| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 0 | திருவாசிரியம் - தனியன் || (காசினியோர்) 33 | காசினியோர் தாம்வாழக் கலியுகத்தே வந்துதித்து ஆசிரியப்பா வதனாலரு மறைநூல் விரித்தானைத் தேசிகனைப் பராங்குசனைத் திகழ்வகுளத் தாரானை மாசடையா மனத்துவைத்து மறவாமல் வாழ்த்துதுமே | Kaasiniyor thaam, காசினியோர் தாம் - பூலோகத்திலுள்ளார் Vaazha, வாழ - உஜ்ஜீவிக்கும்படி Kaliyugathe, கலியுகத்தே - கலியுகத்தில் Vandhu, வந்து - (பரமபதத்தில்நின்றும்) வந்து Udhithu, உதித்து - அவதரித்து Aasiriyapaa athanaal, ஆசிரியப்பா அதனால் - ஆசிரியப்பா என்கிற பாக்களாலே Aru, அரு - அறிவதற்கரிதான Marai, மறை - வேதமாகிற Nool, நூல் - சாஸ்த்ரத்தை Virithaanai, விரித்தானை - விஸ்தரிக்கச் செய்தவராய் Desikanai, தேசிகனை - ஆசார்யராய் Thigazh, திகழ் - விளங்காநின்ற Vagulatharanai, வகுளத்தாரானை - மகிழம்பூமாலையை அணிந்தவரான Parangusanai, பராங்குசனை - நம்மாழ் வாரை Maasu adaiyaa, மாசு அடையா - அஹங்கார மமகாரங்களாகிற அழுக்குச் சேராத Manathu, மனத்து - மநஸ்ஸில் Vaithu, வைத்து - ஸ்த்தாபித்து Maravaamal, மறவாமல் - மறவாதபடி Vaazhthuthum, வாழ்த்துதும் - மங்களாசாஸநம் பண்ணுவோம் |
| 2578 | திருவாசிரியம் || 1 | செக்கர் மா முகில் உடுத்து மிக்க செஞ்சுடர்ப் பரிதி சூடி அஞ்சுடர் மதியம் பூண்டு பல சுடர் புனைந்த பவள செவ்வாய் திகழ்பசுஞ் சோதி மரகத குன்றம் கடலோன் கைமிசை கண் வளர்வது போல் பீதக ஆடை முடி பூண் முதலா மேதகு பல் கலன் அணிந்து சோதி வாயவும் கண்ணவும் சிவப்ப மீது இட்டு பச்சை மேனி மிக பகைப்ப நச்சு வினை கவர் தலை அரவின் அமளி ஏறி எரி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த தாமரை வுந்தி தனி பெரு நாயக மூவுலகு அளந்த சேவடியோயே | பவளம் செம் வாய், Pavalam Sem Vai - பவழங்களாலே சிவந்த இடங்களை யுடையதும் திகழ் பசும் சோதி, Thigal Pasum Sothi - விளங்குகின்ற பசுமையான நிறத்தை யுடையதுமான மரகதம் குன்றம், Maragatham Kuntram - ஒரு பச்சை மா மலையானது, செக்கர் மா முகில் உடுத்து, Chekkar Maa Mukil Uduthu - சிவந்த பெரிய மேகத்தை அரையில் உடுத்துக் கொண்டும் மிக்க செம் சுடர் பரிதி சூடி, Mikka Sem Sudar Parithi Soodi - மிகவும் சிவந்த தேஜஸ்ஸையுடைய ஸூர்யனை சிரஸ்ஸில் அணிந்து கொண்டும் அம்சுடர் மதியம் பூண்டு, Amsudar Madhiyam Poondhu - குளிர்ந்த ஒளியையுடைய சந்திரனைக் கண்ட பூக்ஷணமாக அணிந்து கொண்டும் பல சுடர் புனைந்து, Pala Sudar Punaindhu - (நக்ஷத்திரங்களாகிற) பல தேஜஸ்பதார்த்தங்களையும் (பலவகை ஆபரணங்களாக) அணிந்து கொண்டும் கடலோன் கைமிசை, Kadalon Kaimisai - கடலரசனுடைய கை மேலே கண்வளர்வதுபோல், Kanvalarvathupol - படுத்துக் கொண்டிருப்பது போல பீதக ஆடைமுடி பூண் முதலா மேதகு பல்கலன் அணிந்து, Peethaka Aadaimudi Poon Muthala Methagu Palkalan