திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1666 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1666பெரிய திருமொழி || (8-2–தெள்ளியீர்) (திரு கண்ணபுரம் 2) - (தலைவியின் நிலை கண்ட தாய் தலைமகளை இயற்பழித்தும் தலைமகளது இளமைக்கு இறங்கியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ்ப் பாட்டிலே -என் பேதை மணி நிறம் கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே -என்று நிவாரகர் இல்லாத தேசத்திலே வழி யடிப்பாரைப் போலே முக்த்தையான இவள் நிறத்தை கொள்ள வேணுமோ என்று இவள் சொன்ன வார்த்தையைக் கேட்ட ஸ்ரீ சௌரிப் பெருமாள் – நீர் நம்மை நியமிக்கக் கடவையோ – சர்வச்ய வஸி சர்வச்ய ஈசானா -என்று சர்வர்க்கும் நியாமகராய் நம்மை நியமிக்கக் கடவையோ மடவரல் மாதர் என் பேதை -என்று-உன் மகள் என்றும்-உனக்கு பவ்யை என்றும் -சொன்னாய் அவளை நியமித்துக் கொள்ள மாட்டாயோ – நீ நம்மை நியமிக்க போராய் காண் -என்ன இவள் பருவம் இது-பாவம் இது-ஆனபின்பு என்னால் நியமிக்கலாயோ இருப்பது -என்கிறாள் – இவள் அளவு இதுவாய் இருக்க இவளைப் போலே அவஹாகித்தாள் ஒரு பெண் பிள்ளை வார்த்தையாலே சொன்னாள் இறே அவள் உடைய திருத் தாயார் – முலையோ -இத்யாதி – இவள் அளவு இதுவாய் இருக்க -அவகாஹனம் இருந்த படி என் –அளவன்றி இருந்ததீ-என்றாள் இறே – முலையோ முழு முற்றும் போந்தில – முலை புரைகிற வித்தனை –வளரும் அளவும் செல்ல வரையிட்டதில்லை – இது பருவம் இருந்தபடி – ஸ்ரீ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே – ஸ்ரீ திருமலையை விடாமல் சொல்லா நின்றாள் இது அவகாஹனம் இருந்த படி – இவள் பரமே – இவள் அளவன்றிக்கே இருந்ததீ-என்றாள் இறே – அவளுடைய பருவம் இல்லையே இவளுக்கு அவகாஹனத்திலும் வாசிக மாத்ரமே இறே அவளுக்கு உள்ளது – காயிகத்தால் வந்த அவகாஹனம் உண்டே இவளுக்கு – பங்குக்களாய் இருப்பார்க்கும் அந்தரராய் இருப்பார்க்கும் போக ஒண்ணாதபடி ஸ்ரீ பரமபதத்துக்கு அடுத்து அணித்தாய் அர்ச்சிராதி போலே பெரிய ஏற்றம் ஏற வேண்டி இறே ஸ்ரீ திருமலை இருப்பது அத்தனை துஷ்ப்ராப்யமாய் அன்றே ஸ்ரீ திருக் கண்ண புரம் இருப்பது இருந்தபடியே எல்லார்க்கும் புக்கு அனுபவிக்கலாம் படி இறே ஸ்ரீ திருக் கண்ண புரம் இருக்கிற படி – ஆகையால் இவள் அளவு இதுவாய் இருந்தது – அவகாஹநத்தில் எல்லை இதுவாய் இருந்தது ஆன பின்பு இவளை நியமிப்பார் உண்டோ என்று பொதுவிலே சொல்லுகிறாள் – பெறுவேனோ என்னாதே பெறுவரே -பொதுவிலே மமமத்பக்த பக்தேஷூ ப்ரீதிரப்யதி காபவேத் -என்ற உன்னாலும் இவ்வளவு அவகாஹிக்கப் போமோ) 9
முள் எயிற்று ஏய்ந்திலக் கூழை முடி கொடா தெள்ளியள் என்பதோர் தேசிலள் என் செய்கேன் கள்ளவிழ் சோலைக் கணபுரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே –8-2-9
பதவுரை Show / Hide
முள் எயிறு ஏய்ந்தில, Mul Eiyiru Eiyndhila - முளைக்கின்ற பற்களும் நிரம்பவில்லை;
கூழை முடி கொடா, Koozhai Mudi Koda - கூந்தலும் எடுத்து முடிக்கப்போரும்படி வளர்ந்தனவில்லை;
தெள்ளியள் என்பது ஓர் தேசு இலள், Thelliyal Enbathu Oor Desu Ilal - விவேகமுடையவள் என்று சொல்லும்படியான தேஜஸ்ஸை உடையவளல்லள்
என் செய்கேன், En Seigain - (இப்படிப்பட்ட இவள் விஷயத்தில்) நான் என்ன செய்வேன்!
கள் அவிழ்சோலை, Kal Avizhsolai - மது பெருகுகின்ற சோலைகளையுடைய
கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரத்தை
கை தொழும், Kai Thozhum - கையெடுத்து வணங்குகிற
பிள்ளையை, Pillaiyai - பிள்ளையை
பிள்ளை என்று எண்ணப் பெறுவரே, Pillai Endru Ennap Peruvare - பிள்ளையென்று நினைக்கலாகுமோ? (கௌரவிக்கப்ராதி யுண்டிறே.)