திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1809 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1809பெரிய திருமொழி || (9-7–தந்தை தாய்) (திரு வல்லவாழ்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாண்டவர்களுக்காக பண்டு தன்னை தாழ விட்டு தூது போன மேன்மையை உடையவர் – நம்மை யாரோ ஏவிக் கார்யம் கொள்வார் என்று வந்து நிற்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை —) 2
மின்னு மா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண்ணிடை நுடங்கும் அன்ன மென்னடையினார் கலவியை அருவருத்து அஞ்சினாயேல் துன்னு மா மணி முடிப் பஞ்சவர்க்காகி முன் தூது சென்ற மன்னனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-2
பதவுரை Show / Hide
மின்னும், Minnum - மின்னலையும் (- (நெஞ்சே) (மன்னால் வல்லவாழ் மருவு-))
மா வல்லியும், Maa Valliyum - அழகிய கொடியையும்
வஞ்சியும், Vanjiyum - வஞ்சிக் கொம்பையும்
வென்ற, Vendra - தோற்பித்த
நுண் இடை, Nun Idai - நுட்பமான இடுப்பு
நுடங்கும், Nudangum - துவளும்படியிருப்பவர்களாய்
அன்னம் மென் நடையினார், Annam Men Nadaininar - அன்னம்போல் மெதுவான நடையையுடையரான மாதருடைய
கல்வியை, Kalviyai - புணர்ச்சியை
அருவருத்து, Aruvaruthu - வெறுத்து
அஞ்சினாய்ஏல், Anjinayel - அச்சமுறுவாயாகில்,
முன், Mun - முன்பொரு கால்
துன்னு மாமணி முடி பஞ்சவர்க்கு ஆகி, Thunnu Mamanikudi Panjavarkku Aagi - நெருங்கின சிறந்த ரத்னங்களிழைத்த கிரீடமணியத் தக்க பஞ்சபாண்டவர்களுக்காக
தூது சென்ற, Thoodu Sentra - தூது நடந்த