Anindhu - பீதாம்பரம், திருவபிஷேகம் கண்டிகை முதலான சோதி வாயவும் கண்ணனும் சிவப்ப, Sothi Vayavum Kannanum Sivappa - அழகிய வாயும் கண்களும் சிவந்திருக்கப் பெற்று பச்சை, Pachchai - பசுமையான மேனி, Meeni - திவ்யமங்கள விக்ரஹத்தின் நிறமானது மீதிட்டு மிக பகைப்ப, Meedittu Mika Pagaippa - மற்ற ஒளிகளெல்லாவற்றிற் காட்டிலும் மேலோங்கி மற்ற ஒளிகளோடு எறி கடல் நடுவுள், Eri Kadal Nadhuvul - அலை யெறிகின்ற கடலினிடையே நஞ்சு வினை, Nanju Vinai - விஷத் தொழிலையும் கவர் தலை, Kavar Thalai - கப்புவிட்டுக் கிளர்கின்ற(பல) தலைகளையுமுடைய அரவு, Aravu - திருவனந்தாழ்வானாகிற இன் அமளி ஏறி, In Amali Eri - போக்யமான சயனத்தின் மீது ஏறி அறி துயில் அமர்ந்து, Ari Thuyil Amarnthu - யோக நித்திரையில் அமர்ந்து சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வம் குழாங்கள், Sivan Ayan Indiran Ivar Mudhal Anaithor Deivam Kuzhangal - சிவன் பிரமன் இந்திரன் முதலிய எல்லாத் தேவ ஸமூஹங்களும் கை தொழ கிடந்த, Kai Thozha Kidandha - ஸேவிக்கும்படியாகப் பள்ளி கொண்டிருக்கிற, தாமரை உந்தி தனி பெரு நாயக, Thamarai Undhi Thani Peru Nayaga - தாமரைப் பூவைத் திருநாபியிலே உடைய அத்விதீய ஸர்வேச்வரனே! மூ உலகு அளந்த, Moo Ulagu Alandha - மூன்று லோகங்களையும் அளந்த சே அடியோய், Sae Adiyoy - அழகிய திருவடிகளை யுடையவனே! (வாழ்ந்திடுக!) |
| 2579 | திருவாசிரியம் || 2 | உலகு படைத் துண்ட எந்தை, அறை கழல் சுடர்ப்பூந் தாமரை சூடுதற்கு, அவாவா ருயிருகி யுக்க, நேரிய காதல் அன்பி லின்பீன் தேறல், அமுத வெள்ளத் தானாம் சிறப்பு விட்டு, ஒரு பொருட்கு அசைவோர் அசைக, திருவொடு மருவிய இயற்கை, மாயாப் பெருவிறல் உலகம் மூன்றினொடு நல் வீடு பெறினும், கொள்வதெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே? | உலகு, Ulaku - உலகங்களை படைத்து, Padaithu - ஸ்ருஷ்டித்து உண்ட, Unda - (பிரளய காலத்தில்)விழுங்கிய எந்தை, Endhai - ஸர்வேச்வரனுடைய அறை கழல் சுடர் பூ தாமரை, Arai Kazhal Sudar Poo Thamarai - ஆபரண வொலி பொருந்திய திருவடிகளாகிற அழகிய தாமரை மலர்களை சூடுதற்கு, Soodutharku - சிரோ பூஷணமாக அணிவதற்கு அவாவு, Avaavu - ஆசைப் படுகின்ற ஆர் உயிர், Aar Uyir - அருமையான ஆத்மாவானது உருகி உக்க, Urugi Ukka - நைந்து சிதிலமாக நேரிய, Neriy - (அந் தத்யானத்தால்) ஸம்பவித்த பக்தியாகிய அன்பில், Anbil - ஆசைப் பெருக்கத்தில் உற்பவித்து இன்பு ஈன், Inbu Een - இன்பத்தைக் கொடுக்கிற தேறல், Theral - தேன் போலிருக்கிற (அல்லது, தேனாகிய) அமுதம் வெள்ளத்தான் ஆம் சிறப்பு விட்டு, Amudham Vellathaan Aam Sirappu Vittu - அமிருத ப்ரவாஹத்தில் மூழ்கி யிருக்கையாகிற பெருமையை விட்டிட்டு ஒரு பொருட்டு அசைவோர், Oru Poruttu Asaivor - க்ஷூத்ரமான வொரு பலனுக்காக அலைகின்றவர்கள் அசைக, Asaika - அப்படியே