்டாம் திருவந்தாதி || ஸ்ரீ வாமன அவதார பிரசங்கத்தாலே -இப்படி இருக்கிற ஆஸ்ரிதருடைய ரஷண அர்த்தமாக கிடீர் -அவன் தன்னை இப்படி அழிய மாறிற்று -என்று ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திலும் ஸ்ரீ ராம அவதாரத்திலும் பட்ட மிறுக்குகளை நினைத்து அதி ஸூகுமாரனான அவனுக்கு இங்கனே பட வேண்டுவதே -என்கிறார் – இவர்கள் தங்கள் உடம்பைப் பேணா- இவர்களுக்காக அவன் தன்னைப் பேணாதே துக்கப் படுவதே -என்று வெறுக்கிறார்- திரு உலகு அளந்தபடி ப்ரஸ்துதம் ஆகையால்–அல்லாத அவதாரங்களிலும் ஆஸ்ரித அர்த்தமாக மிகைப் பட்ட-இறுக்குகளை நினைத்து வெறுக்கிறார் இவர்கள் இப்படி தாங்கள் உடம்பைப் பேணிப் பேய்களாய்த் திரிய -இவர்களுக்காக ஸ்ரீ கிருஷ்ணனாவது -ஸ்ரீ ராமன் ஆவதாகக் கொண்டு அதி ஸூகுமாரமான திரு மேனியோடு அவன் பட்ட மிறுக்குகளை நினைத்து வெறுக்கிறார் – 15 | திரிந்தது வெஞ்சமத்துத் தேர்கடவி, அன்று
பிரிந்தது சீதையைமான் பின்போய், – புரிந்ததுவும்
கண்பள்ளி கொள்ள அழகியதே, நாகத்தின்
தண்பள்ளி கொள்வான் றனக்கு. | பதவுரை Show / Hideவெம் சமத்து, Vem Samathu - கொடிய (பாரத) யுத்தத்திலே தேர்கடவி, Therkadavi - (பார்த்தஸாரதியாகித்) தேரை நடத்திக் கொண்டு திரிந்ததும், Thirindhathum - அலைந்ததும், அன்று, Andru - இராமனாகத் திருவவதரித்த காலத்து மான்பின் போய், Maanpin Poi - மா·சனாகிற மாயமானின் பின்னே சென்று சீதையை பிரிந்ததும், Seethaiyai Pirindhadum - பிராட்டியைப் பிரிந்து அலைச்சற்பட்டதும், கண், Kan - தரையிலே பள்ளி கொள்ள, Palli Kollai - படுத்துக் கொள்ளும்படி புரிந்ததுவும், Purindhathuvum - ஆசைகொண்டதும் நாகத்தின் தண்பள்ளிகொள்வான் தனக்கு, Naagaththin Thandpallikolvaan Thanakku - திருவனந்தாழ்வான் மேலே குளிரப்பள்ளி கொண்டிருக்க வேண்டிய பெருமானுக்கு அழகியதே, Azhagiyadhe - ஏற்றவையோ? |
| 2309 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இவர்கள் பண்ணின பாப பலம் இவர்களுக்கு புஜிக்க வேண்டுவது பாண்டவர்கள் தங்கள் சத்ருக்களை தாங்கள் நிரசிக்கும் அன்று அன்றோ என்கிறார் – கீழ்-ஸ்ரீ வேங்கடமும் ஸ்ரீ வெக்காவும் ஸ்ரீ வேளுக்கைப் பாடியும் -என்ற பிரசங்கத்தாலே ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்து ஈடுபடுகிறார் – இவனைப் பற்றினார்க்கு பாப பலம் அனுபவிக்க வேண்டுவது பாண்டவர்கள் தங்கள் சத்ருக்களைத் தாங்கள் நிரசிக்கும் அன்று அன்றோ என்கிறார் – 28 | அடைந்த தரவணைமேல் ஐவர்க்காய், அன்று
மிடைந்தது பாரத வெம்போர், – உடைந்ததுவும்
ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே, வாளெயிற்றுப்
பேய்ச்சிபா லுண்ட பிரான். | பதவுரை Show / Hideவான் எயிறு, Vaan Eiyiru - வான்போன்ற பற்களையுடையளான பேய்ச்சி, Peychchi - பூதனையினுடைய பால், Paal - முலைப்பாலை உண்ட, Unda - உண்டு அவளை முடித்தவனான பிரான், Piraan - ஸ்வாமியானவன் அடைந்தது, Adaindhathu - பள்ளிக்கொண்டது அரவு அணை மேல், Aravu Anai Mel - சேஷசயனத்தின் மேலாம் அன்று, Andru - முன்னொரு காலத்தில் ஐவர்க்கு ஆய், Aivarkku Aay - பஞ்சபாண்டவர்களுக்காக மிடைந்தது, Midaindhathu - நெருங்க நடத்தினது வெம் பாரதம் போர், Vem Bharatham Por - கடுமையான பாரதயுத்தமாம், உடைந்ததுவும், Udaindhathuvum - அஞ்சி நின்றதும் ஆய்ச்சிபால், Aaychipaal - இடைச்சியான யசோதைப் பிராட்டியினிடத்துண்டான மத்துக்கே, Maththukke - மத்துக்காகவாம், அம்மனே, Ammane - அந்தோ! |
| 2397 | நான்முகன் திருவந்தாதி || உமக்குத் தரிப்பு எத்தாலே பிறந்தது என்ன – நான் ஸ்ரீ எம்பெருமானுடைய ஆஸ்ரித பஷ பாதத்தை அனுசந்தித்துத் தரித்தேன் -என்கிறார்- ஈஸ்வரன் அசத்திய பிரதிஞ்ஞனாய்-ரஷிப்பான் ஆனபின்பு நம்முடைய சத்ய தபஸ் சமாதிகளைக் கொண்டு என் என்கை நயாசோ நாம பகவதி – -இஸ் ஸ்லோகத்தில் நினைத்த உரம் இப் பாட்டால் சொல்லுகிறது- 16 | நிலைமன்னும் என்னெஞ்சம் அந்நான்று, தேவர்
தலைமன்னர் தாமேமாற் றாக, – பலர்மன்னர்
போர்மாள வெங்கதிரோன் மாயப் பொழில்மறைய
தேராழி யால்மறைத்தா ரால். | பதவுரை Show / Hideஅந்நான்று,Annantru - பாரதயுத்தம் நடந்த அக்காலத்து (- (மறைத்தாரால் (ஸூர்யனை) மறைத்த பெருமானாலே)) தேவர் தலை மன்னர் தாமே,Thevar Thalai Mannar Thaame - தேவாதிதேவனான தானே மாற்று ஆக,Maatru Aaga - எதிரியாயிருந்து கொண்டு பல மன்னர்,Pala Mannar - பல அரசர்கள் போர்,Por - யுத்தக்களத்தில் மாள,Mala - மடிந்து வெம் கதிரோன்,Vem Kadhiron - ஸூர்யன் மாய,Maya - (அகாலத்தில்) அஸ்தமிக்கும்படி யாகவும் பொழில் மறைய,Pozhil Maraiya - பூமண்டலம் முழுதும் இருள் மூடும்படியாகவும் தேர் ஆழியால்,Ther Azhiyal - சக்கராயுதத்தினால் என் நெஞ்சம்,En Nenjam - எனது (சஞ்சமான) மனமானது நிலை மன்னும்,Nilai Mannum - சலிப்பற்று நிலை நிற்கப் பெற்றது. |
| 2405 | நான்முகன் திருவந்தாதி || ஆஸ்ரிதருடைய கார்யங்களை யாவர்களிலும் காட்டில் தான் அதுக்கு அபிமானியாய் முடித்துக் கொடுக்கும் படியை யருளிச் செய்கிறார் – நீர் சொன்னபடியே பக்தியைப் பிறப்பித்து ரஷியா நின்றோமே -என்ன யுகம் தோறும் சத்வாதி குணங்களுடைய சேதனருடைய ருசிக்கு அநு குணமாகப் பிறந்து- அவர்கள் கார்யம் தலைக் காட்டிற்று இல்லையோ -என்கிறார் -என்றுமாம்- 24 | நிகழ்ந்தாய் பால்பொன் பசுப்புக் கார்வண்ணம்
