திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1073 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1073பெரிய திருமொழி || (2-3–விற்பெருவிழவும்) (திருவல்லிக்கேணி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வலியார் சிலரை அபாஸ்ரயமாக பற்றினாலும் தானே தாழ நின்று ரஷகனாக வல்லன் என்னும் இடத்தை சொல்லுகிறது- த்ரௌபதிக்கு பர்த்தாகள் உதவிற்று இலர்-அர்ஜுனனுக்கு இந்த்ரன் உதவிற்று இலன் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்) 6
அந்தகன் சிறுவ னரசர்த்த மரசற் கிளையவ னணியிழை யைச்சென்று, எந்தமக் குரிமை செய் எனத் தரியாது எம்பெரு மானருள் என்ன, சந்தமல் குழலாள் அலக்கண்நூற் றுவர்த்தம் பெண்டிரு மெய்திநூ லிழப்ப, இந்திரன் சிறுவன் தேர்முன்நின் றானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. –2-3-6
பதவுரை Show / Hide
அந்தகன் சிறுவன், Andhagan Siruvan - குருடனான த்ருதராஷ்ட்ரனுடைய பிள்ளையாய் (- (திருவல்லிக்கேணி கண்டேன்-.))
அரசர் தம் அரசற்கு, Arasar Tham Arasarkku - ராஜாதி ராஜனென்று தன்னை மதித்திருந்த துரியோதனனுடைய
இளையவன், Ilaiyavan - தம்பியான துச்சாஸநன்
அணி இழையை சென்று, Ani Izhaiyai Sendru - அழகிய ஆபரணங்களையுடையளான த்ரௌபதியிடம் வந்து
எம்தமக்கு உரிமை செய் என, Emthamakku Urimai Sei Ena - “நீ எங்களுக்கு அடிமை செய்யக்கடவை” என்று சொல்ல,
தரியாது, Thariyadhu - (அவள்) பொறுக்க மாட்டாமல்
எம்பெருமான்!, Emperumaan - “ஸ்வாமியான கண்ணபிரானே!
அருள் என்ன, Arul Enna - கிருபை பண்ணவேணும்” என்று ப்ரார்த்திக்க,
சந்தம் அல் குழலாள் அலக்கண், Sandham Al Kuzhalal Alakkan - அழகிய இருண்ட கூந்தலையுடையான அந்த த்ரௌபதியின் மனவருத்தத்தை
நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி, Noorruvar Tham Pendirum Eydhi - துரியோதநாதியர்நூறு பேர்களுடைய மனைவிகளும் அடைந்து
நூல் இழப்ப, Nool Izhappa - தாலியை இழக்கும்படியாக
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை, Indiran Siruvan Ther Mun Nindraanai - இந்திர புத்திரனான அர்ஜூநனுடைய தேரின் முன்னே ஸாரதியாய் நின்ற பெருமானை