திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 883 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
883திருமாலை || (தாம் பெற்றாலும் பிறர் படும் அனர்த்தைப் பொறுக்க மாட்டேன் என்கிறார் ) 12
நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க நரகமே சுவர்க்கமாகும் நாமங்கள் உடைய நம்பி அவனதுஊர் அரங்கம் என்னா அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர் கவலையுள் படுகின்றார் என்று அதனுக்கே கவர்கின்றேனே
பதவுரை Show / Hide
namanum,நமனும் - யம தர்ம ராஜாவும்
murukalanum,முற்கலனும் - முத்கல பகவானும் ஒருவர்க்கொருவர்
paesa,பேச - வார்த்தை யாடிக் கொண்டிருக்க
naragil nindraar kalakk,நரகில் நின்றார்கள் கேட்க - அந்த வார்த்தை நரகத்திலே பாப பலன்களை அனுபவிக்கிற பாவிகளின் காதில் பட்டவளவிலே
naragame,நரகமே - அந்த நரகந்தானே
suvarkkam aagum,சுவர்க்கம் ஆகும் - ஸ்வர்க்க லோகமாய் விட்டது என்று சொல்லுதற்கீடான மேன்மை வாய்ந்த
naamangal udaiya,நாமங்கள் உடைய - திருநாமங்களை யுடைய
nambi avanathu,நம்பி அவனது - பரிபூரண எம்பெருமானுடைய
oor,ஊர் - திவ்ய தேசம்
arangam ennaadhu,அரங்கம் என்னாது - திருவரங்கமாகும் என்று சொல்லாமல்
alia maandhar,அளிய மாந்தர் - அருமந்த மனுஷ்யர்கள்
ayarndhu - (swaroopaththai) marandhu,அயர்ந்து -(ஸ்வரூபத்தை) மறந்து - (ஸ்வரூபத்தை) மறந்து
veenndhu,வீழ்ந்து - (விஷயாந்தரப் படுகுழியிலே) விழுந்து
kavalaiyul paduginraar endru,கவலையுள் படுகின்றார் என்று - துக்கத்திலே அகப்படுகிறார்களே என்று
adhanukkae,அதனுக்கே - அதற்காகவே
kavalkindrein,கவல்கின்றேன் - நான் கவலைப் படா நின்றேன்.