நான்கும் இகழ்ந்தா யிருவரையும் வீயப் – புகழ்ந்தாய்
சினப்போர்ச் சுவேதனைச் சேனா பதியாய்
மனப்போர் முடிக்கும் வகை. | பதவுரை Show / Hideபால் பொன் பசுப்பு கார் நான்கு வண்ணமும்,Paal Pon Pasuppu Kaar Naanthu Vannamum - வெண்மை சிவப்பு பசுமை கறுப்பு ஆகிய நான்கு வர்ணங்களையும்டையனாய்க் கொண்டு நிகழ்ந்தாய்,Nigazhndhai - (நான்கு யுகங்களிலும்) அவதரித்தாய் இருவரையும்,Irivaraikum - மதுகைடபர்களாகிற இரண்டு அசுரர்கள் வீய,Veeya - தொலையும்படி இகழ்ந்தாய்,Ikazhndhai - வெறுத்தாய் சேனாபதி ஆய்,Senapathi Aay - அர்ஜுநனுடைய ஸேனைக்கு ரக்ஷகனாய்க் கொண்டு மனம்,Manam - த்ரௌபதியின் கூந்தலை முடிப்பிக்க வேணுமென்று) மநோரதங் கொண்டிருந்த படியே போர்,Por - பாரதயுத்தம் முடிக்கும் வகை,Mudikkum Vagai - தலைக்கட்டும்படி சினம் போர் சுவேதனை,Sinam Por Suvedhanai - சீறிக்கொண்டு யுத்தத்தில் இழியும் ஆண்புலியான அர்ஜுன்னை புகழ்ந்தாய்,Pugazhndhai - கொண்டாடினாய் |
| 2452 | நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு உபாயமாக அருளிச் செய்த ஸ்ரீ கீதையை அறிவு கேட்டாலே அப்யசிப்பார் இல்லை -என்கிறார்- பிரளயம் கொண்ட பூமியை எடுத்து ரஷித்தது அறியாது இருந்த அளவேயோ – சம்சார பிரளயத்தில் நின்றும் எடுக்க அவன் அருளிச் செய்த வார்த்தையைத் தான் அறியப் போமோ -என்கிறார் 71 | சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்,
ஆயன் துவரைக்கோ னாய்நின்ற- மாயன்,அன்
றோதிய வாக்கதனைக் கல்லார், உலகத்தில்
ஏதிலராய் மெய்ஞ்ஞான மில். | பதவுரை Show / Hideசிறியன்,Siriyan - (ஸ்ரீகிருஷ்ணனென்கிற) சிறு பிள்ளையாய்க் கொண்டு அணியன்,Aniyan - ஸுலபனாயும் மிக பெரியன்,Miga Periyan - (அந்நிலையிலேயே) மிகவும் பெரியவனாய்க்கொண்டு சேயன்,Seyyan - எட்டாதவனாயும் (இவ்விரண்டு படிகளுக்கும் உதாரணமாக) ஆயன் ஆய் நின்ற,Aayan Aay Nindra - இடைப்பிள்ளையாய்ப் பிறந்த சிறுமையையுடையனாயும் துவரை கோன் ஆய்நின்ற,Thurai Kon Aay Nindra - த்வாரகாபுரிக்குத் தலைவனாய் நின்ற பெரு மேன்மையை யுடையவனாயு மிகுந்த மாயன்,Maayan - எம்பெருமான் அன்று,Andru - (பாரதயுத்தம் நடந்த) அக்காலத்தில் ஓதிய,Othiya - (திருத்தேர்த்தட்டில் அர்ஜுநனைக் குறித்து) அருளிச்செய்த வாக்கு அதனை,Vaakku Adhanai - (சரமச்லோகமாகிய) அந்தத் திரு வாக்கை கல்லார்,Kallaar - அதிகரிக்கப் பெறாதவர்கள் மெய் ஞானம் இல்,Mei Gyaanam Il - தத்துவவுணர்ச்சி யற்ற ஏதிலர் ஆம்,Aedhilar Aam - பகவத் விரோதிகளாவர். |
| 2475 | நான்முகன் திருவந்தாதி || சீலமில்லாச் சிறியேனாயினும் அடியேன் பக்கல் அருள் செய்ய வேண்டும் – குற்றமே வடிவாக உள்ளவர்களை இகழ்ந்து ஒழிய வேண்டுமே அன்றி கைக் கொள்வது தகாது என்று திரு உள்ளம் பற்றலாகாது – வேப்பிலை கைக்கும் என்றாலும் இத்தை கறியாகச் சமைத்து உட் கொள்ள வேணும் என்னும் விருப்புடையார்க்கு அது கறி யாகும் அன்றோ -அப்படியே தெரிந்தவர்கள் என்னைக் கைக் கொள்ளுவார்கள் – மெய் தெளிந்தார் என் செய்யார் –எது நினைத்தாலும் செய்யக் கூடியவர்களே அடியேனுடைய குற்றங்களை நற்றமாகவே கொண்டோ -அல்லது அவற்றில் திருக் கண் செலுத்தாமலோ அடியேனை விஷயீ கரித்து அருள வேணும் – அத்யந்த ஹேயன் ஆகிலும்-என்னை விஷயீ கரித்து அருள வேணும் என்னிலும் தண்ணி யாரையும்-யதிவா ராவணஸ்வயம்-என்னும்படியே வஸ்து ஸ்த்திதி அழகியதாக அறியுமவர்கள் என்றும்-விஷயீ கரிக்கப் படுமவர் என்கிறார்- 94 | மெய்தெளிந்தா ரெஞ்செய்யார்? வேறானார் நீறாக
கைதெளிந்து காட்டிக் களப்படுத்து, பைதெளிந்த
பாம்பின் ஆனையாய். அருளாய் அடியேற்கு
வேம்பும் கறியாகும் ஏன்று. | பதவுரை Show / Hideவேறு ஆனார்,Veeru Aanaar - வேறுபட்டவர்களான (பகைவர்களான) துரியோதநாதிகள் நீறு ஆக,Neeru Aaga - சாம்பலாய் ஒழிந்து போம்படியாக தெளிந்து,Thelindhu - (ஆச்ரித விரோதிகளைக் கொல்லுதல் தருமமே என்று) தேறி தெளிந்த பை பாம்பு இன்அணையாய்,Thelindha Pai Paambu Inanaiyaai - விளங்குகின்ற படங்களை யுடைய ஆதிசேஷனாகிற இனிமையான படுக்கையைச் சென்று சேர்ந்த பிரானே! அடியேற்கு,Adiyeerkku - அடியேனுக்கு அருளாய்,Arulaai - அருள்புரிய வேணும் என்று,Endru - வேணுமென்று விரும்பினால் கைகாட்டி,Kaik Kaatti - (பாண்டவர்களுக்கு) வேண்டிய உதவிகளைச் செய்து களம படுத்து,Kalama Paduthu - (அந்த எதிரிகளைப் போர்களத்தில் கொன்றொழித்து) (இவ்வகையாலே மண்ணின்பாரம் நீக்கி) வேம்பும் கறி ஆகும்,Vembum Kari Aagum - வேப்பிலையும் கறியாகச் சமைத்துக் கொள்ள கூடியதே மெய் தெளிந்தார்,Mei Thelindhaar - உள்ளதை உள்ளபடியறியுமவர்கள் என் செய்யார்,En Seyyaaar - எதுதான் செய்யமுடியாதவர்கள் (எது நினைத்தாலும் செய்யக்கூடியவர்களே) |
| 2554 | திருவிருத்தம் || 77 | திங்களம் பிள்ளை புலம்பத்தன் செங்கோ லரசுபட்ட
செங்களம் பற்றிநின் றெள்குபுன் மாலை,தென் பாலிலங்கை
வெங்களம் செய்தனம் விண்ணோர் பிரானார் துழாய்துணையா
