திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1612 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1612பெரிய திருமொழி || (7-7–திருவுக்கும்) (திருவழுந்தூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இக் கலியுகத்தின் யுடைய ஸ்வ பாவத்தை நான் அழகியதாகக் கண்டேன் – உன் பக்கலிலே வைமுக்யத்தை யுண்டாக்கி -பின்பு விஷய ப்ராவண்யத்தையும் பிறப்பித்து முடிக்கும் சம்சார ஸ்வ பாவத்தை நான் அழகிதாக அறிந்தேன் – எனக்கு ஹிதமாவதும் உன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமதுவே என்று அறிந்தேன்) 5
விண்டான் விண் புக வெஞ்சமத்து அரியாய் பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து பண்டானுய்ய வோர் மால்வரை ஏந்தும் பண்பாளா பரனே பவித்திரனே கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மைக் கருமமாவதும் என்தனக்கு அறிந்தேன் அண்டா நின்னடியன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –7-7-5
பதவுரை Show / Hide
விண்டான், Vindaan - பகைவனான இரணியன் (- (அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!- ;) (நின் அடி அன்றி மற்று அறியேன்-.))
விண் புக, Vin Puga - வீரஸ்வர்க்கம் சென்று சேரும்படி
வெம் சமத்து, Vem Samathu - வெவ்விய போர்க்களத்திலே
அரி ஆய், Ari Aay - நரசிங்கமாய்த் தோன்றி
பரியோன், Pariyon - பருத்தவடிவையுடையனான அவ்விரணியனுடைய
மார்வகம், Marvagam - மார்பை
பற்றி பிளந்து, Patri Pilandhu - பிடித்துக் கிழித்தவனாயும்,
பண்டு, Pandu - முன்பு (க்ருஷ்ணாவதாரத்தில்)
ஆன் உய்ய, Aan Uyy - பசுக்கள் ஜீவிக்கும்படி
ஓர் மால் வரை –  ஓர் மால் வரை, Or Maal Varai Or Maal Varai - ஒரு பெரிய மலையை
ஏந்தும், Aendhum - எடுத்துப்பிடித்த
பண்பாளா, Panpaala - நீர்மையுடையவனே!
பரனே, Parane - சிறந்தவனே!
பவித்திரனே, Paviththiraney - பரிசுத்தனே!
அண்டா, Andaa - அண்டங்கட்கு இறைவனே!
கலியுகத்த தன் தன்மை, Kaliyugath Than Thanmai - இக்கலியுகத்தின் ஸ்வபாவத்தை
நான் கண்டேன், Naan Kandein - நான் தெரிந்து கொண்டேன்;
என் தனக்கு, En Thanakku - எனக்கு
கருமம் ஆவதும், Karumam Aavadhum - செய்யத்க்கதையும்;
அறிந்தேன், Arindhen - அறிந்து கொண்டேன்;