Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2580 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2580திருவாசிரியம் || 3
குறிப்பில் கொண்டு நெறிப்பட,
உலகம் மூன்றுடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய் பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வனாகி,
சுடர் விளங்க கலத்து
வரை புரை திரை பொர பெருவரை வெருவர,
உருமுரல் ஒலிமலி நளிர்கடற் படவர
அரசுஉடல் தடவரை சுழற்றிய,
தனிமாத் தெய்வத் தடியவர்க்கினி நாம் ஆளாகவே இசையுங்கொல்,
ஊழிதோறூழி ஓவாதே
மூன்று உலகம், Moondru Ulagam - மூவுலகங்களும்
நெறிபட, Neripada - நல்வழி படி தந்து உஜ்ஜிவிக்கும் படியாக
குறிப்பில் கொண்டு, Kurippil Kondo - திருவுள்ளம் பற்றி,
உடன் வணங்கு தோன்று புகழ், Udan Vanangu Thondru Pugazh - அவ் வுலகங்களெல்லாம் ஒன்று சேர்ந்து வணங்கப் பெற்றமையால் ப்ரஸித்தமான கீர்த்தியை யுடையனாய்
ஆணை மெய் பெற நடாய், Aanai Mey Per Nadai - தனது ஆஜ்ஞையைத் தடையின்றிச் செலுத்துமவனாய்
தெய்வம் மூவில் முதல்வன் ஆகி, Deivam Moovil Muthalvan Aagi - மூன்று மூர்த்திகளுக்குள்ளே ப்ரதானனாய்
சுடர் விளக்கு அகலத்து, Sudar Vilakku Akalathu - திருவாபரணச் சோதி விளங்குகின்ற திரு மார்பை யுடையனாய்,
வரை புரை, Varai Purai - மலை போன்ற
திரை, Thirai - அலைகள்
பொரு, Poru - எறியப் பெற்றதும்,
பெரு வரை வெருவர, Peru Varai Veruvar - குல பர்வதங்களும் அஞ்சும்படியாக
உரம் முரல் ஒலி மலி, Uram Murai Oli Mali - இடி போல் ஒலிக்கின்ற கோஷம் நிறைந்ததும்
நளிர், Nalir - குளிர்ச்சியை யுடையதுமான
கடல், Kadal - கடலில்
படம் அரவு அரசு உடல் தட வரை, Padam Aravu Arasu Udal Thada Varai - படங்களை யுடைய ஸர்ப்ப ராஜனாகிய வாஸுகியின் உடலை (மந்தரமென்கிற) பெரிய மலையிலே
சுழற்றிய, Suzhattriya - கட்டிச் சூழற்றினவனாய்,
தனி, Thani - அத்விதீயனான
மர தெய்வம், Mara Deivam - தேவாதி தேவனுடைய
அடியவர்க்கு, Adiyavarkku - பக்தர்களுக்கு
நாம் இனி ஊழி தோறு ஊழி ஓவாது ஆள் ஆக இசையும் கொல், Naam Ini Oozhi Thoru Oozhi Ovadhu Aal Aaga Isaiyum Kol - நாம் இனி ஸர்வ காலமும் இடையறாது ஆட்ப் பட்டிருக்கப் பொருந்துமா.