நங்களை மாமைகொள் வான்,வந்து தோன்றி நலிகின்றதே. | பதவுரை Show / Hideதிங்கள், Thingal - பிறைச் சந்திரனாகிய அம்பிள்ளை, Ambillai - அழகிய தனது இளம்பிள்ளை புலம்ப, Pulamba - (தந்தையை இழந்து) தனிப்பட செங்கோல் தன் அரசுபட்ட, Chengol Than Arasupatta - சிவந்த ஒளியை எங்குந்தடையறச் செய்துதலாகிய செங்கோள்மையையுடைய தனது தலைவனான ஸூர்யன் இறந்தொழிதற்கிடமான செம் களம், Chem Kalam - செவ்வானமாகிய (ரத்தத்தாற்) சிவந்த போர்க்களத்தை பற்றி, Patri - அடைந்து நின்று, Ninru - (நீங்கமாட்டாமல் அங்கு) நின்று என்கு, Enku - வருந்துகிற புல்மாலை, Pulmalai - சிறுமைப்பட்ட மாலைப்பொழுதாகிய பெண்பால் தென்பால் இலங்கை, Thenpal Ilangai - தெற்குத் திக்கிலுள்ள லங்காபுரியை வெம் களம்செய்த, Vem Kalamseitha - கொடிய போர்க்களமாகச் செய்த நம் விண்ணோர் பிரானார், Nam Vinnor Piranar - நமது வோதி தேவனான தலைவனது துழாய், Thuzhai - திருத்துழாயை துணை ஆ, Thunai Aa - தனக்குத் துணையாகக் கவர்ந்து கொள்வதற்கு நங்ககளை மாமை கொள்வான், Nangagalai Mamaik Kolvvan - நமது மாமை நிறத்தைக் கவர்ந்துகொள்வதற்கு வந்து தோன்றி நலிகின்றது, Vandhu Thondri Nalikinrathu - எதிரில் வந்து தோன்றி வருந்துகின்றது |
| 2586 | பெரிய திருவந்தாதி || 2 | புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம்-இகழோம்
மற்றெங்கள் மால். செங்கண்மால். சீறல்நீ, தீவினையோம்
எங்கள்மால் கண்டாய் இவை. | பதவுரை Show / Hideஎம் கண், Em Kan - எங்களிடத்தில் (- (ஆக இப்படிப்பட்ட உண்மையை நாங்கள் நன்கு அறிந்திருந்தும் உன்னைப் புகழாமலாவது மதியாமலாவது இருக்கப் போகிறதில்லை; புகழ்வதும், மதிப்பதும் செய்யத்தான் போகிறோம்.)) மால், Maal - வ்யாமோஹகத்தையுடைய செம் கண் மால், Sem Kan Maal - புண்டரீகாக்ஷனான பெருமானே, புகழ்வோம், Pugazhvom - (ஒருவராலும் புகழ்ந்து முடிக்கவொண்ணாத உன்னை அற்ப ஞானிகளான நாங்கள்) புகழ்தோமாகில் பழிப்போம், Pazhippom - (அயோக்யர் புகழ்வது புகழ்ச்சியன்றாதலால் உன்னை நாங்கள் பழித்தவர்களாகவே ஆய்விடுவோம்; புகழோம், Pugazhom - (இவ்வுண்மையைத் தெரிந்து கொண்டு) புகழாதிருந்தோமாகில் பழியோம், Pazhiyom - உன்னைப் பழித்தவர்களாக ஆக மாட்டோம்; மதிப்போம், Mathippom - உன்னைச் சிறந்தவனாக நெஞ்சால் நினைத்தோமாகிலும் இகழ்வோம், Ikazhvom - உன்னை அகௌரவப்படுத்தினவர்களாக ஆய்விடுவோம்; மதியோம், Madhiyom - அப்படி நெஞ்சால் நினையாதிருந்தோமாகில் இகழோம், Ikazhom - அகௌரவப்படுத்தாதவர்களாக ஆவோம்; நீ சீறல், Nee Seeral - நீ கோபங்கொள்ளலாகாது; இவை, Ivai - புகழ நினைப்பதும் (பிறகு) புகழலாகாதென்று பின் வாங்குவதுமாகிற இவை தீ வினையோம் எங்கள் மால் கண்டாய், Thee Vinaiyom Engal Maal Kandaai - மஹாபாவிகளான எங்களுடைய ப்ரமமேயாம். |
| 2603 | பெரிய திருவந்தாதி || 19 | சொல்லில் குறையில்லைச் சூதறியா நெஞ்சமே,
எல்லி பகலென்னா தெப்போதும்,-தொல்லைக் கண்
மாத்தானைக் கெல்லாமோர் ஐவரையே மாறாக,
காத்தானைக் காண்டும்நீ காண். | பதவுரை Show / Hideசூது அறியா நெஞ்சமே, Soodhu Ariyaa Nenjamai - செய்ய வேண்டியது இன்னதென்றறியாமல் தளும்புகிற மனமே! (- (மெய்யே காண விரும்பினால்)) சொல்லில் குறை இல்லை, Sollil Kurai Illai - பகவத் விஷயத்தைப் பேசினால் பேச்சில் குறையில்லை; (அல்லது) நமக்கொரு குறையில்லை; தொல்லை கண், Thollai Kan - அநாதியான இப்பூமியில் மா தானைக்கு எல்லாம், Maa Thanaikku Ellam - (துரியோதநாதிகளுடைய) பெரிய சேனைகளுக்கெல்லாம். ஓர் ஐவரையே மாறு ஆக, Oor Aivaraie Maaru Aaga - பஞ்சபாண்டவர்களே எதிரிகளாம் படி எல்லி பகல் என்னாது எப்போதும் காத்தானை, Elli Pagal Ennaadhu Eppodhum Kaathaanai - இரவுபகலென்னாமல் எக்காலத்திலும் ரக்ஷித்துக் கொண்டிருந்த பெருமானை காண்டும், Kaandum - காண்போம்! நீ காண், Nee Kaan - நீ காணலாம். |
| 2673 | சிறிய திருமடல் || 8 | தன் சீதைக்கு
நேர் ஆவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை
கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம்
சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையால் வைதேவி காரணமா
ஏர் ஆர் தடந் தோள் இராவணனை ஈர் ஐந்து
சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால் | பதவுரை Show / Hideதன் சீதைக்கு நேர் ஆவன் என்று, Than Seethaikku Neer Aavan Endru - தனது தேவியான பிராட்டியோடே நான் ஸமானமாவேனென்று நினைத்து ஓர் நிசாசரி வந்தாளை, Oru Nisaasari Vandhaalai - (என்னை மணந்துகொள் என்று சொல்லிக்கொண்டு) ஓடிவந்த சூர்ப்பணகை என்னும் ராக்ஷஸியை கூர் ஆர்ந்த வாளால், Koora Aarntha Vaalal - கூர்மை பொருந்திய கத்தியினால் கொடி மூக்கும் காது இரண்டும் ஈரா விடுத்து, Kodi Mookkum Kaathu Irandum Eera Viduthu - கொடிபோன்ற மூக்கையும் காதையும் அறுத்துத் துரத்தவிட்டு, அவட்கு மூத்தோனை, Avadku Moothonai - அவளுடைய தமையனான கரனை வெம் நரகம் சேரா வகையே சிலை குனித்தான், Vem Naragam Seeraa Vagaivey Silai Kuniththaan - ‘இனி இவன் வேறொரு கொடிய நரகம் போய் வேதனையநுபவிக்க வேண்டியதில்லை‘ யென்னும் படியாக ஸகல நரக வேதனைகளையும் போர்க்களத்திலே அவனுக்குதந்து வில்லை வளைத்துக்கொன்றொழித்தவன் செம்துவர் வாய், Semthuvaar Vaai - மிகவும் சிவந்த அதரத்தை யுடையவளும் வார் ஆர்வணம் முலையாள், Vaar Aarvanam Mulaiyaal - கச்சு அணிந்த அழகிய முலையையுடையவளுமான வைதேவி காரணம் ஆ, Vaidhevi Kaaranam Aa - ஸீதாபிராட்டிக்காக ஏர் ஆர் தட தோள் இராவணனை, Aer Aar Thada Thol Raavanai - அழகிய பெரிய ‘புஜங்களை யுடையனான இராவண்ணை சீர் ஆர் ஈர் ஐந்து சிரம் அறுத்து செற்று, Seer Aar Eer Aindhu Siram Aruththu Settru - சிறந்த பத்துத் தலைகளையும் அறுத்துக் கொன்று உகந்த, Ugantha - (முனிவர்களுடைய விரோதியைத் தீர்த்தோமென்று) திருவுள்ள முகந்த செம் கண் மால், Sem Kan Maal - புண்டரீகாக்ஷன் |