அலையட்டும்; (அவர்களைப் பற்றி நமக்கென்ன கவலை?) திருவோடு மருவிய இயற்கை, Thiruvoadu Maruviya Iyarkai - செல்வத்தோடு எப்பொழுதும் சேர்ந்திருக்கையாகிற நித்ய ஐச்வர்ய நிலைமை யென்ன. மாயா பெரு விறல், Maayaa Peru Viral - அழியாத பெரு மிடுக்கென்ன உலகம் மூன்றினொடு, Ulagam Moondrinodu - மூவுலகுக்கும் நாயகனாயிருக்கை யென்ன நல்வீடு, Nalveedu - உத்தமமான மோக்ஷ பதவி யென்ன (ஆகிய இவற்றை) பெறினும், Perinum - பெறுவதாயிருந்தாலும் தெள்ளியதோர், Thelliyathor - விவேகிகளுடைய குறிப்பு, Kurippu - அந்தரங்கமானது கொள்வது எண்ணுமோ, Kolvathu Ennumo - பெற்றுக்கொள்ள நினைக்குமோ? |
| 2580 | திருவாசிரியம் || 3 | குறிப்பில் கொண்டு நெறிப்பட, உலகம் மூன்றுடன் வணங்கு தோன்று புகழ் ஆணை மெய் பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வனாகி, சுடர் விளங்க கலத்து வரை புரை திரை பொர பெருவரை வெருவர, உருமுரல் ஒலிமலி நளிர்கடற் படவர அரசுஉடல் தடவரை சுழற்றிய, தனிமாத் தெய்வத் தடியவர்க்கினி நாம் ஆளாகவே இசையுங்கொல், ஊழிதோறூழி ஓவாதே | மூன்று உலகம், Moondru Ulagam - மூவுலகங்களும் நெறிபட, Neripada - நல்வழி படி தந்து உஜ்ஜிவிக்கும் படியாக குறிப்பில் கொண்டு, Kurippil Kondo - திருவுள்ளம் பற்றி, உடன் வணங்கு தோன்று புகழ், Udan Vanangu Thondru Pugazh - அவ் வுலகங்களெல்லாம் ஒன்று சேர்ந்து வணங்கப் பெற்றமையால் ப்ரஸித்தமான கீர்த்தியை யுடையனாய் ஆணை மெய் பெற நடாய், Aanai Mey Per Nadai - தனது ஆஜ்ஞையைத் தடையின்றிச் செலுத்துமவனாய் தெய்வம் மூவில் முதல்வன் ஆகி, Deivam Moovil Muthalvan Aagi - மூன்று மூர்த்திகளுக்குள்ளே ப்ரதானனாய் சுடர் விளக்கு அகலத்து, Sudar Vilakku Akalathu - திருவாபரணச் சோதி விளங்குகின்ற திரு மார்பை யுடையனாய், வரை புரை, Varai Purai - மலை போன்ற திரை, Thirai - அலைகள் பொரு, Poru - எறியப் பெற்றதும், பெரு வரை வெருவர, Peru Varai Veruvar - குல பர்வதங்களும் அஞ்சும்படியாக உரம் முரல் ஒலி மலி, Uram Murai Oli Mali - இடி போல் ஒலிக்கின்ற கோஷம் நிறைந்ததும் நளிர், Nalir - குளிர்ச்சியை யுடையதுமான கடல், Kadal - கடலில் படம் அரவு அரசு உடல் தட வரை, Padam Aravu Arasu Udal Thada Varai - படங்களை யுடைய ஸர்ப்ப ராஜனாகிய வாஸுகியின் உடலை (மந்தரமென்கிற) பெரிய மலையிலே சுழற்றிய, Suzhattriya - கட்டிச் சூழற்றினவனாய், தனி, Thani - அத்விதீயனான மர தெய்வம், Mara Deivam - தேவாதி தேவனுடைய அடியவர்க்கு, Adiyavarkku - பக்தர்களுக்கு நாம் இனி ஊழி தோறு ஊழி ஓவாது ஆள் ஆக இசையும் கொல், Naam Ini Oozhi Thoru Oozhi Ovadhu Aal Aaga Isaiyum Kol - நாம் இனி ஸர்வ காலமும் இடையறாது ஆட்ப் பட்டிருக்கப் பொருந்துமா. |
