Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2578 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2578திருவாசிரியம் || 1
செக்கர் மா முகில் உடுத்து மிக்க செஞ்சுடர்ப்
பரிதி சூடி அஞ்சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவள செவ்வாய்
திகழ்பசுஞ் சோதி மரகத குன்றம்
கடலோன் கைமிசை கண் வளர்வது போல்
பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீது இட்டு
பச்சை மேனி மிக பகைப்ப
நச்சு வினை கவர் தலை அரவின் அமளி ஏறி
எரி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த
தாமரை வுந்தி தனி பெரு நாயக
மூவுலகு அளந்த சேவடியோயே
பவளம் செம் வாய், Pavalam Sem Vai - பவழங்களாலே சிவந்த இடங்களை யுடையதும்
திகழ் பசும் சோதி, Thigal Pasum Sothi - விளங்குகின்ற பசுமையான நிறத்தை யுடையதுமான
மரகதம் குன்றம், Maragatham Kuntram - ஒரு பச்சை மா மலையானது,
செக்கர் மா முகில் உடுத்து, Chekkar Maa Mukil Uduthu - சிவந்த பெரிய மேகத்தை அரையில் உடுத்துக் கொண்டும்
மிக்க செம் சுடர் பரிதி சூடி, Mikka Sem Sudar Parithi Soodi - மிகவும் சிவந்த தேஜஸ்ஸையுடைய ஸூர்யனை சிரஸ்ஸில் அணிந்து கொண்டும்
அம்சுடர் மதியம் பூண்டு, Amsudar Madhiyam Poondhu - குளிர்ந்த ஒளியையுடைய சந்திரனைக் கண்ட பூக்ஷணமாக அணிந்து கொண்டும்
பல சுடர் புனைந்து, Pala Sudar Punaindhu - (நக்ஷத்திரங்களாகிற) பல தேஜஸ்பதார்த்தங்களையும் (பலவகை ஆபரணங்களாக) அணிந்து கொண்டும்
கடலோன் கைமிசை, Kadalon Kaimisai - கடலரசனுடைய கை மேலே
கண்வளர்வதுபோல், Kanvalarvathupol - படுத்துக் கொண்டிருப்பது போல
பீதக ஆடைமுடி பூண் முதலா மேதகு பல்கலன் அணிந்து, Peethaka Aadaimudi Poon Muthala Methagu Palkalan Anindhu - பீதாம்பரம், திருவபிஷேகம் கண்டிகை முதலான
சோதி வாயவும் கண்ணனும் சிவப்ப, Sothi Vayavum Kannanum Sivappa - அழகிய வாயும் கண்களும் சிவந்திருக்கப் பெற்று
பச்சை, Pachchai - பசுமையான
மேனி, Meeni - திவ்யமங்கள விக்ரஹத்தின் நிறமானது
மீதிட்டு மிக பகைப்ப, Meedittu Mika Pagaippa - மற்ற ஒளிகளெல்லாவற்றிற் காட்டிலும் மேலோங்கி மற்ற ஒளிகளோடு
எறி கடல் நடுவுள், Eri Kadal Nadhuvul - அலை யெறிகின்ற கடலினிடையே
நஞ்சு வினை, Nanju Vinai - விஷத் தொழிலையும்
கவர் தலை, Kavar Thalai - கப்புவிட்டுக் கிளர்கின்ற(பல) தலைகளையுமுடைய
அரவு, Aravu - திருவனந்தாழ்வானாகிற
இன் அமளி ஏறி, In Amali Eri - போக்யமான சயனத்தின் மீது ஏறி
அறி துயில் அமர்ந்து, Ari Thuyil Amarnthu - யோக நித்திரையில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வம் குழாங்கள், Sivan Ayan Indiran Ivar Mudhal Anaithor Deivam Kuzhangal - சிவன் பிரமன் இந்திரன் முதலிய எல்லாத் தேவ ஸமூஹங்களும்
கை தொழ கிடந்த, Kai Thozha Kidandha - ஸேவிக்கும்படியாகப் பள்ளி கொண்டிருக்கிற,
தாமரை உந்தி தனி பெரு நாயக, Thamarai Undhi Thani Peru Nayaga - தாமரைப் பூவைத் திருநாபியிலே உடைய அத்விதீய ஸர்வேச்வரனே!
மூ உலகு அளந்த, Moo Ulagu Alandha - மூன்று லோகங்களையும் அளந்த
சே அடியோய், Sae Adiyoy - அழகிய திருவடிகளை யுடையவனே! (வாழ்ந்திடுக!)