| 2674 | பெரிய திருமடல் || 9 | பின்னும் கரு நெடும் கண் செவ்வாய்ப் பிணை நோக்கின்
மின்னனைய நுண் மருங்குல் வேகவதி என்றுரைக்கும்
கன்னி தன் இன்னுயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டேகத் தான் சென்று அங்கு
அன்னவனை நோக்கா தழித் துரப்பி வாளமருள்
கன்னவில் தோள் காளையைக் கைப் பிடித்து மீண்டும் போய்ப்
பொன்னவிலும் மாகம் புணர்ந்திலளே – | பதவுரை Show / Hideபின்னும், Pinnum - அது தவிரவும் கரு நெடு கண்செம் வாய் பிணை நோக்கின் மின் அனைய நுண் மருங்குல், Karun Nedu Kansem Vaai Pinai Nookkin Min Anaiya Nun Marungul - கறுத்து நீண்ட கண்களையும் சிவந்த வாயையும் மான் போன்ற நோக்கையும் மின்போல் ஸூக்ஷம்மான இடையையும் உடையவளாய் வேகவதி என்று உரைக்கும் கன்னி, Vegavathi Endru Uraikkum Kanni - வேகவதியென்று சொல்லப்படுபவளான ஒரு பெண்பிள்ளை தன் இன் உயிர் ஆம் காதலனை காணாது, Than In Uyir Aam Kaadhalanai Kaanadhu - தனது இனிய உயிர்போன்ற கணவனைத்தான் காண வொட்டாமல் தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக, Thannudaiya Mun Thondral Kondu Eka - தனது தமையன்(தடுத்துத்) தன்னைக் கொண்டுபோக அங்கு, Angu - அவ்வவஸ்தையிலே அன்னவனை, Annavanai - அந்தத் தமையனை நோக்காது, Nookkadhu - லக்ஷியம் பண்ணாமல் தான் சென்று, Thaan Sendru - தான் பலாத்காரமாகப் புறப்பட்டுப்போய் வாள் அமருள், Vaal Amarul - பெரிய போர்க்களத்திலே கல் நவில் தோள் காளையை, Kal Navil Thol Kaalaiyai - மலைபோல் திண்ணிய தேர்களையுடையவனும் காளை போல் செருக்குற்றிருப்பவனுமான தனது காதலனை அழித்து உரப்பி, Azhiththu Urappi - இழிவான சொற்களைச் சொல்லி அதட்டி கை பிடித்து, Kai Pidiththu - பாணிக்ரஹணம் செய்து கொண்டு மீண்டும் போய், Meendum Poi - அங்கிருந்து ஸ்வஸதாநந்திலே போய்ச் சேர்ந்து பொன் நவிலும் ஆகம், Pon Navilum Aagam - (அக்காதலனுடைய) பொன் போன்ற மார்பிலே புணர்ந்திலளே, Punarndhilale - அணையப்பெற்றாளில்லையோ? |
| 2674 | பெரிய திருமடல் || 10 | பூம் கங்கை
முன்னம் புனல் பரக்கும் நன்னாடன் மின்னாடும்
கொன்னவிலும் நீள் வேல் குருக்கள் குலமதலை
தன்னிகர் ஒன்றில்லாத வென்றித் தனஞ்சயனைப்
பன்னாக ராயன் மடப்பாவை பாவை தன்
மன்னிய நாண் அச்சம் மடம் என்றிவை அகலத்
தன்னுடைய கொங்கை முக நெரியத் தானவன் தன்
பொன்வரை யாகம் தழீ இக் கொண்டு போய்த் தனது
நன்னகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்
முன்னுரையில் கேட்டு அறிவது இல்லையே – | பதவுரை Show / Hideபூ கங்கை புனல் முன்னம் பரக்கும் நல் நாடன், Poo Gangai Punal Munnam Parakkum Nal Naadan - அழகிய கங்காநதியின் தீர்த்தம் முன்னே ப்ரவஹிக்கப்பெற்ற சிறந்த நாட்டுக்குத் தலைவனும் மின் ஆடும் கொல்நவிலும் நீள்வேல், Min Aadu Kolnavilum Neelvael - ஒளியையுடையதும் கொலைத் தொழிலைக் கற்றதும் நீண்டதுமான வேலாயுத்த்தைக் கையிலே உடையவனும் குருக்கள் குலம் மிதலை, Kurukkal Kulam Mithalai - குருராஜ வம்சத்தில் தோன்றினவனும் தன் நிகர் ஒன்று இல்லாத வென்றி, Than Nigar Ondru Illadha Vendri - ஒப்பற்ற வெற்றி பொருந்தி தனஞ்சயனை, Thananjayanai - அர்ஜுநனை பன்னாகராயன் மடம் பாவை, Pannagarayan Madham Paavai - கௌரவ்ய்னென்னும் ஸர்ப்ப ராஜனுடைய பாவை தன் மன்னிய நாண் அச்சம், Paavai Than Manniya Naan Acham - ஸ்த்ரீத்வத்திற்குப் பொருந்தின நாண் மடமச்சம் முதலிய குணங்கள் நீங்கப்பெற்று தன்னுடைய கொங்கை முகம் நெரி, Thannudaiya Kongai Mugam Neri - தனது கொங்கையின் முகம் நெறிக்கப்பெற்று தான், Thaan - (வெட்கத்தை விட்டுத்) தானாகவே நயந்து, Nayandhu - ஆசைப்பட்டு அவன் தன், Avan Than - அவ்வர்ஜுநனுடைய பொன்வரை ஆகம், Ponvarai Aagam - அழகிய மலைபோன்ற மார்பை தமீஇக் கொண்டு, Thameek Kondu - ஆலிங்கனஞ் செய்துகொண்டு தனது நல் நகரம் போய் புக்கு, Thanathu Nal Nagaram Poi Pukku - தன்னுடைய தழகான ஸ்தாநத்திலே (நாகலோகத்திலே) போய்ச் சேர்ந்து இனிது வாழ்ந்ததுவும், Inidhu Vazhndhadhuvum - ஆனந்தமாக வாழ்ந்தாளென்பதையும் முன் உரையில கேட்டு அறிவது இல்லையே, Mun Urayil Kaettu Arivathu Illaiye - மஹாபாரத்தில் நீங்கள் கேட்டறிந்த்தில்லையா? |
| 2674 | பெரிய திருமடல் || 12 | மற்றிவை தான்
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என்னுரைக்கேன்
மன்னு மலை யரையன் பொற்பாவை வாணிலா
மின்னு மணி முறுவல் செவ்வாய் யுமை என்னும்
அன்ன நடைய வணங்கு நுடங்கிடை சேர்
பொன்னுடம்பு வாடப் புலன் ஐந்தும் நொந்த அகலத்
தன்னுடைய கூழைச் சடாமாரம் தான் தரித்து ஆங்கு
அன்ன வரும் தவத்தினூடு போய் ஆயிரம் தோள்
மன்னு கர தலங்கள் மட்டிடித்து மாதிரங்கள்
மின்னி யெரி வீச மேல் எடுத்த சூழ கழற்கால்
பொன்னுலகம் எழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப
மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்
தன்னினுடனே சுழலச் சுழன்று ஆடும்
கொன்னவிலும் மூவிலைக் வேற்கூத்தன் பொடியாடி
அன்னவன் தன் பொன்னகலம் சென்று ஆங்கு அணைந்து இலளே