| 2581 | திருவாசிரியம் || 4 | ஊழிதோறூழி ஓவாது வாழியே! என்று யான்தொழ இசையுங் கொல்?, யாவகை உலகமும் யாவரு மில்லா, மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து, இரும்பொருட்கெல்லாம் அரும்பெறல் தனிவித்து, ஒரு தான் ஆகித் தெய்வ நான்முகக் கொழுமுளை ஈன்று, முக்கண் ஈசனொடு தேவுபல நுதலி மூவுலகம் விளைத்த உந்தி, மாயக்கடவுள் மா முதலடியே. | யாவகை உலகமும், Yaavagai Ulagamum - எவ்வகைப்பட்ட லோகங்களும் யாவரும், Yaavarum - எவ்வகைப்பட்ட பிராணிகளும் இல்லா, Illaa - இல்லாமலிருந்த மேல் வரும் பெரு பாழ் காலத்து, Mel Varum Peru Pazh Kaalaththu - கீழ்க் கழிந்த மஹா ப்ரளய காலத்தில் இரு பொருட்கு எல்லாம், Iru Porutkku Ellam - எண்ணிறந்த ஆத்ம வஸ்துக்களுக்கெல்லாம் பெறல் அரு தனி ஒரு வித்து தான் ஆகி, Peral Aru Thani Oru Viththu Thaan Aagi - பெறுதற்கரிய மூவரைக் காரணமும் தானேயாய்க் கொண்டு தெய்வம் நான் முகன் கொழு முளை ஈன்று, Deivam Naan Mughan Kozhu Mulai Eendru - நான்முகக் கடவுளாகிற சிறந்த ஒரு முளையைப் படைத்து முக்கண் ஈசனோடு பல தேவு நுதலி, Mukkan Eeshanodu Pala Thevu Nuthali - முக் கண்ணனான சிவன் முதலி பல தேவங்களை உண்டாக்கி (ஆக இவ் வகையாலே) மூ உலகம் வளைத்த உந்தி, Moo Ulagam Valaitha Unthi - மூன்று லோகங்களையும் உண்டாக்கின திரு நாபியை யுடையவனாய் மாயன், Maayan - ஆச்சர்ய பூதனாய் கடவுள், Kadavul - ஸர்வோத்தமனான ஸ்ரீமந் நாராயணனுடைய மா முதல் அடியே, Maa Mudhal Adiye - (உஜ்ஜீவனத்திற்கு) மூல காரணமான திருவடிகளையே ஓவாது, Ovaadhu - இடைவிடாமல் வாழிய என்று யாம் தொழ இசையும் கொல், Vaazhiya Endru Yaam Thozha Isaiyum Kol - ‘வாழ்ந்திடுக‘ என்று நாம் சொல்லி வணங்கும்படியாக (பாக்கியம்) வாய்க்குமோ. |
| 2582 | திருவாசிரியம் || 5 | மா முதல் அடிப்போ தொன்றுகவிழ்த் தலர்த்தி, மண்முழுதும் அகப்படுத்து, ஒண்சுடர் அடிப்போது ஒன்றுவிண் செலீஇ, நான்முகப் புத்தேள் நாடுவியந் துவப்ப, வானவர் முறைமுறை வழிபட நெறீஇ, தாமரைக் காடு மலர்க் கண்ணோடு கனிவாயுடையதுமாய் இரு நாயிறா யிரம்மலர்ந் தன்ன கற்பகக் காவு பற்பல வன்ன முடிதோ ளாயிரம் தழைத்த நெடியோய்க் கல்லதும் அடியதோ வுலகே? | மா முதல் அடி போது ஒன்று, Maa Mudhal Adi Podhu Ondru - (உலகத்துக்கெல்லாம்) மூலாதாரமாகிய திருவடிகளில் ஒன்றை கவிழ்ந்து அலர்த்தி, Kavizhndhu Alartthi - நில மட்டமாகப் பரப்பி மண் முழுவதும், Man Muzhuvadhum - பூமியை யெல்லாம் அகப் படுத்து, Agap Paduthu - திருவடிக்குள்ளடக்கி ஸ்வாதீனப் படுத்திக் கொண்டும் ஒண் சுடர் அடி போது ஒன்று, Onn Sudar Adi Podhu Ondru - அழகிய தேஜஸ்ஸு நிறைந்த மற்றொரு திருவடித் தாமரையை நான் முகன் புத்தேள் நாடு, Naan Mughan Puththael Naadu - பிரம தேவனுடைய உலகமானது வியந்து உவப்ப, Viyandhu Uvappa - ஆச்சரியமும் ஸந்தோஷமும் அடையும் படியாகவும் வானவர், Vaanavar - மற்றுமுள்ள தேவர்கள் முறை முறை, Murai Murai - சாஸ்திர விதிப்படி வழி பட, Vazhi Pada - ஆராதிக்கும்படி யாகவும் விண்செலீஇ நிறீஇ, Vincheli I Nir I - ஆகாசத்திலே செலுத்தி நிறுத்தி தாமரைக் காடு மலர் கண்ணொடு, Thaamarai K Kaadu Malar Kannodu - தாமரைக் காடு மலர்ந்தாற் போலிருக்கிற திருக் கண்களையும் கனி வாய் உடையதும் ஆய், Kani Vaai Udaiyadhum Aayi - கொவ்வைக் கனி போன்ற திரு அதரத்தையும் உடையவனாயும் இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன, Iru Naayiru Aayiram Malarndhanna - பெரிய ஆயிரம் ஸூர்யர்கள் சேர்ந்து உதித்தாற் போன்ற முடி, Mudi - திரு வபிஷேகத்தை யுடையனாயும் பல பல கற்பகம் காவு அன்ன, Pala Pala Karppagam Kaavu Anna - பல வகைப் பட்ட கற்பகர் சோலைகள் போலே தோற் ஆயிரம் தழைத்த, Thoor Aayiram Thazhaiththa - ஆயிரம் திருத் தோள்களை பணைத்திருக்கப் பெற்றவனாயுமுள்ள நெடி யோய்க்கு அல்லதும், Nedi Yoykku Alladhum - பரம புருஷனான உனக்குத் தவிர (வேறு யார்க்கேனும்) உலகு அடியதோ, Ulaku Adiyatho - இவ் வுலகம் அடிமைப் படக் கூடியதோ? |
| 2583 | திருவாசிரியம் || 6 | ஓஓ. உலகின தியல்வே ஈன்றோளிருக்க மணைநீ ராட்டி, படைத்திடந் துண்டுமிழ்ந்தளந்து, தேர்ந்துல களிக்கும் முதற்பெருங் கடவுள் நிற்ப புடைப்பல தானறி தெய்வம் பேணுதல், தனாது புல்லறி வாண்மை பொருந்தக் காட்டி, கொல்வன முதலா அல்லன முயலும், இனைய செய்கை யின்பு துன்பளி தொன்மா மாயப் பிறவியுள் நீங்கா பன்மா மாயத் தழுந்துமா நளிர்ந்தே. | உலகு, Ulaku - லோகங்களை படைத்து, Padaithu - ஸ்ருஷ்டித்தும் இடந்து, Idandhu - ஒருகால் வராஹா வதாரத்தில்) உத்தரித்தும் உண்டு, Undu - (மற்றொரு கால் பிரளயம் வந்த போது) வயிற்றிலே வைத்து நோக்கியும் உமிழ்ந்து, Umizhndhu - பிறகு வெளிப் படுத்தியும் அளந்து, Alandhu - (பின்னுமொரு கால் த்ரிவிக்ரமனாய்) ஸ்வாதீனப் படுத்திக் கொண்டும் புடை, Pudai - ஏதோவொரு மூலையில் சொல்லப்பட்டும் தான் அறி, Thaan Ari - தான் தோன்றித் தனமாக அறிந்து கொள்ளக் கூடியவும் பல, Pala - வலகைப்பட்டு மிருக்கிற தெய்வம், Deivam - தேவதைகளை பேணுதல், Penuthal - ஆராதிப்பது தனது, Thanathu - தன்னுடைய புல் அறிவாண்மை, Pul Arivaanmai - நீச புத்தியை-பொருந்த காட்டி விளங்கக் காட்டிக்கொண்டு, Vilangak Kaatikondhu - விளங்கக் காட்டிக்கொண்டு ஈன்றோள் இருக்க மணை நீராட்டி, Eendroal Irukka Manai Neeratti - பெற்ற தாய்க்கு ஒரு உபசாரமும் பண்ணாதே வீட்டிட்டு அறிவற்றதொரு மணைக்கட்டைக்கு உபசாரம் பண்ணுவது போல, கொல்வன முதலா, Kolvana Mudhala - ஆடு பலி கொடுத்தல் கோழி பலி கொடுத்தலாகிற ஜீவஹிம்ஸை முதலான அல்லன முயலும், Allana Muyalum - தப்புக் காரியங்களைச் செய்ய நினைக்கையாகிற தேர்ந்து, Therndhu - இப்படியாகவே இன்னும் பல ரக்ஷண வழிகளைச் சிந்தித்துக் கொண்டும் அளிக்கும், Alikkum - (முக்காலங்களிலும்) ரக்ஷித்துக் கொண்டேயிருக்கிற முதல் பெரு கடவுள் நிற்ப, Muthal Peru Kadavul Nirpa - ஸர்வ காரணனும் பராத்பானுமான