திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 875 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
875திருமாலை || (கொடிய பாவிகளுக்கும் திரு நாமம் சொல்ல அதிகாரம் உண்டாய் இருக்க இழப்பதே என்று வயிறு எரிகிறார்) 4
மொய்த்த வல் வினையுள் நின்று மூன்று எழுத்துடைய பேரால் கத்திர பந்தும் அன்றே பராங்கதி கண்டு கொண்டான் இத்தனை அடியரானார்க்கு இரங்கும் நம் அரங்கனாய பித்தனைப் பெற்றும் அந்தோ பிறவியுள் பிணங்குமாறே
பதவுரை Show / Hide
moitha,மொய்த்த - அடர்ந்து கிடக்கிற
val vinaiyul nindru,வல் வினையுள் நின்று - கொடிய பாப ராசியினுள்ளே நின்று
moonru ezuthu udaiya peraal,மூன்று எழுத்து உடைய பேரால் - கோவிந்த நாமத்தாலே
kathira bandhum andrae,கத்திர பந்தும் அன்றே - க்ஷத்ர பந்துவமன்றோ
paraangadhi,பராங்கதி - சிறந்த பதவியை
kandu kondaan,கண்டு கொண்டான் - கண்டு அநுபவிக்கப் பெற்றான்;
ithanai adiyar aanarkku,இத்தனை அடியர் ஆனார்க்கு - இவ்வளவு ஆநுகூல்யம் உடையவர்கட்கும்
irangum,இரங்கும் - அருள் புரிகின்ற
nam arangan aaya pitthanai,நம் அரங்கன் ஆய பித்தனை - நம் அழகிய மணவாளனாகிற ஆஸ்ரித வியாமுக்தனை
petrum,பெற்றும் - சேஷியாகப் பெற்று வைத்தும்
piraviyul,பிறவியுள் - ஸம்ஸாரத்திலகப்பட்டு
pinangum aare,பிணங்கும் ஆறே - வருந்துகிற விதம் என்னே!
antho,அந்தோ - ஆத்ம வஸ்து இப்படிப் படுவதே என்று வெறுக்கிறார்