பன்னி யுரைக்கும் கால் பாரதமாம்- | பதவுரை Show / Hideஏழைகள், Ezhaigal - அவிவேகிகளை! மற்று இவை தான் என்னாலே கேட்டீரே, Mattru Ivai Thaan Ennaale Kaettire - இன்னும் இப்படிப்பட்ட உதாஹரணங்களை கேட்க விருக்கிறீர்களோ? என் உரைக்கேன், En Uraikkaen - (உங்களுக்கு) எவ்வளவு சொல்லுவேன்? (இன்னும் ஒரு உதாஹரணம் சொல்லுகிறேன் கேளுங்கள்) மன்னு மலை அரையன் பொன்பாவை, Mannu Malai Arayan Ponpavai - (சலிப்பிக்க வொண்ணாமல்) நிலைநின்ற பர்வதராஜனான ஹிமவானுடைய சிறந்த பெண்ணாய் வாள் நிலா மின்னு மணி முறுவல் செம் வாய், Vaal Nila Minnu Mani Muruvai Sem Vaai - ஒளிபொருந்திய நிலாப்போல் விளங்குகின்ற அழகிய புன்னகையையுடைய சிவந்த அதரத்தையுடையளாய் உமை என்னும், Ummai Ennum - உமா என்னும் பெயரையுடையளாய் அன்னம் நடையை அணங்கு, Annam Natai Anangu - அன்ன நடையை யுடையளான (பார்வதி யென்கிற) தெய்வப் பெண்ணானவள் தன்னுடையகூழை, Thannudaiyakuzhai - தனது மயிர் முடியை சடாபாரம் தான் தரித்து, Sadaparam Thaan Thariththu - தானே ஜடா மண்டலமாக்கித் தரித்துக்கொண்டு நுடங்கு இடைசேர்பொன் உடம்பு வாட, Nudangu Idaiserpon Udam Vada - துவண்ட இடையோடு சேர்ந்த அழகிய உடம்பு வாடவும் புலன் ஐந்தும் நொந்து அகல, Pulan Aindhum Nondhu Akala - இந்திரியங்கள் ஐந்தும் வருந்தி நீங்கவும் ஆயிரம் தோள் மன்னுகாதலங்கள் மட்டித்து, Aayiram Thol Mannukathalangal Mattithu - (சிவன் தனது) ஆயிரம் புஜங்கள் பொருந்திய கைகளை (த்திசைகளிலே) வியாபிக்கச் செய்து, மாதிரங்கள் மின்னி எரி வீச, Madhirangal Minni Eri Veesa - திக்குகள் மின்னி நெருப்புப் பொறி கிளம்பும்படியாக மேல் எடுத்த, Mel Edutha - மேற்புறமாகத் தூக்கின கழல் சூழ் கால், Kazhal Soozh Kaal - வீரக்கழலணிந்த ஒரு பாதமானது பொன் உலகம் ஏழும் கடந்து, Pon Ulagam Ezhum Kadandhu - மேலுலகங்களை யெல்லாம் அதிக்கிரமித்து உம்பர் மேல் சிலும்ப, Umbar Mel Silumba - மேலே மேலே ப்ரஸரிக்கும் படியாக (ஒற்றைக்காலை உயரத்தூக்கி) மன்னு குலம் வரையும் மாருதமும் தாரகையும் தன்னினுடைனே சுழல, Mannu Kulam Varaiyum Maruthamum Thaarakaiyum Thanninudainae Suzala - ஸ்திரமாக நிற்கிற குல பர்வதங்களும் காற்றும் நக்ஷத்திரங்களும தன்னோடு கூடவே சுழன்றுவர சுழன்று ஆடும், Suzhandru Aadu - தான் சுழன்று நர்த்தனஞ் செய்பவனும் கொல் நவிலும் மூ இலை வேல், Kol Navilum Moo Ilai Vel - கொலைத்தொழில் புரிகின்ற மூன்று இலைகளை யுடைதான சூலத்தை யுடையவனும் கூத்தன், Kooththan - கூத்தாடியென்று ப்ரஸித்தனுமான அன்னவன் தன், Annavan Than - அப்படிப்பட்ட சிவபிரானுடைய பொன் அகலம் சென்று அணைந்திலளே, Pon Akalam Sendru Anaindhilale - அழகிய மார்பைக்கிட்டி ஆலங்கனம் செய்து கொள்வில்லையா? பன்னி உரைக்குங் கால், Panni Uraikkum Kaal - (இப்படிப்பட்ட உதாஹரணங்களை இன்னும்) விஸ்தரித்துச் சொல்லுகிற பக்ஷத்தில் பாரதம் ஆம், Bharatham Aam - ஒரு மஹாபாரத மாய்தலைக்கட்டும். |
| 2674 | பெரிய திருமடல் || 18 | இது விளைத்த
மன்னன் நறுந்துழாய் வாழ் மார்பன் மா மதி கோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின்
சின்ன நறும் பூந்திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலையிட்டணை கட்டி
மன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து
தென்னுலக மேற்றுவித்த சேவகனை – | பதவுரை Show / Hideஇது விளைத்த மன்ன்ன், Idhu Vilaittha Mannn - (தென்றல் முதலானவை பாதகமாம்படி) இப்படிப்பட்ட நிலைமையை உண்டு பண்ணின மஹாநுபா பாவனாய், நறு துழாய் வாழ் மார்பன், Naru Thuzhai Vaal Maarban - மணம்மிக்க திருத்துழாய் மாலை விளங்குகின்ற திருமார்பை யுடையனாய், முன்னம் மாமதி கோள் விடுத்த முகில் வண்ணன், Munnam Maamathi Kol Vidutha Mukil Vannan - முன்னொருகால் சந்திரனுடைய துன்பத்தைப் போக்கின காளமேக வண்ணனாய், காயாவின் சின்ன நறு பூ திகழ் வண்ணன், Kaayavin Chinna Naru Poo Thigazh Vannan - “காயா” என்னும் செடியிலுண்டான சிறிய மணம் மிக்க பூப்போல் விளங்குகின்ற நிறத்தை யுடையனாய், வண்ணம் போல் அன்ன கடலை, Vannam Pol Anna Kadalai - தன்னுடைய வர்ணம் போன்ற வர்ணத்தையுடைய கடலிலே மலைஇட்டு, Malaiyittu - மலைகளைக் கொண்டெறிந்து அணை கட்டி, Anai Katti - ஸேதுவைக்கட்டி (இலங்கைக்கெழுந்தருளி) மா மண்டு வெம் சமத்து, Maa Mandu Vem Samathu - சதுரங்கபலம் நிறைந்த கொடிய போர்க்களத்தில் மன்னன் இராவணனை, Mannan Iravanai - ராக்ஷஸ ராஜனான ராவணனுடைய பொன் முடிவுகள் பத்தும் புரள, Pon Mudivugal Pathum Purala - அழகிய பத்துத்தலைகளும் (பூமியில் விழுந்து) புரளும்படியாக சரம் துரந்து, Saram Thurandhu - அம்புகளைப் பிரயோகித்து தென் உலகம் ஏற்றவித்த சேவகனை, Then Ulagam Aetravitha Sevakanai - (அவ்விராவணனை) யமலோகமடைவித்த மஹா சூரகனாய். |
| 2674 | பெரிய திருமடல் || 19 | ஆயிரக்கண்
மன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும்
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனைப்
பின்னோர் அரியுருவமாகி யெரி விழித்துக்
கொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே வல்லாளன்
மன்னு மணிக்குஞ்சி பற்றி வர வீரத்துத்
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி அவனுடைய
பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த
மின்னிலங்கு மாழிப் படைத் தடக்கை வீரனை | பதவுரை Show / Hideஆயிரம் கண் மன்னவன் வானமும், Aayiram Kan Mannavan Vaanamum - ஆயிரங்கண்ணனான இந்திரனுடைய ஸ்வர்க்கலோகத்தையும் வானவர் தம் பொன் உலகும், Vaanavar Tham Pon Ulagum - (மற்றுமுள்ள) தேவதைகளின் திவ்ய லோகங்களையும் தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை, Thannudaiya Thol Valiyal Kaikkonda Thanavanai - தனது புஜபலத்தாலே தன் வசமாக்கிக் கொண்ட ஹிரண்யா ஸுரனை பின், Pin - சிறிது காலம் பொறுத்து ஓர் அரி உருவம் ஆதி, Oor Ari Uruvam Aadhi - ஒரு நரசிங்கமூர்த்தியாக அவதரித்து ஏரி விழித்து, Aeri Vizhithu - நெருப்புப் பொறி பறக்கப் பார்த்து, கொல் நலிலும் வெம் சமத்து கொல்லாதே, Kol Nalilum Vem Samathu Kollaadhe - கொடிய போர்க்களதிலே (பகைவரைக்கொல்லுங்கணக்கிலே சடக்கெனக்) கொன்றுவிடாதே வல்லாளன், Vallalan - மஹாபலசாலியான அவ்வசுரனுடைய மணி மன்னு குஞ்சிபற்றி வர ஈர்த்து, Mani Mannu Kunjipatri Vara Eerthu - மணிமயமான கிரீடம் பொருந்திய தலைமயிலைப் பிடித்துக் கிட்ட இழுத்து தன்னுடைய தாள் மேல் கிடாத்தி, Thannudaiya Thaal Mel Kidathi - (அவனைத்) தனது திருவடிகளின் மீது படுக்கவைத்துக் கொண்டு அவனுடைய பொன் அகலம், Avanudaiya Pon Akalam - அவனது அழகிய மார்பை வள் உதிரால் போழ்ந்து, Val Uthiraal Pozhndhu - கூர்மையான நகங்களாலே பிளந்து புகழ் படைத்த, Pugazh Padaitha - (ஆச்ரிதனான ப்ரஹ்லாதனை ரக்ஷித்தானென்கிற) கீர்த்தியைப் பெற்றவனாய் மின் இலங்கும் ஆழிபடை தட கை வீரனை, Min Ilangum Aazhipadai Thad Kai Veeranai - மின்போல் விளங்குகின்ற சுக்கராயுத்த்தைத் தடக்கையிலே உடைய மஹாவீரனாய் |
| 2674 | பெரிய திருமடல் || 28 | மன்னர் பெரும் சவையுள் வாழ வேந்தர் தூதனாய்
தன்னை இகழ்ந்துரைப்பத் தான் முன நாள் சென்றதுவும் | பதவுரை Show / Hideமுனம் நாள், Munam Naal - முன்னொரு காலத்தில் வாழ்வேந்தர் தூதன் ஆய், Vazhvendhar Thoodhan Aayi - பாண்டவர்களுக்குத் தூதனாய் தன்னை இகழ்ந்து உரைப்ப, Thannai Ikazhndhu Uraippa - (கண்டாரங்கலும்) இழிவாகச் சொல்லும்படியாக மன்னர் பெருசவையுள் சென்றதும், Mannar Perusavayul Senrathum - (துரியோதனாதி) அரசர்களுடைய பெரிய சபையிலே சென்றதென்ன |
| 2910 | திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (ஸ்ரீவாமன மூர்த்தியான காலத்தில் தப்பினவர்களையும் விஷயீகரீப்பதற்காக ஸ்ரீக்ருஷ்ணனாய் வந்து அவதரித்த காலத்திலும் தப்பினேனென்கிறார்) 3 | கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3 | பதவுரை Show / Hideகொல்லா,Kolla - கொல்லுகைக்குக் கருவியல்லாமல் பா,Pa - குதிரையை நடத்துவதான கோல்,Kol - சாட்டையே கருவியாக கொலை செய்து,Kolai seydhu - (எதிரிகளை) முடித்து பாரதம் போர்,Bharatham Por - பாரத யுத்தத்தில் எல்லார் சேனையும்,Ellaar senaiyum - (பூமிக்குச் சுமையாயிருந்த) எல்லாப் படைகளையும் இரு நிலத்து,Iru nilathu - இப்பெரிய பூமியில் அவித்த,Avitha - தொலைத்த எந்தாய்,Endhai - ஸ்வாமியே! பொல்லா,Polla - துன்பங்களுக்குக் காரணமான ஆக்கையின்,Aakaiyin - சரீரத்தினுடைய புணர்வினை,Punarvinai - சம்பந்தத்தை அறுக்கல் அரு,Arukkal aru - அறுக்க எண்ணினாலும் அது அறுபடாது: யான்,Yaan - (இதிலே அகப்பட்ட) நான் உன்னை,Unnai - (ஸர்வசக்தனான) உன்னை சார்வது,Saarvadhu - கிட்டுவதாகிய ஓர் சூழ்ச்சி,Or Soozhchi - ஒரு பாயத்தை சொல்லாய்,Sollai - சொல்லியருள் |
| 3062 | திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (பராங்குசநாயகியன் தோழியானவள், ‘இந்நோய் பாண்டவபக்ஷ்பாதியான கண்ணபிரானடியாக வந்ததாகையாலே இதற்கு நீங்கள் பரிஹாரமாக நினைத்துச் செய்கிறவை பரிஹாரமல்ல’ என்று க்ஷேபிக்கிறாள்.) 1 | தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1 | பதவுரை Show / Hideஅன்னை மீர்,Annai meer - தாய்மார்களே! இனி,Ini - இப்படிப்பட்ட நிலைமையான பின்பு தீர்ப்பாரை,Teerpaarai - இந்த நோயைத் தீர்க்க வல்லவர்களை யாம் எங்ஙனம் நாடுதலும்,Yaam engganam naaduthalum - நாம் எவ்விதமாகத் தேடிப்பிடிக்க முடியும்? (முடியாது) ஓர்ப்பால்,Oarpaal - நன்கு நிரூபிக்குமளவில் இ ஓள் நுதல்,Iol nuthal - அழகிய நெற்றியையுடைய இப்பெண்பிள்ளை உற்ற இது,Uttra idhu - அடைந்திருக்கின்ற இந்த நோயானது நல் நோய்,Nal noy - விலக்ஷ்ணமான நோயாகும் ; தேறினோம்,Therinom - திண்ணமாக அறிந்தோம் ; அன்று,Andru - முன்பொருகாலத்திலே போர்,Pour - பாரதப்போரிலே பாகு,Paagu - பாகனாயிருந்து செய்யவேண்டிய காரியங்களை தான் செய்து,Thaan seydhu - தானே முன்னின்று நடத்தி ஐவரை,Aivarai - பஞ்சபாண்டவர்களை வெல்வித்த,Velvitha - ஐயம் பெற்றவர்களாகச் செய்வித்த மாயம்,Mayam - ஆச்சரிய சத்தியுக்தரும் போர் தேர் பாகனார்க்கு,Pour ther paaganaarkku - யுத்தபூமியில் தேர்செலுத்தவல்லவருமான பெருமாள் விஷயத்திலே இவள்,Ival - இப்பராங்குச நாயகியினுடைய சிந்தை,Sindhai - மனமானது துழாய்,Thuzhaay - துழாவப்பெற்று திசைக்கின்றதுஎ,Thisaikkindradhue - அறிவழயா நின்றதே! |