ஸ்ரீமந்நாராயணன் (அவனை ஆச்ரயித்து உஜ்ஜீவிக்க மாட்டாமல்) இனைய செய்கை, Inaiya Seykai - இப்படிப்பட்ட காரியங்களாயிரா நின்றன அளி, Ali - (அந்த க்ஷுத்ர தெய்வங்களின்) ப்ரஸாதமோ இன்பு துன்பு, Inbu Thunbu - ஸுகமென்று பேர் மாத்திரமான துக்கம் (அதாவது என்னெனில்) தொல், Thol - அநாதியாய் மா, Maa - மஹத்தாய் மாயம், Maayam - ஆச்சரியமான பிறவியுள், Piraviyul - ஸம்ஸாரத்தில் நின்றும் நீங்கா, Neengaa - ஒரு நாளும் நீங்குதலின்றிக்கே பல் மா மாயத்து, Pal Maa Maayathu - பலவகைப் பட்ட வ்யாமோஹ ஜநகங்களான சப்தாதி விஷயங்களிலே நளிர்ந்து அழுந்தும் ஆ ஓஓ உலகினது இயல்வு, Nalirndhu Azhundhum Aa Ooo Ulaginathu Iyalthu - இப்படிப்பட்ட லோகஸ்வபநவம் என்ன பரிதாபம் ஐயோ! (என்கிறார்) |
| 2584 | திருவாசிரியம் || 7 | நளிர் மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிரொளி யிமையவர் தலைவனும் முதலா, யாவகை யுலகமும் யாவரும் அகப்பட, நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும் மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க, ஒரு பொருள் புறப்பா டின்றி முழுவதும் அகப்படக் கரந்து ஓர் ஆலிலைச் சேர்ந்த வெம் பெருமா மாயனை யல்லது,ஒருமா தெய்வம் மற்றுடையமோ யாமே | நளிர்மதி சடையனும், Nalirmadhi Sadayanum - குளிர்ந்த சந்திரனை ஜடையிலே யுடைய சிவனும் நான்முகன் கடவுளும், Naanmugan Kadavulum - பிரமதேவனும் தளிர்ஒளி இமையவர் தலைவனும் முதலா, Thaliroli Himaiyavar Thalaivanum Mudhala - தழைத்த ஒளிபொருந்திய தேவேந்திரனும் ஆகிய இவர்கள் முதலாக யாவரும், Yaavarum - எல்லாப் பிராணிகளும் யாவகை உலகமும், Yaavagai Ulagamum - எல்லா வுலகமும் அகப்பட, Akappada - உட்பட நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும், Nilam Neer Thee Kaal Sudar Iru Visumbum - பூமி ஜலம் அக்நி வாயு, தேஜஸ் ஸுக்களையுடைய மஹத்தான ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களும் மலர் சுடர் பிறவும், Malar Sudar Piravum - சந்திரன் ஸூர்யன் முதலிய மற்றும் சிறந்த தேஜஸ் பதார்த்தங்களும் சிறிது, Siridhu - சிறியதான திருவயிற்றின் ஒரு பக்கத்தில் மயங்க, Mayangka - கலசும்படியாக ஒரு பொருள் புறப்பாடு இன்றி, Oru Porul Purappadu Indri - ஒரு வஸ்துவும் வெளிப்படாதபடி முழுவதும், Muzhavadum - எல்லாப் பொருள்களையும் அகப்பட சுரந்து, Akappada Surandhu - உள்ளேயிட்டு மறைத்து ஓர் ஆல் இலை சேர்ந்த, Or Aal Ilai Serndha - அத்விதீயமான வொரு ஆலந்தளிரிலே பள்ளி கொண்ட எம், Em - எமக்கு ஸ்வாமியாய் பெரு மா மாயனை அல்லது, Peru Maa Maayanai Alladhu - மிகப்பெரிய ஆச்சரியங்களை யுடையனான ஸ்ரீமந் நாராயணனைத் தவிர்த்து மற்று ஒரு மா தெய்வம், Mattru Oru Maa Deivam - வேறொரு க்ஷுத்ர தேவதையை யாம் உடையமோ, Yaam Udaiyamo - நாம் சேஷியாகக் கொள்ளுவோமோ? (கொள்ள மாட்டோம்) |