திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 777 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
777ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 26
ஆணினோடு பெண்ணுமாகி அல்லவோடு நல்லவாய் ஊணோடு ஓசை யூறுமாகி யொன்றலாத மாயையாய்ப் பூணு பேணு மாயனாகிப் பொய்யினோடு மெய்யுமாய்க் காணி பேணு மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே
பதவுரை Show / Hide
ஆணினோடு பெண்ணும் ஆகி, Aaninodu Pennum Aagi - புருஷஜாதி, ஸ்த்ரீஜாதி என்ற இரண்டு சாதிக்கும் ப்ரவர்த்தகனாய்
அல்லவோடு நல்ல ஆய், Allavodu Nalla Aay - மேற்சொன்ன இரண்டு ஜாதியிலும் சேராத நபும்ஸக பதார்த்தங்களென்ன இம்மூன்று வகுபபிலும் சிறந்தவையென்ன இவற்றுக்கெல்லாம் நிர்வாஹகனாய்
ஊணொடு ஓசை கூறும் ஆகி, Oonodu Osai Koorum Aagi - ரஸம், சப்தம், ஸ்பர்சம் முதலிய விஷயங்களுக்கு நியாமகனாய்
என்று அலாத மாயை ஆய், Endru Aladha Maayai Aay - உலகிலுள்ள எல்லாப் பொருளாகவும் பரிணமிக்கின்ற ப்ரக்ருதிக்கு நிர்வாஹகனாய்
பூணி பேணும், Pooni Paenum - பசுக்களை மேய்கிக்கிற
ஆயன் ஆகி, Aayan Aagi - இடையனாய்
பொய்யினோடு மெய்யும் ஆய், Poyyinodu Meyyum Aay - பொய்யரான துர்யோதநரதிகன் பக்கலிலே பொய்யனாய் மெய்யரான பாண்டவர் பக்கலிலே மெய்யனாய்
காணிப்பேணும் மாணி ஆய், Kaanippeanum Maani Aay - (மூவடி) நிலத்தை ஆசைப்பட்ட பிரமசாரியாகி
கரந்து சென்ற கள்வனே!, Karandhu Senra Kalvane - (மஹாபலியின் யாக பூமியிலே) க்ருத்ரிமமாக எழுந்தருளின் மாயனே!
உன்னை யார் மதிக்கவல்லர்!, Unnai Yaar Mathikkavallar - உன்னை அளவிடக்கூடியவர்கள் யார்?