| 3216 | திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (கண்ணபிரானுடைய அவதாராதிகளைக் சுருங்கவருளிச் செய்து ‘அந்தோ’! இவை என்னை மருமத்திலே நலியாகின்றனவே; தரித்து உன்னையநுஸந்திக்க முடியவில்லையே! என்று தளர்கின்றார்.) 1 | பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்த னூடு புக்கென தாவியை நின்று நின்று ருக்கி உண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே! உனை என்று கொல் சேர்வதுவே?–5-10-1 | பதவுரை Show / Hideபிறந்த ஆறும்,Pirandha aarum - ஸம்ஸாரிகளைப்போலே தானும் வந்து பிறந்தபடியும் வளர்ந்த ஆறும்,Valarndha aarum - தன்னை மறைத்துக்கொண்டு வளர்ந்தபடியும் பெரிய பாரதம்,Periya Baradham - மஹாபாரத யுத்தத்தில் கை செய்து,Kai seythu - சேனைகளை அணிவகுத்து ஐவர்க்கு,Aivarukku - பஞ்சபாண்டவர்களுக்கு திறங்கள் காட்டி யிட்டு,Thirangal kaatti yittu - வெற்றி வழிகளைக் காட்டிக்கொடுத்து செய்துபோன மாயங்களும்,Seithupona maayangalum - ஆக இப்படிப்பட்ட காரியங்களைச் செய்து முடித்துத் தன் நாமமே சென்று சேர்ந்த மாயங்களும் நிறந்தன் நாடு புக்கு,Niranthan naadu pukku - மருமமான ஹ்ருதய ப்ரதேசத்தினுள்ளே புகுந்து எனது ஆவியை,Enadhu aaviyai - என் ஆத்மாவை நின்று நின்று,Nindru nindru - இடைவிடாதே நின்று உருக்கி உண்கின்ற,Uruki unkindra - சிதிலமாக்கி நஸியா நின்றன; இ சிறந்தவான் சுடரே,E sirandhavaan sudare - இப்படிப்பட்ட சிறப்புப் பொருந்திய அபரிச்சேத்யதேஜோரூபனே! உன்னை சேர்வது என்று கொள்,Unnai saervadhu endru kol - உன்னை நான் கிட்டப் பெறுவது என்றைக்கோ? |
| 3389 | திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (பஞ்சபாண்டவர்களுக்குக் கையாளாயிருந்து இழிதொழில் செய்து பார்த்தஸாரதி யென்று பேர்பெற்றுத்தாழநின்று அநிஷ்டவர்க்கங்களை அகற்றின மஹாகுணத்தைப் பேசுகிறார்.) 9 | மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
தாயம் செறும் ஓரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த்
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே –7-5-9 | பதவுரை Show / Hideதாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க,Thaayam serum oru noorruvar mang - தாயாதி முறையில் சண்டை செய்து கிளர்ந்ததுர்யோதநாதிகள் தொலைய ஓர் ஐவர்க்கு ஆய்,Oru aivarukku aay - விலக்ஷ்ணர்களான பஞ்சபாண்டவர்களுக்காகி தேசம் அறிய,Desam ariya - ஸகலலோக ப்ரஸித்த மாம்படி ஓர் சாரதி ஆய் சென்று,Oru sarathi aay sendru - ஒப்பற்ற ஸாரதியாகப் போய் சேனையை நாசம் செய்திட்டு,Senaiyai naasam seiththittu - எல்லாம் சேனைகளையும் அழியச்செய்து நடந்தநல்வார்த்தை அறிந்தும்,Nadandhanalvaarthai arindhum - தன்னடிச் சோதிக் கெழுந்தருளினானென்கிற நல்வார்த்தையை யறிந்தும் மாயம் அறிபவர்,Maayam aripavar - மிகவும் ஆச்சரியமான பகவத் கதைகளை யறியுமவர்கள் மாயவற்கு அன்றி ஆள் ஆவரோ,Maayavarku anri aal aavaro - அப்பெருமானுக்கல்லது மற்றொருவர்க்கு அடிமையாவரோ? |
| 3450 | திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (பிரானே! நீ உன்னை அடியார்களுக்கு விதேயனாக ஆக்கிவைத்திருக்குமிருப்பு ஒன்று உண்டன்றோ, அதையே நான் சிந்தித்து ஆறியிருப்பது. இப்போது அந்தக் குணத்திலும் அதிசங்கை செல்லாநின்றமையால் தரிக்க மாட்டுகின்றிலேனே! என்செய்வேனென்கிறார்.) 4 | உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான
இவர் உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த அம்மானே
அமரர் தம் அமுதே ! அசுரர்கள் நஞ்சே ! என்னுடை யார் உயிரேயோ !–8-1-4 | பதவுரை Show / Hideஅமர் அது பண்ணி,Amar adhu panni - அப்படிப்பட்ட பாரதயுத்தத்தை நடத்தி, அகல் இடம் புடை சூழ்,Agal idam pudai soozh - பூமிப்பரப்பெங்கும் நிறைந்திருந்த அடு படை,Adu padai - தொலைத் தொழிலில் வல்ல சேனையை அலித்த,Alitha - தொலைத்த அம்மானே,Ammanae - பெருமானே! அமரர் தம் அமுதே,Amarar tham amudhe - தேவர்களுக்கு அமுதம் போன்று உயிர்ப்பிச்சையளிக்குமவனே! அசுரர்கள் நஞ்சை,Asurargal nanjai - அசுரர்கட்கு விஷம் போன்றவனே! என்னுடை ஆர் உயிரே ஓ,Ennudai aar uyirae o - எனக்கு அருமையான உயிர் போன்றவனே! உமர் உகந்து உகந்த உருவம்,Umar uganthu ugantha uruvam - உன்னடியார்கள் எப்போதும் விரும்பிய ரூபமே நின் உருவம் ஆகி,Nin uruvam aaki - நீ கொண்டருளும் ரூபமாகி. உன் தனக்கு அன்பர் ஆனார் அவர்,Un thanakku anbar aanar avar - உன்னுடைய அந்த பகதர்கள் உகந்து அகர்ந்த செய்கை,Uganthu agarndha seygai - உகந்து ஈடு படுகைக்கு இடமாக நீ செய்த செயல்கள் உன் மாயை,Un maayai - உனது ஆச்சர்ய சேஷ்டிதங்கள் (என்று கொண்டிருக்கையாகிற) அறிவு ஒன்றும்,Arivu ondrum - இந்த வொரு அத்யவஸாயத்திலுங்கூட வினையேன் சங்கிப்பன்,Vinaiyen sangippan - பாவியேன் (இவை பொய்யோவென்று) கஙகைகொள்ள வேண்டியவனாகிறேன். |
| 3498 | திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (பிரானே! போலிகண்டு வருந்துமவனாய் நானிருக்க, ஆச்ரிதபக்ஷபாதியான நீ வந்து தோன்றுகின்றிலையே, இது உன் ஸ்வபாவத்திற்குச் சேருமோ? என்கிறார்.) 8 | ஒக்கும் அம்மான் உருவம் என்று
உள்ளம் குழைந்து நாணாளும்
தொக்கமே கப்பல் குழாங்கள்
காணும் தோறும் தொலைவன் நான்
தக்க வைவர் தமக்காயன்று
ஈரைம்பதின்மர் தாள் சாய
புக்க நல் தேர்ப் தனிப் பாகா
வாராயிதுவோ பொருத்தமே–8-5-8 | பதவுரை Show / Hideதொக்க மேகம் பல் குழாங்கள் காணும் தோறும்,Thokka meagam pal kuzhaangal kaanum thorum - திரண்ட மேகங்களின் பல திரள்களைக் காணகிற போதெல்லாம் அம்மான் உருவம் ஒக்கும் என்று,Ammaan uruvam okkum endru - எம்பெருமானுடைய வடிவழகுக்குப் பொலியாயிருக்குமென்று உள்ளம் குழைந்து,Ullam kuzhaindhu - நெஞ்சுருகி நாள் நாளும் நான் தொலைவன்,Naal naalum naan tholaiyan - நாடோறும் நான் கிலேசப்படுவேன் அன்று,Andru - பாரதப்போர் நடந்த வக்காலத்தில் தக்க ஐவர் தமக்கு ஆய்,Thakka aivar thamakku aay - உன்னுறவுக்குத தகுதியான பஞ்ச பாண்டவர்களுக்காக ஈர் ஐம்பதின்மர்,Eer aimpadinthmar - துரியோதனாதிகள் நூற்று வரும் தாள் சாய,Thaal saaya - காலற்றுப் போம்படியாக புக்க,Pukka - சேனையிடையே புகுந்த நல் தேர் தனி பாகா,Nal ther thani paakaa - சிறந்த அத்விதீயனான ஸாரதியானவனே! வாராய்,Vaarai - (அவ்வழகோடே) வருகின்றிலை, பொருத்தம் இதுவோ,Poruththam idhuvo - அடியார் பக்கலில் பொருத்த மிருந்தபடி இதுவோ? |
| 3812 | இராமாநுச நூற்றந்தாதி || 36 | அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன் றாரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டளிப்பப், பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திடத்தானு மவ் வொண் பொருள் கொண்டவர் பின்
படரும் குணன், எம் இராமானுசன் றன் படி யிதுவே | பதவுரை Show / Hideஅடல் கொண்ட நேமியன், Adal Konda Nemiyan - (ஆச்ரித விரோதிகளை அழிக்கவல்ல) மிடுக்கையுடைய திருவாழியை எந்தினவனாய் ஆர் உயிர் நாதன், Ar Uyir Nathan - ஸ்கல ஆச்மாக்களுக்கும் சேஷியான எம்பெருமான் அன்று, Andru - அர்ஜுனனுக்கு ஸாரதியாயிருந்த வக்காலத்தில் ஆரணச் சொல் கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப, Aranach Sol Kadal Konda On Porul Kandu Alippa - வேதங்களாகிற கடலில் மறைந்து கிடந்த நல்ல அர்தங்களை ஆராய்ந்து கீதாமூலமாக) உபதேசிக்க பின்னும், Pinnum - அதற்குப் பின்பும் காசினியோர், Kasinivor - பூமியிலுள்ளவர்கள் இடரின் கண் வீழ்ந்திட, Idarin Kan Vizhndhida - ஸம்ஸார துக்கத்தில் அழுந்திக் கிடக்க, தானாம், Thanam - (எம்பெருமானாராகிற தாமும் அ ஒன் பொருள் கொண்டு, A On Porul Kondo - (முன்பு ஸர்வேச்வரனருளிச் செய்த) அந்தச் சிறந்த அர்த்தங்களைக் கொண்டு அவர் பின்படரும் குணன், Avar Pinpadarum Gunam - அந்த ஸர்ஸாரிகளைப்பின் எம்பெருமானாருடைய வடி இது, Vadi Ithu - ஸ்வபாவம் இது. |
| 3827 | இராமாநுச நூற்றந்தாதி || 51 | அடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட்காய் அன்று பாரதப் போர்
முடியப் பரி நெடுந் தேர் விடுங் கோனை முழுதுணர்ந்த
அடியர்க் கமுதம் இராமானுச னென்னை ஆள வந்திப்
படியிற் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே | பதவுரை Show / Hideஅன்று, Andru - முற் காலத்தில் அடியை தொடர்ந்து, Adiyai Thodarndu - திருவடிகளை அவலம்பித்து எழும், Ezhum - செருக்கிக் கிளர்ந்த ஐவீர்கட்கு ஆய், Aivirkadku Aayi - பஞ்ச பாண்டவர்களுக்காக (பக் ஷபாதம் பூண்டு) பாரதப் போர், Bharatap Por - பாரத யுத்தத்திலே முடிய, Mudiya - (துரியோதநாதிகள்) மாளும் படியாக பரி நெடு தேர், Pari Nedu Ther - குதிரை பூண்ட பெரிய தேரை விடும், Vidum - நடத்தின கோனை, Konai - ஸர்வேஸ்வரனை முழுது உணர்ந்த, Muzhuthu Unarntha - (ஸ்வரூப ஸ்வபாவங்களில் ஒன்றுங் குறையாதபடி) பூர்த்தியாகத் தெரிந்து கொண்ட அடியார்க்கு, Adiyarkku - பாகவதர்களுக்கு அமுதம், Amudham - பரம போக்யமான இப் படியில், Ip Padiyil - இப் பூ மண்டலத்தில் வந்து பிறந்தது என்னை ஆள, Vandhu Pirandhadhu Ennai Aala - வந்து அவதரித்தது (எதற்காக வெனில்) அடியேனை ஆட் கொள்ளுகைக்காகவேயாம்; |
| 3844 | இராமாநுச நூற்றந்தாதி || 68 | ஆரெனக் கின்று நிகர்ச் சொல்லில் மாயன் அன்று ஐவரைத் தெய்வத்
தேரினிற் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினிற் சொன்ன இராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினிற் சென்று பணிந்தது, என்னாவியும் சிந்தையுமே | பதவுரை Show / Hideமாயன், Maayan - ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடைய எம்பெருமான் அன்று, Andru - முற் காலத்தில் ஐயர், Aiyar - பஞ்ச பாண்டவர்களுடைய தெய்வம் தேரினில், Deivam Therinil - தெய்வத் தன்மை பொருந்திய தேரின் மீது (இருந்து கொண்டு) செப்பிய, Seppiya - அருளிச் செய்த கீதையின், Geethaiyin - பகவத் கீதையினுடைய செம்மை பொருள், Semmai Porul - ஸ்வ ரஸமான அர்த்தத்தை தெரிய, Theriya - (அனைவரும் எளிதாகத்)தெரிந்து கொள்ளும் படி பாரினில், Paarinil - இப் பூமிலே சொன்ன, Sonna - (கீதா பாஷ்ய முகத்தாலே) அருளிச் செய்த இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை பணியும், Paniyum - ஆச்ரயித்திருக்கும் நல்லோர், Nallor - விலக்ஷண புருஷர்களுடைய சீரினில், Seerinil - கல்யாண குணங்களிலே என் ஆவியும் சிந்தையும், En Aaviyum Sindhaiyum - எனது ஆத்மாவும் மநஸ்ஸூம் சென்று பணிந்தது, Sendru Panindhathu - சென்று சேர்ந்து விட்டன; சொல்லில், Sollil - சொல்லுமளவில் இன்று, Indru - இக் காலத்தில் எனக்கு ஆர் நிகர், Enakku Aar Nigar - எனக்கு ஆர் ஒப்பாவார்? |